Saturday, March 30, 2013

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் பழ‌மையான‌ ந‌ங்கூர‌ம் க‌ண்டெடுப்பு!

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் மீன் பிடிக்க‌ வ‌லையை வீசிய‌ போது ப‌ழ‌மையான‌ ந‌ங்கூர‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து ப‌ட‌குக‌ளை நிர்வாகிக்கும் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பாக்க‌ர் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் இருந்து 20 கிலோ மீட்ட‌ர் தொலைவில் மீன் பிடித்த‌ போது மிகவும் க‌ன‌மான‌ பொருள் சிக்கியது.மிக‌வும் சிர‌ம‌ப்பட்டு இழுத்து வெளியே எடுத்த‌ போது சுமார்‌1ட‌ன்னுக்கு மேல் க‌ன‌முள்ள‌ ந‌ங்கூர‌ம் என‌ தெரிய‌ வ‌ந்த‌து.வ‌லையில் சிக்கிய‌தால் ரூ 1 ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ வலை சேத‌ம‌டைந்த‌து.இந்த‌ ந‌ங்கூர‌ம் சுமார் 50 ஆண்டுக‌ளுக்கு முந்தையதாக‌ இருக்க‌லாம் என்றார்.

க‌ட‌ற்க‌ரை புதிய‌ ஜெட்டி பால‌த்தின் அருகில் உள்ள‌ ந‌ங்கூர‌த்தை  காண்ப‌த‌ற்கு ஏராள‌மானோர் க‌ட‌ற்க‌ரையில் குவிந்த‌ன‌ர்.

 

ம‌துரை ‍துபாய் விமான‌ம்!ஏர் இந்தியா தாமத‌மானால் த‌னியார் விமான‌ சேவை துவ‌ங்க‌ கோரிக்கை!





பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு, அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



மேலும் இக்குழுவினர் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மதுரை – துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கையை விடுத்ததோடு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் இந்த கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்ற படாமல் இருப்பது குறித்தும் எடுத்து கூறினர். இந்த கோரிக்கையை செவியுற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசிதேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.


இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு  நன்றி கூறிய நெல்லை .மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்திய சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில்,   தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.




இந்த சந்திப்பில்,நெல்லை .மீரான், காயிதே மில்லத் பேரவை ஹமீது ரஹ்மான்,அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா,ஈமான் செயலர் ஹமீது யாசீன்,  மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Wednesday, March 27, 2013

கீழக்கரை நகராட்சியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி!


கீழக்கரை நகராட்சியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு இன்றும் நாளையும் நகராட்சியில் நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன் கூறியதாவது, ‘சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது, இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் நகராட்சி கூட்டரங்கில் நடக்கிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி மேளாவில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடுபத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி, 10, பிளஸ்2 தேர்ச்சி மற்றும் தோல்வி பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் கல்வி, மதிப்பெண், ஜாதி, சான்றிதழ், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Tuesday, March 26, 2013

செஸ் போட்டி!கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வ‌ர் மாவ‌ட்ட‌ அள‌வில் முத‌லிட‌ம்!


ராம‌நாத‌புர‌ம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ மாவ‌ட்ட‌ அள‌விலான‌ ஓப்ப‌ன் செஸ் போட்டியில் 15 வ‌ய‌திற்குட்ப்ப‌ட்ட‌  பிரிவில் கீழ‌க்க‌ரை இஸ்லாமியா  மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ன் கோகுல்நாத‌ன் முத‌லாம் இட‌த்தை பிடித்து வெற்றி பெற்றார்.
இவ‌ரை ப‌ள்ளி தாளாள‌ர் முகைதீன் இ
ப்ராகிம்,முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ் ப‌யிற்சிய‌ளித்த‌ உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர்க‌ள் ச‌சிகுமார்,ஜெயா, ம‌ற்றும் நிர்வாக‌ அலுவ‌ல‌ர் ம‌லைச்சாமி ம‌ற்றும் த‌லைமை ஆசிரிய‌ர் சார்த்தோ ஆகியோர் பார‌ட்டின‌ர்

Monday, March 25, 2013

கீழ‌க்க‌ரையில் குருத்தோலை ஊர்வ‌ல‌ம்!


கீழ‌க்க‌ரையில் குருத்தோலை ஞாயிறு தின‌த்தை முன்னிட்டு சி.எஸ்.ஐ பேதுரு ஆல‌ய‌த்திலுருந்து ஏராள‌மான‌ கிறிஸ்துவ‌ர்க‌ள் கையில் குருத்தோலை ஏந்தி ந‌க‌ரின் முக்கிய‌ வீதிக‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ சென்று மீண்டும் ஆல‌ய‌த்திற்கு வ‌ந்து ஞாயிறு குருத்தோலை ஜெப‌த்துட‌ன் ஆல‌ய‌ வ‌ழிபாடும் ந‌டைபெற்ற‌து.

ச‌பையின் போத‌க‌ர் தேவ‌தாஸ் ராஜ‌ன்பாபு தலைமை வ‌கித்தார்.போத‌க‌ர் சிரில் ராஜ‌சேக‌ர் முன்னிலை வ‌கித்தார்.ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

மஹ்தூமியா பள்ளியில் மாணவர்கள் வழியனுப்பு நிக‌ழ்ச்சி!



கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான் தலைமை வகித்தார். பழைய குத்பாபள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜாமுகைதீன், செயலா ளர் முகம்மது இஸ்மாயில், உதவி செயலாளர் சீனி இபுராகிம், பொருளாளர் ஆரிப், செயற்குழு உறுப்பினர் சித்திக், கல்விக்குழு உறுப்பினர் மூர் ஹசனுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் பேசுகையில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு பணப்பரிசு வழங்கப்படும்’ என்றார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்ள் நடைபெற்றது. மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா நன்றி கூறினார்.

கீழ‌க்க‌ரையில் ப‌ல‌த்த‌ ம‌ழை!



photo: Naina

கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் வெயில் சுட்டெரித்து வ‌ந்த‌ நிலையில் இன்று அதிகாலை முத‌ல் ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்ய‌ தொடங்கிய‌து.இத‌னால் ந‌க‌ரில் நில‌வி வ‌ந்த‌ உஷ்ன‌ம் தணிந்துள்ள‌து.

சில‌ மாத‌ங்க‌ளாக‌ க‌டும் வெப்ப‌ம் நில‌வி வ‌ந்த‌தால் கீழ‌க்க‌ரை ம‌ற்று அத‌ன் சுற்றுப‌குதிக‌ளில் நீர் வ‌ள‌ம் குறைந்துள்ள‌ நிலையில் தொட‌ர்ந்து ம‌ழை பொழிய‌ வேண்டும் என்ப‌தே அனைவ‌ரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Sunday, March 24, 2013

கீழ‌க்க‌ரையில் அர‌சு விளையாட்டு மைதான‌ம்!‌ சேர்ம‌ன் க‌லெக்ட‌ரிட‌ம் கோரிக்கை!




கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவது,

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமாரை கீழ‌க்க‌ரை பிர‌முக‌ர்க‌ள் சாதிக் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ருட‌ன் ச‌ந்தித்து கீழ‌க்க‌ரைக்கு தேவையான‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ளை முன் வைத்தோம்.

கீழ‌க்க‌ரையில் த‌னியார் ப‌ள்ளிக‌ளுக்கு சொந்த‌மான விளையாட்டு மைதான‌ங்க‌ள் உள்ள‌து.அர‌சு சார்பில் விளையாட்டு மைதான‌ம் இல்லை .இந்நிலையில் கீழ‌க்க‌ரையில் அர‌சே விளையாட்டு மைதானத்தை அமைக்க‌ வேண்டுமென‌ மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமாரிட‌ம் கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்ட‌து.இத‌னை ப‌ரிசீலிப்ப‌தாக‌ கூறிய‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் இத‌ற்கான‌ இட‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ செய‌ல்ப‌டுத்த‌லாம் என‌ தெரிவித்தார்.என‌வே கீழ‌க்க‌ரை ப‌குதியில் 2 ஏக்க‌ருக்கும் குறையாத‌ அள‌விற்கு இட‌ம் தேர்வு செய்ய‌ப்ப‌டும்.இத‌ற்கான‌ இட‌ம்  இருப்பதாக‌ க‌ண்ட‌றிந்தால் யாரேனும் த‌க‌வ‌ல் த‌ர‌லாம்.மேலும் ச‌முக அக்க‌றையோடு ச‌முக‌ அமைப்புக‌ளும்,த‌னியார் ந‌ல‌ அமைப்புக‌ளும் இட‌ம் தர‌ முன் வ‌ந்தால் வ‌ர‌வேற்க‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை வ‌ர்த்த‌க‌ ச‌ங்க‌ம் சார்பில் ந‌க‌ரில் ந‌க‌ராட்சி சார்பில் ந‌வீன க‌ழிப்ப‌றை வ‌ச‌தி செய்து த‌ர‌ வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்ட‌து.இது குறித்து கு.தா.ஜ‌வுளிக்க‌டை எதிர்புற‌முள்ள‌ வ‌ருவாய்த்துறைக்கு சொந்த‌மான‌ இட‌த்தில் ஒரு ப‌குதி ஒதுக்க‌ கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத்திட்ட‌மும் விரைவில் செய‌ல்ப‌டுத்த‌ப‌டும்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் சாலை ப‌குதிக‌ளில் மின்சார‌ க‌ம்ப‌ங்க‌ள் இல்லாத‌ ப‌குதிக‌ளில் ம‌ர‌க்க‌ன்றுக‌ளை ந‌டுவ‌த‌ற்கு முடிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌ற்காக‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌த்தில்  ம‌ர‌க்க‌ன்றுக‌ள் கேட்க‌ப்ப‌டுள்ள‌து.விரைவில் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை நெடுஞ்சாலைத்துறை ப‌ராம‌ரிப்பில் இருந்து வ‌ருகிற‌து.இச்சாலையை  சீர‌மைக்க‌ கோரி நெடுஞ்சாலைத்துறையிட‌ம் கோரிக்கை விடுத்து இருந்தேன்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை ந‌டவ‌டிக்கை‌ எடுக்க‌ப்ப‌டும் என‌ தெரிவித்துள்ள‌து.என‌வே விரைவில் இத‌ற்கான ப‌ணிக‌ள் துவ‌ங்கும்.

முத‌ல்வ‌ர் அம்மா அவ‌ர்க‌ளி ந‌ல்லாட்சியில் எப்போதுமில்லாத‌ அள‌விற்க்கு கீழ‌க்க‌ரைக்கு ப‌ல்வேறு திட்ட‌ங்க‌ள் த‌ர‌ப்ப‌ட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.ம‌க்க‌ளாகிய‌ உங்க‌ள் ஒத்துழைப்போடு மேலும் ப‌ல‌ ந‌ல‌ திட்டங்க‌ளை செய‌ல்ப‌டுத்துவோம் என்றார்.


