photo :Thanks Dinathanthi Daily News (Mr.azad Allah buksh)
ராமநாதபுரம்
மாவட்ட இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட
விளக்க பொதுக்கூட்டம் சின்னக் கடையில் நடைபெற்றது. கூட் டத்துக்கு மாவட்ட தலை
வர் வருசை முகமது தலைமை தாங்கினார். மாவட்ட இளை ஞரணி செயலாளர் சுதானா முகமது
கிராஅத் ஓதினார். மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி
இணை செய லாளர் சிராஜுதீன் வரவேற் றார்.
கூட்டத்தில்
கட்சியின் தேசிய பொது செயலாளர் காதர்மைதீன் பேசியதாவது:-
முஸ்லிம்கள்
மார்க்கத்தை கடைபிடித்தால் மட்டும் தான் தனித்தன்மையை பாதுகாக்க முடியும்.
வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு தனித்தன்மையை பாதுகாக்க முடியாது.
இஸ்லாமியர்க ளுக்கு என தனியாக மார்க்க முறைப்படி தனிச்சட்டம் உள் ளது. அந்த
சட்டத்தில் முஸ் லிம்களுக்கு என தனியாக சட்ட பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த
சட்டப்படி நடக்க முஸ்லிம்களுக்கு முழு உரிமை உள்ளது. இதனை பறிக்க யாருக்கும்
உரிமை கிடையாது. இன்றைய இளைஞர்கள் அந் தந்த பகுதி ஜமாத்களுக்கு கட் டுப்பட்டு
நடக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வகுக்கப் பட்டுள்ள திருமண சட்டம் உள்ளிட்ட
சட்டங்களை எதிர்த்து சிலர் தொடர்ந்துள்ள வழக்கினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
எதிர்கொண்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
நிகழ்ச்சியில் பொது செயலா ளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர்
ஷாஜகான், மாநில துணை தலைவர் சபிக் குர் ரகுமான், அமீரக
காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான்,பாசிப்பட் டறை தெரு
பள்ளிவாசல் இமாம் முகமது அப்துல் காதிர், உல மாக்கள் அணி
அமைப்பாளர் யூனுஸ் ஆலிம், துணை அமைப் பாளர் முகமது யாசின்
ஆகி யோர் பேசினர். நகர் செயலா ளர் சாதுல்லாகான் நன்றி கூறி னார்.
|
Saturday, August 31, 2013
இஸ்லாமிய இளைஞர்கள் ஜமாத்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர்மைதீன் அறிவுரை!
கீழக்கரை நகராட்சி கூட்டம் திடீர் ஒத்திவைப்பு! சட்ட விதிகளுக்கு மாறாக கூட்டம் நடைபெற இருப்பதாக துணை சேர்மன் புகார் கூறியிருந்தார்.
File picture .பழைய படம்
கீழக்கரை நகரசபை கூட்டம் அதன் தலைவர்
ராவியத்துல் கதரியா தலைமையில் நேற்று(30ந்தேதி)
நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கான கூட்ட மன்ற பொருள் குறித்த அஜெண்டா
கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
file picture .பழைய படம் கவுன்சிலர்களுடன் துணை சேர்மன் ஹாஜா முஹைதீன்
முன்னதாக நகராட்சி துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் கூறியிருந்த மனுவில்..
நடைபெறவிருக்கும் நகராட்சி கூட்டம் சட்ட விதிகளுக்கு மாறாக உள்ளது.சட்டப்படி கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு(78 மணிநேரம் அரசு வேலை நாட்களில்) முன் கூட்டத்திற்கான அஜெண்டாவை கவுன்சிலர்களுக்கு அனுப்பவேண்டும். ஆனால் 30ந்தேதி கூட்டம் நடத்துவதற்கு அரசு விடுமுறை நாளான(ஆக 28ல்) அனைத்து கவுன்சிலர்களுக்கும் அஜெண்டா அனுப்பட்டுள்ளது.எனவே சட்டவிதிகளுக்கு மாறாக இக்கூட்டம் நடைபெறுகிறது என மனுவில் கூறியிருந்தார்.இம்மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருந்தார்.
கவுன்சிலர் சாஹுல் ஹமீது இது போன்று மனு அளித்ததோடு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து கூட்டம் செல்லாது என வழக்கு தொடர்வேன் என கூறியிருந்தார்
இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Friday, August 30, 2013
கீழக்கரையில் நிலத்தடி நீர் குறைந்தது! கிணறுகள் வறண்டது ! ஆழ்துளையிட்டு ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்!
