Sunday, July 31, 2011

கீழக்கரை (www.keelakarai.in )வலைதளத்தை ஈமான் சங்க பொது செயலாளர் துவக்கி வைத்தார் !

2010ல் துபாயில் வலைதள துவக்க நிகழ்ச்சியில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் மனித வள துறையின் இயக்குநர் அக்பர்கான் கலந்து கொண்டார்.
30.07.11 அன்று துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் ஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி கலந்து கொண்டு வலை தளத்தை துவக்கி வைத்தார்.




Friday, July 22, 2011

கீழக்கரை கல்லூரியில் ஈவ்டீசிங் தடை விழிப்புணவு கூட்டம் !

நிகழ்ச்சியில் முதல்வர் அபுல் ஹசன் சாதலி


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈவ்டீசிங் தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் ஏர்வாடி காவல் துறை ஆய்வாளர் சுரேஸ் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் காவல் துறை ஆய்வாளர் பேசுகையில் , அரசு ஈவ்டீசிங் தடை சட்டத்தை அமல் படுத்தி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டதின் பேரில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் இது தொடர்பாக வழக்குகள் பதிவாகமல் கவனத்துட நடந்து கொள்ள வேண்டும் என்றார்.


கீழக்கரை கல்லூரியில் பயின்ற மாணவர் இந்திய கப்பல் படை அதிகாரியாக தேர்வு !

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கப்பல் படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 2004 முதல் 2007 வரை மெரைன் பிரிவில் படித்து தேசிய மாணவர் படையின் கப்பல் பிரிவு மாணவராக இருந்த அருண்குமார் இந்திய கப்பல் படை பிரிவில் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

அருண்குமார் கூறுகையில் தேசிய மாணவர் படையின் கப்பல் பிரிவில் பெற்ற பயிற்சிகள் எனது தேர்வுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கூறினார். தற்போது இவர் கேரளாவில் உள்ள எழுமாலா அடிப்படை பயிற்சி பள்ளியில் பயின்று வருகிறார்.இவரை முகம்மது சதக் டிரஸ்ட் தலைவர் ஹமீது அப்துல் காதர் இயக்குநர்கள் யூசுப் மற்றும் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Thursday, July 21, 2011

முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி வீட்டில் திருட்டு !

கீழக்கரை, ஜூலை 21:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஹசன்அலி வீட்டிலும் அருகில் உள்ள இஸ்மாயில் என்பவரின் வீட்டிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கீழக்கரை மேலத்தெருவில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன்அலி வீடு உள்ளது. அருகில் இஸ்மாயில் என்பவரின் வீடு உள்ளது. இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை இருவரது வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. எஸ்ஐக்கள் ராமநாதன், கணேசன், ஏட்டு முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். இரண்டு வீடுகளிலும் துணிகள், சமையல் பாத்திரங்கள் சிதறி கிடந்தன. திருடு போன பொருட்கள் மதிப்பு தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் வந்த பின்பே திருடு போன பொருட்கள் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Wednesday, July 13, 2011

கீழக்கரை இன்று மின்தடை

இன்று மின்தடை
கீழக்கரை, ஜூலை 13:
ரெகுநாதபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், காரான், கும்பரம், தினைக்குளம், வண்ணாங்குண்டு, தெற்குகாட்டூர், களிமண்குண்டு, நயினாமரைக்கான், பள்ளபச்சேரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்தார்.

Sunday, July 10, 2011

தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா !


கீழக்கரை : கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியில் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி தாளாளர் டாக்டர் ரஹ்மத்துன்னிசா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக பல்கலைக மானியக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் அல்போன்ஸ், யூசுப் சுலைஹா அறக்கட்டளை நிர்வாகி குர்ரத் ஜெமிலா, உறுப்பினர் மரியம்ஹபீப், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவூது, யூசுப் சுலைஹா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செய்யது அப்துல் காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Friday, July 8, 2011

மிரட்டும் திருக்கைகள் ! வாலில் நல்லபாம்பு விஷம்



கீழக்கரை, ஜூலை 8:
கடலில் வாழும் ஆயிரக்கணக்கான உயிரினங்களில் அபூர்வமானவைகள் சில உள்ளன. இதில் அபூர்வம் மற்றும் ஆபத்து நிறைந்தது திருக்கை மீன். கீழக்கரை பகுதியில் மன்னார் வளைகுடாவில் திருக்கை மீன்கள் அதிகளவில் உள்ளதாக கடல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவற்றினால் ஏற்படக்கூடிய அபாயங்களை பற்றி அறிந்தால் தலைசுற்றி விடும். இவ்வளவு கொடிய விஷமுடைய உயிரினங்களுக்கு மத்தியில் தான் நமது மீனவர்கள், கடலுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கீழக்கரை அருகே உள்ள கடற்கரையில் சுமார் 1500கிலோ எடையுள்ள திமிங்கலம் திருக்கை மீன் தாக்கியதில் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
கொம்பு திருக்கை, ஆடா திருக்கை, பூவாதிருக்கை, செந்திருக்கை, மணத்திருக்கை, புளியந்திருக்கை, கருவாதிருக்கை, கல்லுதிருக்கை, கண்ணாதிருக்கை, அட்டுவாணி திருக்கை, கட்டித்திருக்கை, சிறுஉளி திருக்கை, வட்ட திருக்கை, புள்ளி திருக்கை, வவ்வால்திருக்கை, பூவாளி திருக்கை, பெருங்கருவா திருக்கை, மணத்திருக்கை என, திருக்கை மீன்களில் பலவகை உண்டு. ஒவ்வொரு வகை மீனுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன.
இதில் கொம்புத்திருக்கை சேற்று பகுதியில் வாழும். கடலில் மனிதர்களை கண்டால் உடனே மேலெழுந்து கடலின் அடிப்பகுதிக்கு இழுத்து சென்று மூழ்கடித்து கொன்று விடும். மனிதர்களை கொல்வது உணவுக்காக அல்ல, தன்னை தற்காத்து கொள்ளவே இதுபோன்று திருக்கைகள் செய்கின்றன. சிறு சிறு மீன்களை மட்டுமே திருக்கைகள் உணவாக கொள்கின்றன.
அனைத்து திருக்கை மீன்களுக்கும், வாலில் பெரிய முள் ஒன்று இருக்கும். ஆடாதிருக்கை மீன்களின் வாலில் 4பெரிய முட்கள் இருக்கும். ஒவ்வொரு முள்ளிலும், நான்கு நல்ல பாம்பின் விஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மீன்கள் மனிதர்கள் மற்றும் திமிங்கலத்தின் வயிற்று பகுதியை குறி வைத்து தாக்கி அழித்து விடும்.
திருக்கை மீன்களின் வால்கள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும். அனைத்து திருக்கைகளும் 12மாதத்திற்கு ஒருமுறை 10குட்டிகள் வரை இடும். சுமார் 15அடி வரை அகலமாக வளரக்கூடியது. இவை நீளமாக வளராது. ஆடாத்திருக்கையானது திமிங்கலத்தையே அடித்து கொன்று விடும். சங்கு குளிக்க சென்றவர்களில் ஆடாத்திருக்கை முள் அடித்து 4பேருக்கும் மேல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, July 3, 2011

