Thursday, March 31, 2011

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி!கீழக்கரை நகராட்சித்தலைவர் ‘பகீர்’ குற்றச்சாட்டு


கீழக்கரை, மார்ச் 31&
அரைமணி நேரத்துக்கு ஒரு முறை விட்டு விட்டு ஏற்படும் ‘பவர் கட்’ விவ காரம் கீழக்கரை பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தேர்தல் நேரத்தில், திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, விஷமிகள் செய்யும் சதி இது’ என நகராட்சித் தலைவரும், ‘அதிகளவு மின் நுகர்வு காரணமாக, ஜம்பர் இணைப்பு துண்டிப்பால் ஏற்படும் பிரச்னை இது’ என மின்வாரிய அதிகாரி களும் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரை பகுதியில் தினமும் காலை 10 முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எவ்வித அறிவிப்பும் இன்றி, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் துவங்கினாலும் கூட அரைமணி அல்லது ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை மீண்டும் மின் விநியோகம் ‘கட்’ ஆகி விடும். பகல் 1 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி என காலநேரம் இல்லாமல் அடிக்கடி அரைமணி நேரத்துக்கு ஒரு முறை மின்சாரம் விட்டு விட்டு வருகிறது.
தேர்வு நேரம் என்பதால், பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். அறிவிப்பின்றி மின்சாரம் ‘கட்’ ஆவது பற்றி மின் வாரியத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கீழக்கரை நகராட்சித்தலைவர் பஷீர் அகமது கூறுகையில், “பாலையாறு பகுதியில்தான் மின் விநியோகம் அடிக்கடி துண்டாகிறது. தேர்தல் நேரம் என்பதால், திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக விஷமிகள் வேண்டும் என்றே செய்யும் சூழ்ச்சி இது. அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கீழக்கரை மின் வாரிய உதவிப் பொறியாளர் பால்ராஜிடம் கேட்ட போது, “மின் தடைக்குப் பிறகு, மீண்டும் மின்சாரம் விநியோகிக்கும் நேரத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் மின் நுகர்வு செய்கின்றனர். ஒரே நேரத்தில் மோட்டர், டிவி, மிக்சி என மின் சாதனப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், மின் நுகர்வு அதிகமாகி, ஜம்பர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்,” என்றார்.

கல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது! கீழக்கரை கல்லூரி விழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேச்சு!



கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை நிறைவு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை நிகழ்த்தினார்.விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேசியதாவது,சமுதாயம் முன்னேற்றமடைய ஆண்கள் மட்டும் படித்தால் போதாது பெண்களும் படி படித்திருக்க வேண்டும் .பெண்கள் கல்வியை கரம் பிடிக்க வேண்டும் .கல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது்.மேலும் மதி்ப்பெ்ண் என்ற சொல்லிலும்் பெண் என்ற வார்த்தையே வருகிறது மாணவிகளே அதிக மதிப்பெண்களை பெறுவது சொல்லுக்கு பொருத்தமாக உள்ளது.பெண்கள் மென்மையானவர்கள்.ஆனால் அந்த தண்ணீர் சுனாமியாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ரபியா மசூமா,பரிதா பானு ஆகியோர் மாணவியர் பேரவைக்கான அறிக்கையை வாசித்தனர்.கவிமணி அப்துல் காதர் தலைமையுரையாற்றினார்.சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் புஹாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




கீழக்கரையில் தமுமுகவினர் ஆட்டோவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்

Tuesday, March 29, 2011

ராமநாதபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் மனு தள்ளுபடி


ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் வேட்பாளராக போட்டியிட தாக்கல் செய்த கீழக்கரையை சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மனு தேர்தல் கமிசனால் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் இத்தேர்தலில் அவர் போட்யிட முடியாது.இதனால் அக்கட்சியில் சார்பில் மாற்று வேட்பாளராக தாக்கல் செயதவரின் மனு ஏற்றுகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


கீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்! ஊழியர் கூட்டத்தில் வேட்பாளர் அசன் அலி பேச்சு



கீழக்கரையில் திமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அசன் அலி அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பசீர் அகமது, மண்ணின் மைந்தன் அசன் அலியை வெற்றி பெற செய்வேம் என்றார்.

