Sunday, January 15, 2012

மக்கள் கூட்டத்தால் புதிய கடல் பாலத்தில் திடீர் கடைகள் !







கீழக்கரை கடற்கரையில் புதிய (ஜெட்டி)பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் மாலை நேரங்களில் ஏராளமான மக்கள் அங்கு குவிகின்றனர்.குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை அங்கு அதிகளவில் உள்ளது.இதனையோட்டி அங்கு ஒரு சிலர் தள்ளுவண்டிகளில் கடைகளை அமைத்து உணவு பண்டங்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.


இது குறித்து அங்கு வ‌ருகை த‌ந்த‌ ஆசிப் என்ப‌வ‌ர் கூறுகையில்,


இங்கு வ‌ரும் ம‌க்க‌ள் கூட்ட‌த்தை வைத்தே இங்கு பூங்கா அவ‌சிய‌ம் தேவை என்ப‌தை அறிய முடிகிறது.பூங்கா அமைக்கும் வரை பால‌ம் அருகே உள்ள‌ காலியான‌ இட‌த்தில் தற்காலிகமாக ம‌க்க‌ள் அம‌ரும் வ‌கையில் நாற்காலிக‌ளை அமைத்து த‌ர‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.மாலை நேர‌ங்களில் பெண் காவல‌ர்க‌ள் இப்ப‌குதியில் பாதுகாப்பு ப‌ணிக்கு ஈடுப‌டுத்த‌ வேண்டும் என்றார்.


சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல் இந்திராவுடன் நகராட்சி தலைவர்



இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா கூறியதாவ‌து, க‌ட‌ற்க‌ரை ப‌குதியில் பூங்கா அமைப்ப‌து குறித்து ஏற்கென‌வே சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் கோகுல் இந்திராவிட‌ம் ம‌னு கொடுத்துள்ளேன் அவ‌ரும் இது குறித்து ஏற்பாடுக‌ளை செய்வ‌தாக‌ உறுதி கூறினார்.இத‌னைய‌டுத்து சுற்றுலா துறையினர் ஆவண‌ செய்வதாக‌ நகராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்க‌ள்.வெகு விரைவில் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொட‌ங்க‌ப்ப‌டும் என்றார்

1 comment:

  1. கீழக்கரை செய்திகள் வலை தளத்தின் (HEADER-ல்) தலைப்பில் காணும் நம்ம ஊர் பழைய பாலத்தின் தோற்றத்தையும் இப்போது புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தின் தோற்றத்தையும் காணும் போது அடடா அப்படி இருந்ததையா? இப்படி ஆக்கிட்டாங்க! என்று மன மகிழ்வோடு சொள்ளத்தூண்டுது.....

    இப்படி ஒரு கடல் பாலம் நமக்கு கிடைக்க ஆவண செய்த முந்தைய அரசுக்கு நமது நன்றிகளை உரித்தாக்குவதோடு,

    கிடைத்த இந்த வசதியை உரிய முறையிலே பொதுமக்களாகிய நாம் பயன்படுத்தும் வண்ணம் எல்லோரும் எதிர்பார்க்ககூடிய பூங்கா அமைத்துத்தர முயற்சிகள் எடுத்து இருக்கும் இப்போதைய நமது நகராட்சித் தலைவருக்கும் அதை செயல்படுத்துவதாக உறுதி கூறி இருக்கும் இன்றைய அரசுக்கும் நமது நன்றிகளை முன்கூட்டியே சொல்லிகொள்வோமாக.... மேலும்,

    மாலை 7.00 மணிக்கு மேல் பாலத்தின் பக்கம் யாரையும் அனுமதிக்காமல் இருப்பதோடு, நீச்சல் தெரிந்தவர்கள் (என்னப்பா கேனத்தனமா சொல்றா, அந்த ஏரியாவுல எல்லோரும் நீச்சல் தெரிந்தவங்கதான்னு யாரோ சொல்றமாதிரி கேட்க்குது... என்றாலும் என் மனசுக்குப் பட்டது) இரண்டு நபர்களை நகராட்சி சார்பில் SHIFT முறையிலே பணிக்கு அமர்த்தனும். சிறுவர்களும் பெண்டு பிள்ளைகளும் வந்து போற இடமா இருக்கிறதால ஆத்துற அவசரத்துக்கு (for emergency) உதவியாக இருக்கும். இன்னும் நிறைய ஆலோசனைகளை என்போன்ற ஏனைய நலன் விரும்பிகள் தருவார்கள்......அன்புடன் / MJS

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.