 

மாநில‌ கால்ப‌ந்து போட்டி! கீழ‌க்க‌ரை க‌ல்லூரி 2ம் இட‌த்தை பெற்ற‌து!



திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியில் மாலா சுழற்கோப்பைக்கான மாநில அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
 இதில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் இர‌ண்டாம்  இட‌த்தை பெற்ற‌ன‌ர்


அரையிறுதி முதல் லீக் போட்டியில் ஜெ.ஜெ. கல்லூரி யும்,
 2வது போட்டியில் கீழக்கரை முக மது சதக் கல்லூரியும் வென்றது.
 3வது போட்டி யில் ஜெ.ஜெ. கல்லூரி அணி அண்ணா பல்கலைக் கழகத்தையும் (4 0),
 4வது போட்டி யில் முகமது சதக் அணி மதுரை தியாகராஜர் அணியையும் (1-0) வென்றன.
5வது போட்டியில் ஜெ.ஜெ. கல்லூரி அணி முகமது சதக் அணியை (4-0) வென் றது.
அண்ணா பல்கலை அணி, தியாகராஜர் கல்லூரி இடையிலான ஆறாவது ஆட்டம் டிராவானது.
 புள்ளிகளின் அடிப்படையில் ஜெ.ஜெ. கல்லூரி அணி 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த‌து முகமது சதக் அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பெற்ற‌து. அண்ணா பல்கலை அணி 3வது இடமும் பிடித்தன.

இர‌ண்டாம் இட‌த்தை பெற்று முக‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரிக்கு பெருமை சேர்த்த‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி சேர்ம‌ன் ஹ‌மீது அப்துல் காத‌ர் ,செய‌லாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் ,உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் ம‌ற்றும் ப‌ல‌ர் பாராட்டின‌ர்.

 

கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவம‌னை தர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு கூடுத‌ல் வ‌ச‌திக‌ள் !




கீழக்கரையில் அரசு மருத்துவமனை தினவிழா நடைபெற்றது.
கீழக்கரை டி.எஸ்.பி சோமசேகர் தலைமை வகித்து, பராமரிப்பு செய்து முற்றிலும் குளிரூட்டப்பட்ட மருந்தகத்தை திறந்து வைத்தார். ப‌ரிசோத‌னை கூட‌த்தை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா த‌லைமை ஏற்று துவ‌ங்கி வைத்தார்.

தமிழக சுகாதார திட்டத்தின் மாவட்ட மேலாண்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக் அலி, நகராட்சி கமிஷ னர் முகம்மது முகைதீன், தலைமை மருத்துவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். அரசு சித்தா மருத்துவர் வெங்கட்ராமன் வரவேற்றார். இதில் தூயமுறையில் பொது மக்களிடமும் நோயாளிகளிடமும் கனிவுடன் நடந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சாகுல் ஹமீது, முத்தமிழ் அரசி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள்  அஜ்ம‌ல்கான்,முகைதீன் இப்ராகிம், சுரேஷ், சாகுல்ஹமீது, முன்னாள் கவுன்சிலர்கள் ஹமீதுகான், வேல்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ப‌ல்வேறு பர‌மரிப்பு ப‌ணிக‌ள் ந‌டைபெற்று நிறைவுபெற்றுள்ள‌து.ப‌ல்வேறு ப‌ரிசோத‌னைக‌ள் ம‌ற்றும் அறுவை சிகிச்சைக‌ள் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையியே ந‌டைபெறும் என‌ தெரிகிற‌து.

தமிழக சுகாதார திட்டத்தின் மாவட்ட மேலாண்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக் அலி கூறுகையில் ,

 தொற்று இல்லாமல் உருவாகும் நோய் குறித்து கண்டறிய,த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் புதிய திட்டம் செயல்படுத்தப்ப‌ட்டுள்ள‌து. கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌மனையிலும் இத்திட்ட‌ம் செயல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ளது.

 தொற்று இல்லாத நோய்களான சர்க்கரை, ரத்த கொதிப்பு, இருதயம், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மூலம் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப நிலையிலே, தொற்று இல்லா நோய் கண்டறிந்து, சிகிச்சை வழங்கும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.இதன் மூல‌ம் இல‌வ‌சமாக‌ ப‌ரிசோத‌னை செய்து கொள்ள‌லாம்.
, 30 வயதிற்கு மேற்பட்டோர் வரும் போது, அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கர்ப்ப வாய்ப்புற்று நோய், மார்பக புற்று நோய் குறித்து பரிசோதிக்கப்படும்.

நோய் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., சோதனை நடத்தப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். சர்க்கரை அளவு குறைக்கும் இன்சுலின், ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படும். எந்த பாதிப்பும் இல்லாதவர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை சோதனை நடத்தி, கண்காணிக்கப்படும் என்றார்
 

Saturday, March 23, 2013

மாண‌வியிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்ற‌தாக‌ டிரைவ‌ர் கைது



10ம் வ‌குப்பு மாண‌வியிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முய‌ற்சித்த‌தாக‌ டிரைவ‌ர் தமிழரசனை ஏர்வாடியில் கீழ‌க்க‌ரை ம‌க‌ளிர் போலீசார் கைது செய்த‌ன‌ர்.