வேட்பாளர் அசன் அலி பேசியதாவது, கீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன். மேலும் சிறுபாண்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவா? சிறுபாண்மையினருக்கு இட ஒதிக்கீடு செய்த கலைஞரா? யார் ஆட்சி வேண்டும் என்பதை நாம் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள புகழ் பெற்ற மரகத சிலையை கண்டெடுத்து ஒப்படைதது கீழக்கரையை தண்டையார் தெருவை சேர்ந்த அப்துல் ரஹமான் என்பவர்தான் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அந்த அளவிற்க்கு இப்பகுதியில் சமூக நல்லிணக்கம் நிலவி வருகிறது அது தொடர ,மீண்டும் கலைஞர் ஆட்சி வர திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஹசனுதீன், மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ரவிசந்திர ராமவன்னி,கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீது கான்,திமுக நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராகிம்(ராஜா) ,பொருளாளார் ஜகுபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Sunday, March 27, 2011

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை!



கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.திருப்புல்லாணி பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் நிறைந்து குளம் போல் காட்சியளித்தது.

மாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்


கீழக்கரை அருகே எஸ்.எஸ்.எல்.சி எழுதவுள்ள மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்

கீழக்கரையில் 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகே 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்தது.இதனால் அவவழியே வாகனங்கள் செல்ல முடியாத சுழ்நிலை ஏற்பட்டு வேறு வழியே திருப்பி விடப்பட்டன.சென்னைக்கு செல்லும் தனியார் பஸ்கள் சதக்கத்துன் ஜாரியா பள்ளி அருகே நிறுத்தப்பட்டன .மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன‌

கீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து


கீழக்கரை போலீஸ் ஸ்டேசன் அருகே இரு வாகனங்கள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரும் சேதமடைந்தது.

Saturday, March 26, 2011

விடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்புக்கு காயிதே மில்லத் பேரவை சார்பில் துபாயில் வரவேற்பு நிகழ்ச்சி!



விடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்







விழாவில் பேசிய நிர்வாகிகள்


கீழக்கரை.மார்ச்26.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளரும்,உளுந்தூர் பேட்டை வேட்பாளருமான முகம்மது யூசுப்புக்கு காயிதேமில்லத் பேரவை சார்பில் துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரக் காயிதேமில்லத் பேரவையில் தலைவர் குத்தாலம் லியாகத் அலி,பொது செயலாளர் தாஹா,பொருளாளர் ஹமீது ரஹ்மான்,மற்றும் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத்துல்லா,காயல் நூஹு ,காயல் யஹ்யா,கீழை யாசின் ,நெய்னா,அப்துல் காதர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக்கல்


ராமநாதபுரம் தொகுதிக்கு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, ஆர்டிஓ அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா

ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர் மீது வழக்கு பதிவு! தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு



ராமநாதபுரம், மார்ச் 26:
தேர்தல் விதிமுறைகளை மீறிய ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் உட்பட 510 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., கூட்டணியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த கூட்டத்தில் பேசி வாக்கு சேகரித்தார். பின்னர் அரண்மனையிலிருந்து வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாகனங்களிலும் நடந்தும் ஊர்வலமாக ரோமன் சர்ச் வரை வந்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாக வந்ததாக பஜார் போலீசார் வேட்பாளர் ஜவாஹிருல்லா உட்பட 510 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் வேட்பு மனுதாக்கல் செய்த ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு தேர்தல் விதிமுறைகளை மீறி கும்பலாக வந்ததாக வேட்பாளர் ஜவாஹிருல்லா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ராமநாதபுரம் தொகுதி இணைச் செயலாளர் தஞ்சி சுரேஷ், நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், நகர் செயலாளர் அங்குச்சாமி, வக்கீல் பிரிவு செயலாளர் ஹரிதாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணிபாரதி உட்பட 250 பேர் மீது, நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கீழக்கரை 45லட்சம் திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ் உரிமையாளர் மகனை விசாரிக்க மனு தாக்கல்

