Saturday, March 3, 2012

முகம்மது சதக் பாலிடெக்னிக் மாணவ,மாணவியருக்கு பயிற்சி வகுப்புகள்!


கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பாக இறுதியாண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவ,மாணவிகளுக்கு மாணவர்கள் கலந்தாய்வு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார்.வேலை வாய்ப்பு மேம்பாட்டு மையம் ஒருங்கினைப்பாளர் சேக் தாவுத் வரவேற்றார்.
இதில் ராமநாதபுரம் மனோதத்துவ நிபுணர் வித்யா பிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசுகையில்,மாணாவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுத்ல்,இலக்கு நிர்ணயித்தல்,ஆளுமைதிறன் போன்ற தனிநபர் பழக்கவழக்கங்கள் குறித்து பேசினார்.க‌ல்லூரி துணை முத‌ல்வ‌ர் க‌மால் அப்துல் நாச‌ர் ,மாண‌வ‌ மாண‌விக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.ஆசிரிய‌ர் ம‌ரிய‌தாஸ் ந‌ன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.