Wednesday, October 31, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதிக‌ளில் ப‌ஸ்க‌ள் இய‌க்க‌ப்ப‌ட‌வில்லை!பொதும‌க்க‌ள் அவ‌தி!



பைல் ப‌ட‌ம்
 கமுதியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருபூஜைக்குச்சென்றவர்கள் மூன்றுபேர் கொலை செய்யப்பட்டனர். இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று  கீழக்கரையில் இன்று அதிகாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. இங்குள்ள ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களும் நகரங்களுக்கு செல்ல மறுத்தனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் சிரமமடைந்தனர். 40க்கும் அதிகமான கல்லூரி பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் மாணவர்கள் வரமுடியவில்லை. மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய மக்கள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விவசாயிகள் விளைந்த காய்கறிகளை நகரங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறினர். கீழக்கரையில் படிக்கும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நடந்து பள்ளிக்கு சென்றனர்.

கீழக்கரை கல்லூரி தரப்பில் விசாரித்தபோது, விடுதி மற்றும் உள்ளுர் மாணவர்களை கொண்டு கல்லூரி இயங்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் பஸ்சை இயக்க முடியாது, என்றனர்
த‌னியார் சர‌க்கு ஏற்றும் வேன்க‌ள் ப‌ய‌ணிக‌ள் வாக‌ன‌மாக‌ இய‌க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இதில் ஏராள‌மானோர் நின்று கொண் ப‌ய‌ண‌ம் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.
 

Monday, October 29, 2012

க‌ல்லூரிக‌ளுக்கான‌ வாலிபால் போட்டியில் கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி முத‌லிட‌ம்!


சென்னை அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் 16வ‌து ம‌ண்ட‌ல‌ வாலிபால் போட்டி புதுக்கோட்டை ம‌வுண்ட் சியோன் பொறியிய‌ல் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து.இதில் காரைக்குடி அழ‌க‌ப்பா பொறியிய‌ல் க‌ல்லூரி ம‌துரை கே.எல்.சி க‌ல்லூரி,சி ஆர் பொறியிய‌ல் க‌ல்லூரி உள்ப‌ட‌ 21 க‌ல்லூரிக‌ள் ப‌ங்கு பெற்ற‌து. இதில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி அரை இறுதி போட்டியில் ம‌துரை தியாக‌ராஜ‌ர் பொறியிய‌ல் க‌ல்லூரியை அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டியில் புதுக்கோட்டை ம‌வுண்ட் சியோன் பொறியிய‌ல் க‌ல்லூரியை வென்று சாம்பிய‌ன் கேட‌ய‌த்தை கைப‌ற்றிய‌து.

போட்டியில் வெற்றி பெற்று க‌ல்லூரிக்கு பெருமை சேர்த்த‌ மாண‌வ‌ர்க‌ளை சேர்ம‌ன் ஹ‌மீது அப்துல் காத‌ர்,தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்கத்துல்லா,முத‌ல்வ‌ர் ஜகாப‌ர்,உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர்க‌ள் சுரேஷ்குமார்,கோவிந்த‌ம்மாள் ம‌ற்றும் துறை த‌லைவ‌ர்க‌ள் பாராட்டின‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் த‌ர‌ம‌ற்ற‌ மின்விள‌க்குக‌ள் அமைப்ப‌தை த‌டுக்க‌ வேண்டும்!க‌வுன்சில‌ர் அறிக்கை!













18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் தெருவிள‌க்கு அமைக்கும் ப‌ணிக்காக‌ டெண்ட‌ர் விட‌ப்ப‌ட்டு த‌னியார் நிறுவ‌ன‌ம் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ரூபாய் ம‌திப்புள்ள டெண்ட‌ரை எடுத்த‌து.ஆனால் அர‌சின் விதிமுறைக‌ளை மீறி த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ளையும்,மின்சாத‌ன‌ங்க‌ளையும் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அமைப்ப‌த‌ற்கு முய‌ற்சித்த‌து.இதை ந‌டுநிலையாள‌ர்க‌ள் பல‌ரும் எதிர்ப்பு தெரிவித்த‌தால் அனைத்து பொருட்க‌ளையும் அந்நிறுவ‌ன‌ம் திரும்ப‌ பெற்றுக்கொண்ட‌து.

இந்நிலையில் மீண்டும் த‌ர‌மான‌ பொருட்க‌ளை விநியோக‌ம் செய்யும் என‌ காத்திருந்தோம் ஆனால்  ம‌றுப‌டியும் அந்த‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் த‌ர‌மில்லா டீயுப் லைட் உள்ளிட்ட‌ மின் சாத‌ன‌ பொருட்க‌ளை கீழ‌க்க‌ரையில் பொருத்த‌ இருப்ப‌தாக‌ அறிகின்றோம்.இந்த‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ள் அனைத்து ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் வைக்காம‌ல் த‌னியார் ப‌ள்ளி  வ‌ளாக‌த்தில் வைத்திருப்ப‌தாக செய்திக‌ள் கிடைத்துள்ள‌ன‌.

ஒப்ப‌ந்த‌ விதிமுறைப்ப‌டி அர‌சின் அனும‌தித்துள்ள‌‌ முன்ன‌‌ணி நிறுவ‌ன‌ங்க‌ளின் த‌ர‌மான‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ளைதான் பொருத்த‌ வேண்டும் அப்போதுதான் அடிக்க‌டி ப‌ழுது ஏற்படாது அர‌சு நிதியும் விண‌டிக்க‌ப்ப‌டாது.என‌வே மின் சாத‌ன‌ங்க‌ளை பொருத்துவ‌த‌ற்கு முன் அவ‌ற்றை ஆய்வு செய்து த‌ர‌மான‌வையாக‌ இருந்தால் ம‌ட்டுமே பொருத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ வேண்டும்.

