Monday, May 30, 2011

கீழக்கரை மார்க்கெட்டில் எடைமோசடி !பொதுமக்கள் புகார்

கீழக்கரை, மே 30:
கீழக்கரை மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் எடை மோசடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரை நகராட்சியில் மீன் மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளிலும் எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு சில கடைகள் தவிர அனைத்து கடைகளிலும் கை தராசு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மீன் மார்க்கெட்டில் ஒரு கடையில் கூட எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்தப்பட வில்லை.
பெரும்பாலான கடைகளில் முத்திரை பதிக்காத தராசு மற்றும் எடை கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
தெருக்களில் விற்கும் வியாபாரிகள் 100 கிராம், 200 கிராம் எடை கற்களுக்கு பதிலாக ஜல்லி கற்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரு கிலோ காய்கறி அல்லது மீன் வாங்கினால் அதில் 800 கிராம் தான் உள்ளது. இந்த மோசடியை தடுத்து நிறுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் அதிகாரிகள் ஆய்வு செய்து முத்திரையிடப்படாத 50க்கும் மேற்பட்ட தராசுகள் மற்றும் எடைக்கற்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி

கீழக்கரை, மே 30&
கீழக்கரை பகுதியில் கட்டுமானப் பணிக்கு தேவையான மணல் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் கிராமப் புறங்களிலிருந்து வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர். தற்போது கீழக்கரை பகுதியில் மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தினமும் வீடு திரும்புகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து அதிகாரிகளும் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பதிலாக 10 நாட்களாகியும் வேறு அதிகாரி நியமிக்கப்படவில்லை. கீழக்கரையில் முன்பு 6 பேருக்குச் சொந்தமான மணல் குவாரி இருந்தது. இதன் மூலம் 10 டிராக்டர்களில் மணல் விநியோகம் செய்யப்பட்டன. இதில் 5 பேருக்கு பெர்மிட் முடிவடைந்தது. ஒருவருக்கு மட்டுமே பெர்மிட் உள்ளது. இதனால் ஒரு குவாரியிலிருந்து மட்டுமே மணல் எடுக்க முடிகிறது. மற்ற 5 குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
குவாரி பெர்மிட்டை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் இல்லாததால் மணல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கட்டிடத் தொழிலாளி செல்வராஜ், சுப்பிரமணி ஆகியோர் கூறுகையில், `10 நாட்களாக எங்களுக்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளோம். வீட்டுச் செலவுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுகிறோம். மணல் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற னர்.

Friday, May 27, 2011

19 மணி நேரம் பறந்த புறா ! சுழற்கோப்பை பரி்சு !



கீழக்கரை எஸ்.எம்.பிஜியன் புறா கிளப் சார்பில் 21,22,23 ஆகிய 3 நாட்கள் புறா பந்தயம் நடைபெற்றது .இது செய்யது,சிவா,வெங்கட்,அக்ரம்,முருகானந்தம் ஆகிய ஐந்து பேர்களின் புறாக்களும் பந்தயத்தில் கலந்து கொண்டன.இதில் செய்யது என்பவரின் புறா மூன்று நாட்களும் சேர்த்து 19 மணி நேரம்19 நிமிடம் பறந்து முதல் பரிசை தட்டி சென்றது. கிளப்பி்ன் தலைவர் லாபிர் ஹுசைன் சுழற்கோப்பையை பரிசாக வழங்கினார்.

ஒரு சாலை ! இரு எல்லை ! பொதுமக்கள் அவதி


கீழக்கரை, மே 25&
கீழக்கரை அருகே செய்யது முகம்மது அப்பா தர்கா செல்லும் வழியில் பாதி தார்சாலையாகவும் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு சொந்தமான பகுதியில் மணல் சாலையாகவும் உள்ளதால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை மேலத்தெரு புதுபள்ளியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலை வில் செய்யது முகம்மது அப்பா தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு செல்லும் சாலை கீழக்கரை நகராட்சிக்கும், தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கும் உட்பட்டது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செம்மண் சாலை போடப்பட்டது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் சாலையாக மாறிவிட்டது. சாலை முழுவதும் மணல் நிறைந்து உள்ளதால் மக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் கடும் சிரமமடைகின்றனர்.
இதனால் இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கீழக்கரை நகராட்சிக்கும், தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கும் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலனை செய்த கீழக்கரை நகராட்சி தனது எல்லைக்குட்பட்ட பகுதிவரை தார்ச்சாலை அமைத்து கொடுத்தது. ஆனால் தில்லையேந்தல் பஞ்சாயத்தில் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதி தார்ச் சாலையாகவும், பாதி மணல் சாலையாகவும் காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் உள்ள தர்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருத்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேன், கார் மற்றும் ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர். தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலை முழுவ தும் மணலாக இருப்பதால் வாகனங்கள் மண லில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த மணல் நிறைந்த சாலைய தார்ச் சாலையாக மாற்ற பஞ்சாயத்து விரைவில் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் மனவள்ளி ஆண்டி கூறுகையில், `இந்த சாலையை தார்ச் சாலை யாக அமைப்பதற்கு கூட்டத்தில் ஏற்க னவே தீர்மா னம் போடப்பட்டு தற் போது காலாவதியாகி விட் டது. மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி விரைவில் தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tuesday, May 24, 2011

கீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா? ஐகோர்ட் கிளை உத்தரவு



கீழக்கரை மே.25
கீழக்கரை அருகே நகராட்சி இடத்தில் ஐகோர்ட் உத்தரவின் பேரில் மறு ஆய்வு நடைபெற்றது. கீழக்கரை தோணிபாலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தனியாரால் தரப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட நகராட்சி முடிவு செய்தது. குப்பைகள் அங்கு கொட்டபட்டு வந்தது பின்னர் அப்பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன் சுற்றுப்புற சுவர் கட்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில் தில்லையேந்தல் ஊராட்சி துணை தலைவர் முத்து வேல் குப்பைகளை இங்கு கொட்ட அனுமதிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றார்.இதனால் சுற்று சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கீழக்கரை,தில்லையேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து இந்த பிரச்னையில் தீர்வு காண வேண்டும் குப்பை கொட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மறுபரீசலனை செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன அடிப்படையில் மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் தலைமையில் குழு ஒன்று நேற்று காலை திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் கீழக்கரை ,மற்றும் தில்லையேந்தல் பகுதியை சேர்ந்த குறிப்பிட்டவர்களை அழைத்து பேசி கருத்து கேட்டனர் .பின்னர் குப்பை கிடங்கு அமையவுள்ள இடதையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் கூறுகையில் , இரு தரப்பிலும் கருத்து கேட்டுள்ளோம் .குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்துள்ளோம் .ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்பிக்க உள்ளோம் என்றார்.

கீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க மக்கள் வலியுறுத்தல்


கீழக்கரை, மே 24&
கீழக்கரை&ஏர்வாடி முனை ரோடு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் அனைத்தும் கீழக்கரை எல்லையான ஏர்வாடி முனை ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இந்த பஸ் நிறுத்ததிற்கு அருகில் மகளிர் கல்லூரியும், தனியார் மருத்துவமனையும் உள்ளதால் ஏராளமான மாணவிகளும், நோயாளிகளும் இந்த நிறுத்தத்தில் நின்றுதான் பஸ்களில் ஏறிச் செல்கின்றனர்.
இங்கு நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள்  நிழ‌ற்குடை அமைத்து த‌ர‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். புதிய‌தாக‌ பொறுப்பேற்றுள்ள‌ ஜ‌வாஹில்லா எம்.எல்.ஏவும் இது குறித்து முய‌ற்சி எடுக்க வேண்டும்
 என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, May 22, 2011

சமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்கள்.



