Friday, August 31, 2012

கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை பதிவு துவக்கம் !வார்டு வாரியாக இடம் மற்றும் தேதி விபரம்!



கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக புகைபடம் எடுக்கும் பணி துவங்கியது. இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆக 30 முதல் செப் 2 வரை 1, 2, 6 ஆகிய வார்டுகளுக்கு மறவர்தெரு ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,

செப் 2 முதல் 5 வரை 3 4 5 வார்டுகளுக்கு கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியிலும்,

செப் 6 முதல் 8 வரை 7 8 9 10 ஆகிய வார்டுகளுக்கு மஹ்தூமியா பள்ளியிலும்,

செப் 9 முதல் 11 தேதி வரை 11 12 13 14 ஆகிய வார்டுகளுக்கு மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 12 முதல் 14 வரை 15 16 17 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு தெற்குதெரு இஸ்லாமியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 15 முதல் 17 வரை 18 19 ஆகிய வார்டுகளுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும்,

செப 18 முதல் 20 வரை 20 21 வார்டுகளுக்கு வடக்குதெரு சிஎஸ் ஐ பள்ளியிலும்
அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கபடுகிறது.

வாக்களர் அடையாள அட்டையையும் குடும்ப அட்டையை உடன எடுத்து வர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கீழக்கரையில் மாதிரி பாராளுமன்றம் !க‌ல்லூரி மாணவிகள் அப்துல் ரஹ்மான்.எம்பியிடம் கேள்வி எழுப்பினர்!


மாதிரி பாராளும‌ன்ற‌த்தில் அமைச்ச‌ராக‌ ப‌த‌வி ஏற்பு விழா,





வெற்றி பெற்ற‌ பி அணியின‌ர்


கீழ‌க்க‌ரை தாசிம் பீவி அப்துல்காத‌ரி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் இளைஞ‌ர்க‌ளுக்கான‌ மாதிரி பாராளும‌ன்ற‌ம் என்ற‌ கருத்தரங்க போட்டி நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது.

இதில் ச‌பாநாய‌க‌ர் ஹ‌லீம‌த்து ந‌சீலா த‌லைமையில்23பேர் ஏ அணியாக‌வும்,குர்சீத் பேக‌ம் ச‌பாநாய‌கர் த‌லைமையில் பி அணியாக‌வும் அம‌ர்ந்து ராகிங்,க‌ல்வி,சைப‌ர் கிரைம்,ப‌குதி நேர‌ வேலை,நீர்வ‌ள‌ம் ஆகிய‌வை குறித்து விவாத‌ம் ந‌டைபெற்ற‌து.

மாதிரி பாராளும‌ன்ற‌த்தில் ப‌த‌வி ஏற்பு விழா,மாசோதா தாக்க‌ல் உள்ளிட்ட‌வையும் ந‌டைபெற்ற‌து.

வெற்றி பெற்ற‌ பி அணிக்கு அப்துல் ர‌ஹ்மான்.எம்பி ப‌ரிசு வ‌ழ‌ங்கி பாராட்டினார்.

அவ‌ர் பேசிய‌தாவ‌து,உல‌கிலேயே மிக‌ச்சிற‌ந்த‌ க‌ல்வி க‌ற்று கொடுக்கும் முறை இந்தியாவில்தான் உள்ளது.என‌வேதான் வெளிநாட்டிலிருந்து ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளை இந்தியாவிற்குள் கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌லாமா என்ற‌ ஆலோச‌னை ந‌டைபெறுகிறது.இது மிக‌வும் துர‌திஷ்ட‌வ‌ச‌மான‌து. இது குறித்து பாராளும‌ன்ற‌த்தில் என்னுடைய‌ எதிர்ப்பை தெரிவிப்பேன்.த‌மிழ‌க‌த்தில் த‌ற்போது 548 பொறியிய‌ல் க‌ல்லூரிக‌ள் உள்ள‌ன‌.34 பொறியிய‌ல் கல்லூரிக‌ள் அனும‌திக்காக‌ காத்திருக்கின்ற‌ன‌.மேலும் இந்த பின்த‌ங்கிய‌ க‌ல்லூயில் இப்ப‌டி ஒரு க‌ல்லூரியை தொட‌ங்கிய‌ பிஎஸ் ஏ ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளை ம‌ன‌தார மரியாதை செய்கிறேன், வாழ்த்துகிறேன் என்றார்.

மாண‌விய‌ர் ச‌பாநாய‌க‌ராக‌, அமைச்ச‌ராக‌, நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌ த‌ங்க‌ள‌து த‌லைமைப் ப‌ண்பினை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் சிற‌ப்புற‌ செய‌ல்ப‌டுத்திக் காட்டிய‌தை வெகுவாக‌ப் பாராட்டினார். இது போட்டியோடு இருந்து விடாது அமைச்ச‌ராக‌ ஆகும் நிலையை அடைய‌ முன்னாள் ஜனாதிப‌தி அப்துல் கலாம் கூறிய‌ க‌ன‌வு காண்ப‌து குறித்து விவ‌ரித்தார். சிறு சிறு த‌வ‌றுக‌ளை திருத்திக் கொண்டு எதிர்கால‌த்தில் சிற‌ந்த‌ முறையில் செய‌ல்பட‌ பாராட்டினார்.

