Monday, December 31, 2012

கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெருவில் நாளை(01-01-13)ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு நிக‌ழ்ச்சி


கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தியில் கூறியிருப்ப‌தாவ‌து,

இன்ஷா அல்லாஹ் நாளை 01.01.2013 செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் நம் கே.ஈ.சி.டி திடலில் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் இறையருளால் திறக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு மிகு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு......

கீழக்கரை : 04567-245832 / 9790848139

சென்னை : 9080424243 / 9840120106

துபை : 050-4985037

 

துபாய் ஜிஎஸ்எம் நிறுவ‌ன‌ ஆண்டு விழாவில் கீழ‌க்க‌ரை ஜ‌குப‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்!







துபாய் ஜிஎஸ்எம் நிறுவ‌ன‌ ஆண்டு விழாவில் கீழ‌க்க‌ரை ஜ‌குப‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்!

துபாயில் க‌ல்ப் ஸ்டார் மெட்ட‌ல்(இடிஏ டிரேடிங் & ஷிப்பிங்) நிறுவ‌ன‌த்தின் ஆண்டு விழா துபாய் முஷ்ரிப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.இந்நிக‌ழ்ச்சியில் விளையாட்டு போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.

இப்போட்டிக‌ளில் கீழ‌க்க‌ரை ந‌டுத்தெரு சேர்ந்த‌ ஜ‌குப‌ர் ஹுசைன் ,அபுதாலிஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் போட்டிக‌ளில் ப‌ங்கு பெற்று வெற்றி பெற்று ப‌ரிசுக‌ளை வென்ற‌ன‌ர்.
நிறுவ‌ன‌த்தில் சிற‌ப்பாக‌ ப‌ணி புரிந்த‌வ‌ர்க‌ளுக்கு ப‌ல்வேறு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற‌வர்க‌ளுக்கு நிறுவ‌ன‌த்தின் சீனிய‌ர் மேலாள‌ர் ஹ‌மீது அப்துல் காதர்,மேலாள‌ர் ஜ‌னார்த்த‌ன‌ன்,நிறுவ‌ன‌த்தின்  ம‌னித‌ வ‌ள‌த்துறை மேலாள‌ர்  ஜ‌மான், சீனிய‌ர் அதிகாரி ஜாஹிர் ஹுசைன் ,ஈமான் அமைப்பின் விழாக்குழு செய‌லாள‌ர் யாசின்,இணை செய‌லாள‌ர் முகைதீன்,உள்ளிட்டோர் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

விழாவுக்கான‌ ஏற்பாடுக‌ளை நிறுவ‌ன‌த்தின் சார்பாக‌ கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து
 காமில் த‌லைமையில் ர‌க்கீப் உள்ளிட்ட ப‌ல‌ர் செய்திருந்த‌ன‌ர்.
நிக‌ழ்ச்சியில் ஏராள‌மான‌ ஊழிய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.























.                                                   

கீழ‌க்க‌ரை த‌னி தாலுகா ,பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ங்க‌ளை நிறைவேற்ற‌ வேண்டும்!ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ வ‌லியுறுத்த‌ல்!

ப‌ட‌ விள‌க்க‌ம் :‍‍கீழ‌க்க‌ரை 500 பிளாட்(தில்லையேந்த‌ல் பஞ்சாய‌த்து) ப‌குதியில் த‌முமுக‌ கிளை புதிய‌ அலுவ‌ல‌‌க‌த்தை ஜாஹிருல்லா எம்.எல்.ஏ திற‌ந்து வைத்தார்

கீழ‌க்க‌ரை முஜீப் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ மீது ப‌ல்வேறு குற்ற‌ச்சாட்டுக்க‌ளை கூறியிருந்தார் அத‌ற்கு பதில‌ளிக்கும் வ‌கையில் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறியிருப்ப‌தாவ‌து,

இராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சியிலும் மாவட்டத்தின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் சட்டமன்றத்தில் நான் வைத்த தொகுதி கோரிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய கோரிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர் பெருமக்களை நேரில் சந்தித்து நான் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வரும் அரசும் கனிவோடு நிறைவேற்றி வருதை நன்றியுடன் நினைவு படுத்திக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி: இராமநாதபுரம் நகரில் மருத்துவ கல்லூரியின் தேவையை வலியுறுத்தி  03.04.2012, மற்றும் 09.06.2012 ஆகிய தேதிகளில் சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி தரத்திலான மருத்துவமனை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிடப்பில் போடப்பட்டுள்ள இராமநாதபுரம் நகர் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரி 11.08.2011 மற்றும் 25.08.2011 தேதிகளில் சட்டமன்றத்தில் நான்  முன்வைத்த கோரிக்கையை ஏற்று அப்பணி விரைவாக நடைபெற்று தற்போது நிறைவு பெறுவதற்கு  எல்லாவகையிலும் உதவிய தமிழக அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன் பதனிடும் மையம் அமைய சட்டமன்றதில் நான் கோரிக்கை வைத்ததை நிறைவேற்றும் வகையில் மீன் பதனிடும் பூங்கா அமைக்கப் படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

