Thursday, January 31, 2013

கீழ‌க்க‌ரை சாலை தெருவில் மீலாத் நிக‌ழ்ச்சி!


.





உத்த‌ம‌ ந‌பியின் உத‌ய‌ தின‌ விழா சிற‌ப்பு சொற்பொழிவு நிக‌ழ்ச்சி கீழ‌க்க‌ரை சாலை தெரு தொழுகை பெண்க‌ள் தொழுகை ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.
இந்நிக‌ழ்வுக்கு ஹாபிழ் உம‌ர் அஹ‌ம‌து கிராஅத் ஓதி தொட‌ங்கி வைத்தார்.

மெள‌லானா மெள‌லவி ம‌ன்சூர் அலி நூரி வ‌ர‌வேற்புரையாற்றினார்.ஜ‌ப்பார் முன்னிலை வ‌கித்தார்.மெள‌லானா மெள‌லவி சாகுல் ஹ‌மீது அலீம் தாவுதி வாழ்த்துரை வழ‌ங்கினார்.

மெள‌லானா மெள‌வி ஹாபிழ் ஹாஜி ஹாமித் ப‌க்ரி ஆலிம் ம‌ன்ப‌யீ சிற‌ப்புரையாற்றினார்.சாகுல்ஹாமிது ந‌ன்றி கூறினார்.இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்
 18 வாலிப‌ர்க‌ள் த‌ர்ஹா நிர்வாக‌ க‌மிட்டி சார்பில் நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

காலமானார் (வபாத் அறிவிப்பு)



காலமானார் (வபாத் அறிவிப்பு)

கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளிதெரு ஜமாத்தை சேர்ந்த‌ சாகுல் ஹ‌மீது(52) அவ‌ர்க‌ள் நேற்று மாலை( வ‌பாத்)கால‌மானார்.இன்னா லில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். ந‌ல்ல‌ட‌க்க‌ம் முக‌ம்ம‌து காசிம் அப்பா மைய‌வாடியில் ந‌டைபெற்ற‌து.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து ச‌கோத‌ர‌ர் ஹாஜா கேட்டு கொண்டுள்ளார்.

த‌க‌வ‌ல்: முஜீப்






 

Tuesday, January 29, 2013

கீழ‌க்க‌ரை வ‌ங்கியில் ரூ500 க‌ள்ள‌ நோட்டுக்க‌ள் டெபாசிட்!ஒருவ‌ர் கைது!


கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில், கள்ளநோட்டுகளை செலுத்தியது தொடர்பாக, ஏர்வாடி ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமிலை, போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவ‌ல்துறை த‌ர‌ப்பில் கூற‌ப்படுவ‌தாவ‌து...

பார‌த‌ ஸ்டேட் வங்கிக்கு, நேற்று மதியம் 1 மணிக்கு, ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமில், 28, வந்தார். அவரது சகோதரர் கணக்கில் வரவு வைக்க செலுத்திய 4,500 ரூபாயில், மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. வங்கி மேலாளர், போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஏர்வாடி செய்யது முகம்மது அல்தாப் என்பவரிடம் பணம் வாங்கியதாக, முகம்மது ஜமில் தெரிவித்தார். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2010 ஜூலை 28 ல், ராமநாதபுரத்தில் 6 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் அல்தாப் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. முகம்மது ஜமில் சிக்கியதை அறிந்து, அல்தாப் தலைமறைவாகி விட்டதாக‌வும் அவரை போலீசார் தேடி வருவ‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

மூன்றரை டன் வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகுப்பு கீழ‌க்க‌ரை மாணவன் சாதனை



பள்ளி ஆண்டு விழாவில் மகேந்திரா வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பேரல்மாண்டிசோரி நர்சரி அண்டு பிரைமரி பள்ளியின் 20வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஷரிபாஅஜீஸ் தலைமை வகித்தார். பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹக்பீல் மரைக்கா(11), மூன்றரை டன் எடை கொண்ட மகேந்திரா வேனை இடுப்பில் கயிற்றை கட்டி 100மீட்டர் து�ரம் வரை இழுத்து அனைவரின் பாராட்டை பெற்றார். விழாவில், கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர், தலைமையாசிரியர் சாகிராபானு, சீதக்காதி அறக்கட்டளை துணைமேலாளர் சேக்தாவூது, தாசிம்பீவி அப்துல்காதர், மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா கலந்துகொண்டனர்.

பள்ளி கராத்தே ஆசிரியர் கண்ணன் கூறுகையில், “மாணவர் ஹக்பீல் மரைக்கா, கராத்தே வகுப்பில் கிரீன் பெல்ட் பெற்றுள்ளார். பெற்றோர் ஊக்கம் அளிப்பதால் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என மாணவர் விரும்பினார். வேனை இழுத்து சாதனை புரிய வேண்டும் என கருதி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தற்போது பள்ளியில் நடந்த விழாவில் மகேந்திரா வேனை இழுத்து சாதனை புரிந்துள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் நடந்த கராத்தே (குமித்தே பிரிவில்) போட்டியில் ஹக்பீல்மரைக்கா முதலிடம் பெற்றுள்ளார்,”என் றார்.
கீழக்கரை பேரல் மாண்டிசோரி நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் நடந்த 20வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் 6ம் வகுப்பு மாணவர் ஹக்பீல்மரைக்கா மகேந்திரா வேனை 100மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார்.
 

Monday, January 28, 2013

கீழ‌க்க‌ரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு !


கீழக்கரை மறவர்தெருவில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து 15 வெங்கல குத்துவிளக்கு, 2 வெங்கல தாம்பூலம், 1 சிடி பிளேயர் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கீழ‌க்க‌ரை ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் குடிய‌ர‌சு தின‌ விழா !

 கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி முதல்வர் மேப‌ல் ஜஸ்டஸ் தலைமை வகித் தார். தலைமையாசிரியர் ஜோசப்சார்த்தோ முன்னிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தேசிய கொடி ஏற்றினார்.

கைரத்துல்ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளா ளர் சாதிக் தலைமையில், கல்விக்குழு உறுப்பினர் சுஐபு கொடி ஏற்றினார்.

வ‌ட‌க்குதெரு முஹைதீனியா ப‌ள்ளியில் ப‌ள்ளி நிர்வாகிக‌ள் முன்னிலையில் கொடி ஏற்ற‌ப்ப‌ட்ட‌து.

ஹமீதியா மெட்ரிக் பள்ளி யில் தாளாளர்ஹமீது அப்துல்காதர் தலைமையில் உஸ்வதுன் ஹசனா முஸ்லீம்சங்க துணைத்தலைவர் நசீர் தேசிய கொடி ஏற்றினார்.

ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தாளா ளர் யூசுப் சாகிபு தலைமை யில் தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் முன்னிலையில் அகமது ரியாஸ் கொடி ஏற்றினார்.

சதக்கத்துன்ஜாரியா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் தாளாளர் ஜமாலுதீன் கொடி ஏற்றினார்.

மாவிலா தோப்பு நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செல்வன் தலைமை யில் கிராம கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடி ஏற்றினார்.

தாசிம்பீவி அப்துல்காதர் மகளீர்கல்லு�ரியில் முதல்வர் சுமையா தலைமையில்சீதக்காதி அறக்கட்டளை துணைமேலாளயர் சேக்தாவூது தேசிய கொடி ஏற்றினார்.

 முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலையிலும் பாலிடெக்னிக் கல்லு�ரியில் முதல்வர் அலாவுதீன் முன்னிலையிலும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லு�ரியில் முதல்வர் அபுல்ஹசன்சாதலி முன்னிலையிலும் முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமையில் கல்லு�ரி இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா கொடி ஏற்றினார்.

பெரியபட்டிணம் அல்ஜலாலியா நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியர் சாரதா தலைமையில் ஜலால்ஜமால் ஜூம்ஆ பள்ளி இமாம் முகம்மது ஜாபர் முன்னிலையில் முன்னாள் தலைவர் சாகுல்ஹமீது தேசிய கொடி ஏற்றினார், அல்கலாம் நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியர் காதர் இபுராகிம் தலைமையில் ரகுநாதபுரம் உதவி மின் பொறியாளர் சாதனா தேசிய கொடி ஏற்றினார்.

நகராட்சியில் கமிஷனர் முகம்மது முகைதீன் தலை மையில் சுகாதார ஆய்வா ளர் திண்ணாயிர மூர்த்தி, தலைமை எழுத் தாளர் நாகநாதன் முன்னிலையில் தலைவர் ராவியத்துல்கதரியா கொடி ஏற்றினார்.

காங்கிரஸ் சார்பில் நகர் தலைவர் ஹமீதுகான் முஸ் லீம் பஜாரில் நிர்வாகிகள் கனி, முருகானந்தம், வேலாயுதம் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி னார்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தேசிய கொடியை ஏற்றினார்.
 

கீழ‌க்க‌ரை அருகே ஆட்டோவில் ம‌து விற்ற‌தாக‌ 3பேர் கைது!


தமிழக அரசால் ஜன., 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள் அடைப்பால் திண்டாடும் "குடிமகன்க‌ளுக்காக‌ கீழக்கரையில் பல்வேறு இடங்களில் சமூக விரோத கும்பல் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு தடையின்றி விற்பனை செய்தனர். முக்கிய திருப்பங்களில் இன்பார்மர்கள் நின்று கொண்டு போலீசார் வருகையை கண்காணித்து தகவல் கொடுத்தனர். இதனால் கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து..
கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆட்டோவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில், எஸ்.ஐ., செல்லச்சாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். ஆட்டோவில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த  பசீர் அகமது, 28. பைக்கில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்த மவுசீன், 38. உதவியாக இருந்த  செல்வம், 33, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 73 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

கீழ‌க்க‌ரை அருகே பேச்சாளை மீன் ஏற்றி சென்ற‌ 14 லாரிக‌ள் ப‌றிமுத‌ல்!!


ராமேஸ்வரத்திலிருந்து பேசாளை மீன்களை, தூத்துக்குடிக்கு ஏற்றிச் சென்ற 14 லாரிகளை கீழக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு லாரி டிரைவர்கள் அபராத தொகை செலுத்தியதால் விடுவிக்கபட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை, பாம்பன், ஏர்வாடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இப்ப‌குதி க‌ட‌லில் பிடிப‌டும் பேச்சாலை மீன்க‌ள் அதிக‌ள‌வில் கேர‌ளாவிற்கு ஏற்றும‌தி செய்கின்ற‌ன‌ர் கேரளா மக்களால் "மத்தி' என்றழைக்கப்படும் இப்பேச்சாளை மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். லாரி, வேன்களில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.மேலும் கெட்டு போன மீன்கள் கோழி தீவனத்திற்காக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

சாலை வ‌ழியாக‌ வாகனங்கள் மூல‌ம் எடுத்து செல்லும் போது மீன்களில் இருந்து வழியும் ரத்தம் கலந்த கழிவு நீர் சாலையில் வ‌ழிந்து வாக‌ன‌ங்க‌ள் செல்லும் வ‌ழிக‌ளெல்லாம் கடும் துர்நாற்றம் வீசுவ‌தாக‌வும்.இக‌ழிவுநீர் வழுவழுப்பு தன்மை உடையதால் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விப‌த்துக்குள்ளாகின்ற‌ன‌ர் என்று அப்ப‌குதி ம‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டி வ‌ந்த‌ன‌ர்.