இடம் : அரசு மருத்துவமனை ,கீழக்கரை
கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் கிணறுகள் உள்ளது.நகரின் முக்கிய குடிநீர்
ஆதாரமே கிணற்று நீர்தான். இந்நிலையில் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்,பசுமை அளவு, மழை பெய்வது உள்ளிட்டவை குறைந்து போனதால் இம்முறை பெரும்பாலான வீடுகளில் கிணற்று நீர் வற்றி வறண்டு விட்டது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் எட்டாத தூரத்திற்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் மோட்டார் மற்றும்
கம்ப்ரசரை இயக்கினால் வெறும் காற்று மட்டுமே வருகிறது. எனவே பல வீடுகளில் ஏற்கனவே
போடப்பட்டுள்ள கிணறுகளை ஆழ்துளையிட்டு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
சென்ற ஆண்டு நவீன கருவிகள் மூலம கீழக்கரையில் காற்றின்
ஈரப்பதம் ,மழையின் அளவு,ஆக்சிஜென் அளவு ,போன்ற பல் வேறு கணக்கெடுப்புகள் செய்து ஆய்வு செய்தார்கள்.
ஆய்வுக்கு பின் அவர்கள் கூறியதாவது ,கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டும் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.
இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து சென்றார்கள்
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதுகுறித்து கீழக்கரை நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி, மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வுக்கு பின் அவர்கள் கூறியதாவது ,கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டும் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.
இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து சென்றார்கள்
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதுகுறித்து கீழக்கரை நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி, மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து காதர் என்பவர் கூறியதாவது,
எனக்கு தெரிந்த காலத்திலிருந்து இது போன்ற
நிலை ஏற்பட்டதில்லை.கிணற்றை மேலும் ஆழப்படுத்த ரூ 3500 வரை கேட்கிறார்கள்.அரசாங்கம் வீடுகளி
மழைநீர் சேகரிப்பு ,தண்ணீர் சிக்கனம் குறித்து இன்னும்
அதிகமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.மரங்கள் குறைந்தால் மழை குறையும் என்ற
அடிப்படையில் மரம் வளர்ப்பது ஒரு பக்கம் இருந்தாலு இருக்கும் மரத்தை வெட்டாமல்
பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்படி தொடர்
நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலத்தடி நீரை அதிகப்படுத்தி பாதுகாக்க முடியும்
Thursday, August 29, 2013
கீழக்கரை ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளாக மாணவர்கள் பதவியேற்பு!
சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "துரோணாச்சாரியர்' விருது வழங்கப்பட்டது
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்
கல்லூரியில், ரோட்டராக்ட் சங்க, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பேராசிரியர்
அலாவுதீன் வரவேற்றார்.
ராமநாதபுரம் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சுகுமார், தலைவர் லோகநாதன், செயலாளர் ராஜா, கீழக்கரை ரோட்டரி தலைவர் டாக்டர் ராசிக்தீன், செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் இன்ஜி., ஆசாத் உட்பட பலர் பங்கேற்றனர். ரோட்டராக்ட் தலைவராக மூன்றாம் ஆண்டு மாணவர் யாசீர் அகமது, செயலாளராக சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய பள்ளி
ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "துரோணாச்சாரியர்'
விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலோசகர்
மரியதாஸ், முன்னாள் தலைவர் தவ்பீக் அலி செய்தனர்
விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம்
ஹமீது நிசா - தலைமையாசிரியை, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கீழக்கரை.
ரெஹ்னா ஜான் - வினாயகம் பள்ளி, இராமநாதபுரம்.
நாகராஜ் - N.C.C மேஜர் கமாண்டர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரை
மணிமேகலை - திருப்புல்லாணி ஒன்றிய தொடக்கப் பள்ளி
. ஜீனத் பேகம் - சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை
ஹமீது நிசா - தலைமையாசிரியை, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கீழக்கரை.
ரெஹ்னா ஜான் - வினாயகம் பள்ளி, இராமநாதபுரம்.
