Wednesday, May 30, 2012
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிக்கை !
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளரும்,கவுன்சிலருமான முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கீழக்கரை நகரில் முக்கிய இடங்களான பஸ்நிலையம்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ள பஸ்நிலையம் செல்லும் பகுதியில் இரண்டு மதுபான விற்பனை கடைகள் அமைந்துள்ளன.இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூராக உள்ளது.குடியிருப்பு பகுதிகள் நிறைந்து மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில் அரசு எப்படி இக்கடைகளுக்கு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை.
பெண்கள் இவ்வழியே செல்வதற்கு அஞ்சும் நிலை உள்ளது.இப்பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். அரசு உடனடியாக இக்கடைகளை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும்.இது குறித்து தமிழக முதல்வருக்கு எங்கள் அமைப்பு சார்பாக வலியுறுத்த உள்ளோம் என்றார்.
Tuesday, May 29, 2012
ராமநாதபுரம் பகுதிகளில் 15நாளில் லாட்ஜ்களில் கண்காணிப்பு கேமரா! காவல்துறை உத்தரவு !
டி.ஐ.ஜி.சுப்பிரமணியன் மற்றும் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார்(பைல் படம்)
வங்கிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி கே மரா), அலாரம் பொருத்துவது, பாதுகாவலர்கள் நியமிப்பது தொடர்பாக ராமநாதபுரத்தில் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் த¬மையில் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் வரவேற்றார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ் ணன், மாவட்ட குற்றப்பதிவேடு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் உட்பட இன்ஸ்பெக்டர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எஸ்பி பேசியதாவது: வங்கிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம், செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும் வகையிலான அலாரம் போன்றவற்றை உடனடியாக பொருத்த வேண் டும். பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்.
இதுபோன்ற பாதுகா ப்பு வசதிகள் ஏற்படுத்தாத வங்கிகள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎம்மில் முதியவர்களிடம் பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றுவது, வங்கிகளில் நகை அடகு வைத்து தருகிறேன் என இடைத்தரகர்கள் ஏமாற்றுவது போன்ற தகவல் களை போலீசுக்கு தெரி விக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து லாட்ஜ் உரிமையாளர்களுடன் நடந்த கூட்டத்தில், லாட்ஜ்களில் திருடர்கள், குற்றவாளிகள், தீவிரவாதிகள் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் லாட் ஜ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 15 நாட்களுக் குள் பொறுத்த வேண்டும். சந்தேகப்படும்படி யாரும் தங்கினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரி விக்க வேண்டும். தங்குபவர்களின் முழு விலாசத் தை பதிவு செய்ய வேண் டும். அதற்கான விண்ணப்பத்தை போலீசுக்கு கொடுக்க வேண்டும். லாட்ஜ்களில் பணியாற்றுபவர்கள், ஏற்கனவே பணியாற்றியவர்கள் குறித்து போட்டோவுடன் முழு விபரங்களையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி அறிவுறுத்தியுள்ளா.
ஏற்கெனவே ஏர்வாடி தர்ஹா பகுதி லாட்ஜ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த டி.ஐ.ஜி.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
கீழக்கரையில் தீ விபத்து! 6 குடிசைகள் சேதம்!
கீழக்கரையில் விஏஓ அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து சாம்பலானது.2 பேர் தீக்காயமடைந்தனர்.
தீ விபத்தில் ரத்தினவல்லி ,லட்சுமணன்,முனியசாமி,ரமணன்,முருகன்,நாதன் உள்ளிட்டவர்களின் குடிசைகள் பாதிப்படைந்தன.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில்,கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,ஜெயபிரகாஷ் ,முகைதீன் இப்ராகிம்,சாகுல் ஹமீது மற்றும் வேலுச்சாமி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு பாதிக்கபட்டவர்களுக்கு தலா ரூ2000ம் மற்றும் ஒரு அரிசி மூடை ஆகியவை தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள்.
தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Monday, May 28, 2012
கோழி கழிவால் அழிவு!கீழக்கரையில் 45% குழந்தைகள் பாதிப்பு!எக்ஸ்னோரா அதிர்ச்சி தகவல் !
குப்பைகளோடு கோழி கழிவுகள் மூட்டைகளாக கட்டி வீசப்படும் இடங்களில் ஒரு சில பகுதிகள்
வீட்டு வாசல்களையும் விட்டு வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகினறனர் அப்பகுதியை சேர்ந்தோர்...
