Thursday, June 30, 2011

உத்திரகோசமங்கையில் விவசாயிகளுக்கு விதை சேகரிப்பு கொள்கலன்

கீழக்கரை, ஜூன் 30:
உத்திரகோசமங்கையில் நடந்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாமில், விவசாயிகளுக்கு விதை சேகரிப்பு கொள்கலன்கள் வழங்கப்பட்டன.
உத்திரகோசமங்கையில், வேளாண்துறை மற்றும் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. நடமாடும் மண் ஆய்வகம் மூலம் மண் ஆய்வு, ஊட்ட மேற்றிய தொழு உரம் தயார் செய்தல், வேளாண் தொழில் நுட்ப முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டர் அருண்ராய் பங்கேற்று, வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் செயல்முறை பயிற்சியை பார்வையிட்டார். களரி கிராமத்தை சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு, விதை கிராம திட்டத்தில் விதை சேகரிப்பு கொள்கலனை 25சதவீத மானியத்தில் வழங்கினார்.
வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன், துணை இயக்குநர் சக்திமோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்திரராஜன் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு கலந்து கொண்டனர்.
உத்திரகோசமங்கை, மேலசீத்தை, வடக்கு மல்லல், புக்குளம், களரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை சார்பில், விவசாயிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஏற்பாடுகளை திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் கமாலுதீன் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் ஜோசூவா செய்திருந்தனர்.

கீழக்கரை, ஏர்வாடியில் இன்று மின்தடை


கீழக்கரை, ஜூன் 30:
கீழக்கரை, ஏர்வாடி பகுதியில், இன்று மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மின் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் அறிக்கை: கீழக்கரை துணை மின் நிலையத் தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், முகமது சதக் கல்லு�ரி பகுதி, காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Wednesday, June 29, 2011

கீழக்கரையில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு

கீழக்கரை, ஜூன் 29:
கீழக்கரையில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பதிந்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கீழக்கரை காஸ் ஏஜென்சி மூலம் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிலிண்டர் பெற்று வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக காஸ் சிலிண்டர்கள் முறையாக கிடைப்பதில்லை. பதிவு செய்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு கூடுதல் விலைக்கு தங்கு தடையின்றி சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் நிலையம் இல்லை. மதுரை சென்று தான் வாகனங்களுக்கு காஸ் நிரப்ப வேண்டும். ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 697வாகனங்கள் காஸ் மூலம் இயங்கி வருகின்றன. கீழக்கரையில் மட்டும் 73வாகனங்கள் காஸ் மூலம் இயங்கி வருகின்றன.
இவர்களில் பெரும்பாலானோர் மதுரை சென்று காஸ் நிரப்புவதில்லை. மாறாக சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக காஸ் ஏஜென்சி ஊழியர்களை சரிகட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளால் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அரசியல் ஆதாயம் தேடும் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ ! நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு

கீழக்கரை, ஜூன் 29:
ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவிற்கு, கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர்அகமது கூறியதாவது: ‘கீழக்கரையில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் படி, மக்களை நான் து�ண்டி விடுவதாக ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். உண்மை நிலைமையை புரிந்து கொள்ளாமல் பேசிய, எம்எல்ஏவுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
கீழக்கரை நகராட்சியில், குப்பை கொட்டும் இடத்திற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருக்கும் காரணத்தினால், அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. குப்பைகளை வேறு சில இடங்களில் கொட்டி வந்தோம். அப்பகுதியை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பல நாட்களாக குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது,
இதுசம்மந்தமாக கலெக்டரை பலமுறை சந்தித்து, குப்பைகள் கொட்டுவதற்கு இடம் ஒதுக்கி தருமாறு வலியுறுத்தி உள்ளோம். கீழக்கரையை சேர்ந்த அனைத்து கட்சியினர், இயக்கங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒன்றாக ஒரு முறை கலெக்டரை சந்தித்து கூறினோம். கலெக்டர் அறிவுரைப்படி சில இடங்களில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டி வருகிறோம்.
கீழக்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இப்பிரச்னை தீர்க்க தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, அரசியல் ஆதாயத்திற்காக என்னை சாடி பேசியுள்ளார்,’’ என்றார்.

