பட விளக்கம் : ஏப்ரல் 1 முதல் புதிய மதிப்பீடு அமலுக்கு வந்தால் பத்திர செலவு அதிகரிக்கும் என கருதி பொதுமக்கள் கீழக்கரை பத்திர பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணிவரை குவிந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது ஒரே நாளில் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான
(Guideline Draft) வரைவை தயாரித்து அரசிற்கு அளித்தனர்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.இதனால் பத்திர பதிவின் செலவு அதிகரிக்கும்தமிழகம் முழுவதும் இது எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
கீழக்கரையில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை நிர்ணயம் செய்துள்ளார்கள்.முழு விபரத்தை இத்தளத்தில் காணலாம் Madurai Zone -> ramanathapuram Taluk
http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp
கீழக்கரையில் ஏற்கெனவே இருந்த வழிகாட்டுதல் மதிப்பை விட நான்கு மடங்குக்கு மேல் கூடுதலாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உதாரணத்திற்கு அரசின் பழைய வழிகாட்டுதல் படி சதுர அடி ரூ200 என்று வைத்து கொள்வோம் இதன் மூலம்1000 சதுர அடிக்கு ரூ200000 ஆகிறது. இதற்கு பத்திரபதிவுக்கான செலவு ரூ 18000ம்தான் ஆகும் ஆனால் அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி ஒரு இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 400 என்றால் 1000 சதுர அடிக்கு ரூபாய்400000 விலையாகிறது.இதில் 9% பத்திர செலவு மட்டும் ரூ36000 ஆகிறது. எனவே புதிய வழிகாட்டுதலின் படி பத்திரபதிவுக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ரியல் எஸ்டே தொழில் செய்து வரும் ஜகுபர் கூறியதாவது,
கீழக்கரையில் தற்போதுள்ள வரைவு மிக அதிக விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பத்திரபதிவு செலவு எக்கச்சக்கமாக இருக்கும் இதனால் இடத்தை வாங்குபவர்கள் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.குறிப்பாக கீழக்கரை பகுதியில் அதிக அளவில் இடங்களை விற்பது,வாங்குவது நடைபெற்று வருகிறது இந்த வரைவு நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த வியாபாரம் குறைந்து விடும் அரசு இந்த விலை நிர்ணயத்தை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு கொடுத்தபோது எடுத்த படம்.
புதிய வழிகாட்டுதல் மதிப்பீடு வெளியான போது கீழக்கரை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இக்கோரிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை
புதிய வழிகாட்டுதல் மதிப்பீடு வெளியான போது கீழக்கரை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இக்கோரிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை