Thursday, February 28, 2013

கீழ‌க்க‌ரை அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு!





கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ மாயாகுள‌ம் பார‌தி ந‌க‌ர் ப‌குதியில் ஆட்டோ ஒட்டி சென்ற‌ போது சாலையில் அபூர்வ‌ ப‌ற‌வை ஒன்று ம‌ய‌ங்கி விழுவ‌‌தை க‌ண்டார்.அப்ப‌றவையை எடுத்து சென்று கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலையத்தில் ஒப்ப‌டைத்தார்.இது குறித்து போலீஸ் நிலைய‌த்திலிருந்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌னுக்கு த‌க‌வ‌ல் கொடுத்த‌தை தொட‌ர்ந்து அவ‌ரின் உத்த‌ர‌வின் பேரில் வேட்டை த‌டுப்பு காவ‌ல‌ர்க‌ள் ம‌கேந்திர‌ன் ம‌ற்றும் வேல்முருக‌ன் ஆகியோர் காவ‌ல்நிலைய‌த்திற்கு வ‌ந்த‌ன‌ர்.

அப்ப‌ற‌வை பாம்பு தின்னி க‌ழுகு என‌ உறுதி செய்து கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு எடுத்து சென்ற‌ன‌ர்.கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் ப‌ரிசோத‌னை செய்த‌தில் க‌ழிச்ச‌ல் நோய் தாக்கியுள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து.ம‌ருத்துவ‌ர்க‌ள் சிகிச்சை அளித்த‌ன‌ர்.
இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறியதாவ‌து,விஷ‌ப்பூச்சிக‌ளையே உண‌வாக‌ சாப்பிடும்  இக்க‌ழுகு இப்ப‌குதியில் அரிதாகும் .இப்ப‌குதியை க‌ட‌ந்து போகும் போது க‌ழிச‌ல் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தால் ம‌ய‌ங்கி கீழே விழுந்துள்ள‌து.மேலும் இது குஞ்சு க‌ழுகு இது ஒரு அடிக்கு மேல் வ‌ள‌ரும்.என்றார்.
 

தேசிய‌‌ அளவிலான‌ நிக‌ழ்ச்சியில் முத‌ல் ப‌ரிசு வென்ற‌ ச‌த‌க் பாலிடெக்னிக் மாண‌வ‌ர்க‌ள்!



நாம‌க்க‌ல் மாத‌ம்மாள் சீலா பொறியிய‌ல் க‌ல்லூரியில் இர‌ண்டு நாள் ந‌டைபெற்ற‌ தேசிய‌ அள‌விலான‌ டெக்ஸ் புரோ 2013 நிக‌ழ்ச்சியில் கீழ‌க்க‌ரை ச‌த‌க் பாலிடெக்னிக் மாண‌வ‌ர் தொழில் நுட்ப‌ம் ப‌யிலும் க‌ள‌ஞ்சிய‌ம்,க‌ணினிதுறை மாண‌வ‌ர்க‌ள் முக‌ம்ம‌து ந‌யீம்,ம‌னோஜ் மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் துறை மாண‌வ‌ர் முக‌ம்ம‌து அசாருதீன் ஆகியோர் ப‌ங்கு பெற்று முத‌ல் ப‌ரிசாக‌ ரூ10 ஆயிர‌ம் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்.
வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் பாராட்டு தெரிவித்த‌ன‌ர்.

Wednesday, February 27, 2013

ந‌க‌ராட்சி கூட்டம் கேபிள் டிவியில் ஒளிப‌ர‌ப்ப‌ ஆலோச‌னை!சேர்ம‌ன் த‌க‌வ‌ல்!


கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில்,

கீழ‌க்கரை ந‌க‌ராட்சி குப்பை கிட‌ங்கில் சேரும் பிளாஸ்டிக் க‌ழிவுக‌ளை தேவைப‌டுப‌வ‌ர்க‌ள் ந‌க‌ராட்சியை அணுகி எவ்வித‌ க‌ட்ட‌ண‌முமின்றி எடுத்து செல்ல‌லாம்.மேலும் கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீதக்காதி சாலையில் ஆக்கிர‌மிப்புக்க‌ள் குறித்து ஆய்வு மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வருகிற‌து.ஆய்வு ப‌ணி முடிந்த‌வுட‌ன் உரிய‌ ந‌டவ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.

ஒவ்வொரு முறையும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்ட‌ம் ந‌டைபெறும் போது ஒரு சில‌ க‌வுன்சில‌ர்க‌ள் த‌ங்க‌ளின் வார்டு ந‌லனுக்கு தேவையான விஷ‌ய‌ங்க‌ளை பேசாம‌ல் கூட்ட‌த்தை அமைதியாக‌ ந‌டைபெற‌க்கூடாது என்ற‌ ஒரே நோக்க‌த்துட‌ன் ந‌ட‌ந்து கொள்கின்ற‌ன‌ர்.

சென்ற‌ கூட்ட‌த்தில் ந‌க‌ராட்சி கூட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் அனைத்தும் வீடியோவில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.இனி ஒவ்வொரு முறையும் கூட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைகள் வீடியோவில் ப‌திவு செய்ய‌ப்ப‌டும்.மேலும் கூட்ட‌த்தின் வீடியோ ப‌திவுக‌ள் கீழ‌க்க‌ரை ந‌கரில் கேபிள் டிவி மூல‌ம் ஒளிப‌ரப்ப‌ ஆலோச‌னை மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இத‌ன் மூல‌ம் பொதும‌க்க‌ள் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள‌ முடியும் என்றார்.

சாலையில் க‌ட்டிட‌ க‌ழிவு,குப்பையால் ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ள் அவ‌தி!ந‌ட‌வடிக்கை எடுக்க‌ப்ப‌டும்!ந‌க‌ராட்சி அறிவிப்பு!


இது கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் க‌ட்டிட‌ ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இவ‌ற்றில் சில‌ ப‌குதிக‌ளில் ஒரு சில‌ர் க‌ட்டிட‌ க‌ழிவுக‌ளை சாலையோர‌ங்க‌ளில் கொட்டி விட்டு அக‌ற்றாம‌ல் விட்டு விடுகின்ற‌ன‌ர்.மேலும் சில‌ர் குப்பைக‌ளையும் சாலையில் வீசி செல்வ‌தால் அப்ப‌குதி குப்பை மேடாக‌ மாறும் சூழ்நிலை ஏற்ப‌டுகிற‌து.இத‌னால் அவ்வ‌ழியே செல்லும் ப‌ள்ளிகுழ‌ந்தைக‌ள் உள்ளிட்ட‌ பொதும‌க்க‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்கு வ‌ழியின்றி மிகுந்த‌ சிர‌ம‌த்துக்கு உள்ளாகிறார்க‌ள்.வாக‌ன‌ங்க‌ள் விப‌த்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்ப‌டும்.என‌வே சம்ப‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாலையில் கொட்டிய‌ க‌ட்டிட‌ க‌ழிவுக‌ளை உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ வேண்டும்.அதுபோன்று குப்பைக‌ள் சாலையில் வீசுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும் இத‌ன் மூல‌ம் அப்ப‌குதி சுகாதார‌ கேடாக‌ மாறாம‌ல் பாதுகாக்க‌ முடியும்.நம் ப‌குதியை சுகாதார‌மாக்க‌ நாம் அனைவ‌ரும் ஒத்துழைக்க‌ வேண்டும் என்றார்


இது குறித்து கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்திட‌ம் கேட்ட‌ போது,





 குப்பைக‌ளை சாலைக‌ளில் வீச‌க்கூடாது.வீடு வீடாக‌ வ‌ரும் ப‌ணியாளர்க‌ளிட‌ம் குப்பையை கொடுக்க‌ வேண்டும் அதே போன்று கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் கொட்ட‌ப்ப‌டும் க‌ட்டிட‌ க‌ழிவுக‌ளை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அகற்ற‌ வேண்டும்.த‌வ‌றும் ப‌ட்ச‌த்தில் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைள் எடுக்க‌ப்ப‌டும் என்றன‌ர்.

Tuesday, February 26, 2013

கீழ‌க்க‌ரையில் அர‌பி எழுத்துக்க‌ள் வ‌டிவ‌மைப்புட‌ன் க‌த்த‌ரிக்காய்!



கீழ‌க்க‌ரை மேல‌த்தெருவை சேர்ந்த‌வ‌ர் ஆரிப் இவ‌ர் க‌டையில் வாங்கிய‌ க‌த்த‌ரிக்காயை வெட்டிய‌ போது அத‌ன் உள் ப‌குதியில்  அர‌பி எழுத்துக்க‌ள் வ‌டிவ‌மைப்பில் இருந்த‌தை க‌ண்டு ஆச்ச‌ரிய‌ம‌டைந்தார்.

இது குறித்து அவ‌ர் கூறிய‌தாவ‌து,,
இதில் உள்ள‌ அர‌பி எழுத்துக்கள் போன்ற‌ அமைப்பை உற்று நோக்கினால் அல்லாஹ் என்ற‌ வாசக‌ம் போன்று உள்ள‌து என்றார்.
ஏராள‌மானோர் க‌த்த‌ரிக்காயை கண்டு சென்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை க‌ருவிக‌ள்!



கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ந‌வீன ப‌ரிசோச‌னை க‌ருவிக‌ள்.பொதும‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ள‌ வேண்டுமென‌ அர‌சு டாக்ட‌ர் ராஜ்மோக‌ன் தெரிவித்தார்.

கீழ‌க்க‌ரை த‌லைமை அர‌சு ம‌ருத்துவ‌ர் டாக்ட‌ர் ராஜ்மோக‌ன் கூறிய‌தாவ‌து,
கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை த‌னியார் ம‌ருத்துவ‌மனைக்கு இணையாக‌ ந‌வீன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் ப‌ர‌ம‌க்குடி,ராமநாத‌புர‌ம் ஆகிய‌ அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அர‌சு  காப்பீட்டு திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் த‌ற்போது கீழ‌க்க‌ரையிலும்  செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌ற்கான‌ பொறுப்பாள‌ராக‌ அர‌சு ம‌ருத்துவ‌ர் டாக்ட‌ர் ஜ‌வாஹிர் ஹுசைன் உள்ளார்.

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் தொற்றில்லாத நோய் தடுப்பு  Non-communicable diseases (என்சிடி) என்ற‌ புதிய‌ திட்டம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ ப‌ட்டுள்ள‌து இத‌ன் மூல‌ம் 30 வ‌ய‌திற்குக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஆண்க‌ள் பெண்க‌ள் ஆகிய‌ இருபால‌ருக்கும் இருதய நோய்,ர‌த்த‌ அழுத்த‌ம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்காணித்து, நோய் கட்டுப்பாடு பணிகளை மேம்படுத்த, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு திட்டம் தயாரித்துள்ளது.
கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌மனையில் "தொற்றில்லாத நோய் தடுப்பு திட்டம்' முழு அளவில் செயல்பட உள்ளது. இத‌ன் மூல‌ம் நோய் வ‌ருவ‌த‌ற்கு முன்பாக‌வே ப‌ரிசோத‌னைகளை இலவச‌மாக‌ செய்து கொள்ளாலாம்.

இத‌ற்கான‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்கான‌ ந‌வீன‌ க‌ருவிக‌ள் கீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் பெண்க‌ளுக்கு க‌ர்ப்பபை ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌ரிசோத‌னைக‌ளுக்கான‌ ந‌வீன‌ க‌ருவியும் இங்கு உள்ள‌து.
மேலும் சுமார் 12 ல‌ட்ச‌ம் செல‌வில் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையின் சுற்றுப்புற‌ சுவ‌ர்,ம‌ருந்த‌க‌த்தில் ஏசி,நுழைவு வாயில் தூன்,ந‌டைபாதை  உள்ளிட்ட‌ ‌ க‌ட்ட‌மைப்பு வ‌ச‌திக‌ளை க‌ட்டிட‌ ப‌ராம‌ரிப்பு நிதியிலிருந்து அர‌சாங்க‌ம் செய‌ல்ப‌டுத்தி மேம்ப‌டுத்த‌ உள்ளது.

த‌னியார் ம‌ருத்துவ‌மனைக‌ளில் உள்ள‌ அனைத்து  வ‌ச‌திக‌ளும் இங்கு உள்ள‌து என‌வே பொது ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ள‌ வேண்டும். என்றார்

Monday, February 25, 2013

கீழ‌க்க‌ரையில் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரின் பிற‌ந்த‌நாள் நிக‌ழ்ச்சி!


கீழ‌க்க‌ரை அதிமுக‌ சிறுபாண்மைபிரிவு சார்பாக‌ முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா பிற‌ந்த‌நாள் கொண்டாட்ட‌ம் சிறு பாண்மை பிரிவு கிழ‌க்க‌ரை செய‌லாள‌ர் ஏ.எம்.யாசின் த‌லைமையில் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் க‌ட்சி கொடியை ஏற்றி வைத்து பேண்ட் வாத்திய‌ம் முழ‌ங்க‌ தெருக்க‌ளில் ஊர்வல‌மாக‌ சென்று முக்கிய‌ இட‌ங்க‌ளில் இனிப்பு வ‌ழ‌ங்கின‌ர்.

அவை த‌லைவ‌ர் அப்துல்லா முன்னிலை வ‌கித்தார்.இளைஞ‌ர் அணி செய‌லாள‌ர் இம்பாலா சுல்தான்,சுந்த‌ர‌ம்,ம‌லைராஜ்,முகைதீன் பாபு மாவ‌ட்ட‌ பிர‌திநிதி ஜ‌குப‌ர் ஹுசைன்,ஜ‌வ‌ஹ‌ர்லால் நேரு,லியாக‌த் அலிகான்,பேச்சிமுத்து,மீன‌வ‌ர் அணி இணை செய‌லாள‌ர் ஜ‌குப‌ர் சாதிக்,எம்ஜிஆர் ம‌ன்ற‌ ந‌க‌ர் செய‌லால‌ர் நாக‌ரெத்தின‌ம்,இணை செய‌லாள‌ர் பாண்டிதேவ‌ர்,பாவா செய்ய‌து க‌ருணை,ராதாகிருஸ்ண‌ன்,பாரூக்,க‌வுன்சில‌ர் ர‌பியுதீன் உள்ளிட்ட‌ ஏராள‌மான‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
ஏராள‌மானோருக்கு ந‌ல‌திட்ட‌ உத‌விகளும் 200க்கும் அதிக‌மானோருக்கு அன்ன‌ தான‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.


 

கீழக்கரை நகராட்சியில் தொடுதிரை கணினி அமைக்க கோரிக்கை!

thanks.image.pangovrnance.

கீழக்கரை நகராட்சியில் சொத்து வரி, தண்ணீர் வரி, நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்ட விபரங்கள் அறிவதற்கு மக்கள் நகராட்சியில் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த விபரங்களை விரைவாக அறிந்து கொள்வதற்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடுதிரை கணினியை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அமைப்பதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே நகராட்சி சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் பொதுமக்கள் சிரமமும், அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும். எனவே தொடுதிரை கணினி அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

 ‘ஏற்கனவே காரைக்குடி, சிவகங்கை போன்ற நகராட்சி அலுவலகங்களில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மக்கள் பலன் அடைந்த வருகின்றனர். நகராட்சி கணினியில் உள்ள தகவல்களை அப்படியே தொடுதிரை கணினிக்கு மாற்றம் செய்வது தற்போதய கணினி உலகத்தில் மிகவும் எளிதாகும். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அலுவலக வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும்’ என்றார்.
 

கீழக்கரை வேலை வாய்ப்பு முகாமில் 103 பேர் தேர்வு!




கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார். இதில் செங்கல்பட்டு சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சுப்ரமணியன் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஜான்பால் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடு, உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேசி நேர்முகத் தேர்வை நடத்தினர்.
இதில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 2011&2012ல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 103 பேர் தேர்வு செய்யப்பட்டனர், ஏற்பாடுகளை முதல்வர் அலாவுதீன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பளர்



 

கீழ‌க்க‌ரையில் 65 க‌ல்லூரிக‌ள் ப‌ங்கேற்ற‌ தேசிய க‌ருத்த‌ர‌ங்க‌ம்!



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைசார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, காலிகட் தேசிய தொழில்நுட்ப கழகம் முன்னாள் டீன் வெங்கடரமணி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சேக்அரபாத் தொகுத்து வழங்கினார்.
துறைத்தலைவர் பீர்ஒலி வரவேற்றார். இதில் காலிகட் தேசிய தொழில்நுட்ப கழகம் முன்னாள் டீன் வெங்கடரமணி பேசியதாவது:
பல்வேறு துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் துறை சிறந்து விளங்க பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவின் மாபெரும் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என பேசினார்.
கருத்தரங்கில் 65 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 7 பல்கலைக்கழக முதுநிலை மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். இதை எலலுசியம் பிராஜக்ட் மேலாளர் கார்த்தியாயினி மற்றும் ஸ்ரீவித்யா கட்டுரைகளை ஆய்வு செய்து தேர்வு செய்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. துறைத்துணைத்தலைவர் சியாமளா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தனர்

சமூக‌ இணைய‌த‌ள‌ம் மூல‌ம் தொந்த‌ர‌வு!பெண்க‌ள் புகார் செய்ய‌லாம்!தாசிம்பீவி க‌ல்லூரி நிக‌ழ்ச்சியில் காவ‌ல்துறை அதிகாரி அறிவுரை



கீழ‌க்க‌ரை தாசிம் பீவி க‌ல்லூரியில் இணைய‌ பாதுகாப்பு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியில் மாண‌வி பாத்திமா ஜீமானா கிராத் ஒதினார். தாசிம் பீவி க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா த‌லைமை வ‌கித்தார்.பேராசிரியை கெள‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

 ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி உமையாள் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.மேலும் ச‌மூக‌ இணைய‌த‌ள‌ குற்ற‌ம் ம‌ற்றும் தொந்த‌ர‌வுக‌ளுக்கு கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ள் umayalsn2009@gmail.com  என்ற‌ ஈமெயில் முக‌வ‌ரியிலும் 94432 01233 என்ற‌ எண்ணிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம் புகார் அளிப்ப‌வ‌ரின் விப‌ர‌ங்க‌ள் வெளியிட‌ப்ப‌ட‌மாட்டாது என்றார்.

