Wednesday, October 3, 2012

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளி, கீழக்கரை மெடிக்கல் மிஷன் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ம‌ருத்துவ‌ முகாம்!

 
காஞ்சிரங்குடி கிராமத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் காஞ்சிரங்குடி கிராமத்தில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் பேராசிரியர் சாதிக் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
 
கிழக்குத்தெரு ஜமாத் துணைத்தலைவர் முகைதீன் அப்துல்காதர், கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இபுராகிம், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ஆதித்தன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அல்அம்ரா, ராசிக்தீன் தலைமையில் மருத்துவக் குழுவினர் எழுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.
 
கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத், செயலாளர் சுப்பிரமணியன், செய்யதுஹமீது, அசன், தர்மராஜ், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித்திட்ட முகாம் அலுவலர்கள் சையது அபுதாகிர், கணேசன் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.