பட விளக்கம் :கீழக்கரை 500 பிளாட்(தில்லையேந்தல் பஞ்சாயத்து) பகுதியில் தமுமுக கிளை புதிய அலுவலகத்தை ஜாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கீழக்கரை முஜீப் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறியிருப்பதாவது,
இராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சியிலும் மாவட்டத்தின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் சட்டமன்றத்தில் நான் வைத்த தொகுதி கோரிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய கோரிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர் பெருமக்களை நேரில் சந்தித்து நான் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வரும் அரசும் கனிவோடு நிறைவேற்றி வருதை நன்றியுடன் நினைவு படுத்திக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி: இராமநாதபுரம் நகரில் மருத்துவ கல்லூரியின் தேவையை வலியுறுத்தி 03.04.2012, மற்றும் 09.06.2012 ஆகிய தேதிகளில் சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி தரத்திலான மருத்துவமனை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிடப்பில் போடப்பட்டுள்ள இராமநாதபுரம் நகர் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரி 11.08.2011 மற்றும் 25.08.2011 தேதிகளில் சட்டமன்றத்தில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அப்பணி விரைவாக நடைபெற்று தற்போது நிறைவு பெறுவதற்கு எல்லாவகையிலும் உதவிய தமிழக அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன் பதனிடும் மையம் அமைய சட்டமன்றதில் நான் கோரிக்கை வைத்ததை நிறைவேற்றும் வகையில் மீன் பதனிடும் பூங்கா அமைக்கப் படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
கீழகரைக்கு செல்லும் வழியில் இராமநாதபுரம் நகரில் உள்ள ரயில்வே கதவு ரயில் வரும் நேரங்களில் அடைக்கப்படுவதால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக மேற்படி ரயில்வே கதவு உள்ள இடத்தில ரயிவே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என 03.04.2012 பட்ஜட் கூட்டத்தொடரில் நான் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல கோடி செலவில் அங்கு ரயில்வே மேம்பாலம் அமைய ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்பட்டு , கரைகள் பலப்படுத்தப் பட வேண்டும் என்ற எனது சட்டமன்ற கோரிக்கையை தமிழக முதல்வரின் ஆணையின் மூலம் நிறைவேறியுள்ளது. இராமநாதபுரம் தலைமை மருத்துவ மனையில் பழுதான சி.டி.ஸ்கேனுக்கு பதிலாக புதிய சி.டி.ஸ்கேன் கருவி நிறுவ வேண்டும் என்ற எனது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தற்போது அது செயல்பாட்டில் உள்ளது.
வாடகை கட்டிததில் இயங்கி வரும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு ஒருங்கிணைத்த அலுவலக கட்டடம் தேவை என்ற எனது கோரிக்கை இன்று நிறைவேறும் தருணத்தில் உள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டடங்கள் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இராமேஸ்வரம்,மற்றும் கீழக்கரை நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்ததன் விளைவாக இன்று இவ்விரு நகராட்சிகளுக்கும் தனி தனி ஆணையாளர்கள் நியமிக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இராமநாதபுரம் மகளிர் கல்லூரியில் புதிய பாடப் பரிவுகள் துவங்கப் பட வேண்டும் என்ற எனது சட்டமன்ற கொஈக்கையின் படி இந்த கல்வியாண்டில்இளங்கலை தமிழ் மற்றும் வேதியியல் பாடபபிரிவுகளும் முதுகலையில் கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா,கீழக்கரை,மற்றும் இராமேஸ்வரம் நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம், இராமேஸ்வரம் தீவு பகுதியில் தரைவழி மின்வடம்,போன்ற எனது கோரிக்கைகளை விரைவில் தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று இததருனத்தில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் நகராட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டு சமீபத்தில் மரணமடைந்த எஸ்.கே.ஜி.சேகர் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
,