நாகராஜ் - N.C.C மேஜர் கமாண்டர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரை
மணிமேகலை - திருப்புல்லாணி ஒன்றிய தொடக்கப் பள்ளி
. ஜீனத் பேகம் - சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை
சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக்குவரத்து நெரிசல்
கீழக்கரையில் பிரதான சாலைகளில் இஷ்டம்போல் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரையில் பிரதான சாலைகளில் சாலையின் இருபுறங்களிலும் ஆட்டோ,கார் மற்றும் மினி வேன்கள்,இரு சக்கர வாகனங்கள் ஆகிய வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில வாகனங்களை
நாள் கணக்கில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், குறிப்பாக வங்கிகளுக்கு வரும் பெண்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமல்
மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சமூக சேவகர் தங்கம் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்களை
நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்கள்
மட்டுமின்றி பொது மக்களும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்சம்
காலை
நேரங்களில் போலீசார் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்தரமற்ற சிமெண்ட் சாலையால் விபத்து அபாயம்!நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கீழக்கரை கிழக்கு தெருவில் 4 மாதங்களுக்கு முன்னர் புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து விட்டது. சாலையை முறையாக ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை கிழக்கு தெருவில் 4 மாதங்களுக்கு முன்னர் நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் சிமென்ட் சாலை போடப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த சாலையில் மினி வேன் சென்ற போது ஒரு இடத்தில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் வேனின் பின் சக்கரம் சிக்கி கொண்டது. பின்னர் பொதுமக்கள் வேனை பள்ளத்தில் இருந்து தூக்கி அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்த போதே தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக கிழக்கு தெரு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையை முறையாக ஆய்வு செய்து, அதன் பின்னரே, ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் சாலையை ஆய்வு செய்யாமல், ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.
இது குறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், �4 மாதங்களுக்கு முன் இந்த சாலை உட்பட கீழக்கரையில் பல இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் ஒரே ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டிருந்தன.
தரமற்ற முறையில் பணி நடந்து வருவதாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாலை பணிகளின் தரத்தை முறை யாக ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் விசாரித்து, தவறு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
தரமற்று அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதம்
Wednesday, August 28, 2013
கீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8அடி சாரை பாம்பு!
கீழக்கரை அருகே
குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8அடி சாரை பாம்பு
கீழக்கரை அருகே
சின்ன ஏர்வாடி பகுதியில் செல்வராஜ் என்பவரது வீட்டில் பின்புறம் வீடு கட்டுவதற்காக செங்கல் அடுக்கியிருந்த பகுதியில் மஞ்சள் சாரை பாம்பு
இருப்பதை கண்டார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனசரகர் ஜெயராமன் உத்தரவின்
பேரில் வனவர் இன்னாசி முத்து வனக்காப்பாளர் முத்துகுமரன் வேட்டை தடுப்பு காவலர்கள்
மகேந்திரன் அழகர் சாமி ஆகியோர் அங்கு விரைந்து 8 அடி நீள சாரை பாம்பை பிடித்தனர்..பின்னர்
திருப்புல்லாணி கோரைகோட்டம் சதுப்பு நிலகாட்டில் விட்டனர்.
Tuesday, August 27, 2013
வெளிநாட்டிலிருந்து டிவி! இந்தியாவில் இறக்குமதி வரி அமலுக்கு வந்தது!
வெளிநாடுகளுக்கு செல்வோர்
இனிமேல் எல்சிடி,
எல்இடி
டிவிக்களை வரி எதுவும் செலுத்தாமல் இந்தியா கொண்டு வர முடியாது.
மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வந்தது
. வெளிநாடுகளுக்கு
செல்வோர் ரூ.35 ஆயிரம் வரையிலான ஃபிளாட் ஸ்கிரீன் டிவி எனப் படும் எல்சிடி, எல்இடி டிவிக்களை வரி
எதுவும் செலுத்தாமல் கொண்டு வர முடியும் என்ற நிலையில். கடந்த ஆண்டில் மட்டும்
இதுபோல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட டிவிக்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது ரூபாயின் மதிப்பு
குறைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படுவதை
சரிசெய்யவும் இறக்குமதியை குறைக்க அரசு முயன்று வருகிறது. எனவே தங்கம் இறக்குமதி
வரியை அரசு நடப்பு ஆண்டில் 3 முறை உயர்த்தியது. தேவையற்ற பொருட்களான கைக்கடிகாரங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை
இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது ஃபிளாட் ஸ்கிரீன்
டிவிக்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 26 முதல் அமலுக்கு வந்தது இத்தகைய
டிவிக்களை கொண்டு வருபவர்கள் 36.5% வரி மற்றும் இதர கட்டணங்களை
செலுத்த வேண்டும்.
இது குறித்து வீட்டு உபயோக
மின்னணு சாதனங்கள் தயாரிப்போர் சங்கத் தலைவர் அனிருத் தூத் கூறுகையில், ''உள்நாட்டிலேயே ஃபிளாட்
ஸ்கிரீன் டிவிக்களை தயாரிக்க நமது நிறுவனங்கள் ரூ.1,500 கோடியில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
அரசின் புது உத்தரவால்
உள்நாட்டு டிவி உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். தற்போது 80 லட்சம் ஃபிளாட்
டிவிக்களுக்கு தேவை உள்ளது. ஆண்டுதோறும் 30 முதல் 35 லட்சம் டிவிக்கள்
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.750 கோடி
நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் உள்நாட்டு வீட்டு
உபயோகப் பொருட்கள் தயாரிப்போர் நடப்பு ஆண்டில் 3 முறை விலையை உயர்த்த வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது''
என்றார்.