கீழகரைக்கு செல்லும் வழியில் இராமநாதபுரம் நகரில் உள்ள ரயில்வே கதவு ரயில் வரும் நேரங்களில் அடைக்கப்படுவதால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக மேற்படி ரயில்வே கதவு உள்ள இடத்தில ரயிவே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என 03.04.2012 பட்ஜட் கூட்டத்தொடரில் நான் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல கோடி செலவில் அங்கு ரயில்வே மேம்பாலம் அமைய ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.


இராமநாதபுரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்பட்டு , கரைகள் பலப்படுத்தப் பட வேண்டும் என்ற எனது சட்டமன்ற கோரிக்கையை தமிழக முதல்வரின் ஆணையின் மூலம் நிறைவேறியுள்ளது.  இராமநாதபுரம் தலைமை மருத்துவ மனையில் பழுதான சி.டி.ஸ்கேனுக்கு பதிலாக புதிய சி.டி.ஸ்கேன் கருவி நிறுவ வேண்டும் என்ற எனது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தற்போது அது செயல்பாட்டில் உள்ளது.

வாடகை கட்டிததில் இயங்கி வரும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு ஒருங்கிணைத்த அலுவலக கட்டடம் தேவை என்ற எனது கோரிக்கை இன்று நிறைவேறும் தருணத்தில் உள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டடங்கள் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இராமேஸ்வரம்,மற்றும் கீழக்கரை நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்ததன்  விளைவாக இன்று இவ்விரு நகராட்சிகளுக்கும் தனி தனி ஆணையாளர்கள் நியமிக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இராமநாதபுரம் மகளிர் கல்லூரியில் புதிய பாடப் பரிவுகள் துவங்கப் பட வேண்டும் என்ற எனது சட்டமன்ற கொஈக்கையின் படி இந்த கல்வியாண்டில்இளங்கலை தமிழ் மற்றும் வேதியியல் பாடபபிரிவுகளும் முதுகலையில் கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா,கீழக்கரை,மற்றும் இராமேஸ்வரம் நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம், இராமேஸ்வரம் தீவு பகுதியில் தரைவழி மின்வடம்,போன்ற எனது கோரிக்கைகளை விரைவில் தமிழக   அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று இததருனத்தில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் நகராட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டு சமீபத்தில் மரணமடைந்த எஸ்.கே.ஜி.சேகர் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

,

Sunday, December 30, 2012

கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி


கீழ‌க்க‌ரை ப‌குதியில்  ப‌சுமையின் அள‌வு குறைவாக‌ இருப்ப‌தாக அர‌சுதுறையின் ஆராய்ச்சியில் தெரிய‌ வ‌ந்த‌து.இந்த‌ குறைபாட்டை போக்கும் வித‌மாக‌ இப்ப‌குதிக‌ளில் ம‌ர‌ வ‌ள‌ர்ப்பை அதிக‌ரிக்க‌ வேண்டும் கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது.இந்நிக‌ழ்ச்சியில் ரோட்ட‌ரி ச‌ங்க‌ த‌லைவ‌ர் ஆசாத்,செய‌லாள‌ர் சுப்பிர‌ம‌ணிய‌ன்,துணை செய‌லாள‌ர் செய்ய‌து அஹ‌ம‌து,அல் நூர் ஆப்டிக‌ல் ஹச‌ன்,காத‌ர்,17வது வார்டு க‌வுன்சில‌ர் ஆனா மூனா ,காண்ட்ராக்ட‌ர் க‌பீர்,பில்ட‌ர் ராஜா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.


செய்தி : சேகுச‌த‌க் இப்ராகிம்

கீழ‌க்க‌ரையில் புற்றுநோய் குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி!வட‌க்குதெரு முஹைதீனியா ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து!