டெண்ட‌ரில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ விதிமுறைக‌ளை மீறி த‌ர‌ம‌ற்ற‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ளை கீழ‌க்கரை ந‌க‌ரில் பொருத்த‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் அனும‌திக்குமானால் நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் ந‌டவ‌டிக்கை மேற்கொள்வேன் . இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பான‌ முந்தைய‌ செய்தி http://keelakaraitimes.blogspot.com/2012/06/blog-post_1228.html








 

கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌டுக்கை வ‌ச‌தி குறைவு!நோயாளிக‌ளுக்கு த‌ரையில் சிகிச்சை!






கீழக்கரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கீழக்கரையில் கடந்த இரண்டு வாரமாக அனைத்து பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது இதில் சிறிய குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவால் நோயாளிகளை தரையில் பாய் விரித்து போடும் நிலை உள்ளது.
காய்ச்சல் பாதித்தவர்கள் ரத்தம் பரிசோதனை செய்ய கொடுத்தால் மறுநாள்தான் ரிசல்ட் கிடைக்கிறது. இதனால் நோய் முற்றும் அபாயம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரத்த பரிசோதனை செய்து அதே நாளில் முடிவை தெரிவித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் ரஹ்மத்நிஷா கூறுகையில், ‘கீழக்கரையில் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டு பகுதியில் 28 படுக்கைதான் உள்ளது. காய்ச்சல் பாதித்த சிறுவர்கள் 36 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை இல்லாததால் நோயாளிகளை தரையில் பாய்விரித்து படுக்க வைத்துள்ளனர். இதனால் நோய் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது. மழைகாலம் என்பதால் தரையில் குளிர் ஏற்பட்டு காய்ச்சல் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
இதுகுறித்து மலேரியா சுகாதார ஆய்வாளர் செல்லகண்ணு கூறுகையில், ‘ரத்த பரிசோதனை செய்யும் பணியாளர் விடுமுறையில் இருப்பதால் தாமதம் ஆகிறது’ என்றார்.

கீழ‌க்க‌ரையில் நாளை(அக்.30,செவ்வாய்) காலை 9 ம‌ணி முத‌ல் மாலை 5 ம‌ணி வ‌ரை மின் த‌டை !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

Sunday, October 28, 2012

கீழ‌க்கரையில் 40க்கும் மேற்ப‌ட்டோருக்கு டெங்கு! ந‌ட‌வ‌டிக்கை ம‌ந்த‌ம் என‌ குற்ற‌ச்சாட்டு!


கீழக்கரையில் பெரியவர் முதல் சிறியவர் வரை 40க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் புதுத்தெரு அப்துல்வாகிது என்பவரின் ஒன்றரை மாதம் ஆண் குழந்தை இறந்தது. பெரிய அம்பலார் தெருவைச் சேர்ந்த பாத்திஹ் மவுலானா(19) என்ற இன்ஜினியரிங் மாணவன் மற்றும் மேலத்தெரு மாதிஹூர்ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துரை மற்றும் நகராட்சி இணைந்து எடுத்த நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு பாதிப்பு தலைதூக்கியுள்ளது.

மீண்டும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு சுகாதாரத்துறை முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து 21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறுகை யில், ‘எனது வார்டு பகுதியில் சுகாதாரக்கேடு அதிகம் இருப்பதால் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள அன்புநகரை சேர்ந்த ஹிரா(13) என்ற 7ம் வகுப்பு மாணவி மற்றும் பெரிய அம்பலார் தெருவைச் சேர்ந்த ஒரு மாண‌வ‌ரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழக்கரையை சேர்ந்த 40கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை கீழக்கரையில் விரைவில் இதற்கான முகாம் அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ‘டெங்கு பரவுவதற்கு காரணம் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் மெத்தனமே. ஆங்காங்கே பலநாட்கள் அகற்றப்படாமல் கிடக்கும் குப்பைகளும், தேங்கி நிற்கும் கழிவுநீரும்தான் காரணம் முத லில் அதை அகற்றி மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் முகாம் அமைக்க வேண்டும்’ என்றார்.






இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் குத்புதீன் ராஜா கூறுகையில்,

ஆங்காங்கே ம‌ழை நீர் தேங்கி நிற்கிற‌து.இத‌ன் மூலம் கொசு ப‌ர‌வும் வாய்ப்பு அதிக‌ம் இதை ந‌க‌ராட்சி உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ வேண்டும்டெங்கு காய்ச்ச‌ல் ப‌ர‌வி வ‌ருவ‌தால் குழ‌ந்தைக‌ளை வெளியே அழைத்து செல்லும் போது அச்ச‌மாக‌ உள்ள‌து.ப‌க‌ல் நேர‌த்தில் க‌டிக்கும் கொசுமூல‌ம் டெங்கு ப‌ர‌வுவதாக‌ சுகாதார‌த்துறையால் அறிவுறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌துது.என‌வே இர‌வில்தான் வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் போல் தெரிகிற‌து.மேலும் கொசும‌ருந்து அனைத்து இட‌ங்க‌ளில் அடித்த‌ல் வேண்டும்.த‌ற்காலிக‌மாக‌ கூடுத‌ல் ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்

துணை இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,

‘கீழக்கரையில் டெங்குவை ஓழிப்பதற்காக ஐந்து குழு அமைத்து ஒவ்வொரு வார்டாக காய்ச்சல் இருப்பதை கண்டறிந்து சுகாதாரத்தை பாதுகாக்கவும் கிணறுகளில் மருந்து ஊற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் டெங்கு காய்ச்சல் குறைந்த பாடில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
விரைவில் இதற்கான முகாம் கீழக்கரையில் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் நவம்பர் மாத இறுதிக்குள் டெங்கு பிளஸ் மலேரியா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.