கடற்கரை ,குடியிருப்பு பகுதி என்று ஒரு இடம் மிச்சமில்லாமல் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள் அழுகி புழுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாவதால் கீழக்கரை பகுதியை சேர்ந்த 45 சதவீத குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.
கீழக்கரையில் சேரும் குப்பைகளில் ஒரு பகுதி கோழி கழிவுகள் என்று கூறப்படுகிறது.
கீழக்கரை நகரில் மட்டும் 83 கோழிகறி கடைகள் உள்ளன.இவைகளில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோழிகள் வியாபாரத்திற்காக அறுக்கப்படுகின்றன.இவற்றில் சுமார் 675 கிலோ கோழி கழிவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த கழிவுகள் அனைத்தும் நகரில் சேரும் குப்பைகளோடு கலந்து விடுகிறது.ஒரு சில கடைகளில் மட்டும் கழிவுகளை குப்பையில் வீசி எறியாமல் கோழி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கால்நடை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி தருகிறார்கள்.சமீபத்தில் கீழக்கரை நகர் முழுவதும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பாக ஆய்வு நடத்தியதில் சுமார் 45% குழந்தைகளும்,30%சதவீத முதியவர்கள் மலேரிய,டைபாய்ட்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம் தெருவோரம் குவிந்து கிடக்கும் கோழிக்கழிவுகள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கீழக்கரையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஹசனுதீன் கூறுகையில்,
கோழிக்கடை நடத்துபவர்கள் கழிவுகளை முறையாக அகற்றாமல் மக்கள் நடமாட்டமுள்ள கடற்கரை பகுதி,வடக்குத்தெரு மணல்மேடு பகுதி,இஸ்லாமியா பள்ளி மைதானம் அருகில்,கோகா அகமது தெரு ஹமீதியா விளையாட்டு மைதானம் அருகில் என்று பல்வேறு இடங்களில் வீசி செல்கின்றனர்.ஒரு படி மேலாக ஒரு சிலர் தெருக்களில் வீடுகளின் அருகிலும் எறிந்து விட்டு செல்கின்றனர்.நோய் பரப்பும் கிருமிகளின் தீவிரத்தை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.
இது குறித்து யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் தொழில் நுட்ப மேலாளர் தணிகாச்சலம் விவரித்து கூறுகையில்,
கோழி கழிவுகளை குப்பைகளில் போட்ட 24 மணி நேரத்தில் புழுக்கள் உருவாகின்றன.
இது சூரிய ஒளி பட்டவுடன் நோய் கிருமிகள் உற்பத்தியாகி அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவுகின்றன.இவை கிடக்கும் தூரத்தில் நடந்து செல்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருப்பார்களேயானால் அவர்களை நோய் கண்டிப்பாக தாக்க கூடிய வாய்ப்புள்ளது.கோழி கழிவுகள் குவிந்துள்ள இடத்தில் சாதரணமாக 20 நிமிடம் நின்றாலே தொண்டை வலி ஏற்படுவதை உணரலாம் அந்த அளவுக்கு இக்கிருமிகளின் தாக்குதல் இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளது.இக்கோழி கழிவுகளை தண்ணீரில் உப்பிட்டு வேக வைத்து இன்னும் சில முறைகளை நடைமுறைபடுத்தி கால்நடைகளுக்கு தீவனமாக பயன் படுத்தலாம்.
Sunday, May 27, 2012
காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! நடுத்தெருவை சேர்ந்த....
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தை சேர்ந்த, மர்ஹூம். அஹமத் ஜலாலுதீன், மர்ஹூம். மதீனா பீவி ஆகியோர்களின் முதலாவது மகளும், ஆய்ஷா பீவி, சேகு தாவூது உம்மா, ஜமால் யூஸுப், முஹம்மது அப்துல் காதர், ஹுசைன், ஆகியோரின் சகோதரியும் மர்ஹூம் நடுத்தெரு 'இன்சூரன்ஸ் சாவனா' அவர்களின் மனையியும், பஸிர், முஹம்மது அப்துல் காதர், சீனி, முஹம்மது முகைதீன், அபுல் கலாம் ஆசாத் ,செய்யது மீரா, மதீனா பீவி, மர்ஸுகா, பரிஹா, ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. சுபைதா பீவி அவர்கள் இன்று (27.05.2012) காலை வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் :- சாலிஹ் ஹீசைன்
இருட்டில் கீழக்கரை ! துணை மின் நிலையத்தில் பழுதால் தொடர் மின்வெட்டு !