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ம்,வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத் நிர்வாக‌ சபை ம‌ற்றும் ம‌துரை மீனாட்சி மிஷ‌ன் ம‌ருத்துவ‌ம‌ன்னை இணைந்து ந‌ட‌த்திய‌ புற்று நோய் விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி வ‌ட‌க்குத்தெரு முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி வளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.
வ‌ட‌க்குத்தெரு ஜமாத் த‌லைவ‌ர் அக்ப‌ர்கான் த‌லைமை  வ‌கித்தார்.ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ நிறுவ‌ன‌ ஹ‌மீது அப்துல் காத‌ர் ,த‌லைவ‌ர் செய்ய‌து இப்ராகிம்,வ‌ட‌க்குதெரு ஜமாத் செய‌லாள‌ர் த‌ம்பி வாப்பா என்ற‌ முகைதீன் இப்ராகிம் முன்னிலை வ‌கித்தன‌ர்.ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ செய‌லாள‌ர் ப‌சீர் அக‌ம‌து வ‌ர‌வேற்றார்.
புற்றுநோய்க்கான சிற‌ப்பு மருத்துவ‌ர் காசி விஸ்வ‌நாத‌ன்(ம‌துரை மீனாட்சி மிஷ‌ன்) புற்று நோய்க்கான அறிகுறிக‌ள் ம‌ற்றும் புற்று நோய் வ‌ந்தால் அதை எப்ப‌டி போக்குவ‌து குறித்து விள‌க்க‌மாக‌ பேசினார்.ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌த்தின் பொருளாள‌ர் ஹாஜா ந‌ன்றி கூறினார்.
இதில் வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத் துணை த‌லைவ‌ர் ஜாஹிர் ஹுசைன் ம‌ற்று ஜ‌மாத்தார்க‌ள் ,யூசுப் சுலைகா ம‌ருத்துவ‌ம‌னை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் செய்யது அப்துல் காத‌ர்,பெண்க‌ள் உள்ப‌ட‌ ஏராளாமானோர் க‌லந்து கொண்டன‌ர்.நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை வ‌ட‌க்குத்தெரு நாசா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின‌ர் உள்ளிட்டோர் செய்திருந்த‌னர்.
கீழ‌க்க‌ரை ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ம் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் கீழ‌க்க‌ரை சுகாதார‌ பிர‌ச்ச‌னையை "ஜீ" டிவியில் "சொல்வ‌தெல்லாம் உண்மை" நிக‌ழ்ச்சியில் எடுத்துரைத்த‌து குறிப்பிட‌த‌க்க‌து.


 

Saturday, December 29, 2012

ராம‌நாத‌புர‌ம் தொகுதியில் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் குறித்து ஆய்வு!


ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அருகில் உள்ள‌ கிராம‌ங்க‌ள் உள்ளிட்ட‌ தொகுதிகுட்ப‌ட்ட ப‌குதிக‌ளில் ந‌ல‌ப்ப‌ணிக‌ளை ஆய்வு செய்தார்.


பொதும‌க்க‌ளை ச‌ந்தித்து குறைக‌ளை கேட்டார்.கீழ‌க்க‌ரை ந‌க‌ர் நிர்வாகிக‌ளில் ஒருவ‌ரான‌ சாதிக் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் உட‌ன் சென்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் உருவ‌பொம்மை எரிப்பு!

கீழ‌க்க‌ரை வி.ஏ.ஓ அலுவ‌ல‌க‌ம் எதிரில் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் உருவ‌ பொம்மையை அதிமுக‌வின‌ர் எரித்த‌ன‌ர்.

டெல்லியில் தேசிய‌ வ‌ள‌ர்ச்சி கூட்ட‌த்தில் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவை அவ‌மான‌ப்ப‌டுத்தியதாக‌ கூறி த‌மிழ‌க‌ம் முழுவ‌து ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர். இந்நிலையில் இன்று  காலை கீழ‌க்க‌ரை விஏஓ அலுவ‌ல‌க‌ம் எதிரில் அதிமுக‌ இளைஞ‌ர‌ணி செய‌லாள‌ர் இம்பால‌ சுல்தான் த‌லைமையில் ந‌க‌ர் அதிமுக‌வின‌ர் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் உருவ‌ பொம்மையை எரித்து ம‌த்திய‌ அர‌சுக்கு எதிராக‌ கோஷ‌ங்க‌ளை எழுப்பி ஆர்பாட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர்.