 இதை தடுக்க கோரி கடந்தாண்டு கீழக்கரை அருகே இளைஞர்கள் பேசாளை ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்தனர். பாதுகாப்பான முறையில் பேசாளை மீன்களை வாகனங்களில் கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்தும் கேரளா மீன் வியாபாரிகள் கண்டு கொள்ள‌வில்லை.

இந்நிலையில் நேற்று மாலை கீழக்கரை வழியாக தூத்துக்குடிக்கு லாரிகளில் பேசாளை மீன்கள் ஏற்றிச் சென்றனர். கீழக்கரை டி.எஸ்.பி,சோமசேகர் தலைமையில், பரமக்குடி இயக்க ஊர்தி ஆய்வாளர் (நிலை 2) அசோக்குமார்,கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் காஞ்சிரங்குடி அருகே சோதனை நடத்தினர்.பேசாளை மீன்களை ஏற்றி வந்த 14 லாரிகளை பிடித்தனர்.இதில் இரண்டு லாரி டிரைவர்கள் அபராத தொகை 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். மற்ற 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இப்ப‌குதியில் ஒரே நேர‌த்தில் இத்த‌னை லாரிக‌ளை ப‌றிமுத‌ல் செய்த‌து இதுவே முத‌ல் முறையாகும்.


கீழக்கரை கல்லூரியில் மீலாத் நிக‌ழ்ச்சி!


கீழக்கரை முகம்மது அறக்கட்டளையின்கீழ் இயங்கும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, முகம்மது சதக் பொறியியல்கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மற்றும் ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி இணைந்து நபிகள்நாயகம் பிறந்த நாள் விழா (மீலாத்) பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார், கல்லூரி தாளாளர் யூசுப்சாகிபு, பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, ஹமீதியா ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆசிரியர்(ஓய்வு) முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார். கரூர் சிந்தாமணிபட்டி தாருல்உலூம் அரபிக்கல்லூரி நிறுவனர் சிராஜூதீன்அகமது ரஷாதி, கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளிவாசல் கத்தீப் முகம்மது மன்சூர்அலி நூரி பேசினர். கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

 

Sunday, January 27, 2013

ம‌துரை - வ‌ளைகுடா நேர‌டி விமான‌ம்!துபாயில் முக்கிய‌ ஆலோச‌னை !




மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை துவக்க வலியுறுத்தி, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் வளாக‌த்தில் ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து. 

இக்கூட்ட‌த்திற்கு இடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌த்தின் மேலாண்மை இய‌க்குந‌ர் செய்ய‌து எம் ச‌லாஹீதீன் த‌லைமை வகித்தார். ம‌துரையிலிருந்து துபாய்க்கு வ‌ருகை தந்திருந்த‌  முன்னாள் எம்.பி., ராம்பாபு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் பிரபாகரன், , டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா , மற்றும் அமீரக ஏர் இந்தியா அமீரக‌ மேலாள‌ர் ராம்பாபு ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இடிஏ மெல்கோ செயல் இயக்குநர் அஹமது மீரான் வரவேற்புரையாற்றினார்.

 கூட்ட‌த்தில்  இடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌த்தின் மேலாண்மை இய‌க்குந‌ர் செய்ய‌து எம் ச‌லாஹுதீன் பேசியதா‌வ‌து,

