Wednesday, May 1, 2013

பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்க‌ப்படுவ‌து நிறுத்த‌ம்!‌த‌ற்போது வீடுக‌ளுக்கே சென்று விசார‌ணை மேற்கொள்ள‌ப்ப‌டுகிற‌து!கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை தக‌வ‌ல்!





கீழக்கரையை சேர்ந்த பெரும்பாலானவ‌ர்க‌ள் அமீர‌க‌ம், சவுதி,க‌த்தார்,குவைத்  போன்ற வளைகுடா நாடுகளில் தொழில் செய்தும்,ப‌ணியாற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் தங்களு டன் தனது மனைவியையும் அழைத்து செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் பெண்கள், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக அழைக்கப்பட்டு வந்தனர். இத‌னால் பெண்க‌ள் பெரும் சிர‌ம‌த்துக்குள்ளாயின‌ர்.

இது குறித்து ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஏப்.23ல் சட்டசபையில் நடந்த போலீஸ் மானிய கோரிக்கையின் போது பேசினார்.
ச‌ட்ட‌ம‌ன்ற‌ கூட்ட‌த்தில் ந‌டைபெற்ற‌ விவாத‌த்தில்...

எம் எச் ஜவாஹிருல்லா :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல்துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக்கூடிய நடவடிக்கையாகும் அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும்கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதைபோல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு,கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று, விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும்போதுகூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல்நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது.இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 முதல்வர் ஜெய‌ல‌லிதா தனது பதிலுரையில் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்

 மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர் என்று கூறினார். சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக்கூடாது காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடைபெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு இதுபோன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்இனிமேல் பாஸ்போர்ட் டுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட மாட்டார் கள் என்று பதிலளித்தார்.

இதன் எதிரொலியாக தற்போது கீழக்கரையில் பெண்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து விசாரணை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கீழக்கரை இன்ஸ்பெக் டர் கணேசன் கூறுகையில், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கே நேரடியாக போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பதிவு அடிப்படையில் வரிசைப்படி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

போலீசார் தகவல்

கீழக்கரை இன்ஸ்பெக் டர் கணேசன் கூறுகையில்,

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கே நேரடியாக போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பதிவு அடிப்படையில் வரிசைப்படி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அவசர சூழ்நிலை என சில பெண்கள், அவர்களாகவே நேரடியாக ஸ்டேஷனுக்கு வருகின்றனர்� என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.