Friday, May 31, 2013

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு!கீழ‌க்கரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி 490/500 பெற்று முத‌லிட‌ம்.!





எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுக‌ள்

கீழ‌க்கரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி J.ரபீகத் சுஹைனா  490/500 பெற்று ந‌க‌ரில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.




சென்னையில் தொழில் செய்து வரும் கீழக்கரை தெற்குத்தெருவை சேர்ந்த ஜலால், இறைவன் உதவியால் தனது மகள் ரபீகத் சுஹைனா கீழக்கரை அளவில் முதலிடம் பெற ஊக்கமளித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்ததோடு அனைத்து மாணவ,மாணவியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்

 
ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி  ஏ.ம‌ரிய‌ம் ஆயிச‌த் மின்ஹா 488/500 ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்

இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி ஹ‌லீமா 484/500 ம‌திப்பெண்க‌ள் ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.

ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவி சுஸ்மா 461 /500  பெற்று ‌பள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார் .

மக்தூமியா பள்ளி மாணவி நிலோபர்நிசா 455 மதிப்பெண் பெற்று பள்ளியில்
முதலிடத்தை பெற்றார்.ஜெய்தூன் 443/500,சினி ஷேக் முஹம்மது 446/500
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி. 6வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி

முஹைதீனியா ப‌ள்ளியில் ஜாவித் ரிபாய் ம‌ற்றும் அப்ரினா பானு ஆகியோர் 446/500 பெற்று ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ள‌ன‌ர் .பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி

தீனியா  மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி ராலியா 454/500 ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.  . பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி

இஸ்லாமியா  மெட்ரிக் ப‌ள்ளியில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ர்
ஹ‌லிமா 484/500 , அப்ரிடீன் 481/500,மொபிகா 481/500 ,மாண‌வ‌ர் மசாபி 480/500
,பாத்திமா ச‌மிஹா 479/500 ,
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 8வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி

இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி வைசாலி 477 மதிப்பெண்
பெற்று பள்ளியில் முதலிடத்தையும்,வினிதா 472 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ஆம் இடத்தையும் பிடித்தனர்..
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 9வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி


ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப்ப‌ள்ளி 

அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ர்

ஏ.ம‌ரிய‌ம் ஆயிச‌த் மின்ஹா 488/500
இவ‌ருக்கு அடுத்த‌ப்ப‌டியாக‌ அதே ப‌ள்ளியில் சிரின் பாத்திமா 486/500 ஆர்.சோபிதா 486/500
தீபா 479/500
அஸ்மின் பானு 478/500
 182பேர் தேர்வு எழுதிய‌தில் அனைவ‌ரும் தேர்வு 100% தேர்ச்சி

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி
 முத‌ல் மூன்று இட‌ம் பெற்ற‌ மாண‌விக‌ள்
ர‌பீக‌த் சுஹைனா 490/500

ஆயிஷ‌த் நிப்ஃலா 478/500

ர‌சீத‌த் ந‌லிபா   478/500

ஹ‌தீஜ‌த்        475/500

87பேர் தேர்வு எழுதி 84பேர் தேர்ச்சி பெற்றுள்ளன‌ர்


ஹ‌மீதியா ஆண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி

 முத‌ல் மூன்று இட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ள்

பி.ஷேக் முக‌ம்ம‌து  474/500

ஜெய‌கார்த்திக் 471/500

பி.அருண்குமார்  466/500

117பேர் தேர்வு எழுதி அனைவ‌ரும் தேர்வு 100% தேர்ச்சி


 

Thursday, May 30, 2013

வ‌பாத் அறிவிப்பு(கால‌மானார்க‌ள்) !

கீழ‌க்க‌ரை சேக் ஹுசைன் சார்பில் வெளியிட‌ப்ப‌ட்ட‌  அறிவிப்பில்...

புதுகிழ‌க்குத்தெருவில் வ‌சிக்கும் சேகு ம‌தார் சாஹிப் அம்ப‌ல‌ம் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளும் க‌.அ.மு.முஹ‌ம்ம‌து முகைதீன் அவ‌ர்க‌ள் ம‌னைவியும் க‌.அ.மு.உம‌ர் சாஹிப் ,க‌.அ.மு. நூருல் அமீன் ,க‌.அ.மு ஜவாஹ‌ர் ஹுசைன்.க‌.அ.மு.சேகு ம‌தார் சாகிப்(முக்தார்) ஆகியோரின் தாயாரும் ம‌ர்ஹூம் அ.சீ.சே அக‌ம‌து சாகிபு அவ‌ர்க‌ளின் மூத்த‌ ச‌கோத‌ரியுமான‌ அ.சீ.சே.அக‌ம‌து சுல்தான் பீவி அவ‌ர்க‌ள் 27-05-13 அன்று மாலை 5.30 ம‌ணிய‌ள‌வில் வ‌பாத்தானார்க‌ள்(காலமானார்க‌ள்).

28 05 13 காலை 10 30 ம‌ணிய‌ள‌வில் நடுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் ந‌டைபெற்ற‌து

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொட‌ர்பு கொள்ள‌...

 உம‌ர் சாகிப்    9444383545

 சேகு ம‌தார் சாகிபு(முக்தார்)   9444084372

கீழ‌க்க‌ரை நக‌ராட்சி கூட்ட‌ம்:ந‌க‌ராட்சியின் இல‌வ‌ச‌ குடிநீர் ஓட்டல்க‌ளுக்கு விநியோக‌ம்!க‌வுன்சில‌ர் புகார்! ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் க‌ண்காணிப்பு கேம‌ராக்க‌ள் அமைக்க‌ முடிவு!



கீழக்கரை நகர்மன்ற கூட்டம்  தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஹாஜா முகைதீன்,நகராட்சி ஆணையாளர் முகம்மது முகைதீன்,பொறியாளர் மதிவானன் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

க‌வுன்சில‌ர்  ஜெய‌பிரகாஷ்:
என‌து வார்டில் க‌ழிவு நீர் ப‌ம்பிங் செய்ய ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் ஜென‌ரேட்ட‌ர் ப‌ழுதாகி விட்ட‌து.எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை.இத‌னால் க‌ழிவுநீர் தேங்கி நிற்கிற‌து.சுகாதார ஆய்வாள‌ரிட‌ம் புகார் செய்தால் பொதும‌க்க‌ள்தான் புகார் செய்ய‌ வேண்டும் என‌ பொறுப்ப‌ற்ற‌ முறையில் ப‌தில் கூறுகிறார்.

த‌லைவ‌ர்  ராவியத்துல் கதரியா  : இது குறித்து விசாரித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும்

க‌வுன்சில‌ர் சாஹுல் ஹ‌மீது : ரூபாய் 65 ல‌ட்ச‌ம் செல‌வில் குடிநீர் வாக‌ன‌ம்,க‌ழிவுநீர் உறிஞ்சும் வாக‌ன‌ம்,டிம்ப‌ர் பிளாசா வாக‌ன‌ம் வாங்கினீர்க‌ளே எத‌ற்கு காட்சி பொருளாக‌ நிறுத்துவ‌த‌ற்காக‌வா?இது போன்று மோட்ட‌ர் ப‌ழுதாகும் நேர‌த்தில் க‌ழிவு நீர் உறிஞ்சும் வாக‌ன‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாமே ?