ம‌துரையிலிருந்து வ‌ளைகுடாவிற்கு குறிப்பாக‌ அமீர‌க‌த்திற்கு நேர‌டி விமான‌ சேவையை தொட‌ங்குவ‌த‌ன் மூல‌ம் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளின் தொழில் வ‌ள‌ம் பெருகும்.மேலும் வ‌ளைகுடாவிலிருந்து சுற்றுலா ம‌ற்றும் ம‌ருத்துவ‌ சிகிச்சைக்கு அதிக‌ளவில் வ‌ருகிறார்க‌ள்.இவர்க‌ள் ம‌துரைக்கு வ‌ருவ‌து அதிகரிக்கும்.ம‌துரை விமான‌ நிலைய‌த்திலிருந்து வெளியே வாக‌ன‌ங்க‌ளில் எவ்வித‌ நெரிச‌லும் இல்லாம‌ல் செல்லும் அள‌வுக்கு சாலை வ‌ச‌திக‌ள் உள்ள‌ன‌.இது ம‌ற்ற‌ விமான‌ நிலைய‌ங்க‌ளில் இல்லாத‌ வ‌ச‌தியாகும்.இத‌ற்காக‌ எங்க‌ள் நிறுவ‌ன‌த்தின் சார்பாக‌ அனைத்து ஆத‌ர‌வையும் த‌ர‌ தயார் என்ற‌தோடு தொட‌ர்ந்து நேர‌டி விமான‌த்தின் வ‌ச‌தியை வ‌லியுறுத்தி பேசினார்.
 ம‌துரையின் முன்னாள் எம்.பி., ராம்பாபு.எம்.பி. பேசிய‌தாவ‌து,
துபாயிலிருந்து ஒரு 40இன்ச் டிவி வாங்கி ம‌துரை சென்றாலே நாம‌ வ‌ந்து சென்ற‌ டிக்கெட் க‌ட்ட‌ண‌த் தொகையை லாப‌மாக‌ பெறலாம் என்கின்ற‌ அள‌வுக்கு எல்க்ட்ரானிக் பொருள்க‌ளின் விலை  உள்ள‌து.துபாய் ஷாப்பிங் செய்வ‌த‌ற்கு ஏற்ற‌ ந‌க‌ர‌மாக‌ உள்ள‌து.நேர‌டி விமான‌ம் போக்குவ‌ர‌த்திற்கு முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.இக்கோரிக்கைக‌ள் குறித்து விமான‌ போக்குவ‌ர‌த்துதுறை அமைச்ச‌ரிட‌ம் வ‌லியுறுத்தி விரைவில் துவ‌ங்க‌ ஏற்பாடு செய்வோம் என்றார்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பேசிய‌தாவ‌து,
மதுரை துபை விமான சேவைக்கு இடிஏ குழுமம் நிர்வாக இயக்குநர் ஸலாஹுத்தீன் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்காகவும், நேர‌டி விமான‌த்திற்கு இங்கே(துபாய்) கிடைக்கும் தமிழர்களிடத்திலே கிடைக்கும் ஆத‌ர‌வை க‌ண்டும் மிக‌வும் ம‌க‌ழ்ச்சிய‌டைந் தோம். 2012 ஜன.முதல் ஜூன் வரை 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.துபாய் தொழில் வர்த்தக சங்கத்தில், இந்திய
நிறுவனங்களை சேர்ந்தவர்கள் 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அச்சங்கத்துடன் தகவல் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள், ம‌துரையில் தொழில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. மதுரையில் சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலா அதிகரித்துள்ளது.தென் மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர், அரபு நாடுகளுக்குச் சென்றுவருகின்றனர். தற்போது, திருச்சி அல்லது சென்னை வழியாகவே பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, திருச்சியிலிருந்து துபாய், ஷார்ஜா, அபுதாபி, மஸ்கட், பகரைன், தோகா உட்பட 13 சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டுள்ளது. மதுரையில் இருந்தும் துவங்க வேண்டும்.ம‌துரை துபாய் நேரடி விமான‌ம் வ‌ந்தால்  ஷாப்பிங் செய்ய‌ ம‌க்க‌ள் துபாய்க்கு வ‌ருவ‌த‌ற்கு வாய்ப்பு அதிக‌ம்.வ‌ர்த்த‌க‌ ரீதியாக‌ ம‌துரை துபாய் வெற்றிக‌ர‌மாக‌ ந‌டைபெறும் மேலும் ம‌த்திய‌ அர‌சாங்க‌ம் இத‌ற்கான‌ அறிவிப்பை விரைவில் வெளியிட‌ வேண்டும்.கோடைகால‌ சீச‌னான‌ மார்ச் 29க்குள் இத‌ற்கான‌ அறிவிப்பு வெளிவ‌ர‌ வேண்டும். என்றார்.

அமீர‌க ஏர் இந்தியா நிறுவன ‌ மேலாள‌ர் ராம்பாபு தனது ஏற்புரையில்,

இந்த ஆலோசனைக் கூட்டம் மிக‌வும் ப‌ய‌னுள்ளது.இக்கூட்டத்தில் எடுத்துரைக்க‌ப்ப‌ட்ட‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளின்ப‌டி நிச்ச‌ய‌ம் இவ்‌ வ‌ழித்த‌ட‌ம் லாபகரமாக‌ இய‌ங்கும் என்பதில் சந்தேகமில்லை .இத‌ற்கு மேல் எந்த‌ ஒரு புள்ளி விப‌ர‌மும் தேவைப்ப‌டாது. இங்கு விவாதிக்கப்பட்ட விசயங்களை ஏர் இந்தியா நிறுவ‌ன‌த்தின் தலைமையகத்திற்கு எடுத்து செல்வேன்.வெகு விரை இத‌ற்கான‌ ந‌ல்ல‌ அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவ‌ன‌ம் வெளியிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாண்டியன் ஹோட்டல் இயக்குநர் முனைவர் வாசுதேவன் , மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை சம்பந்தமான சந்தை ஆய்வை ஒளி-ஒலிக்காட்சி மூலம்  விளக்கினார்.

ம‌துரையிலிருந்து தொழில் வர்த்தக சங்கம், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், டிராவல்ஸ் கிளப் நிர்வாகிகள் ம‌ற்றும் துபாய் அமீர‌க‌ த‌மிழ் மன்ற‌ம் சார்பில் அமுத‌ர‌ச‌ன்,அமீர‌க‌ த‌மிழ் அமைப்பு சார்பில் அஹ‌ம‌து மைதீன்,காயிதேமில்ல‌த்பேர‌வை ஹபீபுல்லா, வாணலை வளர் தமிழ் மன்றம் கீழை ராஸா,ஈமான் சார்பில் ஹ‌மீது யாசின்,துபை தமிழ்ச் சங்கம் ஜெகந்நாதன்,கீழ‌க்க‌ரை கிளாஸிபைட் எஸ்கேவி,கீழ‌க்க‌ரை நாசா ச‌ங்க‌த்தின் சார்பில் ஜெயினுலாப்தீன்,வ‌ஜிவுதீன் உள்ளிட்ட‌ ப‌லர் க‌லந்து கொண்ட‌ன‌ர். இரவணசமுத்திரம் முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார்.

கீழக்கரை ஹமீது ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
 நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை இடிஏ நிறுவ‌ன‌த்தின் சார்பில் த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் அரிகேசவநல்லூர் S.S. மீரான் செய்திருந்தார்.




 

கீழ‌க்க‌ரை வேலைவாய்ப்பு முகாமில் 159 பேர் ப‌ணியில் நிய‌ம‌ன‌ம்!!