இதில் ந‌க‌ர் துணை செய‌லாள‌ர் கும‌ர‌ன்,மாண‌வ‌ர் அணி சுரேஷ்,அம்மா பேர‌வை செய‌லாள‌ர் ச‌ர‌வண‌ பாலாஜி,பாவா செய்ய‌து க‌ருணை,அலாவுதீன் கில்ஜி,பாண்டி உள்ப‌ட‌ ஏராள‌மான‌ அதிமுக‌வின‌ர் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

 

ப‌ழ‌ம்பெரும் ஒட‌க்கரை ம‌சூதி ப‌ழ‌மை மாறாமல் புதுபிக்க‌ப்ப‌ட்ட‌து!


கீழ‌க்க‌ரை ப‌ழ‌ம்பெருமைமிக்க‌ ம‌சூதிகளில் ஒன்றான‌ ஓட‌க்க‌ரை ப‌ள்ளியை புதுபிக்கு ப‌ணி சில‌ கால‌மாக‌ ந‌டைபெற்று வ‌ந்த‌து.
ப‌ள்ளியின் ப‌ழ‌மை மாற‌ம‌ல் அழ‌கிய‌ முறையில் புதுபிக்க‌ப‌ட்டிருப்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.
இத‌ற்கான‌ ப‌ணிக‌ள் நிறைவு பெற்ற‌தை வ‌ர‌வேற்கும் விதமாக‌ ஜ‌மாத்தார்க‌ள் உள்ளிட்ட‌ ஏராளாம‌னோர் க‌ல‌ந்து கொண்டு துஆக்க‌ள் ஓத‌ப்ப‌ட்டு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.


 

Thursday, December 27, 2012

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப்புற ப‌குதிக‌ளில் ம‌ழை!

ப‌ழைய‌(பைல்) ப‌ட‌ம்

வ‌ங்க‌ க‌ட‌லில் இல‌ங்கை அருகே குறைந்த‌ காற்ற‌ழுத்த‌ தாழ்வு நிலை க‌டந்த‌ ஒரு வார‌மாக நிலை கொண்டுள்ள‌து அத‌ன் கார‌ண‌மாக‌ த‌மிழ்நாடு முழுவ‌தும் உள்ள‌ க‌டற்க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் குறிப்பாக‌ ராம‌நாத‌புர‌ம்,க‌ன்னியாக்கும‌ரி உள்ளிட்ட‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய வாய்ப்புள்ள‌தாக‌வும் இம்ம‌ழை 29ந்தேதி வ‌ரை நீடிக்கலாம் என‌ வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் நேற்று இர‌விலிருந்து ம‌ழை பெய்து வ‌ருகிற‌து.ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் டெங்கு,மலேரியா போன்ற‌ நோய்க‌ளால் பொதும‌க்க‌ள் பாதிப்புக்கு உள்ளாகும்  சூழ்நிலையில் த‌ற்போது ம‌ழைநீர் தேக்க‌த்தினால் கொசுக்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்பு அதிக‌ம் என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் முன்னெச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ கொசு ம‌ருந்து தெளிப்பது,தேங்கிய‌ ம‌ழை நீரை அக‌ற்றுவ‌து போன்ற‌ சுகாதார‌ ப‌ணிக‌ளை விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

 

கீழக்கரை நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு! அதிமுக‌ க‌வுன்சில‌ர் 3 பேர் உள்ளிட்ட‌ 10பேர் வெளிந‌ட‌ப்பு!

ப‌ழைய‌ ப‌ட‌ம்

கீழக்கரை நகராட்சி கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர்கள் மூன்றுபேர் உள்பட 10 பேர் வெளிநடப்பு செய்த தால் கூட்டத்தை நகராட்சி தலைவர் ஒத்தி வைத்தார்.
கீழக்கரை நகராட்சி கூட்டம் நேற்று காலை கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. தலைவர் ராவியத்துல்கதரியா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கமிஷனர் முகம் மது முகைதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம் 39 தீர்மானங்கள் வைக்கப்பட்டன. இதில் 6 தீர்மானங்கள் படிக்கப்பட்டது.

7வது தீர்மான பொருளை படிக்க ஆரம்பிக்கும்போது, 15வது வார்டு கவுன்சிலர் மஜீதாபீவி, எனது வார்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை, பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து 11வது வார்டு கவுன்சிலர் மீராபானு 12வது வார்டு கவுன்சிலர் சித்தீக்அலி, 13வது வார்டு ரபியுதீன், 19வது வார்டுஅருஸியாபேகம், 20வது வார்டு ஹாஜா நஜிமுதீன், 16வது வார்டு ஜரினாபீவி(அதிமுக), 17வது வார்டு முகைதீன்காதர்சாகிபு (அதிமுக), 8வது வார்டு பாவா செய்யதுகருணை(அதிமுக), 3வதுவார்டு ரமேஷ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே டென்டர்விட்ட திட்டபணிகள் அனைத்தும் தரமான முறையில் நடைபெறவில்லை. இந்நிலையில் டெண்டர் என்ற பெயரில் தாங்களாவே பேசி முடிவு செய்து முறைப்படி டெண் டர் பெட்டி வைக்காமல் தீர்மானத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இந்த தீர்மானங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்’ என்றனர்.