காவ‌ல் நிலைய‌த்தில் அளிக்க‌ப்ப‌ட்ட‌ புகாரில் ,

ஏர்வாடி அருகே சாயல்குடி பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, டியூசன் முடித்து, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அந்த வழியாக காரில் வந்த தமிழரசன், 22, என்பவர், காரை நிறுத்தி, மாணவியிட‌ம் தகாத‌ முறையில் பேசி கையை பிடித்து இழுத்தார்.

இது குறித்து மாணவி புகார்படி, கீழக்கரை மகளிர் போலீசார், ஏர்வாடியில் இருந்த தமிழரசனை கைது செய்தனர்.


இது குறித்து கீழ‌க்க‌ரை இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவ‌து,

தொட‌ர்ச்சியாக‌ இது போன்ற‌ மாண‌விக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை கேள்விபடும் போது மிக‌வும் வேத‌னையாக‌ இருக்கிற‌து.இவ‌ர்க‌ள் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌டவ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

ஒரு சில‌ரின் இது போன்ற‌ த‌வ‌றான‌ செய‌ல்க‌ளால் ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கும் பாதிப்பு ஏற்ப‌டுகிற‌து.எங்க‌ள‌து ப‌ள்ளியில் மாண‌விக‌ளை ஏற்றி செல்ல‌ வ‌ந்த‌ ஓட்டுந‌ர் ஒருவ‌ர் ம‌து அருந்தி விட்டு வ‌ந்திருப்ப‌தை அறிந்து  அவ‌ரை வாக‌ன‌த்தை ஓட்ட‌ அனும‌திக்க‌வில்லை.அவ‌ரை குடித்து விட்டு வாக‌ன‌ம் ஓட்டாதீர்க‌ள் என‌ எச்ச‌ரித்து எங்க‌ள் ப‌ள்ளி ஓட்டுந‌ரை அனுப்பி மாண‌விக‌ளை வீடு சென்று சேர்த்தேன்.

மேலும் எங்க‌ளால் முடிந்த‌ வ‌ரை மாண‌விய‌ர்க‌ள் பாதுகாப்பாக‌  வீடு சென்று சேரும் வ‌ரை க‌ண்காணிக்கிறோம்.த‌ங்க‌ளது பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு அழைத்து செல்லும் ஓட்டுந‌ர்க‌ள் ச‌ரியான‌வ‌ர்க‌ள்தானா என‌ பெற்றோர்க‌ளும் க‌ண்ட‌றிந்து க‌வ‌ன‌ம் செலுத்த வேண்டும்.என்றார்.
 

Thursday, March 21, 2013

சுகாதார‌ ஆய்வாள‌ர் மிர‌ட்டுவ‌தாக‌ கவுன்சில‌ர் காவ‌ல்துறையில் புகார்!



சுகாதாரச்சீர்கேடுகளை சரி செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கியும் பணிகளைத் துவக்காமல் இழுத்தடிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் நகராட்சிக் சுகாதார ஆய்வாளர் மிரட்டுவதாக கீழக்கரை கவுன்சிலர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.



கீழக்கரை நகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம். இவர் பிப். 25ல் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கொடுத்த மனு:


கீழக்கரை ந‌க‌ராட்சியில் உர‌க்கிட‌ங்கு திற‌க்க‌ப்ப‌ட்டது.இங்கு குப்பைக‌ள் கொட்ட‌ப்ப‌ட்டு குப்பைக‌ளை த‌ர‌ம் பிரித்து உர‌மாக்கும் ப‌ணி டெண்ட‌ர் கொடுத்து ந‌டைபெற்று வ‌ந்த‌து.இப்ப‌ணி டிச‌ 31ல் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. கடந்த டிச. 31ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவு பெற்று பணி நிறுத்தப்பட்டதால் குப்பைகள் மலை போல் குவிந்து உள்ளது. நகராட்சி ஆணையாளரின் அலட்சிய போக்கால் இப்பணிக்கு மறு டெண்டர் வைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரியுள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடம் இவர் அளித்த மற்றொரு மனுவில்,
 “நகராட்சியில் நிலவும் துப்புரவு தொழிலாளர் பற்றாக்குறையால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கின. சென்னை நகராட்சி ஆணையாளர் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நகரை சுத்தம் செய்வதற்கு ரூ.24 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு போட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டால் சுகாதார ஆய்வாளரிடம் கேளுங்கள் என்றும், சுகாதார ஆய்வாளரிடம் கேட்டால் கமிஷனரிடம் கேளுங்கள் என்றும் பதில் கூறுகின்றனர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் முகைதீன் இபுராகிம் கீழ‌க்க‌ரை போலீசில் கொடுத்த மனுவில்,
“மார்ச் 18ல் நகராட்சி வாசலில் இரவு 7.15 மணியளவில் நானும், கவுன்சிலர்கள் அன்வர் அலி, சாகுல் ஹமீது ஆகியோரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி என்னிடம், கலெக்டரிடம் ஏன் மனு கொடுத்தாய் என்று மிரட்டும் விதமாக கையை நீட்டி கடுமையாகப் பேசினார். நகராட்சிக்குள் செல்வதற்கு எனக்கு அச்சமாக உள்ளது. காவல்துறை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.


