Saturday, June 30, 2012

காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் கவுன்சிலர்கள்!கவுன்சிலர் ஹாஜா குற்றச்சாட்டு



கீழக்கரை வடக்குதெரு தெரு பகுதியில் கழிவு நீர் வாய்கால் கட்டுவதற்கு நகராட்சி மூலம் ரூ 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் சிமெண்ட் கால்வாய்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற‌து.வடக்குதெரு பகுதியில் ப‌ள்ள‌ம் தோண்டும் ப‌குதியில் குடிநீர் பைப் புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் க‌ழிவுநீர் குடிநீருட‌ன் க‌லப்ப‌த‌ற்கு வாய்ப்புள்ள‌து.ப‌ள்ளமான‌ ப‌குதியாக‌ இருப்ப‌தால் இங்கிருந்து கால்வாய் வ‌ழியாக‌ க‌ழிவுநீர் வெளியேற‌ வாய்ப்பில்லை.என‌வே ம‌க்க‌ள் வ‌ரிப்ப‌ணம் வீணாவ‌தை த‌டுத்து நிறுத்த‌ வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் ப‌ணிக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு தோண்டிய‌ குழிக‌ள் மூட‌ப்ப‌டுவ‌தாக‌ க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கவுன்சிலர் இடிமின்ன‌ல் ஹாஜா கூறுகையில் ,

எனது வார்டான இப்ப‌குதியில் தேவையில்லாமல் கால்வாய் அமைக்கும் ந‌டைபெற்ற‌து.இப்ப‌குதி ம‌க்க‌ள் யாரும் விரும்ப‌வில்லை ஏன் என்றால் தாழ்வான‌ ப‌குதி என்ப‌தால் க‌ழிவுநீர் நிச்ச‌ய‌ம் வெளியேற‌ வாய்ப்பில்லை.
தற்போது தோண்டிய குழிகள் மூடப்பட்டு வருகிறது.மக்களி வரி பணம் வீண் விரையமானதுதான் மிச்சம்.பணிக‌ள் துவ‌ங்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு முன்பே முறையாக‌ திட்ட‌மிட‌ல் வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட சில‌ க‌வுன்சில‌ர்க‌ள் ப‌ணி எடுத்திருக்கும் ஒப்ப‌ந்த‌ரார‌க‌ளிட‌ம் வற்புறுத்தி க‌மிஷ‌ன் கேட்ப‌தாகவும் கமிஷனுக்காக மட்டும் தினமும் பலமுறை போன் செய்வதாகவும், ஒப்ப‌ந்த‌ந்தார‌ர்க‌ள் என்னிட‌ம் முறையிட்டுள்ளார்க‌ள்.தங்கள் வார்டுக்கான பணிகளை நன்றாக செய்ய வேண்டும் என்ற வலியுறுத்த வேண்டிய கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டால் எப்படி பணிகள் ஒழுங்காக நடைபெறும் மேலும் க‌மிஷ‌ன் கேட்ட கவுன்சிலர்கள் யார்,யார் என்று ஆதார‌த்துட‌ன் விரைவில் வெளியிடுவேன்.பணிகளுக்கான பணம் ம‌க்கள் ப‌ண‌ம் என்ப‌தை ம‌ன‌தில் கொள்ள‌ வேண்டும்.இனியாவ‌து திருந்த‌ வேண்டும்.என்றார்

Friday, June 29, 2012

கீழக்கரை கடற்கரையில்‌ கலெக்டர்!கலெக்டரிடம் கமிஷனர் குறித்து நேரடி குற்றச்சாட்டு!



கீழக்கரை கடற்கரையில்‌ கலெக்டர்!கலெக்டரிடம் கமிஷனர் குறித்து நேரடி குற்றச்சாட்டு!


கீழக்கரை பகுதிக்கு வருகை தந்த கலெக்டர் கடற்கரை பகுதிக்கு திடீர் விசிட் அடித்து சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.அவருடன் கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீப் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் வந்தனர்.

மக்கள் சேவை இயக்கம்,கே எம் எஸ் எஸ் சங்கத்தினர்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட‌ பலர் அங்கு வந்திருந்தனர்.க‌லெக்ட‌ரிட‌ம் ம‌க்க‌ள் சேவை இயக்கத்தின் முஜீப், ந‌க‌ராட்சி நிர்வாகம் குறித்து நேரடியாக‌ புகார் அளித்த‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது குறித்து ம‌க்க‌ள் சேவை இய‌க்க‌ம் த‌ர‌ப்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,


இன்று கலெக்டரை சந்தித்த மக்கள் சேவை இயக்க நிறுவனர் முஜீப் ,

கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீப் ரஹ்மானின் செயல்பாடு சரியில்லை என்றும், நகர் குறித்து எந்த புகார் அளித்தாலும் கமிஷனர் சொல்கிறார்..."அதெல்லாம் ஒன்று செய்ய முடியாது கீழக்கரையில் இப்படித்தான் இருக்கும் எங்கு போய் வேண்டும் என்றாலும் புகார் செய்து கொள்ளுங்கள்" என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்.எனவே கீழக்கரைக்கு வேறு ஒரு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்.மேலும் நகராட்சியின் சுகாதார நடவடிக்கை சரியில்லை என்று புகார் அளித்ததோடு மேலும் பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து பதிலளித்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Thursday, June 28, 2012

கீழக்கரையில் சாலை அமைக்கும் பணி!துணை சேர்மன் ,கவுன்சிலர் நேரில் ஆய்வு !