21 கவுன்சிலரில் 13 கவுன்சிலர்களே கூட்டத்திற்கு வந்திருந்தனர். அதில் 10 பேர் வெளிநடப்பு செய்ததால் 3 பேர் மட்டுமே கூட்டரங்கில் இருந்தனர். இதனால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக தலைவர் அறிவித்தார்.
 

கீழ‌க்க‌ரையில் லாட்ட‌ரி விற்ற‌தாக 2 பேர் கைது !

கீழக்கரையில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ லாட்ட‌ரி விற்ற‌தாக‌ 2 பேர் சமீப‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
 இந்நிலையில் மீண்டும் போலீசாரின் தொட‌ர் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் வள்ளல் சீதக்காதி சாலையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்றுக்கொண்டிருந்த கீழக்கரை கிழக்குத் தெரு முத்து, தியாகராஜன், ஆகியோரை போலீசார் கைது செய்து 121 டோக்கன்களை கைப்பற்றினர். 

கீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ மீது எஸ்.பியிட‌ம் புகார்!


ச‌ம‌த்துவ‌ ம‌க்க‌ள்கட்சி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக‌ கீழக்கரை எஸ்.ஐ., செல்லமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சமத்துவ மக்கள் கட்சி நகர் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர் மயில்வாகனனிட‌ம்  மனு கொடுத்தனர்.

 இது குறித்து கீழ‌க்க‌ரை ச‌ப்‍ இன்ஸ்பெக்ட‌ர் செல்ல‌ம‌ணி கூறியதாவது: அனுமதியின்றி போர்டுகள் வைத்ததை தட்டிக்கேட்டேன். இத‌னால் வேண்டுமென்றே, பழி சுமத்துகின்றனர என்றார்.

 

Wednesday, December 26, 2012

ராம‌நாத‌புர‌த்தில் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் இழ‌ப்பார்!கீழ‌க்க‌ரை முஜீப் பேட்டி!

பைல் (ப‌ழைய‌)ப‌ட‌ம்
 
கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ முஜீப் த‌முமுக‌ மற்றும் ம‌ம‌கவில் மாவ‌ட்ட‌ பொறுப்பிலும்,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் பொறுப்பிலும் ப‌ணியாற்றி பின்ன‌ர் நீண்ட‌ கால‌த்திற்கு முன் அக்க‌ட்சியிலிருந்து நீக்க‌ப்ப‌ட்டார்.இவ‌ர் த‌ற்போது கீழ‌க்க‌ரையில் ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பை துவ‌ங்கி செய‌லாற்றி வ‌ருகிறார்.
கீழ‌க்க‌ரை முஜீப் கூறிய‌தாவ‌து,

ராம‌நாத‌புர‌ம் தொகுதி ச‌ட்டம‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ உள்ள‌ பேரா.ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவ‌ர்க‌ள் தேர்த‌ல் ச‌ம‌ய‌த்தில் கொடுத்த‌ வாக்குறுதிக‌ளை நிறைவேற்ற‌வில்லை என‌வே இனி ஒரு முறை ராமநாதபுர‌ம் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிர் இழ‌ப்பார்.
மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

தான் வெற்றிபெற்றால் கீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை நிறைவேற்றுவேன் என்றார் வ‌ருட‌ம் ஒன்றுக்கு மேலாகி விட்ட‌து.எவ்வித‌ முய‌ற்சியும் இல்லை.

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மானோர் டெங்குவால் பாதிக்க‌ப்ப
‌ட்டு ப‌ல‌ர் உயிரையும் விட்ட‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் என்ற‌ முறையில் என்ன‌ நட‌வ‌டிக்கை எடுத்தார்?

திமுக‌ ஆட்சியில் கீழ‌க்க‌ரை த‌னி தாலுகாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு வ‌ருட‌ங்க‌ளை க‌ட‌ந்து விட்ட‌து.ஏன் இன்னும் செயல்ப‌டுத்த‌ முய‌ற்சி எடுக்க‌வில்லை.