Monday, June 27, 2011

வெளிவாசம் ஒத்துக்காதுப்பா...! ஜெயில்தான் ஜாலி

கீழக்கரை, ஜூன் 27:
சிறையிலிருந்து வெளியில் வந்தவர் கடையை உடைத்து திருடியதால் மீண்டும் சிறைக்கே அனுப்பப்பட்டார்.
கீழக்கரை எஸ்ஐ ஜான்சிராணி, ஏட்டு காசிம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். மேலத்தெரு கண்ணாடி அப்பா அருகே உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொண்டிருந்தவரை கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில்,� அவர் ராமநாதபுரம் சாயக்காரத்தெருவை சேர்ந்த ஹமீதுசுல்தான்(55) எனவும், திருட்டு வழக்கு தொடர்பாக சிறையிலிருந்த அவர் கடந்த 5நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. கீழக்கரை போலீசார் அவரை மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sunday, June 26, 2011

கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை குப்பைகளை கொட்ட எதிர்ப்பு



கீழக்கரை: திருப்புல்லாணி அருகே கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை நகராட்சிகுப்பைகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கீழக்கரை நகராட்ட்சியில் நீண்ட காலமாக நீடித்து வரும் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை நகராட்சி குப்பைகள் கொட்டப்படுகின்றன.இதை கண்டித்தும்,உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் நேற்று ராமநாதபுரம்கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு கும்பிடுமதுரை கிராமத்தை சேர்ந்த‌ஏராளமான பெண்கள் வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்துவிஜயராணி என்பவர் கூறுகையில் , கீழக்கரை நகராட்சி குப்பைகளை எங்கள் கிராமத்தில் கொட்டுவதால் கொசுக்கள் அதிகமாகி எங்கள் ஊரின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சுகாதார கேடிலிருந்து எங்கள் ஊரை காப்பற்றுவதற்கு கீழக்கரை நகராட்சி குப்பைகளை எங்கள் ஊரில் கொட்டுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

Thursday, June 23, 2011

கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு !

கீழக்கரை : கீழக்கரையில் குப்பைகளை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்னைக்கு கலெக்டர் தலையிட்டு தற்காலிக தீர்வு கண்டார். கீழக்கரையில் குப்பைகளை கும்பிடா மதுரை கிராமத்தில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஐந்து நாட்களாக குப்பைகளை அகற்ற முடியாமல், தேங்கி துர்நாற்றம் வீச்சத்துடன் சுகாதாரகேடு ஏற்பட்டது. இந்நிலை குறித்து கீழக்கரை அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் நேற்று காலை கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டனர். கலெக்டர் , ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமாருடன் தொடர்பு கொண்டு போதிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுகொண்டார். எஸ்.பி., உத்தரவின்படி, ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், நேற்று பகல் ஒரு மணிக்கு நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை டிராக்டர்களில் எடுத்து சென்று கொட்டினர். "குப்பைகளால் நோய்கள் பரவுவதால் மாற்று இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும்' என கூச்சலிட்ட பெண்களை டி.எஸ்.பி.,சமாதானம் செய்தார்.