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மின்னியல், மின்னணுவியல், தொடர்பியல் படிப்புகள் முடித்தவர்கள் மற்றும் 2013ல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார், சென்னை அவலான் டெக்னாலஜி பன்னாட்டு நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை முதுநிலை மேலாளர் முருகன், அலிபாதுஷா, ஜிட்இன்பான்ட்ராஜ், பிரபாகரன் ஆகியோர் நேர்முகத்தேர்வை நடத்தினர்.

தங்கச்சிமடம், காரைக்குடி, தூத்துக்குடி, தேவகோட்டை, சிவகாசி, பரமக்குடி போன்ற ஊர்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 270க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 2010&2011&2012ல் டிகிரி முடித்த 70 மாணவர்களும், 2013 இறுதியாண்டு பயிலும் 89மாணவர்களும் என 159 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாண்டு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து, மே மாதத்தில் வேலையில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது செய்திருந்தனர்.

Saturday, January 26, 2013

விஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌டை செய்ய‌ ம‌த்திய‌ அர‌சை வ‌லியுறுத்துவோம்! இ.யூ.முஸ்லீம் லீக் நிர்வாகி அறிக்கை!


                               கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான்


அப்துல் ர‌ஹ‌மான்.எம்.பி
இந்திய‌ யூனிய‌ன் முஸ்லீம் லீக் நிர்வாகிக‌ளில் ஒருவ‌ரான‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில்,

முஸ்லிம் ச‌முதாய‌த்தை தவ‌றாக‌ சித்த‌ரிக்கும்‌ வ‌கையில் த‌யாரிக்க‌ப்ப‌ட்டு இருப்ப‌தாக‌ கூற‌ப்ப‌டும் விஸ்வ‌ரூப‌ம்  திரைப்ப‌டைத்தை முஸ்லீம் லீக் த‌லைமையின் முய‌ற்சியின் மூல‌ம்   நேற்று மதியம் தமிழ்நாட்டில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் கேரளா மாநில நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அங்கேயும் தடை விதிக்க கேட்டுக் கொண்டனர். உடனடியாக இதை மாநில முதல்வர் உம்மன்சாண்டி கவனத்திற்கு எடுத்து சென்ற அம்மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அன்று நேற்று இரவு கேரள முதல்வர்,உள்துறை அமைச்சர்,தலைமைச் செயலாளர்,ஆகியோருடன் அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி,ஈ.டி.பஷீர் எம்.பி.,ஆகியோர் அலோசனை நடத்தினர்..கேர‌ளாவில் த‌டை செய்ய வ‌லியுறுத்திய‌து போன்று போன்று "விஸ்வ‌ரூப‌ம்" திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌டை செய்ய‌ ம‌த்திய‌ அர‌சை வ‌லியுறுத்துவோம்..இது குறித்து ந‌ம‌து த‌லைவ‌ர்க‌ளில் ஒருவரான‌ அப்துல் ர‌ஹ‌மான்.எம்.பி அவ‌ர்க‌ள் க‌ருத்தை உங்க‌ள் பார்வைக்கு வைக்கிறேன்.

  முஸ்லிம்களின் உயிர் மூச்சான புனித குர்ஆனையும்,தீவிரவாத போக்கினையும் இணைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமே தீவிர வாதத்துக்கு துணை நிறகக்கூடியதைப் போன்ற காட்சிகளையே பரவலாகக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் லீக் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கின்றது.

 நம்முடைய எதிர்ப்பை மிக அழுத்தமாக தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் திர்.ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம்.சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தெரிவித்திருக்கின்றன.தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்திருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த படத்தை வெளியிடாமல் முற்றுலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் லீகின் நிலைபாடு வருகிற 28-ம் தேதி வெளியிடப்ப்ட இருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பும் இதே அடிப்படையிலான நியாமுள்ள தீர்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கின்றோம்.
இந்த திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு நிச்சயமாக கெடும் என்கிற அச்சப்பாடு நிலவி வருவதை அரசாங்கமும் நீதிமன்றமும் கருத்தில் கொள்வது இன்றியமையாதது.திரைப்படங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மாத்திரமல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது.என்கிற முஸ்லிம் லீகின் நிலையை எல்லாத் தளங்களிலும் பதிவு செய்தே வருகிறோம்.

மதமாச்சரியம் இல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வரையரையை  மீறிய காரணத்தினால் தான் விஸ்வரூபம் படம் கடும் எதிர்ப்பினை சந்தித்திருக்கிறது.இந்த எதிர்ப்பு தார்மீக நிலையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தினால் தான் தமிழக அரசும் உடனடியாக 15 நாட்கள் தடை விதிக்க முன் வந்திருக்கிறது.
இந்தத் தடை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலையைஉண்டாக்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை,ஆகவே அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களிம் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் எந்த தயவு தாட்சண்யும் காட்டக்கூடாது என்பதை மாத்திரம் இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

Thursday, January 24, 2013

விஸ்வ‌ரூப‌த்திற்கு சென்சார் சான்றித‌ழ் ர‌த்து செய்ய‌ வேண்டும்!கீழ‌க்க‌ரையில் ஜ‌‌வாஹிருல்லாஹ்.எம்.ஏல்.ஏ பேட்டி!


பைல்(ப‌ழைய‌ ப‌ட‌ம் 2011)

இன்று (24.01.13) கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ந்திருந்த‌ தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் ....

