Sunday, September 30, 2012

பிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இள‌ம்பெண் உயிர‌ழ‌ந்தார்!கீழ‌க்க‌ரையில் தொட‌ரும் சோக‌ம்!

கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு மாதிஹுர் ர‌சூல் சாலையில் வ‌சித்து வ‌ந்த‌ யூசுப் சாகிபு ம‌க‌ள் ஹ‌திஜ‌த் ரில்வியா(20) இவ‌ர் தொட‌ர்ந்து ஒரு வார‌ கால‌மாக‌ காய்ச்ச‌ல் பாதித்து ராம‌நாத‌புர‌ம் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ந்துள்ளார். நேற்று ப‌ரிசோத‌னை செய்த‌தில் டெங்கு இருப்ப‌தாக‌ தெரிய‌வ‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. இதை தொட‌ர்ந்து காலையில் ம‌துரை த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முய‌ற்சிகள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ நிலையில் இன்று அதிகாலை உயிர‌ழ‌ந்தார். இவ‌ருக்கு செப் 30ம் தேதி 20வ‌து பிற‌ந்த‌நாள் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

க‌ட‌ந்த‌ ஆக‌ 18ல் கீழ‌க்க‌ரை பெரிய‌ அம்ப‌லார் தெருவை சேர்ந்த‌ பாத்திஹ் ம‌வுலானா என்ற‌ இன்ஜினிய‌ரிங் மாணாவ‌ர் காய்ச்ச‌லில் ப‌லியானார். அதே போல் புது தெருவை சேர்ந்த‌ அப்துல் வாஹிது ம‌க‌ன் ஒன்றைரை மாத‌ குழ‌ந்தை உயிர‌ழ‌ந்தது.

15வ‌து வார்டு க‌வுன்சில‌ர் கூறுகையில்,

 என‌து வார்டு ப‌குதியில் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ச‌ரியான‌ முறையில் குப்பைக‌ளை அக‌ற்றுவ‌தில்லை,கொசும‌ருந்து அடிப்ப‌தில்லை இது குறித்து ப‌ல‌முறை ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர்,தலைவ‌ர்,ம‌ற்றும் சுக‌தார‌ ஆய்வாள‌ரிட‌ம் புகார் தெரிவித்தும் ந‌ட‌வ‌டிக்கை இல்லை என‌து வார்டு ப‌குதியை ஒதுக்கிவிட்ட‌ன‌ர் என்றார்.

அப்ப‌குதியை சேர்ந்த‌ பாசில் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து ,
கீழ‌க்க‌ரையில் ஒவ்வொரு முறை காய்ச்ச‌லில் உயிர‌ழ‌ப்பு ஏற்ப‌டும் போது அர‌சின் சுகாதார‌த்துறை இது டெங்கு இல்லை என்ற‌ கார‌ண‌ங்க‌ளை ம‌ற்றும் கூறி விள‌க்க‌ம‌ளிக்கிறார்க‌ளே த‌விர‌ த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைகள் எடுத்த‌பாடில்லை இன்னும் உயிர்க‌ள் ப‌லியாக‌ வேண்டும் என்று காத்திருக்கிறார்க‌ளோ...என்றார்

  ஹ‌திஜ‌த் ரில்வியாவின் ம‌றைவு அப்ப‌குதியில் பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

Saturday, September 29, 2012

குடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌புர‌த்தில் ர‌யிலில் அடிப‌ட்டு உயிர‌ழ‌ந்தார்!!

ஏர்வாடி தர்ஹாவிற்கு சென்றுவிட்டு திரும்பி சென்னைப் பெண் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் ஏற முயன்றபோது அடிபட்டு இறந்தார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ரஹ்மத் நிஷா(40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரஹ்மத் நிஷா சற்று மன நிலை பாதிக்கப்பட்டதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. அதனால் அமானுல்லா, சென்னையிலிருந்து மனைவி மற்றும் தனது அக்காள் ரஷியா பேகம் ஆகியோரை அழைத்துக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அண்ணன் அஜீஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அஜீஸ், அவரது மனைவி மற்றும் அமனுல்லா, அவரது மனைவி, அக்காள் ஆகிய 5 பேரும், நத்தத்தில் இருந்து ஏர்வாடி தர்ஹா வந்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்துள்ள‌ன‌ர்.