புது மாப்பிள்ளை கொலை: 8 பேர் மீது வழக்கு

கீழக்கரை, ஜூன் 21: கீழக்கரை அருகே திருமணம் ஆன 3 வது நாளில் புதுமாப்பிள்ளை செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் ஜோதி நகரில் குடியிருக்கும் அப்துல்வஹாப் மகன் ஜஹாங்கிர்சேட் (26). இவருக்கும் பெரியபட்டினத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகள் ஜீனத் (23) என்பவருக்கும் 3 நாளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதிகள் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுவிட்டு பெரியபட்டினத்துக்கு திங்கள்கிழமை திரும்பினர்.
இதனிடையே ஜஹாங்கிர்சேட் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்று தொலைபேசி மூலம் ஜீனத்துக்குத் தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீனத் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் கணவரின் அக்காள் இஸ்மத்நிசா, சுல்தானியா ஆகியோரை திங்கள்கிழமை இரவு ராமநாதபுரத்தில் இருந்து வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை மாடியில் நின்றபோது ஜஹாங்கிர் சேட் மாடியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் பெரோஸ்கான், உருபஸ்கான், சுல்தான், கையும், துர்சியா, மாலியா, சித்தி, ஆரியா ஆகிய 8 பேர் மீது திருப்புல்லாணி காவல் துணை ஆய்வாளர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகிறார். Thanks :- dinamani daily news paper

Tuesday, June 21, 2011

தோணிப்பாலம் அருகில் அரசு பஸ்சும், வேனும் நேருக்குநேர் மோதல்







கீழக்கரை : நேற்று கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் தோணிப்பாலம் அருகில் அரசு பஸ்சும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. . இதில்,வேன் டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.

சுயஉதவிக்குழு ஆண்டுவிழா



கீழக்கரை, ஜூன் 21:
கீழக்கரையில் குரு டைமண்ட் ஆடவர் சுயஉதவிக்குழு, அன்னை அபிராமி மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் ஆதிபராசக்தி மகளிர் சுயஉதவிக்குழு மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழு மேம்பாட்டு திட்ட மாவட்ட அலுவலர் சுகுமார், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட திட்ட உதவி அலுவலர் அருண்பிரசாத், ஆடவர் சுயஉதவிக்குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செல்போன் நிறுவன ஜெனரேட்டரில் தீ









கீழக்கரை, ஜூன் 21:
கீழக்கரை அருகே, தனியார் செல்போன் நிறுவன ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
கீழக்கரை அருகே, காஞ்சிரங்குடியில் தனியார் செல்போன் டவர் உள்ளது. டவருக்கு மின் சப்ளை செய்யும் ஜெனரேட்டரில் நேற்று காலை 10மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டர், கேபிள், பேட்டரிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
தகவலின் பேரில் ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Monday, June 20, 2011

சுகாதார‌ கேட்டிற்கு கார‌ண‌ம் ந‌கராட்சி த‌லைவ‌ர் ப‌சீர்தான் ! ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ குற்ற‌ச்சாட்டு






கீழ‌க்க‌ரை :காஞ்சிர‌ங்குடியில் த‌முமுக‌ சார்பில் ம‌ருத்துவ‌மனையை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ திற‌ந்து வைத்தார்.அப்போது நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் , தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க. சார்பில் 96 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதியதாக மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படவுள்ளன. 2008-ம் ஆண்டு கோவை குனியமுத்தூரில் ஒரு சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அதேபோல, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்க, ராமநாதபுரம் மாவட்டப் பொருளாளராகப் பணியாற்றி இறந்துபோன சல்மானின் நினைவாக காஞ்சிரங்குடியில் அவருடைய பெயரில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.


கீழ‌க்க‌ரையில் குப்பைக‌ள் குவிந்து சுகாதார‌ சீர‌ழிவிற்கு கார‌ண‌ம் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ப‌சீர் அக‌ம‌துதான். மேலும் த‌ற்போது அதிமுக‌ ஆட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் வாங்கி த‌ர‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துடன் குறிப்பிட்ட இடங்களில் குப்பைக‌ள் கொட்டுவ‌தை சில திமுக பிரமுகர்களின் உதவியுடன் நகராட்சி தலைவர் பசீர் த‌டுத்து வ‌ருகிறார். இத‌னால் கீழ‌க்க‌ரையின் சுகாதார‌ம் கேள்விகுறியாகி உள்ள‌து.