ஏற்ககெனெவே தொடர் மின்வெட்டால் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது கீழக்கரை வண்ணாந்துறை துணை மின் நிலையத்தில் இயந்திரங்கள் பழுதடைந்தால் நேற்று மாலை 3 மணியிலிருந்து துணை மின்சார நிலையத்திலிருந்து கீழக்கரை முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.இதனால் கீழக்கரை நகர் முழுவதும் இருட்டில் முழ்கியது. தொடர்ந்து மின்வெட்டு நீடித்து வருகிறது. இடையில் சிறிது நேரம் மட்டும் ராமநாதபுரம் தொகுப்பிலிருந்து மின்சாரம் தரப்ப்பட்டது.இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
சென்னையிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர் வரவழைக்கப்பட்டு நாளை தான் சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Friday, May 25, 2012
பிளஸ்2 தேர்வு!முஹைதீனியா பள்ளியில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு படங்கள்)
பட விளக்கம்:-பரிசு பெற்ற மாணவ சகோதரிகள் தங்களது குடும்பத்தாருடன் அருகில் நகராட்சி துணை தலைவர் மற்று கவுன்சிலர்கள் மற்றும் முஹைதீனியா பள்ளி நிர்வாகிகள்
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பயின்ற சகோதர மாணவிகள் மிஸ்பாஹ் பாத்திமா பள்ளி அளவில் 1161/1200 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும் கீழக்கரை அளவிலும் முதலிடம் பெற்றார் ,இவருடைய சகோதரி மிஸ்பாஹ்ஆயிஷா 1149/1200 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அள்வில் இரண்டாம் இடம் பெற்றார். முகம்மது ஹம்ஷா பாஹிமா மூன்றாமிடம் பெற்றார்.
இவர்களை பாராட்டி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் கீழக்கரை நகராட்சி துணை தலைவர் , கவுன்சிலர்கள் இணைந்து நடத்திய பாராட்டு விழா முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
வடக்குத்தெரு ஜமாத் தலைவர் பசீர் தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம்,இடிமின்னல் ஹாஜா,அரூசியா,சாகுல் ஹமீது மற்றும்
முன்னாள் கவுசிலர் வேல்சாமி,மக்கள் நல பாதுகாப்பு கழகதலைவர் தமீமுதீன்,பொருளாளர் சாலிஹ் ஹீசைன்,
கல்விக்குழு உபதலைவர் முகம்மது ரபீக் சாதிக்,துணை செயலாளர் முகைதீன் இப்ராகிம், கீழக்கரை காவல் நிலைய எஸ்.ஐ.கார்மேகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் துணை முதல்வர் சேதுபதி வரவேற்றார்.முதல்வர் ரஹ்மத்நிஷா நன்றி கூறினார்.
Thursday, May 24, 2012
கீழக்கரை அருகே டெங்கு காய்ச்சல் !ஏராளமானோர் பாதிப்பு !நடவடிக்கை மந்தம் என குற்றச்சாட்டு!
பொதுமக்களை பரிசோதனை செய்யும் அர்சு மருத்துவர்.
வீட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீரை பாட்டிலில் நிரப்பிய போதுஅதில் உள்ள கொசுக்களை படத்தில் காணலாம்
கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் சுகாதரத்துறை அலட்சிய போக்குடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து குளபதம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது,
கடந்த ஒரு மாத காலமாக எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிப்படைந்தனர்.வேளானூர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர் ஆனாலும் குணமடையாததால் ராமநாதபுரம் தனியார் மருத்துவ்மனையில் சோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் என்று கூறியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறைக்கு தெரிவித்தேன் மேலும் கொசு ஒழிப்புக்காக புகை மருந்து மூன்று முறை அடித்தோம் தொடர்ந்து காய்ச்சல் பரவுவது நின்றபாடில்லை. இன்றுதான் உத்தரகோசமங்கை வட்டார அலுவலர் பொது மக்களை பரிசோதனை செய்தார் இவ்வாறு அவர் கூறினார்.