 

கீழ‌க்க‌ரையில் வாலிப‌ருக்கு க‌த்தி குத்து!


கீழ‌க்க‌ரையில் வாலிப‌ர் ஒருவ‌ர் க‌த்தியால் குத்தப்ப‌ட்டு காய‌ம‌டைந்தார். இது குறித்து போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜாகிர்ஹூசைன் மகன் சதாம்ஹூசைன்(24). இவரது நண்பர் சல்மான். இருவரும் நேற்று ஹஜ்பெருநாள் சிறப்பு தொழுகை தொழுது விட்டு முகமது காசிம் அப்பா தர்ஹா அருகில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்னொரு நண்பர் அப்தாஹிர் அங்கு வந்தார். அங்கு வ‌ந்த‌ அப்தாகிருக்கும், சதாம்ஹூசைனுக்கும், இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அப்தாகிர்,   கத்தியை எடுத்து சதாம்ஹூசைனை குத்தினார். இதில் சதாம்ஹூசைனுக்கு இடது தோள் பட்டையிலும் இடது இடுப்புபகுதியிலும் காயம் ஏற்பட்டது.

பலத்த காயம் அடைந்த சதாம்ஹூசைன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப்பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Saturday, October 27, 2012

கீழ‌க்க‌ரையில் பெருநாள் சிற‌ப்பு தொழுகை! ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

ப‌ட‌ விளக்க‌ம்:இன்று காலை ந‌டுத்தெரு ஜும்மா ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகை



ப‌ட‌ விளக்க‌ம்:பெருநாளையோட்டி ஒருவ‌ருக்கொருவ‌ர் ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்
 
தியாக‌ திருநாளை முன்னிட்டு இன்று கீழ‌க்க‌ரை  ந‌க‌ரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகையில் ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌டுத்தெரு ப‌ள்ளியில் செய்ய‌து அக‌ம‌து நெய்னா ஆலிம்,கிழ‌க்குதெரு ஜ‌மாத் சார்பில் திட‌ல் தொழுகை கைராத்து ஜ‌லாலியா மேல்நிலை ப‌ள்ளியில் ச‌ம்சுதீன் ஆலிம்,குள‌ங்க‌ரை ப‌ள்ளியில் ஆலிம்,சேகு அப்பா ப‌ள்ளியில் க‌த்தீப் ஹூமாயுன் ஆலிம்,ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் சார்பில் ஹைத‌ர் அலி ஆலிம், மின் ஹாஜியார் ப‌ள்ளி ஜ‌மாத் சார்பில் சாகுல் ஹ‌மீது ஆலிம்,மேல‌த்தெரு ஜ‌மாத் சார்பில் புது ப‌ள்ளியில் ம‌ன்சூர் அலி ஆலிம்,ஓட‌க்க‌ரை ப‌ள்ளியில் ஆரிப் ஆலிம்,செய்ய‌த‌ன‌ ப‌ள்ளியில் அப்துல் ச‌லாம் ஆலிம்,தெற்குதெரு ஜமாத் சார்பில் புதுதெரு மைதான‌த்தில் அக‌ம‌து அமானி ஆலிம்,வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் சார்பில் சாகுல் ஹ‌மீது ஆலிம்,செய்யது அக‌ம‌து ஆலிம்  உள்ளிட்டோர் தொழுகை ந‌ட‌த்தின‌ர்.இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் 500 பிளாட் திடலிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கிழக்கு தெரு பால்பண்ணை அருகே ஈத்கா திடலிலும் பெருநாள் தொழுகை நடந்தது



 

Friday, October 26, 2012

உடைந்து விழும் நிலையில் மின்க‌ம்ப‌ம்!விப‌த்துக்கு முன் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை !

கீழக்கரையில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்ப த்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் உள்ள ஒருசில மின்கம்பங்கள் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இவைகளை உடனே மாற்றி தரவேண்டும் என்று பல முறை மின்வாரியத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில் லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கீழக்கரை ஜின்னா தெருவில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன.  இங்கு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு மின்கம்பம் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்தில் மனு கொடுத்ததும், ஊழியர்கள் வந்து மின்கம் பம் கிழே விழாமல் இருப்பதற்காக கம்பிகளால் கட்டிவைத்தனர். அந்த கம்பியும் தற்போது துரு பிடித்துவிட்டதால் மின்கம்பம் உடை ந்து விழும் நிலையில் உள் ளது. உடைந்து விழுந்து பல சேதங்கள் ஏற்படுத்தும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த கலீல் மற்றும் குமார் கூறுகையில், ‘ஒருவரு டத்திற்கும் மேலாக எங் கள் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்’ என்றனர்.