சமுதாயா புரவலரும் ,மிகசிறந்த மனிதாபிமானியுமான , கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் இன்று காலை 8.00 மணியளவில் காலமானார்கள் புதுக் கல்லூரி செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்கள்.சென்னை மக்கா மஸ்ஜித் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்விளம்பர வெளிச்சமில்லாமல் சமுதாயத்தின் விழுதாக வலம் வநத அன்னாரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

கீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி! வனத்துறையினர் பாராட்டு !


முள்ளம் பன்றி்யின் முற்கள்
60 அடி ஆழமுள்ள கிணறு



நசுருதீன்



கீழக்கரை மே.21 கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடியில் தனியாருக்கு (வா.வூ) சொந்தமான தென்னந்ததோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மு்ன் தினம் முள்ளம் பன்றி தவறி விழுந்தது.
இதை நேரில் கண்ட காவலாளி சேதுராமு தோட்டத்தி்ன் உரிமையாளர்களான ஜமீல்,ஜகுபர் அலி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக இவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வநது
உயிருடன் மீட்பதற்கு முயற்சி எடுத்தனர்.இரவு நீண்ட நேரமாகி விட்டதால் காலையில் வருகிறோம் என்று வனக்காவலர்கள் திரும்பி சென்று விட்டனர்.

மீண்டும் அடுத்த நாள் காலை் 11மணி வரை வனக்காவலர்கள் வரதாதால் தோட்டத்தி்ன் உரிமையாளர்கள் தங்களது நண்பர்களான நசுருதீன்,சிராஜீதீன்,முஸ்தகீம் மற்றும் தோட்ட காவலாளி ஆகியோ்ர்
உதவியுடன் கிணற்றி்ல் உயிருக்கு போராடி கொண்டிருந்த முள்ளம் பன்றியை உயிருடன் மீட்டு வலையில் கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனசரக அலுவலர்கள் வநது முள்ளம்பன்றியை கைப்பற்றி வன உயிரின காப்பாளர் சுந்தரகுமார் முன்னிலையில் திருப்புல்லாணி வனப்பகுதியில் சுதந்திரமாக விடப்பட்டது.

இது குறித்து நசுருதீன் கூறியதாவது,
காட்டுப்பகுதியில் சுற்றிதிரியு்ம் இந்த முள்ளம்பன்றி எப்படி இந்த பகுதிக்கு வந்தது என்பது ஆச்சரியமளிக்கிறது.ஒரு வழியாக உயிருடன் மீட்டு விட்டோ்ம்.முள்ளம் பன்றி மேலே வந்தவுடன் ஆக்ரோசத்துடன் முடிகளை உதிர்த்து விட்டது என்றார்.

இது குறித்து வனக்காவலர்கள் கூறும் போது,
இந்த முள்ளம் பன்றிகள் ஜோடியாகத்தான் வந்திருக்கும் .எனவே இன்னொரு முள்ளம் பன்றி இப்பகுதியி்ல் மேலுமமொரு முள்ளம் பனறி இருக்குமென்று சந்தேகிக்கிறோம் எனவே தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுமமென்றார்.மேலு்ம் முள்ளம் பன்றிகள் எதிரிகளை கண்டவுடன் முற்களை உதிர்த்து விடும் முற்களால் குத்துப்பட்டால் கடு்மையான விஷத்தால பாதிக்கப்படுவர் .இதை காப்பற்றி தகவல் கொடுத்த இந்த இளைஞர்கள பாராட்டுக்குறியவர்கள் என்றார்




















Saturday, May 21, 2011

கீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்


பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக கீழக்கரை அருகே உள்ள் அப்பாதீவு உள்பட 21 தீவுகளில் மிதவை பலூன் வேலிகள் அமைப்பது தொடர்பாக மீனவர்கள் இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என வன உயிரின பாதுகாவலர் சுந்தரகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனை கடல் பகுதியில் 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ. பரப்பளவில் மன்னார் வளைகுடா உலக உயிர் கோள காப்பகம் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த கடல் பகுதி உள்ளது. இதில் கரையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள 21 சிறிய தீவுகள் உள் ளன. இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1986ம் ஆண்டு மத்திய அரசு இதனை தேசிய கடல் பூங்காவாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.
கடலில் உள்ள அரிய வகை பவளப்பாறைகள், கடல் பசு, கடல் பகுதியை தூய்மைப்படுத்தும் கடல் அட்டைகள், ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு அறக்கட்டளை, வனச்சரகத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மன்னார் உயிர்கோள வன உயிரின பாதுகாவலர் சுந்தரகுமார் கூறியதாவது:
மன்னார் வளைகுடா தேசிய கடல் பூங்காவில் சிங்கிள் தீவு, நல்லதண்ணீர் தீவு, முயல் தீவு, குருசடி தீவு, அப்பாதீவு, வாலைத்தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. 3,600க்கும் மேற்பட்ட தாவர வகைகள் கடல்வாழ் விலங்கினங்கள் இந்த கடல் பகுதியில் உள்ளன. இங்கு அலையாத்தி காடுகள், சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மன்னார் உயிரிகோள காப்பகம் எடுத்து வருகிறது. கழிவுநீரால் மாசுபடுதல், பவளப்பாறைகள் அழிந்து விடாமல் தடுக்கும் வகையில் தீவுகளை சுற்றிலும் 500 மீட்டர் இடைவெளியில் வரிசையாக மிதவை பலூன்களை மிதக்கவிட்டு பாதுகாப்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தற்போது 325 மிதவை பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் நகர்ந்துவிடாமல் இருக்க துருப்பிடிக்காத இரும்பு சங்கிலி இணைக்கப்பட்டு, சங்கிலியின் மறுமுனை 250 கிலோ எடையுள்ள சிமென்ட் சதுர கல்லில் இணைக்கப்படும். இந்த வேலியால் பாதுகாக்கப்படும் கடல் பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதன்மூலம் பவளப்பாறைகள், கடல் வளங்களை பாதுகாக்க உயிர்கோள காப்பகம் திட்டமிட்டுள்ளது.
மிதவை வேலிகள் அமைப்பதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் இயக்கங்களை அழைத்து பேசி சுமூக முடிவு எடுத்த பின்னர் மிதவைகள் தீவுப்பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி.தினகரன்

கீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்




கீழக்கரை, மே 21:
கீழக்கரையில் பயன்படுத்தப்படாமல் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில், சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையின் மையப்பகுதியாக உள்ள வள்ளல் சீதாக்காதி சாலையில், வருவாய்த் துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வருவாய்த் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வந்தது. அதன் பின்னர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமாக செயல்பட்டு வந்தது.
கடந்த 5 வருடங்களாக இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ள, இந்த கட்டிடத்தை தற்போது குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளை கழிப்பறையும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் சில சமூக விரோத செயல்களும், இங்கு நடந்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சொந்தமாக இந்த இடம் உள்ள நிலையில், கீழக்கரையில் வருவாய்த் துறை அலுவலகம், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைத்து வருவாய்த் துறை அலுவலகத்தை இங்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், �நகரின் மையப்பகுதியில் இந்த கட்டிடம் உள்ளது. இதை விடுத்து வேறு இடத்தில், அதிக வாடகை கொடுத்து வருவாய்த் துறை அலுவலகம் செயல்படுகிறது. 20 ஆண்டுகள் வாடகையாக கொடுத்த பணத்தில் இங்கு புதிய கட்டிடம் கட்டியிருக்கலாம். தற்போது வருவாய்த் துறை அலுவலகம், தனியார் இடத்தில் முதல் மாடியில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்தை மாற்ற வேண்டும்� என்று தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் இப்ராகிம் கூறுகையில், �இந்த இடத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்� என்றார்.

Friday, May 20, 2011

கீழக்கரை தனி தாலுகா !ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பார்வைக்கு ..