கைப்பற்றப்பட்ட நகைகளில் ஒரு பகுதி


கைது செய்யப்பட்ட மாயகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன்
கீழக்கரை, மார்ச் 26:
கீழக்கரை தொழிலதிபர் வீட்டில் நடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை வழக்கில் சரணடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
கீழக்கரை மேலத்தெரு சேர்ந்தவர் தொழிலதிபர் முசம்மில். இவரது வீட்டில் கடந்த ஜன.3ம் தேதி இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 118 பவுன் தங்க, வைர நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்து டிஐ.ஜி அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப் குமார், டி.எஸ்.பி., ராமானுஜம் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் கீழக்கரை விஏஓ சாவடி அருகே மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீனை (21) கடந்த பிப்.2ம்தேதி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேக் அலாவுதீனிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 46 பவுன் நகை மற்றும் பணம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் தேடப்பட்ட ஏர்வாடியை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் ரஹ்மத்துல்லா (56) என்பவரை, பிப். 8ம்தேதி போலீசார் கைது செய்து 26 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரஹ்மத்துல்லாவின் மகன் அல்தாப் ஹூசைன் கடந்த 22ம் தேதி, தேனி மாவட்டம் பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கீழக்கரை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பெரியகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Friday, March 25, 2011

ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி


ராமநாதபுரம்.மார்ச்.26.ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கீழக்கரையை சேர்ந்த ஹசன் அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, March 23, 2011

கீழக்கரையில் கட்சி கொடிகள் அகற்றம் !



தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் கொடிகள் அகற்றப்பட்டன.

குடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்! மாணவ,மாணவிகள் ஊர்வலம்.





கீழக்கரை.மார்ச்.23.செய்யது ஹமீதா கலை மற்று்ம் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலமாக கீழக்கரை கடற்கரையிலிருந்து ஏர்வாடி முக்கு ரோடு வரை பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 18வயது்க்கு மேற்பட்டட இந்திய குடிமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வாக்குசாவடி்க்கு உரி்ய ஆவணங்களோடு செல்ல வேண்டும்.வாக்குச்சாவடியில் பதற்றமில்லாத சூழ்நிலை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.முறையற்ற வாக்குபதிவை தடுப்போம்.குடிபோதையில் வாக்குசாவடிக்கு செல்ல வேண்டாம் எனபதாக எழுதிய பதாகைகளை கையி்ல் ஏந்தியவாறு சென்றனர்.

150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆங்கிலத்துறை தலைவர் நெல்சன் டேனியல் ,உடற்கல்வி இயக்குநர் மருதாச்சல் மூர்த்தி மற்று்ம் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் யார் ? கடும் போட்டி

ஹசன்
ஹிதாயத்துல்லா


ஹசன் அலி.எம்.எல்.ஏ


கீழக்கரை மெட்ரோ செய்யது

கீழக்கரை.மார்ச்.23.ராமாநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் தமுமுக வேட்பாளாராக பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ராமாநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு இன்னும் வேட்பாளர் அறிவிக்கபடாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் யார் வேட்பாளர் என்பதில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.சிட்டிங் எம்.எல்.ஏ அசன் அலி எஸ்.எம்.ஹிதாயத்துல்லா,கீழக்கரை மெட்ரோ செய்யது ,ஹாருன்.எம்.பியின் மகன் ஹசன் மொளலானா,ராமநாதபுரம் செல்லத்துரை அப்துல்லா,ரவிசந்திர ராமவன்னி,ஆகிய இவர்களில் ஒருவர் ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளராக வருவதற்கு வாய்ப்பு உளளதாக கூறப்படுகிறது. இதில் ஹசன் அலி.எம்.எல்.ஏ அல்லது எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்களில் யாராவது ஒருவரா அல்லது புதியதாக வேறு ஒருவரா என்பதை இன்று இரவுக்குள் காங்கிரஸ் டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கீழக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தீவிர பிரசாரம்