கீழ‌க்க‌ரை முக்கிய‌ வீதியில் ஆபத்தான‌ நிலையில் பட்டமரம்







கீழக்கரையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள பட்டமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையின் மத்தியில் பஸ் ஸ்டாண்டுக்கு திரும்பும் முக்கியமான இடத்தில் வி.ஏ.ஓ. அலுவலகம் உள்ளது. இதன் அருகில் பஸ் ஸ்டாப்பும் உள்ளதால் மக்கள் எந்த நேரத்திலும் கூடும் இடமாக உள்ளது.
வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே உள்ள மரம் ஒன்றின் மரக்கிளை ஒன்று ஒடிந்து மின்கம்பியை தொட்டவாறு உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக இதே நிலையில் இருப்பதால் மின்கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளது. மின்கம்பி அறுந்து விழுந்தால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதேபோல் சின்னகடைத்தெரு, வியாபார கடைகள் அதிகம் உள்ள முஸ்லீம் பஜார் ஆகிய இரண்டு பகுதியிலும் பட்ட மரங்கள் உள்ளன. இவை எப்போது ஒடிந்து விழும் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் இதுகுறித்து படத்துடன் செய்தி வந்தது. உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டதுடன் சரி. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்ட மரம் ஒடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 13வது வார்டு கவுன்சிலர் ரபியுதீன் மற்றும் சின்னகடைத்தெரு அப்துல்காதர் ஆகியோர் கூறுகையில், ‘சின்னகடைத்தெருவில் உள்ள பழம்பெரும் மரமும், முஸ்லீம் பஜாரில் உள்ள பழம்பெரும் மரமும் தற்போது பட்டுப்போய் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. நகராட்சிக்கும், வருவாய்துறைக்கும், கலெக்டருக்கும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வி.ஏ.ஓ. அலுவலகம் அருகிலேயே மரக்கிளை உடைந்து மின்கம்பியின் பிடியில் நிற்கிறது. இவைகள் விழுந்து பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

 

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் பெருநாள்! (ப‌ட‌ங்க‌ள்)!


பெருநாள் தொழுகையையோட்டி குவிந்த‌ ம‌க்க‌ள்பெருநாள் தொழுகையையோட்டி குவிந்த‌ ம‌க்க‌ள் ! ப‌ட‌ங்க‌ள்:ந‌ன்றி ,ஹாஜா,சீனி முக‌ம்ம‌து,சுல்தான்


 
ப‌ட‌ விள‌க்க‌ம்:துபாய் தேரா ஈத்கா திட‌லில் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்

தியாக‌ திருநாளை(ஈதுல் அழ்ஹா)யோட்டி இன்று அமீர‌க‌த்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் பெருநாள் தொழுகை ந‌டைபெற்ற‌து.


அமீரகத்தில் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.

அதிகாலை  முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி குவிய‌ தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.50 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு நாடுகளை சார்ந்த இஸ்லாமிய‌ மக்கள் தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

Thursday, October 25, 2012

வாக‌ன விப‌த்தில் அதிமுக‌வின் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன் உயிர‌ழ‌ந்தார்!




கீழ‌க்க‌ரையில் மற்றும் குள‌ப‌த‌த்தில் ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சிக‌ளில்  அதிமுக‌ ந‌க‌ர் செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன்

 அதிமுக‌வின் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செய‌லாளர் ராஜேந்திர‌ன் சில‌ நாட்க‌ளுக்கு முன் இவ‌ர் ப‌ணி நிமித்த‌மாக‌ வாக‌ன‌த்தில் ம‌துரை சென்றிருந்த‌ போது இவ‌ர‌து வாக‌ன‌ம் ம‌கேந்திரா வேனுட‌ன் விப‌த்தில் சிக்கிய‌து.

இதில் ப‌டுகாய‌ம‌டைந்த‌ ராஜேந்திர‌ன் ஆஸ்ப‌த்திரியில் அனும‌திக்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்று வ‌ந்த‌ அவ‌ர் சிகிச்சை ப‌ல‌னின்றி உயிர‌ழ‌ந்தார்.

கீழ‌க்க‌ரை ச‌தக் இன்ஜினிய‌ரிங் க‌ல்லூரிக்கு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம்! மாநில‌ போட்டிக்கு த‌குதி !

ராமநாதபுரம் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவில் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் கீழக் கரை முகமது சதக் பொறி யியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்.

இதன்மூலம் முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவிகள் மாநில அளவிலான பூப்பந்தாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தங்க பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை கல்லூரி சேர்மன் ஹமீது அப்துல்காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப்முகமது சதக்கத்துல்லா மற்றும் கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர், நிர்வாக அலுவலர் பீர்ஒலி, உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கோவிந்தம் மாள் ஆகியோர் பாராட்டினர்.

 

Wednesday, October 24, 2012

மாட்டு நிலைய‌மாகிய‌ கீழ‌க்க‌ரை பேருந்து நிலைய‌ம்!விப‌த்து ஏற்ப‌டும் அபாய‌ம்!






























கீழ‌க்க‌ரையில் சாலை ம‌ற்றும் பேருந்து நிலைய‌த்தில் கேட்பார‌ற்று மாடுக‌ள் சுற்றி திரிவ‌தால் விப‌த்து அபாய‌ம் ஏற்ப‌டும் என‌வே ந‌கராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌  கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து சுலைமான் என்ப‌வ‌ர் கூறுகையில்,
சுமார் 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கீழ‌க்க‌ரை ப‌ஞ்சாய‌த்தாக‌ இருந்த‌ போது இதுபோன்று அதிக‌ள‌வில் மாடுக‌ள் சுற்றி திரிந்த‌தால் மாடுக‌ளை அடைத்து உரிமையாள‌ருக்கு அபாராத‌ம் விதித்தார்க‌ள்.இத‌ன் மூல‌ம் ஓர‌ள‌வு இப்பிர‌ச்ச‌னை க‌ட்டுக்குள் வ‌ந்த‌து அதுபோல் இப்போதுள்ள‌ நகராட்சி நிர்வாக‌ம் முத‌லில் உரிமையாள‌ர்க‌ளுக்கு எச்ச‌ரிக்கை விடுக்க‌ வேண்டும் அத‌னை மீறி மீண்டும் மாடுக‌ளை ரோட்டிலே விடுவார்க‌ளேய‌னால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை‌ வேண்டும்.