கீழக்கரை, மே 20:

கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

கீழக்கரை தனி தாலுகாவாக சில மாதங்களுக்கு முன் திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், கீழக்கரையில் அலுவலகம் அமைக்க இடவசதி இல்லாததாலும், தேர்தல் நடைபெற்றதாலும், இப்பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.
இதனிடையே, நேற்று முன் தினம் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை தாலுகா அலுவலகத்துக்குத் தர முன் வந்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முத்துக்குமரன், வட்டாட்சியர் பிச்சை, மண்டல துணை வட்டாட்சியர் கதிரேசன் பிச்சை, வருவாய் ஆய்வாளர் ஜஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

உயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன், கட்டடப் பணிகள் நடைபெறும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள் ஒப்புதல் என்று மீண்டும் கிடப்பில் போட்டு விடாமல் இருக்க வேண்டும் எனவே நீண்ட காலமாக கீழக்கரை மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தாலுகா அறிவிப்பை செயல்படுத்த பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா முகைதீன் கூறுகையில் , நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவிகப்பட்டதை செயல்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா வாக்குறுதி அளித்திருந்தார்.தற்போது அதற்கான சமயம் வந்து விட்டது எனவே ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கீழக்கரையை தாலுகாவாக மாற்றுவதற்கு உண்டான ஏற்பாடுகளை விரைந்து செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து ! கீழக்கரைமகளிர் சுய உதவிக்குழு தீர்மானம் !



கீழக்கரை, மே 20:
கீழக்கரை யில் நடந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டத்தில் ஏராளமான பெண் கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் சீதக்காதி மகளிர் சுய உதவிக்குழு, தஙகம் மகளிர் சுய உதவிக்குழு, மாஸா அல்லா மகளிர் சுய உதவி குழு, பேரொளி மகளிர் சுயஉதவி குழு, அல் பிஸ்மி மகளிர் சுய உதவிக்குழு, உதயம் மகளிர் சுய உதவி குழு உள்பட பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. பதினெட்டு வாலிபர் தர்கா வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வட்டியை ஒழிப்பது, சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது, ரத்த தானம், பிளாஸ்டிக் பை ஒழிப்பு ஆகியவற்றை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. சுய உதவிக்குழுக்களின் தலைவர்கள் ஜீனத்து மரியம், ஹம்ருன் நிஷா, ஹைருன் நிஷா, ஜகுபர் ஆய்ஷா, அனிஷா, மூபிகா மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது
______________________________________________________________________________________
சுய உதவிக் குழு என்றால் என்ன ?

சுய உதவிக் குழு என்பது 15-20 உறுப்பினர்களை கொண்ட குழுவாகும். அனைத்து உறுப்பினர்களும் மனமுகந்து சிறு சேமிப்பு கடன் மற்றும் சமூக நலனில் ஈடுபடுவர்.
சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள்கள் யாது?

  • உறுப்பினர்களிடையே சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவர்
  • சிறு சேமிப்பு பழக்கத்தை கிராம பெண்களிடம் அறிவுறுத்துவர்
  • வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் சமூக உறவுகளை மேம்படுத்தி ஊரக சமூகத்தின் தன்னம்பிக்கையை வளர்ப்பர்
  • உறுப்பினர்களிடையே முகாமைத்து மேம்படுத்துவர்
  • வருமானம் தரும் தொழில்களை உண்டாக்குவர்
  • கல்வி அறிவு மேம்படுத்துதல், விழிப்புணர்வு மற்றும் சம உரிமை பெறுதல்
  • விரிவாக்க கல்வி மற்றும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மாற்றம் மற்றும் விற்பனை தகவல்களை தருவர்
  • புதிய தொழில்நுட்பங்களை பற்றி கலந்தாலோசித்தல் மற்றும் மாற்றங்களை மேற்கொள்வர்

நீடித்த சுய உதவிக் குழுக்களின் தனித்தன்மை யாது?
சுய உதவிக் குழுக்களின் வலிமை மற்றும் நீடித்த செயல்பாட்டிற்கு குழு உறுப்பினர்களின் திறமை மற்றும் நற்பண்புகள் மிக முக்கிள வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  • குழு உறுப்பினர்களை புதிய தொழில்நுட்பங்கள் கலந்தாலோசித்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்துதல்
  • கருத்துகளை மற்ற குழுவிடம் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தல்
  • அனைவரின் கலந்தாலோசித்து முடிவு எடுத்தல்
  • தினசரி அனைவரும் கூடி பிரச்சனைகளை ஆராய்தல் மற்றும் விதிமுறைகளை மீறாமல் செயல்படுதல்
  • குழு நடவடிக்கை மற்றும் முடிவுகளை பதிவு செய்தல்
  • குழு முடிவுகளை தினசரி பின்பற்றுதல்
  • குழு தலைவர், செயலாளர், பொருளாதாரர் ஆகியோரை ஒருமனதாக தேர்வு செய்தல்

சுய உதவிக் குழு எப்பொழுது தொடங்கப்பட்டது?
1989 ஆம் ஆண்டு சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்களுக்கு எந்த வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளன?
தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க சம்மதித்துள்ளன.
சுய உதவிக் குழு கணக்கு பராமரிப்பின் குறைந்த தொகை யாது?
குறைந்த தொகையாக 1000 ரூபாயாவது சுய உதவி குழு கணக்கில் இருக்க வேண்டும்.
அடிப்படை கிளை என்றால் என்ன?
அடிப்படை கிளை என்பது மாவட்ட மற்றும் கிராமங்களின் வங்கி கிளைகளில் சுய உதவிக் குழுக்கள் கணக்கு வைப்பதாகும். மாவட்டம் மற்றும் கிராமங்களில் ஓர் கிளைக்கு மேல் இருப்பின் சுய உதவிக் குழுக்கள் எவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அதுவே அடிப்படை கிளையாகும்.
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி இருக்கிறதா?
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி கிடையாது.
சுய உதவிக் குழுக்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்?
சட்டப்படி பதிவு செய்வது அவசியமல்ல ஏனெனில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொதுவாகவே படிப்பற்றவர்களாவர்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 20க்கு மேல் சேர்க்கப்படமாட்டாது?
அதிக உறுப்பினர்கள் இருப்பின் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது. இரண்டாவதாக 20 உறுப்பினர்களுக்கு மேல் இருப்பின் நிதி இயக்கத்தில் பங்கு பெறும் அனைவரும் பதிவு செய்திருக்க வேண்டும்.
சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியுடையவர் யாவர்?
சுய உதவிக் குழு என்பது வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டதாகும். பெண்கள் அல்லது விவசாயிகள் ஓர் குறிப்பிட்ட பயிர் அல்லது விளைப்பொருட்களை விளைவிப்பவர்கலோ அவர்களை இஞ்சி, மஞ்சள், குழு என்று கூறுவர். சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக வேண்டிய தகுதிகள் பின்வருவன.,

  • உறுப்பினர்கள் வயது வந்தோராக இருத்தல் வேண்டும்
  • குடும்பத்தில் உள்ள ஓர் நபர் மட்டும் குழு உறுப்பினர் ஆகலாம்
  • உறுப்பினர்கள் அனைவரும் சமூக பொருளாதார அந்தஸ்தை அனுபவிப்பர்
  • உறுப்பினர்கள் அனைவரும் உள்ளூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
  • உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் உறுப்பினர்களாக இருக்க இயலாது

