Monday, February 28, 2011
கீழக்கரையில் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் சாலை பணிகளை தொடர தடை!
Sunday, February 27, 2011
துபாயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கீழக்கரை சகோதரர்கள்
Saturday, February 26, 2011
கீழக்கரை கல்லூரியில் நுகர்வோர் தின விழா
கீழக்கரையில் மாதம் 5 நாட்கள் மட்டும் பணிக்கு வரும் நகராட்சி கமிஷனர்!
Thursday, February 24, 2011
மக்கள் குறை தீர்க்கும் நாள்! அமைச்சர் தங்கவேலன்,ரித்தீ்ஸ்.எம்.பி பங்கேற்பு
கீழக்கரை டி.எஸ்.பி. பணி இட மாற்றம்
Wednesday, February 23, 2011
கீழக்கரை நகருக்கு்ள் மீண்டும் மின் கட்டண அலுவலகம்! நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு
கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர் அகமது நிருபர்களிடம் மி்ன் துறை அதிகாரிகளின் பணிகளில் அதிருப்தி தெரிவித்தார் .அவர் கூறுகையில், கீழக்கரையில் சாலைகளில் மின் கம்பங்கள் மற்றும் மி்ன் இணைப்புகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் இப்பகுதியி்ல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சில தினங்களுக்கு முன் உயர் அழுத்த மின் கம்பியில் லாரி உரசியதால் மின் கம்பி அறுந்து கண்ணன் என்ற வாலிபர் உயிரழந்தார்.இவ்விபத்து நடப்பதற்கு முன்பு இது குறித்து கீழக்கரை மி்ன்சார அதி்காரிகளிடம் நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை மறுபடியு்ம் ஒரு விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை தேவை .
கீழக்கரையில் டீக்கடைகளில் மது விற்பனை ! போலீஸ் டி.எஸ்.பி எச்சரிக்கை.
சம்பளம் ரூ30000 ! ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை!
கீழக்கரை.பி.23.ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான லாரிகள் இயக்கப்படுகின்றன.உணவு பொருள்களை சுமந்து செல்வதற்கும்,குறிப்பாக சிமெண்ட்,செங்கல் ,மண் என்று கட்டுமான துறைக்கு தேவையான பொருள்களை எடுத்து செல்வதற்கும் லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.இதனால் லாரி ஓட்டுநர்கள் இப்பகுதிகளில் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்.ஆனால் ஓட்டுநர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் பாலானவர்கள் மினி வேன்,ஆட்டோ, போன்ற சிறிய ரக வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் செலுத்துவதால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லாரி உரிமையாளர் சண்முகம் கூறியதாவது, சம்பளமாக ரூ25 ஆயிரத்திலிருந்து 30ஆயிரம் வரை மாத சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தும் ஆள் கிடைப்பத்தில்லை.இதானால் ஒரு நாள சம்பளம் என்ற அடிப்படையில்தான் டிரைவர்கள் கிடைக்கிறார்கள்.இதனால் மாதத்தில் 10 நாட்கள் தான் லாரிகளை இயக்க முடிகிறது என்றார். பட விளக்கம் :-பத்திரிகைகளில் வெளி வந்த ஓட்டுனர் தேவை விளம்பரம்
Monday, February 21, 2011
டீக்கடைகளில் 'சரக்கு' சப்ளை ! தேவை நடவடிக்கை
கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கபட வேண்டும் ! கீழை ஜமீல் கோரிக்கை
முதுகுளத்தூர் - 254,552
இராமநாதபுரம் - 218,330
பரமக்குடி - 201,912
திருவாடனை - 211,865
ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள விருதுநகரின் வாக்காளர் எண்ணிக்கை 12,32,249 ஆகும். இத்தனை வாக்காளர்கள் கொண்ட இந்த மாவட்டத்திற்கு ராஜ பாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுளி என 7 சட்டமன்ற தொகுதிகளாம். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 1 இலட்சத்தி 80 ஆயிரம் வாக்காளர்களுக்கும் கீழ்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விருதுநகர் தொகுதி 1 இலட்சத்தி 65 ஆயிரம் வாக்காளர்களைதான் கொண்டு உள்ளது.
ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எல்லா தொகுதிகளும் 2 இலட்சத்தி 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் கொண்டுள்ளது. அதிலும் முதுகுளத்தூர் தொகு 2 இலட்த்தி 54 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு இருக்கிறது.
விருதுநகர் மட்டும் அல்ல, பிரபலங்கள் போட்டியிடும் சென்னையிலுள்ள பல தொகுதிகளும் வாக்காளர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். (உ-ம்) எக்மோர், துறைமுகம், ராயபுரம் போன்ற தொகுதிகள். ராயபுரம் தொகுதி வெறும் 1 இலட்சத்தி 45 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது.