ராமநாத‌புர‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் மீன் பிடி தொழிலில் ஈடுப‌டுகின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளில் சில‌ர் க‌ட‌ல் அட்டையை க‌ட‌த்துகிறார்க‌ள் என்று கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள்.ஜ‌வாஹிருல்லா அவ‌ர்க‌ள் தேர்த‌ல் ச‌ம‌ய‌த்தில் "நான் வெற்றி பெற்று கட‌ல் அட்டை த‌டையை நீக்குவேன்" என்று வாக்குறுதி கொடுத்தார் ..செய்தாரா? குறைந்த‌ப‌ட்ச‌ம் காவ‌ல்துறையால் கட‌ல்அட்டையை கட‌த்தின‌ர்க‌ள் என்று கைது செய்ய‌ப்படும் மீன‌வர்க‌ளுக்கா குர‌ல் கொடுத்தாரா?
இன்னும் வ‌ரிசையாக‌ அடுக்கி சொல்ல முடியும்

முன்னாள் எம்.எல்.ஏ ஹ‌ச‌ன் அலி எவ்வ‌ளோவோ ப‌ரவாயில்லை என்று ம‌க்க‌ள் பேசும‌ள‌வுக்கு ஜ‌வாஹிருல்லாஹ் அவ‌ர்க‌ளின் நிலை உள்ள‌து

மக்க‌ளுக்காக‌ உழைப்பார் என‌ என‌ ந‌ம்பி அவ‌ருக்காக‌ தேர்த‌லில் உழைத்தோம்.எங்க‌ளை போன்ற‌ தொண்ட‌ர்க‌ள் உழைப்பில் கீழ‌க்க‌ரையில் ம‌ட்டும் 5 ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ வாக்குக‌ளை ஜவாஹிருல்லாஹ் பெற்றார்க‌ள்.அனைத்தும் விழ‌லுக்கு இரைத்த‌ நீராகி விட்ட‌து.மீண்டும் ஜ‌வாஹிருல்லாஹ் அவ‌ர்க‌ள் ராம‌நாத‌புர‌ம் தொகுதியில் போட்டியிடுவாரானால் டெபாசிட் இழ‌ப்பார் என்ப‌தை உறுதியாக‌ கூறுகிறேன்.
இனி வ‌ரும் கால‌ங்க‌ளிலாவ‌து அவர் தேர்த‌லில் கொடுத்த‌ வாக்குறுதிக‌ளை நிறைவேற்ற‌ வேண்டும் என்றார்.
 

கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளில் நில‌க்க‌ரி இருப்ப‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறு! ஆய்வு ப‌ணி நிறைவு!


ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் "க‌ருப்பு த‌ங்க‌ம்" என்ற‌ழைக்கப்ப‌டும் நில‌க்க‌ரி இருப்ப‌தாக‌ தெரிய‌வந்ததைய‌டுத்து  நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக கீழக்கரை, சாயல்குடி, உத்தரகோசமங்கை, வன்னிவயல், நயினார் கோயில் உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளில் ஆய்வுப் பணிகள் ந‌டைபெற்ற‌து. நடத்தப்பட்ட முதல் ஆய்வில், நிலக்கரி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்தது.

இதை தொடர்ந்து, எம்.இ.சி.எல்., கீழக்கரை திட்ட பிரிவின் மேலாளர் கோட்ட புல்லையா தலைமையில், 2010 நவம்பர் முதல், கீழக்கரையில் முகாமிட்டு, நிலக்கரி ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 118 சதுர கி.மீ., க்கு  பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் உதவியுடன் நிலக்கரி ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக, பல மாநிலங்களில், மத்திய அரசின் இந்திய தாதுக்கள் வெளிக்கோணரும் கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

எம்.இ.சி.எல்., அதிகாரி ஓருவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை, டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள நிபுணர்களின் ஆய்வுக்கு பின், பூமிக்கடியில் நிலக்கரியின் அளவு கண்டறியப்படும். அதிகளவில் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அடுத்தக்கட்ட பணி துவங்கும்.இதற்கிடையே கும்பகோணம் பகுதியில், ஆய்வுக்கான உத்தரவு வந்துள்ளது. ஆய்வு பணி மேற்கொள்ள அங்கு செல்கிறோம், என்றார்.

இத‌ற்கு முன் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தின் வழுதூர், கழுகூரணி உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

இப்பகுதிக‌ளில் நில‌க்க‌ரி இருப்பு உறுதி செய்ய‌ப்ப‌ட்டு ப‌ணிக‌ள் துவ‌ங்குமானால் இம்மாவ‌ட்டம் வ‌ள‌ம் கொழிக்கும் மாவ‌ட்ட‌மாக‌ மாறும் என ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர்.