தொட‌ர்ந்து ம‌துரை ம‌ண்ட‌ல‌த்தின் வேலைவாய்ப்பு மற்றும் ப‌யிற்சி உத‌வி இய‌க்குந‌ர் பீர் முக‌ம்ம‌து,பேராசிரிய‌ர் செல்வ‌குமார்,கிரிசில் நிறுவ‌ன‌த்தின் த‌க‌வ‌ல் பாதுகாப்பு துறையின் இணை இய‌க்குநார் அமீத் பிரகாஷ்,பேராசிரிய‌ர் சதீஷ் குமார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு  இணைய பாதுகாப்பு குறித்து இணைய‌ உல‌கில் ஏற்ப‌ட்டுள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்தும் அவ‌ற்றை எதிர்கொள்வ‌து குறித்தும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை எடுத்துரைத்த‌ன‌ர்.உத‌வி பேராசிரியை ஹ‌தீஜ‌த் ஷுல்பா ந‌ன்றி கூறினார்

இர‌ண்டு ப‌குதியாக‌ தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் மாண‌வி முபீனா கிராஅத் ஓதினார்.உத‌வி பேராசிரியை தில்லேஸ்வ‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.துணை முத‌ல்வ‌ர் நாதிரா க‌மால் அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.தொட‌ர்ச்சியாக‌ ப‌ரிசு அளிப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.உத‌வி பேராசிரியை அப்ரின் சாரா ந‌ன்றி கூறினார்.

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் 32ம் ஆண்டு விழா!

ப‌ழைய ப‌ட‌ம்

க‌ட‌ந்த‌‌ வார‌ம் கீழக்கரை கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 32ம் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது, தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது மீரா வரவேற்றார்.

கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் நெஹ்ரு சிகாபு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தேசியக் கொடியை கல்விக்குழு உறுப்பினர் செய்யது சகுபரும்,
ஒலிம்பிக் கொடியை துணை பொருளாளர் முகம்மது அஜ்ஹரும், பள்ளிக்கொடியை பொருளாளர் அப்துல் மத்தீனும், ஒலிபிக் தீபத்தை கல்விக்குழு உறுப்பினர் ஹூசைன் அப்துல் காதரும் ஏற்றினர். விளையாட்டு போட்டிகளை கல்விக் குழு உறுப்பினர் சமீம் அகமது தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். ஜமாஅத் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி முன்னிலை வகித்தனர்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேராசிரியர் சாதிக் வரவேற்றார்.
அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை நிஜாமுதீன் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்

கீழ‌க்க‌ரையில் மின்னணு சாதன கழிவுகள் குறித்த‌ தேசிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், தேசிய அளவிலான இன்றைய நடைமுறையில் உள்ள மின்னணு சாதனங்களின் கழிவுகளை பயன்படுத்தும் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன ரசாயனத்துறை பேராசிரியர் சிதம்பரம் முன்னிலை வகித்தனர். கல்லு�ரி பொறியியல் ரசாயனத்துறை பேராசிரியர் ஆஷாதேவி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் பேசுகையில், சீனாவில் கழிவான மின்னணு சாதனங்களை மீண்டும் பயன்படுத்த ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், மின்னணு கழிவுகளை முறையாக பயன்படுத்தா விட்டால் அது நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் பெருமளவிற்கு பாதிக்கும், என்றும் கூறினார்.
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகட்டட கலைத்துறை தலைவர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் இப்ராகிம் பங்கேற்று,
 எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்னணு சாதனங்களின் கழிவுகளை சேகரித்து அவற்றை சுழற்சி முறையில் மீண்டும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாது காப்பு மாசுபடாமல் பயன்படுத்த கூடிய கருத்துகளையும் எடுத்து கூறினார்.மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரையை துறைத்தலைவர்கள் அழகிய மீனாள், தாவிது ராஜா தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாக்யராஜ், ரோஹன், கார்த்தி, சண்முகபிரியா மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தனர்.

 

Saturday, February 23, 2013

கீழ‌க்க‌ரையில் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ ந‌கைக‌ள் நூத‌ன‌ மோச‌டி!

 ராமநாதபுரத்தைச் சேர்ந்த குலாம் மற்றும் அவரது மனைவி சீனியம்மாள் இருவரும் இணைந்து கீழக்கரை 500  பிளாட் பகுதியை சேர்ந்தோர் உள்ளிட்ட‌ பலரிடமும் குறைந்த வட்டியில் நகை அடகு வாங்குவதாக நூதனமுறையில் மோசடி செய்துள்ளனர். இவர்கள் போலி பில் தயாரித்து அதன் மூலம் 50 பைசா வட்டியில் நகை அ‌டகு வாங்குவதாக கூறி தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, நகையை ஏமாற்றிச் சென்றுள்ளனர்.
நகையை மீட்பதற்காக அடகு வைத்தவர்கள் கடைக்கு சென்ற போது குலாமும், சீனியம்மாளும்  தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக புகார் அளிக்க‌ பாதிக்கப்ப‌ட்ட‌ பெண்க‌ள் கீழக்கரை காவ‌ல்நிலைய‌ம் வ‌ந்த‌ன‌ர்.அவர்களிடம் இருந்து 100 ப‌வுனுக்கு மேல் நகை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களைப் போன்று மேலும் பலர் இவர்களிடம் நகை அடகு வைத்திருக்கலாம் என தெரிகிற‌து மேலும் ப‌ல‌ரிட‌ம் லோன் வாங்கி த‌ருவ‌தாக‌ ப‌ல ல‌ட்ச‌ ரூபாய் வ‌சூல் செய்த‌தும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து .போலீசார் விசார‌ணை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

அதிக‌ அள‌விலான‌ ந‌கைக‌ள் ஏமாற்ற‌ப்ப‌ட்டிருப்ப‌து இப்ப‌குதியில் அதிர்ச்சி அலைக‌ளை உண்டாக்கியுள்ளது.

துபாய் - திருச்சி விமான‌ ப‌ய‌ணிக‌ளிட‌ம் உட‌மைக‌ள் ஒப்ப‌டைப்பு!


துபாயிலிருந்து திருச்சி க்கு கடந்த 14ம் தேதி இரவு 9.45 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பயணிகள் ஏராளமானோர் பயணித்தனர். திருச்சி ஏர்போட்டிற்கு விமானம் வந்தவுடன் கன்வேயர் பெல்ட் பகுதியில் தங்களின் உடமைகளுக்கு பயணிகள் காத்திருந்தனர். இதில் 62 பயணிகளின் உடைமைகள் முழுமையாக கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். வெகு நேரம் காத்திருந்து வெறுப்படைந்த பயணிகள், அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டனர். விமானத்தில் அதிக சுமை இருந்ததால் உடமைகளை எடுத்து வரவில்லை. அடுத்த விமானத்தில் வந்துவிடும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏமாற்றமடைந்த 10க்கும் மேற்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த குத்புதீன் ராஜா, ஹூசைன் அலி உள்ளிட்ட‌ ஏராள‌மான ப‌ய‌ணிக‌ள் சொந்த‌ ஊர் திரும்பி 5 நாட்க‌ளாகியும் கிடைக்க‌தாதால் மிகுந்த‌ ம‌ன‌ வேத‌னை அடைந்த‌ன‌ர்.இது குறித்து  செய்திக‌ள் வெளியான‌து.

அனைத்து ப‌ய‌ணிக‌ளுக்கும் உட‌மைக‌ள் கிடைக்க‌ ஏர் இந்தியா நிர்வாக‌ அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌ன‌ர். உட‌மைக‌ள் கிட‌க்காத‌ ப‌ய‌ணிக‌ளுக்கு உட‌மைக‌ளை திருச்சி விமான‌ நிலைய‌த்தில் பெற்று கொள்ள‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌து.இத‌னைய‌டுத்து கீழ‌க்க‌ரை ம‌ற்றும் ப‌ல‌ ஊர்க‌ளை சேர்ந்த‌ ஏராள‌மான‌ ப‌ய‌ணிக‌ள் திருச்சி சென்று த‌ங்க‌ள‌து உட‌மைக‌ளை பெற்று வந்த‌ன‌ர்.