கீழக்கரை 5வது வார்டு பகுதி நான்கு வீடு முதல் புதிய பேருந்து நிலையம் வரை,நகராட்சியால் அமைக்கப்படும் சிமெண்ட் சாலையை
, துணை சேர்மன் ஹாஜா முஹைதீன்,5 வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இது குறித்து கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்,

பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று நானே தினமும் நேரில் வேலை நடக்கும் இடத்திற்கு வந்து பணிகளை கண்காணித்து வருகிறேன்.அந்தந்த வார்டு கவுன்சிலர்களே பணிகளை கண்காணிப்பதன் மூலம் பணியில் தவறுகள் நடைபெறும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்

டெங்கு காய்ச்சல்!கீழக்கரையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு,வீடாக ஆய்வு


கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து சென்னை பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சரவணன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குநர் உமா மகேஸ்வரி மற்றும் திருப்புல்லானி பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் ராசீக்தீன் உள்ளிட்ட குழுவினர் கீழக்கரை நகர் முழுவதும் வீடு,வீடாக சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.


இது குறித்து பொது சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் உமா மகேஸ்வரி கூறியதாவது,
கீழக்கரையில் டெங்கு மற்றும் கிருமிகாய்ச்சல் அதிகம் பரவுவதாக கருத்து நிலவுவதால் நகர் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பய்ன்படுத்தி தாங்கள் வீட்டிற்குள் முக்கியமாக சமையல் அறை மற்றும் பாத்ரூம்களில் கொசு மருந்து அதிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் குடிதண்ணீரை இரண்டு நாட்களுக்கு மேல் தேக்கி வைக்க வேண்டாம் ,குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்.தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அழித்தால் டெங்குவை விரட்டிடலாம் என்றார்.

Tuesday, June 26, 2012

கீழக்கரையில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற‌ போதை பொருள் ஒழிப்பு தின‌ பேரணி !




கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.


கல்லூரி முதல்வர்(பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கீழக்கரை காவல்நிலையம் அருகில் துவங்கிய பேரணி வள்ளல் சீதக்காதி சாலை வழியாக சென்று கடற்கரை பகுதியில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்ந்து கொண்டனர். ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும்,முழக்கமிட்டும் சென்றனர்

ச‌மூக‌ விரோதிக‌ள் அட்ட‌காச‌ம் !கீழக்க‌ரை நக‌ராட்சியின் குப்பை கிட‌ங்கு இடிக்க‌ப்ப‌ட்ட‌து!பொது ம‌க்க‌ள் குவிந்த‌ன‌ர் !



கீழ‌க்கரை நகராட்சிக்கு சொந்த‌மான‌ இட‌ம் தில்லையேந்த‌ல் ஊராட்சி ப‌குதியில் உள்ள‌து.இங்கு கீழக்கரை பகுதி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மறுசுழற்சி முறையில் உர‌மாக‌ மாற்றுவ‌த‌ற்கு கிட‌ங்கு அமைக்க முடிவு செய்ய‌ப்ப‌ட்டு சுற்றுசுவ‌ர் க‌ட்டும் ப‌ணி ந‌டைபெற்று வ‌ந்த‌து.

இந்நிலையில் விஷ‌மிக‌ள் சில‌ர் 200 அடிக்கு க‌ட்ட‌ப்ப‌ட‌ சுற்று சுவ‌ரை இடித்து சேத‌ப்ப‌டுத்தியுள்ளனர்.மேலும் அங்கு கட்டுமான‌ பொருள்களையும் உடைத்துள்ளனர். இது குறித்து ஒப்ப‌ந்ததார‌ர் உத்த‌ண்டி கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முஜிபு ர‌ஹ்மானிட‌ம் த‌க‌வ‌ல் தெரிவித்த‌தை தொட‌ர்ந்து க‌மிஷ‌ன‌ர் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகார் தெரிவித்தார்.இது குறித்து இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசாரித்து வ‌ருகிறார்.

இது குறித்து ஒப்ப‌ந்த‌தார‌ர் உத்த‌ண்டி கூறுகையில்,


நேற்று முன் தினம் மாலை அடையாள‌ம் தெரிந்த‌ தில்லையேந்த‌லை சேர்ந்த‌ பெய‌ர் தெரியாத‌ 5 பேர் இப்ப‌குதிக்கு வ‌ந்தன‌ர்.ஒருவ‌ர் கையில் அறிவால் இருந்த‌து க‌ண்டு ச‌ந்தேக‌ம‌டைந்து க‌வுன்சில‌ர் சாகுல் ஹ‌மீது,ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் உள்ளிட்டோருக்கு த‌க‌வ‌ல் கொடுத்தேன்.உட‌ன‌டியாக‌ இங்கு வ‌ந்த‌ அவ‌ர்க‌ளுட‌ன் இர‌வு 7.30 ம‌ணி வ‌ரை இருந்தோம் அது வ‌ரை ‌ சுற்று சுவ‌ருக்கு எவ்வித‌ சேதார‌மும் இல்லை. ஆனால் இர‌வு நேர‌த்தில் விஷ‌மிக‌ள் சில‌ர் 200 அடிக்கு சுற்றுசுவ‌ரை உடைத்தும் ம‌ற்றும் 10 மூட்டை சிமெண்டை கிழித்து த‌ண்ணீர் ஊற்றியும் க‌ட்டுமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்தப்படும் டிர‌ம் ம‌ற்றும் த‌ள‌வாட‌ பொருள்களை உடைத்தும் சேத‌ப்ப‌டுத்தும் நோக்க‌த்தில் இது போன்று செய்துள்ள‌ன‌ர்.
இது குறித்து ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ருக்கு த‌க‌வ‌ல் கொடுத்துள்ளேன்.


இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வல‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை நீண்ட‌ கால‌ பிர‌ச்சனையாக‌ விளங்க‌க்கூடிய‌ குப்பை பிர‌ச்ச‌னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக‌ இந்த‌ குப்பை கிட‌ங்கு க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.அருகிலுள்ள ஊர் மக்களுடன் ப‌ல் வேறு ஆலோச‌னை கூட்ட‌ங்க‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு இறுதியாக‌ அர‌சாங்க‌ம் இப்பணியை மேற்கொண்டு வ‌ருகிற‌து.இதை த‌டுக்கும் நோக்க‌த்தில் ஏற்கென‌வே தீவைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌து.த‌ற்போது ச‌மூக‌ விரோதிக‌ள் சில‌ரால் சுவ‌ர் இடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து மிக‌வும் க‌ண்டிக்க‌த‌க்க‌து.ஏதோ உள் நோக்கத்துடன் நடைபெறுவதாக தெரிகிறதுஉட‌ன‌டியாக‌ காவ‌ல்துறை குற்றவாளிகள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.


இடிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதியை ஏராள‌மானோர் பார்வையிட்ட‌ன‌ர்.

Monday, June 25, 2012

ஊருக்குள் மின் க‌ட்ட‌ண‌ அலுவ‌ல‌க‌ம்!ப‌ணி விரைவுப‌டுத்த‌ எஸ்டிபிஐ வ‌லியுறுத்த‌ல் !


எஸ்டிபிஐ கீழ‌க்க‌ரை கிளை சார்பாக‌ செய‌ற்குழு கூட்ட‌ம் ந‌க‌ர் தலைவ‌ர் செய்யது அபுதாகிர் தலைமையில் ந‌டைபெற்ற‌து.ந‌க‌ர் செய‌லாள‌ர் அப்துல் ஹாதி வ‌ர‌வேற்றார்.கூட்ட‌த்தில் நிறைவேற்றிய‌ தீர்மாண‌ங்க‌ள் கீழ் வ‌ருமாறு..

கீழக்கரைக்கு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதியதாக பதவியேற்று முத‌ல் கூட்ட‌த்தில், முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டும் கிடப்பில் உள்ள ஊருக்குள் மின்சார வசூல் மையம்(நகர் புதிய பேருந்து நிலையத்தில்) அமைக்கும் பணியை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்,(தற்போது வண்ணாந்துறை அருகே செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது) .கீழக்கரை அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் மயானவாடிக்கு சுற்று சுவர் கட்ட வேண்டும், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர் பணியிடத்தை நிரப்பி,ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

துணை தலைவ‌ர் அபுப‌க்க‌ர் சித்தீக் ந‌ன்றி கூறினார்.

கீழ‌க்க‌ரை புதிய‌ க‌ட‌ல்பால‌த்தில் அமைச்ச‌ர்க‌ள்!பூங்கா அமைக்க‌ கோரிக்கை !


கீழக்கரைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறை சுந்தர்ராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை த்ந்தனர்.

கீழக்கரையில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஜெட்டி பாலத்தை ஆய்வு செய்தனர்.(புதிய பாலத்தில் பழுது தொடர்பானகீழக்கரை டைம்ஸில் சில மாதங்களுக்கு முன் வெளி வந்த‌ செய்தி :- http://keelakaraitimes.blogspot.com/2012/04/blog-post_27.html )


மேலும் அமைச்சர்களை கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்க செயலாளர் இஸ்மாயில் தலைமையில் தலைவர் ஜமால் முன்னிலையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் ,
புதிய ஜெட்டி பாலம் அருகில் அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன அவ்விடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும், கடற்கரையில் நகராட்சி மூலமாக குப்பைகள் கொட்டப்பட்டு மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.உடனடியாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரும்,மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ2000த்தை உயர்த்தி அதிகமாக்கி தர வேண்டும் என்றும் பல் வேறு கோரிகைகளை மனுவாக அளித்தனர்.

இது குறித்து ப‌தில‌ளித்த‌ அமைச்ச‌ர்க‌ள் ,அனைத்து கோரிக்கைக‌ளையும் முத‌ல்வ‌ரின் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்ற‌ முய‌ற்சி மேற்கொள்வேன் என்ற‌ன‌ர்.

அமைச்ச‌ர்க‌ளுடன் கலெக்டர் நந்தகுமார், அதிமுக‌ மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆனிமுத்து, கீழக்கரை ந‌க‌ராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் உட‌ன் சென்ற‌ன‌ர்.

Sunday, June 24, 2012

உழைப்பின் சிகரம் மறைந்தது!


உழைப்பின் சிகரம் மறைந்தது.

கீழக்கரையின் 109 வயது மூத்த குடிமகன், உழைப்பின் சிகரம் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த செய்யது அபுதாகிர் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் அன்னாருடைய நல்லறங்களை அங்கீகரித்து பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவர்கத்தில் நுழையச் செய்வானாக!ஆமீன்.
__________________________________________________________________________________


உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்களைப் பற்றிய கீழக்கரை டைம்ஸின் முந்தைய செய்தி....... இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து
வருகிறார்.வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்து காட்டாகவும்
,உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் போல் சுறுசுறுப்பாக
உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார் மேலும் விபரம்........
http://keelakaraitimes.blogspot.com/2012/04/109.html

Saturday, June 23, 2012

கீழக்கரையில் சாலை மறியல்! பிஜேபியினர் 23 பேர் கைது !