நத்தம் ஜமாத் தலைவர் கூறியதாவது, தொடர்ந்து காய்ச்சல் பரவி கொண்டுதான் இருக்கிறது கிராமத்தில் காய்ச்சலால பாதிக்கப்படாதவர்களே இல்லை என்ற அளவில் உள்ளது.இது குறித்து சுகாதாரத்துறையின் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் அரசு மருத்துவர் பரிசோதனை செய்கிறார்.இதுவும் கண்துடைப்புதான். அரசு மருத்துவர் இந்நோய்க்கு தடுப்பு மருந்து இல்லை என்கிறார் இதனால் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது.எனவே உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இது குறிட்து உத்தரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலர் மதார்ஷா கூறியதாவது, குடிதண்ணீரை தேக்கி குடங்களில் வைப்பால் அதில் ஏடிஸ் என்ற கொசுக்கள் உருவாகி இந்த காய்ச்சலை பரவுகிறது எனவே வீட்டில் தன்ணீரை தேக்கி வைக்காதீர்கள்.இந்த காய்ச்சலுக்கு தடுப்ப்பு ஊசியோ மருந்தோ கிடையாது.இப்பகுதியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .அதே போல் பாளையரேந்தல் கிராமத்தில் சேகர் மகள் கர்ணியா(4) என்ற குழந்தைக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற அனைவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளாது என்றார்.
இது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் உமா மகேஸ்வரியிடம் இப்பிரச்சனை சம்பந்தமாக (9444918687) என்ற எண்ணில் தொடர்பு கொண்ட கேட்க முயன்ற போது மணி ஒலித்து கொண்டே இருந்தது பல முறை முயற்சித்தும் எவ்வித பதிலும் இல்லை.
டெங்கு காய்ச்சல் போன்றவற்றை எதிர் கொள்ள அரசின் சுகாதாரத்துறை துரிதமாக செயல்படவேண்டும்.இது போன்று அலட்சிய போக்குடன் செயல்பட்டால் டெங்கு காய்ச்சல் அருகருகே உள்ள ஊர்களுக்கு வேகமாக பரவி பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்ப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலை வாய்ப்பு பெற்ற நூற்றுக்கணக்கான சதக் பாலிடெக்னிக் மாணவர்கள்!முதல்வர் தகவல்!
சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கூறியதாவது
சதக் பாலிடெக்னிக் கல்லூயில் வளாக தேர்வின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உடனடி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்ற தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மேலும் இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல், கடல் சார்பு, கணிணியியல், தகவல் தொழில் நுட்பம் என ஏழு கோர்ஸ்கள் உள்ளன.
ரூ.5 கோடியில் "ஷிப்பிங் கேம்பஸ்' என்ற கப்பல் வடிவமைப்பு மாணவர்களின் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளது.இதுதவிர நான்கு ஆண்டுகள் பகுதி நேர பட்டய படிப்பு வசதியும் உள்ளது. இதில் இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் "பார்ட் டைம்' பிரிவுகள் உள்ளன. சிறப்பான கல்விச் சேவைக்காக தேசிய தரக் கட்டுப்பாடு வாரியத்தால் ஐந்து பிரிவுகளுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
Wednesday, May 23, 2012
பிளஸ்2 தேர்வு!கீழக்கரையில் ஒரே பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சகோதரிகள்!
கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் பயின்ற சகோதரிகள் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
மிஸ்பாஹ் பாத்திமா 1161/1200 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும் கீழக்கரை அளவிலும் முதலிடம் பெற்றார். அதே போல் அவரது உடன் பிறந்த சகோதரி மிஸ்பாஹ் ஆயிஷா 1149/1200 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
வடக்குத்தெருவை சேர்ந்த இவர்களது தந்தை எஸ்.எ,.எஸ்.பாக்கர் தனது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
+2 தேர்வு!முத்துபேட்டை பள்ளியில் பெரியபட்டிணம் மாணவன் பாசித் முதலிடம் !
ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை சென்.ஜோசப் பள்ளியில் பயின்ற பெரியபட்டிணத்தை சேர்ந்த மாணவன் முகம்மது பாசித் பிளஸ் 2 தேர்வு முடிவில் 1070/1200 மதிபெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவரை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பாரட்டினர்.
இவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 480/500 பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
உங்கள் பாராட்டுதல்களை இதில் தெரிவிக்கலாம். மொபைல்:-0091 78451 14642
செய்தி :- யாசர் அரபாத்
கீழக்கரையில் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் காந்தி நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் !
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளில் கீழக்கரை முஸ்லீம் பஜாரில் தியாகி சவுக்கத் அலி கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நகர் தலைவர் ஹமீது கான் தலைமை வகித்தார்.துணை தலைவர் முருகானந்தம்,செயலாளர் வேலாயுதம் ,பொருளாளர் அப்துல் கனி,லாபிர் முன்னிலை வகித்தனர்.