இது குறித்து சுகாதார‌ ஆய்வாள‌ர் திண்ணாயிராமூர்த்தியிட‌ம் கேட்ட‌ போது,

இவரின் குற்ற‌ச்சாட்டு முழுக்க‌ முழுக்க‌ உ‌ள்நோக்க‌ம் கொண்ட‌து.உண்மையில்லை.அவ‌ர் ஒரு சான்றித‌ழ் பெறுவது ச‌ம்ப‌ந்த‌மாக‌‌ என்னிட‌ம் வ‌ந்தார்.நான் அர‌சின் விதிமுறைக‌ளுக்கு மாறாக‌ முறையான ஆவ‌ண‌ங்க‌ள் இல்லாம‌ல் சான்றித‌ழ் த‌ர‌ முடியாது என்று ம‌றுத்து விட்டேன்.இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளால்தான் அவ‌ர் வீண் குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறுகிறார். கீழ‌க்க‌ரையில் சுகாதார‌ ப‌ணிக‌ள் சிற‌ப்பாக‌ மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.அர‌சாங்க‌த்தில் என‌க்கு தர‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ணியினை ச‌ரியாக‌ செய்து வ‌ருகிறேன்.என்றார்.


 

இலங்கையை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ந‌டைப‌ய‌ண‌ம்!ஓட்டுந‌ர்க‌ள் ச‌ங்க‌ம் உண்ணாவிர‌த‌ம்



இல‌ங்கையை க‌ண்டித்தும் இல‌ங்கைக்கு எதிரான தீர்மான‌த்தை இந்தியா ஆத‌ரிக்க‌ வ‌லியுறுத்தியும் கீழ‌க்க‌ரை த‌னியார் க‌ல்லூரியில் ப‌யிலும் 70க்கு மேற்ப‌ட்ட‌ ஐடிஐ மாணவ‌ர்க‌ள் ந‌டைப‌ய‌ண‌ம் மேற்கொண்ட‌ன‌ர்.இத‌னைய‌றிந்த‌ கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை டிஎஸ்பி சோம‌சேக‌ர் த‌லைமையிலான‌ போலீசார் முள்ளுவாடி அருகே மாண‌வ‌ர்க‌ள் வ‌ந்த‌போது த‌டுத்து நிறுத்தி முன் அனும‌தி பெறாம‌ல் ரோட்டில் ந‌டைப‌ய‌ண‌ம் மேற்கொள்ள‌க்கூடாது என‌ த‌டுத்து நிறுத்தி திருப்பி அனுப்பின‌ர்

அதேபோன்று கீழ‌க்க‌ரை ஆட்டோ ம‌ற்றும் மினிடோர் ம‌ற்றும் சீட்க‌வர் ஓட்டுந‌ர்க‌ள் சங்க‌ம்,உள்ளிட்ட‌ ஏழு ச‌ங்க‌ங்க‌ளின் ஓட்டுந‌ர்க‌ள் புதிய‌ ப‌ஸ் நிலைய‌ம் அருகில் உண்ணாவிர‌த‌ம் மேற்கொண்ட‌ன‌ர்.

ந‌ண்ப‌ர்க‌ள் ஆட்டோ ச‌ங்க‌த‌லைவ‌ர் சேது த‌லைமை வ‌கித்தார்.மினி டோர் ஓட்டுந‌ர் ச‌ங்க‌ செய‌லாளர் காசிநாத‌ன்,சீட் வேன் ஓட்டுந‌ர் ச‌ங்க‌ தலைவ‌ர் முனிய‌சாமி ச‌ம‌த்துவ‌ ஆட்டோ ஓட்டுந‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ர் குமார்,ச‌ம‌த்துவ‌ ஆட்டோ ஓட்டுந‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
ம‌க்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ க‌ட்சி மாநில‌ அமைப்பு செய‌லாள‌ர் த‌ர்ம‌லிங்க‌ம் உண்ணாவிர‌த‌த்தை துவ‌ங்கி வைத்தார்.  இதில் ஏராள‌மான ஓட்டுந‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

கீழ‌க்கரை கல்லூரியில் புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் துவக்கம்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 26 லட்ச ரூபாயில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் புற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையம் துவக்க விழா, கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமையில் நடந்தது.இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.

வேதியியல் துறை தலைவர் தாவீது ராஜா வரவேற்றார்.கல்லூரி முதல்வர் கூறியதாவது:  

 மாவட்ட அளவில் புற்று நோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. புற ஊதா மற்றும் கண்ணுறு ஒளி நிற மாலை, மாணி மற்றும் பூரியர் அகச் சிவப்பு நிறமாலை ஆகிய புற்று நோய்க்கான ஆராய்ச்சி சாதனங்கள் பொருத்தப்பட்டு, மரபணு பிரிப்பு சோதனைக்கு பயன்படுத்தப்படும். புற்று நோய்க்கு பக்க விளைவற்ற மருந்து கண்டு பிடிக்க முடியும், என்றார். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., நஜ்முதீன், துறை பேராசிரியர்கள் செய்தனர்.
 

Wednesday, March 20, 2013

கீழ‌க்க‌ரையில் அர‌சு சார்பில் மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம் அமைக்க‌ வேண்டுகோள்




கீழக்கரையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மீன் பதனிடும் நிலையம் அரசு அமைக்க வேண்டும் என்று நீண்ட‌ கால‌மாக‌ இப்ப‌குதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வ‌ருகின்ற‌ன‌ர்.இது குறித்து இது வ‌ரை எவ்வித‌ முய‌ற்சியும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை என‌ மீன‌வ‌ர்க‌ள் கவ‌லை தெரிவித்த‌ன‌ர்.
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிரங்குடி பக் கீர் அப்பா தர்ஹா, மாய குளம் பாரதிநகர், புல்லந்தை மங்களேஸ்வரிநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொ ழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மீன்கள் அதிகளவு பிடி படும் சமயங்களில் வெளி யூர் சென்று கொள்ளளவு அதிகமுள்ள மீன் பதனிடும் நிலையங்களில் மீன்களை பதப்படுத்தி சேமித்து வை க்க வேண்டியுள்ளது.