கீழ‌க்க‌ரையில் இளைஞிக‌ளின் நாடாளும‌ன்ற‌ம் எவ்வித‌ வெளிந‌ட‌ப்பும் இன்றி ந‌ட‌ந்துவிட்ட‌து. ஆனால் டெல்லியில் ந‌டைபெற‌ வேண்டிய‌ நாடாளும‌ன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ஒரு சில‌ரின் பிடிவாத‌ப் போக்கின் கார‌ண‌மாக‌ ந‌டைபெறாம‌ல் இருப்ப‌து வ‌ருத்த‌த்திற்குரிய‌து என்றார். சட்டமேதை அம்பேத்க‌ரை அர‌சிய‌ல் நிர்ண‌ய‌ச‌பைக்கு அனுப்பிய‌து இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் தான் என்று தெரிவி்த்தார்.

நாடாளும‌ன்ற‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி, லோக்ச‌பா, ராஜ்ய‌சபாவிற்கு பிர‌திநிதிக‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌டும் முறை, ப‌த‌வியேற்கும் முறை உள்ளிட்ட‌வ‌ற்றை ஆசிரிய‌ர் பாட‌ம் ந‌ட‌த்துவ‌து போல் மாண‌விக‌ளுக்கு விவ‌ரித்தார். நாடாளும‌ன்றத்தை அனைவ‌ரும் காண‌ வேண்டும் என்ற‌ வேண்டுகோளை விடுத்தார். அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை தானே செய்வதாக உறுதியளித்தார்.

சுத‌ந்திர‌ தின‌ விழாவில் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரிட‌ம் ச‌மூக‌ சேவைக்கான‌ சிற‌ப்பு விருது பெற்ற‌ தாசிம்பீவி க‌ல்லூரி முத‌ல்வர் சுமையா தாவூதினை பாராட்டி அனைவ‌ரும் எழுந்து நின்று க‌ர‌வோசை எழுத்தி வாழ்த்து தெரிவிக்க‌க் கூறினார். க‌ல்வி வ‌ள்ள‌ல் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளின் சிந்த‌னையில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இந்நிறுவ‌ன‌த்தில் ப‌யில்வோர் ச‌கோத‌ர‌த்துவ‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு சிற‌ப்பான‌ நிலையினை அடைய‌ வாழ்த்தினார்.
தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சியில் மாண‌விக‌ள் அப்துல் ரஹ‌மானிட‌ம் ச‌ம‌சீர் க‌ல்வி,பாராளுமன்ற செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பின‌ர்.

இத‌ற்கு ப‌தில‌ளித்த‌ அப்துல் ர‌ஹ்மான் எம்பி , ச‌ம‌சீர் க‌ல்வி அவ‌சிய‌ம் என்றும் பாராளும‌ன்ற‌ம் செம்மையாக‌ செய‌ல்ப‌ட‌ அனைத்து உறுப்பின‌ர்க‌ளும் ஒத்துழைத்தால் முடியும் மேலும் கார‌சார‌மாக‌ விவாத‌ம் செய்து பாராளும‌ன்ற‌ விதிமுறைக‌ளை மீறாம‌ல் ந‌ட‌ந்து கொண்டால் தவ‌றில்லை என்றார்,


நிக‌ழ்ச்சியில் சீத‌க்காதி அற‌க்க‌ட்ட‌ளை செய‌லாளர் காலித் புஹாரி த‌லைமை வ‌கித்தார்.க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா வ‌ர‌வேற்றார்.ஈடிஏ மார்ச‌ல் இய‌க்குந‌ர் எஸ்.எம்.புஹாரி முன்னிலை வ‌கித்தார். அமீரக‌ காயிதேமில்ல‌த் பொது செய‌லாளர் லியாக‌த் அலி, துணை பொது செய‌லாள‌ர் தாஹா, பொருளாள‌ர் ஹ‌மீது ர‌ஹ்மான்,துபாய் ம‌ண்ட‌ல‌ச் செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த்,, இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லீம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் வ‌ருசை முக‌ம்ம‌து, சீத‌க்காதி துனை பொது மேலாள‌ர் சேக் தாவுத் டாக்ட‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்




கீழக்கரை கல்லூரியில் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு விருது !


பட விளக்கம்:-கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியை மெஹராஜ் சிறந்த ஆசிரியைக்கான விருது பெற்றார்

ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கீழக்கரையில் நடைபெற்றது. ராமநாதபுரம், கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்ராக்ட் ஆகியவை இணைந்து முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் சின்னதுரை அப்துல்லா, தலைவர் ரமேஷ் பாபு, முன்னாள் துணை ஆளுநர் சண்முக ராஜேஸ்வரன், செயலாளர் ஜெயகுமார், பட்டய செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.

நிகழ்ச்சியில், ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் ஆரோக்கியம், செல்வகுமார், மெஹராஜ், ஆனந்தி பிரேமா(ஜீ டிவி விவாதத்தில் பங்கேற்றவர்), மரியதாஸ் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.

Thursday, August 30, 2012

கீழக்கரையில் முஸ்லீம் லீக் பேனர்கள் கிழிப்பு ! க‌டும் க‌ண்ட‌ன‌ம்!