த‌லைவ‌ர்  ராவியத்துல் கதரியா  : இன்னும் டிரைவ‌ர் நிய‌மிக்க‌வில்லை

துணை த‌லைவ‌ர்: ஏன் சுகாதார‌ மேஸ்திரியை குடித‌ண்ணீர் வ‌ண்டிக்கு டிரைவ‌ராக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போன்று இந்த‌ வாக‌ன‌த்திற்கும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாமே?

க‌வுன்சில‌ர் முகைதீன் இபுராகீம்: கீழக்கரையில் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது.எனவே அந்த டென்டரை ரத்து செய்யப்பட வேண்டும்.

க‌வுன்சில‌ர் ர‌பியுதீன்: ப‌ல‌ ப‌ணிக‌ளுக்கு டெண்ட‌ர் விட‌ப்ப‌ட்டு ப‌ணி உத்த‌ர‌வு கொடுத்தும் ப‌ணிக‌ள் தொட‌ங்க‌ப்ப‌டாத‌து ஏன்?


க‌வுன்சில‌ர் அஜ்மல்:    நகரசபை சார்பில் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் ஹோட்டல்,டீக்கடை போன்றவற்றிற்கு முறைகேடாக விநியோகம் செய்யப்படுகிறது. பொதும‌க்க‌ளுக்கு குடிநீர் கிடைப்ப‌தில்லை.த‌ற்போது விலைக்கு விற்ப‌வ‌ர்க‌ளும் இல‌வ‌ச‌ த‌ண்ணீர் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌டுகிற‌து என்று விற்க‌ வ‌ருவ‌தில்லை இத‌னால் பொதும‌க்க‌ள் குடிநீர் பெறும் சிர‌ம‌ப்ப‌டுகிறார்க‌ள்.நாளொன்றுக்கு எத்த‌னை லிட்ட‌ர் த‌ண்ணீர் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

க‌மிஷ‌ன‌ர் : 48 ஆயிர‌ம் லிட்ட‌ர்.

க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராஹிம்: நாளொன்றுக்கு 72 ஆயிர‌ம் லிட்ட‌ர் வீத‌ம் 60 நாட்க‌ளுக்கு ரூ9 ல‌ட்ச‌த்து 50 ஆயிர‌த்திற்கு  டெண்ட‌ர் வைத்து விட்டு த‌ற்போது 48 ஆயிர‌ம் லிட்ட‌ர் தான் ச‌ப்ளை செய்கிறோம் என்று கூறுகிறீர்க‌ள் இதிலிருந்து தெரிகிற‌து இதில் முறைகேடு ந‌டைபெறுகிற‌து .

க‌வுசில‌ர் ஜெய‌பிர‌காஷ்:
கீழ‌க்கரை முழுவ‌தும் த‌ற்போது மீண்டும் டெங்கு ப‌ர‌வுகிற‌து.10வ‌து வார்டில் ஒரு க‌ல்லூரி மாண‌வி உயிர‌ழ்ந்துள்ளார்.கொசு ம‌ருந்து அடிப்ப‌தில்லை சுகாதார‌ ஆய்வாள‌ரிட‌ம் கேட்ட‌ல் உங்க‌ள் விருப்ப‌திற்கு அடிக்க‌ முடியாது என்று கூறுகிறார்.கொசு ம‌ருந்து வாங்கிய‌திலும் ஊழ‌ல் ந‌டைபெற்றுள்ள‌து .இது குறித்து க‌மிஷ‌ன‌ர்  விசாரிக்க‌ வேண்டும்.காட்சி பொருளாக‌ இருக்கும் கொசும‌ருந்து தெள்ப்பாணை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.

க‌வுன்சில‌ர் ஹாஜா நஜ்முதீன் : நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி டென்டர் விடப்பட்டு பணிஆனை வழங்கப்பட்ட பல பணிகள் நடைபெறவில்லை. அதனை உடனடியாக தொடங்க வேண்டும்.


க‌வுன்சில‌ர் ஜரினா பேகம்: எனது வார்டு பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து நோய்கள் பரவி வருகிறது. கடந்த 4மாதங்களாக கொசு மருந்து அடிக்க வரவில்லை.
க‌மிஷ‌ன‌ர்: இது குறித்து ந‌ட‌வடிக்கை எடுக்க‌ப்படும்.

க‌வுன்சில‌ர் சுரேஷ்: பேருந்து நிலைய‌த்தில் மின்க‌ட்ட‌ண‌ அலுவ‌க‌ க‌ட்டிட‌ ப‌ணிக‌ள் நிறைவ‌டைந்து ஒரு ஆண்டு ஆகி விட்ட‌து.இது வ‌ரை செய‌ல்ப‌டுத்தது ஏன்?

க‌மிஷ‌ன‌ர்: மின்கட்டணம் வசூல்மையம் செயல்படுத்துவதில் மின்வாரியத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக வலியுறுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில்,கீழக்கரையில் 9லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் லாரி,டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மலேரியா தடுப்புமையம் பின்புறம் உள்ள கட்டிடத்தை மராமத்து செய்து அங்கன்வாடி மையமாக மாற்றவும்,முத்துசாமிபுரம்,பெத்தேரி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை மராமத்து செய்யவும் ரூ.13லட்சம் அனுமதிக்கப்பட்டது.

மேலும் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் க‌ண்காணிப்பு கேம‌ராக்க‌ள்,நகர்மன்றம் கட்டிட மேல் பகுதியில் சூரியஒளி மின்சார கூரை அமைப்பது போன்ற 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திரும‌ண‌ அழைப்பித‌ழ்!


எல்லாம் வ‌ல்ல இறைவ‌னின் அருளால் ம‌ண‌ம‌க்க‌ள் எல்லா வ‌ள‌மும் பெற்று சிற‌ப்புற்று வாழ‌ உங்க‌ள் அனைவ‌ருட‌ன் இணைந்து கீழ‌க்க‌ரைடைம்ஸ் இணைய‌த‌ள‌ம் சார்பாக‌ வாழ்த்துக்க‌ள்

Wednesday, May 29, 2013

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா !




விழாவுக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். கல் லூரி தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சென்னை ஏ.ஜே பொறியி யல் கல்லூரி டீன் ஹசன் சேக், முகம்மது சதக் கபீர் மெடிக்கல் சென்டர் இயக்குநர் ஹாமீது முன்னிலை வகித்தனர்.

 மத்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் சென்னையில் இயங்கும் பாரதிய வித்யூத் நிகாம் லிமிடெட் இயக்குநர் பிரபாத் குமார் 553 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மீனாட்சிசுந்தரம், மக்கள்தொடர்பு அலுவலர் நஜிமுதீன், துறை தலைவர் சேக்யூசுப் செய்தனர்.

Tuesday, May 28, 2013

கீழ‌க்க‌ரையில் வ‌ழிப்ப‌றி! ஏர்வாடியை சேர்ந்த‌வ‌ர் கைது!