வேட்பாளர் அப்துல் ஹமீது


கீழக்கரை, மார்ச் 22: ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கீழக்கரை பகுதிகளில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் வேட்பாளராக போட்டியிடும் அப்துல் ஹமீது திங்கள்கிழமை தீவிர பிரசாரம் செய்தார்.

ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த கீழக்கரை, மாயாகுளம், நத்தம், மோர்குளம், காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம் ஆகிய ஊர்களில் அவர் பிரசாரம் செய்தார்.

பின்னர் புதுமடம் கிராம ஜமாத்தார்களையும், கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.

வேட்பாளருடன் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், பேரவை தொகுதிக்கான தலைவர் பைரோஸ்கான் ஆகியோர் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

Monday, March 21, 2011

சதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு 151 பேர் தேர்வு!


ஹீண்டாய் நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவருக்கு சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் பணி நியமண ஆணையை வழங்கினார்.

கீழக்கரை.மார்ச்.21.கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.செயல் இயக்குநர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார்.
சென்னை ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் கம்பேனியின் மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் தனிகை செல்வன்,சுந்தர்ராஜன்,சுவாமி நாதன் ஆகியோர் இயந்திரவியல்,மின்னியல்,மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களை தேர்வு செய்தனர்.
முகாமில் பல் வேறு கல்லூரிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 151 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் பணி நியமண ஆணையை வழங்கினார்.கல்லூரி வேலை வாய்ப்பு அதிகார் சேக் தாவூது நன்றி கூறினார்.

ராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிருல்லாவை வெற்றி பெற செய்வோம்! கீழக்கரை தமுமுகவினர் பேட்டி!




தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா




கீழக்கரை முஜீப்


கீழக்கரை .மார்ச்.21ராமநாதபுரம் தொகுதியில் முக்கிய கட்சிகளான திமுக கூட்டணியில் காங்கிரசும் ,அதிமுக கூட்டணியில் தமுமுக போட்டிடுவதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். இநிலையில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் கீழக்கரை நகராட்சி முக்கிய இடத்தை பெறுகிறது.

இதுகுறித்து தமுமுகவை சேர்ந்த பிரமுகர் கீழக்கரை ஹசன் மற்றும் கீழக்கரை முஜீப் ஆகியோர் கூறுகையில்,
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் என்று அறிவிப்பு வந்தவுடன் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை எங்களால் உணர முடிந்ததால் சொல்கிறோம்.பேராசிரியரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது

மேலும் பல்லாண்டு காலமாக சமுதாய பணியில் தன்னை அர்பணித்த பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் பல்வேறு துறைகளிலும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் பகுதியை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார் என்பதில் ஐயமில்லை .இதற்கு முன் இப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செய்ய தவறிய மக்கள் நல பணிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.எனவே பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை அமோக வெற்றி பெற செய்வோம் என்ற்னர்

கீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் பிடிபட்டது!


காரில் வந்த அருள் செல்வன்(28) மெரூன் கலர் சட்டை மற்றும் காவல் துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவவை படத்தில் காணலாம் மற்றுமொரு காவல்துறை அதிகாரி , கருவாடு விற்ற பணம் என்று அருள்செல்வன் சொன்னதால் பணத்தை சோதனை செய்து விட்டு கையை நுகர்வதை படத்தில் காணலாம்.