கீழக்கரை, ஆக.30:

கீழக்கரையில் நள்ளிரவு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வேலூர் எம்பியுமான அப்துல் ரஹ்மான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று கீழக்கரை வருகிறார். அவரை வரவேற்று அக்கட்சி சார்பில் நகரில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்மநபர்களால் பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இதனால் அக்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பேனர் கிழிசல்கள் சரிசெய்யப்பட்டன.

இது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லீம் லீக் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் விஷமிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். கட்சியினர் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். இதில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்படும்� என்றார்.

Wednesday, August 29, 2012

கீழக்கரையை வலம் வந்து குப்பைகளை அகற்றுவதற்கு புதிய 15 டிரை சைக்கிள்கள் !




கீழ‌க்க‌ரை நகராட்சி சார்பாக‌ 15 டிரை சைக்கிள்க‌ள் 6 டிரை சைக்கிள்க‌ள் இன்று ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌ன‌.

டிரை சைக்கிள்க‌ளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்து ப‌ய‌ன்பாடிற்கு விடும் நிக‌ழ்ச்சி இன்று ந‌க‌ராட்சி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து. ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவியத்துல் காத‌ரியா த‌லைமையில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் க‌மிஷ‌ன‌ர் முக‌ம‌து மைதீன்,க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.ஒரு டிரை சைக்கிளில் இர‌ண்டு ந‌க‌ராட்சி ஊழிய‌ர்கள் வீதம் சென்று நகரில் குப்பைக‌ளை சேக‌ரிப்பார்க‌ள்.


இது குறித்து நக‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,

ஊழிய‌ர்க‌ள் ப‌ற்றாகுறையால் த‌ற்ச‌ம‌ய‌ம் 6 டிரை சைக்கிள்க‌ள் ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகிற‌து.விரைவில் அனைத்தையும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சூழ‌ல் ஏற்ப‌டும்.இத‌ன் மூல‌ம் சாலையோர‌ங்க‌ளில் குப்பைக‌ள் சேர்வ‌து த‌விர்க்க‌ப்ப‌டும் என்றார்.

நாளை(30-08-02) அப்துல் ரஹ்மான்.எம்.பி கீழக்கரை வருகை!முஸ்லீம் லீக் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!






கீழக்கரைக்கு நாளை காலை காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கினைப்பாளர் அப்துல் ரஹ்மான்.எம்.பி வருகை தர இருப்பதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கீழக்கரை கிளை சார்பாக பிரமாண்ட வரவேற்பு ஏறபடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நகரெங்கும் முஸ்லீம் லீக் சார்பாக பிளக்ஸ் போர்டு விளம்பரங்கள்,கொடி தோரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை வரும் அப்துல் ரஹ்மான்.எம்பி நாளை 5க்கு மேற்பட்ட் இடங்களில் கொடியேற்றி வைத்து பேசுகிறார்.

மாவட்ட நிர்வாகிகளில் ஒத்துழைப்போடு கீழக்கரை நகர் முஸ்லிம் லீக் சார்பில் நிர்வாகிகளில் ஒருவரான‌ லெப்பை தம்பி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


மின்ஹாஜியார் ப‌ள்ளிவாச‌ல் அருகே சுகாதார‌ கேடு!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை!




செய்தியாளர்: சேகு சதக் இப்ராஹிம்

கீழக்கரை 10 வார்டு பகுதியில் மின் ஹாஜியார் பள்ளி முன்பு ஓடும் கழிவு நீரால் பள்ளிக்கு தொழுகைக்கு வருபவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பாக உள்ளது இதுபோல் அடிக்கடி நிகழ்வதால் பெரும் சிரமமாக உள்ளது எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள் கூறுகின்றனர்.

அதே போல் இந்த பகுதியில் சேரான் தெருவில் கடற்கரை பகுதி புதிய பாலம் செல்லும் வழியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரம் சீர்கேடு ஏற்படு நிலை உள்ளது
இது பற்றி அப்பகுதி காதர் கூறுகையில் இப்பகுதி ஒதுக்கு புறமாக இருப்ப‌தால் கவ‌னிப்பார‌ற்று கிட‌க்கிற‌து இங்கு தொடர்ச்சியாக‌ குப்பை அகற்றப்படுவதில்லை என்றாவது ஒரு முறைதான் அகற்றப்படுகிறது,உடனடியாக வார்டு மெம்பரும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


`

ஜப்பானிய சுற்றுலா பயணிகள் தடுமாற்றம்! உதவிய கீழக்கரை இளைஞர் !




ஜப்பான் சீக பெர்பெக்சர் யுனிவர்சிட்டியில் பயிலும் ஜப்பானிய ஆராய்ச்சி மாணவர் சுக்ராய்(23),மாணவி சின்யா யூ வேனிஸ்(23) ஆகியோர் சுற்றுலா மற்றும் பழங்கால கட்டிட கலை ஆராய்ச்சிக்காக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதிக்கு வந்தனர். வெளிநாட்டிநர் ஆராய்ச்சிக்காக இங்கு வரும் போது உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளை இவர்கள் பின்பற்றததால் போலீசார் இப்பகுதியில் சுற்றுவதற்கு அனுமதி மறுத்தனர்.இதனால் இவர்கள் ஹோட்டலில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த தொல்பொருள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கீழக்கரை இளைஞர் அபுசாலிஹ் இவர்கள் முறையான அனுமதி பெறுவதற்கான உதவிகளை செய்து தந்து அறிவுரைகளும் வழங்கினார்.