Monday, August 26, 2013
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.
கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களிடம் ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா குறைகள் கேட்டார்.
பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத்தில் 200 அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. கழிப்பறை வசதியின்மையால் திறந்த வெளியிலேயே மலம் கழிப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக ஜவாஹிருல்லா எம்எல்ஏவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று அவர், முத்துச்சாமிபுரம் பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
கீழக்கரை நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3 கழிப்பறைகள் கட்டப்பட்டு தண்ணீர் வசதி இன்றி இது நாள் வரை பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மராமத்து பணி செய்ய ரூ.8 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை பணி துவங்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லை என நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் துவங்கினால் வீடுகளில் தண்ணீர் புகுந்து படுக்கக்கூட இடமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாவர் என்றார்கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.
ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறியதாவது:
ஊரையே துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தூங்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன். ரூ.5 லட்சம் செலவில் கட்டிய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல் பூட்டி வைத்து மீண்டும் மராமத்து செய்ய நிதி ஒதுக்கி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது இப்பகுதியை புறக்கணிப்பதாக உள்ளது. நகராட்சி நிர்வாக செயல் திறமையின்மையை முதல்வர், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்ய ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், நகர் தமுமுக தலைவர் முகமது சிராஜூதீன், நிர்வாகிகள் சேகுதாவூது சாதிக், ரைஸ் இபுராகிம், மாவட்ட செயலர் அன்வர்அலி, கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, முகைதீன் இபுராகிம், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கீழக்கரையில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லை
கீழக்கரையில் நாளுக்கு நாள் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருக்களில் நாய்கள் கூட்டமாக சுற்றுவதும், டூவீலரில் செல்பவர்களை விரட்டுவதும் தினமும் நடக்கிறது. வள்ளல் சீதக்காதி சாலையிலும், அதையொட்டியுள்ள தெருக்களிலும், விஏஓ அலுவலகம், புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் சின்னகடை தெருவிலும் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையின் குறுக்கே நாய்கள் ஓடித்திரிவதால் டூவீலரில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் நாய்களுக்கு பயந்து நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அதிகாலையில் வாக்கிங் செல்லும் முதியவர்களையும் நாய்கள் துரத்தும் சம்பவம் நடக்கிறது.
இதுகுறித்து 5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்,
‘கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம், நகரில் சுற்றித்திரியும் 100 நாய்களுக்கு கருத்தடை செய்தது. இருந்தபோதும் தற்போது நாய்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு நகரில் சுற்றிதிரியும் வெறி நாய்களை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
கஞ்சா பறிமுதல்!பெண் உள்பட 2 பேர் கைது!2பேர் தப்பி ஓட்டம்
கஞ்சா பறிமுதல்!பெண்
உள்பட 2 பேர் கைது!2பேர் தப்பி ஓட்டம்
கீழக்கரைக்கு கஞ்சாவை
கடத்தி வந்துள்ளதாக கிடைத்த தகவலில் பேரில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில்
போலீசாரின் நடவடிக்கையில் கீழக்கரையை சேர்ந்த நல்ல இப்ராஹிம்(58),மற்றும் அவருக்கு
கஞ்சாவை எடுத்து வந்த மதுரை வரிச்சியூர் அருணாசலம் மனைவி மாரியம்மாள்(65) ஆகியோரை பிடித்தனர்,இவர்களிடமிருந்து
3.900கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அங்கிருந்து 2 பெண்கள் தப்பி
ஓடினர்.
மேலும் போலீஸ்
தரப்பில் கூறப்படுவதாவது,
இவர்களிடம் விசாரணை
செய்ததில் தப்பி ஓடியவர்கள் மதுரை முனிச்சாலையை சேர்ந்த ஜெயராணி மற்றும் பெருமாயி என்பது
தெரிய வந்தது. இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
கியூ பிராஞ்ச்
இன்ஸ்பெக்டர் கென்னடி கொடுத்த புகாரின் பேரில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேசன்,எஸ்.ஐ
ரத்தினவேல் ஆகியோர் பிடிபட்ட இரண்டு பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட
நல்ல இப்ராஹிம் சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின்
பேரில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
Saturday, August 24, 2013
கீழக்கரை நகரில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்! கடும் எதிர்ப்பு!