நேற்று முன்தினம் நடந்த ஏர்வாடி த‌ர்ஹா கொடியேற்று விழாவில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று அமானுல்லா குடும்பத்தினர் சென்னை செல்லவும், அஜீஸ் குடும்பத்தினர் மதுரை வழியாக நத்தம் செல்லும் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர்.

நேற்று மாலை 6.20க்கு செல்லும் ராமேஸ்வரம்&சென்னை ரயில் முதல் பிளாட்பாரத்திற்குள் வரும்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி இடம் பிடிக்க அமானுல்லாவும், அவரது அண்ணனும் வேகமாக சென்றுள்ளனர். அவர்களுக்கு பின்னால் 3 பெண்களும் வந்துகொண்டிருந்தபோது, கூட்டத்தில் திடீரென ரஹ்மத்நிஷா தண்டவாளத்தில் விழுந்தார். பத்து அடி தூரத்தில் ரயில் வந்துவிட்டதால் பலர் கூச்சலிட்டும் ரயிலை நிறுத்த முடியவில்லை. அவர் மீது ரயில் ஏறியதில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்டு ரஹ்மத் நிஷா இறந்தார். தண்டவாளத்தில் விழுந்தவரை காப்பாற்ற முடியாமல் போனதே என அமானுல்லா உட்பட உறவினர்கள் கதறி அழுதனர்.

ராமேஸ்வரத்திலிருந்து ரயில்வே போலீசார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதால் 2 மணிநேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட உடல் பிளாட்பாரத்திலேயே கிடந்தது. இதுகுறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராம‌நாத‌புர‌த்தில் ர‌யில் ப‌ய‌ணிக‌ள் கூறிய‌தாவ‌து,
‌ அதிக‌ப்ப‌டியாக‌ ப‌ய‌ணிக‌ள் ஏறுவ‌து ராம‌நாத‌புர‌ம் ர‌யில் நிலைய‌த்தில்தான் ஆனால் மிக‌ குறைந்த‌ நிமிட‌மே ர‌யில் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து.என‌வே ப‌ய‌ணிக‌ள் அவச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ர‌யிலில் ஏற‌ வேண்டிய‌ சூழ்நிலை ஏற்ப‌டுகிற‌து.என‌வே ர‌யில்வே நிர்வாக‌ம் குறைந்த‌து 10லிருந்து 15 நிமிட‌ங்க‌ளாவ‌து ர‌யிலை நிறுத்தி செல்ல‌ வேண்டும் என‌ ப‌ய‌ணிக‌ள் தெரிவித்த‌தோடு இந்த‌ துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ம் மிகுந்த‌ வேத‌னைய‌ளிப்ப‌தாக‌ க‌வ‌லை தெரிவித்த‌ன‌ர்

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை!க‌வுன்சில‌ர்க‌ளிடையே மோத‌ல் !


ப‌ட‌ விள‌க்க‌ம்:‍ க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிமை க‌வுன்சிலர்க‌ள் ஆனா மூனா,சுரேஷ்,சித்தீக் உள்ளிட்டோர் ச‌மாதான‌ம் செய்கின்ற‌ன‌ர்.

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில், ஒருமையில் பேசிய கவுன்சிலர் வருத்தம் தெரிவிக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவருடன் சில கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட‌ முய‌ன்ற‌ன‌ர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

கீழக்கரை நகராட்சி கூட்டம், தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகம்மது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் அஜ்மல்கான் (10வது வார்டு) பேசுகையில், கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நவீன குளிர்சாதன வசதியுடன் மீன், கோழி, ஆடு, காய்கறி விற்பனைக்காக 25 கடைகளை கட்டவும், உணவுபொருட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் பொருட்டு வசதியை ஏற்படுத்தும் பொருட்டும் மத்திய அமைச்சர் சரத்பவார் பரிந்துரை நிதியில், மீன்வளத்துறை மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

அப்போது முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு)உள்ளிட்ட‌ சில கவுன்சிலர்கள் எழுந்து கடந்த கூட்டத்தில் ஒருமையிலும், தகாதமுறையிலும் பேசிய கவுன்சிலர் அஜ்மல்கான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.க‌வுன்சிலர் அஜ்ம‌ல்கான் வ‌ருத்த‌ம் தெரிவிக்க‌ ம‌றுத்து விட்டார்.