Tuesday, December 25, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தலைவ‌ர் கிருஸ்தும‌ஸ் ம‌ற்றும் புத்தாண்டு வாழ்த்து !



கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்து ம‌கிழ்வோடு அறிவிக்கிறேன்` மேலும் புத்தாண்டு வாழ்த்துக்க‌ளையும் தெரிவிக்கிறேன் என்று ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Monday, December 24, 2012

ம‌க்க‌ள் ந‌ல ப‌ணிக‌ளுக்கு இடையூறு!ரோட்ட‌ரி ச‌ங்க த‌லைவ‌ர் ஆசாத் புகார்!



நாடு முழுவ‌தும் போலியோ ஒழிப்பை தீவிரப்ப‌டுத்தி போலியோ இல்லாத இந்தியாவாக‌ திக‌ழ‌ அரசாங்க‌ம் ம‌ற்றும் பொதும‌க்க‌ளின் ஒத்துழைப்போடு எடுத்த‌ முய‌ற்சி வெற்றியை நெருங்கி விட்ட‌ நிலையில் போலியோவை அடியோடு அக‌ற்றி அற‌வே இல்லாம‌ல் ஆக்க‌ ரோட்டரி ச‌ங்க‌ம் உள்ளிட்ட‌ ச‌மூக‌ நல‌ அமைப்புகளின் உத‌வியோடு ஏராள‌மான‌ போலியோ ஒழிப்பு முகாம்க‌ள் நடைபெற‌ உள்ள‌து.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் ஜனவரி 20, பிப்ரவரி 24ம் தேதிகளில் நடக்கிறது. முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212 சார்பில் நேற்று நெல்லையில் போலியோ ஒழிப்பு பயிற்சி பட்டறை நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ரமணி தலைமை வகித்தார். செயலாளர் அரிகிருஷ்ணன், துணை கவர்னர் டால்டன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவர்னர் ஷாஜகான், அசோக் பத்மராஜ், தேசிய போலியோ ஒழிப்பு கண்காணிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கமாலுதீன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா, டாக்டர் பிரதாப்சந்திரன், போலியோ திட்ட தலைவர் டாக்டர் விஜயகுமார் உட்பட பலர் பேசினர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ முகாமில் சொட்டு மருந்து வழங்குவது, போலியோ முகாம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது.


இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத் கூறுகையில்,

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌தும் ஜ‌னவ‌ரி20 ம‌ற்றும் பிப் 24ல் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்க‌ள் ந‌டைபெற‌ உள்ள‌து.வீடு வீடாக‌ சென்றும் போலியோ சொட்டு ம‌ருந்து கொடுக்க‌ உள்ளோம்.பொதும‌க்க‌ள் அனைவ‌ரும் போலியோவை ஒழிக்க‌ முழு ஒத்துழைப்பு த‌ர‌ வேண்டும்.

மேலும் ம‌க்க‌ள் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ போலியோ ஒழிப்பு தொட‌ர்பாக‌  விள‌ம்ப‌ர‌ போர்டுக‌ளை வைத்துள்ளோம்.மெயின் ரோடில் குறிப்பிட்ட‌ இட‌த்தில் சாலையோர‌ம் போலியோ ஒழிப்பு விள‌ம்ப‌ர‌ போர்டு வைப்ப‌த‌ற்கு அர‌சிய‌ல் க‌ட்சியில் உள்ள‌ உள்ளூரை சேர்ந்த‌ ஒருவ‌ர் இடையூறு செய்கிறார்.எத்த‌னையோ வியாபார‌,அர‌சிய‌ல் போர்டுக‌ள் வைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ அத‌ற்கெல்லாம் இடையூறு இல்லை ம‌க்க‌ளின் ந‌ல‌னிற்க்காக‌ வைக்க‌ப்ப‌டும் போர்டை  வைக்க‌ கூடாது என‌ இடையூறு செய்கின்ற‌ன‌ர்.ம‌ன‌துக்கு மிக‌வும் வேத‌னையாக‌ உள்ள‌து.

போர்டை அக‌ற்ற‌ முடியாது என‌ கூறி விட்டோம் அத‌ற்கு மேலும் இடையூறு செய்தால் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ந்திப்போம் என‌வே த‌ய‌து செய்து இது போன்ற‌ ம‌க்க‌ள் ந‌ல‌ ப‌ணிக‌ளை இடையூறு செய்யாதீர்க‌ள் என‌ வ‌லியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்றார்.