இஸ்லாமிய‌ர்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ மிக‌ மோச‌மாக‌ சித்த‌ரித்து ம‌ன‌ம் புண்ப‌டும் வகையில்  த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ விஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை த‌டை செய்துள்ள‌ த‌மிழக அர‌சிற்கு இஸ்லாமிய‌ர்க‌ள் சார்பில் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இப்ப‌ட‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ சென்ஸார் சான்றித‌ழை ர‌த்து செய்ய‌ வேண்டும்.இத‌ற்கு சென்ஸார் சான்றித‌ழ் வ‌ழ‌ங்கிய‌ குழுவின‌ர் மீது ம‌த்திய‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.சென்சார் குழுவில் ஒருவ‌ர் இஸ்லாமிய‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர் அவ‌ர் மீது கூடுத‌ல் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ தவ‌றும் ப‌ட்ச‌த்தில் ம‌த்திய‌ அர‌சை எதிர்த்து பெரும் போராட்ட‌ம் அறிவிக்க‌ப்ப‌டும்.

இவ்வாறு அவ‌ர் கூறினார்


 

Wednesday, January 23, 2013

கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டத்திற்கு 1 ல‌ட்ச‌ம் ம‌ர‌க்க‌ன்றுக‌ள்!ந‌டிக‌ர் விவேக் அறிவிப்பு!



மாவட்ட நிர்வாகம், பசுமை கலாம் நிறுவனம் மற்றும் முகம்மது சதக் அறக்கட்டளை இணைந்து மரக்கன்று வழங்கும் விழாவை கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடத்தின.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கலெக்டர் நந்தகுமார், கோவை ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர், முகம்மது சதக்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், “மரங்களை வெட்டி அழித்தால் மழை எப்படி பெய்யும். ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே வறட்சியான மாவட்டம். இங்கு மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். இயற்கையான விளைநிலங்களை பலர் இன்று விற்கின்றனர். அவற்றை வாங்குவோர் மனைகளாக மாற்றுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். மாவட்டம் முழுவதும் மரங்கள் வளர்த்து பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும். இதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்,”என்றார்.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, பசுமை கலாம் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அப்துல்கனி, நடிகர் செல்முருகன் கலந்துகொண்டனர்.
 

கீழ‌க்க‌ரை அணி மாவ‌ட்ட‌ அள‌விலான‌ போட்டியில் கோப்பையை வென்ற‌து !


மாவட்ட வாலிபால் கழகம், பரமக்குடி ரோட்டரி கிளப் இணைந்து பரமக்குடியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியை நடத்தின.
வாலிபால் கழக, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை வகித்தார். செயலாளர் ராமசுந்தர் வரவேற்றார். நகராட்சி தலைவர் கீர்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பிரபு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

சீனிய‌ர்களுக்கான‌ மாவ‌ட்ட‌ அள‌விலான‌ போட்டியில் 20 அணிக‌ள் இட‌ம்பெற்ற‌ன‌ இதில் கீழக்கரை மூர் அணி முதலிடம் பெற்று 5வ‌து முறையாக‌ மாவட்ட‌ அள‌விலான‌ சுழ‌ற்கோப்பையை கைப்ப‌ற்றிய‌து. மைபா அணி இரண்டாமிடம் பெற்றது.

அதே போன்று பள்ளி மாணவர்களிடையே நடந்த போட்டியில்,  கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி இறுதி போட்டியில் நுழைந்து இரண்டாமிடம் பெற்றது.

மாணவியருக்கான போட்டியில், பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி முதல், ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
மாவட்ட வாலிபால் கழக சேர்மன் டாக்டர் கியாதுதீன், புரவலர் சின்னத்துரை அப்துல்லா, இணைச்செயலாளர் சோமசுந்தரம் பலர் பங்கேற்றனர்.

தொட‌ரும் விப‌த்துக்க‌ள்!கீழ‌க்க‌ரை சேர்ம‌ன் உள்ளிட்டோர் வேண்டுகோள்!



கீழ‌க்க‌ரை ராம‌நாத‌புர‌ம் சாலையில் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ ஏராள‌மான‌ விப‌த்துக்க‌ள் ந‌டைபெற்று உயிழ‌ப்புக‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌ குறிப்பாக‌ டூ வீல‌ர்க‌ள் அதிக‌ள‌வில் விப‌த்துக்குள்ளாகி இள‌ம் வ‌ய‌தில் உயிர‌ழ‌ப்புக்க‌ள் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தினால் இப்ப‌குதி ம‌க்க‌ள் பெரும் ம‌ன‌ வேத‌னைக்குள்ளாகியுள்ளார்க‌ள்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறுகையில்.....

ச‌மீப‌கால‌மாக‌ இப்ப‌குதியில் விப‌த்துக்க‌ள் அதிக‌ரித்து உயிழ‌ப்புக‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌து அதிக‌ ம‌ன‌வேத‌னையை த‌ருகிற‌து.வாகன‌ங்க‌ளில் செல்ப‌வ‌ர்க‌ள் மிகுந்த‌ க‌வ‌ன‌த்துட‌ன் செல்ல‌ வேண்டும்.குறிப்பாக‌ டூவீல‌ரில் செல்ப‌வ‌ர்க‌ள் த‌லைக‌வ‌ச‌ம் அணிந்து கொள்ளுங்க‌ள்.அதிக‌ வேக‌ம் வேண்டாம் டூ வீல‌ரில் செல்லும் போது சாலையின் ந‌ட்ட‌ ந‌டுவே செல்லாதீர்க‌ள்