மாட்டை பால் க‌ற‌க்கும் நேர‌த்தில் ம‌ட்டும் வீட்டில் வைத்து கொண்டு ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் தீவ‌ன‌த்துக்காக‌ வெளியே அனுப்பி விடுவ‌து த‌வ‌றான‌ செய‌ல்.மேலும் வெளியே சுற்றும் மாடுக‌ள் சாலையின்குறுக்கே வ‌ருவ‌தால் வாக‌னங்க‌ள் குறிப்பாக‌ டூ வீல‌ர்க‌ளில் வ‌ருவோர் விப‌த்தில் சிக்குகிறார்க‌ள், மாடுக‌ளும் பாதிப்புக்குள்ளாகிற‌து.மேலும் ஏற்கென‌வே ஊருக்குள் வ‌ராம‌ல் செல்லும் ப‌ஸ் டிரைவ‌ர்க‌ளுக்கு, பேருந்து நிலைய‌த்தில் முகாமிட்டுருக்கும் மாடுக‌ளால்  எங்க‌ளால் ப‌ஸ்சை பேருந்து நிலைய‌த்துக்குள் எடுத்து வ‌ர‌முடிய‌வில்லை என்ற‌ கார‌ண‌ம் சொல்ல‌ ஏதுவாகி விடும் என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

 

Monday, October 22, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அதிகாரிக‌ளை முற்றுகையிட்ட‌ வ‌ட‌க்குதெரு 20வ‌து வார்டு ம‌க்க‌ள்! க‌ழிவு நீர் கால்வாய் சீராக‌ அமைக்க‌வில்லை என குற்ற‌ச்சாட்டு!





























கீழ‌க்க‌ரை 20வ‌து வார்டு ப‌குதியில் க‌ழிவுநீர் கால்வாய் இணைப்புக்காக‌ ஏற்கென‌வே அமைக்க‌ப்ப‌ட்ட‌ கால்வாயை உடைத்து புதிய‌ க‌ழிவு நீர் கால்வாய் அமைத்த‌ன‌ர் ஆனால் சீராக‌‌ அமைக்க‌தாதால் க‌ழிவு நீர் வெளியேறாம‌ல் தேங்கி நிறைந்து வ‌ழிந்தோடி இப்ப‌குதி முழுவ‌தும் அசுத்த‌மாகிற‌து என கழிவுநீர் கால்வாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்க‌ள் உள்ளிட்ட‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் 50க்கும் மேற்ப‌ட்டோர் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளை முற்றுகையிட்ட‌ன‌ர்.இதனால் அங்கு சிறிது நேர‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.

முற்றுகையிட்ட‌ ம‌க்க‌ள் "ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் நேரில் வ‌ந்து இப்பிர‌ச்சினைக்கு தீர்வு சொல்ல‌ வேண்டும்" என்ற‌ன‌ர் ந‌கராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா வெளியூர் சென்றிருந்த‌தால் க‌மிச‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் "நேரில் வ‌ந்து ஆய்வு செய்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் " என்று உறுதிய‌ளித்து பொதும‌க்க‌ளை ச‌மாதானம் செய்த‌தால‌ பொதும‌க்க‌ள் க‌லைந்து சென்ற‌ன‌ர்.

இது குறித்து க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் ம‌ற்று பொறியாள‌ர் அறிவ‌ழ‌க‌ன் கூறிய‌தாவ‌து,
ம‌க்க‌ளின் வேண்டுகோளை ஏற்று சீராக‌ அமைக்க‌ப்ப‌ட‌வில்லை என்று சொல்ல‌ப்ப‌டும் புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவு நீர் கால்வாயை இடித்து விட்டு புதிய‌தாக‌ அமைக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும் என்றார்.




 

புதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கை முகாம்!வெளிநாட்டில் ப‌ணிபுரிவ‌ர்க‌ளை சேர்ப்ப‌து எப்ப‌டி !அதிகாரி விள‌க்க‌ம்!

கீழக்கரையில் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ‘கீழக்கரை உள்வட்டாரத்தில் 26 சென்டர் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. என்றார்

வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் விடுப‌ட்டுள்ள‌ வெளிநாட்டில் ப‌ணி ப‌ரிபுவ‌ர்க‌ளை எப்ப‌டி வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் சேர்ப்ப‌து என்று ம‌க்க‌ள் சேவை இய‌க்க‌த்தின் முஜீப் அதிகாரிக‌ளிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது,

மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ப‌தில‌ளித்த‌ போது,

 வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.

 

மழைநீர் கடைக்குள் புகுந்து பொருட்க‌ள் நாசம் !கீழக்கரையில் வாறுகால் சரியில்லை என‌ புகார்!