இது குறித்து  விமானத்தில் பயணித்த கீழக்கரையைச் சேர்ந்த குத்புதீன் ராஜா, ஹூசைன் அலி உள்ளிட்டோர் கூறுகையில்,
 நேற்று முன் தின‌ம் ஏர் இந்தியா நிர்வாக‌த்திட‌மிருந்து அழைப்பு வ‌ந்த‌து அத‌ன‌ப‌டி எங்க‌ள‌து உட‌மைக‌ளை திருச்சி விமான‌ நிலைய‌ம் சென்று பெற்று வ‌ந்தோம் ப‌ய‌ண‌ப்ப‌டியாக‌ ரூ1000 தரப்ப‌ட்ட‌து.உட‌ன‌டியாக‌ செய்தி வெளியிட்டு எங்க‌ள‌து உட‌மைக‌ளை பெற்று த‌ர‌ உத‌வியாக‌ இருந்த‌ செய்தியாள‌ர்க‌ளுக்கும்,ஏர் இந்தியா அதிகாரிக‌ளுக்கும் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற‌ன‌ர்.

Friday, February 22, 2013

நாளை கீழ‌க்க‌ரையில் (பிப் 23)காலை 9 முத‌ல் மாலை 5ம‌ணி) மின் த‌டை!மின் துறை அறிவிப்பு!



கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் ச‌னிக்கிழ‌மை (பிப் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

நாளை(23 பிப்) கீழ‌க்க‌ரையில் வேலை வாய்ப்பு முகாம்!ச‌ம்ப‌ள‌ விப‌ர‌ம்!


கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி வேலை வாய்ப்பு பிரிவில் நாளை (23 பிப்)காலை 9 ம‌ணிய‌ள‌வில் இய‌ந்திர‌விய‌ல் மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் துறையில் 2011 ம‌ற்றும் 2012ல் தேர்ச்சி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு வேலை வாய்ப்பு முகாம் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ உள்ள‌து.

இது குறித்து முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக்  முத‌ல்வ‌ர் அலாவுதீன் கூறிய‌தாவ‌து,
செங்க‌ல்ப‌ட்டு சுந்த‌ர‌ம் மேஸ்டின‌ர்ஸ் லிமிடெட் நிறுவ‌ன‌த்தின‌ர் நேர்முக‌ தேர்வு ந‌ட‌த்த‌ உள்ள‌ன‌ர். நேர்முக‌ தேர்வுக்கு வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள்  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,ம‌ற்றும் க‌ல்வி வ‌ய‌து சான்றித‌ழ் ந‌க‌ல்க‌ள் கொண்டு வ‌ர‌வும் ,தேர்வு பெறும் மாணவ‌ர்க‌ளுக்கு மாத‌ ச‌ம்ப‌ள்ம் ரூ 7 ஆயிர‌த்து 500ம் உண‌வு ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து உள்ளிட்ட‌ வ‌ச‌திக‌ள் செய்து த‌ர‌ப்ப‌டும்.
இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் ம‌ற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கினைப்பாள‌ர் சேக் தாவூது செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌கை க‌டையில் த‌ங்க‌ம் ம‌ற்றும் வெள்ளி திருட்டு!

கீழக்கரை இந்து பஜாரில் கோபால் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். நேற்று காலை கடை திறக்க வந்த போது கதவில் பூட்டுகள் திறந்திருந்தன.

கடையில் இருந்த 24 கிராம் பவுன், 720 கிராம் வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். முதுகுளத்தூர் கூடுதல் எஸ்.பி., விக்ரமன் பார்வையிட்டார்.கோபால் புகார்படி, கீழக்கரை எஸ்.ஐ., செல்லமணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.


 

கீழ‌க்க‌ரை கிழ‌க்குதெரு ஜ‌மாத் நிர்வாகிக‌ள் தேர்வு!


கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெரு ஜ‌மாத் பொதுக்குழுக்கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.நூருல் அமீன் த‌லைமை வ‌கித்தார்.ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் வ‌க்ப் ஆய்வாள‌ர் ஹ‌க்கீம் முன்னிலை வ‌கித்தார்.கூட்ட‌த்தில் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ நிர்வாகிக‌ள் விப‌ர‌ம் வ‌ருமாறு:‍ 

த‌லைவ‌ர் - சேகு அபுப‌க்க‌ர் சாகிப்

உத‌வி த‌லைவர்க‌ள் - அமீர் ஷாஜ‌ஹான் ம‌ற்றும் செய்ய‌து ஹமீது

செய‌லாள‌ர்க‌ள் -  இப்னு ம‌வ்லானா ம‌ற்றும் நெஹ்ரு சிஹாப்

இணை செயலாள‌ர் -  ப‌சீர் அக‌ம‌து

பொருளாள‌ர் - அப்துல் ம‌த்தீன்

உத‌வி பொருளாள‌ர்  முஹ‌ம்ம‌து அஜ்ஹ‌ர்

கைராத்துல் ஜ‌லாலியா ப‌ள்ளி தாளாள‌ர் - சாதிக்

தொட‌க்க‌ ப‌ள்ளி தாளார் -  ஜவ‌ஹ‌ர் சாதிக்

அர‌பி ம‌த‌ர‌ஸா தாளாள‌ர் - அர‌பி அமீர் ஹ‌ம்ஷா

ஆகியோர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.மேலும் 35 பேர் கொண்ட‌ காரிய‌ க‌மிட்டியும்,5 பேர் கொண்ட‌ க‌ல்விக்குழுவும் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
கீழ‌க்க‌ரை கிழ‌க்குதெரு ஜ‌மாத் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு!

கீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரி மாணவ‌ர்க‌ள் மாநில‌ அள‌வில் சாத‌னை!

அண்ணா பல்கலை தேர்வில் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்தனர்.

கட்டட அமைப்பியல் துறையில் மாணவி எஸ்.பெனாசிர், கடல் சார்ந்த பாடப்பிரிவில் மாணவர் ஏ.டேவிட் ஆகியோர் மாநில அளவில் முதலிடத்தையும், ஏரோனாட்டிகல் பிரிவில் மாணவர் ஆர்.ராஜாராமன், மூன்றாம் இடம் பெற்றார்.இவர்களை, கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர், செயலாளர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகாபர் மற்றும் பிற துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

 

Thursday, February 21, 2013

கீழ‌க்க‌ரை மெயின் ரோட்டில் சாலையோர‌ ஆக்கிர‌மிப்பு அக‌ற்ற‌ம்!


கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் "பாம்பே ஆன‌ந்த‌ ப‌வ‌ன்" க‌டை அருகில் உள்ள‌ ஓட்ட‌லில் க‌ழிவு நீர் பைப்பில் அடைப்பு ஏற்ப‌ட்டு க‌ழிவுநீர் சாலையில் ஆறாக‌ ஓடிய‌து.

த‌க‌வ‌ல் அறிந்த‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் சுகாதார‌த்துறை ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி த‌லைமையில் ப‌ணியாள‌ர்க‌ளுட‌ன் அங்கு வ‌ந்து க‌ழிவு நீர் பைப்பில் ஏற்ப‌ட்ட‌ அடைப்புக‌ளை அக‌ற்றி க‌ழிவுநீர் சாலையில் ஓடாமல் சீர் செய்த‌தோடு அங்குள்ள‌ க‌டைக‌ளால் சாலையை ஆக்கிர‌மிப்பு செய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பொருள்க‌ளை அக‌ற்றின‌ர்.

மேலும் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர்க‌ள் அப்ப‌குதியில் உள்ள‌ ஓட்ட‌ல்க‌ளில் சுகாதாராத்தை பேணுமாறும் இல்லையென்றால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ எச்சரித்து சென்ற‌ன‌ர்.



நக‌ராட்சி க‌வுன்சில‌ர்க‌ள் ஹாஜா ந‌ஜிமுதீன்,முகைதீன் இப்ராகிம்,பாவா‌ உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் அங்கு குவிந்த‌ன‌ர்.

Wednesday, February 20, 2013

முதலில் விசில் சத்தம் பிற‌கு குப்பை அக‌ற்றி சுத்த‌ம்!


கீழ‌க்க‌ரை தெருக்க‌ளில் உள்ள‌ வீடுக‌ளில்  சேரும் குப்பைகளை அகற்ற கீழக்கரை தொண்டு நிறுவனம் புதிய உத்தியை கையாண்டு வருகிறது. தொண்டு நிறுவன பணியாளர் விசிலை ஊதியபடி முதலில் தெருவுக்குள் வருவார். விசில் சத்தம் கேட்டதும், வீடுகளில் உள்ள குப்பைகளை பெண்கள் வெளியே கொண்டு வந்து தருகிறார்கள். இதனால், வீதிகளில் குப்பை போடுவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டு டிர‌க் மூல‌ம் அகற்றப்படுகிறது. குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டுவ‌து ப‌ல‌ ஆண்டுகளாக‌ வெல்பேர் தொண்டு நிறுவ‌ன‌ம் மூல‌ம் ந‌டைபெறுகிற‌து.

கீழக்கரை நகராட்சியில் தினமும் சுமார் 15 டன்னுக்கு மேல் குப்பைகள் குவிகின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் ஒருபுறம் நகராட்சியும், மறுபுறம் கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் என்ற தொண்டு நிறுவனமும் களமிறங்கி செயல்படுகின்றன. தங்களது துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை பெற்று வாகனம் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்து செல்கின்றனர். தொண்டு நிறுவனம் சார்பில், இந்தப்பணி நீண்டகாலமாக செய்யப்பட்டு வருகிறது.