இதுதொடர்பாக அஜ்மல்கானுடன் முகைதீன் இபுராகிம் (18வது வார்டு), இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு) ஜெயபிரகாஷ் (21வது வார்டு) சாகுல்ஹமீது (5வது வார்டு) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வருத்தம் தெரிவிக்க அஜ்மல்கான் மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. க‌வுன்சில‌ர் அஜ்மல்கானுட‌ன்  சில கவுன்சிலர்கள் நேருக்குநேர் கைகலப்பில் ஈடுபட முய‌ன்ற‌ன‌ர். இதனால் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கமிஷனர் முகம்மது முகைதீன்,ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்தன‌ர். இதையடுத்து கூட்டம் முடிந்தது.

 

Friday, September 28, 2012

500பிளாட் பகுதியில் புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌‌ குடிநீர் பைப்தள‌ம் உடைந்து சேத‌ம்!


தில்லையேந்த‌ல் பஞ்சாய‌த்துகுட்ப‌ட்ட‌ கீழக்க‌ரை 500 பிளாட் ப‌குதியில் குடிநீர் குழாயை தாங்கி நிற்கும் சிமெண்ட் த‌ள‌ம் உடைந்து சேத‌ம‌டைந்துள்ள‌ன‌.

இது குறித்து அப்ப‌குதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் கூறுகையில்,


இது தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தின் 13வ‌து வார்டு ப‌குதியாகும்.இந்த‌ பைப்க‌ள் 2 மாத‌த்திற்கு முன் தான் அமைக்க‌ப்ப‌ட்ட‌து.த‌ர‌மில்லாத‌ ப‌ணியால் தான் 2 மாத‌த்தில் உடைந்து விட்ட‌து. இப்பகுதியின் க‌வுன்சில‌ர் கண்டு கொள்வ‌தில்லை.இத‌னால் சிமெண்ட் பிடிமான‌ம் உடைந்துள்ள‌தாம் குடிநீர் பைப்க‌ள் விரைவில் சேத‌ம‌டையும் சூழ்நிலை உள்ள‌து.த‌ற்போது த‌ண்ணீரும் வ‌ருவ‌தில்லை.உரிய‌வ‌ர்க‌ள் க‌வ‌னித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

Thursday, September 27, 2012

கீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை அக‌ற்ற‌ வ‌லியுறுத்தி எஸ்டிபிஐ பிர‌ச்சார‌ம்!

எஸ்டிபிஐ கீழ‌க்க‌ரை கிளை சார்பில் சாலைதெரு ,ஜின்னாதெரு, அத்திலைதெரு ஆகிய‌ ப‌குதிக‌ளில் ம‌து ஒழிப்பு பிர‌ச்சார‌ம் ந‌டைபெற்ற‌து.இதில்ந‌க‌ர் த‌லைவ‌ர் அப்தாகிர் த‌லைமையில் துணை தலைவ‌ர் சித்தீக்,செய‌லாள‌ர் அஷ்ர‌ப்,இணை செய‌லாள‌ர் இதாய‌த்துல்லா,மாவ‌ட்ட செய‌ற்குழு உறுப்பின‌ர் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌லர் க‌ல‌ந்துகொண்டன‌ர்.
மேலும் கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ இர‌ண்டு ம‌துக‌டைக‌ளை கீழ‌க்க‌ரையிலிருந்து அக‌ற்ற‌ வேண்டும் என‌ பிர‌ச்சார‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து.இதை வ‌லியுறுத்தி வ‌ரும் அ 2ந்தேதி ம‌னித‌ ச‌ங்கிலியும்,17ல் க‌லெக்ட‌ர் அலுவ‌ல‌க‌ முற்றுகை போராட்ட‌ம் ந‌டைபெறும் என‌ பிர‌ச்சார‌த்தின் போது தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

செய்தி : சேகு ச‌த‌க் இப்ராகிம்


 

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான கடல்பசு, போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள், கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இநிலையில் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ கீழ‌க்க‌ரை,ம‌ண்டப‌ம்,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளி க‌ட‌ல்ப‌சு,டால்பின்,திமிங்க‌ல‌ங்க‌ள்  இற‌ந்து க‌ரை ஒதுங்குகின்ற‌ன‌ர்.ச‌மீப‌த்தில் கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரையில் அரிய‌ வ‌கை டால்பின் க‌ரை ஒதுங்கிய‌து.