இது குறித்து ஜப்பானிய மாணவிகள் கூறியதாவது, நாங்கள் ஏற்கெனவே கட்டிட கலை ஆராய்ச்சிக்காக இந்தியா வந்துள்ளோம் 2 மாதத்திற்கு மேல் தங்கியிருந்து ராமேஸ்வரம்,கீழக்கரை பகுதியில் பழங்கால் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.இங்குள்ள பழங்கால‌ க‌ட்டிட‌ங்க‌ள் எங்க‌ளை பிர‌மிக்க‌ வைத்த‌து. என‌வே த‌ற்போது எங்க‌ள் ப‌டிப்பிற்கான‌ ஆராய்ச்சியை நிறைவு செய்வ‌த‌ற்காக‌ மீண்டும் வ‌ந்தோம்.இப்ப‌குதிக்கு வ‌ந்த‌ நாங்கள் இம்முறை த‌னியாக‌ வ‌ந்த‌தாலும்,மொழி தெரிய‌த‌தாலும் அர‌சு முறை ச‌ம்பிராத‌ய‌ங்க‌ளை நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை.இத‌னால் ஹோட்ட‌லை விட்டு வெளியே வ‌ர‌ முடியாத‌ சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து.என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் திகைத்த‌ நாங்க‌ள் சென்ற‌ முறை அறிமுக‌மான‌ ந‌ண்ப‌ர் அபுசாலிஹை தொட‌ர்பு கொண்டோம்.அத‌ன் பேரில் அவ‌ர் எங்க‌ளுக்கு உத‌வினார்.த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் விருந்தோம்ப‌லுக்கு சிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்று அறிந்திருந்தோம் த‌ற்போது நேரில் க‌ண்டுகொண்டோம் என்ற‌ன‌ர்.


இது குறித்து அபுசாலிஹ் கூறிய‌தாவ‌து,
இவ‌ர்க‌ள் சென்ற‌ முறை என‌க்கு அறிமுக‌மானார்க‌ள்.த‌ற்போது மீண்டும் தொட‌ர்பு கொண்டும் உத‌வ‌ வேண்டும் என்று கேட்டார்க‌ள் அத‌ன‌டிப்ப‌டையில் ‌ அர‌சின் முறையான அனும‌தியை பெறுவ‌த‌ற்கு உரிய‌ வ‌ழிமுறைக‌ளை அமைத்து தந்தேன்.மேலும் கீழ‌க்க‌ரை வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ இட‌மாக‌ இருப்ப‌தால் சுற்றுலாத்துறை கீழ‌க்க‌ரையில் த‌க‌வ‌ல் சிறப்பு மைய‌ம் ஒன்றை ஏற்ப‌டுத்தி இதுபோன்று வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்றார்.
















Tuesday, August 28, 2012

கீழக்கரையில் கந்துவட்டி,கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை !காவல்துறை த‌னிப்பிரிவு ரெடி !




கீழக்கரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை ஒடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க‌ தனிப்படை அமைக்கபட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சமீபகாலமாக கீழக்கரை நகரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலின் அட்டூழியம் பெருகி வருகிறது. வறுமையில் நலிந்த நடுத்தர குடும்பங்களை குறிவைத்து கடன் தருவதாக கந்துவட்டி கும்பலும், சொத்து தகராறு, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு போன்ற விவகாரங்களை தேடிப்பிடித்து பிரச்னையை தீர்ப்பதாக கட்டப்பஞ்சாயத்து கும்பலும் களத்தில் இறங்கி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கும்பலிடம் சிக்கிக் கொண்டு சொத்து, வீடு, அந்தஸ்தை இழந்து பரிதவிக்கும் அப்பாவிகள் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த ஒருவ‌ர் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு கூட, கீழக்கரையில் ஒரு சம்பவம் நடந்தது. ஓராண்டுக்கு முன்பு ஒருவர், குடும்பச்சூழல் காரணமாக தனது வீட்டை ரூ.2.50 லட்சத்திற்கு கந்துவட்டி கும்பலிடம் அடமானம் வைத்துள்ளார். ஓராண்டு முடிவில் வட்டியுடன் ரூ.3.50 லட்சமாக கடன்தொகை உயர்ந்தது. அதனை கொடுத்து வீட்டை மீட்க முயன்றார் அந்த நபர். வீட்டை கொடுக்க முடியாது என கந்துவட்டி கும்பல் மிரட்டியது. இதனையறிந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், பாதிக்கப்பட்ட நபரை அணுகி, எங்களுக்கு ரூ.50ஆயிரம் கொடுத்து விடுங்கள். பிரச்னையின்றி வீட்டை மீட்டுத்தருகிறோம் என்றனர். அந்த பணத்தையும் வேறொரு இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி கட்டி வீட்டை மீட்டுள்ளார். இதனால் வீட்டு உரிமையாளருக்கு வீட்டை மீட்க ரூ.4 லட்சம் செலவானது. இதுபோன்று வாரம் ஒரு சம்பவம் நடந்து வருகிறது என்றார்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல் ஏதாவ தொரு கட்சியின் பின்புலத்துடன் செயல்படுகின்றன. இவர்களது மிரட்டலால் அப்பாவிகள், போலீசாரிடம் பிரச்னையை கொண்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். இக்கும்பல்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்� என்றார்.


கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர்அப்துல் காதர் கூறுகையில், இதுபோன்ற சமூக விரோதிகளிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். கந்துவட்டியை ஒழிக்க நாங்கள் வட்டியில்லா கடன் தருகிறோம். இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் கீழக்கரையில், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வட்டியில்லா கடன் தருகின்றன. மக்கள் அவற்றை பயன்படுத்திக் கொண்டு கந்து வட்டிக்காரர்களை புறக்கணிக்க வேண்டும். எந்த பிரச்னையையும் சட்டரீதியாக அணுகினால் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்றார்.

கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்டபோது,

கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலை ஒடுக்க தனிப்பிரிவே உள்ளது. இதுதொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. பாதிக்கப்பட்டோர், யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. எங்களிடம் புகார் தரலாம். அவர்களது பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Monday, August 27, 2012

கீழக்கரையில் காலவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்!நகராட்சி நடவடிக்கை!




கீழக்கரையில் காலவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்!நகராட்சி நடவடிக்கை!

கீழக்கரையில் சில இடங்களில் காலவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது இதனையடுத்து நகராட்சி மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சோதனை செய்யபட்டு விற்பனைக்கு இருந்த தண்ணீர் பாக்கெட்டுள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து ச‌த‌க் என்ப‌வ‌ர் கூறுகையில்,

இது போன்ற காலவதியான த‌ண்ணீரால் ப‌ல்வேறு நோய்க‌ளும் உண்டாகிற‌து.ப‌ள்ளி சிறுவ‌ர் சிறுமிக‌ள் இத‌னை வாங்கி ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் பாதிப்புக்குள்ளாகின்ற‌ன‌ர்.இத‌னை ச‌ப்ளை செய்பவ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா !734 மாணவ,மாணவியர் பட்டம் பெற்றனர்.!.!





கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். கல்லு�ரி தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, சென்னை கூடுதல் தலைமை செயலா ளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.734 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் பட்டம் வழங்கினார்.

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, மண்டபம் சேர்மன் தங்கமரைக்காயர், ஹமீது மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் துறைத்தலைவர்கள் யூசுப் உட்பட பலர் செய்திருந்தனர்.

Saturday, August 25, 2012

ஹ‌மீதியா ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கு விலையில்லா லேப்டாப் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி!


கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலத்தெரு ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்து லேப்டாப்பை மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி தாளாளர் யூசுப்சாகிபு, முகமது சதக்பாலிடெக்னிக் கல்லு�ரி முதல்வர் அலாவுதீன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். இதில் சிராஜ் மற்றும் மேலத்தெரு உஸ்வது�ன்ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை கடற்கரையில் சிறுதொழில் மீனவர்கள் சங்க நிகழ்ச்சி!ஏராளமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.






கீழக்கரையில், சிறு தொழில் மீன வர் சங்கம் சார்பில் ஏராளமானோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர் தலைமை வகித்து மீனவர் சங்கத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.தொழிலதி பர் ரிபாய்தீன், தங்கம் ராதகிருஷ்ணன், ஹமீது, குத்புதீன் ராஜா, அக்பர், கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கீழக்கரையில் பைக் விபத்தில் இளைஞர் (வபாத்)காலமானார்!



கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது என்ற பசூல்(22)சில நாட்களுக்கு முன் இவர் இரவு பைக்கில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே குண்டு குழியுமான சாலையில் பைக் விபத்தில் சிக்கியது.

பலத்த காயமடைந்த இவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.அவரின் நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் ஜீம்மா பள்ளி மையவாடியில் நடைபெறுகிறது

Friday, August 24, 2012

கீழக்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்!



கீழக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை  அழைக்கப்படும் அரிய வகை டால்பின்  மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

முப்பது கிலோ எடையும் ஐந்தரை அடி நீளமும் உடைய அரிய வகை மீன் என மீனவர்கள் தெரிவித்தனர். டால்பின் வகையாக இருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையை சேர்ந்த வனசரகர் ஜெயராமன்,வனக்காப்பாளர்கள் பாலகிருஸ்னன்,ரவிகுமார்,வேட்டை தடுப்பு காவலர் மகேந்திரன் கால்நடை மருத்துவர் ராதாகிருஸ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இறந்த மீன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு கடற்கரையோரம் புதைக்கப்பட்டது.


நாளை(25-08)கீழக்கரையில் இலவச கண்சிகிச்சை முகாம்!அறுவை சிகிச்சை,தங்குமிடம் இலவசம்!


ராமநாதபுரம் மாவட்டம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் யூசுப்சுலைஹா மருத்துவமனை சார்பில் நாளை இல‌வ‌ச‌ க‌ண் ப‌ரிசோத‌னை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை கீழ‌க்க‌ரை யூசுப்சுலைஹா ம‌ருத்துவ‌ம‌னையில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை ந‌டைபெறுகிற‌து.



