Thursday, October 31, 2013

"அன்பின் முகவரி" பி.எஸ்.அப்துர்ரஹ்மானுக்கு மத்திய அரசின் உயர் விருது வழங்க கோரிக்கை!

 சத்யபாமா பல்கலைகழகத்தின் மூலம் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போது
 பிஎஸ்.ஏ அப்துர்ரஹ்மான் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வருகை தந்த போது எடுத்த படம்
 தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் (பழைய படம்)
 யுஏயில் முன்னாள் பிரதமர் வருகை தந்த போது பிஎஸ்ஏ அப்துர் ரஹமான் வரவேற்ற போது எடுத்த படம் அருகில் ஈடிஏவின் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன்

 முன்னாள் ஜனாதிபதி  வெங்கட்ராமன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கீழக்கரை வருகை தந்த போது இளநீருடன் வரவேற்பு

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாள‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் 

வெளியிட்டுள்ள செய்தியில்..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின் முன்னோடியும்தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும், தயாளகுண சீலருமான சேனா ஆனா  என்று அழைக்கப்படும் வள்ளல் பி. எஸ். அப்துர்ரஹ்மான்  ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும்ரியல் எஸ்டேட், கட்டுமாணம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த .டி. அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின்  நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்து வருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,
முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர்  ,கலைஞர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.
இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.இவரின் சேவைகளுக்கு அளவில்லை. இம்மாமனிதருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கெளவரவிக்க வேண்டும்.மேலும் அவர் நல்ல உடல் நலத்துடன்  நீண்ட ஆயுளுடன் வாழ தலை வணங்கி வேண்டுகிறேன். 


எங்கள் சமூக நல நுகர்வோர் அமைப்பின் 6வது நிறைவு விழா கோரிக்கையாக பத்ம பூசன் விருது மாமனிதர் பிஎஸ்.ஏ ரஹ்மானுக்கு வழங்கவேண்டும்   என சமூக நல அமைப்பின் சார்பாக கேட்டு கொள்கிறேன.இம்மாவட்டத்தின் எம்பி எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் நல பிரநிதிகளை சந்தித்து இக்கோரிக்கை குறித்து வலியுறுத்த உள்ளோம் இவ்வாறு அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.




Wednesday, October 30, 2013

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாடிகளில் தோட்டம்! தோட்டக்கலைத்துறை ஆலோசனை!