இதன் பணியாளர்கள், வீடுகளுக்கு செல்வதற்கு முன்பாக தெருக்களில் விசில் அடித்தபடியே செல்வார்கள். விசில் சத்தத்தை கேட்டதும், வீடுகளில் உள்ள பெண்கள், தங்கள் வீட்டு குப்பை கூடைகளை வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். தொண்டு நிறுவன பணியாளர் வீடுகளின் வாசலில் வைக்கப்பட்ட குப்பைகளை அகற்றிய படியே செல்வார்.
.
கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் மேலாளர் அஜீஸ் கூறுகையில்,

“நகரில் சேரும் குப்பைகளில் மூன்றில் ஒரு பகுதி குப்பைகளை எங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித லாப நோக்கமின்றி அகற்றி வருகிறது. இதற்காக 4 டிராக்டர், 4 ஓட்டுனர்கள் மற்றும் 23 பணியாளர்கள் எங்கள் தொண்டு நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். இதற்காக மாதந்தோறும் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று குப்பைகள் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது

க‌வுன்சில‌ர் ச‌ஸ்பெண்டுக்கு கோர்ட் இடைக்கால‌ த‌டை!க‌வுன்சில‌ர் ந‌ன்றி அறிவிப்பு!




கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள‌ அறிவிப்பில் கூறியிருப்ப‌தாவ‌து

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் க‌டந்த‌ 30/01/13 அன்று நடைபெற்ற‌ ந‌க‌ர்ம‌ன்ற‌ கூட்ட‌த்தில் ந‌க‌ர் வ‌ள‌ர்ச்சி ப‌ணிக‌ளில் ந‌டைபெற்று வ‌ரும் மெகா ஊழ‌ல்க‌ளை எதிர்த்து,கீழை ம‌க்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ நான் ம‌க்க‌ள் பிர‌திநிதி என்ற‌ முறையில் குர‌ல் எழுப்பிய‌த‌ற்காக‌ ம‌ரியாதைக்குறிய‌ சேர்ம‌ன் அவ‌ர்க‌ள் ஒருமையில் நான் பேசிய‌தாக‌ கூறி என்னை இர‌ண்டு கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ முடியாது என‌ ச‌ஸ்பெண்ட் செய்வ‌தாக‌ அறிவித்தார்க‌ள்.

இத‌ற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ ம‌துரை கிளையில் நான் ம‌னு தாக்க‌ல் செய்தேன் இவ்வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிப‌தி அவ‌ர்க‌ள் கீழ‌க்க‌ரை நக‌ராட்சி த‌லைவியின் ச‌ஸ்பெண்ட் அறிவிப்புக்கு இடைக்கால‌ த‌டை விதித்துள்ளார்க‌ள்.
என‌க்கு நீதி கிடைப்ப‌த‌ற்காக‌ துஆ செய்த‌ ந‌க‌ர‌வாசிக‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி அதேபோல் 20வ‌து வார்டு க‌வுன்சில‌ர் என‌து பாச‌மிகு ந‌ண்ப‌ர் ஹாஜா ந‌ஜிமுதீன்,வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளான‌ ஜின்னா,அலாவுதீன் அவ‌ர்க‌ளுக்கும்,ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌க‌த்துக்கும்,உண‌மையை வெளிச்ச‌ம் போட்டு காட்டும் ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளுக்கும்,கீழ‌க்க‌ரைடைம்ஸ் இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்திற்கும்,வெளிநாடு வாழ் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் என் நெஞ்சார்ந்த‌ ந‌ன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,
 

கீழ‌க்க‌ரை நிர்வாக‌ சீர்குலைவுக்கு க‌மிஷ‌ன‌ரே கார‌ண‌ம்!புகார் கூறி ம‌ய‌ங்கி விழுந்தார் துணை சேர்ம‌ன்!




கீழக்கரை நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஹாஜா முஹைதீன், ஆணையாளர் முகமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் அனைத்து வீடியோவில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.கூட்ட‌த்தில் ந‌டைபெற்ற‌ விவாத‌த்தின் ஒரு ப‌குதி...

க‌வுன்சில‌ர் ர‌பியுதீன்:  ‍நிர்வாக‌த்தில் சேர்ம‌னின் க‌ண‌வ‌ர் ரிஸ்வான் த‌லையீடு அதிக‌ள‌வில் உள்ள‌து.மேலும் க‌வுன்சில‌ர்க‌ள் குறித்து த‌வ‌றாக‌ பேசி திரிகிறார்.இது ச‌ரியல்ல‌  ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் குறித்து அதிருப்தி நில‌வி வ‌ருகிற‌து.


சேர்ம‌ன்  : க‌ண‌வ‌ரிட‌ம் ஏன் தொட‌ர் கொள்ள‌ வேண்டும்.என்னிட‌மே தொட‌ர்பு கொள்ள‌லாமே.க‌ண‌வ‌ரிட‌ம் நீங்க‌ளே குறைக‌ளை சொல்லிவிட்டு பின்ன‌ர் த‌லையீடு என்று குற்ற‌ம் சொல்கிறீர்க‌ள்

க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா: உங்க‌ளை தொட‌ர்பு கொண்டால் உங்க‌ள் க‌ணவ‌ர்தான் ப‌தில் சொல்கிறார்.

க‌வுன்சில‌ர் ஜெயப்பிரகாஷ்:– கூட்ட நடவடிக்கையை வீடியோவில் பதிவு செய்ய யார் அனுமதி அளித்தது? கவுன்சிலருக்கு தடை விதிக்க அதிகாரம் உள்ளதா?

சேர்ம‌ன்:– நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்களின் செயல்பாட்டை பதிவு செய் வதற்காக நிர்வாகத்தின் சார்பில் வீடியோ எடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலருக்கு தடை விதிக்க தலை வருக்கு முழு அதிகாரம் உள் ளது.

க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா: -
க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிமை ச‌ஸ்பெண்ட் தீர்மான‌ம் நிறைவேற்றியுள்ள‌தாக் அறிவிப்பு வெளியிட்டிருந்தீர்க‌ள் இது குறித்து சென்ற‌ கூட்ட‌த்தில் விவாதித்தீர்க‌ளா?க‌வுன்சில‌ர்க‌ளிட‌ம் எதுவுமே விவாதிக்காம‌ல் எப்ப‌டி த‌ன்னிச்சையாக ச‌ஸ்பெண்ட் என்று அறிவிக்க‌லாம்?க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் தெருவிள‌க்குக‌ள் போலியான‌து என‌ இது  குறித்து கோர்டில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்துள்ளார் இத‌ற்கு ப‌ழிவாங்கும் விதமாக‌த்தான் இந்த‌ ச‌ஸ்பெண்ட் ந‌ட‌வ‌டிக்கை என‌வே இதை நாம் த‌ட்டிகேட்க‌வில்லையென்றாரல் நாளை இதே நிலைமை அனைத்து க‌வுன்சில‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டும்

 
சேர்ம‌ன்:–                  கடந்த கூட்டத்தில் கண்ணியக்குறைவாக கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் பேசியதால் இது குறித்து எடுத்த நடவடிக்கையின் பேரில் அந்த கவுன்சிலரை 2 கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் முறையாக மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் ப‌லரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட தடையை மினிட் புத்தகத்தில் ஏற்றியதால் தடையை நீக்கியது குறித்து கூட்ட அஜெண்டாவில் சேர்க் கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இதுகுறித்து மேலும் விவாதிக்க தேவையில்லை.இத‌ற்கு கேள்வி எழுப்பும் க‌வுன்சில‌ர்க‌ள் அவ‌ர் கண்ணியக்குறைவாக பேசும் போது ஏன் கேட்க‌வில்லை?
க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா:-    நினைத்தால் ச‌ஸ்பெண்ட் செய்வ‌தும் பிற‌கு ர‌த்து செய்வ‌த‌ற்கும் ந‌க‌ர்ம‌ன்ற‌ம் விளையாட்டு மைதான‌ம் அல்ல‌

சேர்ம‌ன்: நீங்க‌ள் எங்க‌ளை ப‌ற்றி த‌வ‌றாக‌ நோட்டீஸ் அடிப்பீர்க‌ள்,போஸ்ட‌ர் ஒட்டுவீர்க‌ள் நீங்க‌ள் எது செய்தாலும் நான் கேட்க‌ கூடாது அப்ப‌டித்தானே?

க‌வுன்சில‌ர் ஜெய‌பிரகாஷ்:- க‌வுன்சில‌ரை ச‌ஸ்பெண்ட் செய்த‌த‌தாக‌ அறிவித்த‌த‌தும் ர‌த்து செய்வ‌தாக‌ அறிவிப்ப‌தும் ந‌க‌ராட்சிக்கு த‌வ‌றான‌ முன்னுதார‌ண‌ம். க‌மிஷ‌ன‌ர் அவர்க‌ளே   சேர்ம‌னுக்கு க‌வுன்சில‌ரை ச‌ஸ்பெண்ட் செய்வ‌த‌ற்கு அதிகார‌மில்லை என்று உங்க‌ளுக்கு தெரியுமா? தெரியாதா?