Tuesday, May 22, 2012
முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் !2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
+ 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் பெற்றுள்ளார்.இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி,ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது
ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகளும் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக 1128 மாணவி பெற்றுள்ளார்
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 58 பேரில் 58 பேர் தேர்வு பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவி ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக 1151 பெற்றுள்ளார்.கீழக்கரை அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
கீழக்கரையில் முஹைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 பெற்று கீழக்கரை பள்ளி மாணவ ,மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.இப்பள்ளியில் மொத்தம் 19 பேரில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அதிக மதிப்பெண்ணாக 1154 பெற்றுள்ளார்.கீழக்கரை அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். 95% தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.
ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % சதவீத தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளது
தீனியா பள்ளியில் 8 பேரில் 7 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
ஹமீதியா ஆண்கள் பள்ளியில் 88 பேரில் 87 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்ணாக 1112 பெற்றுள்ளார்.
காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு !
மர்ஹூம். மு.மு.க. முஹம்மது சேக்னா லெப்பை அவர்களின் மகளும், ஜனாப். சேகு முதலியார் சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். முஹம்மது ஐதுரூஸ், ஜனாப். மு.மு.க.முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், ஜனாப் அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும் ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் அவர்களின் மாமியாரும், ஜனாப். அய்யூப் கான் அவர்களின் சிறிய தாயாருமான மு.மு.க.சித்தி ஹதீஜா பீவி அவர்கள் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் இன்று நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : ஜனாப் அஹமது அஸ்லம் - 90033 18071
தகவல் : சாலிஹ் ஹுசைன்
Monday, May 21, 2012
கீழக்கரை பகுதியில் புதன் மே23 காலை 9 மணி - மாலை 5மணி வரை மின் தடை !
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் புதன்கிழமை (மே.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Saturday, May 19, 2012
புஜைராவில்(யுஏஇ) புதிய கடை திறப்பு விழா (படங்கள்!
கீழக்கரை புதுதெருவை சேர்ந்த பக்கீர் மற்றும் ராஜா ஆகியோரின் "ஒய்ட் பேர்ட்ஸ்" என்ற பெயரில் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.
இக்கடையில் சிங்கப்பூர் இறக்குமதி பொருட்கள்,துணி வகைகள், வாசனை திரவியங்கள்,சோப்,தைலம் போன்ற பல் வேறு பொருட்டகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடை திறப்பு விழா நேற்று (18-05-12) வெள்ளியன்று) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு மொபைல் எண் - 0097150 5205061
Friday, May 18, 2012
கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐயினர் 6பேர் மீது வழக்கு பதிவு !முன்விரோதத்தில் பதிந்துள்ளதாக குற்றச்சாட்டு !
கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெருமுனை பிரசாரம் செய்வதாக கூறி காவல்துறையிடம் அனுமதி பெற்று அந்த கட்சியின் தலைவரை ஏர்வாடி முக்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்து விதிகளை மீறியதாக கூறி காவல் துறையினர்,நகர் தலைவர் அப்தாஹிர் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான்,துணை தலைவர் அப்பாஸ் ஆலிம்,நகர் செயலாளர் அப்துல் ஹாதி,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் ஹாஜி உள்ளிட்ட 6பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்,
இது குறித்து கட்சியின் நகர் செயலாளர் அப்துல் ஹாதி கூறியதாவது,
இத்தனை காலமாக அனைத்து கட்சி தலைவர்,செயலாளர்கள் கீழக்கரை வருகை தந்தால் அவர்களை கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து மரியாதை நிமித்தமாக ஊருக்குள் அழைத்து வருவது வழக்கம் அந்த வகையில் எங்கள் கட்சியில் மாநில தலைவர் வருகை தந்த போது அவரை எங்கள் கட்சியினர் ஏர்வாடி முக்கு ரோட்டிலிருந்து அழைத்து வந்தோம். இதில் என்ன விதிமீறல் நடைபெற்று உள்ளது.அப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் அனைத்து கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இது கீழக்கரை காவல்துறை எஸ்.ஐ முன் விரோதத்தை மனதில் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளார் என்று நினைக்க தோன்றுகிறது.
நலிவை நோக்கி...கீழக்கரை அருகே தினமும் திணறும் தேங்காய் நார் நிறுவனங்கள்!!