Sunday, December 23, 2012

கீழக்கரை மகளிர் கல்லூரிக்கு ச‌ர்வ‌தேச‌(ஐஎஸ்ஓ) தரச் சான்றிதழ்

photo by tbakcw

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டில் ( International Organization for Standardization )சர்வதேச தரக்குழுவினரின் தரச்சான்று பெற்றுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுமையா கூறுகையில்,

‘சர்வதேச வலையமைப்பு மற்றும் ஆஸ்திரிய தரச் சான்றிதழ் அமைப்பு குழுவினர் கல்லூரிக்கு வ‌ருகை த‌ந்த‌ன‌ர். கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் வடிவமைத்தல் மற்றும் பட்டம் வழங்குதலையும், ஆராய்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பு மேம்பட்ட பட்டயம் முதுநிலை பட்டய படிப்புகளுக்குரிய கலை அறிவியல், மனிதநேயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கல்லு�ரியின் வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டிலேயே ஐ.எஸ்.ஓ. 9001&2008 சான்றிதழ் வழங்கியுள்ளனர்’ என்றார்.
 

நூற்றுக்க‌ண‌​க்கான‌ ம‌யில்க‌ளை பாதுகாக்க‌ சர‌ணால‌ய‌ம் அமைக்க‌ கோரிக்கை!



கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதியில் தேசிய‌ ப‌றவையான‌ மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என‌ ச‌மூக ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை,ஏர்வாடி,காஞ்சிர‌ங்குடி ஆகிய‌ ப‌குதிக‌ளில் நூற்றுக்க‌ண‌க்கான‌ ம‌யில்க‌ள் சுற்றி திரிகின்ற‌ன‌. இவை வீடுக‌ளோடு கூடிய‌ தென்ன‌ந்தோப்புக‌ளுக்கு  வ‌ரும் போது அங்குள்ளோர் மயில்களுக்கு உண‌வு கொடுக்கின்றனர். மற்ற நேரங்களில் அப்பகுதியிலுள்ள புழு, பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.

ப‌ட‌ விள‌க்க‌ம்:‍கீழ‌க்க‌ரை அருகே தோட்ட‌த்தில் நெருங்கி நிற்கும் ம‌யில்

உணவு கிடைக்காத காலங்களில், அருகில் உள்ள வயல்களில் நெல்கதிர்களை சாப்பிடுகின்ற‌ன‌.  உணவு தேடி சுற்றி திரியும் மயில்கள், உணவு கிடைக்குமிடங்களில் தங்கி விடுகின்றன.தற்போது இப்பகுதியில் நூற்றுக்க‌ண‌க்கான‌ ம‌யில்க‌ள் சுற்றி திரிகின்ற‌ன‌ர். மயில்கள் அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ள் நிறைந்த‌ ப‌குதிக‌ளிலும்,தென்ன‌ந்தோப்பு  ப‌குதிக‌ளிலும்,வ‌ய‌ல் வெளிக‌ளிலும்  அதிக‌ம் காண‌முடிகிற‌து.வீட்டு வ‌ள‌ர்க்கும் கோழி,சேவ‌லை போன்று சாத‌ர‌ண‌மாக‌ சுற்றி திரிகிற‌து.

 மேலும் சில‌ நேர‌ங்க‌ளில் உணவு தேடி மெயின் ரோட்டிற்கு வரும் மயில்களை, தெருநாய்கள் கடிக்கின்றன. சில மயில்கள் வாகனங்களில் அடிப‌ட்டு இறக்கின்றன. மயில்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை.கீழ‌க்க‌ரை,ஏர்வாடி,திருப்புல்லாணி ப‌குதிக‌ளில்  மயில்களை பாதுகாக்க சரணாலயம் அமைத்து பொழுது போக்கு தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ப‌ற‌வை ஆர்வ‌ல‌ர் ஹாஜா அலாவுதீன் கூறுகையில்,

சுதந்திரமாக சுற்றி திரியும் மயில்களுக்கு சரணாலயம் அமைப்ப‌து ச‌ற்று க‌டின‌ம்த‌ன். ஏனெனில், ஒரு நாளைக்கு மயில்கள் ப‌ல‌ கிலோமீட்டர்க‌ள் எல்லையை பறந்து கடக்கவல்லது. எனவே அதனை சரணாலயத்துக்குள் முடக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல.ஆனாலும் அர‌சாங்க‌ம் சோத‌னை முய‌ற்சியாக‌ இப்ப‌குதியில் ச‌ராணால‌ய‌ம் அமைத்து ம‌யில்க‌ளை காப்பாற்ற‌ முய‌ற்சி செய்ய‌ வேண்டும்.