கீழக்கரை நகராட்சிக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்ட நிதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டத்தில் மழைநீர் வடிகால் எங்கெங்கு கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் டெண்டர் விடப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தில் குறிப்பிடாத இடங்களில் கழிவுநீர் வடிகால் கட்டி வருவ‌தாக‌ காங்கிர‌ஸ் ந‌க‌ர் த‌லைவ‌ர் ஹ‌மீதுகான் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.
மேலும் வடிகாலுக்கும் ஏற்கனவே உள்ள வாய்க்காலுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. இதனால் மழைநீர், கழிவுநீர் வழிந்தோட வழியில்லை. தற்போது பெய்த மழைநீர் ஓட வழியில்லாமல் தேங்கி நின்று கடைகளுக்குள் புகுந்துள்ளது. மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து கடைக்குள் புகுந்துள்ளதால் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள‌தாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைகார‌ர்க‌ள் புகார் தெரிவித்துள்ள‌ன‌ர்.
இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ‘
மத்திய அரசு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ஒதுக்கிய நிதியில் மழைநீர் வடிகால் கட்டாமல் சட்டவிரோதமாக வாறுகால் வாய்க்கால் கட்டியுள்ளனர்.   எனினும் ஏற்கனவே உள்ள வாய்க்காலுடன் தொடர்பு இல்லாத அளவிற்கு ஏற்றம் இறக்கமாக கட்டியுள்ளனர்.
தற்போது பெய்துவரும் மழையால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடைக்குள் புகுந்தது. இதனால் மெத்தை தலையனை பீரோ போன்ற பொருட்கள் நனைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தமில்லாத இடங்களில் திட்டமிடாத முறையில் வெறும் அளவுக்காகவும் சொந்த லாபத்திற்காகவும் தீர்மானத்தில் இல்லாத இடங்களான வள்ளல் சீதக்காதிசாலை, வடக்கு தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா பின்புறம், புது கிழக்குத்தெரு போன்ற இடங்களில் கழிவுநீர் போக முடியாத அளவுக்கு பள்ளமான பகுதியில் வாறுகால்கட்டி அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Sunday, October 21, 2012

கீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத் சார்பில் குர்பானிக்காக‌ ஒட்ட‌க‌ங்க‌ள் வ‌ர‌வ‌ழைப்பு!


இஸ்லாமியர்க‌ளின் ஈகை திருநாளாம்  பெருநாளையோட்டி  குர்பானி கொடுப்பதற்காக  ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆடுக‌ள் கீழ‌க்க‌ரை ப‌குதியில் குவிக்க‌ப்ப‌ட்டுள்ளன‌.ஏராள‌மான‌ ஆடுக‌ள் குவிக்க‌ப்ப‌ட்டிருந்தும் முன் எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு ஆடுக‌ளுக்கு க‌டும் கிராக்கி ஏற்ப‌ட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழ‌க்க‌ரை கிளைக‌ளான‌ கிழ‌க்குத்தெரு,தெற்குதெரு,500 பிளாட் ஆகிய‌வ‌ற்றின் சார்பாக‌ குர்பானிக்கான‌ 60 ஆடுக‌ள்,20 மாடுக‌ள் ம‌ற்றும் 2 ஒட்ட‌க‌ங்க‌ள் குர்பானி கொடுக்க‌ உள்ள‌ன‌ர்.இத‌ற்காக‌ ஆந்திர‌ மாநில‌ம் ம‌ன‌லூரிலிருந்து இர‌ண்டு ஒட்ட‌க‌ங்க‌ள் கீழ‌க்க‌ரைக்கு வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டு 500 பிளாட்டில் உள்ள‌ ந‌சீர் அவ‌ர்க‌ளின் தோட்ட‌த்தில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து.

இத்த‌க‌வ‌லை த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத் கிழ‌க்குதெரு ப‌குதி செயலாள‌ர் ஹாஜா முகைதீன் கூறினார்.உட‌ன் முன்னாள் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஆரிப்கான் உட‌னிருந்தார்.
ஒட்ட‌க‌ங்க‌ளை காண்ப‌த‌ற்கு அப்ப‌குதியில் ஏராள‌மான‌ சிறுவ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் வ‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

 கீழ‌க்க‌ரை முழுவ‌தும் உள்ள‌ இஸ்லாமிய‌ அமைப்பின‌ர் ம‌ற்றும் இஸ்லாமியா ம‌க்க‌ள‌ தாங்க‌ள் குர்பாணி கொடுப்ப‌த‌ற்கு ஆடுக‌ளை விலைக்கு வாங்கிய‌ வ‌ண்ண‌ம் உள்ளன‌ர்.ஒட்ட‌க‌ம் ம‌ற்றும் ஆடுக‌ள் அறுக்க‌ப்ப‌ட்டு ஏராள‌மானோருக்கு இறைச்சிக‌ள் விநியோகிக்க‌‌ப்ப‌டும்.
 

Saturday, October 20, 2012

ம‌துரை - ‍ துபாய் நேர‌டி விமான‌ம்!வ‌லியுறுத்திய‌ அமீர‌க‌ த‌மிழ் அமைப்பின‌ரிட‌ம் ம‌த்திய‌ விமான‌ போக்குவ‌ர‌த்துறை அமைச்ச‌ர் உறுதி!

ம‌துரை - துபாய் நேர‌டி விமான‌ போக்குவ‌ர‌த்திற்கு ம‌த்திய‌ விமான‌ போக்குவ‌ர‌த்துறை அமைச்ச‌ர் அஜீத்சிங்கிட‌ம் அமீர‌கத்தை சேர்ந்த‌ ப‌ல்வேறு‌ த‌மிழ் அமைப்பின‌ர் கோரிக்கை ம‌னு வைத்த‌ன‌ர்.