இதனால் செலவு அதிகமாகி றது. ஏற்கனவே டீசல்  உயர்வு மற்றும் கூலித் தொழிலாளர்கள் சம்பளம் போன்ற பல்வேறு பிரச்னைகளில் மீன்பிடி தொ ழில் நசிந்து வருகிறது. இது போன்ற செலவுகள் அதிகரி க்கும்போது மீன்களை மக்களுக்கு அதிகளவில் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறி த்து மீன் தொழிலில் ஈடுபடும் ஹாஜா முகைதீன் கூறுகை யில், ‘கீழக்கரையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மீன் பதனிடும் நிலை யத்தை அரசு அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இதுவரை எங்கள் கோரி க்கையை பரிசீலனை கூட செய்யவில்லை. நாளொ ன்றுக்கு 2 டன்னுக்கும் அதிகமாக இப்பகுதியில் மீன்கள் பிடிபடுகிறது. இந்த மீன்களை ஏர்வாடி போன்ற வெளியூர்களில் கொண்டு சென்று பதனிட வேண்டியுள்ளது. இதனால் செலவு அதிகமாகிறது. மீன் பதனி டும் நியைத்தை கீழக்கரை யில் அமைத்தால் இங்கேயே பதப்படுத்தி கொள்ளலாம்.
இதனால் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் மீன்களை விற்பனை செய்யலாம். எனவே நலிந்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொ ண்டு கீழக்கரையில் அரசு மீன் பதனிடும் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் மீனவர்களுக்கு சலுகை விலையில் கட்டணம் விதி க்க வேண் டும். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மீன் பிடி தொ ழிலும் வளர்ச்சி பெறும்’ என்றார்.

கீழ‌க்க‌ரையில் ச‌த‌க் க‌ல்லூரியில் ம‌க‌ளிர் தின‌ விழா!

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி சேடோ நிறுவனம், சமூக மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் சார்பில், உலக மகளிர் தின விழா, இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில், முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுப்பிரமணியன், கல்வியாளர் ஜீடியத், வக்கீல் ரேணுகா தேவி, ஊராட்சி தலைவர் மனோரஞ்சிதம் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் யோசுவா, தொகுத்து வழங்கினார்.

சித்தார்கோட்டை ஜெயிலானி மின்னியியல் இறுதியாண்டு மாணவி முத்து நாச்சியார், கல்வியாண்டின் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்ப‌டு க‌வுர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

மகளிர் முன்னேற்றத்திற்கு சிறந்த பணியாற்றிய மண்டபம் முகாம் கனகப்பிரியா, சித்தார்கோட்டை ஜெய்லானி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

 சுயஉதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, நான்கு மகளிர் மன்றங்களுக்கு, தலா 3 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மத்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு விரிவாக்க பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேடோ திட்ட அதிகாரி இளமுருகு, மகளிர் மேம்பாட்டு அமைப்பின் மேலாளர் முனைச்செல்வி செய்தனர்.

Tuesday, March 19, 2013

கீழ‌க்க‌ரையில் எம்.எம்.கே ஏஜென்ஸீஸ் சார்பில் புதிய பைக் ஷோரூம் திற‌ப்பு !சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கீழ‌க்க‌ரை அலீப்தீன் திற‌ந்து வைத்தார்.





கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில்  எம்.எம்.கே ஏஜென்ஸீஸ் புதிய‌ பைக் ஷோரூம் திற‌க்க‌ப்ப‌ட்ட‌து.சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் எம்.எம்.கே.அலீப்தீன் புதிய‌ ஷோரூமை திற‌ந்து வைத்தார்.

இந்நிக‌ழ்ச்சியில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌  காஜி ஸலாஹீதீன் ஆலிம்,ப‌ல்வேறு ஜ‌மாத்க‌ளின் பிர‌திநிதிக‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மான பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

இது குறித்து எம்.எம்.கே ஏஜென்சி சார்பில் செல்வ‌ராஜா என்ற‌ எம்.எம்.கே காசிம் கூறுகையில்,

‌இங்கு அனைத்து வித‌மான‌ பைக்குக‌ளும் இங்கு சிற‌ந்த‌ விலையில் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டும்.உங்க‌ள் பைக்குக‌ளை வாங்கி கொள்ள‌வும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இப்புதிய‌ ஷோரூமை பார்வையிட்டு தாங்க‌ளுக்கு தேவையான‌ பைக்குக‌ளை தேர்வு செய்து கொள்ள‌லாம் என‌ அனைவ‌ரையும் அன்புட‌ன் கேட்டு அழைக்கிறேன் என்றார்.

தொடர்பு கொள்ள‌ வேண்டிய‌ மொபைல் எண் : 9486430886  9150858606

Monday, March 18, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் ஏரோ எலைட் 13 நிகழ்ச்சி


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வானூர்தி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவிலான ‘ஏரோ எலைட் 13’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் எம்.பி.ஏ. கூட்டரங்கில் நடந்தது.

கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார், இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா, இந்திய விமானப்படை முன்னாள் கமாண்டர் ஐ.சர்புதீன் முன்னிலை வகித்தனர். வானூர்தி பொறியியல் துறைத்தலைவர் ரஷீத்கான் வரவேற்றார்.