க‌மிஷ‌ன‌ர்: மினிட் புத்த‌க‌த்தில் ஏற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து.இதில் என‌க்கு ச‌ம்ப‌ந்த‌மில்லை தலைவ‌ர் த‌ன்னிச்சையாக‌ எடுத்த‌ முடிவு.

க‌வுன்சில‌ர் சாஹுல் ஹ‌மீது:-  டெம்ப‌ர் பிளேச‌ர் ப‌ழுது நீக்கிய‌தாக‌ ரூ50 ஆயிர‌த்திற்கு மேல் போலி பில் பெற‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌ற்கு ப‌ண‌ம் வ‌ழ‌ங்க‌க்கூடாது.அர‌சு ப‌ண‌த்தில் பெற்ற‌ பெட்ரோலை சேர்ம‌ன் த‌ன‌து சொந்த வாக‌ன‌த்துக்கு ப‌ய‌ன் ப‌டுத்தினீர்களே அத‌ற்கான‌ ப‌ண‌த்தை செலுத்தி விட்டீர்க‌ளா? மேலும் பிளாஸ்டிக் க‌ழிவுக‌ள் முறைகேடாக‌ விற்க‌ப‌ட்டுள்ள‌து.முறையாக‌ டெண்ட‌ர் விடாத‌து ஏன்?ந‌க‌ராட்சியில் க‌ள்ள‌த்த‌ன‌ம் செய்ய‌தீர்க‌ள்

சேர்ம‌ன்:த‌ற்போது வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தீர்மான‌ங்க‌ள் ப‌ற்றி ம‌ட்டும் பேசுங்க‌ள் இது குறித்து இங்கே பேசாதீர்க‌ள் என‌து அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்து பேசுங்க‌ள்.

க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா :-  இது என்ன‌ குடும்ப‌ விவ‌கார‌மா? ஏன் இங்கே பேச‌ கூடாது.மேலும் மினி புக்கை வெளியில் எடுத்து செல்ல‌க்கூடாது?

சேர்ம‌ன்: கையை நீட்டி பேசாதீர்க‌ள்.

க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராஹிம் :- சேர்ம‌ன் அவ‌ர்க‌ள் த‌ற்போது‌ ச‌ஸ்பெண்ட் உத்த‌ர‌வு ர‌த்து என்ற‌ அறிவிப்பை தீர்மான‌த்தில் வைத்துள்ளார்.ஆனால் சில‌ நாட்க‌ளுக்கு முன்பாக‌வே சேர்ம‌னின் உத்த‌ர‌வுக்கு எதிராக‌ நான் கோர்ட்டில் ச‌ஸ்பெண்டுக்கு இடைக்கால‌ த‌டை உத்த‌ர‌வு பெற்றுள்ளேன்(அது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆவண‌ங்க‌ளை காட்டினார்)என‌வே இதை த‌ற்போதைய‌ தீர்மான‌த்தில் ப‌திவு செய்ய‌ வேண்டும்.கோர்டின் உத்த‌ர‌வு தொட‌ர்பான‌ ஆவ‌ண‌ங்க‌ளை நேற்றே சேர்ம‌னுக்கு அனுப்பி விட்டேன்.

சேர்ம‌ன்: என‌க்கு கிடைக்க‌வில்லை

க‌வுன்சில‌ர் பாவா:- பொதும‌க்க‌ள் பிற‌ப்பு ம‌ற்றும் இற‌ப்பு சான்றித‌ழ்க‌ளுக்கு அலுவ‌ல‌க‌த்துக்கு மாத‌க்க‌ண‌க்காக‌ அலைந்து திரிகின்ற‌ன‌ர்ஆனால் க‌மிஷ‌ன‌ரோ 10 நிமிட‌ம்தான் அலுவல‌க‌த்துக்கு வ‌ருகிறார்.அலுவ‌ல‌க‌ம் செய‌ல்பாடு ச‌ரியில்லை

க‌மிஷ‌ன‌ர் :  நான் த‌மிழ‌க‌ம் முழுவ‌து சுற்றி வ‌ருப‌வ‌ன் முழு நேர‌மும் அலுவ‌ல‌க‌த்தில் உட்கார்ந்து இருக்க‌ முடியாது.

துணை சேர்ம‌ன் ஹாஜாமைதீன்:– கீழக்கரை நகரசபை நிர்வாகம் நீண்ட காலத்துக்கு பின்னர் அ.தி. மு.க.வின் வசம் வந்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலி தாவின் கருணையால் கீழக்க ரைக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த திட் டங்கள் அனைத்தும் கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நகர் வளர்ச்சியடையும் வகையில் நிறைவேற்ற முடி யும். கீழ‌க்க‌ரை ந‌கராட்சி நிர்வாக‌ சீர்குலைவுக்கு க‌மிஷ‌ன‌ரே கார‌ண‌ம் மேலும் அதிகாரிகள் கவனக் குறைவால் தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றனர். இனி வரும் காலங்களில் கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்படுவதுடன் அதிகாரி கள் கடமையை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.என்றார்

பேசி முடித்த‌ சிறிது நேர‌த்தில் துணை சேர்ம‌ன்  ம‌ய‌ங்கி விழுந்தார் உட‌ன‌டியாக‌ ம‌ருத்துவ‌ர் வ‌ர‌வ‌ழைக்கப்ப‌ட்டு முத‌லுத‌வி அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இத‌னை தொட‌ர்ந்து நிர்வாக‌ செய‌ல்பாடுக‌ளை க‌ண்டிப்ப‌தாக கூறி 10 க‌வுன்சில‌ர்க‌ள் வெளிந‌ட‌ப்பு செய்த‌ன‌ர்.7 க‌வுன்சில‌ர்க‌ளுட‌ன் கூட்ட‌ம் ந‌டைபெற்றது.

கூட்ட‌த்தில் வைக்க‌ப்ப‌ட்ட‌ அனைத்து தீர்மான‌ங்க‌ளும் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌தாக‌ ந‌க‌ராட்சித‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா தெரிவித்தார்.


மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,
திமுக‌ க‌வுன்சில‌ர்க‌ள் வேண்டுமென்றே அதிமுக‌ ந‌க‌ராட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் ஏற்ப‌டுத்த‌ வேண்டுமென்று ப‌ல் வேறு பொய்யான குற்ற‌ச்சாட்டுக்க‌ளை கூறி வ‌ருகின்ற‌ன‌ர் இவ‌ர்க‌ளுக்கு ஊர் ந‌ல‌னில் அக்க‌றையில்லை.இத‌ற்கு சில‌ சுயேச்சைக‌ளும் உட‌ந்தை.சிற‌ப்பான‌ நிர்வாக‌ம் இங்கு ந‌டைபெற்று வ‌ருகிற‌து என்றார்.

இது குறித்து க‌வுன்சில‌ர்க‌ள் இடி மின்ன‌ல் ஹாஜா ,முகைதின் இப்ராகிம் ஆகியோர் கூறுகையில் ,

கூட்ட‌த்தில் எந்த தீர்மான‌மும் நிறைவேற‌வில்லை பெரும்பான்மையான‌ க‌வுன்சில‌ர்க‌ள் ஆத‌ர‌வில்லாம‌ல் எப்ப‌டி தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ முடியும்.த‌லைவ‌ர் த‌வ‌றான‌ த‌க‌வலை அளித்துள்ளார்.க‌மிஷ‌ன‌ரும் இத‌ற்கு உட‌ந்தையாக‌ உள்ளார்.இத‌ற்கு ச‌ட்ட‌பூர்வமான ந‌ட‌வ‌டிக்கையை மேற்கொள்வோம்.என்றன‌ர்.

Tuesday, February 19, 2013

கீழக்கரை உப மின்நிலைய டிரான்ஸ்பார்மரில் தீ !ந‌க‌ர் முழுவ‌தும் மின் த‌டை!

ராமநாதபுரம் , கீழக்கரையில் உப மின்நிலையம் உள்ளது. இது 11 கே.வி.மின் உற்பத்தி திறன் கொண்டது. இதில் உத்தரகோசமங்கை, ஏர்வாடி, கீழ்க்‌கரை ஆகிய பகுதிகளுக்கு மின்சப்ளை செய்கிறது.

இன்று காலை 10.50 மணியளவில்  ச‌த்த‌த்துட‌ன் மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் தீ பிடித்தது. இதனால் உபகரணங்கள் சேதமாகின. இதையடுத்து மின்சப்ளை நிறுத்தப்பட்டது.தொட‌ர்ந்து ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறது.
விப‌த்துக்குள்ளான டிரான்ஸ்பார்மர்‌  சென்ற‌ மாத‌ம் புதிய‌தாக‌ நிறுவ‌ப்ப‌ட்ட‌ டிரான்ஸ்பார்ம‌ர் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.
.


