Tuesday, November 26, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார் )!


கீழக்கரை கிழக்குதெருவை சேர்ந்த மர்ஹீம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும் ,மர்ஹூம் செய்யது முஹம்மது(காட்டரபி) மர்ஹீம் அரபி ஷாஹுல் ஹமீது,மர்ஹும் கதீஜா உம்மா மற்றும் அரபி ஹம்ஷா ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் உம்மு ஹபீபா ஆகியோரின் கணவரும் ஹலிஃபுதீன் ,ஷபியுதீன் ,ரபீஷா ஆகியோரின் தகப்பானாரும்,அரபி நூர்ல் அமீன் அவர்களின் மாமனாரும்,நுஃமான்,ஜபருல்லாஹ்,கன்ஸுல்லாஹ் ஆகியோரின் மாமாவும்,
அமீன் ஸாஹிப்,நிஸார்,நூருல் ஆபிதீன்,இஸ்மாயில்,அஜ்மல்,அஸ்ஃபர்,நூர் முஹம்மது,இஸ்மாயில் மரிக்கா ஆகியோரின் பெரியவாப்பாவுமான ஜனாப் செய்யது அப்துல் காதர்(85) பெரிய அரபி அவர்கள் இன்று (26/11/13) வபாத்தானார்கள்(காலமானார்)

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


தகவல்: இஸ்மாயில் மரிக்கா













2 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாNovember 26, 2013 at 8:51 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
    *******************************************************************
    அறிவிப்பவர் : அவஃப் பின் மாலிக் (ரலி) முஸ்லிம்: 1601

    இறைவா...

    இவரை மன்னித்து அருள் புரிவாயாக...

    இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக...

    இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக...

    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...

    பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக...

    அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.