அதிக சேமிப்புகளின் மூலம் சுய உதவிக் குழுக்களை வலிமையான குழு என்று கூற முடியுமா?
அதிக சேமிப்பு இல்லாமல் தினசரி சேமிப்புகளைக் கொண்டு வலிமையான குழு என்று கூறலாம்.
குழுக்கள் எப்பொழுது உள்கடன் வாங்கலாம்?
குழுக்கள் எவ்வளவு சீக்கிரமாக வாங்க முடியுமா வாங்கலாம். முதல் அல்லது இரண்டாவது மாதத்திற்குள் பெறலாம்.
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்களின் உதவி வேண்டுமா அல்லது மற்ற முகாம்கள் குழு அமைவதற்கு உதவலாமா?
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்கள் அல்லது மற்ற முகாம்களில் உதவி அவசியம் தேவைப்படுகிறது.
வங்கி கடன் எப்பொழுது தொடங்கப்பட வேண்டும்?
குழு கூட்டம், சிறு சேமிப்பு மற்றும் குழுக்களுக்குள் சேமிப்பு தொகையை பங்கிடுவது ஆகியவற்றிற்கு பிறகு வங்கி கடன் தொடங்கப்படும்.
மகளிர் திட்டம் என்றால் என்ன?
மாவட்டங்களில் உளவு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் திட்ட அலுவலர், பெண்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள் யாது?
பெண்களுக்கு சம உரிமை மற்றும் பொருளாதார மேம்பாடு சுய உதவிக் குழு தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வளாகம் யாது?
பூமலை வணிக வளாகம் .
சுய உதவிக் குழுக்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் உரியதா?
இருபாலருக்கும் உரியதாகும் இருப்பினும் பெண்கள் ஊக்கப்படுத்தப்ப
சுய உதவிக் குழு யாரால் அமைக்கப்படுகிறது?
சுய உதவிக் குழு ஆரம்ப காலத்தில் வெளி நிறுவனங்களில் தூண்டுதல் மற்றும் விரிவாக்க முகாம், சமூக சேவகர்கள் திட்டம் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் இயக்கப்பட்டது. இதற்கு பதிலீடாக கிராம உறுப்பினர் அவர்களுக்கு குழு அமைத்து செயல்படுவர்.
சுய உதவிக் குழு என்பது அரசு திட்டமா?
சுய உதவிக் குழு என்பது அரசு இயக்கும் திட்டம் அல்ல கிராம மக்களின் கமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதாகும். சுய உதவிக் குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம்.
சுய உதவிக் குழு அமைப்பில் அரசு ஆதரவு யாது?
ஆரம்ப காலத்தில் சுய உதவிக் குழுக்கள் தனியார் நிறுவனங்களின் மூலம் இயக்கப்பட்டது. பின்பு சுய உதவிக் குழுக்கள் வலிமை அடைந்தவுடன் உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக வாய்ப்பு தேடுவர் குழு தொடர்பு இதர நிறுவனற்களுடன் மேற்கொள்வதற்காக அரசு ஆதரவு தெரிவித்தன.
சுய உதவிக் குழு பதிவு செய்வது சட்ட பாரதீனம் அவசியமா?
குழு பதிவு செய்வது சட்ட பாரதீனமாக அவசியம் அல்ல. எனினும் அவற்றின் அதீத செயல்பாடுகளுக்கு, விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
சுய உதவிக் குழு அமைப்பில் பண சேமிப்பு அவசியமா?
பண சேமிப்பு என்பது சுய உதவிக் குழு அமைப்பில் அவசியமே ஆகும். உறுப்பினர்கள் சேமிக்கும் குறிப்பிட்ட தொகையை ஒன்றாக சேர்த்து பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, தீர்வு காண வழங்குவதாகும்.
சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கும் காரணம் யாது?

  • குழுவின் மொத்த தொகையை பாதுகாப்பாக பயன்படுத்துதல்
  • சேமிப்பு வட்டி தொகையை அனைவரும் சமமாக பங்கு பிரித்தல்
  • வங்கி மற்றும் குழுக்களின் இடையே வலிமையான தொடர்பு அமைத்தல்

வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • குழு வங்கி கடன் மற்றும் அதன் பரிவர்த்தனை குழு கூட்டத்தின் தகவல்கள் அடங்கிய விதிமுறை ஏடு
  • குழு சேமிக்கும் தொகையின் மதிப்பு
  • குழு நிர்வாக உறுப்பினர்களின் 3 புகைப்படங்கள்
  • வங்கி கணக்கு வைத்துக்கொள்ளும் நபரின் அறிமுக கடிதம்

பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றினால் வங்கிகளின் கணக்கு ஆரம்பிப்பது மிக எளிதாகும்:

  • சுய உதவிக் குழுக்களின் இரப்பர் முத்திரை
  • குழு கூட்டத்தின் விதிமுறைகள்
  • குழு பதிவேடு பராமரிப்பு
  • குழு மற்றும் வங்கிகளின் தொடர்பு தகவல்கள்

சுய உதவிக் குழுக்களினால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் யாவை?

  • வருகை பதிவேடு:

குழு கூட்டத்திற்கு பங்கேற்கும் அனைவரின் வருகையை பதிவு செய்வதாகும் அனைத்து குழு உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும்

  • பதிவு பதிவேடுகள்:

குழு கூட்டத்திற்கு கலந்தலோசிக்கும் அனைத்து தகவல்களையும் மற்றும் முக்கிய தீர்மானங்களை பதிவு செய்வது ஆகியவற்றை கொண்டதாகும்

  • சேமிப்பு பதிவேடுகள்:

இப்பதிவேடுகளில், குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மொத்த சேமிப்பு தகவல்களை தரவல்லதாகும்

  • வரவு கணக்கு பதிவேடு:

குழுவின் மொத்த தொகையின் பரிவர்த்தனைகள் தகவல்களை கொண்டதாகும்

  • தனிநபர் வங்கி கணக்கு புத்தகம்:

அனைத்து குழு உறுப்பினர்களிடம் இப்புத்தகம் கையில் இருக்க வேண்டும். இப்புத்தகத்தை குழு கூட்டத்திற்கு எடுத்து வர வேண்டும்.
வங்கி கணக்கு பராமரிப்பின் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள் யாவை?

  • வங்கி கணக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் வங்கி கணக்கு ஆரம்பிப்பதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவங்களை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்
  • வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் தெரிவது போல் மேற்கொள்ள வேண்டும்
  • அனைத்து குழு தகவல்கள் மற்றும் தீர்மானங்களை பதிவு செய்தல்
  • அனைத்து பதிவேடுகளும் சரிவர கண்காணிக்கப்பட வேண்டும்

சுய உதவிக் குழுவில் எவ்வித நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்?
குழு மேலாண்மை மாதிரிகள்:
முன் திட்டமிடல் மற்றும் குழுக்களின் கூட்டம் ஏற்பாடு செய்யும் நோக்கம் ஆகியவை ஆகும்.
வருகை மாதிரிகள்:
குறைந்த உறுப்பினர்கள் குழு கூட்டத்தை பங்கேற்கும் நிலைமையை தடுப்பதாகும்.
தேர்வற்ற மாதிரிகள்:
குழு கூட்டங்களில் பங்கேற்காது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை கொண்டதாகும்.
நிர்வாக மாதிரிகள்:
நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியதாகும்
நிதி மேலாண்மை மாதிரிகள்:
உறுப்பினர்கள் கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் கடன் தர குறைந்த மற்றும் அதிக தொகை பற்றிய தகவல்களை தருவதாகும்.

மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு அமைப்பு:
இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊரக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய தன்னிச்சை தொண்டுகளினால் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கப்பார்ட் (CAPART) இரண்டு முக்கிய முகாம்களான மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு மற்றும் இந்திய மேம்பாட்டில் மக்கள் செயல் (PADI) ஆகியவற்றை இணைத்து உருவானதாகும். கப்பார்ட் என்பது தனிச்சு செயல்படும் நிறுவனமாகும். அவை சங்க பதிவு (1980) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். மேலும் இவை ஊரக மேம்பாட்டு செயலகம் இந்திய அரசின் கீழ் இயங்குவதாகும். தற்போது கப்பார்ட் நிறுவனம் ஊரக மேம்பாட்டு நலனில் அதிக ஆர்வம் காட்டி நாட்டில் சுமார் 12,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது.
http://capart .nic.in/orgn/index.html.
விரிவாக்க செயல்பாடுகளில் ஊரக பங்கேற்பு அணுகுமுறை:
கடந்த 1980 ஆம் ஆண்டு மற்றும் 1990 ஆம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் வயல்வெளி அனுபவங்கள் வழிமுறைகள் மற்றும் புதுமைகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பங்கேற்பு அணுகுமுறை என்பது மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையை பற்றி விரிவாக எடுத்து கூறுவதாகும். மேலும் இவற்றை வழிகாட்டி கொள்கைகள் எனக் கூறலாம்.
பங்கேற்பு அணுகுமுறை மற்றும் வழிமுறை இடத்திற்கு தகுந்தவாறு மாறுபடும். இத்தகைய பங்கேற்பு வகைமுறை விரிவாக்க பகுதிகளில் பல்வேறு பயன்படுத்தப்படுகிறது. அவை குறிப்பிட்ட கூழலை ஆராய்வது பிரச்சனைகளை அறிய செயல் சார்ந்த பண்கள் திட்டத்தின் வெற்றி மற்றும் தோல்விகளை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் பங்கேற்பு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் அவசியம் தேவைப்படுகிறது.

