கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சியில், இந்திய தொழில் நுட்பத்தின் மூலமாக, 2 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. ஏர்வாடி ஊராட்சியில் சடைமுனியன்வலசை, சின்ன ஏர்வாடி, மெய்யன்வலசை, பிச்சை மூப்பன்வலசை, கல்பார், ஆதஞ்சேரி, செவல் குடியிருப்பு உட்பட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இவர்களுக்காக மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம்(சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ.Central Salt & Marine Chemicals Research Institute,) மூலம் 2 கோடி ரூபாயில், கடல் நீரை நன்னீராக்கும் திட்ட துவக்க விழா, நேற்று, சின்ன ஏர்வாடியில், கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டி.ராமசாமி துவக்கி வைத்தார்.முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், கடலாடி ஒன்றிய தலைவர் மூக்கையா முன்னிலை வகித்தனர். சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ.(Central Salt & Marine Chemicals Research Institute )முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் திட்டம் குறித்து விளக்கினார்.
சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ.,(Central Salt & Marine Chemicals Research Institute) இயக்குனர் கோஸ் பேசியதாவது:
இந்தியாவில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, தொழில் நுட்பத்தின் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும் என்பதற்கு முன்னோடியாக மாநில அளவில் சின்ன ஏர்வாடியில்,முதன் முறையாக இந்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தினமும் ஒரு லட்சம் லிட்டர் வரை குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சப்ளை செய்யப்படும், என்றார்.
ஊராட்சி உறுப்பினர் அம்ஜத் ஹூசைன் வரவேற்றார்.ஊராட்சி செயலாளர் அஜ்மல் கான் தொகுத்து வழங்கினார். ஊராட்சிதலைவர் முகம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.ஊராட்சி உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், கடலாடி தாசில்தார் அமிர்தம், பி.டி.ஓ.,க்கள் தங்கராஜ்,குருநாதன், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அந்தோணி ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா, ஊராட்சி முன்னாள் தலைவர் குணசேகரன், தர்கா கமிட்டி செயலாளர் பாரூக், ஊராட்சி துணை தலைவர் ரகுமத்துல்லா கான், ஒன்றிய கவுன்சிலர்கள் காதர் பாட்சா, சவுந்திரபாண்டி பங்கேற்றனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.