இதுகுறித்து கடல் ஆர்வலர் சுல்தான் என்ப‌வ‌ர்  கூறுகையில்,
அரியவகை மீன்கள் இற‌ந்து க‌ரை ஒதுங்குவ‌த‌ற்கான‌  காரணத்தை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டால்பின்,க‌ட‌ல் ப‌சு போன்ற‌வை  இப்ப‌குதியில் அதிக‌ள‌வில் இருப்ப‌தால் இது போன்ற‌ உயிர‌னங்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம் குறித்து விழிப்புண‌ர்வு பிர‌ச்சார‌ங்க‌ளை  அர‌சாங்க‌ம் இப்ப‌குதியில் மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்

கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,
ஆழம் குறைந்த பகுதியில் சிக்கி பாறைகளில் மோதும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது.
இதுதவிர அரிய கடல் வாழ் உயிரினங்கள் வெளிநாடுகளில் உணவுக்காகவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப் படுவதால் சமீப காலமாக இவைகள் சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் கடத்தப்படுகின்றன. இத‌னால் கால‌போக்கில் ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியில் அரிய‌ வ‌கை உயிர‌ன‌ங்க‌ளை காண்ப‌து அரிதாகும் என்றனர்.

 

Wednesday, September 26, 2012

ச‌த‌க் க‌ல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!10 பேர் தேர்வு!


கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி வேலை வாய்ப்பு முகாமில்   2010,11,12 இல் டிப்ள‌மா நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு சென்னையில் ரோஸ்டிக் பிளாஸ்டிக்  த‌னியார் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிய‌ நேர்முக‌ தேர்வு நடைபெற்ற‌து.
 இந்த‌ முகாமில் 30க்கு மேற்ப‌ட்டவ‌ர்க‌க் க‌லந்து கொண்ட‌ன‌ர். இதில் 10 மாண‌வர்க‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.இந்நிறுவ‌ன‌த்தின் சீனிய‌ர் மேலாள‌ர் ராம்குமார் ஆகியோர் நேர்முக‌ தேர்வுக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ளை தேர்வு செய்த‌ன‌ர்.

ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி அலாவுதீன் த‌லைமை வ‌கித்தார்.ஒருங்கினைப்பாள‌ர் சேக்தாது வேலைவாய்ப்பு நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார்.
 

Tuesday, September 25, 2012

கீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌மாக‌ ச‌ங்க‌ம‌ம்!புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு!


கீழக்கரை சிறுதொழில் மீனவர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கீழக்கரையில் சிறுதொழில் மீனவர் சங்கம், சங்குளி தொழிலாளர் சங்கம், பாசிகுளி தொழிலாளர் சங்கம் தனியே செயல்பட்டு வந்தன. இம்மூன்று சங்கங்கள் இணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரே சங்கமாக செயல்பட தீர்மானிக்கப்பட்டது.

 கீழக்கரை சிறுதொழில் மீனவர் சங்கம் என பெயரிட்டு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக லுக்மாயின் ஹக்கீம், துணைத்தலைவராக செய்யது கருணை, செயலராக முகைதீன், துணைச்செயலாராக அக்பர்அலி, பொருளாளராக செய்யது அகமதுகபீர், செயற்குழு உறுப்பினர்களாக செய்யது அபுதாஹிர், முகமது அப்துல்காதர், ஹாஜா அலாவுதீன், முகமது அலியார், முகைதீன் கருணை, அகட்டி என்ற முகைதீன்கருணை, ஜெய்னுல் ஆப்தீன், கவுரவ ஆலோசகர்களாக லெப்பைதம்பி, சுல்தான் செய்யது இபுராகிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா சார்பில் பெரிய‌ப‌ட்டிண‌த்தில் ர‌த்த‌ தான முகாம்!



பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியா இணைந்து நடத்திய இரத்த தானமுகாம் 24/09/12 அன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட சுகாதார துனை இயக்குனர் பாலசுப்புரமனியன் தலைமையில்சுகாதார‌த்துறை அலுவ‌ல‌ர்க‌ள்,ம‌ருத்துவ‌ர்,செவிலிய‌ர்,
இராமநாதபுரம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் மாவட்ட  இரத்த தான பொறுப்பாளர் நஜிம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் பெரியப்பட்டின நகர் தலைவர் முகம்மது சலீம் பாப்புலர் ஃபிரண்ட் ஃஆப் இந்தியாவின் மாவட்ட செயலாள‌ர் அசன் அலி SDPI பெரியப்பட்டினம் நகர் செயலாள‌ர் சேகுஇபுராகிம் SDPI தொகுதி தலைவர் பைரோஸ்கான உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர் .
 

Monday, September 24, 2012

கீழ‌க்க‌ரைக்கான‌ உர‌க்கிட‌ங்கில் குப்பை கொட்டும் ப‌ணி துவ‌ங்கிய‌து!70க்கும் மேற்ப‌ட்ட‌ போலீசார் பாதுகாப்பு!





தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்துட்ப‌ட்ட‌ தோணிப்பால‌ம் அருகில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு சொந்த‌மான‌‌ இட‌த்தில் குப்பைகளை கொட்டி உர‌மாக்குவ‌த‌ற்கான‌ உர‌கிட‌ங்கு ப‌ணிக‌ள் ப‌ல்லாண்டுக‌ளுக்கு பின் நிறைவ‌டைந்த‌தை தொட‌ர்ந்து இன்று முத‌ல் ப‌ய‌ன்பாட்டிற்கு வ‌ந்த‌து.

இதை தொட‌ர்ந்து இன்று தொட‌க்க‌மாக‌ கீழ‌க்க‌ரையிலிருந்து டிர‌க் மூல‌ம் எடுத்து வ‌ர‌ப்ப‌ட்ட‌ குப்பைக‌ள் உர‌க்கிட‌ங்கில் கொட்ட‌ப்ப‌ட்ட‌து.இந்நிக‌ழ்விற்கு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன்,மேற்பார்வையாள‌ர் அறிவ‌ழ‌க‌ன்,சுகாதார ஆய்வாள‌ர் அயூப்கான்,ஒப்ப‌ந்தார‌ர் உத்த‌ண்டி,க‌வுன்சில‌ர்க‌ள் அன்வ‌ர் அலி,பாவா செய்ய‌து க‌ருணை,இடிமின்ன‌ல் ஹாஜா,சித்தீக் அலி,ர‌பியுதீன்,த‌ங்க‌ராஜ்,மீனாள்,மஜிதா பீவி,முன்னாள் க‌வுன்சில‌ர் வேல்சாமி உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

முன்ன‌தாக‌ தில்லையேந்தல்‌ ப‌குதியை சேர்ந்த‌ சில‌ர் குப்பை வ‌ண்டியை ம‌றித்து குப்பையை கொட்ட‌ விடாம‌ல் த‌டுக்க‌ போவ‌தாக‌ செய்திகள் ப‌ர‌விய‌தால் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ சூழ்நிலை நில‌வியது.கீழ‌க்க‌ரை  காவ‌ல்துறையில் பாதுகாப்பு கோரியிருந்த‌தை தொட‌ர்ந்து இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கொவ‌ன் த‌லைமையில் எஸ்.ஐ கார்மேம் ,20 ஆயுத‌ப்ப‌டை காவ‌ல‌ர்க‌ள் உள்ளிட்ட‌ 70க்கும் மேற்ப‌ட்ட‌ போலீசார் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.இவ‌ர்க‌ள் உர‌க்கிட‌ங்கு வாச‌லிலும்,குப்பை வாக‌ன‌ம் வ‌ரும் வ‌ழியிலும் பாதுகாப்ப‌ளித்து க‌ண்காணித்த‌ன‌ர்.



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு நீண்ட‌ கால‌மாக‌ குப்பை கொட்டுவ‌த‌ற்கு நிர‌ந்த‌ இட‌மில்லாம‌ல் இருந்த‌ குறை த‌ற்போது நீங்கியுள்ள‌து.குப்பை கிட‌ங்கு அமைய‌ப்பெற்ற‌தினால் தொட‌ர்ந்து ந‌க‌ர் முழுவ‌தும் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ம் குப்பையில்லா சுத்த‌மான‌ ந‌க‌ர‌மாக‌ உருவெடுக்கும் என்ற‌ ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கை செய‌லாக்க‌ம் பெறுவ‌த‌ற்கு வ‌ழி கிடைத்து உள்ள‌து.