வாக‌ன‌ங்க‌ளில் அதிவேக‌மாக‌ செல்ப‌வ‌ர்க‌ள் ஒருமுறை உங்க‌ள் அன்பான‌ தாய்,தந்தைய‌ர் உள்ளிட்ட‌ குடும்ப‌த்தின‌ரை நினைவில் வைத்து பொறுப்புக‌ளை நெஞ்சில் நிறுத்தி மித‌மான‌ வேக‌த்தில் சென்று இறைவ‌ன் உத‌வியால் பாதுகாப்பான‌ ப‌ய‌ண‌ங்க‌ளை மேற்கொள்ளுமாறு உங்கள் சகோத‌ரியாக‌ தாழ்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன் .மேலும் ச‌க்க‌ர‌க்கோட்டை அருகே உள்ள‌ சாலையை செப்ப‌னிட‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கீழ‌க்க‌ரை முஜிப் கூறுகையில் ,
இவ்வ‌ழியே செல்லும் வெளி மாநில‌ வாக‌ன‌ங்க‌ள் அதி வேக‌மாக‌ செல்கிறார்க‌ள்.சில கால‌ம் முன்பு அடையாளம‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ வாக‌ன‌ம் மோதி கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ க‌ர்ப்பிணி சகோத‌ரி ஒருவ‌ர் உயிர‌ழ‌ந்தார்.இப்ப‌டி தொட‌ர்ச்சியாக‌ உயிர‌ழ‌ப்புக‌ள் ஏற்ப‌டுகின்ற‌ன‌. வெளி மாநில‌ ப‌ஸ்,லாரி போன்ற‌ வாக‌ன‌ங்கள் அதி வேக‌மாக‌ செல்வ‌தை த‌டுக்க‌ க‌ண்காணிப்பு கேம‌ராக்க‌ள் வைக்க‌ வேண்டும்.என்றார்.





அமீர‌க‌ காயிமில்ல‌த் பேரவையின் பொருளாள‌ர் ஹ‌மீது ர‌ஹ்மான் கூறுகையில்,




தொட‌ர் விப‌த்துக்க‌ளில் ஏற்ப‌டும் உயிர‌ழப்புக‌ள் மிகுந்த‌ ம‌ன‌ வேத‌னையை த‌ந்துள்ள‌து.கால‌மான‌வ‌ர்க‌ளுக்கு பேர‌ருளாள‌ன் இறைவ‌னிடம் ந‌ற்ப‌த‌வியை பெற‌ துஆ செய்கிறேன் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ருக்கு எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ் இழ‌ப்புக‌ள‌ தாங்கும் ம‌ன‌ தைரியத்தையும்,ம‌ன‌ அமைதியையும் உண்டாக்க‌ இறைஞ்சுகிறேன் என்றார்.

 

Sunday, January 20, 2013

கீழ‌க்க‌ரையில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்! ந‌டிகர் விவேக் ப‌ங்கேற்பு!


தமிழ் நாட்டில் இன்று போலியோ  சொட்டு ம‌ருந்து தின‌ம் அனுச‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து. சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு இன்று குழ‌ந்தைக‌ளுக்கு சொட்டு மருந்து வழங்கப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

கீழ‌க்கரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌ போலி சொட்டு ம‌ருந்து முகாம்க‌ளில் ஏராள‌மானோர் த‌ங்க‌ளது குழ‌ந்தைக‌ளை அழைத்து வந்து சொட்டு ம‌ருந்து வ‌ழ‌ங்கின‌ர்.

கீழ‌க்க‌ரை (தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்து) 500 பிளாட் ப‌குதியில் இன்று  ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் அப்ப‌குதியில் குழ‌ந்தைக‌ளுக்கு சொட்டு ம‌ருந்து வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.சத‌க் டிர‌ஸ்டின் த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் ,ச‌த‌க் பாலிடெக்னிக் முத‌ல்வ‌ர் அலாவுதீன்,ந‌டிக‌ர் விவேக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இந்நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

கீழ‌க்க‌ரை மூர் அணி! தொட‌ரும் வெற்றி பேர‌ணி!




 ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ஏர்வாடியில் நேற்று ந‌டைபெற்ற‌ மாவ‌ட்ட‌ கைப்ப‌ந்து போட்டியில் கோப்பையை வென்றுள்ள‌தாவும் இதுவ‌ரை 45க்கும் மேற்ப‌ட்ட‌ இறுதி போட்டிக‌ளில் வெற்றி பெற்று த‌ம‌து அணியின‌ர் கோப்பைக‌ளை வென்றுள்ள‌தாக‌வும் மூர் அணியின் நிர்வாகி ஹ‌ச‌னுதீன் தெரிவித்துள்ளார்.

ப‌ல்வேறு விளையாட்டு துறைக‌ளில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஏராள‌மானோர் வாய்ப்புக‌ள் கிடைக்காத‌தால் அத்துறைக‌ளில் சாதிக்க முடியாம‌ல் ஒதுங்கி விடுகின்ற‌ன‌ர். இது போன்ற‌ திற‌மை வாய்ந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து வாய்ப்ப‌ளித்து ஊக்கப்ப‌டுத்தினால் உல‌கின் த‌லை சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் உருவாவார்க‌ள்.அப்ப‌டி‌ இளைஞ‌ர்க‌ளுக்கு வாய்ப்புக‌ளை உருவாக்கி கொடுக்கும் ப‌ணிக‌ளில் கீழ‌க்க‌ரை மூர் விளையாட்டு கிள‌ப் போன்ற‌ த‌னியார் அணிக‌ள் ஈடுப‌ட்டு வ‌ருகிறது.