கீழக்கரையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக‌ வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.

கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வ‌சிப்ப‌வ‌ர் நகுலன். இவரது மகன் தீபன்(30). மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். விஏஓ அலுவலகம் அருகே சென்றபோது ஏர்வாடி தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் மக்ரிப்தீன் தீபனை வழிமறித்து அவரிடம் ரூ.500, செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக‌ போலீசில் தீபன் புகார் கொடுத்தார்.

இதனடிப்படையில் கீழக்கரை போலீசார் மக்ரிப்தீனை கைது செய்தனர். விசாரணையில் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் மக்ரிப்தீனை(32) கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் நகை, 5 ஜோடி வெள்ளி கொலுசு, 3 வெள்ளிக்கொடி, ரூ.37ஆயிரத்தை மீட்ட‌தாக‌ போலீஸ் த‌ர‌ப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஏர்வாடி அருகே வேன் விப‌த்தில் 2பேர் ப‌லி! 19பேர் காய‌ம்!



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து டிரைவர் உள்ளிட்ட இருவர் பலியாகினர்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு சுற்றுலா வேனில் நான்கு குழந்தைகள் உள்பட 22 பேர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.கொல்லத்தை சேர்ந்த மோகன பிள்ளை (வயது 51) வேனை ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஏர்வாடி அடுத்த இதம்பாடல் செக் போஸ்ட் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது இதனால் வேன் நிலை குலைந்து பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.வேனுக்குள் தூங்கி கொண்டு இருந்த பயணிகள் அலறினர்.இருள் சூழ்ந்த நிலையில் பயணிகள் வேன் கண்ணாடியை உடைத்து காயங்களுடன் வெளியே வந்தனர்.

இதில் வேன் டிரைவர் மோகன பிள்ளை சம்பவ இடத்தில் இறந்தார். வேனில் பயணம் செய்த கோபிநாதர் (வயது 52) மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.ஒரு குழந்தை உட்பட 19 பேர் படுகாயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.ஏர்வாடி இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்


 

கீழ‌க்க‌ரை-‍ ராம‌நாத‌புர‌ம் சாலையில் பைக் விப‌த்து !வாலிப‌ர் ப‌லி!




ராம‌நாத‌புர‌ம் வ‌ட‌க்குத்தெருவை சேர்ந்த‌ க‌ள‌ஞ்சிய‌ம் ம‌க‌ன் சோனி என்ற‌ செல்வ‌ராஜ்(22) கீழ‌க்க‌ரையில் எல‌க்ட்ரிக் ப‌ணி செய்து விட்டு டூவீல‌ரில் செல்லும் போது எதிர்பார‌த‌வித‌மாக‌ பைக் ம‌ர‌த்தில் மோதி த‌லையில் ப‌ல‌த்த‌ காய‌ம‌டைந்து ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே ப‌லியானார்.இது குறித்து கீழ‌க்க‌ரை காவ‌ல்துறையின‌ர் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து பிரேத‌ ப‌ரிசோத‌னைக்கு ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பி வைத்த‌ன‌ர்

Monday, May 27, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் ஊழ‌ல்,முறைகேடு நில‌வுவ‌தாக‌ குற்ற‌ச்சாட்டு!31ம் தேதி ஆலோச‌னை கூட்ட‌த்திற்கு க‌வுன்சில‌ர் அழைப்பு!



க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் நில‌வும் சூழ்நிலை குறித்து
வ‌ரும் 31 05 2013ல் வெள்ளிக்கிழ‌மை மாலை 4 30 ம‌ணிய‌ள‌வில் நடைபெற‌ உள்ள‌ ஆலோச‌னை கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ கீழ‌க்க‌ரை‌யில் உள்ள‌ அனைத்து அமைப்ப‌க‌ளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் விப‌ர‌ம் நோட்டீஸில் காண‌லாம்

 

கீழ‌க்க‌ரை ச‌முக‌ ந‌ல‌ அமைப்பான‌ நாஸா சார்பில் கோடைகால‌ ப‌யிற்சி முகாம்!ஏராள‌மான‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன் பெற்ற‌ன‌ர்!




கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குத்தெரு ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பான‌ நாஸா சார்பில் அல்ம‌த்ர‌ஸ‌த்துல் முக‌ம்ம‌தியா ந‌ட‌த்திய‌ இஸ்லாமியா ப‌யிற்சி முகாம் நிறைவு விழா முகைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி வ‌ளாக‌த்த்தில் ந‌டைபெற்ற‌து.
வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத் துணை தலைவ‌ர்  அக‌ம‌து மிர்ஷா த‌லைமை வ‌கித்தார்.செய‌லாள‌ர் முகைதீன் இப்ராகிம்,உத‌வி செய‌லாள‌ர் ச‌காப்தீன்,க‌ல்விக்குழு த‌லைவ‌ர் ம‌வுலா முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

அக‌ம‌து ஹீசைன் ஆசிப் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.இதில் 5 வ‌ய‌து முத‌ல் 8 வ‌ரையும் ,9 வ‌ய‌து முத‌ல் 13 வ‌ரையும்,14 வ‌ய‌து முத‌ல் 19வ‌ரை ஆக‌ மூன்று பிரிவாக‌ மாணவ‌ர்க‌ளுக்கு கோடை கால‌ இஸ்லாமிய‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் ந‌டைபெற்ற‌து. இதில் திருக்குரான் ம‌ன‌ன‌ம்,தொழுகை ப‌யிற்சி,ஹ‌தீஸ்,அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ள்,போன்ற‌ ப‌யிற்சிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌.

நிறைவு விழாவில் போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.ப‌யிற்சி முகாமில் இமாம்க‌ள் முஹ‌ம்ம‌து த‌வ்ஹீத்,அக‌ர‌ம்,நஃரான்,ஆசிப்,ஆகியோர் மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிய‌ளித்த‌ன‌ர்.இதில் வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத்தார்கள் உள்ப‌ட‌ ஏர‌ள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்.
கீழ‌க்க‌ரை ச‌முக‌ ந‌ல‌ அமைப்பான‌ நாஸா சார்பில் கோடைகால‌ ப‌யிற்சி முகாம்!ஏராள‌மான‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன் பெற்ற‌ன‌ர்!.
 

Sunday, May 26, 2013

கீழக்கரையில் அப்பாவிக‌ள் மீது கொலை வ‌ழ‌க்கு! வ‌ழ‌க்கை சிபிசிஐடியிட‌ம் ஒப்ப‌டைக்க‌ வேண்டும்! இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் த‌லைவ‌ர் எஸ்.எம்.பாக்கர் கோரிக்கை!


 photo:onlinesengishkan.com

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் பாக்கர்
ராமநாதபுரத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிர்வாகம் சீர்கேடாக உள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. சமீபத்தில் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான்புகாரியை, தமிழக போலீஸ் கைது செய்து, கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தது.

அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் அவர் நடத்தி வருகிறார். இவருடன் சேர்ந்து சில அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.