ம‌துரையிலிருந்து துபாய்,சார்ஜா,ம‌ஸ்க‌ட் போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ம் இய‌க்க‌ப்ப‌ட வேண்டும் என‌ப‌து வ‌ளைகுடாவில் ப‌ணியாற்றும் தென் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ப‌ல்லாண்டு க‌ன‌வாகும்.த‌ற்போது ம‌துரை விமான‌ நிலைய‌த்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட‌ வெளிநாடுக‌ளுக்கு விமான‌ங்க‌ள் செய‌ல்ப‌ட‌ ஆர‌ம்பித்திருக்கும் நிலையில் க‌ன‌வு நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ள‌து.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் துபாயில் உள்ள‌ த‌மிழ் அமைப்புக‌ள் ம‌ற்றும் ஏர் இந்தியா நிறுவ‌ன‌த்தாருட‌ன் ம‌துரையிலிருந்து துபாய்,சார்ஜா போன்ற‌ விமான‌ம் இய‌க்குவ‌து தொட‌ர்பான‌ க‌ல‌ந்தாலோச‌னை கூட்ட‌த்திற்கு ஈடிஏ நிறுவ‌ன‌ம் சார்பில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ள் பேசிய‌தாவ‌து,

அமீர‌க‌த்தில் 2 ல‌ட்ச‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் வசிக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளில் தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் நீண்ட‌ தூர‌த்தில் உள்ள‌ விமான‌ நிலைய‌ங்க‌ளிலிருந்து த‌ங்க‌ள்து ஊர்க‌ளுக்கு செல்லும் சிர‌ம‌ங்க‌ளை விவ‌ரித்த‌ன‌ர்.மேலும் ம‌துரையிலிருந்து துபாய்,சார்ஜா போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ங்க‌ள் இய‌க்க‌ப்பட்டால் மிக‌வும் லாப‌க‌ர‌மான‌ வான் வ‌ழியாக‌ ஏர் இந்தியாவுக்கு இது அமையும் மேலும் கேர‌ளாவிற்கு அதிக‌ விமான‌ங்க‌ள் இய‌க்குவ‌து போல் த‌மிழ‌க‌த்திற்கும் இய‌க்க‌ வேண்டும்.இங்குள்ள த‌மிழ் ச‌ங்க‌ங்க‌ள் சார்பில் அனைத்துவித‌மான‌ ஒத்துழைப்பும் ஏர் இந்தியாவிற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என‌ தெரிவித்தன‌ர்.

ஏர் இந்தியா அதிகாரிக‌ள் பேசுகையில்,விமான‌ சேவை வ‌ழ‌ங்குவ‌து தொட‌ர்பாக‌ நிர்வாக‌த்திட‌ம் எடுத்துரைத்து வேண்டிய‌ ஏற்பாடுக‌ளை செய்வ‌தாக‌ உறுதிய‌ளித்த‌ன‌ர்.

துபாயில் ஏர் இந்தியா நிறுவ‌ன‌த்தாருட‌ன் அமீர‌க‌ த‌மிழ் அமைப்புக‌ள் ந‌ட‌த்திய‌ க‌ல‌ந்தாலோச‌னை கூட்ட‌ம் இடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தாரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு இருந்த‌து.





கூட்ட‌த்தில்  ஏர் இந்தியா உள்நாட்டு மேலாள‌ர்
மோக‌ன் பாபு, விற‌ப‌னை மேலாள‌ர் ஆஸ்லி ரெவ்லோ,ஷார்ஜா விமான‌ நிலைய‌ மேலாள‌ர் க‌ண்ண‌ன்,ஏர் இந்தியா துபாய் ச‌ர்வ‌தேச‌ மேலாள‌ர் ராதாகிருஸ்ண‌ன் இடிஏ த‌லைமை நிலைய‌ மேலாள‌ர் மீரான்,ஈடிஏ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுதுறை நிர்வாக‌ இய‌க்குந‌ர் அக்ப‌ர்கான்,ஈடிஏ டிரேடி அன்ட் ஷிப்பிங் இய‌க்குந‌ர் நூருல் ஹ‌க்,ஈடிஏ சென்ட்ர‌ல் அக்க‌வுன்ட்ஸ் மேலாள‌ர் ஹ‌மீதுகான்,ஈடிஏ த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான்,,அமீர‌க‌த்தில் உள்ள‌ த‌மிழ‌க‌ அமைப்புக‌ள் சார்பில்  ராஜாக்கான்,ஹ‌மீது ர‌ஹ்மான், ஜெக‌ந்நாத‌ன்,அக‌ம‌து மீரான்,ய‌ஹ்யா முகைதீன்,முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ அமீர‌க‌த்தில் உள்ள‌ ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ள் நேற்று(வெள்ளி) துபாய்க்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ ம‌த்திய‌ விமான‌ போக்குவ‌ர‌த்துத்துறை அமைச்ச‌ர் அஜீத் சிங்கை  நேரில் ச‌ந்தித்து ம‌துரையிலிருந்து  துபாய்,சார்ஜா உள்ளிட்ட வ‌ளைகுடா ப‌குதிக்கு விமான‌ சேவையை தொட‌ங்க வேண்டும் என‌ வ‌லியுறுத்தி கோரிக்கை விடுத்த‌ன‌ர்.
அவ‌ர்க‌ளின் கோரிக்கை ம‌னுவை பெற்று கொண்ட‌ ம‌த்திய‌ அமைச்ச‌ர் அஜீத்சிங் விரைவில் இக்கோரிக்கை ப‌ரிசீலி‌க்க‌ப்ப‌ட்டு விரைவில் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்படும் என‌ உறுதிய‌ளித்தார்.அவ‌ருட‌ன் அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் எல்.கே.லோகேஷ்  உட‌னிருந்தார்