Photo Thanks: chennai.olx

மொட்டை மாடிகளில் தோட்டம் அமைக்கலாம்
கீழக்கரை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரில் வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மரங்கள் வளர்பதற்கு வாய்ப்பில்லை. தற்போது நகருக்கு வெளியே தோட்டங்களில் உள்ள மரங்களை அழித்து வீட்டடிமனைகளாக விற்பனை செய்கின்றனர். இதனால் மழை குறைந்து நிலத்தடி நீர் இறங்கி கிணறுகள் வறண்டுவிட்டன.
கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் மொட்டை மாடி இருப்பதால் அதில் காய்கறி மற்றும் கீரைத் தோட்டம், மலர் தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறுத்து தோட்டக்கலை அலுவலர் தெரிவித்ததாவது:
மாடியில் மட்டுமல் லாது வீட்டில் எந்த இடத் தில் சூரிய ஒளி கிடைக்கிற தோ அங்கெல்லாம் காய்கறி செடிகளை வளர்க்க முடி யும். வீட்டு தோட்டத்தில் இரண்டு முறை உண்டு. நிழல்வலை குடில் அமைத்து தோட்டம் போடலாம். திறந்த வெளியில் தோட்டம் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் எளிதில் ஆவியாவது இல்லை. மேலும் பூச்சிகளும் தாக்கமுடியாது.
தோட்டகலைத்துறை விளக்கம்
மாடியில் மட்டுமல் லாது வீட்டில் எந்த இடத் தில் சூரிய ஒளி கிடைக்கிற தோ அங்கெல்லாம் காய்கறி செடிகளை வளர்க்க முடி யும். வீட்டு தோட்டத்தில் இரண்டு முறை உண்டு. நிழல்வலை குடில் அமைத்து தோட்டம் போடலாம். திறந்த வெளியில் தோட்டம் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் எளிதில் ஆவியாவது இல்லை. மேலும் பூச்சிகளும் தாக்கமுடியாது.
பொதுவாக திறந்த வெளியில் வளர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். சாதாரண பாலித்தீன் பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி வளைந்து நீர்கசிவை ஏற்படுத்தும். ஆனால் யூவி பாலித்தீன் என்ற பிரத்யேக பைகள் மூன்றாண்டுவரை தாக்கு பிடிக்கும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு தவிர மற்ற அனை த்து காய்கறிகளையும் வீட்டு மொட்டை மாடி தோட்ட த்திலேயே சாகுபடி செய்ய லாம். இதற்கு அதிகளவு இடமும் தேவையில்லை. 200 சதுர அடி இடமே போதுமானது. மாடி வீட்டு தோட்டத்தில் மறந்துகூட ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன் படுத்தக்கூடாது.
பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்க ளே தயாரிக்கலாம். அல்லது தரமான கடைகளில் வாங் கியும் பயன்படுத்தலாம். சொட்டு நீர் அமைப்பதை விடுத்து நாமே தினமும் தண்ணீர்விடும்போது நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப் படும். கூடவே மனது க்கு உற்சாகமும், நிம்மதியும் கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமை ந்து உடலுக்கு வலு சேர்க்கும்.
மாடி தோட்டம் மூலம் தினமும் 200 முதல் 300 கிராம் காய்கறிகள் பெற முடியும். மாடித்தோட்டம் அமைக்க முன்வருவோரு க்கு 50 சதவீத மானியத்தில் வீரிய ஒட்டுரக கத்தரிகாய், வெண்டைக்காய், தக்காளி மற்றும் பாகற்காய், புடலங் காய், பீக்கங்காய் போன்ற விதைகள் மற்றும் கீரை விதைகள் திருப்புலாணி மற்றும் ராமநாதபுரம் தோட்டகலை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
கலவை உரங்களுக்கு தேவையானவை செம்மண், குப்பை, தொழுஉரம், ஆட்டுஉரம், மணல். செடி வளர் ந்த பிறகு பயிர்பாதுகாப்பு மருந்தான வேப்பம் புண் ணாக்கு அல்லது சூடம் மோனாஸ் வேருக்கடியில் வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை மண்புழு உரம் அவசியம் வைக்க வேண் டும். மண்புழு உரம் ராமநாதபுரம் வேளாண் அறிவியல்துறை அலுவலகத்தில் கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது. 

தண்ணீர் கசிவு ஏற்படாத வண்ணம் மக்கிய தென்னை நார் கழிவுகளால் ஆன கிட் நான்கு செடிகள் வளர்க்கலாம்.
ராமநாதபுரம் பாரதி யார் தெரு கவிதாஜெயராமன் கூறுகையில்,
‘மாடி தோட்டத்தில் பீக்கங்காய், பாகற்காய், வெண்டைகாய் மற்றும் கீரைவகை செடிகள் அமைத்துள்ளேன். இதனால் எங்கள் வீட்டு காய்கறி தேவை பூர்த்தியாகிறது’ என்றார்.
கீழக்கரையை சேர்ந்த ராஜா என்பவர் கூறியதாவது,
கீழக்கரையில் எங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தேன்.ஆனால் நல்ல தண்ணீர் ஊற்ற வேண்டியுள்ளது.இல்லையென்றால் செடிகள் வாடி விடுகிறது.பராமரிக்க முடியவில்லை.இது குறித்து தோட்டக்கலைதுறை சந்தேகங்களை தீர்த்தால் இத்திட்டம் வளர்ச்சி பெறும் என்றார்
திருப்புல்லாணி தோட் டகலை அலுவலர் அழகே சன் கூறுகையில்,
 ‘மாடி தோட்டம் அமைப்பவர்கள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு காங்கிரீட் துருபிடித்து விடும் என்று எண்ணினால் பிளாஸ்டிக் பேப்பர் வாங்கி பைப் அருகில் விரித்து அதற்கு மேல் செடி தொட் டிகளை வைக்கலாம்.
தண்ணீர் கசிவு ஏற்படாத வண்ணம் மக்கிய தென்னை நார் கழிவுகளால் ஆன கிட் ஒன்று ரூ.100க்கு ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் விற்கப்படுகிறது. இதில் நான்கு செடிகள் வைக்கலாம்.
இதன் மூலம் ராமநதபுரத்தில் அதிகமானோர் மாடி தோட்டம் அமைத்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 00 91 80 98 275927 எண்ணில் தோட்டகலை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

கிழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டூவீலர் விபத்து!சதக் கல்லூரி மாணவர் உயிரழந்தார்!















திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்தவர் கருணாகரன், . கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார்.

 நேற்று வகுப்பு முடிந்து கல்லூரி அதே ஊரை சேர்ந்த நண்பர் பழனியுடன் டூவீலரில்(ஹெல்மேட் அணியவில்லை) திருப்புல்லாணி உப்பளம் அருகே மாலை 5 மணிக்கு வந்து கொண்டு இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு உரம் ஏற்றி சென்ற லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த கருணாகரன் பலியானார்டூவீலரை ஓட்டி வந்த பழனி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா.


கன்னியாகுமரி மாவட்டம் சீதம்பாலை சேர்ந்த லாரி டிரைவர் அருண்செல்வத்தை, திருப்புல்லாணி எஸ்.., ஜேசுதாஸ் கைது செய்தார்.

கீழக்கரை வண்ணாந்துறை வளைவு அருகே  வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை

அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறுகையில்,

இவ்வழியே செல்லும் வெளியூர் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன.பல முறை இந்த பகுதியில் விபத்து நடைபெற்று உயிரழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை ரோந்து வாகனங்கள் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் செயல் பட்டது போல் .தெரியவில்லை.எண்ணற்ற விபத்துக்கள் ஏற்பட்டு விட்டது. வேகத்தை தடுக்காத வரை  விபத்துக்கள் குறைய வாய்ப்பில்லை .மேலும் விபத்து குறித்த அறிவிப்பு பலகைகளை இப்பகுதியில்  வைக்க வேண்டும் என்றார்.





Monday, October 28, 2013

வீண் விமர்சனம் தவிர்ப்போம்!ஒற்றுமை காப்போம்! கட்டுரை: எஸ்.கே.வி சேக்


                                                   கட்டுரையாளர்: எஸ்.கே.வி.ஷேக்

இன்று  அடுத்தவர்களை பற்றி பணத்திற்காகவும், பதவிக்காவும் தன்னுடைய பெயர் முன்னிலை பெற வேண்டும் என பல காரணங்களுக்காக உலகில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிறரை வீண் விமர்சனம்  செய்பவர்கள் நாளை நாமும் அவதூறுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக போகிறாம் என்பதை உணர்வது இல்லை . வீண் விமர்சனங்களை தூர ஏறிந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூற தொடங்கலாம் அதையும் தாண்டி இதுபோன்ற சமயங்களில் அமைதியாக  மெளனம்  காப்பது வாழ்கையில் அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் எனபதே இக்கட்டுரை மூலம் விளக்கப்படும் சிறப்பம்சம் 

இன்று உலகில் யாரையாவது வீணாக விமர்சிப்பது அல்லது வேண்டுமென்றே குறை கூறிக்கொண்டே இருப்பது அது சிலரின் பாணியாகவே இருக்கிறது அதில் நமது ஊரு  மட்டும் விதிவிலக்கா !!அதற்கு பின்னால் உள்ள  பின்புலங்களை பற்றி மக்கள் யாரும்  சிந்திப்பது இல்லை 