விலைவாசி உயர்வை கண்டித்து கீழக்கரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழக்கரை முக்குரோட்டில் பஸ் மறியல் போரட்டம் செய்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கீழக்கரை டிஎஸ்பி முனியப்பன்,இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்,எஸ்.ஐக்கள் கார்மேகம்,பால்ராஜ் உள்ளிட்ட போலிசார் கைது செய்தனர்.

விதிகளை மீறியதாக கீழ‌க்க‌ரையில் 6 ஆட்டோ ஒரு மினி வேன் ப‌றிமுத‌ல் !

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ வாட‌கை ஆட்டோக்க‌ள் இய‌க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.இவ‌ற்றில் பெர்மிட் இல்லாம‌ல் ச‌ட்ட‌விரோத‌மாக‌ இய‌க்க‌ப‌டுவது,பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற‌ச்சாட்டுக‌ள் நில‌வி வ‌ந்த‌ன‌.ப‌ல‌ரும் ராமநாத‌புர‌ம் போக்குவ‌ர‌த்து வ‌ட்டார‌ அலுவ‌ல‌க‌த்தில் புகார் அளித்து வ‌ந்த‌ன‌ர். இந்நிலையில் ராம‌நாத‌புர‌ம் மோட்டார் வாக‌ன‌ ஆய்வாள‌ர் குலோத்துங்க‌ன் கீழ‌க்க‌ரை முக்குரோட்டில் ந‌ட‌த்திய‌ வாக‌ன‌ சாத‌னையில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ இய‌க்கப்ப‌ட்ட‌தாக‌ 6 ஆட்டோக்க‌ளும்,ஒரு மினி வேனும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

விதி மீறிய‌வ‌ர்க‌ளுக்கு ரூ2000 ரூபாய் அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.ஒரு குழு ம‌ட்டுமே சோத‌னைக்கு வ‌ருவ‌தால் ந‌க‌ர் முழுவ‌தும் ஒரே நேரத்தில் சோத‌னை ந‌ட‌த்த‌ முடிவ‌தில்லை.இத‌னால் வாக‌ன‌ சோத‌னை முழுமையாக நடைபெறுவது கிடையாது என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

Friday, June 22, 2012

நாளை23-06 தமிழக அரசின் மருத்துவ காப்பிட்டு திட்ட முகாம்! பொதுமக்களுக்கு அழைப்பு !


நாளை 23-06-12 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ராமநாதபுரம் ,சுவார்ட்ஸ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து விதமான நோய்களுக்கு அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படும் .


அதே போல் முதியோர் தொகை பெற தகுதி உள்ள நபர்கள் ரேசன் கார்டு ஜெராக்ஸ் உடன் வந்து இந்த முகாமில் பயன் அடையலாம்.

இது தொடர்பான உதவிக்கு தனியார் சேவை அமைப்பை சேர்ந்த 9443358305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அநத அமைப்பின் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

கீழக்கரையில் கல்வி உதவி மற்றும் சங்கத்தின் 3வது ஆண்டு துவக்க விழா!


படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்






கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 3வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன் மூலம் ஏராளமான மாணவ,மாணவிகள் பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய தலைவரக ஜமால் அசரப் ,துணை தலைவராக சீனி நசுருதீன்,செயலாளராக இஸ்மாயில்,துணை செயலாளராக சீனி,செய்தி தொடர்பாளராக முகைதீன் இப்ராகிம்,ஆலோசகராக சாலிஹ் ஹீசைன் ஆகியோர் நிர்வாகிகளாகவும்
செயற்குழு உறுப்பினராக செய்யது சாகுல் ஹமீது,நிசார்,ஜகுபர் சாதிக்,சுல்தான் செய்யது இப்ராகிம்,யாசுதீன,பயாஸ்,நாசர் முகம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,இடிமின்னல் ஹாஜா உள்ளிட்ட‌ ஏராளமானோர் கலந்து கொன்டனர்.





Wednesday, June 20, 2012

கீழக்கரையில் த‌.மு.மு.க சார்பில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்த‌க‌ங்க‌ள்!




த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஹூசைனியா மகாலில் நடந்தது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமை வகித்து 250க்கும் அதிகமான‌ மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

கீழக்கரை வர்த்தக அணி செய்லாளர் சலீம் வரவேற்றார்.நகர் தலைவர் செய்யது இப்ராகிம்,பொருளாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் சேகு தாவூது சாதிக், மர்றும் ம.ம.க., மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி மாவட்ட செயலாளர் அன்வர் அலி, ஒன்றிய தலைவர் ரைஸ் இபுராகிம்,கீழக்கரை நகர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

300க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள்!சேவை இயக்கத்தின் கல்வி சேவை!




கீழக்கரையில் "கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற பொது நல இயக்கம் தொடங்கபட்டு அதன் நிறுவனராக முஜீப் உள்ளார்.

இந்த அமைப்பின் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகங்கள் வழங்கப்பட்டது.மேலும் ஒரு சிலருக்கு தலா ரூ5000 ரொக்கம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

இந்நிகழச்சியில் மூர் ஹசனுதீன்,சீனி,எஸ்.டி.பி. பிரமுகர் அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இயக்கத்தின் நிறுவனர் முஜீப் கூறுகையில்,
கீழக்கரை பலரும் மக்கள் நலப்பணிகளை மேறுகொண்டு வருகிறார்கள் அந்தவகையில் நாமும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பொது நலபணிகளை நடத்தி வருகிறோம். ஏராளமான இளைஞர்கள் இந்த சேவை இயக்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி ஆர்வத்துடன் தங்களையும் இணைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்ஷா அல்லா தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் நகரின் நலனுக்காக பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, June 19, 2012

கீழக்கரைக்கு தரமற்ற புதிய விளக்குகள் என குற்றச்சாட்டு!"முன்பே எச்சரித்தேன்"ந‌க‌ராட்சி த‌லைவ‌ர்!