முன்ன‌தாக‌ ம‌த்திய‌ அமைச்ச‌ருக்கு பூங்கொத்து வ‌ழ‌ங்கி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.இந்நிக‌ழ்வில்  இடிஏ அஸ்கான் த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான்,இடிஏ ஸ்டார் ப்ராபர்டீஸ் நிதித்துறை பொதுமேலாள‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன் ம‌ற்றும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுத‌ர‌ச‌ன் சார்பில் பொருளாள‌ர் ந‌யீம், ஈமான் விழாக்குழு செய‌லாள‌ர் ஹ‌மீது யாசின்,துபாய் த‌மிழ்ச‌ங்க‌த்தின் பொது செய‌லாள‌ர் ஜெக‌ந்தாத‌ன்,வானலை வ‌ள‌ர்த‌மிழ் ம‌ன்ற‌ம் ம‌ற்றும் பன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌ க‌ழ‌க‌ இணை செய‌லாள‌ர் கீழைராசா, காயிதே மில்ல‌த் பேர‌வை பொருளாள‌ர் ஹ‌மீது ர‌ஹ்மான்,அமீர‌க‌ த‌மிழ‌ர் ம‌ன்ற‌த்தின‌ர் உள்ளிட்ட‌ பல‌ர் க‌ல‌ந்து கொண்டன‌ர்.
 ப‌ல்‌வேறு ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளின் முய‌ற்சியால் ம‌துரையிலிருந்து நேர‌டியா துபாய்,சார்ஜா உள்ளிட்ட‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விரைவில் ஏர் இந்தியா விமான‌ சேவையை துவ‌க்குவ‌த‌ற்கான‌ அறிகுறிக‌ள் தென்ப‌ட‌ ஆர‌ம்பித்துள்ள‌து ம‌கிழ்ச்சியான‌ செய்தியாகும்

கீழ‌க்க‌ரை அருகே ப‌ள்ளிக்கு எதிரே உள்ள‌ டாஸ்மாக் க‌டையை அக‌ற்ற‌ ஆர்ப்பாட்ட‌ம்!



கீழ‌க‌க்ரை அருகே வ‌ண்ணாங்குண்டு ப‌ள்ளி அருகே டாஸ்மாக் ம‌துக‌டையை அங்கிருந்து அக‌ற்ற‌ கோரி எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.

வ‌ண்ணாங்குண்டு தொட‌க்க‌ப்ப‌ள்ளி எதிரே டாஸ்மாக் ம‌துக்க‌டை உள்ள‌து.இக்கடைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ம‌து அருந்திவிட்டு அப்ப‌குதியில் இடையூறு செய்வ‌தால் ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் அப்ப‌குதி ம‌க்க‌ளுக்கு பெரும் அச்சுறுத்த‌ல் ஏற்ப‌ட்டு தொந்த‌ர‌வாக‌ உள்ள‌து.என‌வே இக்க‌டையை அக‌ற்ற‌ கோரி ஆர்ப்பாட்ட‌ ந‌டைபெற்ற‌து.

வ‌ண்ணாங்குண்டு எஸ் டி பி ஐ ந‌க‌ர் த‌லைவ‌ர் அஸ்க‌ர் அலி த‌லைமை வ‌கித்தார்.மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் நூர் ஜியாவுதீன் முன்னிலை வ‌கித்தார்.மாவ‌ட்ட‌ செய‌லாளர்க‌ள் செய்ய‌து இப்ராகிம்,ச‌ரீப் சேட்,மாவ‌ட்ட‌ துணை த‌லைவ‌ர் பைரோஸ்கான்,பொருளாள‌ர் சோமு,ஒருங்கினைப்பாள‌ர் கார்மேக‌ம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்து பேசின‌ர்.இந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தில் பெண்க‌ள்,ப‌ள்ளி சிறுவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ 200க்கும் மேற்ப‌ட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் செய்ய‌து இப்ராகிம் பேசுகையில்,


 வ‌ழிபாட்டு த‌ல‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ள்ளிக்கு அருகே(100 மீட்ட‌ருக்குள்)ம‌துக்க‌டைக‌ள் இருக்க‌ கூடாது என்று ச‌ட்ட‌ம் உள்ள‌து.ஆனால் அர‌சு அதிகாரிக‌ள் அந்த‌ சட்ட‌த்தை மீறி வ‌ண்ணாங்குண்டுவில் ப‌ள்ளிக்கு எதிரே உள்ள‌ க‌டையை அக‌ற்ற‌ வேண்டும் என‌ ப‌ல‌முறை அர‌சிட‌ம் முறையிட்டும் பய‌னில்லை என‌வேதான் இந்த‌ ஆர்ப்பாட்ட‌ம் இத‌ற்கும் செவிசாய்க்க‌வில்லை என்றால் மாபெரும் போராட்ட‌ம் விரைவில் ந‌டைபெறும் என்றார்.
 

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் க‌ணினி தொட‌ர்பான‌ தேசிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!










ப‌ட‌ விள‌க்க‌ம்:பேராசிரியர் வினோத் குமார் திவாரிக்கு முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்கினார்

முகமது சதக் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவிலான இரண்டுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் மும்பை வெஜிலன்ட் மென்பொருள் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். கணினி பொறியியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மும்பை பேராசிரியர் வினோத் குமார் திவாரி நம்முடைய தகவல்களை கணினியில் எப்படி பாதுகாத்து கொள்வது என்று விளக்கினார்.

கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் பேசுகையில், ‘கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்ற பழமொழியை முன்வைத்து இன்றய இணையதளத்தில் நடைபெறும் ஒழுக்க சீர்கேட்டை தடுப்பது எப்படி, தகவல்களை பாதுகாப்பது எப்படி என்று விளக்கி பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், பேராசிரியர் சேக்யூசுப் நன்றி கூறினார்.