நம்மில் சிலர் 

நம்மை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று பிறர் நினைத்தாலும் பரவாயில்லை, வாயைத் திறக்காதிருப்பது நல்லது என்று பெரும்பான்மையோர் மெளனமாக இருப்பது வீண் விமர்சனம் செய்பவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது.
 வாயைத் திறந்து பேசி நாம் நினைத்ததே சரி என்று உறுதிப்படுத்துவதை விட பேசாதிருப்பது நல்லதுதான்.நாம்தான் மௌனத்தின் சிறப்புப் பற்றியே மணிக்கணக்கில் பேசக் கூடியவர்களாயிற்றே!

பிறர் பேசுவதைக் கேட்கும் உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தாமே விடாமல் பேசிக் கொண்டிருப்பதை ஒரு தந்திரமாக வைத்திருப்பவர்களும் உண்டு. 

மற்றொருபுறம் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குவதில் இவர்களுக்கு இருக்கும் துடிப்பும் அவர்களை சும்மாயிருக்க விடுவதில்லை. எனவே மௌனத்தைக் கிழித்து நார் நாராக்கி உலகம் பேச்சோசையால் விளையும் இரைச்சலில் திளைக்கிறது.அடுத்தவர்களை விமர்சனம் செய்து தன்னை தானே தலைவனாக்கி கொள்ள துடிக்கும் சில நெஞ்சங்களும் உண்டு 

சிலர் தன்னை சிந்தனை சிற்பிகளாக காட்டுவதிலும் தன்னை போன்று நல்லவர்கள் இந்த உலகத்தில் இல்லாதது போல் மிகை படுத்துவதும் உண்டு . அப்படி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது மக்களுக்கே எரிச்சல் அடையும் படியாக மாறுவது இயல்பான ஓன்று தானே 

‘மௌனம் என்பது ஒரு அழகிய திரை; சத்தம் என்பது அதில் விழும் பொத்தல்’ 

இந்த வரிகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால்  நாம் தவறாக சிலரின் சுய நலத்திற்க்காக விமர்சிக்க படும் போது மெளனம் என்ற அழகிய திரை யாய் இருப்பதே சிறந்தது 

பேச்சினால் ஒருவர் என்னென்ன விதமாக தொல்லைக்கு ஆளாக நேரும் அல்லது ஆளாக்கலாம் என்பதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலகையே உதறி வெல்லும் ‘வீர’ உணர்வும், மற்றோரெல்லாம் எதிரிகளே என்னும் வெறுப்புணர்வும் நமக்குச் சும்மா வந்துவிடவில்லை. 

‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்று நம் அடிநாளிலிருந்தே பேசிப் பேசி நம்மை பிரிப்பவர்களும் உண்டு இந்த நிலை அவர்களையே அழித்து விடும் இதனையும் தாண்டி உண்மை நிலையே வெற்றி பெரும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை 

 சிலர் நம்மை விட வயதில் முதியவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்கிறார்கள்  .நாளை நீங்களும் அந்த வயதிற்கு  வரக்கூடும் என்பதை நம்மில் நிறைய நண்பர்களுக்கு தெரிவது இல்லை .அதே போல் சிறியவர்கள் விமர்சனம் செய்யும் போது பெரியவர்கள் மிக நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் அது உங்களுடைய பெருந்தன்மையே பறைசாற்றும் 

நம்முடைய ஊரில் இப்படி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் "வயது போகப் போக பற்கள் விழுவதை விட நாக்கு விழுந்தால் நலமாக இருக்கும்" என்றும் சொல்வது உண்டு . 

நீங்கள் யாரானால் என்ன : நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் : அனாவசியப் பதில்கள் எதையும் நிரூபிக்காமல்  சற்றே சும்மா இருங்கள்!

