
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் 109 வயதாகு்ம்
இவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார்.வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்து காட்டாகவும் ,உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் போல் சுறுசுறுப்பாக உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார்.மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியை பெற்று கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.
இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும் போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டு விடும் ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் உள்ள ஈடுபாடேயாகும்.
இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாளர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறியதாவது,
ஆண்டுதொறும் மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் சிறப்பான செயல்களுக்காக பல் வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்து காட்டாக திகழும் 100ஆண்டுகளை கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க மத்திய மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.அவரை கெளரவப்படுத்த வேண்டும் என்றார்.
ஏற்கெனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இக்கால இளைஞர்களுக்கு முன்மாதியாக திகழும் உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று,நீண்ட ஆயுளை பெற உங்களுடன் இணைந்து கீழக்கரை டைம்ஸ் வாழத்துகிறது .
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.