த‌ங்கும் இட‌ம்,உண‌வு,அறுவை சிகிச்சை ,மருந்துகள்,வீடு திரும்ப வாகன ஏற்பாடு உள்ளிட்ட‌வை இல‌வ‌ச‌ம் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

பிர‌ப‌ல‌ கண் அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துசாமி சிகிச்சைய‌ளிக்க‌ உள்ளார்.

மாதம் ஒரு வார்டில் சிறப்பு கவனம்!கமிஷனரிடம் கோரிக்கை !



கீழக்கரை நகராட்சி கமிஷனராக பொறுபேற்றுள்ள முகம்மது மைதீனுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர். அதன் நிர்வாகிகளான தமீமுதீன்,கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்,சாலிஹ் ஹீசைன்,பாபா பக்ருதீன்,மாணிக்கம்,சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் கீழ‌க்க‌ரையில் உள்ள‌ ப‌ல்வேறு குறைக‌ளை நிவ‌ர்த்தி செய்யும் ப‌டியும்,குறிப்பாக‌ ஊழ‌ல் ந‌டைபெறாம‌ல் த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் ப‌டி கோரிக்கை விடுத்த‌ன‌ர்.

மேலும் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் க‌மிஷ‌ன‌ரிட‌ம் கொடுத்துள்ள ம‌னுவில், கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் மாத‌ம் ஒரு வார்டாக சிற‌ப்பு க‌வ‌ன‌ம் செலுத்தி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வும் ம‌ற்றும் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌வும் ம‌னுவில் குறிப்பிட்டுள்ளார்.

கீழ‌க்க‌ரை ந‌கராட்சி இட‌ங்க‌ள் ஆக்கிர‌மிப்பு ! ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் !க‌மிஷ‌ன‌ர் அறிவிப்பு!




கீழக்கரை நகராட்சிக்கு நீண்ட காலமாக தனி கமிஷனர் நியமிக்கப்படாமல் கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரம் கமிஷனர் முஜிபுரஹ்மான் கவனித்து வந்தார். இதனால் பல்வேறு பணிகள் தாமதமாகி வந்தன. புதிய கமிஷனராக முகம்மது முகைதீனை தமிழக அரசு நியமித்தது. அவர் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

நகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் முகம்மது முகைதீன் கூறுகையில்,

கீழக்கரையில் பொது சுகாதாரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கப்படும். நகராட்சி தலைவரிடம் ஆலோசனை செய்து சுகாதாரப்பணிகள் முடுக்கிவிடப்படும். குப்பைகளை வீட்டுக்கு வீடு எடுப்பதற்கு புதிதாக ரூ.3.5 லட்சம் செலவில் 15 டிரைசைக்கிள்களும், ரூ.2.5 லட்சம் செலவில் 60 குப்பை தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகராட்சியின் பயன்பாட்டிற்கு விடப்படும், குடிதண்ணீர் பைப்புகள் சேதமடைந்துள்ளதால் விரைவில் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். நகராட்சியின் இடங்களை கடைகள் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்றார்.

கீழக்கரையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்ட கமிஷனர் குறிப்பாக அத்தியிலைதெரு, என்.எம்.டி. தெருவில் குப்பைகள் குவிந்துகிடந்ததை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

முஸ்லீம் லீக் வ‌ள‌ர்ச்சியில் கீழ‌க்க‌ரையின் ப‌ங்கு ம‌க‌த்தான‌து!மாநில‌ பொருளாள‌ர் ஷாஜ‌கான் பேச்சு




கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழக்கரை வருகை தர இருக்கும் அப்துல் ரஹ்மான்.எம்பி வரவேற்பளிப்பது குறித்தும்,கீழக்கரை நகரின் வளர்ச்சி குறித்தும் ,கட்சியின் வளர்ச்சி பணி குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ,கீழக்கரை நிர்வாகிகள் லெப்பை தம்பி,கமருஸ்சமான்,அபுபக்கர் மற்றும்அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் ஹமீது ரஹ்மான்,குத்புதீன் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் அப்துல் ரஹ்மான்.எம்பிக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்றும்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை கிளையை பலப்படுத்துவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொருளாளர் ஷாஜாகான் பேசுகையில் ,
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் வளர்ச்சியில் கீழக்கரையின் பங்கு மகத்தானது.இன்ஷா அல்லா கீழக்கரையை மிக பலமிக்க முஸ்லீம் லீக்கின் கோட்டையாக மாற்றுவதற்கு உண்டான முயற்சியில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.மேலும் கீழக்கரை வழியாக‌ புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.முஸ்லீம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ரும் அப்துல் ர‌ஹ்மான் எம்பிக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பை த‌ருவோம் என்றார்.

பின்னர் மாநில பொருளாளர் ஷாஜகானை மாசா சமூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் ம‌ற்றும் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ச‌ந்தித்த‌ன‌ர்.




Thursday, August 23, 2012

கீழக்கரை மக்தூமியா பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய விழா மேடை திறப்பு நிகழ்ச்சி !