கீழ‌க்க‌ரை மூர் கைப்ப‌ந்து அணி ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ செயல்ப‌ட்டு ஏராளமான‌ கைப்ப‌ந்து வீர‌ர்க‌ளை உருவாக்கியுள்ள‌தாக‌வும் இன்னும் ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ளை த‌லைசிற‌ந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ளாக‌ உருவாக்குவ‌தே எங்க‌ள‌து நோக்க‌ம் என‌வே கைப்ப‌ந்து விளையாட்டில் ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் மூர் அணி நிர்வாகிக‌ளை தொடர்பு கொள்ள‌லாம் அவ‌ர்க‌ள் ப‌யிற்சி ஆட்ட‌ங்க‌ளில் ப‌ங்கு பெற‌ செய்ய‌ப்ப‌ட்டு அணிக்காக‌ விளையாட‌ தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்கள் ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் 9444828805 என்ற‌ எண்ணில் தொடர்பு கொள்ள‌லாம் என‌‌ நிறுவ‌ன‌ர் ஹ‌ச‌னுதீன் ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஹ‌ச‌னுதீன் கூறிய‌தாவ‌து,
கீழ‌க்க‌ரை மூர் கைப்ப‌ந்து அணி க‌ட‌ந்த‌ 12 ஆண்டுக‌ளாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. கைப்ப‌ந்து விளையாடுவ‌த‌ற்கு ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு ப‌யிற்சிய‌ளிக்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் மூர் அணிக்காக‌ விளையாடுவார்க‌ள் இப்ப‌டியாக‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ சிற‌ந்த‌ கைப்ப‌ந்து விளையாட்டு வீர‌ர்க‌ளை உருவாக்கியுள்ளோம்.இத‌ற்காக‌ எவ்வித‌ க‌ட்ட‌ண‌மும் பெற‌ப்ப‌டுவ‌தில்லை.அனைத்து செல‌வுக‌ளையும் நாங்க‌ளே ஏற்று கொள்கிறோம்.

எங்க‌ள் அணி வீர‌ர்க‌ளின் கூட்டு முய‌ற்சியால் இது வ‌ரை சிறு போட்டிக‌ளிலிருந்து மாநில‌ அளவிலான‌ போட்டி வ‌ரை ஏராள‌மான‌ ஆட்ட‌ங்க‌ளில் ப‌ங்கேற்றுள்ளோம்.இறைய‌ருளால் 45 கோப்பைக‌ளுக்கு மேல் கைப‌ற்றியுள்ளோம்.எங்க‌ள் அணிக்காக‌ விளையாடிய‌ ப‌ல‌ர் இன்று த‌லை சிறந்த‌ வீர‌ர்க‌ளாக‌ திக‌ழ்கின்ற‌ன‌ர்.நேற்று ஏர்வாடியில் ந‌டைபெற்ற‌ போட்டியில் வெற்றி பெற்று எம‌து அணியின‌ர் கோப்பையை கைப்ப‌ற்றியுள்ள‌னர்.என‌து த‌ந்தையார் ச‌ம்சுதீன் அவ‌ர்க‌ள் விளையாட்டு துறையில் மிகுந்த‌ ஆர்வ‌முடையவ‌ர் அவ்வ‌ழியில் நாங்க‌ளும் எங்க‌ளால் முடிந்த‌ சிறு ப‌ங்க‌ளிப்பை விளையாட்டுத்துறைக்காக‌ செலுத்துகிறோம்.இறைவ‌னுக்கே எல்லா புக‌ழும்.


கீழ‌க்க‌ரையில் கைப்ப‌ந்தில் ம‌ட்டும‌ல்ல‌ கால்ப‌ந்து,கிரிக்கெட் உள்ளிட்ட‌ விளையாட்டுக்க‌ளில் ஆர்வ‌முள்ள‌ திற‌மையான‌ இளைஞ‌ர்க‌ள் உள்ளன‌ர். அவ‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்ப‌ளிக்க‌ ந‌ம‌து ஊரை சேர்ந்த‌ செல்வ‌ந்த‌ர்க‌ள் ஏராளமான‌ விளையாட்டு கிள‌ப்க்ளை உருவாக்க‌ வேண்டும் என‌ தாழ்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்.இத‌ன் மூல‌ம் ப‌ல‌ த‌லை சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் கீழ‌க்க‌ரையில் உருவாவ‌ர்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை. இவ்வாறு அவ‌ர் கூறினார்






/>



 

Saturday, January 19, 2013

பிப்.8,9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் ந‌ட‌த்தும் மீலாத் நிக‌ழ்ச்சி!!




ப‌ட‌ம் : ‍அபுசாலிஹ்
ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத் த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,செய‌லாள‌ர் இஸ்மாயில் ம‌ற்றும் பொருளாள‌ர் ஆரிப் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையில் வ‌ருடந்தோறும் மீலாதையோட்டி ப‌ல்வேறு  அறிஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்று மார்க்க‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ள் சிற‌ப்பாக‌ நடைபெறும்.இன்ஷா அல்லாஹ் இந்த‌ வ‌ருட‌ம் மீலாத் நிக‌ழ்ச்சிக‌ளை பிப்8 ம‌ற்றும் 9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத் பொறுப்பேற்று ந‌ட‌த்த‌வுள்ளோம். உங்க‌ள் அனைவ‌ரின் ஆத‌ர‌வோடு ச‌முதாய‌ உண‌ர்வோடு  அனைவ‌ருக்கும் ப‌ய‌ன் த‌ரும் வ‌கையில் நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.விரைவில் விரிவான‌ அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.


இது குறித்து மாசா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிறுவ‌ன‌ர் இப்திகார் கூறுகையில்,





இந்நிக‌ழ்ச்சிக்கு விழாக்குழு சார்பாக‌ பெரியார்தாச‌ன் என‌ அறிய‌ப்ப‌ட்ட‌ அப்துல்லா அவ‌ர்க‌ள்,அப்துல் ர‌ஹ்மான்.எம்.பி அவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ச‌முதாய‌ அறிஞ‌ர்க‌ள் ப‌ல‌ரை அழைக்க‌ உள்ளோம் .ப‌ல்வேறு நாடுக‌ளில் உள்ள‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ள் அனைவ‌ரும் இந்நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கு பெற‌ வ‌ருமாறும்,தூஆ செய்யுமாறும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் என்றார்