கீழ‌க்க‌ரையை தாலுகாவாக மேம்படுத்துவதற்கான‌ அறிவிப்பை செய‌ல்ப‌டுத்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.புதியதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணிகளை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது என்றார். இவ்வாறு அவ‌ர் கூறினார்

100வது நாளை நோக்கி சாலையில் விழுந்த மரம் !


கீழக்கரை, ஜூன் 20 :
கீழக்கரையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் வேருடன் சாய்ந்தது ராட்சத மரம். இன்னும் 2 நாட்களுடன் மரம் சாயந்து 100வது நாள் நிறைவு பெறுகிறது! 3 மாதங்களாகியும் அப்புறப்படுத்தாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில், 124 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த மரம், கடந்த மார்ச் மாதம் வேருடன் சாய்ந்து விழுந்தது. நகராட்சி ஊழியர்கள் மரத்தை சாலையில் இருந்து ஓரமாக ஒதுக்கி போட்டுவிட்டு சென்றனர். அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை.
நடைபாதை பகுதியில் மரம் விழுந்து கிடப்பதால், மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் சைக்கிளில் செல்வோரும் நடந்து செல்லும் வயதானவர்களும் மரத்தில் மோதி காயமடைகின்றனர்.

நகராட்சி நிர்வாக ஊழியர்கள் 124 வருட பழமையான மரம் என்ற "பாசத்தினால்" இன்னும் 124வருடம் சாலையில் இருந்து விட்டு போகட்டும் என்று அகற்றாமல் வைத்துள்ளார்கள் போலும் இது நம் வேலை இல்லை பொதுமக்களே அகற்றட்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் பணியாற்றுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை 2க்கும் மேற்பட்ட வாகனங்கள் இம்மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரழப்பு ஏற்படுவதற்கு முன் இம்மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சமூக ஆர்வலர் நடுத்தெரு செய்யது இப்ராகிம் கூறுகையில், �சாய்ந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி, பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருப்பதால், இரண்டு ஆட்டோக்கள் இதில் மோதி விபத்திற்குள்ளாகின.மேலும் அவ்வழியாக செல்வோர் தலையையும் பதம் பார்த்து விடுகிறது.
அருகிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளும் மரத்தால் காயமடைய நேரிடுகிறது. இந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.

தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்

கீழக்கரை, ஜூன் 20 :
கீழக்கரை நகரில், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம் நிலவுகிறது.
இருபத்தி ஒன்று வார்டுகளை உள்ளடக்கிய கீழக்கரை நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங் காங்கே தேங்கும் அவலம் நீடிக்கிறது.
பெரும்பாலான இடங்களில், சாக்கடை அடைப்புகளால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்துள்ளதால், தொற்று நோய் பரவும் உள்ளது. இனியாவது வடக்குத்தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, June 19, 2011