மரக்காணம் கலவரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு இதை கையில் எடுத்து போலீசாரே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

 இன்ஸ்பெக்ட‌ர் க‌னேஷ‌ன்                          டி.எஸ்.பி.சோம‌ சேக‌ர் 
 
 கீழக்கரையில் ஜானகிராமன் என்ற டிரைவர் தற்கொலை செய்ததை, கொலை வழக்காக மாற்றி அப்பாவி முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மீது பொய் வழக்கு போட்ட கீழக்கரை டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்.

ராமநாதபுரம்& கீழக்கரை ரயில் பாலத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்களை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைக்கக் கூடாது. ராமேஸ்வரம்&தூத்துக்குடி ரயில் பாதையை துரிதமாக அமைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செயலாளர் ஜாபர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஸ்ஸம்மில்ஹார் ஆகியோர் உடனிருந்தனர்

 

சேதுக்க‌ரையிலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குடிநீர்!பைப்லைன்க‌ளை சீர‌மைக்க‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ந‌ட‌வ‌டிக்கை!


 சேத‌ம‌டைந்துள்ள‌ குடிநீர் பைப்லைன்க‌ளை சீர‌மைக்கும் ப‌ணியை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் நேரில் பார்வையிட்டார்

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி முக்கொம்பு முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து ரூ.680 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடி நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீராதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கான கிணறுகளில் தண்ணீர் இருப்பு பல அடிகளுக்கு கீழே சென்று விட்டது. இதனால் குடிநீர் திட்டத்துக்கு தேவையான தண்ணீரை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தின் தேவையை உணர்ந்து அரசு உத்தரவுப்படி முத்தரசநல்லூர் பகுதியில் புதிதாக குடிநீர் கிணறுகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஏற்கனவே நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக கிணறுகள் தோண்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேவையான அளவு தண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் குழாய் வரும் பாதைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கமாக சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைந்து விட்டது.

குறிப்பாக கீழக்கரையில் காவிரி குடிநீர் திட்டத்துக்கு மாற்றாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சேதுக்கரை குடிநீர் திட்டத்தை மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேதுக்கரை பகுதியில் கீழக்கரை தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள கிணறுகளில் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்க நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அமைக்க‌ப்ப‌ட்ட‌ பைப் லைன்க‌ள் ஆங்காங்கே சேத‌ம‌டைந்துள்ள‌தால் சேதுக்க‌ரையிலிருந்து  கீழ‌க்க‌ரையில் உள்ள‌ குடிநீர் தொட்டிக்கு  குடி நீர்  வ‌ந்து சேருவ‌தில் இடைஞ்ச‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து அவ‌ற்றை சீர‌மைத்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் முடிவு செய்ய‌ப்ப‌ட்டு‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா உடைப்பு ஏற‌ப‌ட்டுள்ள‌  ப‌குதிக‌ளை நேரில் பார்வையிட்டார்

இது குறித்து நக‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,

ஏற்கென‌வே மால‌க்குண்டுவிலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குடிநீர் ச‌ப்ளை சேய்ய‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து .த‌ற்போது சேதுக்க‌ர‌யிலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குடிநீர் கிடைக்கும் வ‌ண்ண‌ம் ஏற்பாடுக‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. சேதுக்க‌ரையிலிருந்து கீழ‌க்க‌ரைக்கு அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து குடி நீர் பைப்லைன்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் சேத‌ம‌டைந்துள்ள‌தால் அவை ச‌ரி செய்ய‌ப்ப‌ப‌ட்டு.அனைத்து  ப‌ணிக‌ளும் சீர‌மைக்க‌ப்ப‌ட்டு சேதுக்க‌ரையில் கீழ‌க்க‌ரை நக‌ராட்சி சார்பில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ குடிநீர் கிண‌றுக‌ளிலிருந்து விரைவில் கீழ‌க்க‌ரைக்கு குடிநீர் ச‌ப்ளை தொட‌ங்க‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை அருகே த‌ர‌ம‌ற்ற‌ சாலை என‌ புகார்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ ப‌ணிக‌ளை நேரில் ஆய்வு!



கீழ‌க்க‌ரை அருகே உள்ள மாயாகுள‌ம் ஊராட்சியில் கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரை சாலையிலிருந்து மாயாகுள‌ம் ஊருக்குள் 1 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 2012‍ 2013 ஆண்டிற்கான‌ தாய்திட்ட‌த்தில் சுமார் 14 ல‌ட்ச‌ம் செல‌வில் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் சாலை த‌ர‌ம‌ற்று இருப்ப‌தாக‌ கிராம‌ ம‌க்க‌ள் ஜ‌வாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவிட‌ம் புகார் தெரிவித்த‌ன‌ர்.
இத‌னை தொட‌ர்ந்து ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ இப்ப‌ணியை நேரில் ஆய்வு செய்து அதிகாரிக‌ளிட‌ம் ப‌ணிக‌ள் த‌ர‌ம‌ற்று இருப்ப‌தாக‌ கூறி த‌ரமாக‌ அமைத்து த‌ர‌ அறிவுறுத்தினார்.

மேலும் ஜ‌மாத்தார்க‌ள் உள்ளிட்ட‌ கிராம‌ ம‌க்க‌ள் எம்.எல்.ஏவிட‌ம் ,மாயாகுள‌ம் ஜமாத்தார்க‌ள் நிர்வாக‌த்தின் கீழ்  அர‌சின் உத‌விபெற்று செய‌ல்ப‌ட்டு வ‌ரும் 60 ஆணுக‌ள் ப‌ழ‌மையான் நேருஜி துவ‌க்க‌ ப‌ள்ளியின்  க‌ட்டிட‌ம் மிக‌வும் ப‌ழுத‌டைந்து நிலையில் உள்ள‌தாக‌வும் அதை ச‌ரி செய்ய‌வும்,மேலும் கூடுத‌ல‌ வ‌குப்பறைக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கு ப‌ள்ளிக்கென்று கூடுத‌ல் இட‌ம் வாங்கியுள்ள‌தாக‌வும் அதில் க‌ட்ட‌ட‌ம் க‌ட்டுவ‌த‌ற்கு அர‌சிட‌ம் நிதி பெற்று த‌ர‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுத்தன‌ர்.

 

Friday, May 24, 2013

கீழ‌க்க‌ரையில் பெண்ணை கேலி செய்த‌தாக‌ ஒருவ‌ர் கைது!


கீழக்கரையில் இளம்பெண்ணை கேலி செய்ததாக‌ புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கோகிலா(24). அப்பகுதியில் உள்ள கடை க்கு சென்று கொண்டிருந்த இவரை, கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌  முகமது ஹமீது(26) மற்றும்  ஜமீல் ஆகியோர் டூவீலரில் வந்து வழிமறித்து கேலி செய்த‌தாக‌  கோகிலா கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இத‌ன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹமீதை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜமீலை தேடி வருகின்றனர்

மீன் பிடி த‌டை கால‌ம்!கீழ‌க்க‌ரை அருகே ப‌ட‌குக‌ள் ப‌ழுது நீக்கும் ப‌ணி தீவிர‌ம்!