சுய உதவிக்குழுக்களின் தரம் பிரித்தல்

தரம் பிரித்தல் 1

சுய உதவிக் குழுக்களின் தரம் பிரித்தல் அடிப்படையில் எவ்வாறு பிரிப்பது என்றால்

  • உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)
  • வங்கி பணியாளர்
  • அரசு சாரா நிறுவன பணியாளர் (சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர்)

சுய உதவிக்குழு அமைத்த அறு மாதம் கழித்து, தரம் பிரித்தலை மேற்கொள்வர் முதல் தரம் பிரித்தலில், உதவி திட்ட அலுவலர், குழு 6 மாத கால செயல்பாடுகளை ஆராய்வர். அரசு சாரா நிறுவன பணியாளர்கள் அவற்றை உறுதிபடுத்துவர். உறுதி படுத்தலுக்கு பிறகு, வங்கியிலிருந்து சுழல் நிதி பெறுவதற்கு தயார் படுத்தப்படுவர், உறுதிபடுத்தலின் பொழுது பின்வருவனற்றை சமர்ப்பிக்க வேண்டும்

  • குழு உறுப்பினர்களின் விபரங்கள்
  • குழு கூட்டத்தை பற்றின விபரங்கள்
  • குழு சேமிப்பு தொகை
  • பதிவேடுகள் பராமரிப்பு
  • கடன் விபரங்கள்

1 வருடம் கழித்து, இரண்டாம் தரம் பிரித்தலை மேற்கொள்ள வேண்டும் இத்தகைய இரண்டாம் தரம் பிரித்திலின் போது, அவற்றை திரும்ப செலுத்தும் தகுதியை ஆராய்வர். மேலும், திட்ட அறிக்கையை இரண்டாம் தர பிரித்தலின் போது சமர்பிக்க வேண்டும்.

வயதின் அடிப்படையின் மூன்று குழுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன

  • குழு 1 - 1 வயதுக்கு உட்டபட்டவர்கள்
  • குழு 2 - 1-3 வயதுக்குட்பட்டவர்கள்
  • குழு 3 – 3 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

புள்ளிகள் பெறும் அடிப்படையில் அனைத்து குழுக்களும் ஏஇ பிஇசிஇ என தர பட்டியல் மேற்கொள்ளப்பட்டன. குழு 3 (4 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) ‘ஏ’ தரத்தில் இடம் பெறுவர்.
கடன் பெறுவத்றகு தேவையான குறைந்தபட்ச அடிப்படை தகுதி

  • சுய உதவிக்குழு சுமார் 6 மாதம்மாவது செயல்பட்டிருக்கு வேண்டும்
  • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 10-20 நபர்களை கொண்டதாக இருத்தல் அவசியம் 20க்கு மேல் நபர் சாத்தியமல்ல
  • சுய உதவிக் குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்
  • உள்ளூர் மற்றும் வெளியூர் கடன்கள் மீட்பு சதவிகிதம் 85 சதவிகிதத்திற்கு கீழ் இருத்தல் ஆகாது.
  • 50 சதவிகித குழு மக்கள் உள்ளூர் கடனகளாக குழு நிதியிலிருந்து எடுத்துக்கொள்வார்கள்
  • அனைத்து குழு உறுப்பினர்களம் சேமிப்பை தினசரி விடாது மேற்கொள்ள வேண்டும்
  • குழுக்கள் கணக்கு வழக்கு புத்தங்களை சரிவர வராமரிக்க வேண்டும்
  • அனைத்து குழுக்களும் விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்

தர பிரித்தல் படிவங்கள்


முற்றம், தமிழ் செய்தி நாளேடு, சுய உதவிக்குழுக்கிள்ன வெற்றி மற்றும் அனுபவங்களை தெளிவாக எடுத்துக் கூறவல்லதாகும். மேலும் அரசு திட்ட தகவல்கள் மற்றும் மகளிர் திடடம் பற்றி வயல்வெளி பணியாளர்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திட்ட பணியாளருக்கு தெரிவிவப்பதாகும்.
யுனிசெஃப் (), நபார்டு (), தமிழ்நாடு
வங்கியாளர் காசோலை புத்தகத்தை 1 வருடம் சுய உதவிக் குழு 21 செயல்பாட்டிற்கு பிறகே தருவர்
சுய உதவிக்குழுக்கள் விதிமுறைகளை பின்பற்றி அங்கீகரித்த கைடியழுத்துடன் புகைப்படம் அளிக்க வேண்டும்
சுய உதவிக் குழுக்களின் நீடித்த வளர்ச்சிக்கு பிரதிநிதிகளை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது பணத்தை வார தங்களது சேமிப்பு மேற்டிகாள்ள ஊக்குவிக்கின்றன.
2 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் தர தேர்வுக்கான வழிமுறைகள்
70க்கு மேல் மதிப்டிபண்கள் பெற்ற சுய உதவிக் குழுக்கள் கடன் பெற தகுதியானவர் ஆவர்.
50 -69 மதிப்டிபண்கள் டிபற்ற சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்ய படமட்டாது ஆயினும், அவர்களை ஊக்கப்படுத்தி டிசயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களைக் கண்டு, திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.
50 கீழ் மதிப்டிபண் பெற்ற சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது
குழுவின் கடன் திட்ட அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் போது, பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
வெளிவாரி கடன்களை திரும்ப செலுத்துதல்
மண் பரிசோதனையைக் கொண்டு, புது குழுக்களான 6 மாதம் முதல் 2 வயது உடையவர்கன் பின்வரும் நிபந்த பூர்த்தி செய்ய வேண்டும் போதுமான குழு சேமிப்பு நிதி ( 5 மதிப்பெண்கள்)
குழு கணக்குளை தணிக்கை மேற்டிகாள்ளுதல் 5 மதிப்பெண்கள்
எய்ட்ஸ் கட்டுப்பாடு முகாம் () மற்றும் மாநில அரசு, முற்றம் செய்தி நாளேடுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. தற்போது 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி, மற்றும் சங்கத்தினால் வெளியிடப்பட்டு, சங்க பதிவு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மேம்பாட்டு முற்றம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது சிவகாசியில் டேவ் () அச்சுக்கூடத்தின் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.