குவிக்கப்பட்டுள்ள தேங்காய் நார்
விற்பனைக்கு தயாராக கயிறு
கீழக்கரை தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் நலிவடைந்து மூடும் நிலைக்கு தள்ளப்படுவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கீழக்கரை அருகே அதன் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார்12க்கும் மேல் உள்ளன இவை தொழிலாளர் பற்றாக்குறை ,மின் தட்டுப்பாடு காரணமாக ஏற்கெனவே நலிவடைந்திருக்கும் நிலையில் தற்போது அரசு மின் கட்டணத்தை மேலும் உயர்த்தியுள்ளாதால் தொடந்து இந்த தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என இத்தொழிலில் ஈடுபடுவோர் கேட்டு கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிரங்குடியில் கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சுலைமான் கூறியதாவது,
காஞ்சிரங்குடி,அலவாக்கரைவாடி,வண்ணாங்குண்டு,ரெகுநாதபுரம்,செம்படையார்குளம்,தாமரைகுளம்,பெருங்குளம் போன்ற கிராமங்களில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகளை இத்தொழிலில் சந்தித்து வரும் நிலையில்,(கிலோ வாட்) மின்சரத்திற்கு ரூ 30 செலுத்தி வந்தோம் தற்போது திடீரென ரூ120 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள்.ஒவொரு நாளும் இந்நிறுவனத்தை நடத்தி செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது.இந்த விலை உயர்வு தாங்க முடியாத சுமையாகும் எனவே உடனடியாக அரசாங்கம் மானிய விலையில் மின்சாரத்தை குறைந்த விலைக்கு தர வேண்டும் இல்லையென்றால் இத்தொழில் மிகபெரிய நலிவை சந்திக்கும் என்றார்
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகள் உள்ளன.
Thursday, May 17, 2012
நாளை(18-மே)ராமநாதபுரம் வரும் விழிப்புணர்வு ரயில்! கீழக்கரையிலிருந்து செல்ல இலவச பஸ் ஏற்பாடு!
நாடு முழுவதும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 9ம் தேதி கன்னியாகுமரியில் இந்த கண்காட்சி ரயில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை ராமநாதபுரத்திற்கு ரயில் வருகை தர உள்ளது .
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நாளை காலை 9மணியளவில் இந்த கண்காட்சி ரயில் நிறுத்தப்படும். இதை பார்வையிட வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் யாரும் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை.
கீழக்கரையிலிருந்து பொதுமக்கள் பார்வையிட செல்லும் வகையில் இலவசமாக ராமநாதபுரத்திற்கு சென்று வர 2 பஸ்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கீழக்கரை நகராட்சி தலைவர் ,துணை தலைவர் ,கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
விழிப்புணர்வு ரயிலில் ஆறு பெட்டிகள் உள்ளது.
1.முதல் பெட்டியில் ஹெச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த தொடுதிரை, 3டீ மாதிரி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
2.இரண்டாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களுக்கான மருத்துவ சேவைகளும்,
3.மூன்றாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களை சமுதாயத்தில் அங்கீகரிப்பது தொடர்பான விளக்க படங்கள், கூட்டு மருத்துவ முறைகள் .
4. நான்காவது பெட்டியில் தாய்சேய் நலம், பொது சுகாதாரம் மற்றும் காசநோய், பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு படங்கள் உள்ளது.
5.ஐந்தாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த கருத்தரங்குகள், வகுப்புகள் நடக்கிறது.
6. ஆறாவது பெட்டியில் பால்வினை மற்றும் எய்ட்ஸ் தொற்றுகள் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொதுமக்கள் பார்வையிடலாம்.
கீழக்கரையில் மாநில தலைவர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐயில் இணைந்தனர் !
கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா மற்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி முன்னிலையில் கீழக்கரை முன்னால் கவுன்சிலர் ஜஹாங்கிர் அரூஸ்,500 பிளாட் ஹைதல் அலி ஆலிம்,தர்மராஜ்.எம்.ஏ.பி.எல்,ஜெயகுமார்(கும்பிடு மதுரை) செய்யது அப்தாகிர்,பல்லாக்கு என்ற ஹபீப் முஹம்மது உள்ளிட்ட ஏராளமானோர் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
அப்துல் ஹமீது ,அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட பலர் உடனிருந்த்னர்
Wednesday, May 16, 2012
கீழக்கரையில் அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழா !
கீழக்கரையில் அதிமுக அரசின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,சிறுபாண்மை பிரிவு செயலாளர் யாசீன்,நகர் பொருளாளர் நாரயணன்,விவசாய அணி செயலாளர் பாரூக்,இளைஞர் அணி செயலாளர்
சரவண பாலாஜி ,நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்டோருக்கு அன்னாதானம் மற்றும் இனிப்புகள் வழங்கபட்டது
பாபு ,வேல்சாமி,நாகரத்தினம்,பாரதி,குமரன்,சுரேஷ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா!
கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கிளையின் சார்பாக கொடியேற்று விழா மற்றும் தெருமுனை கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் முஸ்லீம் பஜாரில் நடைபெற்றது.மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநில பொது செயலாலர் அப்துல் ஹமீது,மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,துணை தலைவர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் முகம்மது இஸ்ஹாக்,சோமு ,ராமகிருஸ்ணன்,பைரோஸ்கான்,சேகு பகுருதீன்,அ.மு.சுல்தான் மற்றும் பலர் முன்னிலையில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கொடியேற்றி வைத்து பேசினார். நகர் செயலாளர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்.
Sunday, May 13, 2012
கீழக்கரை கடல் பகுதிக்கு வந்த கப்பல்!
தகவல் : முஜீப்
மன்னார் வளைகுடாவை சேர்ந்த கீழக்கரை கடல் பகுதியில் மீன் பிடி படகுகளை அதிக அளவில் காணமுடியும் மிக அரிதாக கப்பல்கள் வருகை இருக்கும் அந்த வகையில் கப்பல் ஒன்று தென்பட்டது.
இக்கப்பல் பழுதடைந்து கடலில் தரைதட்டி நிற்கும் கப்பல்களை மீட்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இழுவை கப்பல் என்று கூறப்படுகிறது. இக்கப்பலை காண ஏராளமனோர் கடற்கரைக்கு வந்தனர்.
Saturday, May 12, 2012
கீழக்கரையில் காவல்துறை அதிகாரி மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு ! குறைதீர்ப்பு நாளில் பரபரப்பு!(படங்கள்)
கீழக்கரை காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக குறைதீர்ப்பு நாளில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் டிஐஜி ராமசுப்பிரமணியன்.எஸ்பி காளிராஜ் உள்ளிட்டோர் மனுக்களை பெற்றனர்.
கீழக்கரையில் புறக்காவல் நிலையம் அமைப்பது,போக்குவரத்து காவலர்களை நியமிப்பது,ஏர்வாடியில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது,கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் 42 மனுக்கள் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா ,கீழக்கரை டிஎஸ்பி தன்னிடம் குறிப்பிட்ட வழக்கிற்காக லஞ்சம் கேட்டதாக நேரடியாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டினார்.
காவல்துறை நடத்திய குறைதீர்ப்பு நாளில் காவல்துறை மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்ததால் சிறிது நேரம் அதிர்ச்சி நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஆவண செய்யப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் புதிய பொறுப்பாளர் நியமனம் !
கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் சார்பில் செய்யப்படும் நலப்பணிகளில் முக்கிய பணியாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நகர் முழுவதும் வீடு வீடாக சென்று குப்பைகளை அகற்றுவது போன்ற சுகாதாரம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் பொறுப்பாளர் ஏ.கே.எஸ்.லியாகத் அலி சமீபத்தில் காலமானதை தொடர்ந்து தற்போது கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் பொறுப்பாளராக அப்துல் அஜீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Friday, May 11, 2012
கொசுக்கள் உற்பத்தி நிலையமாக சாலையோர கழிவு நீர் கால்வாய்கள் ! சீரமைக்க கோரிக்கை!
நடுத்தெரு ஜீம்மா பள்ளி அருகே குப்பைகள் நிறைந்து காணப்படும் கழிவு நீர் கால்வாய்
கிழக்கு தெரு பகுதி சாலை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
கீழக்கரையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சீராக ஓடாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது.மேலும் பல இடங்களில் கால்வாயின் சிமெண்ட் பகுதி உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.
கழிவுநீர் தேங்கி ஒரே இடத்தில் நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு அப்பகுதி முழுவதும் நோய்களை பரப்பும் கொசுக்கள் உருவாகிறது.இதனால் அந்தந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் சில இடங்களில் கால்வாய்களில் குப்பைகளை அகற்றி விட்டு அங்கேயே விட்டு சென்று விடுகிறார்கள்.இதனால் மீண்டும் அந்த குப்பைகள் கால்வாய்களில் கலந்து விடுகிறது என்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ்துணை தலைவர் மூர் ஹசனுதீன் கூறுகையில் ,
நகர் முழுவதும் இந்த அவல நிலை நீடிக்கிறது.நகராட்சி பதவியேற்ற உடன் இந்த கால்வாய்கள் தூர் வாரப்பட்டன.ஆனால் எவ்வித பிரயோஜமும் இல்லை சில மாதங்களில் தற்போது கால்வாய்களில் அடைப்பும்,உடைப்பும் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்
மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன் கூறுகையில்,
கால்வாய் அடைப்புகளை சரி செய்யும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அங்கேயே விட்டு செல்லாமல் அப்பகுதியிலிருந்து அகர்ற வேண்டும்.அது இல்லாம அடைப்புகள சரி செய்வது பலனில்லை என்றார்.