மீன்பிடி தடைக்காலத்தில் பழுது பார்ப்பதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் சின்னஏர்வாடி கடற்கரை படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிழக்கு கடற் கரை பகுதிகளில் மீன் இனப் பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் மே 30 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. அதனால் விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் விசைப்படகுகளில் மீன்பிடிப்பது அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் நாட்டுப்படகுகள், வல்லங்கள், கட்டுமரங்களில் மீன்பிடிப்பு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றன.

தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய ஏப்ரல் 15 முதலே பட கு களை பழுது பார்க்க தொடங்கிவிட்டனர். மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளை கரை யில் ஏற்றி பழுதுபார்க்கும் படகு தளம் உள்ளது. மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பெரியபட்டினம், கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் பட குகளை பழுதுபார்க்கும் தளம் இல்லை.
இந்த கடற்கரை பகுதி யில் ஏர்வாடி அருகே சின்னஏர்வாடி படகு தளத்தை விட்டால் தூத்துக்குடி சென்றால்தான் படகுகளை சரி செய்ய முடியும்.

அதனால் கீழக்கரை, பெரியபட்டினம், ஏர்வாடி, வாலிநோக்கம், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகுகள் சின்ன ஏர்வாடி படகு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுதுபார்க்கப்படுகின்றன.
இங்கு ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்க இடம் உள்ளது. அதனால் இரண்டு மாவட்ட விசைப்படகுகளும் சின்னஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வர 20க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் கரையில் இழுத்து வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

இதையடுத்து அந்த படகில் மர வேலைகள், இன்ஜின் பழுது, கடைசல் வேலைகள், மெக்கானிக் வேலைகள் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்படுகிறது. அதனால் சின்னஏர்வாடி கடற்கரை ஏப்.15 முதல் பிசியாகி உள்ளது. இங்கு எந்நேரமும் கார்பெண்டர்கள், பெயிண்டர்கள், மெக்கானிக்குகள் வேலை செய்த வண்ணம் உள்ளனர்.
ஒரு படகிற்கு குறைந்தது. ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பழுது பார்க்கும் பணிகளுக்கு செலவாகிறது. இந்த 45 நாட்களில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி ஆட்கள், கார்பெண்டர்கள், மெக்கானிக்குகள், லேத் வேலை செய்பவர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதனால் கூலியும் கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது. மீன்பிடி தடைகாலம் இன்னும் ஒரு வாரமே உள்ளதால் படகுகளை சரிபார்க்கும், பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மீனவர் குமார் கூறுகையில், ‘சின்னஏர்வாடி கடற்கரை பட குகளை ஏற்றி வேலை செய்ய வசதியாக உள்ள தால் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட படகுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. மீன்பிடித் தடை காலத்தில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி தொழிலாளர்கள், கார்பெண்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. கூலி யும் கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது’ என்றார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடுக‌ள் தொட‌ர்ந்தால் முற்றுகை போராட்ட‌ம்! எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் பேட்டி!















சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தார், உலமாக்கள் மற்றும் பொதுக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழக்கரையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக், தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மாவட்டச் செயலர் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில பொதுச் செயலர் அப்துல் ஹமீது வரவேற்றார், மாவட்ட செயலாளர் அப்துல்ஜமீல், செயற்குழு உறுப்பினர் அப்துல்வஹாப், மற்றும் முகமது இஸ்ஹாக், கனி, செய்யது ஹாலித், முஜிபுர் ரஹ் மான் உள்பட பலர் பேசினர், நகர் துணைத்தலைவர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்,
க‌ட‌ல்சார் தொழிலில் ஈடுப‌ட்டு வ‌ரும் அட்ட‌ப்பா என்ற‌ ந‌ல்ல‌ இப்ராஹிம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் எஸ்டிபிஐயில் இணைந்த‌ன‌ர்

மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:

கீழக்கரை நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது. முறைகேடுகள் தொடருமானால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் விரைவில் நடத்தப்படும்.

 திமுக ஆட்சியில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவித்ததை தற்போதைய அரசு பரிசீலனை செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். தென் தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டப்பணிகளை நிறுத்த தமிழக அரசு மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். இல்லாவிடில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிடும். இவ் வாறு கூறினார். ஏற்பாடுகளை அஸ்வத்துல் கரீம், அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

Wednesday, May 22, 2013

கீழ‌க்கரை மீன‌வ‌ர் கூட்டுற‌வு ச‌ங்க‌ புதிய‌ அலுவ‌ல‌க‌ திறப்பு விழா!


கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் விழாவுக்கு தலைமை வகித்து, அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார், சங்கத் தலைவர் லுக்மான் ஹக்கீம் வரவேற்றார். துணைத்தலைவர் அக்பர் அலி முன்னிலை வகித்தார், விழாவில் இயக்குநர்கள் முகம்மது அலி, முகம்மது அலியார், செய்யது அகமது கபீர் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்
 

கீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் ப‌யிற்சி மைய‌ம் அமைக்க‌ கோரிக்கை!



பைல்(ப‌ழைய‌ ப‌ட‌ம்) கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ ஜெட்டி பால‌த்திலிருந்து க‌ட‌லில் குதிக்கும் சிறுவ‌ர்க‌ள்

ராம‌நாத‌புர‌ மாவ‌ட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை க‌ல்வி ந‌க‌ர‌மாக‌ உருவாகி வ‌ருகிற‌து.ப‌ல்வேறு ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்காண‌ மாண‌வ‌ ,மாண‌விக‌ள் ப‌டித்து வ‌ருகின்றன‌ர்.

மாணவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌  அனைவ‌ரும் ப‌ய‌ன் பெறும் வ‌கையில்
க‌ட‌லோர‌ ந‌க‌ர‌மான‌ கீழ‌க்க‌ரையில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் பயிற்சி மைய‌ம் அமைக்க‌ விளையாட்டு மேம்பாட்டு ஆணைய‌ம்  முன்வ‌ர‌ வேண்டும் என‌கோரிக்கை எழுந்துள்ள‌து.இத‌ன் மூல‌ம் ஏராள‌மான‌ நீச்ச‌ல் வீர‌ர்க‌ள் இப்ப‌குதியில் உருவாவார்க‌ள்.

இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
 
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்ச‌ல் ப‌யிற்சி ஒவ்வொருவ‌ருக்கும் அவ‌சிய‌ம் தேவை முன்பெல்லாம் ஏராள‌மான‌ குள‌ங்க‌ள் ந‌க‌ரில் இருந்தது .இதில்  சிறுவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு தெரிந்தவ‌ர்க‌ள் மூல‌ம் ப‌யிற்சி பெறுவார்க‌ள்.த‌ற்போது குளங்க‌ளே இல்லை என்ற‌ நிலை வ‌ந்து விட்ட‌து.ஆர்வ‌முள்ள‌ சிறுவ‌ர்க‌ள் க‌ட‌ற்க‌ரை சென்று நீச்ச‌ல் ப‌ழ‌குகின்ற‌ன‌ர்.முறையான‌ ப‌யிற்சியாள‌ர்க‌ள் இல்லாம‌ல் க‌ட‌லில் நீச்ச‌ல் ப‌ழ‌குவ‌து சிறுவ‌ர்க‌ளுக்கு பாதுகாப்பான‌து அல்ல‌.கீழ‌க்க‌ரையில் க‌ல்வி ப‌யிலும்  ஆயிர‌க்கண‌க்கான‌ மாண‌வ‌ர்க‌ளும்  நீச்ச்ல் ப‌யிசி பெறுவார்க‌ள்.