ச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ தேசிய‌ அள‌விலான‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!

ம‌துரை தியாக‌ராஜ‌ர் பொறியிய‌ல் க‌ல்லூரி பேராசிரிய‌ர் ம‌னோக‌ர‌னுக்கு ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்கினார்.

ராமநாதபுரம் மாவ ட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லு£ரியில் இயந்திர கட்டுப்பாடு, அளவீடு, ஒழுங்குமுறை குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது.

 கருத்தரங்கிற்கு கல்லு£ரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் யூசுப் சாகிபு, இயக்குநர் ஹபீப்முகமது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னியல், மின்னணுவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு, பிற மாநிலங்களின் மின் உற்பத்தி திறன் பற்றி கூறி, மின் தட்டுப்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை தியாகராஜர் பொறி யியல் கல்லூரி பேராசிரியர் மனோகரன் பேசினார். உதவிப் பேராசிரியர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார். சென்னை, மது ரை, புதுக்கோட்டை உட் பட 50 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, September 23, 2012

கீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி!க‌லெக்ட‌ர் தொட‌ங்கி வைத்தார்!



குப்பைக‌ளை கொட்டி உர‌மாக்குவத‌ற்காக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு சொந்த‌மான
‌ தில்லையேந்த‌ல் ப‌குதி உர‌க்கிட‌ங்கில் க‌ட்டிட‌ ப‌ணிகள் நிறைவ‌டைந்து த‌யார் நிலையில் உள்ள‌து.இங்கு ம‌ரக்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சி க‌லெக்ட‌ர் த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு 2010&11ல் சொந்தமான குப்பை கிடங்கு இன்றி தினமும் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அப்போதைய நகராட்சி தலைவர் பசீர்அகமது (திமுக), அப்போதைய அமைச்சர் சுப. தங்கவேலன் ஆகியோர் குப்பை கொட்டுவ‌த‌ற்கு நில‌ம் வேண்டுமென‌ ஈடிஏ ஸ்டார் நிறுவ‌ன‌த்தின் மேலாண்மை இய‌க்குந‌ரும் கீழ‌க்க‌ரை வெல்பர் அசோசியேஷன் டிர‌ஸ்டியுமான‌ ச‌லாஹீதீனிட‌ம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து  தில்லையேந்தல் ஊராட்சி தோணி பாலம் அருகே 12 ஏக்கர் நிலம் கீழ‌க்க‌ரை நகராட்சிக்கு இலவ‌ச‌மாக‌ வழங்க‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன் பின் க‌ட்டிட‌ ப‌ணிக்காக‌  சார்பில் த‌னியார் ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் கலெக்டர் நிதியிலிருந்து ரூ.14 லட்சம் நிதி என ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் சுற்று சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் குப்பை கிட‌ங்கு அமைவ‌தை எதிர்த்து கோர்டில் வ‌ழ‌க்கு ,தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தின‌ர் எதிர்ப்பு போன்ற‌ ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளால் ப‌ணிக‌ள் தாம‌தமான‌து தொட‌ர்ந்து ஆட்சி மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ அதிமுக‌ சார்பில் ராவிய‌த்துல் காத‌ரியா தேர்வு செய்ய‌ப்ப‌ட்டார்.

க‌ட்டிட‌ ப‌ணியை தொட‌ர‌ தொர்ந்து த‌டைக‌ள் ஏற்ப‌ட்ட‌து ப‌ல்வேறு த‌டைக‌ளும் சீர் செய்ய‌ப்ப‌ட்டு நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா,ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ,  மற்றும் நகராட்சித் துணை தலைவர் ஹாஜா முகைதீன், நகராட்சி க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரின் முய‌ற்சி ம‌ற்றும் ஆத‌ர‌வால் த‌ற்போது குப்பைக‌ள் கொட்டுவ‌த‌ற்கான‌ உர‌க்கிட‌ங்கு ப‌ணி  2011&12க்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் சுற்றுச்சுவர் கட்ட மேலும் ரூ.20 லட்சம், தளம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு த‌ற்போது ப‌ணிக‌ள் முழுமையாக‌ நிறைவடைந்துள்ளன.