செம்பி சேகு நூர்தீன் காக்கா ம‌றைவு: அபுதாபி அய்மான் ச‌ங்க‌ம் இரங்க‌ல்

அபுதாபி: ம‌றைந்த‌ ச‌முதாய‌ப் புர‌வ‌ல‌ர்கள் மெஜ‌ஸ்டிக் க‌றீம் காக்கா ம‌ற்றும் டாக்ட‌ர் செம்பி சேகு நூர்தீன் காக்கா ஆகிய‌ இருபெரும் புர‌வ‌ல‌ர்க‌ளின் ம‌றைவையொட்டி இர‌ங்க‌ல் கூட்ட‌மொன்றை அபுதாபி அய்மான் ச‌ங்க‌ம் ஏற்பாடு செய்திருந்த‌து. ந‌ஜ்தா சாலை ஈடீஏ ச‌முதாய‌க் கூட‌த்தில் ந‌ட‌ந்த‌ இந்நிக‌ழ்சிக்கு அய்மான் க‌ல்லூரி த‌லைவ‌ர் க‌னிமொழிக் க‌விஞ‌ர் க‌ளம‌ருதூர் ஜெ.ஷ‌ம்சுதீன் ஹாஜியார் த‌லைமை தாங்கினார். க‌ல்லூரி செய‌லாளர் செய்ய‌து ஜாப‌ர் முன்னிலை வ‌கித்து, ஏழை எளியோர்க‌ளின் ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளாக‌ வாரி வ‌ழ‌ங்கிய‌ மெஜ‌ஸ்டிக் க‌றீம் காக்கா, சேகு நூர்தீன் காக்கா ஆகியோரின் சேவைக‌ளை நினைவு கூர்ந்து பேசினார்க‌ள்.அய்மான் சங்க‌ பொதுச்செய‌லாள‌ர் காய‌ல் எஸ்.ஏ.சி.ஹ‌மீது,அய்மான் க‌ல்லூரி பொருளாள‌ர் ஹ‌பீபுல்லாஹ்,காயிதெமில்ல‌த் பேர‌வை அபுதாபி ம‌ண்ட‌ல‌ச் செய‌லாள‌ர் ஏ.எஸ்.அப்துல் ர‌ஹ்மான்,உள்ளிட்ட‌வ‌ர்க‌ள் ம‌றைந்த‌ பெரிய‌வ‌ர்க‌ளின் ந‌ற்காரிய‌ங்க‌ளை நினைவு கூர்ந்து உரையாற்றின‌ர்.பேராசிரிய‌ர் குள‌ச்ச‌ல் ஷாஹுல் ஹ‌மீத் அவ‌ர்க‌ளின் இர‌ங்க‌ல் செய்தியை அவ‌ரின் புத‌ல்வ‌ர் அன்ஸ‌ர் முகைதீன் வாசித்தார்.ம‌றைந்த‌வ‌ர்க‌ளின் ம‌றுமை வாழ்வு சிற‌க்க‌ திரும‌றை குர்ஆன்(யாஸீன்) ஓதி துஆ செய்ய‌ப்ப‌ட்ட‌து. இறுதியாக‌‌ மெள‌ல‌வி ஷ‌ர‌ஃபுத்தீன் ம‌ன்பஈ காயிப் ஜ‌னாஸா தொழுகை ந‌ட‌த்தினார். நிக‌ழ்ச்சியில் திர‌ளானோர் ப‌ங்கேற்ற‌ன‌ர். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாட்டை அய்மான் ச‌ங்க‌ பொருளாள‌ர் முஹ‌ம்ம‌து ஜ‌மாலுத்தீன்,ம‌ற்றும் நிர்வாகிக‌ள் சிற‌ப்பாக‌ செய்திருந்த‌ன‌ர்.
தகவல்:ஹமீது யூசுப்

கீழக்கரை அரசு மருத்துவமனை மீது தாக்குதல்

கீழக்கரை : கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் உதவி மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்க்கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களால் தாக்கினர்.இதில் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
இது குறித்து பெண் நோயாளி ஒருவர் கூறுகையில் , திடீரென‌ கற்களை வீசியதால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளோம்.மருத்துவமனை என்று பாராமல் கற்களை வீசிய கல் நெஞ்சக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்கள் வீசியவர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Friday, June 17, 2011

கீழக்கரை பள்ளிகளுக்கு அரசு வெளியிட்ட புதிய கட்டண விபரம்!