சுயு உதவிக் குழு - கடனுதவி
சுய உதவிக்கு குழுக்கள் 6 மாதம் செயல்பட்ட பிறகு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாம் ரூ.25,000 முதல் 10,000 வரை சுழல் நிதியாக வழங்குவதும் மற்றும் ரூ.15,000 வங்கியிலிருந்து வழங்குவார்கள்
சுய உதவிக் குழுக்கள் தவறாது சேமிப்பை மேற்கொள்ள வேண்டும்.
வங்கிகள் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் அவற்றை உறுப்பினர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுகின்றன.
நபார்டு வங்கி சுமார் 1.16 கோடி எழை குடும்பத்தை (குறைந்த பட்சமாக 5.80 கோடி மக்கள்) மார்ச் 2003 வரை ஆதரித்துள்ளது. மற்றும் சராசரியகா ரூ.28,560 யை கடனாக வழங்குகிறயது.
இரண்டாம் தடவை தரம் பிரித்தலுக்கு பிறகு குழுக்கள் வங்கி நிதி பெற நேரடியாக தகுதி பெறும். வங்கி கடன்கள் திட்ட செலவுகளின்டிப 9 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படும்.
அனைத்து வங்கிகளை காட்டிலும், சுய உதவிக் குழுக்களுக்கு ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகள் நிதி வழங்குவதில் அதிக உதவி புரிந்துள்ளன. மொத்தமாக ரூ.2,049 கோடி வங்கி கடன்கள் மார்ச் 2003 சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.
வங்கியாளர் கவனத்திற்கு
சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு கணக்கு புத்தகம் ஆரம்பிக்க வங்கியாளருக்கு அரசு சாரா நிறுவனத்தின் அறிமுகம் தேவைப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள் பணத்தை காசோலை அல்லது பே ஆர்டர் மூலமேபெற முடியும்
6 மாதம் – 2 வருடம் வரை செயல்பட்ட குழுக்களை வங்கி கடன் பெற தேர்வு செய்யும் வழிமுறைகள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் சுய உதவிக்குழு, கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்
35 முதல் 59 மதிப்பெண்கள் பெறும் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது, ஆயினும் அவர்களை ஊக்கப்படுத்தி செயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களை கண்டு திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.
35-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்ட மட்டாது. 6 மாதம் கழித்து திரும்ப ஆய்வு செய்யப்பட முடிவு செய்து

கடன் வகைகள்
தவணை கடன்
வேளாண் அல்லாத செயல்பாடுக்ள மற்றும் கிராம பண்ணைக்காக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதால், மகளிர் திட்டத்திற்கு தரும் கடன் தவணை கடன் என்பதாகும்.
ரொக்க கடன்
சுண உதவிக் குழுக்கள் வங்கியிலிருந்து ழல் கடன்களை பெறலாம். மேலும் ரொக்க கடன்கள் பெறுவதால் பல வித சுய உதவிக்குழுக்கு தேவையான கடன்களை தவிர்க்கலாம்.
ஆதாயம்
கடன் தொகையை காட்டிலும் ஆதாயம் முக்கிய படமட்டாது
வட்டி விகிதம் இந்தியன் ரிசர்வ் நபார்டு வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் பின்வருவன

நபார்டு – வங்கிகள் 5
வங்கிகள் சுய உதவிக் குழுக்கள்

நடைமுறைபடுத்தாது(ஆர்பிஐவிதிமுறைப்படி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது)

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழுவின் தீர்மானத்தின் படி
(ஆர்பி நபார்டு –ன் விதிமுறைப்படி மாற்றத்திற்கு உரியதாகும்)
பத்திரம் பாதுகாப்பு
அனைத்து குழு உறுப்பினர்களும் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு முக்கிய பொறுப்பானவர்கள்
பட்டுவாடா
கடன்கள் மொத்த தொகையாக அல்லது வெவ்வேறு கட்டத்தில் வெளியீடு செய்யப்படும். அல்லது குழுக்களின் விருப்பப்படியே வெளியிடப்படும். குழுக்களின் தீர்மானம்படி, அவை் தொகையை வங்கியிலிருந்து பெற்று கடன்களை ஏழை மக்களின் அவசர தேவைக்கு அனுமதிக்கப்படும்.
திரும்ப செலத்துதலுக்கான காலவரையறைகள்
தவணை கடன் இத்தகைய கடன்களுக்கு விடுமுறைகளே கிடையாது அது போல் திரும்ப செலுத்துதல் காலநிலையை நிர்ணயிக்க முடியாது. இக்காலவரையறையை வங்கிகளோ அல்லது சுய உதவிக் குழுக்களோ இணைந்து முடிவு மேற்கொள்ளும்.
ரொக்க கடன்
ரொக்க கடன் பெற சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கண்ககு வைத்திருக்க வேண்டும். ஆயினும் மொத்த வருவாய், அனுமதித்த எல்லைக்கு கீழ் இருக்க கூடாது ஆண்டு இறுதியில், குழுக்களின் செயல்திறனைக் கொண்டு கணக்குகளை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும். ரொக்க எல்லைகளை கிளை அலுவலர்களை குழுவின் செயல்திறனில் திருப்தி அடைந்து மற்றும் சுய உதவி குழுவின் விருப்பத்தை பொறுத்து அதிகரிப்பர். எனினும் வட்டியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் நபார்டு வங்கிகயின் பங்கு


Thanks .http://agritech.tnau.ac.in/ta/ngo_shg/shg_faq_ta.html

Thursday, May 19, 2011

சிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்


கீழக்கரை, மே 19: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடந்துவரும் இளைஞர் மன்றங்களுக்கு சிறந்த விருதுகளும், சிறந்த இளைஞர் விருதுகளும் பெற விரும்புவோர் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதன் ஒருங்கிணைப்பாளர் வி.ராபர்ட் ஜேம்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருதும், சிறந்த இளையோர் விருதும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் அல்லது மகளிருக்குரிய விருதுகளுக்கும், சிறந்த இளையோர் விருதுகளுக்கும் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியைடந்து இருக்க வேண்டும்,

1.4.2010 முதல் 31.3.2011 வரை சிறப்பாகப் பணியாற்றிய அறிக்கையுடன் ஆதாரங்கள் இருக்க வேண்டும். சிறந்த இளையோர் விருதுக்கு ரூ. 5,000 ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்ற விருதுகளுக்கு ரூ.1,000 ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

விருது பெறத் தகுதியுள்ளோர் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதி நகர், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04567-230937 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அச் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 18, 2011

கீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி ! பயணிகள் கடும் அவதி




கீழக்கரையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார்.
தீர்மானங்கள் குறித்து தங்கம் ராதா கிருஸ்ணன் பேசினார்.

கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் தரை தளம் அமைக்கும் பணிகள ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் ஊருக்கு வெளியே ஏர்வாடி முனை ரோட்டில் இறக்கி விடப்படுகின்றனர்.இதனால் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.நகருக்குள் ரூ50 வரை ஆட்டோவுக்கு கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.

பஸ்கள அனைத்தும் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள 40 அடி ரோடு வரை வந்து செல்ல வேண்டும் .டிரைவர்கள் ,கண்டக்டர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கு ,பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் ஊருக்குள் பஸ்களை ஓட்டி வருகின்றனர்.
எனவே அரசு நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tuesday, May 17, 2011

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

கீழக்கரை.மே.17.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும்,அதிமுக சிறுபான்மைபிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார்[33]. இவருக்கும், ராமாநதபுரம் ஈசா பள்ளிவாசலை சேர்ந்த ரஹ்மத் நிஷா (24) என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது.


இடையில் குடும்ப பிரச்னைகள் இருந்து வந்த நிலையில்,கடந்த 2010 செப்.,16ல் ரகமத் நிஷா ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார்என்றும் சொல்லப்பட்டது. உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறகு, நேற்று ரஹ்மத் நிஷா தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

வரதட்சணை தராததால் ரகமத் அடித்துக் கொல்லப்பட்டதாக ரஹ்மத் நிஷாவின் அண்ணன் ஜமீன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

“குற்றவாளியை கைது செய்யக்கோரி,’ ரஹ்மத் நிஷாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்தாலொழிய பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன், முஜ்பூர் ரஹ்மான் மீது 306 பிரிவின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரஹ்மான்(33). இவரது மனைவி இறந்த பின், மனவேதனையுடன் காணப்பட்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அன்வர்ராஜா சென்னை சென்றிருந்தார். வீட்டிலிருந்த, முஜ்பூர் ரஹ்மான் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு

கீழக்கரை, மே 16: கீழக்கரை 500 பிளாட் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சனிக்கிழமை இரவு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.