பட விளக்கம் :-த‌ர‌ம் குறைந்த‌வை என்று குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள தெருக்களில் பொருத்த உள்ள விள‌க்குக‌ள் ம‌ற்றும் உப‌க‌ர‌ண‌ங்க‌ள்

கீழக்கரை நகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌தும் தெரு விள‌க்குக‌ளை சீர் அமைக்க‌ டெண்ட‌ர் விட‌ப்ப‌ட்டு குறைந்த‌ விலைக்கு டெண்ட‌ர் எடுத்த‌ ம‌லானி என்ற‌ நிறுவ‌ன‌த்தால் புதிய‌ தெரு விள‌க்குக‌ள் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஒப்ப‌ந்த‌ராரால் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ விள‌க்குக‌ளும் ,உப‌க‌ர‌ண‌ங்களும் த‌ர‌ம் குறைந்த‌வையாக‌ உள்ளது.எந்த ஒரு பொருளுக்கும் ஐ.எஸ்.ஓ சான்றித‌ழ் இல்லை.என‌வே மாவட்ட கலெக்டராகிய தாங்கள் அவ‌ற்றை திருப்பி அனுப்பி த‌ர‌முள்ள‌ பொருட்க‌ளை ச‌ப்ளை செய்ய‌ நடவடிக்கை எடுக்க‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்திற்கு உத்த‌ர‌விட‌ வேண்டும் என‌ கேட்டு கொள்கிறோம் என்று ம‌னுவில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

சென்ற‌ ந‌கராட்சி ம‌ன்ற‌த்தின் கூட்டத்தின் போது இந்த‌ ஒப்ப‌ந்ததார‌ர் மிக‌ குறைந்த‌ விலைக்கு டெண்ட‌ரை கோரியுள்ளார் என‌வே தரமான விளக்குகளை இவர்களால் தர முடியாதது மட்டுமில்லாமல் ச‌‌ரியாக‌ ப‌ணிக‌ளை செய்ய‌ மாட்டார்க‌ள் என எச்சரித்தேன்

ஆனால் இதே க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்,ஜெய‌பிர‌காஷ்,இடிமின்ன‌ல் ஹாஜா உள்ளிட்டோர் க‌டும் எதிர்ப்பு தெரிவித்து மேல் குறிப்பிட்டுள்ள‌ ஒப்ப‌ந்த‌ராருக்குதான் கொடுக்க‌ வேண்டும் என்றார்க‌ள்.நீங்கள் (கீழ‌க்க‌ரைடைம்ஸ்) உள்ளிட்ட‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் அனைவ‌ரும் கூட்ட‌த்தில் இருந்தீர்க‌ள் என‌வே நீங்க‌ளும் அந்த‌ நிக‌ழ்ச்சியை அறிவீர்க‌ள். (இது தொடர்பான செய்தியை இதில் காணலாம்) http://keelakaraitimes.blogspot.com/2012/05/blog-post_05.html
த‌ற்போது க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் நான் முன்பு சொன்ன‌தை த‌ற்போது உறுதி ப‌டுத்தியுள்ளார்.
இவர்க‌ளே இந்த‌ ஒப்ப‌ந்த‌தார‌ருக்கு கொடுக்க‌ சொல்லி விட்டு இவ‌ர்க‌ளே இப்போது குறை கூறுகிறார்க‌ள்.ஆனாலும் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ள் என‌ நிரூப‌ணமானால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என்றார்.



இது குறித்து முகைதீன் இப்ராகிமிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது அவ‌ர் கூறியதாவது,

இவர்களுக்கு டெண்டரை கொடுக்கலாம் என்று நான் வ‌லியுறுத்திய‌து உண்மைதான் ஏனென்றால் குறைந்த‌ விலைக்கு இவ‌ர்க‌ள்தான் கோரியிருந்தார்க‌ள் அதே நேர‌த்தில் த‌ர‌ம் குறைந்த ஹைமாஸ்,சோடியம்,டியூப் லைட்கள் உள்ளிட்ட‌ பொருட்களை இவர்கள் ந‌ம‌தூர் த‌லையில் க‌ட்டுவ‌தை ஏற்க‌ முடியாது.என‌வே இவ‌ர்கள் தரும் பில்லை ந‌க‌ராட்சி அங்கீக‌ரிக்க‌ கூடாது.த‌ர‌ம் குறைந்த‌ பொருட்க‌ளை ச‌ப்ளை செய்த‌ இந்த‌ நிறுவ‌ன‌த்தின் பில்லை எவ்வித‌ இடைஞ‌ச‌லும் இல்லாம‌ல் பாஸ் செய்வ‌த‌ற்கு ந‌க‌ராட்சியின் முக்கிய‌ பொறுப்பில் இருக்கும் அதிகாரி ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ல‌ஞ்ச‌ம் வாங்கியிருப்பாக‌ ச‌ந்தேகம் உள்ளது.விரைவில் உண்மையை வெளி கொண்டு வ‌ருவோம்.எனவேதான் க‌லெக்ட‌ர் வ‌ரை புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.

கீழ‌க்க‌ரையில் சி.எஸ்.ஐ. பள்ளி அருகே க‌ழிவு நீர் கால்வாய் அமைக்க‌ எதிர்ப்பு !!