Thursday, May 10, 2012
கீழக்கரையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
கீழக்கரை,
கீழக்கரையில் முறிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை விபத்து ஏற்படும் முன் அகற்ற மின்வாரிம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளிலுள்ள தெருக்களில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது. விபரீதம் நடக்கும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து 6வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறியதாவது, ஆறாவது வார்டில் இந்து பஜார், மறவர் தெரு உள்பட 4 இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. மின்கம்பங்களின் அடிப்பாகம் சிதிலமடைந்து முறிந்து விழும் வகையில் உள்ளது.
மின்கம்பத்தின் மேலே செல்லும் மின் கம்பியை தாங்கி நிற்கும் இரும்பு ஆங்கிள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரீதம் உணர்ந்து முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சேர்மன் மீது போலீசில் புகார் ! எல்லாம் விளம்பரத்துக்காக..சேர்மன் பதில் !
நகராட்சி கூட்டத்தின் நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தகாத வார்த்தையில் திட்டியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் போலீசில் கொடுத்துள்ள புகார் விபரம் கீழே தரப்பட்டுள்ளது:-
நகராட்சியின் அவசர கூட்டம் 03.05.2012 வியாழன் மாலை 4 மணியளவில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவி அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையர் அவர்கள் முன்னிலையில், துணை சேர்மன் அவர்கள், பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 37 வது பொருளின் மீது விவாதம் நடைபெற்ற போது குறைந்த விலை புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் மக்கள் பணம் வீணாகாமல் தடுக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க நான் உள்பட பல நகர்மன்ற கவுன்சிலர்கள் வற்புறுத்தினோம்.
ஏதோ சில காரணங்களுக்காக நகராட்சி தலைவி அவர்கள் அவர் குறிப்பிடும் ஒப்பந்ததாரர்க்கு தான் வேலை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதை கருத்தில் கொண்டு நானும், பல உறுப்பினர்களும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இதை பொறுத்து கொள்ள முடியாத நகராட்சி தலைவி அவர்கள் என்னை மாமன்ற உறுப்பினர் என்று பாராமல் தன் பதவிக்கும் கண்ணியம் அளிக்காமல் லூ____ மாதிரி பேசாதீர்கள் என்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதை எதிர்பார்க்காத நான் மாமன்றத்தின் கண்ணியம் கருதி நகராட்சி தலைவி அவர்கள் என்னை தவறாக பேசியது பற்றி மன்றத்தில் எந்த விவாதமும் செய்யவில்லை.
நான் மாமன்ற 18 வது வார்டு கவுன்சிலராகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராகவும் இருக்கின்றேன்.
மாமன்ற உறுப்பினராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராக இருக்கும் என்னை நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஊழியர்கள், துணைச்சேர்மன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன் மாமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக அவதூறாக பேசிய மாமன்ற தலைவி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது,
நகராட்சி கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.அப்போது "சபையில் இல்லாதவர்களை பற்றி அவதூறாக பேச வேண்டாம்" என்ற அர்த்ததில் அவ்வாறு கூறினேன் அவரும் அதே பதிலை என்னிடம் கூறினார் அத்தோடு பிரச்சனை முடிவடைந்து விட்டது.மேலும் கூட்டத்தின் போது 3வது வார்டில் தலையிட்டு இவர் பேசியதால் அந்த வார்டு உறுப்பினர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இப்படிவேண்டுமென்றே இவர் பிர்ச்சனைகளை எழுப்புவதும்,பணிகள் செய்ய விடாமல் தொந்தரவு செய்வதும் இவருக்கு வாடிக்கையாகிவிட்டது.இவை அனைத்தையும் இவர் செய்வது சுய விளம்பரத்திற்காகத்தானே தவிர வேறில்லை. நான் ஒரு பெண் என்று கூட பாராமல் நகராட்சி கூட்டங்களில் கேலியும்,கிண்டலுமாக பேசி இவர் நடந்து கொள்ளும் விதம் முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.இவரின் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம்.
Subscribe to:
Posts (Atom)