சுற்றுசூழ‌லை பாதுகாக்கும் வ‌கையில் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட வனத்துறை சார்பில் 270 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உர‌க்கிட‌ங்கு வளாகத்தில் கலெக்டர் நந்தகுமார் முத‌ல் மரக்கன்று நட்டு ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌டும் நிக‌ழ்ச்சியை  தொட‌ங்கி வைத்தார்.

நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், ஆணையர் கமிஷனர் முகமது முகைதீன், மேற்பார்வையாளர் அறிவழகன், நகர் அதிமுக செயலர் ராஜேந்திரன், நிர்வாகிகள் நாராயணன், பாரதி, ஜகுபர்ஹூசைன், பாபு, சரவணா பாலாஜி, ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அன்வ‌ர் அலி,ஜெயபிரகாஷ், சாகுல், மஜிதாபீவி, பாவா செய்யது கருணை, ரபியுதீன், சித்திக்அலி, ஹாஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ளுக்கு சிகிச்சைய‌ளிக்க‌ ந‌வீன‌ ம‌ருத்துவ‌ க‌ருவி!




கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை ந‌வீன‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.‌பிர‌ச‌வ‌ம் தொட‌ர்பான‌  சிகிச்சைக்கு தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள்(ஸ்கேன்) உள்ப‌ட‌ அனைத்தும் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ளாது.த‌ற்போது இத‌ய‌ துடிப்பை சீர் செய்வ‌த‌ற்காக‌ ந‌வின‌ க‌ருவி வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இந்த‌ க‌ருவி மூல‌ம் மார‌டைப்பால் பாதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளின் உட‌ன‌டியாக‌  இத‌ய‌ துடிப்பை சீர்செய்ய முடியுமென‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.


 இந்நிலையில் மாயாகுள‌த்தில் வ‌சித்து வ‌ரும் ப‌ழ‌னி(42) என்ப‌வ‌ர் ச‌மைய‌ல் வேலை செய்து வ‌ருகிறார்.இவ‌ருக்கு மாராடைப்பு ஏற்ப‌ட்டு கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ இவ‌ருக்கு இத‌ய‌ துடிப்பு பாதிக்க‌ப்ப‌ட்ட‌து .ம‌ருத்துவ‌ர்கள் சாகுல் ஹ‌மீது,ஹ‌சீன்,ஜ‌வாஹிர் ஹுசைன்,முத்த‌மிழ‌ர‌சி த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் ஆகியோர் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு புதிய‌தாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ந‌வீன‌ க‌ருவி மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்டவ‌ரின்  இத‌ய‌துடிப்பை சீர் செய்து சிகிச்சை அளித்த‌ன‌ர்.இது போன்ற‌ சிகிச்சை கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில்  முத‌ல் முறை என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

இது குறித்து அர‌சு த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் கூறுகையில்,
கீழ‌க்க‌ரை அர‌சும‌ருத்துவ‌மனை ந‌வீன‌ம‌யமாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.பொது ம‌க்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள வேண்டும் என‌ கேட்டு கொண்டார்.

சாலைதெருவில் கழிவுநீர் கால்வாய் சேத‌ம‌டைந்துள்ள‌தால் சுகாதார‌ சீர்கேடு! ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!



சாலை தெரு ப‌குதியில் சில‌ இட‌ங்க‌ளில் க‌ழிவுநீர் கால்வாய் நீர் கால்வாய் உடைந்து சேத‌ம‌டைந்துள்ள‌தால் க‌ழிவு நீர் வெளியேறி சாலைக‌ளில் தேங்கி சுக‌தார சீர்கேடு ஏற்ப‌டுவ‌தாக‌ அப்பகுதிக‌ளில் சுகாதார‌ சீர் கேடு ஏற்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த‌ ஜமால் என்ப‌வ‌ர் கூறுகையில்,

நீண்ட‌ நாட்களாக‌ இப்பகுதியை இப்பிர‌ச்ச‌னை இருந்து வ‌ருகிற‌து.இதனால் குழ‌ந்தைக‌ள் சுகாதார‌ சீர்கேடு ஏற்ப‌ட்டு ப‌ல்வேறு நோய்க‌ளுக்கு ஆளாகிறார்க‌ள்.இப்ப‌குதியில் உள்ள‌ க‌வுன்சில‌ர்க‌ள் ந‌க‌ராட்சி தலைமையிட‌ம் எடுத்து சென்று உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வேண்டும் என‌ கேட்டு கொள்கிறோம் என்றார்.