கீழக்கரை மக்தூமியா பள்ளி வளாகத்தில் மர்ஹூம் ஏகேஎஸ் கபீர் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள புதிய விழா மேடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஹைதர் அலி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.முகம்மது சதக் தம்பி(தலைவர் பழைய குத்பா பள்ளி ஜமாத்) தலைமை வகித்தார்.துணை சேர்மன் ஹாஜா முகைதீன் முன்னிலை வகித்தார்.ஹமீது சுல்தான்(தாளாளர்,மக்தூமியா உயர் நிலைபள்ளி) வரவேற்புரை நிகழ்த்தினார்.செய்யது இப்ராகிம்(தாளாளர்,ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி),டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக்,உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை மாசா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் உள்ளிட்ட இளைஞ‌ர்க‌ள் க‌வ‌னித்த‌ன‌ர்.
நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். ஹிதாய‌த்துல்லா(பொருளாளர்,ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத்)ந‌ன்றி கூறினார்.

Wednesday, August 22, 2012

எல்லா புகழும் இறைவ‌னுக்கே..அனைவ‌ருக்கும் ந‌ன்றி !மாநில‌ விருது பெற்ற‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா பேட்டி!



ப‌ட‌ விள‌க்க‌ம் :- அமைச்சர் சுந்தர்ராஜன்,ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் உள்ளிட்டோர் விருது பெற்ற கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு வாழ்த்துக்க‌ளை தெரிவித்த‌ன‌ர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான சிறந்த சமூக பணியாளருக்கான(மகளிர் நலன்) விருது கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.இன்று ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார்,அமைச்ச‌ர் சுந்த‌ர்ராஜ‌ன் ஆகியோர் விருது பெற்ற‌ சுமையாவுக்கு பாராட்டு தெரிவித்தன‌ர்.த‌மிழ‌கம் முழுவதும் ப‌ல்வேறு அமைப்புக‌ள் ம‌ற்றும் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்துக்க‌ளை தெரிவித்துள்ளார்க‌ள்.

மாநில‌ அள‌விலான‌ விருது பெற்ற‌து குறித்து தாசிம் பீவி அப்துல் காத‌ர் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையாவை ச‌ந்தித்து கீழக்கரை டைம்ஸ் சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் கூறியதாவது,



கேள்வி:- இது போன்ற மாநில அளவிலான‌ விருது கிடைக்கும் என‌ எதிர்பார்த்தீர்க‌ளா ?

பதில்:-எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே.... இப்ப‌டி ஒரு விருது என‌க்கு கிடைக்கும் என‌ நான் எதிர்பார்த்த‌தில்லை.இன்ப‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து.முதல்வர் ஜெயலலிதாவை நான் சிறு வயதில் எனது ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த போது ஒரு முறை நேரில் சந்தித்துள்ளேன்.தற்போது இரண்டாவது முறையாக விருது பெறுவதற்க்காக முதல்வர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவ்விருது பெற‌ என‌க்கு உறுதுனையாக‌ இருந்த‌ க‌ல்லூரி நிர்வாக‌த்துக்கும்,ஆசிரியைக‌ள்,மாண‌விய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி தெரிவித்து கொள்கிறேன்.மேலும் ர‌ம‌லான் மாதத்தில் இந்த‌ விருது கிடைத்திருப்ப‌து அல்லாஹ்வின் மாபெரும் கிருபை என‌‌ க‌ருதுகிறேன்.

கேள்வி:-க‌ல்லூரி முத‌ல்வர் என்பது மிகபெரிய‌ பொறுப்பு அதில் இருந்து கொண்டு முழுமையான‌ சமூக‌ சேவையில் ஈடுபடுவது கூடுதல் சுமையில்லையா? இரண்டிலும் வெற்றிக‌ர‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியுமா?

பதில்:-கல்லூரியை பொறுத்த வரை கல்லூரி நிர்வாகம் என்னிடம் பொறுப்புமிக்க பிரின்ஸ்பால் என்ற‌ தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்வை இன்றும் மிகுந்த நன்றியுணர்வுடன் நினைத்து பார்க்கிறேன்.தாசிம் பீவி க‌ல்லூரி என‌து வாழ்வின் அங்கம். மேலும் நிர்வாகத்தின் ஆதரவும்,ச‌காக்க‌ளின் முழு ஒத்துழைப்பு இருப்ப‌தால் க‌ல்லூரியை மிக‌ சிற‌ப்பாக‌ செயல்ப‌டுத்த‌ முடிகிற‌து.மேலும் திட்ட‌மிட‌ல் இருந்தால் ஒரே நபர் எத்தனை பணிகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.சமூக பணியாற்றுவது என்பதை ஒரு பணியாகவே கருதவில்லை.எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.மேலும் எந்த‌ ஒரு ப‌ணியையும் முழு ஈடுபாட்டோடு செய்தால் எந்த‌ ப‌ணியும் சுமையில்லை.


கேள்வி:-சமூக பணியில் உங்க‌ள் எதிர்கால‌ திட்ட‌மென்ன‌ ?