கீழக்கரை வடக்குதெரு தெரு பகுதியில் கழிவு நீர் வாய்கால் கட்டுவதற்கு நகராட்சி மூலம் ரூ 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் சிமெண்ட் கால்வாய்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர்,கீழக்கரை நகராட்சி தலைவர்,கமிஷனர்,பள்ளி கல்வித்துறை இயக்குநர்,ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அம்மனுவில்,
இப்பகுதியில் சி.எஸ்.ஐ.தூய பேதுரு ஆலயமும்
அதன் வளாகத்தினுள் 200 ஆண்டுகளுக்கு பழமையான சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளியும் உள்ளது இந்த இடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களும்,பள்ளி வரும் மாணவ,மாணவியரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
மேலும் ஆலயத்தின் சுற்று சுவரை ஒட்டி கால்வாய் அமைம‌ப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலை உள்ளது.

மேலும் ப‌ள்ள‌ம் தோண்டும் ப‌குதியில் குடிநீர் பைப் புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் க‌ழிவுநீர் குடிநீருட‌ன் க‌லப்ப‌த‌ற்கு வாய்ப்புள்ள‌து.ப‌ள்ளமான‌ ப‌குதியாக‌ இருப்ப‌தால் இங்கிருந்து கால்வாய் வ‌ழியாக‌ க‌ழிவுநீர் வெளியேற‌ வாய்ப்பில்லை.என‌வே ம‌க்க‌ள் வ‌ரிப்ப‌ணம் வீணாவ‌தை த‌டுத்து நிறுத்த‌ வேண்டும் என்று சபையின் குரு தேவாதாஸ் ராஜன் பாபு ம‌னுவில் தெரிவித்துள்ளார்.

காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த....



வஃபாத்து அறிவிப்பு.....கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சார்ந்த ஜனாப் M.K.M. அமீர் அலி (கல்கத்தா)அவர்களின் மனைவியும், அ.சபீர் அலி ( EMCO - Abu Dhabi), அ.கமால் ரியாசத் (கல்கத்தா), அ. அஹ்மத் அஜீம் (Western Auto - Dubai) ஆகியோரின் தாயாரும், O.S.N. அமானுல்லா (ex. ETA Melco - Dubai) அவர்களின் சகோதரியும் ,அய்மான் கல்லூரி செயலாளர் K. செய்யது ஜாஃபர் அவர்களின் சம்பந்தியுமான ஹாஜியானி.O.S.N. நூர்ஜஹான் பேகம் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.... இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

த‌க‌வ‌ல்:-அஹமது குத்புதீன் ராஜா

Monday, June 18, 2012

கீழக்கரையில் டெங்கு!நகராட்சி,சுகாதாரத்துறை மெத்தனமாக உள்ளதாக கலெக்டரிடம் புகார்



நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மெத்தனமாக இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரியும், 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகீம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌மிழ‌க‌த்தை உலுக்க்கி வ‌ரும் டெங்கு ப‌ர‌வுகிற‌து.நமதூரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் சிலருக்கு காய்ச்சல் தீவிரமாகி மதுரை மருத்துவமானையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத‌னை த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டிய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌மும்,சுகாதார‌த்துறையும் டெங்கு காய்ச்ச‌ல் ப‌ரவாம‌ல் த‌டுப்ப‌த‌ற்குறிய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை முடுக்கி விடாம‌ல் மெத்த‌ன‌ம் காட்டுகிற‌து.


க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ம‌ற்று சுகாதார‌த்துறை இணைந்து ந‌க‌ர்ம‌ன்ற‌த்தில் டெங்கு காய்ச்ச‌ல் த‌டுப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ந‌க‌ர்ம‌ன்ற‌ பிர‌திநிதிக‌ள்,பொதும‌க்க‌ள் முன்னிலையில் கூட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ஆலோச‌னை பெற‌ப்ப‌ட்டது.குறிப்பாக‌ ப‌ழுது அடைந்து இருக்கும் கொசு புகை ம‌ருந்து அடிக்கும் இய‌ந்திர‌த்தை இது வ‌ரை ச‌ரி செய்யாம‌லும்,கூடுத‌ல் புகை ம‌ருந்து அடிக்கும் இய‌ந்திர‌ம் ந‌க‌ராட்சி சார்பாக‌ வாங்குவ‌தில் இது வ‌ரை மெத்த‌ன‌ம் காட்டி வ‌ருகிற‌து.

எனவே ந‌க‌ரில் ப‌ர‌வும் டெங்கு காய்ச்ச‌லை த‌டுக்க‌ போர்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொண்டு ந‌கராட்சி நிர்வாக‌த்துக்கு விரைவாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உத்த‌ர‌விட‌ வேண்டும். இவ்வாறு புகார் ம‌னுவில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌ர‌ப்பில் கேட்ட‌போது ,

ந‌க‌ரின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சுகாதார‌ம் பேணுவ‌த‌ற்கும்,டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுப்பதற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.எனவே இவ‌ரின் குற்ற‌ச்சாட்டில் உண்மையில்லை.ஏதாவ‌து புகார் சொல்ல‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌
இது போன்ற‌ புகார்க‌ளை அவ‌ர் தெரிவித்து வ‌ருகிறார்.







.












கீழக்கரையில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி துவங்கியது !



கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்படும் என்று நகராட்சி தலைவர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அதற்கான பணிகள் துவங்கியது.அறிவிக்கப்பட்ட இடங்களில் ஒரு பகுதியான‌ தெற்குதெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகில் கம்பம் நடுவதற்கு குழி வெட்டப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தகவல் : ஹனீப் சூபியான்

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனையில் இலவசமகப்பேறு ஆலோசனை முகாம்!




கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை மற்றும் ராகவேந்திரா மருத்துவமனை இணைந்து நடத்திய தம்பதியருக்கு மகப்பேறு சம்பந்தமாக‌ இலவச ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் யூசுப்சுலைகா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமை வகித்தார்.யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். இதில் மதுரை ராவேந்தர் மருத்துவர்கள் முருகன் தலைமையில் லதா,குர்சித் பானு,பியூலா,அழகம்மை ஆகியோர் கொண்ட குழு மருத்துவ முகாமில் கலந்து கொண்டோருக்கு ஆலோசனையும் சிகிச்சையும் அளித்தனர்.

Sunday, June 17, 2012

தொடரும் வெற்றி !கீழக்கரை மூர் அணி சாதனை ! மாநில அளவிலான போட்டிக்கு தகுதி !




தமிழக‌ முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், வாலிபால் , கூடைப்பந்து பல் வேறு போட்டிகள் நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சேதுபதி -சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விளையாட்டு அணிகள் கலந்து கொண்டனர்.

இங்கு நடைபெற்ற‌ வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக‌ அவ்வணியின் நிர்வாகி ஹசனுதீன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் ஹசனுதீன் கூறியதாவது,

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் மூர் விளையாட்டு அணி நமதூர் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டு இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று வாலிபால் மற்றும் கூடைப்பந்து விளையாட்டில் நமதூர் இளைஞர்கள் மாநில அளவில் பேசப்படும் வீரர்களாக உருவாகியுள்ளனர்.
இந்த இரண்டு மாத கால் இடைவெளியில் மூன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளிகளில் கோப்பையை வென்றுள்ளோம்.
நமது அணி வீரர்கள் மக்களாகிய‌ உங்கள் அனைவரின் ஆதரவுடனும்,வாழ்த்துக்களுடன் மாநில அளவில் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கையுட உள்ளோம்.எல்லா புகழு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே என்றார்..

சமீபத்தில் மாவட்ட அளவிலான போட்டியில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.

Saturday, June 16, 2012

கீழக்கரையில் 5 இடங்களில் புதிய சோடியம் விளக்குகள்! நகராட்சி முடிவு!


கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் 60அடி உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் கீழக்கரை புது பஸ் நிலையம் தெற்குத் தெரு கட்டாலிம்ஷா பங்களா அருகில், பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில் உள்ளிட்ட‌ 5 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க தீர்மானிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

உய‌ர்கோபுர‌ம் மின்விள‌க்குக‌ள் அமைய‌விருக்கும் இட‌ங்க‌ளை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

வாடகை பாக்கி !கடைகளுக்கு சீல்!கீழக்கரை நகராட்சி அதிரடி!


கமிஷனர் முஜிபுர் ரஹ்மான்

கீழக்கரை நகராட்சிக்கு பல ஆண்டுகளாக ரூ.2 லட்சம் வாடகை செலுத்தாதது மற்றும், கடையை கிட்டங்கியாக பயன்படுத்த வேறு ஒருவருக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, ஐந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கீழக்கரை பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒன்பது கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் மறவர் தெரு எம்.சங்கரன் இரு கடைகளுக்கு ரூ.78 ஆயிரத்து 524, கே.காசிநாதன் ஒரு கடைக்கு 75 ஆயிரத்து 230, கோகுல் நகர் பி.தினகரன் ஒரு கடைக்கு 64 ஆயிரத்து 230 ரூபா வாடகை பாக்கி வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாததால் இவர்களது கடைகளுக்கு கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் உத்தரவுபடி துப்புரவு ஆய்வாளர் ரவி சங்கர்,அலுவலர்கள் கார்த்திக்,மனோகரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், சீல் வைத்து பூட்டு போட்டனர்
.
மாற்று திறனாளி கே.ராமமூர்த்திக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.டி., பூத் கடை, வேறு நபருக்கு வாடகைக்கு விட்டு கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டதால் இந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது,
கீழக்கரை நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் பாக்கி அதிகம் உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் உள்ளவர்கள் பெயர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரிபாக்கி செலுத்தாதவர்களின் வீட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும், என்றார்.

Friday, June 15, 2012

கீழ‌க்க‌ரையில் ஆட்ட‌ம் காண‌ வைக்கும் ஆட்டோ க‌ட்ட‌ண‌ம்! முறைபடுத்த கோரிக்கை !


கீழ‌க்க‌ரையில் நூற்றுக்கணக்கான வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் பெட்ரோல் விலை உய‌ர்வை கார‌ண‌ம் காட்டி தாறுமாறாக‌ வாட‌கையை உய‌ர்த்தி விட்ட‌தாக‌ குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.



இது குறித்து கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் குறைந்த‌ப‌ட்ச‌ வாட‌கையாக‌ ரூ 25லிருந்து ரூ30 வ‌ரை பெற்று கொண்டிருந்த‌ ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ள் த‌ற்போது மினிம‌ம் வாட‌கை ரூ40 கேட்கிறார்க‌ள்.இத‌னால் ஆட்டோவில் ப‌யனிப்ப‌வ‌ர்க‌ள் க‌டும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்க‌ள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டுள்ளது என்றால் அதற்கு ஏற்றவாறு நியாயமான அளவு வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.அதை விட்டு மலை அளவு வாடகையை உயர்த்துவது ஏற்கதக்கதல்ல மேலும் எவ்வ‌ள‌வு உயர்த்தினாலும் கீழ‌க்க‌ரை மக்கள் கேட்கும் வாடைகையை த‌ருவார்க‌ள் என்ற‌ ஆட்டோ டிரைவ‌ர்க‌ளின் எண்ண‌ ஓட்ட‌மே இத‌ற்கு கார‌ண‌ம்.இக்க‌ட்ட‌ண‌ உய‌ர்வை நாம் ஏற்க‌ கூடாது.