வார்த்தைகளில் இல்லாத மௌனம் பலவற்றைச் சொல்லிவிடுகிறது. சங்கடங்களைத் தவிர்த்து நெருக்கத்தைக் கொண்டுவருகிறது. இரைச்சலை விழுங்கி அமைதியைக் கொண்டுவருகிறது. மறுப்பு வார்த்தைகளைக் கொட்டாமல் சமாதான விருப்பத்தை ஏற்படுத்துகிறது. 

“வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளை விளக்காது” 

இன்னும் ஒரு குட்டி கதை மூலம் ...

கண்டபடி பேசாதிருந்தால் குறைந்தபட்சம் உங்கள் கன்னத்தையாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகிற விதமாக ஒரு ஜோக். இதை பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தன் கட்டுரையொன்றில் தந்திருக்கிறார் 

ஒரு கனவான் ஒரு ரோபோவை விலைக்கு வாங்கினார். அந்த ரோபோவின் விசேஷம் என்னவென்றால், அதற்கு எதிரே யார் பொய் பேசினாலும் பொய் பேசியவரின் கன்னத்தில் அறைந்துவிடும். இது தன் வீட்டுக்கு அவசியம் தேவை என்று கருதினார் கனவான். ஏனென்றால் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருந்தான் அவர் மகன்.

வீட்டுக்கு ரோபோவை எடுத்துவந்து அதைப் பற்றிய விவரத்தையும் சொன்னார் கனவான். ஒருநாள் பையன் தாமதமாக வந்தான். கேட்டதற்கு, ஸ்பெஷல் கிளாஸ் என்றான். ரோபோ அவன் கன்னத்தில் விட்டது ஒரு அறை. அறை வாங்கிய பிறகுதான் உண்மையைச் சொன்னான் மகன்; நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருந்ததாக.

உடனே கனவான் சொன்னார்: “டேய், உன்னை மாதிரி சிறுவனாக இருக்கும்போது நான் இப்படியெல்லாம் பொய்யே சொன்னதில்லை”
விழுந்தது அவர் கன்னத்திலும் ஒரு பளார்.

இந்த இரண்டையும் பார்த்த கனவானின் மனைவி சொன்னாள்: “பாருங்கள், உங்கள் பையனும் உங்களை மாதிரிதானே இருப்பான்?”

இப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அவளுடைய கன்னத்திலும் விழுந்தது ஒரு அறை . எதிர்பார்க்கவில்லை அந்த பெண் 

இப்படி பட்ட ரோபவை பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் .

ஏன் என்றால் அடுத்தவர்களை பற்றி பொய்யே வாரி இரைக்கும் போது இவர்களை பற்றிய வண்டவாளங்கள் தெரியதொடங்கி விடும் 

எனவே கண்ணியமற்ற முறையில் வீண் விமர்சனம் செய்பவர்களை பற்றி நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை நம்முடைய கண்ணியத்தை நம்முடைய மொனத்தின் மூலம் காட்ட வேண்டும் .

 இன்று உலகில் முகநூல் மற்றும் இனையதளங்களில் ஒருவரை ஒருவர் மிக கேவலமாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்  கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்று சொல்வார்கள் எனவே எழுதும் போது மிக கவனமாக இருத்தல் அவசியம்  எழுத்து என்ற இருபக்கமும் கூர்மையான கத்தி  நம்மையும் தாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் யாரையும் யாரும் வீண் விமர்சனம் செய்வதை தவிர்த்து வேண்டும்.அதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்து  ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க எனது முகப்புத்தகத்திலும் மொபைலிலும் அழைக்கலாம்.   0097150 4726244

கீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல்! நகராட்சி நடவடிக்கை!