தெளிவாக காண படத்தின் மேல் கிளிக் செய்யவும்

பியர்ல் நர்சரி பள்ளி ,கீழக்கரை
கட்டண விபரம்
எல்கேஜி-4250,யுகேஜி-4250, வகுப்பு 1-4850,வகுப்பு 2-4850,வகுப்பு 3-4850,வகுப்பு4-4850வகுப்பு 5 -4850




Tuesday, June 14, 2011

சூதாட்டம் 8 பேர் கைது! கீழக்கரை அதிமுக செயலாளர் தப்பி ஓட்டம்

அதிமுக‌ செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன்


ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ கார்க‌ள்






கீழக்கரை: கீழக்கரையில் தனியார் இடத்தில் சூதாட்ட விடுதி நடத்திய அதிமுக பிரமுகர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அதிமுக செயலாளர் தப்பி ஓடினார்.கீழக்கரை இனஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் நேற்று நள்ளிரவு வள்ளல் சீதக்காதி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து நடத்திய சோதனையில் சூதாடிக்கொண்டிருந்த கீழக்கரை அதிமுக செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் குருசாமி, விருநகரை சேர்ந்த பாலன், முருகன், குமார், முருகன், முனீஸ்வரன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 53 ஆயிரத்து 150 ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். மேலும்அவர்கள் பயன்படுத்திய கார்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அதிமுக செயலாளர் ராஜேந்திரன் தப்பியோடினார். தப்பியோடிய அதிமுக செயலாளரை கீழக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.சில‌மாத‌ங்க‌ளுக்கு முன் ந‌டைபெற்ற‌ சோத‌னையிலும் சூதாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌தாக‌ அதிமுக‌ செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த‌க்க‌து.

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இயங்கிய டவுன் பஸ் ஒரு மாதமாக நிறுத்தம்

கீழக்கரை, ஜூன் 13&
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் இயங்கிய அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரான கீழக்கரை 3ம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கீழக்கரையைச் சேர்ந்த 90 சதவீத மக்கள் தங்களது அனைத்து தேவைகளுக்கும் ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ராமநாதபுரத்திற்கு தினமும் செல்கின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு 3 அரசு டவுன் பஸ்கள், ஒரு தனியார் டவுன் பஸ் தினமும் இயங்கப்பட்டது. தற்போது 2 அரசு டவுன்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் தொலைதூர பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் அரசு டவுன் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் மேற்கூரை, படிக்கட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது,’ அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயங்கிய 3 டவுன் பஸ்களில் பழுதான ஒரு பஸ் பணிமனையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பஸ் இயக்குவது குறித்து கிளை மேலாளர் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் ஜமீல் கூறுகையில்,’ தனியார் டவுன் பஸ் மராமத்து பணிக்காக சென்று விட்டது. பழுதடைந்த அரசு டவுன் பஸ்சிற்கு மாற்று பஸ் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மராமத்து பணி மந்தகதியில் நடைபெறுவதால் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் 2 கிமீ தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வரவேண்டியுள்ளது. இதனால் நடந்து செல்ல இயலாத பெண்கள், முதியவர்கள் ரூ.50 கொடுத்து ஆட்டோவில் மெயின் ரோடு வந்து பஸ்சில் செல்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்து கழகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Monday, June 13, 2011

கீழக்கரை அருகே இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது





கீழக்கரை 13 : மாயாகுளம் அருகே கிழக்கு மங்களீஸ்வரிநகர் அருகே உள்ள கடற்கரை ஓரத்தில் 12 மீட்டர் நீளமும் , 5 மீட்டர் சுற்றளவும் 1.5டன் எடைகொண்ட சீப்பு எலும்பு திமிங்கலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. மாவட்ட வன உயிரின காப்பாளர் சுந்தரகுமார், உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கீழக்கரை வன சரக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் கூறியதாவது: இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் பாறையில் மோதி அல்லது திருக்கை மீன் தாக்கி இறந்திருக்கலாம் எனவும், இந்த வகை இனம் மன்னார் வளைகுடாவில் அதிகம் உள்ளது. இவை ஒரு வார காலத்திற்குள் இறந்திருப்பதால் அழுகிய நிலையில் கரை ஓதுங்கியிருக் கிறது என தெரிவித்தனர். கீழக்கரையிலிருந்து ஏராளமானோர் மீனை காண்பதற்கு கடற்கரையில் குவிந்தனர்