கீழக்கரை மார்ச்.21: சட்டசபை தேர்தலையோட்டி தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. கீழக்கரையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,தேர்தல் அலுவலர் ரத்தினம் மற்றும் காவலர்கள் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மண்டபத்தில் இருந்து கோவில்பட்டி சென்று கொண்டிருந்த க‌ாரை கீழக்கரை அருகே சோதனை செய்த போது இந்தப் பணம் சிக்கியது. முறையான ஆவணம் இல்லாத காரணத்தால் பணத்தை தேர்தல் அலுவலர் பறிமுதல் செய்தார்.காரில் வந்த கோவில்பட்டியை சேர்ந்த அருள் செல்வன்(28) பெரியசாமி, மற்றும் இண்டிகா காரை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இப்பணம் வியாபாரத்துக்கான பணம் என்றும் ,கருவாடு வியாபாரம் செய்து வருவதாகவும் மண்டபத்தில் கருவாடு விற்று விட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டுருந்ததாகவும் ,அருள்செல்வன் தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Saturday, March 19, 2011

கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா !







கீழக்கரை.மார்ச்.19.கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் அபுல் ஹ்சன் சாதலி வரவேற்புரை நிகழ்த்தினார். சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராக கல்ந்து கொணடார். கல்லூரிகளி்ன் இயக்குநர்கள் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா மற்றும் யூசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Friday, March 18, 2011

தேர்தலையோட்டி கீழக்கரையில் துணை ராணுவத்தினர்








கீழக்கரை.மார்ச்.19.தேர்தலையோட்டி கீழக்கரையில் இன்று மாலை துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் !


கீழக்கரையில் புதிய சப் இன்ஸ்பெக்டராக ஜி.ஜான்சி ராணி பொறுபேற்றுள்ளார். மா்னாமதுரையை சேர்ந்ததைவர் பெருநாழி,பார்த்திபனூர்,இளையான்குடி ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார்




கீழக்கரையில் புதிய இன்ஸ்பெக்டராக வி.எம். இளங்கோவன் பொறுப்பேற்றுள்ளார். திருமங்கலம்,சோழவந்தான்,ஊட்டி,மேலூர்,மானாமதுரை,கூடலூர்,சோலூர் மட்டம்,ஈரோடு,தாராபுரம் ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இவர் ஈரோடை சேர்ந்தவர்.




செல்போனில் வதந்தி பரப்பக்கூடாது! கீழக்கரை அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்




கீழக்கரை.மார்ச்.18.கீழக்கரை எல்லைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுமூகமாக நடை பெற அனைத்து கட்சி தலைவர்களு்ம் அழைக்கப்பட்டு காவல் துறை சார்பாக இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழக்கரை டவுன் பகுதியில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரத்தி்ல் ஈடுபடக்கூடாது,செல்போன் மூலம் வந்ததிகளை பரப்ப கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் துறை சார்பி்ல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சி ராணி,ராமநாதன் உள்ளிட்டோரும் மற்றும் பல் வேறு கட்சியை சேர்ந்தவர்க்ளு்ம் கலந்து கொண்டனர்.

நாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் !

கீழக்கரை மார்ச்.18 : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் இயந்திரவியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (மார்ச்19) நடைபெறுகிறது.முன்னணி பன்னாட்டு நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் 2010ல் டிப்ளமோ இயந்திரவியல் முடித்த மாணவர்களும்,2011ல் இறுதியாண்டு படிக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். முகாமிற்கு வரும் போது அனைத்து கல்வி சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும் என கல்லூரி முதல்வர் அலாவுதீன் தெரிவித்தார். கூடுதல் தகவல் பெற கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி சேக்தாவுத், 94434 06979 மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, March 17, 2011

சட்டசபை தேர்தல்! கீழக்கரையில் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை!





தமிழக சட்டசபை தேர்தலையோட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களி்ல் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கோடிகணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையி்ல் இன்று கீழக்கரை முக்கிய சாலைகளில் டி.எஸ்.பி. முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சப் இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பன் ,ராமநாதன்,ஜான்சிராணி மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையி்ல் ஈடுபட்டனர்.