பழைய படம்(பைல் படம்)
சுற்றுசூழல் பாதிப்பை கருத்து கொண்டு பல வேறு நகரங்களில் பை உள்ளிட்ட பாலிதீன் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சியிலும் பாலிதீன் பயன்பாடு  தடை செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நகர சபை ஆணையாளர் அயூப் கான் தலைமையில் சுகாதார அலுவலர் திண்ணாயிர மூர்த்தி மற்றும் பணியாளர் கள் நகர் முழுவதும் பல்வேறு கடைகளில்  சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சில கடைகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக் காரர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
எச்சரிக்கை
சுற்றுசூழல் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தை மனதில் கொண்டு பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்பாட்டை குறைப்பதில் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இனி இதுபோல் கீழக்கரை நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளை பயன்படுத்தும் கடைக்காரர்கள் மீது மிக அதி கப்படியான தொகை அப ராதமாக விதிக்கப்படுவதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர்.

Sunday, October 27, 2013

உபயோகமற்ற கண்ணாடி பொருட்கள்,பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வீட்டு அழகு பொருட்கள்!பள்ளி மழலையர் அசத்தல்!



கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தனி திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.





பள்ளியின் மழலை மாணவ மாணவியருக்கு  களிமண் ,உபயோகமற்ற கண்ணாடி பொருட்கள்,,பிளாஸ்டிக்  உள்ளிட்ட கழிவுகள் மூலம் விசிறி ,பொம்மை உள்ளிட்ட பல்வேறு அழகு  பொருட்கள் செய்யும் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பல்வேறு கழிவு பொருட்களை  வீணடிக்காமல் வீட்டு அழகு பொருட்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

மேலும் உயர் நிலை மாணவர்களுக்கு பொது அறிவு கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது,

மாணவ,மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர்.இதன் எந்த பொருளையும் வீணடிக்காமல் மறு சுழற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்து கொண்டனர்.வீட்டில் பெற்றோர்களும் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் - கீழக்கரை ரெயில்வே கேட் மீது லாரி மோதல் ! போக்குவரத்து பாதிப்பு!


படம் :  அசாருதீன்

ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரை ரெயில்வே கேட்டில் நேற்று மதியம் ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் ரெயிலுக்காக கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் கேட்டின் இழுவை கம்பி அறுந்ததில் கேட் கீழே விழுந்தது. இதனால் மதுரை செல்லும் ரெயிலுக்காக ஒருபுறம் மட்டும் கேட் மூடப்பட்டது.


இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து அவசர காலத்தில் பயன்படுத்தும் சங்கிலியால் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை ரெயில்வே ஊழியர் நிறுத்தினார். அந்த வழியாக ரெயில் சென்றதும் கேட்டை அப்புறப்படுத்தி கேட்டை சரிசெய்யும் பணியில் ரெயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Saturday, October 26, 2013

கீழக்கரையில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் !




கீழக்கரையில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இநிகழ்ச்சியில் அமைச்சர் சுந்தராஜன் தலைமையில் ஏராளமானோர் பங்க்கேற்றனர்

கேஸ் சிலிண்டர் திருடியதாக ஒருவர் கைது !ஆம்னி வேன் பறிமுதல்!

கீழக்கரையில் கேஸ் சிலிண்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரை காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
கீழக்கரையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்வதற்கு ஒவ்வொரு தெருவிலும் ரோட்டின் ஓரத்தில் இறக்கி வைப்பது வழக்கம். நேற்று சின்னகடைத்தெரு கோவிந்தராஜ் கடை அருகில் சிலிண்டர்களை இறக்கி வைத்து, டெலிவரிமேன் கணேசன் வீடுகளுக்கு எடுத்துச்சென்றார். சிலிண்டரை ஒரு வீட்டுக்கு எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வரும்போது காஞ்சிரங்குடியைத் சேர்ந்த  நசுருதீன்(32) அங்கிருந்த சிலிண்டரை திருடி அவருக்குச் சொந்தமான ஆம்னி வேனில் ஏற்றினார். அப்போது டெலிவரிமேன் கணேசன் அவரை கையும் களவுமாக பிடித்து கீழக்கரை போலீசில் ஒப்படைத்தார்.
 இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து நசுருதீனை கைது செய்து, அவரது ஆம்னி வேனை பறிமுதல் செய்தார்.