Saturday, June 11, 2011

கரையில் ஒதுங்கிய புள்ளி மான்


கீழக்கரை : ஏர்வாடி அருகே அடஞ்சேரி கடற்கரையில் மான் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு, மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளி மான் இறந்த நிலையில் கரையில் ஒதுங்கி கிடந்தது. கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது: கீழக்கரை, ஏர்வாடியில் மான்கள் நடமாட்டம் கிடையாது. இலங்கை திரிகோண மலையில் மான்கள் அதிகம் வசிப்பதால் விலங்களுக்கு பயந்து தப்பி வரும் போது கடலில் விழுந்து அலையில் சிக்கி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலும் அதிகமான மான்கள் இருப்பதால் கால்நடைகளுக்கு பயந்து செல்வனூர் வனப்பகுதிக்கு தப்பி வரும்போது கடலில் விழுந்து இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது, என்றார்.

Monday, June 6, 2011

காயமடைந்த வெளிநாட்டு புறாவுக்கு சிகிச்சை





கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சுற்றித்திரிந்த வெளிநாட்டுப் புறாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சித்த மருத்துவர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளை மற்றும் கறுப்பு நிற புள்ளிகளுடன் கண்கள் சிவப்பு நிறத்தில் தலையில் கொண்டையுடன் ஒரு புறா மருத்துவமனையில் சுற்றித் திரிந்தது.

அதை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்தனர். அப்போது புறாவின் கழுத்தின் இடதுபுறத்தில் பலத்த காயம் இருப்பதைக் கண்டனர். அவர்கள் புறாவை மருத்துவர் ஜவாகிர் உசைனிடம் காண்பித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி ஜவாகிர் உசைன் கூறியதாவது: புறா பறக்கும் போது ஏதோ பெரிய பறவைகள் கொத்தி காயம் ஏற்பட்டுள்ளது. கண்கள் சிவந்தும், காலில் செப்புத் தகடில் ஒரு வளையமும் உள்ளது. அவ்வளையத்தில் எல்.கே.யூ.எஸ்.ஏ.9773 என அச்சிடப்பட்டுள்ளது. எனவே இது வெளிநாட்டுப் புறாவா அல்லது புறா கிளப்களில் உள்ளதா என்பது தெரியவில்லை. இதை தனியாக விட்டால் இறந்து போய்விடும்.


இதுகுறித்து வனசரக அதிகாரி கூறியதாவது, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.குணமடைந்தவுடன் பறக்க விடப்படும் என்றார்









Saturday, June 4, 2011

கீழக்கரையில் திறப்பு விழாவிற்கு 2 ஆண்டாக காத்திருக்கும் கழிப்பறை

திறப்பு விழாவிற்கு 2 ஆண்டாக காத்திருக்கும் கழிப்பறை

அசுத்தமாக காணப்படும் பழைய கழிப்பறை பகுதி
கீழக்கரை, ஜூன் 4&
கீழக்கரை நகராட்சி சார்பில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் 10லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப் பறை கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிப்பறையைத்தான் பொதுமக்கள் தற்போது உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்தக் கழிப்பறை இருக்கும் இடத்தைச் சுற்றி கழிவுநீர் தேங்கியும், குப்பைகளைக் குவிந்தும் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. நோய் பரவாமல் இருப்பதற்காகவே கழிப்பறை கட்டப்படுகிறது. ஆனால், இந்தக் கழிப்பறைக்குச் சென்று வந்தாலே நோய் பரவும் சூழல் உள்ளது. இதன் அருகில் மீன் மார்க்கெட், நியாய விலைக் கடை, பஸ் நிலையம் ஆகியவை உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இப்பகுதியில் துர்நாற்றத்தால் மக்கள் முககவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி புதிய கட்டண கழிப்பறையைப் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான வைக்கோல் லாரி !