கீழக்கரை 500 பிளாட் பகுதியில் மசூதி உள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தி்ல் உள்ள இந்த பள்ளியில் சனிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு, அந்த அமைப்பின் அப்பகுதி பொறுப்பாளர் அப்பாஸ், வழக்கம்போல அந்த மசூதியிலேயே தூங்கிவிட்டார். அருகில் செல்போனை வைத்திருந்தார்.

அதிகாலை வழிபாட்டிற்காக எழுந்து பார்த்த போது, செல்போனை காணவில்லை. உடனே தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் மற்ற பொருள்களை சரிபார்த்தபோது ரொக்கம் ரூ. 5ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 3 மைக் செட்டுகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கீழக்கரை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Monday, May 16, 2011

கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப்பு

கீழக்கரை மே. 16&
ஜெனரேட்டர் வசதி இல்லாததால் கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கீழக்கரை தலைமை தபால் நிலையம் தற்போது கணினி மயமாக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி மூலம் மணியார்டர் அனுப்புதல், விரைவு தபால், பதிவு தபால் சேவை மற்றும் தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற அனைத்து சேவைகளும் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் இச்சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது நகரில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் தபால் நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் பணியை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் தனியார் நிறுவனங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இதனால் தபால் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கீழக்கரை தலைமை தபால் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் கூறுகையில், ‘பொதுமக்கள் நலன் கருதி இங்குள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்தால் இப்பிரச்னை தீரும். இது சம்பந்தமாக ஏற்கெனவே தபால்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்றார்.

Saturday, May 14, 2011

ஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண விழா வாழ்த்து




Advt

கூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜிபுர் ரஹ்மான்

சுப.தங்கவேலன்

தேமுதிக முஜிபுர் ரஹ்மான்
கீழக்கரை மே 14&
திருவாடானை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் 6 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் திமுக சார்பில் சுப.தங்கவேலன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேமுதிக சார்பில் முஜிபுர் ரஹ்மான் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இருவருக்கும் துவக்கத்தில் இருந்தே கடும் போட்டியிருந்த நிலையில் சுப.தங்கவேலன் 64,165 வாக்குகள் பெற்றார். முஜிபுர்ரஹ்மான் 63,238 வாக்குகள் பெற்றார். 927 வாக்குகள் வித்தியாசத்தில் சுப.தங்கவேலன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாண்டிவேலு 6,667 வாக்குகள் பெற்றுள்ளது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாண்டிவேலுக்கு சுயேட்சை சின்னமான கூடை வழங்கப்பட்டிருந்தது. கூடை மற்றும் முரசு சின்னம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததாகவும், இது முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஏற்கனவே இத்தொகுதி தேமுதிகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் சுப.தங்கவேலன் 927 வாக்குகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூடை சின்னத்திற்கு 6,667 வாக்குகள் கிடைத்துள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முரசு சின்னத்திற்கு விழ வேண்டிய வாக்குகள்தான் கூடைக்கு மாறி விட்டதாகவும் இதனாலேயே தங்களது வெற்றி கை நழுவி விட்டதாகவும் தேமுதிகவினர் புலம்பி வருகின்றனர்.

Friday, May 13, 2011

ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் !மீண்டும் நீரூபிக்கப்பட்டுளளது


ராமாநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் 15000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக தமிழகத்தில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தன் மூலம் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவர்களின் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் விபரம் :-
ஜவாஹிருல்லாஹ்(மமக) 65,831 ,

ஹசன் அலி (காங்) 50,074 ,

துரை கண்ணன்(பாஜக) 28,060.

ராஜா ஹுசைன்(இந்திய தேசிய லீக்) 3606

பைரோஸ்கான்(எஸ்டிபிஐ) 2731



மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் நிலவும் பெருபான்மையான மக்களின் கருத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிபலிப்பார்கள் என்ற கருத்து நீண்ட நெடிய காலமாக நிலவி வருகிறது. இதற்கு காரணம் நடந்து முடிந்த எல்லா தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சியே ஆட்சி அமைத்து வந்துள்ளது என்ற கரு்த்து உள்ளது.
பொதுவாக இது காலம் வரை ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததில்லை. இந்த தொகுதியின் எதிரொலிப்பு தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்களின் வரலாற்று உண்மைகள் ஆகும். இதில் கடந்த 1952, 57, 62 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் அண்ணன் தங்கப்பன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1977, 80, 84ம் வருட தேர்தல்களில் முன்னாள் டி.ராமசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அந்த 3 தேர்தல்களிலும் அதிமுக ஆட்சி அமைந்தது.
இதன் பின்பு 1989ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அப்போது திமு கழகம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 1991ல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வெற்றி பெற்றார். அதிமுக ஆடசி அமைத்தது. 1996ல் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா வெற்றி பெற்றார்.அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசன்அலி வெற்றி பெற்றார்.காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் அமர்ந்தது.
அதிமுக கூட்டணி கட்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா மூலம் தற்போது மீண்டும் ஒரு முறை அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


Thursday, May 12, 2011

2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி



கீழக்கரை மே 12&
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் சாய்ந்து விழுந்த மரம் கடந்த இரண்டு மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் 124 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம் கடந்த மார்ச்சில் திடீரென சாய்ந்து விழுந்தது. நகராட்சி ஊழியர்கள் அம்மரத்தை ரோட்டிலிருந்து ஓரமாக ஒதுக்கி போட்டதோடு தஙகள் பணி முடிந்ததாக சென்று விட்டனர். பொதுமக்களின் நடைபாதை பகுதியில் மரம் விழுந்து கிடப்பதால் மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் சைக்கிளில் செல்வோரும், வயதானவர்களும் மரத்தில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், ‘மரம் சாய்ந்து 2 மாதங்கள் ஆகியும் அதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரத்தின் ஒரு பகுதி பக்கவாட்டில் சாய்ந்தபடி இருப்பதால் அவ்வழியாக செல்வோர் தலையை பதம் பார்த்து விடுகிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விழுவதும் நடக்கிறது. எனவே உடனடியாக மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்

Wednesday, May 11, 2011

கீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ ,மாணவிகள் விபரம்! இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள் !




கீழக்கரை மே.11.

பிளஸ் 2 தேர்வில் கீழக்கரை பள்ளிகளில் நகர அளவில் முதல் இரண்டு இடங்களை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் கைப்பற்றினர்.மூன்றாம் இடத்தை முஹைதீனியா மெட்ரிக் மாணவி பெற்றுள்ளார்.

இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 64 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றனர்.இவர்களில் அப்சன் பாத்திமா 1142 மதிப்பெண்களும் பெற்று முதலிடமும்,பாத்திமா அஸ்ரா 1130 மதிப்பெணகள் பெற்று இரண்டாம் இடத்தையும்,நஜியா பாத்திமா 1127 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களில் அப்சன் பாத்திமா மற்றும் பாத்திமா அஸ்ரா ஆகிய இருவரும் கீழக்கரை நகர அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் மாணவி ஜாமிஆ பாத்திமா 1129 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,கீழக்கரை அளவில் 3ம் இடமும் பெற்றுள்ளார்.சித்தி ருக்சானா 1116 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், உம்முல் அசிபா 1104 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளனர்.

கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் அல் ஹம்தியா 1093 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் , சண்முக பிரியா 1029 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கவிதா 962 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் ஹசீனா மொஜிரா பாத்திமா 1107 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,செய்யது பர்வீன் 1082 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், தைபு ரினொஷா பாத்திமா 1081 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஹசூரா பானு 1112 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆயிசத்துல் ராலியா 1108 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ,மோனிகா ஜெலஸ்,ஹம்மத்து நசீரா ஆகிய இருவரும் தலா 1078 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சலாம் ஹுசைன் 1019 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் , சக்தி முருகன் 1003 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், யாசிர் அகமது 994 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவ ,மாணவிகளும் எல்லா நிலைகளிலும் புகழ் பெற்று விளங்க கீழக்கரை டைம்ஸ் வாழ்த்துகிறது.

மீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிடம் பரிதாபமாக சிக்கி தவிக்கும் மீனவர்கள்



கீழக்கரை, மே 11&
கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கீழக்கரை,ஏர்வாடி,காஞ்சிரங்குடி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான மீனவர்கள் வருமானத்துக்காக கூலி வேலைக்குச்சென்று வருகின்றனர். சிலர் போதிய வருமானம் இன்றி கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.
கீழக்கரை பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் உள்ளன. வெளியூரிலிருந்து வந்தும் ஏராளமான படகுகள் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக ஏப்.15 முதல் மே 29வரை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை உள்ளதால் மீனவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க கூலி வேலைக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் படகுகள் மற்றும் வலைகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற நேரங்களில் வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர்.
சில மீனவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கி வட்டி கட்டமுடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதனால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை சிறு தொழில் மீனவர்கள் சங்க செயலாளர் நல்ல இப்ராகிம் கூறுகையில், ‘மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தரப்படும் அரசு நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும். மேலும் மற்ற தொழில் வாய்ப்பையும் மீனவர்களுக்கு அரசு ஏற்படுத்தி தரவேண்டும். வேலைவாய்ப்பு இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஜவுளி கடைகளுக்கும், கட்டிட வேலை உட்பட பல வேலைகளுக்கும் குறைந்த சம்பளத்துக்குச் சென்று வருகின்றனர்’ என்றார்.

Sunday, May 8, 2011

14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி !

வெற்றி பெற்ற புறாவுடன் ஹனீப்

கீழக்கரையில் தொடர்ந்து 14.30 மணி நேரம் பறந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 4ந்தேதி கேபிசி புறா கிளப் சார்பாக புறா பந்தயம் தொடங்கியது.இந்த போட்டியில் சபியுல்லா,அபுபக்கர்,ஹனீப்,அப்துல் ஆகியோரின் புறாக்கள கலந்து கொண்டன.பல சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் ஹனீபுக்கு சொந்தமான புறா 14.30 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது.இதையடுத்து இந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேபிசி கிளப் தலைவர் சபியுதீன் ,செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் மற்று நிர்வாகிகள் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரும் 17.18,19 ஆகிய தேதிகளில் ஜோடி புறா போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை ! தடுமாறும் நகராட்சி


கீழக்கரை, மே 8&
கீழக்கரை நகராட்சியில் தினமும் 2 டன் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டிட வேலைக்காக கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரையில் நாளொன்றுக்கு 2 டன் குப்பைகள் குவிகின்றன. இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் டிராக்டரில் அள்ளிக் கொண்டு சென்று ராமநாதபுரம் செல்லும் சாலையின் ஒரு புறத்தில் குவித்து வந்தனர்.இதற்கு அவ்வழியாக செல்லும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் அனைத்தையும் கடற்கரையில் கொட்டி வைத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏர்வாடி செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்தனர். ஆனால் தற்போது அப்பகுதியில் தோட்டப் பகுதிகளில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு இல்லாததால் குப்பைககளை எங்கு போய் கொட்டுவது என்பது தெரியாமல் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது. இந்தப் பிரச்னையால் நகரில் குப்பைகள் அரைகுறையாக அள்ளப்படுகின்றன. தற்போது கீழக்கரை நகரமே குப்பைக்காடாக மாறி வருகிறது.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கென்னடி கூறுகையில், “பல ஆண்டுகளாக நகராட்சிக்கென்று தனியாக குப்பை கொட்டும் இடம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசன் மூலமாக தோணி பாலம் அருகில் 11.5 ஏக்கர் இடம் கிடைத்தது. நகாராட்சிக்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடம் கிடைத்தும் நீதிமன்ற தடை இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளுடன் டிராக்டர்கள் நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்“, என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முகம்மது ஜலாலுதீன் கூறுகையில் ,நகராட்சி நிர்வாகம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காரணத்தை மட்டும் சொல்லி கொண்டிருப்பது மாற்று திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.நகராட்சி நிர்வாகமே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு பொறுபேற்க வேண்டும்.தற்போது கீழக்கரையில் பல இடங்களில் குப்பைகளை நிறைந்து பெயர் தெரியாத நோய்கள் பரவி வருகிறது.ஏற்கெனெவே கீழக்கரை கடற்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு அழகிய கடற்கரை சீரழிக்கப்பட்டு விட்டது . இனி கொட்டுவதற்கு இடமில்லை உடனடியாக மாநில அரசின் உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்
நகராட்சி தலைவர் பசீர் அகமது கூறுகையில், “11.5 ஏக்கர் நிலத்தில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து சுத்திகரிப்பு செய்து உரம் தயார் செய்யலாம் என்ற நோக்கத்துடன் ஐந்து மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு சிலர் உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் பணி நிறுத்தப்பட்டு இங்கு குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்கால தடையை நீக்குவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்“ என்றார்.

தொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை ! 9ம் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் 2ம் இடம்



கீழக்கரை : சில நாட்களுக்கு முன் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஆயிசத் அப்சா பிளஸ் 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளிகளில் முதல் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.

தற்போது மேலு்ம் ஒரு மாணவி சாதனையை தொடர்கிறார்.அவர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திகா இவர் 9 ஆம் வகுப்பு தேர்வில் 477/500 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கீழக்கரை கலங்கரை விளக்கம் !மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா மத்திய அமைச்சர் வாசன்




ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் கீழக்கரை வந்த போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

தேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படு்ம் என்று அறிவித்தார்.

தற்போது தேர்தல் நடைபெற்று விட்டது எனவே மத்திய கப்பல் துறை அமைச்சர் வாச்ன் அவர்கள் வெறு்ம் அறிவிப்போடு நின்று விடாமல் அத்திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கத்தையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை கலங்கரை விளக்கம் இத்திட்டதில் இணைந்து விட்டால் கீழக்கரை கடற்கரை பகுதி சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்

கீழக்கரை, :
ஒவ்வொரு மாணவரும் பட்டம்பெற, அரசு தலா ரூ.4 லட்சம் வீதம் செலவு செய்வதாக, கீழக்கரையில் நடந்த கல்லூரி விழாவில் அழகப்பா பல்கலை. துணை வேந்தர் சுடலைமுத்து கூறினார்.
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி ஆண்டு விழா சென்ற மாதம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் ரஹ்மத்துநிஷா தலைமை வகித்தார். கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி முதல்வர் மஞ்சுவள்ளி மற்றும் சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் புகாரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகப்பா பல்கலை., துணைவேந்தர் சுடலைமுத்து பேசியதாவது:
இந்திய மக்கள் தொகை 121 கோடி பேரில், 60 கோடி பெண்கள். இவர்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 30 கோடி. 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தவர்களில் 12 சதவீத பெண்களே உயர்கல்வி பெறுகின்றனர். 88 சதவீதம் பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஒவ்வொரு தனிப்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்காக அரசு செய்யும் செலவு ரூ.4 லட்சம். பட்டம் பெற்றவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணிக்கு அனுப்ப வேண்டும். அவர்களை பணிக்கு அனுப்புவது பணத்துக்காக மட்டுமல்ல தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சீதக்காதி டிரஸ்ட் துணை பொதுமேலாளர் சேக் தாவூத் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா !





கீழக்கரை .மே.7. கீழக்கரை முகம்மது சதக் இஞ்சினியரிங் கல்லூரியில் சென்ற மாதம் 23வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சதக் டிரஸ்ட் தலைவர் ஹமீ்து அப்துல் காதர் தலைமை வகித்தார்.தாளாளர் கபீர், கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர் யூசுப்,இயக்குநர்கள் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,பைசல் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பல்தேவ்ராஜ் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவி்ல் ஏராளமான பெற்றோர்களும், மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர்.