கீழக்கரையில் மணல், ஜல்லி விலை உயர்வால் கட்டிட தொழில் பாதிப்பு

கீழக்கரை, ஜூலை 3&
கீழக்கரையில் மணல், ஜல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கட்டு மான பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மணல் விலையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.
ராமாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டிராக்டர் மணல்
600 ஆக இருந்தது தற் போது 800
ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ஜல்லி கற்கள் இரண்டரை யூனிட்
9500 ஆக இருந்தது, தற்போது 11 ஆயிரமாக உள்ளது. சிமென்ட் விலையும் ஒரு முடை
280 ஆக இருந்தது 310 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் வேலையை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதையடுத்து பல்வேறு தரப்பிரனரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மணல் வியாபாரம் செய்யும் டிராக்டர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘மணல் எடுக்க பெர்மிட் வாங்குவதற்கு அதிகாரிகள் அதிகமாக பணம் கேட்கின்றனர். அதனால்தான் மணல் விலையை உயர்த்தியுள்ளோம்’ என்றார்.
சமூக ஆர்வலர் முகைதீன் இபுராகிம் கூறுகையில், ‘அதிகாரிகள் பெர்மிட் வழங்குவதோடு சரி அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்று பார்ப்பதில்லை. ஒவ்வொரு மணல் வியாபாரியும் பெர்மிட் பேப்பரில் தேதி நேரம் குறிப்பிடாமல் மணல் அள்ளுகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் வருவது தெரிந்தால் தேதி நேரத்தை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இப்படி ஒரு பெர்மிட் பேப்பரை கையில் வைத்து கொண்டு பலமுறை மணல் அள்ளுகின்றனர். இது அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் நிலைமையை கருத்தில் கொண்டு மணல் விலையை குறைப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கீழக்கரை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் அளவு குறைவு

கீழக்கரை ஜூலை 2&
ராமநாதபுரம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதிலுள்ள கார்டுகளுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரேஷன் கடை தினமும் காலை 11மணிக்கு திறக்கப்பட்டு மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படுகிறது. சில நேரங்களில் கடை திறக்கப்படுவதில்லை. இதனால் இக்கடையில் இலவச அரிசி வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் இங்கு சப்ளை செய்யப்படும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் அளவு குறைவாக வழங்கப்படுகிறது.
இது போல் சீனி, பருப்பு, உளுந்து வகைகளும் கூடுதலைக்கு விற்கின்றனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாறியது வாலிபர் கொலை வழக்கு

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் திருமணமான மூன்றாவது நாளில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரை, பெண்ணின் சகோதரர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நீண்ட விசாரணைக்கு பின் தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அப்துல் வகாப் மகன் ஜகாங்கீர். இவருக்கும் தஞ்சாவூர் அருகே உள்ள ராஜகிரியை சேர்ந்த மைதீன் மகள் ஜெல்ஹார் பீவி என்பவருக்கும் 2002 செப்.,22ல் திருமணம் நடந்தது. இந் நிலையில் ஜகாங்கீருக்கும், ராமநாதபுரம் பெரியபட்டினம் சாகுல்ஹமீது மகள் ஜீனத் நிஸாவுக்கும் கடந்த ஜூன் 19ல் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்னையில் ஜகாங்கீர், ஜூன் 21 காலை 6.15 மணிக்கு மாடியிலிருந்து தூக்கி எரியப்பட்டு கொத்லை செய்யப்பட்டு விட்டதாக ஜகாங்கீரின் சகோதரி இஸ்மத் நிஸா, திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார்.
நன்றி :தினமலர்

Friday, July 1, 2011

வெஸ்ட் ஆசியா ராமநாதபுரம் கிளையில் பணியாற்றிய வடக்குத்தெரு ரபீக் காலமானார் !

கீழ‌க்க‌ரை : கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த ரபி அவர்கள் இன்று 01.07.2011 காலை மாரடைப்பால்
காலமானர்கள். (இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்)

west asia exports & imports (p) ltd (human resources management Division) வெஸ்ட் ஆசியா ராமநாதபுரம் கிளையில் மேலாளாராக பணிபுரிந்து வந்தார் .