கீழக்கரை ராமநாதபுரம் சாலையில் சரக்கு லாரிகள் அதிகளவில் வைக்கோல்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. முழு சாலையையும் அடைத்துக் கொண்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு எற்படுகிறது. கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் இந்த வைக்கோல் லாரிகளை போலீசார் கண்டு கொள்வதில்லை . உரிய வகையில் போலீசாரை "கவனித்து" கொள்வதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கீழக்கரை புது கிழக்குதெருவில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு

கீழக்கரையில் நீண்ட காலமாக நிலவி வரும் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கீழக்கரையில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பஷீர் அகமது தலைமையில் செயல் அலுவலர் போஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழக்கரையில் சேகரிக்கப்படும் குப்பைகளை பல்வேறு இடங்களில் கொட்டியபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்காலிகமாக புதுகிழக்கு தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்ட முடிவு செய்யப்பட்டது.அந்த பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது

Thursday, June 2, 2011

கீழக்கரை +1 மாணவர் மரணத்தில் மர்மம் ! கொலையா?


கீழக்கரை கிழக்கு தெரு பகுதியில் பாத்திமா காலனியை சேர்ந்தவர் ஜகுபர் ஹுசைன் சென்னையில் தொழில் செய்து வ‌ருகிறார் இவரது மகன் உபைதுர் ரஹ்மான் இவர் தனியார் பள்ளியில் +1 மாணவராவார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் மாணவர் உபைதுர் ரஹ்மான் வீட்டிலிருந்து தனது நண்பருடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.வெளியில் சென்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகு நண்பரின் வீட்டிலேயே மாணவர் ஜகுபர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ர் துய‌ர‌த்தில் ஆழ்ந்த‌ன‌ர் .உட‌ன‌டியாக‌ சென்னையிலிருந்த‌ அவ‌ர‌து த‌ந்தைக்கு த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்டு கீழ‌க்க‌ரை வ‌ந்த‌ அவ‌ர‌து த‌ந்தை இறந்த த‌ன் ம‌க‌னின் உட‌லில் கீறல்க‌ள் இருந்த‌தால் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜ‌குப‌ர் ஹுசைன் போலீசில் புகார் செய்த‌தின் பேரில் கீழ‌க்க‌ரை போலீசார் கொலையா? த‌ற்கொலையா என்று விசாரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.மாணவனின் மரணத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நில‌வி வ‌ருகிற‌து

Wednesday, June 1, 2011

கீழக்கரையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வேன்! ஜவாஹிருல்லா .எம்.எல்.ஏ பேட்டி

கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன் அலோசனை
பொதுமக்களிடம் குறை கேட்டார்
நோயாளியிடம் நலன் விசாரித்தார்

கீழக்கரை, ஜூன் 1: பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார். யாரு்ம் எதிர்பாராத வகையில் கீழக்கரை அரசு மருத்துவமனையி்ல் ஆய்வு மேற்கொண்டார்

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து,
ஜவாஹிர் ஹுசைன் உள்ளிட்ட டாக்டர்களிடம் ஆலோசனை செய்தார்.

108 ஆம்புலனசுக்கு அழைப்பு விடுத்தா்ல் அலட்சியப்படுத்துவதாக புகார் கூறப்பட்டது.
மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,பெண் டாக்டர்கள் தேவை வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள மருத்துவமனை விடுதியை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நோயாளிகள், எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.

எம்எல்ஏ கூறுகையில், அனைத்து கோரிக்கைகளையும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவேன். ஏர்வாடி முனை ரோட்டிலும், பழைய பஸ் ஸ்டாண்டு அருகிலும் விரைவில் நிழற்குடை அமைக்கப்படும். புதிய பஸ் ஸ்டாண்டு மராமத்து பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்� என்றார்.

மாவட்ட தலைவர் சலிமுல்லாகான், மமக செயலாளர் அன்வர்,கீழக்கரை முஜிப் மற்றும் நிர்வாகிகள், அதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.