துபாயில் அப்துல் ரஹ்மான் .எம்பியுடன் ராமநாதபுரம்,கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு!
துபாய் வருகை தந்திருந்த அப்துல் ரஹமான் எம்பியுடன் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்தோர் சந்தித்தனர்.
இந்நிகழ்வில்,
காயிதேமில்லத்பேரவை அமீரக தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, கீழக்கரை மஹ்ரூப்,மூத்த சமூக ஆர்வலர் சாதிக்,காயிதேமில்லத்பேரவை அமீரக பொருளாளர் ஹமீதுர் ரஹமான்,அஸ்வான் அமைப்பின் நிர்வாகி கீழை ராஸா,இஸ்மாயில் மரிக்கா,கீழக்கரை டைம்ஸ் சபியுல்லா,பாசித், கீழகக்கரை.டாட்.காம் சமது,நவ்ரோஸ்கான்,ராமநாதபுரம் பரக்கத்,கீழக்கரை காமில்,கனி,ஈஸா முஹைதின் ,அஹமது அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடல் அட்டை தடை நீக்கம்,சேது சமுத்திர திட்டம்,ராமநாதபுரம் கீழக்கரை வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்துல் ரஹமான் எம்.பி கூறுகையில்,
கடல் அட்டை தடை ஏன் விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதை மறு ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கையை எடுக்க உரியவர்களிடம் விரைவில் பேச உள்ளேன்.
சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் பல்லாண்டு கனவு திட்டமாகும்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தொழில் வளம் பெருகும் குறிப்பாக தென் தமிழக மக்கள் பெரும் பலனடைவார்கள்.இப்பிரச்சனையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றினைத்து இத்திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும்.அதே சமயம் இத்திட்டத்தால் மீன்வளம் குறையும் என்பது போன்ற பல் வேறு பரப்பபடும் சந்தேகங்களை தீர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
ராமநாதபுரம்,கீழக்கரை,சிக்கல் வழியாக தூத்துக்குடி வரையிலான ரயில்வே திட்டம் ஆய்வு பணிகள் நிறைவு செய்யபட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து மறைந்த கீழக்கரை ஹமீது அப்துல் காதர் காக்கா ,மெஜஸ்டிக் கரீம் காக்கா,ஹுசைன் காக்கா உள்ளிட்டோர் என்னிடம் டெல்லியில் சந்தித்து இத்திட்டம் குறித்து உரியவர்களிடம் பேசுமாறு கோரிக்கை வைத்தார்கள்
அப்போதைய ரயில்வே இணை அமைச்சராக இருந்த இ.அஹமது சாஹிப் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வெளியுறவு துறை அமைச்சரவை பொறுப்புக்கு மாறிவிட்டார்கள்.ஆனாலும்.நான் இது பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொண்டேன்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்
தொகுதி எம்.பிக்கள் குரல் எழுப்ப வேண்டும்.இதன் மூலம் மத்திய அரசு இத்திட்டத்தை விரைவு படுத்த வாய்ப்புள்ளது.மேலும் நான் சம்பந்தபட்ட எம்.பிக்களுடன் இது குறித்து பேசி தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வேன்
உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.
இஸ்லாமிய வங்கி என்ற பெயர்தான் சிலருக்கு உறுத்தலாக உள்ளது என்று நினைத்தால் அப்பெயரை மாற்றி வேறு பெயரில் வேண்டுமானால் அரசாங்கம் வைத்து கொள்ளட்டும்.மக்கள் பயன் பெறட்டும் என்றார்