 

துபாய் - திருச்சி விமான‌ ப‌ய‌ண‌த்தில் உடைமைக‌ள் கிடைக்காத‌தால் ப‌ய‌ணிக‌ள் அவ‌தி!




விமான‌ டிக்கெட் ம‌ற்றும் புகார் விப‌ர‌த்துட‌ன் கீழ‌க்க‌ரை ஹுசைன்

துபாயிலிருந்து திருச்சிக்கு பிப்ர‌வ‌ரி 14 இர‌வு 9.45க்கு புற‌ப்ப‌ட்ட‌ ஐ எக்ஸ் 612 என்ற‌ எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம்  திருச்சி விமான‌ நிலைய‌த்தை வ‌ந்த‌டைந்த‌து. விமான‌த்தில் பய‌ண‌ம் செய்த‌ பய‌ணிக‌ள் இமிகிரேச‌ன் உள்ளிட்ட‌வைக‌ளை நிறைவு செய்து த‌ங்க‌ளது உட‌மைக‌ளை எடுத்து செல்வ‌த‌ற்கு க‌ன்வேய‌ர் பெல்ட் அமைந்திருக்கும் ப‌குதியில்  காத்திருந்த‌ போது சுமார் 60 ப‌ய‌ணிக‌ளுக்கு த‌ங்கள‌து உட‌மைக‌ள் முழுமையாக‌ கிடைக்க‌வில்லை.இதனால்  அதிர்ச்சிய‌டைந்த‌ அவ‌ர்க‌ள் உட‌மைக‌ளுக்காக‌ நீண்ட‌ நேர‌ம் காத்திருப்புக்கு பின் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ளிட‌ம் இது குறித்து எழுத்து மூல‌ம் புகார் தெரிவித்த‌ன‌ர்.
 உட‌மைக‌ள் கிடைக்க‌ பெறாத அனைவ‌ரிட‌மும் புகாரை பெற்ற‌ விமான‌ நிலைய‌  அதிகாரிக‌ள் விரைவில் ந‌ட‌வடிக்கை எடுப்ப‌ உறுதிய‌ளித்த‌ன‌ர்.பின்ன‌ர் பய‌ணிக‌ள் த‌ம‌து ஊர்க‌ளுக்கு திரும்பின‌ர் ஆனால் இது வ‌ரை உட‌மைக‌ள் கிடைக்க‌வில்லை என‌ புகார் தெரிவித்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ அதே விமான‌த்தில் ப‌ய‌ண‌ம் செய்த‌ ‌ குத்புதீன் ராஜா கூறிய‌தாவ‌து,

நீண்ட‌ நேர‌ம் காத்திருந்து நான் ஊர் திரும்பி விட்டேன் இன்று வ‌ரை உட‌மைக‌ள் கிடைக்க‌வில்லை இத‌னால் பெருத்த‌ ஏமாற்ற‌மாக‌ உள்ள‌து.இது குறித்து விமான‌ நிலைய‌த்தை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌த‌ற்கு ' க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ 240 பொருள்க‌ள் வ‌ர‌வில்லை இத‌னால் 135 ப‌ய‌ணிக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். 186 ப‌ய‌ணிக‌ளுக்கான‌ இருக்கைக‌ள் உடைய‌ விமான‌த்தில் அதிக‌ ப‌ட்ச‌மாக‌  165 ப‌ய‌னிக‌ள் தான் ஏற்ற‌ வேண்டும் ஆனால் கூடுத‌லாக‌ ப‌ய‌ணிக‌ளை ஏற்றுவ‌தால் உடைமைக‌ளை ஏற்ற‌ முடியாம‌ல் இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவித்த‌ன‌ர்' என‌வே அதிகாரிக‌ள் உட‌ன‌டியாக‌ எங்க‌ள‌து உட‌மைக‌ளை மீட்டு த‌ர‌ வேண்டும் என்றார்.

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ அதே விமான‌த்தில் ப‌ய‌ண‌ம் செய்த‌ ம‌ற்றோரு ப‌ய‌ணி ஹீசைன் கூறிய‌தாவ‌து,

ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து ம‌கிழ்ச்சியோடு ஊரு திரும்பிய‌ என‌க்கு உட‌மைக‌ள் வ‌ராத‌து ம‌ன‌ வேத‌னைய‌ளிக்கிற‌து.நாளை நீண்ட‌ நேர‌ம் காத்திருந்து நான் ஊர் திரும்பி விட்டேன் இன்று வ‌ரை உட‌மைக‌ள் வ‌ரும் என‌ நாட்க‌ளை க‌ட‌த்துகிறார்க‌ள்.உட‌ன‌டியாக‌ உட‌மைக‌ளை மீட்டு த‌ருவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என்றார்

 

Monday, February 18, 2013

ஹ‌மீதியா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா!


 
 
கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் 37வது ஆண்டு விழா மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லீம் சங்கம் சார்பில் சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது.
 
விழாவுக்கு சங்கத்தின் துணைத்தலைவர் செய்யது அப்துல்காதர் தலைமை வகித்தார். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல்காதர், பள்ளியின் தாளாளர் ஹமீது அப்துல்காதர், முன்னாள் எம்எல்ஏ அசன்அலி முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் சகர்பானு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜூனைது, உறுப்பினர் இஸ்மாயில், ராமநாதபுரம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அன்வர் அலி, கீழக்கரை பகுதி தலைவர் சிராஜூதீன், பொருளாளர் சேக்தாவூது சாதிக், நேர்முகச் செயலாளர் தாஹிர் சைபுதீன் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ‌க்க‌ரை கல்லூரியில் கடலோர விழிப்புணர்வு கருத்தரங்கம் !


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடலோர விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் வரவேற்றார். தாளாளர்யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ‘தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் பிளஸ்2வில் வெற்றி பெறுகின்றனர். சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்கின்றனர். இதற்கு பொருளாதார பின் னடைவே காரணம். நீங்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் சிறப்பான வாய்ப் பை பெற்றுள்ளீர்கள். நம்முடைய மிகப்பெரிய சொத்து கல்வி. இன் னொன்று உடல் ஆரோக்கியம். இவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவானார்.
நாம் எங்கு பயில்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி செயலாற்றுகின்றோம் என்பதே முக்கியம். மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் 665 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை எங்கள் குழு நிறைவு செய்துள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கை சீற்றங்களால் படகு கவிழ்தல் போன்ற ஆபத்து ஏற்பட்டால், டோல்பிரி எண் 1093ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் மீனவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.
 மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு ஏடிஜிபி சைலேந்திர‌பாபு ப‌திலளித்தார்.

கீழ‌க்க‌ரையில் வேலைவாய்ப்பு முகாம்: 30 பேர் தேர்வு !


கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 30 பேர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

ஓசூர் அசோக் லேய்லண்ட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நடந்த நேர்முகத் தேர்வில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார்.
அசோக் லேய்லண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை முதுநிலை மேலாளர் ஆண்டனிதாஸ், துணை மேலாளர் சுந்தராஜன் ஆகியோர் நேர்முக தேர்வை நடத்தினர். முன்னதாக முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தியாகும் பொருட்கள், நிர்வாகத்தின் சலுகைகள், ஊதியம் குறித்து விரிவாக விளக்கினர்.

 

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் "சோர்பிங்" 13 நிக‌ழ்ச்சி!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் அசோசியேசன் துவக்க விழா மற்றும் சார்பிங்&13  நிக‌ழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனத்தலைவர் ஹமீது அப்துல்காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். கணிப்பொறியியல் துறை பேராசிரியர் சேக்யூசுப் வரவேற்றார். பேராசிரியர் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சி.டி.எஸ். மற்றும் ஐ.பி.எம். ஆகிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் முகம்மது சுல்பிகார் மற்றும் தினேஷ்பாபு பேசினர். மாணவர்களின் திறமை களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரஸினாபேகம், சோபனா மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜீமுதீன் செய்திருந்தனர்

Saturday, February 16, 2013

கீழ‌க்க‌ரையில் புற‌க்காவ‌ல் நிலைய‌ம் திற‌ப்பு விழா நடைபெற்ற‌து!



கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு ஹ‌மீதியா ப‌ள்ளி விளையாட்டு  மைதான‌ வ‌ளாக‌த்தில் புற‌க்காவ‌ல் நிலைய‌ம் திற‌க்க‌ப்ப‌ட்ட‌து.டிஐஜி ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ன் திற‌ந்து வைத்தார்.எஸ்.பி ம‌யில்வாக‌ன‌ம் க‌ல‌ந்து கொண்டார்.ஏராளாமானோர் இதில் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

 உஸ்வ‌துன் ஹ‌ச‌னா முஸ்லீம் ச‌ங்க‌ம் சார்பில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்ச்சியில்  உஸ்வ‌து ஹ‌சனா முஸ்லீம் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் ,உஸ்வ‌து ஹ‌சனா முஸ்லீம் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ள்,ந‌க‌ராட்சி தலைவ‌ர்,துணை த‌லைவ‌ர் ,க‌வுன்சில‌ர்க‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்..

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதிய‌ குப்பை தொட்டிக‌ள் !