விழாவில் இந்திய விமானப்படை முன்னாள் கமாண்டர் ஐ.சர்புதீன் பேசுகையில், ‘வருங்கால விமானத்துறை முன்னேற் றம் குறித்தும், தற்போதைய விமானத்துறையில் உள்ள விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்குவது மற்றும் செலவினங்களை குறைப் பது குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு விளக்கினார். இதில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

துறைத்தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் மற்றும் துறைத்தலைவர்கள் செய்திருந்தனர். 

Sunday, March 17, 2013

கீழ‌க்க‌ரையில் டிரைவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ தாய் புகார்!போலீஸ் விசார‌ணை!

photo-Thanks.Nakkeeran.

 கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெருவில் த‌னியாரிட‌ம் கார் ஓட்டுந‌ராக‌ ப‌ணி புரிந்து வ‌ந்தவ‌ர்.லட்சுமிபுரத்தைதைச் சேர்ந்த ஜானகிராமன் என்கிற ராமு (வ‌யது 29).  8வ‌ய‌து சிறுமியிட‌ம் சில்மிஷம் செய்த‌தாக‌ ஏற்பட்ட த‌க‌ராறின் கார‌ண‌மாக‌ த‌ற்கொலை செய்து கொண்டதாக‌ த‌க‌வ‌ல் வெளியான‌து

இதனை மறுத்த ஜானகிராமன் த‌ர‌ப்பின‌ர்  இது கொலை என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட‌வர்களை கைது செய்ய‌ வேண்டுமென‌ கோரின‌ர்.இவரை 18 பேர் கொண்ட கும்பல் அடித்து தூக்கில் தொங்க விட்டதாக, ராமுவின் தாயார் லட்சுமி கீழ‌க்க‌ரை காவ‌ல்துறையில் புகார் கொடுத்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு பிரிவினர் போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டனர்.இதனை தொடர்ந்து கீழக்கரை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டிருந்தவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

 ராமுவின்  பெற்றோரோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பிரேத பரிசோதனைக்கு செல்லுமாறு கூறினர்.
இ‌தனை ஏற்றுக்கொண்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக்கொண்டனர். பிரேத பரிசோதனையில் கொலை என தெரிய‌ வ‌ரும் ப‌ட்ச‌த்தில் ,உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, March 16, 2013

துபாயில் "கோல்ட‌ன் லீப்" புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌ப்பு!கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ப‌ங்கேற்பு!



துபாய் மீடியா சிட்டியின் மைய‌ ப‌குதியில் "கோல்ட‌ன் லீப்' என்ற‌ பெய‌ரில் புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டு நேற்று செய‌ல்ப‌ட‌ துவ‌ங்கிய‌து.

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முக‌ம்ம‌து முகைதீன் ம‌ற்றும் திண்டுக்க‌ல் ஹ‌னிபா ஆகியோர் உரிமையாளர்க‌ளாவ‌ர்.இக்க‌டையில் த‌லைமை நிர்வாகியாக‌ கீழக்க‌ரை ர‌ஸ்மி செய‌ல்ப‌ட்டு வ‌ருகிறார்.

இது குறித்து க‌டையின் நிர்வாகிக‌ள் கூறிய‌தாவ‌து,

இங்கு அனைத்து வித‌மான‌ இந்திய‌ வ‌கை உண‌வுக‌ளும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு உள்ள‌து.இத‌ற்காக‌ இந்தியாவிலிருந்து பிர‌த்யோக‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மைய‌ல் க‌லை நிபுண‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.த‌மிழ‌க‌ உண‌வு வ‌கைக‌ளான‌ இட்லி,தோசை உள்ளிட்ட‌வைக‌ளும் பிரியாணி வ‌கைக‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மான‌ சுவை மிகு உண‌வு த‌யாரிப்புக‌ள் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இப்ப‌குதியில் மிக‌ப்பெரிய‌ கார் பார்க்கிங் வச‌தி உள்ள‌து.தொலைபேசியில் ஆர்ட‌ர் கொடுத்தால் டோர் டெலிவ‌ரி வ‌ச‌தியும் உள்ள‌து.அனைவ‌ரும் ஆத‌ர‌வு த‌ர‌ வேண்டும் என்ற‌ன‌ர்.

திற‌ப்பு விழா நிக‌ழ்ச்சியில்   கீழ‌க்க‌ரை,திண்டுக்க‌ல்,அதிராம‌ப்ப‌ட்டின‌ம்,சென்னை,பெங்க‌ளூர்,டெல்லி உள்ளிட்ட‌வைக‌ளை சேர்ந்த‌ ஏராளாமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

தொட‌ர்புக்கு : 00971 55 4734425, 055 6688992

கீழ‌க்க‌ரை தெற்குதெரு ம‌த்ர‌ஸா ஆண்டு விழா!



கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத்தின் அல்மதர்ஸாத்துல் இஸ்லாமியா மக்தப் பாடசாலை ஆண்டு விழா இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தெற்குத்தெரு ஜமாஅத் துணைத்தலைவர் சையது முகம்மது புஹாரி தலைமை வகித்தார். தலைவர் ஜாஹிர் ஹூசைன் களஞ்சியம், செயலாளர் பவுசுல் அலியுர் ரஹ்மான், துணைச் செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் ஹமீது ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் முஹம்மது நிஸ்பார் வரவேற்றார்.