மேலும் ந‌‌க‌ர் முழுவதும் பெய‌ர‌ள‌வுக்குத்தான் ஆட்டோவில் மீட்ட‌ர் பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌து ஆனால் யாரும் மீட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. கீழ‌க்க‌ரையில் ஆட்டோ க‌ட்ட‌ண‌ங்களை முறைப்ப‌டுத்த‌ப‌டுத்தி‌ ந‌டைமுறை ப‌டுத்த‌ வேண்டும்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட‌ போது,

நான் மினிமம் ரூ40 வாங்குவதில்லை.ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்தியதால் மிகவும் கஷ்டப்படுகிறோம். கூடுதலாக கேட்க வேண்டிய நிலை உள்ளது.
சாலைகள் மோசமாக உள்ளதால் ஆட்டோக்களும் அடிக்கடி பழுதடைகிறது.
ஆட்டோ வாடகை கட்டணம் ரூ.150, பெட்ரோலுக்கு 200 என ஒரு நாளைக்கு ரூ.350 செலவாகிறது.தினமும் ரூ.500-க்காவது ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு வருமானம் வருவதில்லை.எங்க‌ளுடைய‌ பிர‌ச்ச‌னையையும் ப‌ய‌ணிக‌ள் க‌வ‌னத்தில் கொள‌ள‌ வேன்டும் என்றார்.

அரசு தரப்பில் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்து கிழ‌க்க‌ரையில் அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் அழைத்து ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ளை அம‌ர‌ வைத்து பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி நியாயமான‌ ஆட்டோ க‌ட்ட‌ண‌த்தை நிர்ண‌ய‌ம் செய்வ‌தோடு அதை ந‌டைமுறைப‌டுத்தி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ப‌தே பொதும‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

Thursday, June 14, 2012

சாக்கடையில் சின்னக்கடைதெரு சாலை!அப்பகுதி மக்கள் கவலை !நடவடிக்கைக்கு கோரிக்கை !


படம்:-பிக்ருல் ஆகிர்

பட விளக்கம்;கழிவு நீர் கால்வாய் உடைந்ததால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதை காணலாம்.

கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கு பழைய சாலை உடைத்து அகறும் போது கழிவுநீர் வாய்காலையும் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சாலையோர‌ பள்ளம் தோண்டி சாக்கடை நீர் ஓடுவதற்கு வழி ஏற்படுத்தினர் ஆனால் கழிவு நீர் அப்பகுதியிலேயே நிற்பதால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்ற்னர்.

இது குறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

ஒரு மாதத்திற்கு முன் சின்னகடை தெருவில் சலை அமைக்கும் போது வாய்காலை உடைத்து சென்று விட்டனர்.இதனால் சாக்கடை நீர் ரோடு பகுதியில் ஓடி கொண்டிருக்கிறது. இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் இது வரை நடவடிக்கை இல்லை .மேலும் கழிவு நீர் ஓடுவதற்கென்று சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டியிருப்பதால் வீடுகளில்லுள்ளோர் அதை கடந்து செல்வது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் இதனால் 100க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவுநீர் கால்வாயை ச‌ரி செய்து த‌ர‌ வேண்டும் என்றார்.

Wednesday, June 13, 2012

எக்ஸ்னோரா இணைந்து கீழக்கரை பள்ளிகளில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!




கீழக்கரையில் சுற்று சூழல் குறித்து அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதற்கு தொண்டு நிறுவனமான வெல்பேர் அசோசியேசன் மற்றும் எக்ஸ்னோரா தொடடு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்த‌ முடிவெடுத்த‌தின் பேரில்,

தொடக்கமாக கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி ஆசிரிய‌ர் ஞானக‌லாவ‌தி தலைமையில் ந‌டைபெற்ற‌து. வெல்பேர் அசோசியேச‌ன் மேலாள‌ர் அப்துல் அஜீஸ்,எக்ஸ்னோரா அமைப்பின் ம‌க்கும் குப்பை ம‌க்காத‌ குப்பை த‌யாரிப்பு மேலாள‌ர் த‌ணிகாசெல்வ‌ம் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

இது க்குறித்து எக்ஸ்னோரா தொழில்நுட்ப‌ மேலாள‌ர் த‌ணிகாச்ச‌ல‌ம் பேசுகையில்,
,
கீழ‌க்க‌ரையில் ம‌க்கும் குப்பை ,ம‌க்காத‌ குப்பைக‌ளை பிரித்து போடுவ‌த‌ற்கு அனைவ‌ருக்கும் விழிப்புண‌ர்வு ஏற்ப‌டும் வ‌கையில் தொடக்க முயற்சியாக‌ மேல‌த்தெரு ம‌ற்று அத‌ன் சுற்று ப‌குதிகளில் உள்ள‌ வீடுக‌ளில் ச‌லுகை விலையில் வீட்டுக்கு இர‌ண்டு வாளிக‌ள் வீத‌ம் சுமார் 1500 வீடுக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு ம‌க்கும்குப்பை,ம‌க்காத‌ குப்பை என்று பிரித்தெடுக்க்ப்ப‌டுகிற‌து.இவை ம‌றுசுழ‌ற்சி செய்ய‌ப்ப‌ட்டு உர‌மாக்குவ‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.இது குறித்து கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒத்துழைத்து கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுகாதாரமான‌ ந‌கராக்குவோம் இவ்வாறு பேசினார்.