பதில்:- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏற்கேன‌வே ம‌க‌ளிர் சுய‌ உத‌வி குழுக்க‌ள் மூல‌ம் பெண்கள் தாங்களே வருமானம் ஈட்டி கொள்ளும் வகையில் சுய தொழிலுக்கான் பயிற்சிகள அளித்து வருகிறோம்.அதை இன்னும் விரிவாக‌ செய‌ல்ப‌டுத்துவோம்.மேலும் கீழ‌க்க‌ரையில் மிக‌ பெரிய‌ பிர‌ச்ச‌னையாக‌ திக‌ழ‌ கூடிய‌ சுகாதார‌ பிர‌ச்ச‌னையை சீர் செய்வ‌த‌ற்கு "கீப் த‌ ட‌வுன் கிளீன்" என்ற‌ பெய‌ரில் அமைப்பு ஏற்ப‌டுத்தி சமூக‌ ஆர்வ‌முள்ளவ‌ர்க‌ளை அதில் இணைத்து செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறோம்.ப‌ல்வேறு திட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌.அவை அனைத்தும் செயல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுத்த‌மான‌ ந‌க‌ர‌மாக்குவோம்.நான் விருது பெறும் போது சிறந்த நகராட்சிக்கான விருதை பொள்ளாச்சி நகரம் பெற்று ரூ25லட்சம் ரொக்கத்தையும் பெற்றனர்.இதே போல் இன்ஷா அல்லாஹ் அடுத்த‌ ஆண்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சேர்ம‌ன் சிற‌ந்த‌ நக‌ராட்சிக்கான‌ விருதை த‌மிழக‌ முத‌ல்வ‌ர் கையால் பெற‌ வேண்டும் என்ப‌து என‌து ஆசை அத‌ற்கு வேண்டிய‌ அனைத்து ஆத‌ர‌வையும் நாங்க‌ள் வ‌ழ‌ங்குவோம்.எங்க‌ளையும் ஈடுப‌டுத்தி கொள்வோம் .அதே போல் ம‌ன்னார் வ‌ளைகுடாவான‌ ந‌ம‌து க‌ட‌ல் ப‌குதியின் வ‌ள‌ம் பாதுக்காக்க‌பட ‌வேண்டும் அத‌ற்காக‌ வேண்டிய‌ முய‌ற்சிக‌ளையும் செய்வோம் என்றார்.

மாநில அளவிலான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது .....
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது வரை 840 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 18லட்சத்து 41ஆயிரம் ரூபாயை மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் மூலம் வழங்கியுள்ளார்.மேலும் மாவட்டத்தின்பெண்கள் சுய உதவு குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.2ஆயிரம் சுய உதவி குழு பெண்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் தொழில் துவங்க பயிற்சி அளித்து வருகிறார்.சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். மேலும் சுய உதவிக்குழு மூலம் குடும்பகட்டுப்பாடு,கண்தானம்,ரத்ததானம்,மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2007 -2009 மற்றும் 2010 - 2012 ஆகிய ஆண்டுகளில் பெண்கல்விக்கான தேசிய சிறுபாண்மையினர் கல்வியியல் நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.இவ்வாறு அதில் கூற‌ப்ப‌ட்டுள்ளது.


















































Tuesday, August 21, 2012

கீழக்கரையில் பாலில் விஷம் என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை !காவல்துறை அறிவிப்பு!


கீழக்கரையில் நேற்று ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று முன் தினம் நள்ளிரவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மெஹந்தி உபாயோகித்த பலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக செய்தி பரவி பின்னர் நேற்று காலை அடங்கியது.

இந்நிலையில் கீழக்கரையில் நேற்று அதிகாலை பாலில் விஷம் கலந்திருப்பதாக வதந்தி பரவி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பலரும் பால் உபயோகப்படுத்த தயங்கினர்.சில மணி நேரங்களில் வெறும் புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டது.ஈத் பெருநாளில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த விஷமிகள் பீதியை கிளப்பியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறியதாவது,

இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.சிலர் வேண்டுமென்றே இது போன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.இதை பரப்பியவர்கள் யார் என்று விசாரணை நடைபெறுகிறது.பிதியை கிளப்பிய இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Monday, August 20, 2012

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெருநாள் (மணல்மேடு) கண்காட்சி துவங்கியது!(படங்கள்)






கீழக்கரை பெருநாளை முன்னிட்டு வடக்கு தெரு மணல் மேட்டில் ஆண்டுதோறும் கண்காட்சி நடைபெறும்.இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ராட்டினம்,உள்ளிட்ட பொழுது போக்கு சாதனங்கள் நிறுவப்படும்.மாலை நேரத்திலிருந்து இரவு வரை இங்கு ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில் இந்தவருடமும் வழக்கம் போல் மணல்மேடு பகுதியில் கண்காட்சி துவங்கியது.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அங்கு வரும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

கீழக்கரையில் பெருநாளையோட்டி பல் வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் !













இன்று பெருநாளையோட்டி கீழக்கரையில் இஸ்லாமிய‌ மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை முடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி பறிமாறி கொண்டனர்.அதே போம் நேற்று இரவிலிருந்து கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறுவ‌ர்,சிறுமிக‌ள் இன்று காலை ந‌டுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி பின் புறம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள சிறு கடைகள் நிறைந்த க‌ண்காட்சி திட‌லில் குவிந்த‌ன‌ர்.