முன்னதாக அல்மதர்ஸத்துல் இஸ்லாமிய மாணவர்கள் கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தனர், இதில் மாணவர்களுக்கு குர்ஆன் மனப்பாடம் மற்றும் இஸ்லாத்தின் கடமைகள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் சென்னை மக்தப் தலீம் கமிட்டி முகம்மது அலி மன்பஈ, ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் வலியுல்லா ஹழரத்நூரி, தெற்குத்தெரு ஜமாஅத் கத்தீபு அஹ்மது அமானி ஆலிம் ஆகியோர் பேசினர். பாஜில் தேவ்பந்த் இமாம் நூர் பள்ளி அப்துல்மன்னான் நன்றி கூறினார். ஜன்னத்துல் பிர்தவ்ஸ் பள்ளி இமாம் முகம்மது பிலால் துஆ ஓதினார்.

தபால்காரருக்கு கொலை மிரட்டல்!கீழ‌க்க‌ரை அதிமுக‌ பிர‌முக‌ர் மீது வ‌ழ‌க்கு!

கீழக்கரையில் தபால்காரரை வேலை செய்யவிடாமல் தடுத்து முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக‌ அதிமுக நகர் துணைச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிக்கல் வடக்குத் தெருவை சேர்ந்த குருசாமி மகன் உடையான்(45). இவர் கீழக்கரை தபால் நிலையத்தில் தபால் பட்டுவாடா செய்பவராக பணியாற்றி வருகிறார்.

 நேற்று முன்தினம் தட்டான்தோப்பு பகுதியில் ஆதார் அடையாள அட்டை பட்டுவாடா செய்து
கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர் துணைச் செயலாளர் குமரன், தன்னுடைய அட்டையை முதலில் தரவேண்டும் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமரன், உடையானை தரக்குறைவாக பேசி முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக‌  உடையான் கொடுத்த புகாரின்பேரில் கீழக்கரை எஸ்ஐ கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து குமரனை தேடிவருகிறார்.







 

தேசிய அளவில் ராமநாதபுரம் மாவட்டம் சூரியஒளி(சோலார்) மின் உற்பத்தியில் 2ம் இட‌ம்!

ராமநாதபுரம் மாவட்டம், சூரியஒளி(சோலார்)  மின் உற்பத்தி செய்யும் திறனில் இரண்டாம் இடத்தில் உள்ளது,' என அண்ணா பல்கலை எரிசக்தி துறை பேராசிரியர் சேது மாதவன் கூறினார்.

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பில், எரிசக்தி குறித்த கருத்தரங்கம், முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமையில், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில் நடந்தது. துறை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் வான்ஜீஸ்வரன், விஜயகுமார், உமா மகேஸ்வரி, விஜயஸ்ரீ விளக்கமளித்தனர்.

 கல்லூரி துறை தலைவர்கள் அழகிய மீனாள், பீர்ஒலி, மும்பை கிராம்டன் கீரிவ்ஸ் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஜெயபாலன் கலந்து கொண்டனர்.

அண்ணா பல்கலை எரிசக்தி துறை பேராசிரியர் சேது மாதவன் பேசியதாவது 
மின் தடைக்கு "இன்வெர்ட்டர்' தற்காலிகமாக பிரச்னையை தீர்க்கலாம்.நிரந்தர தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக சூரிய ஒளி மூலம் 1,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி கொண்ட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 2015ம் ஆண்டுக்குள் உற்பத்தி துவங்கி விடும்.மக்கள் மத்தியில் சூரியஒளி குறித்த, விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்க முடியும். குறிப்பிட்ட அளவு வெப்பம், மூன்று மணி நேரத்திற்குள் கிடைப்பதால் கோவை, ஊட்டியில் மக்கள் வீட்டுக்குள் பிளான்ட் அமைத்து சுடுதண்ணீருக்காக "சோலார்' ஹீட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.

தேசிய அளவில், ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரியஒளி மின் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது, என்றார்.
 

Friday, March 15, 2013

கீழ‌க்க‌ரையில் 10ம் வ‌குப்பு மாண‌விக‌ளிட‌ம் ஈவ் டீசிங்!‌ இருவ‌ர் மீது வ‌ழ‌க்கு!ஒருவ‌ர் கைது!

கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌பாண்டி

கீழ‌க்க‌ரையில் 10ம் வ‌குப்பு மாண‌விக‌ளிட‌ம் ஈவ் டீசிங் செய்த‌தாக‌‌ இருவ‌ர் மீது வ‌ழ‌க்கு!ஒருவ‌ர் கைது!

கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குத்தெருவை சேர்ந்த‌ முக‌ம்ம‌து இப்ராகிம் ம‌கன் செய்ய‌து அப்துல் காத‌ர் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகாரில் கூறியிருப்ப‌தாவ‌து,

என‌து பேத்திக‌ள் த‌னியார் ப‌ள்ளியில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டித்து வ‌ருகின்ற‌ன‌ர்.இந்நிலையில்  நேற்று ப‌ள்ளி முடித்து வீட்டுக்கு ந‌ட‌ந்து சென்ற‌ போது, கீழ‌க்கரையை சேர்ந்த‌ த‌ங்க‌பாண்டி(24)ம‌ற்றும்‌ நட‌னசாமி என்ற‌ ச‌தீஸ் ஆகிய‌ இருவ‌ரும் காரில் வ‌ந்து என் பேத்திக‌ளை கேலி செய்து கீழ்த‌ர‌மாக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்துள்ள‌ன‌ர்.இது குறித்து போலீசார் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ ம‌னுவில் கூறியிருந்தார்.

இது குறித்து கீழ‌க்க‌ரை போலீசார் விசார‌ணை செய்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்து த‌ங்க‌பாண்டியை கைது செய்து த‌லைம‌றைவான‌ ச‌திஷை தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.