Wednesday, May 2, 2012

கீழக்கரையில் 1ரூபாய்க்கு சப்பாத்தி ! சாலையோர கடை திறப்பு !





கீழக்கரை சாலைதெருவை சேர்ந்தவர் மன்சூர் இவர் ஏற்கெனவே ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் மன்சூர் இன்று மாலை ரூ1 க்கு சப்பாத்தி விற்பனையை தொடங்கினார்.
கீழக்கரை இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகளில் ஒருவரான மூர் ஹசனுதீன் சாலை தெருவில் பழைய பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில்சாலையோர கடையை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர் சித்தீக் ,சின்னகடை தெரு ராசிக் ,சுல்தான் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வியாபாரி மன்சூர் கூறியதாவது,
ஒரு சப்பாத்தியை ரூ 15 க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தில் குறைந்த விலையில் தருவதற்காக லாபத்தை குறைத்து விற்பனை செய்கிறேன். குருமாவுக்கு ரூ 1 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளேன்.சப்பாத்திக்கு எண்ணெய் சேர்ப்பதிலை .இதனால் உடல் நல்த்திற்கு நன்மை பயக்கும். மக்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும்.வியாபாரம் தொடங்கு நாளாக இருப்பதால் இன்று மட்டும் சப்பாத்தியை இங்கேயே சாப்பிட அனுமதித்துள்ளேன் நாளை முதல் பார்சல் சர்வீஸ் மட்டும்தான் என்றார்.

அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது, ரூ 1 ரூபாய்க்கு விற்பனை செய்ய எப்படி இவருக்கு கட்டுப்படியாகிறது என்று தெரியவில்லை .இவர் தொடர்ந்து இந்த வியாபரத்தை செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தி நிலைத்து விட்டாரென்றால் இவர் நிச்சயம் சாதனையாளர்தான் .இவரின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது என்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.