என‌வே ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ உள்ளிட்ட‌ ம‌க்க‌ள்  பிர‌திநிதிக‌ள்  அர‌சை வ‌லியுறுத்தி  கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அர‌சாங்க‌ம் நீச்ச‌ல் ப‌யிற்சி மைய‌ம் அமைக்க‌ நிதிக‌ளை பெற்று த‌ர‌ வேண்டும்.கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌மும் உரிய‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌த்திற்கு எடுத்து செல்ல‌வேண்டும் என்றார்

 

Tuesday, May 21, 2013

கீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைக்கும் திட்ட‌த்தை விரைவாக‌ செய‌ல்ப‌டுத்த‌ கோரிக்கை!




கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.சிறுவ‌ர் சிறுமிய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ பொதுமக்க‌ளுக்கு பய‌ன்ப‌டும் வ‌கையில் அர‌சு சார்பில் பூங்கா கீழ‌க்க‌ரையில் இல்லை .கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ப‌ல்லாண்டுக‌ளாக‌ இருந்து வ‌ருகிற‌து.


 புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க ஏராள‌மான‌ மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்ப‌ற்ற‌ நிலையில் (ஜெட்டி)கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர்.


பால‌ம் அமைந்துள்ள கடற்க‌ரை ப‌குதியில் காலி இட‌ம் உள்ள‌து அந்த‌ இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற‌ கோரிக்கை எழுந்த‌து. இதுகுறித்து ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ளும் கோரிக்கை விடுத்த‌ன‌ர் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டும் என‌ அறிவித்து சென்னையில் அமைச்ச‌ரை கோகுல் இந்திராவை ச‌ந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அர‌சு சார்பில் இத‌ற‌கான‌ ஆய்வு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு இத‌ற்கான‌ இட‌மும் தேர்வு செய்ய‌ப்ப‌டும் என்றும் அருகில் உள்ள‌ இட‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ள‌ ந‌க‌ராட்சி சார்பில் மீன் வ‌ள‌த்துறையிட‌ம் அனும‌தி கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ என்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ஆனால் மாத‌ங்க‌ள் க‌டந்து விட்ட‌து இத‌ற்கான‌ ப‌ணிக‌ள் எதுவும் துவ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.என‌வே துரித‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிகை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ நெய்னார் கூறுகையில்,
ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை துரித‌ப்ப‌டுத்தி பூங்கா அமைப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும்  க‌ட‌ற்க‌ரையோர‌ம் காலி இட‌த்தில் பொதும‌க்க‌ள் அம‌ரும் வ‌கையில் சேர்க‌ள் அமைப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ப் கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்ட‌து .த‌ற்காக‌லிக‌மாக‌ இதை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் செய்து த‌ர‌ வேண்டும்.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப‌ட்டு பூங்கா அமையுமானால் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ரின்  சாத‌னை நிக‌ழ்வாக‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிலைபெறும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்து க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது ,


பூங்கா அமைப்ப‌த‌ற்கு தேவையான‌ இட‌ம் கைய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.தொட‌ர்ந்து இத‌ற்கான‌ முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ ப‌ட்டு வ‌ருகிறது.த‌னியாரின் இட‌மும் அப்ப‌குதியில் உள்ள‌தால் பேச்சுவார்த்தை ந‌டைபெற்று வ‌ருகிறது.இட‌ம் கைய‌க‌ப‌டுத்தும் ப‌ணி நிறைவ‌டைந்த‌வும் க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைப்ப‌த‌ற்கு தேவையான‌  ப‌ணிக‌ள் துவ‌ங்க‌ம் என்றார்.

 

எஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்க‌ரையில் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!மாநில‌ த‌லைவ‌ர் தெஹ்லான் பாக‌வி க‌ல‌ந்து கொண்டார்.




கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ந்த‌ எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி த‌லைமையில் ப‌ல்வேறு தர‌ப்பின‌ரும் ப‌ங்கு பெற்ற‌ ச‌மூக‌ ந‌ல‌ன் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்சசி கீழ‌க்க‌ரை ஹுசைனியா ம‌ஹாலில் ந‌டைபெற்ற‌து.இந்நிகழ்ச்சியில் திமுக‌ ந‌க‌ர் செய‌லாள‌ர் ப‌சீர்,எஸ்டிபிஐ நிர்வாகிக‌ள் மாநில‌ செய‌லாள‌ர் அப்துல் ஹ‌மீது,நிர்வாகிக‌ள் பெரிய‌ப‌டடிண‌ம் பிரோஸ்கான்,கீழ‌க்க‌ரை அப்பாஸ் ஆலிம்,ம‌ற்றும் முஜீப்,க‌ரீம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்.

மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி  த‌லைமையில் நிர்வாகிக‌ள் உள்ளிட்டோர் கீழ‌க்க‌ரையில் ஹச்.எஸ்.அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பிர‌முக‌ர்க‌ளையும் நேரில் ச‌ந்தித்த‌ன‌ர்.

மேலும் ஏராள‌மானோர் ப‌ல்வேறு கட்சிக‌ளிலிருந்து வில‌கி எஸ்டிபிஐயில் மாநில‌ த‌லைவ‌ர் முன்னிலையில் சேர்ந்த‌ன‌ர்.

\செய்தி : முஜீப்

Monday, May 20, 2013

கீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ சேத‌ம‌டைந்த‌ மின்க‌ம்ப‌ங்க‌ள்!ஆப‌த்து ஏற்ப‌டும் முன் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் வேண்டுகோள்!


முற்றிலும் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பம்.

கீழ‌க்க‌ரையில் மின்சார‌த்துறைக்கு ரூ 5 கோடி ஒதுக்க‌ப்ப‌ட்டு ப‌ல்வேறு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ உள்ள‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ஆனால் இன்னும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌ழ‌மையான‌ மின் க‌ம்ப‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌டாம‌ல் சேத‌ம‌டைந்த‌ நிலையில் உள்ள‌ன‌.இத‌னால் பெரும் ஆப‌த்து ஏற்ப‌டும் முன் மின்சார‌த்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்!