10,24,119 வாக்காளர்களை கொண்ட நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 6 தொகுதிகள். அதில் 3 தொகுதிகள் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவே. கிள்வலூர் தொகுதியில் 1 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
12 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டத்திற்கு 7 தொகுதிகள், 10 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களுக்கு 6 தொகுதிகள். ஆனால் எட்டரை இலட்சம் வாக்காளர்கள் உள்ள நம் இராமநாதபுரத்திற்கும் மட்டும் 4 தொகுதிகள் மட்டும்?
இராமநாதபுரம் மாவட்டத்தின் மீது மட்டும் அரசுக்கு என்ன கோபம்? இது குறித்து ஏன் யாரும் அக்கறை செலுத்தவில்லை? ஒரு தொகுதியினை இழப்பதால் நாம் அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் இழக்கின்றோம். மிகவும் பின் தங்கிய, வறட்சி மாவட்டம் என பெயர் எடுத்த நம் மாவட்டத்தை புறம் தள்ளுவது ஏன்?
விருதுநகர் மாவட்டத்தில் ப.சிதம்பரம், வைகோ உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதிகள் இருப்பதால் அந்த மாவட்டத்திற்கு கூடுதல் தொகுதிகளோ...
விருதுநகர் மாவட்டம் போல், தொகுதிக்கு 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் என எடுத்தால், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் 5 தொகுதி ஒதுக்கி இருக்கலாம். மாவட்டத்திற்கு அதிக வருமானம் தரும் கீழக்கரை நகராட்சியினை புதிய தொகுதியாக அறிவித்து இருக்கலாம்.
தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால் இகோரிக்கையை நிறைவேற்ற முடியாது. என்றாலும் இத்தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் இழந்த ஒரு தொகுதியினை மீண்டும் கொண்டு வர யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு? என்ற கோரிக்கையை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் வைத்தால்.... பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ரசூல் தீன் கூறியதாவது, ஜமீல் அவர்க்ள் வைத்த கோரிகையை அடுத்த தேர்தலிலாவது அரசு பரீசிலிக்க வேண்டுன் என்றார்
கீழக்கரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை ஒருவர் கைது;2 பேர் மீது வழக்கு
கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பில் மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது
கீழக்கரையில் அனைத்து ஜமாத்களும் ஒருங்கிணைந்து கண்ணாடி வாப்பா மகாலில் மிலாது நபி விழா நடைத்தப்பட்டது. நகராட்சி முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நகர் அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.கடற்கரை ஜமாத் தலைவர் சாகிபு வரவேற்றார்.கிழக்கு தெரு ஜமாத் இமாம் சம்சுதீன் கிராஅத் ஒதினார்.வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் அப்துல் ஹமீது பாக்கவி பேசினார். ஹசன் அலி ம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,நகராட்சி தலைவர் பஷீர் அகமது,மதுரை மண்டல இ.யூ.,முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் செய்யது இபுராகிம் நன்றி கூறினார். உலக மக்களின் அமைதி,சமூக நல்லிணக்கம் தொடர வேண்டி கீழக்கரை டவுன்காஜி காதர்பக்ஷ் ஹுசைன் சித்திகி துஆ ஓதினார்.
Sunday, February 20, 2011
கீழக்கரையில் வண்ணாந்துறை அருகே மீண்டும் விபத்து
கீழக்கரையில் துணை மின் நிலையம் வண்ணாந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வேனில் பயணம் செய்த 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இது வரை 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இப்பகுதியில் நடந்துள்ளன.தொடரும் விபத்துக்களால் இப்பகுதியை விபத்து பகுதியாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வீடுகளில் திருடும் டிப் டாப் ஆசாமிகள்
கீழக்கரையில் குழந்தைகளை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தும் கும்பல்
ரூ300 கோடியில் திட்டம் ! கீழக்கரைக்கும் வாய்ப்பு தாருங்கள்
கீழக்கரை.பிப்.21இந்தியாவில் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலாதலமாக்கும் திட்டத்தைமத்திய அரசு சமீபத்தில் துவக்கியது.தமிழகத்தின் மாமல்லபுரம்,ராமேஸ்வரம்,கன்னியாக்குமரி,முட்டம்
சென்னை மெரினா ஆகிய பகுதிகளிலுள்ள கலங்கரை விளக்கங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.ரூ 300 கோடி மதீப்பீட்டிலான மத்திய கபபல் துறை அமைச்சர் வாசன் கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைத்தல்,சென்னை மெரினாவில் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் அமைத்தல் என பணிகள் நடைபெற உள்ளன. சுற்றுலாதொழிலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ,கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இது 35 மீட்டர் உயரம் கொண்டது பரந்து விரிந்த நீலக்கடலோரத்தில் அமைந்துள்ள கீழக்கரையையோட்டி ,அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகள் உள்ளன.கடற்கரையை ஓரம் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இப்பகுதிக்கு சுற்றுலா வநது செல்கினறனர்.
கீழக்கரையை சுற்றுலாத்தலமாக அறிவித்து அருகே அமைந்துள்ள குட்டி தீவுகளுக்கு சென்று வர கண்ணாடி இழை படகுகள் விட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதோடு மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்கும் திட்டத்தில் கீழக்கரையையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.