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதிய‌ குப்பை தொட்டிக‌ள் !

கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் நிறுவி பொதும‌க்க‌ள் குப்பைக‌ளை கொட்டுவ‌த‌ற்கு ஏதுவாக‌ ந‌க‌ராட்சி சார்பில் 12 புதிய‌ குப்பை  தொட்டிக‌ள்(ட‌ம்ப‌ர் பின்) ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு  ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ர‌ உள்ள‌து.

இது குறித்து  ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து

குப்பை தொட்டிக‌ளை வைப்ப‌த‌ற்கு கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் ஏதுவான‌ ப‌குதிகள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.குப்பை தொட்டிக‌ள் வைக்க‌ப்ப‌ட்டு கொட்ட‌ப்ப‌டும் குப்பைக‌ள் வாக‌ன‌ம் மூல‌ம் அக‌ற்ற‌ப்ப‌டும் என்றார்.


உட‌ன் துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் கவுன்சில‌ர் சுரேஷ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இருந்த‌ன‌ர்.

Friday, February 15, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌லைக்க‌ த‌முமுக‌ வ‌லியுறுத்த‌ல்!


த‌முமுக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் சார்பில் வெளியிட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ அறிக்கையில்...

கீழ‌க்க‌ரை ந‌கர் த‌முமுக‌ நிர்வாக‌ குழு கூட்ட‌ம் ந‌க‌ர் த‌லைவ‌ர் எஸ்.சிராஜீதீன் த‌லைமையில் ந‌க‌ர் செயலாள‌ர் அப்தாகிர் முன்னிலையில் ந‌டைபெற்ற‌து.

இக்கூட்ட‌த்தில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ முடிவின் ப‌டி, கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் முக்கிய‌ இட‌ங்க‌ளில் இய‌க்க‌ கொடியினை ஏற்றுவ‌து என்றும்

கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் உள்ள‌ டீக்க‌டைக‌ளில் கல‌ப்ப‌ட‌ தேயிலை ப‌ய‌ன் படுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.இத‌னால் பொது ம‌க்க‌ள் ப‌ல்வேறு நோய்க‌ளுக்கு ஆளாகிறார்க‌ள்.இத‌ற்கு எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காத‌ ந‌க‌ராட்சி ஆணைய‌ரை க‌ண்டித்தும்,
கீழ‌க்க‌ரை ந‌க‌ர் வ‌ள‌ர்ச்சியில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் ஊழ‌ல் செய்வ‌தில் க‌‌வ‌ன‌ம் செலுத்தும் ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தை க‌ண்டித்தும் ,

ந‌க‌ராட்சி த‌லைவ‌ரின் க‌ண‌வ‌ர் நிர்வாக‌த்தில் த‌லையிடுவ‌தில்
லை என‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளிட‌ம் த‌வ‌றான‌ த‌க‌வலை வெளியிட்ட‌ ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளிப்ப‌து என்றும்,

பைவ் ஸ்டார் கிரில் ஒர்க்ஸாப்பில் ந‌க‌ராட்சி பெய‌ரில் ரூ50ஆயிர‌த்திற்கு பில் வாங்க‌ த‌லைவ‌ரின் க‌ண‌வ‌ருக்கு யார் அதிகார‌ம் கொடுத்த‌து?
பேருந்து நிலைய‌த்தில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மின் க‌ட்ட‌ண‌ அலுவ‌ல‌க‌த்தை இன்று வ‌ரை மின்சார‌த்துறையிட‌ம் ஒப்ப‌டைக்காம‌ல் ம‌க்களை சிர‌ம‌த்துக்குள்ளாக்குவ‌தை க‌ண்டித்தும்

க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக்க‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தால் செல‌விட‌ப்ப‌ட்ட‌ நிதிக‌ளை ம‌றுத‌ணிக்கை செய்து ஆய்வு மேற்கொள்ள‌ க‌லெக்ட‌ர் உத்த‌ர‌விட்டு த‌வ‌று செய்தவ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றும்

மொத்த‌த்தில் கீழ‌க்க‌ரை ச‌ட்ட‌விதிக‌ளுக்கு மாறாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ரும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தை கலைக்க‌ கோரி த‌மிழ‌க‌ அர‌சை கேட்டு கொள்கிறோம்.

இறுதியில் ந‌க‌ர் பொருளாள‌ர் ந‌ன்றி கூறினார்.

 

கீழ‌க்க‌ரையில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து!க‌வுன்சில‌ர்க‌ள் அதிருப்தி!




 கீழக்கரை பேருந்து நிலையம், வடக்குத் தெரு சி.எஸ்.ஐ சர்ச் சந்திப்பு, தெற்குத் தெரு கட்டாலிம்சா பங்களா சந்திப்பு மற்றும் கஸ்டம்ஸ் ரோடு பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில் என 4 இடங்களில்  ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று ஹைமாஸ் விள‌க்குக‌ள் ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து.ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை தலைவ‌ர் ஹாஜா முகைதீன்,க‌மிஷ‌ன‌ர் முஹ‌ம்ம‌து முகைதீன் உள்ளிட்டோர் ஹைமாஸ் விள‌க்கு ப‌ய‌ன்பாட்டை துவ‌ங்கி வைத்த‌ன‌ர்.

ந‌க‌ராட்சி த‌லைவர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து..
 தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய உயர்கோபுரத்தில் 400 வாட்ஸ் சக்தி கொண்ட 16 ஒளி வெள்ள (ஹைமாஸ்) விளக்குகள் இருக்கும். தினமும் மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 16 விளக்குகளும் எரியும். இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை திசைக்கொன்றாக, அவற்றுள் 8 விளக்குகள் மட்டும் எரியும். இவையனைத்தும் தானியங்கி முறையில் (ஆட்டோமெடிக்) செயல்படும்  என்றார்.



இது குறித்து 17வ‌து வார்டு கவுன்சில‌ர் ஆனா மூனா கூறிய‌தாவ‌து,

என‌து வார்டுக்கு உட்ப‌ட்ட‌ தெற்குதெரு ப‌குதியில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ளது மிகுந்த‌ ம‌கிழ்ச்சி அதே நேர‌த்தில் அப்ப‌குதி க‌வுன்சில‌ர் என்ற‌ முறையில் இந்நிக‌ழ்வு குறித்து எவ்வித‌ த‌க‌வ‌லும் என‌க்கு த‌ராத‌து மிகுந்த‌ ம‌ன‌வ‌ருத்த‌த்தை த‌ருகிற‌து என்றார்.

18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவது...
17வது வார்டுக்கு உட்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சியில் அப்ப‌குதியின் அதிமுக‌ க‌வுன்சில‌ர் முகைதீன் அப்துல் காத‌ரை அழைக்க‌வில்லை என்ப‌து க‌ண்டிக்க‌த‌க்க‌து அப்ப‌குதியின் அருகே உள்ள‌ வார்டு க‌வுன்சில‌ரான‌ என்னையும் அழைக்கவில்லை.
ஏற்கென‌வெ இந்த‌ விள‌க்குக‌ள் அனைத்து த‌ர‌ம‌ற்ற‌வை என‌ வ‌ழ‌க்கு தொட‌ர்ந்துள்ளேன்.ஒருவேளை அத‌னால் என்னை அழைக்காம‌ல் இருக்கலாம் ஆனால் ம‌ற்ற‌ க‌வுன்சில‌ர்களையும் ம‌திக்காம‌ல் அழைக்காம‌ல் அவச‌ர‌ க‌தியில் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து எங்கே நீதிம‌ன்ற‌த்தில் ஸ்டே கிடைத்து விடுமோ ப‌ய‌மும் மேலும் த‌டை வ‌ந்து விட்டால் மேற்க‌ண்ட‌ த‌ர‌ம் அற்ற‌ விளக்குக‌ளை ச‌ப்ளை செய்ய‌த‌ ஒப்ப‌ந்த‌ரார் கமிஷ‌ன் ப‌ண‌த்தை திருப்பி கேட்டு விடுவார் என்ற‌ என்ற‌ அச்ச‌மே கார‌ண‌ம் என‌ நினைக்க‌ தோன்றுகிற‌து.
இறைவன் அருளால் த‌ர‌ம‌ற்ற‌ விள‌க்குக‌ள் என்று நிரூபித்து நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் நீதியை நிலை நாட்டுவேன் என்றார்.

முன்னாள் க‌வுன்சில‌ர் ஹ‌மீது கான் கூறியதாவ‌து,

சென்ற‌ ந‌க‌ராட்சி தலைவ‌ர் ப‌சீர் இது போன்ற‌ நிக‌ழ்வுக்கு எவ்வ‌ள‌வு க‌ருத்து வேறுபாடு இருந்தாலும் அந்த‌ந்த‌ வார்டு க‌வுன்சில‌ர்க‌ளை த‌வ‌றாம‌ல் அழைப்பார் அவ‌ரின் இந்த‌ ந‌ல்ல‌ முன்னுதார‌ண‌த்தை இவ‌ர்க‌ள் ஏன் பின்ப‌ற்ற‌வில்லை என்றார்.