பழைய பேருந்து
நிலையம் அருகே அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெர்வித்த மக்கள்
கீழக்கரை சீதக்காதி
சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவின் பேரில் 10 தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள்
அகற்றும் பணிகள் நடைபெறும் போது மெயின் ரோடு பகுதியில் ஒருதலை பட்சமாக ஆக்கிரமிப்பு
நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பின் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து
மீண்டும் மாவட்ட நிர்வாகம் அக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டதின் பேரில் நேற்று மாலை சுமார்
4 மணியளவில் நகராட்சி ஆய்வாளர் ஐயுப்கான்,சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி,நெடுஞ்சாலைத்துறை
ஆய்வாளர் நடராஜன்,மண்டல் துணை வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் சாலையோர கடைகள்,பேனர்கள்,கடை
மற்று வீட்டு வாசல் படிகள் உள்ளிட்டவை அகற்றும் பணி நடைபெற்றது.
கீழக்கரை பழைய
பேருந்து நிலைய பகுதியில் இப்பணிகள் நடைபெறும் போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்
திரண்டு எதிர்ப்பு தெரிவித்த்தோடு சர்வேயர்களை வைத்து அளந்து முறையாக அகற்றும் பணிகளை
அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து மேலிட அதிகாரிகளுடன் ஆலோசித்து
பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இது குறித்து முஜீப்
கூறியதாவது,
ஆக்கிரமிப்புகள்
அகற்றுவது குறித்து ஏற்கெனவே சுப்ரிம் கோர்ட் வழிகாட்டுதல்களை தந்துள்ளது.அதன் படி
செயல்படுத்த வேண்டும்.கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரை வரை முறையாக ஆக்கிரமிப்புகளை
அகற்ற வேண்டும்.இப்படி அவசர கோலமாக அக்ற்றுவது சட்ட்த்தை மீறும் செயலாகும்.இது குறித்து
கோர்டில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
இதுகுறித்து காங்கிரஸ் நகர் தலைவர் ஹமீது கான் கூறியதாவது,
கீழக்கரை கடந்த
நகராட்சி நிர்வாகத்தில் முறைப்படி சர்வேயர்களை வைத்து ரோடுகளை அளவிட்டு முறைப்படி உரிமையாளர்களுக்கு
நோட்டீஸ் அனுப்பி உரிய கால அவகாசம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இதை சரியான முறையில்
கண்காணிக்கதால மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.ஏற்கெனவே 10 நாட்களுக்கு முன்
பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தற்போது
மீண்டும் அதே போல் நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது..எனவே அதிகாரிகள் முறையாக அளவிட்டு
இப்பணிகளை நியாயமாக செயல்படுத்த வேண்டும்.கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இவ்விசயத்தில்
மிகுந்த மெத்தனமாகவும் ,பொது மக்களின் குறைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு எடுத்து செல்லவும்
தவறி விட்டது.இதனால் பொது மக்கள் மிகவும் கொதித்து போய் உள்ளார்கள் என்றார்.
கீழக்கரை பள்ளியில் மாணவ,மாணவியருக்கு பல்திறன் போட்டி!
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியரின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் பல் திறன் போட்டிகள் நடைபெற்றது.
மாணவியரின் படைப்புகள்......
பள்ளி தாளாளர்
முஹைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார்.மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ்,தொடக்க
பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ முன்னிலை வகித்தார்.இதில் மழலையர்களுக்கு ஆடை
அலங்கார போட்டி.,துவக்கப்பரிவு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் உயர் வகுப்பு
மாணவர்களுக்கு ,பேச்சு,கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது
ஏற்பாடுகளை பள்ளி
சார்பில் நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Friday, August 23, 2013
கீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
கிழக்கு கடற்கரை
சாலையை அகலப்படுத்தும் விதமாக கீழக்கரையிலிருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் உள்ள புல்லந்தை
மாயாகுளம் புது மாயகுளம் சின்ன மாயாகுளம் போன்ற ஊர்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சாலையில் போக்குவரத்திற்கு
இடையூராக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் பிளக்ச் போர்டுகள் ஜேசிபி இயந்திரம்
மூலம் அகற்றபட்டது.நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ராமநாதபுரம் மண்டல
துணை வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.இதில் கீழக்கரை ஆர் ஐ நாகஜோதி
திருப்புல்லாணி ,ஆர் ஐ மலர் விழி மற்றும் விஏஓக்கள் வீரசிகாமணி,தாஹிர் அலி உள்பட பலர்
உடன் இருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)