இந்நிலையில் கீழக்கரை மேலத்தெரு மணியார்வெட்டையிலிருந்து பன்னாட்டு தெருவிற்கு செல்லும் வழியில் இரும்பினால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட இந்த இரும்பு கம்பம் தற்போது அடிப்பகுதியில் முழுவதும் அரிக்கப்பட்டு, எப்போதும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆபத்தை அறிந்து கொள்ளாமல் இந்த மின் கம்பத்தின் அருகே குழந்தைகள் விளையாடுகின்றன. மக்கள் நடமாட் டம் அதிகம் உள்ள அந்த தெருவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

சேதமடைந்த இந்த மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக் கள் கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மின் வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலத்தெருவை சேர்ந்த முகம்மது கூறுகையில், இந்த இரும்பு மின்கம்பம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் அரிக்கப்பட்டுள்ளதால் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் இந்த கம்பத்தில் கை வைத்தால் ஷாக் அடிக்கிறது. இந்த கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இது போன்று கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளிலுள்ள‌ பழைய‌ மின்க‌ம்ப‌ங்க‌ளை மாற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரிக்கை எழுந்துள்ள‌து.
 

Sunday, May 19, 2013

கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ தீவுகளுக்கு‌ க‌ண்ணாடி இழை ப‌ட‌குக‌ள் இய‌க்க‌ கோரிக்கை!




 மன்னார் வளைகுடாவில்  சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்  முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன.

இதில் பூவ‌ர‌ச‌ன் ப‌ட்டி தீவு நீரில் முழ்கி விட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. அரிய‌ க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ள் வாழும் ப‌குதியாக‌ அறிய‌ப்ப‌ட்ட்ட‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதி தீவுக‌ள் மன்னார்வளைகுடாவில் உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர்  தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டுள்ள‌ன‌ர்.

 இந்நிலையில் கீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் சுற்றுலா பயணிக‌ளை ஈர்க்கும் வ‌கையில் தீவுக‌ளைக‌ளையும்,ப‌வ‌ள‌பாறைக‌ளையும் பொதும‌க்க‌ள் க‌ண்டு வ‌ரக‌ண்ணாடி இழை ப‌‌ட‌குகளை அர‌சு இய‌க்க கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து காங்கிர‌ஸ் பிர‌முக‌ர் ஹ‌ச‌னுதீன் கூறிய‌தாவ‌து,

கீழக்கரை க‌ட‌ல் பகுதியில் உள்ள அப்பா தீவு 28.63-ஹெக்டேர் நிலப்பரப்பிலும், நல்ல தண்ணீர் தீவு 110 ஹெக்டேர் நிலப் பரப்பிலும் அமைந்துள்ள‌து. மேலும் சில‌ தீவுக‌ள் உள்ள‌ன‌.கண்ணாடி இழையுடன் கூடிய படகுகளை பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால் கடலுக்கு அடியில் வாழும் அபூர்வ உயிரினங்களை கண்டு களிக்க முடியும் கரையோரங்களில் உள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமையும். மேலும் கடல் சார்ந்த சுற்றுலா தளமாக்க அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது.இந்த தீவுகளை கண்டு களிக்கும் வகையில் படகு போக்குவரத்து நடத்தப்பட்டால் , சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். கட‌ல் வ‌ள‌த்தை,மீன் பிடி தொழிலையும் பாதிக்காத‌ வ‌கையில் சில‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்து சுற்றுலா பய‌ணிக‌ளை அழைத்து செல்லும் வ‌கையில் க‌ண்ணாடி இழை ப‌ட‌குக‌ளை இய‌க்க‌லாம்.இத‌னமூல‌ம் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ தீவுக‌ள் செல்வ‌தும் குறைந்து விடும்.

Saturday, May 18, 2013

குடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு கிண‌றுக‌ள் தூர் வாரும் ப‌ணி!



கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காணும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணறு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கீழக்கரையில் காவிரி நீர் முழுமையான அளவு சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்க‌ பெறும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். போதியளவு குடிநீர் கிடைக்காததால் மாட்டுவ‌ண்டி ம‌ற்றும் லாரி நீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.இந்நிலையில் ந‌க‌ராட்சி சார்பில் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாகனங்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
 நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது;
மாலாக்குண்டுவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுளுக்கு மேலாக‌  பராமரிப்பு இல்லாமல் இருந்த வந்தது.மக்களுக்கு கூடுதலாக குடி நீர் வழங்கும் வகையில் மூன்று கிணறுகளும் தற்போது தூர் வாரப்படுகிறது.கிணறுநீரை குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களது ஒப்புதல் கிடைத்ததும், தலைமை நீரேற்று நிலையத்திற்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் தினமும் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது சுழற்சிமுறையில் அனைத்து வார்டு
களுக்கும் லாரி மற்றும் டிராக்டர்களில் இலவசமாக நாள்தோறும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.லாரி செல்ல முடியாத பகுதிகளுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்படுவதால் குடி த‌ட்டுப்பாடு ஓர‌ள‌வு குறைந்துள்ள‌து என்றார்.

 

Friday, May 17, 2013

கீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீர் க‌ல‌ந்து அசுத்த‌ம்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!






கீழ‌க்க‌ரை தெற்குதெரு ப‌குதியில் சில‌ வீடுக‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கிண‌றுக‌ளில் கிடைக்கும் நீரில் சாக்க‌டை க‌லந்து வ‌ருவ‌தால் கிண‌ற்று நீரை ப‌ய‌ன்ப‌டுத்‌த‌ முடியாத‌ அபாய‌ சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து. உட‌ன‌டியாக‌ இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

18 வது வார்டு பகுதியில் 18/ 148 வது நம்பர் வீட்டிலும் ,அது போல 18/225 எண் கொண்ட‌ வீட்டிலும் இன்னும் சில‌ வீடுக‌ளிலும் இது போன்ற‌ சூழ்நிலை நில‌வுவ‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர். இது குறித்து அவ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து இப்பகுதியில் கிணறுகளில், தண்ணீர் சாக்கடை நீராக மாறி வருகிறது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. தினந்தோறும் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீடுக‌ளில் பயன்படுத்தி வந்த கிணற்று நீர், சாக்கடை நீராக மாறி  எத‌ற்கும் பயன்படுவதில்லை.இவ்வ‌ழியாக‌ செல்லும் க‌ழிவுநீர் கால்வாயில் குப்பைக‌ள் நிறைந்து நீண்ட‌ கால‌மாக‌ க‌ழிவு நீர் தேங்கி நிற்ப‌தால் இப்ப‌குதியில் கிண‌றுக‌ளில் சாக்க‌டை ‌கல‌ந்திருக்க‌லாம்.இப்பிர‌ச்சனையிலிருந்து ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் எங்க‌ளை காப்பாற்ற‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்கள் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்  கூறிய‌தாவ‌து,

இத‌ற்கு ‌ பாதாள‌ சாக்க‌டை திட்ட‌மே நிர‌ந்த‌ர‌ தீர்வாகும்.கீழ‌க்க‌ரையில் எதிர்கால‌த்தில் பெரும்பாலான‌ கிண‌றுக‌ளில் இது போன்று சாக்க‌டை க‌ல‌க்கும் சூழ்நிலை ஏற்ப‌ட்டால் நீர் ஆதார‌மே பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம் உள்ள‌து.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.

மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம்.  விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புற‌ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும்.த‌ற்போது கீழ‌க்க‌ரையின் க‌ழிவு நீர் சுத்திக்க‌ப‌டாம‌ல் நேர‌டியாக‌ க‌ட‌லில் க‌ல‌க்கிற‌து இத‌னால் க‌ட‌ல் நீர் மாச‌டைகிற‌து.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் க‌ட‌ல் நீர் மாடைவ‌து த‌டுக்க‌ப்ப‌டும்.கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் மேம்ப‌டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவித்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

க‌ழிவு கால்வாய்க‌ளில் குப்பைக‌ளை போடாதீகள் ப‌ல‌முறை வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.குப்பைக‌ளை அதில் வீசினால் நாம்தான் பாதிக்க‌ப்ப‌வோம் என்ப‌தை வீசுப‌வ‌ர்க‌ள் ஏன் நினைப்ப‌தில்லை.குப்பைக‌ள் அக்ற்ற‌ப்ப‌ட்டு க‌ழிவு நீர் தேங்காம‌ல் இருப்ப‌த‌ற்கும் ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ப்ப‌டும் மேலும் குறிப்பிட்ட‌ விடுக‌ளில் உள்ள‌ கிண‌ற்று நீரில் சாக்க‌டை நீர் கல‌ந்து வ‌ருவ‌து எத‌னால் என்று அறிந்து உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.இது போன்ற‌ குறைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் என்ற‌ முறையில்  என்னிட‌ம் அலுவ‌ல‌க‌த்தில் தெரிவிக்கால‌ம் என்றார்





 

கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதி குப்பைக‌ளை அக‌ற்ற‌ ந‌க‌ராட்சிக்கு‌ வேண்டுகோள்!



கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதியில் குப்பைக‌ளை நிறைந்து காண‌ப்ப‌டுவ‌தால் சுகாதார‌ கேடு ஏற்ப‌டும் நிலை உள்ள‌தாக‌வும் உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் கோர்க்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து  ஆசிக் ம‌ரைக்க‌ கூறிய‌தாவ‌து,

இப்ப‌குதியில் ம‌க்க‌ள் தாங்க‌ளே ப‌ண‌ம் செல‌வ‌ழித்து சுத்த‌ம் செய்து வைத்திருந்த‌ன‌ர்.ஆனால் த‌ற்போது ந‌கராட்சி ப‌ணியாள‌ர்க‌ளே ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சேரும் குப்பைக‌ளை இப்ப‌குதியில் கொட்டி விட்டு செல்கின்ற‌ன‌ர்.இத‌னால் இப்ப‌குதியில் மீண்டும் குப்பைக‌ள் குவிந்து அசுத்த‌மாக‌ காண‌ப்ப‌டுகிற‌து.என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் மேலும் இது குப்பைக‌ளை கொட்டி விட்டு அக‌ற்றாம‌ல் செல்லும் ப‌ணியாள‌ர்க‌ளை கண்காணித்து உரிய‌ தீர்வு காண‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

Thursday, May 16, 2013

(காலமானார்கள்) வபாத் அறிவிப்பு !


கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ சேகு முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌க‌னும்,சேகு நெய்னா அவ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌னும், பி.எஸ்.எம். பதுரு ஜ‌மான் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ருமான‌ பி.எஸ்.எம் உபைதுல்லா அவ‌ர்க‌ள் வபாத்தானார்க‌ள்(கால‌மானார்க‌ள்). (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

த‌க‌வ‌ல் : ப‌ர‌க்க‌த் அலி

தொடர்பு  :- செய்யது அபு சாலிஹ் - 9944541789
 

தெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணியால் மீண்டும் சுகாதார‌ கேடு!2 நாட்க‌ளில் க‌ழிவுநீர் தொட்டிக‌ள் உடைந்த‌தாக‌ க‌வுன்சில‌ர் புகார்! ந‌ட‌வ‌டிக்கை எடுக்க கோரிக்கை!




கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் அப்ப‌குதி க‌வுன்சில‌ர் ஆனா மூனாவின் கோரிக்கையின் பேரில் கீழக்கரை நகராட்சி நிர்வாக‌ம்  அப்பகுதியில் அடைப்புக‌ளை ச‌ரி செய்து புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 4 இன்ச் அள‌வுள்ள‌ கழிவுநீர் குழாய்களை அக‌ற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் ப‌திக்க‌வும்,க‌ழிவு நீர் தொட்டிகளை சீர்‌ செய்ய‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் த‌னியார் காண்ட்ராக்ட‌ர் மூல‌ம் ப‌ணி ந‌டைபெற்ற‌து முடிந்த‌து.ஆனால் த‌ற்போது புதியதாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவு நீர் தொட்டிக‌ள் சேத‌ம‌டைந்ததால் முன்பு போல் க‌ழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிற‌து.

இது குறித்து தெற்குதெரு ஜ‌மாத் நிர்வாக‌ அலுவ‌ல‌ர் பெரிய‌ காக்கா என்ற‌ காத‌ர் கூறிய‌தாவ‌து,
த‌ற்போது மீண்டும் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் உடைந்தும்,க‌ழிவு நீர் குழாயிலிருந்து க‌ழிவு நீர் வெளியேறி தெற்கு தெரு ப‌ள்ளிவாச‌ல் அருகில் ஆறாக‌ ஓடுகிற‌து.இத‌னால் இப்ப‌குதியில் தொழுகைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள்,பெரிய‌வ‌ர்க‌ள்,குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்கு மிக‌வும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.மேலும் நோய் ப‌ர‌வும் வாய்ப்பும் ஏற்ப‌டும் என‌வே உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது க‌வுன்சில‌ர் ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முகைதீன் காத‌ர் சாகிப் கூறிய‌தாவ‌து,
ரூ 1ல‌ட்ச‌த்து 20 ஆயிர‌ம் ம‌திப்பீட்டில் இப்ப‌ணிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌ ஆனால் த‌ர‌மற்ற‌ ப‌ணியால் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் இர‌ண்டே நாட்க‌ளில் உடைந்தது.உட‌னே நான் புகார் தெரிவித்தேன் சில‌வ‌ற்றை காண்ட்ராக்ட‌ர் ச‌ரி செய்தார் ஆனாலும் ப‌ணிக‌ள் த‌ர‌மில்லாத‌தால் த‌ற்போது க‌ழிவு நீர் சாலையில் ஆறாக‌ ஓடுகிற‌து.இப்ப‌ணிக‌ளை மேற்கொண்ட‌ ஒப்ப‌ந்தார‌ரை இப்ப‌ணிக‌ளை சீர் செய்து த‌ர‌ ந‌க‌ராட்சி உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவ‌து,
இது குறித்து யாரும் த‌க‌வ‌ல் த‌ர‌வில்லை த‌ற்போது உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணிக‌ள் மேற்கொண்ட‌ காண்ட்ராக்ட‌ருக்கு ப‌ணிக‌ள் த‌ர‌மாக‌ இருந்தால் ம‌ட்டுமே அத‌ற்கான‌ முழு தொகையும் வழ‌ங்க‌ப்ப‌டும்.இல்லையெனில் இப்ப‌ணி மெற்கொண்ட‌த‌ற்காக‌ அவ‌ருக்கான‌ தொகை அளிப்ப‌து நிறுத்த‌ப்ப‌டும் என்றார்.