இடம்: ஜெய்னம் பீவி பெண்கள் தொழுகை பள்ளி அருகில் .

அதேபோல் 8 வார்டு பகுதியில் கால்வாய் சுத்த‌ம் செய்ய‌ தோண்டி 4 நாள் ஆகி விட்ட‌து. கொட்ட‌ப்ப‌ட்ட‌  சாக்கடை மண்ணை எடுக்க‌வில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார்க‌ள்.

அப்பகுதியை சேர்ந்த‌ சித்திக் கூறுகையில்,

நான்கு நாட்களாக நகராட்சியில் புகார் கூறி வருகிறேன்,இதுவரை யாரும் அக‌ற்ற‌வில்லை.ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் அவ்வ‌ழியேதான் செல்கிறார்க‌ள்.மிகுந்த‌ சிர‌ம‌ம் ஏற்ப‌டுகிற‌து.என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்ப‌‌டி கேட்டு கொள்கிறேன் என்றார்.
 

Saturday, September 22, 2012

கீழ‌க்க‌ரையில் 25.09.12 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் வேலைவாய்ப்பு முகாம்!

               கீழ‌க்க‌ரையில் 25.09 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் டிப்ள‌மா நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!

கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி வேலை வாய்ப்பு முகாமில்  25.09.12 செவ்வாய் கிழ‌மை காலை 9 மணி முத‌ல் ப‌க‌ல் 12 ம‌ணி வ‌ரை 2010,11,12 இல் டிப்ள‌மா நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு சென்னையில் த‌னியார் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிய‌ நேர்முக‌ தேர்வு ந‌டைபெற‌ உள்ள‌து.ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌ அழைப்பு விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

கீழ‌க்க‌ரையில் 24ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் துவ‌க்க‌ம்!



கீழ‌க்க‌ரை கிழ‌க்கு தெரு மொட்ட‌பிள்ளை தெருவில் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் இன்று காலை முத‌ல் செய‌ல்ப‌ட‌ துவங்கிய‌து.ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் இன்று துவக்கி வைத்தார்.நிக‌ழ்ச்சியில் சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன்,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன், ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,ஜ‌மாத் நிர்வாகிக‌ள்,க‌வுன்சில‌ர்க‌ள் ம‌ற்றும் ஏராள‌மான‌ பொது மக்க‌ள் க‌ல‌ந்து கொண்டன‌ர்.

இது குறித்து துணை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன் கூறிய‌தாவ‌து,


இங்கு திற‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஆரம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் 1 டாக்ட‌ர் ம‌ற்றும் நான்கு ந‌ர்ஸ்க‌ளுட‌ன் 24 ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் மேலும் ஊரின் ம‌த்தியில் இன்னும் பெரிய‌ க‌ட்டிட‌ம் கிடைத்தால் அதிக‌ வ‌ச‌தி செய்து ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் விரிவுப‌டுத்த‌ப்ப‌டும் என்றார்

மின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்!21 பேர் மீது வ‌ழ‌க்கு ப‌திவு!இத‌ஜ‌ க‌டும் க‌ண்ட‌ன‌ம்!

கீழக்கரையில், மின்வெட்டை கண்டித்து இரவில்  மெழுகுவர்த்தியுடன் பொதுமக்கள் திரண்டன‌ர் .பின்ன‌ர் போலீசார் கேட்டு கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ அமைதியாக‌ க‌லைந்து சென்றன‌ர்.

இது குறித்து முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டியின் நகர் தலைவர் செய்யது அபுதாகிர், பொருளாளர் காதர், முகம்மது இபுராகிம், யாசின், பாருக் உள்பட 21 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் அமீர‌க‌ பொறுப்பாள‌ர் கீழை ஜ‌மீல் கூறிய‌தாவ‌து,

ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போராட்ட‌ங்க‌ள் என்ற‌ பெய‌ரில் ம‌ர‌த்தை வெட்டுவ‌து,ரோடுக‌ளை சேத‌ப்ப‌டுத்துவ‌து என்று உண‌ர்ச்சி வேக‌த்தில்  ந‌டைபெறுகின்ற‌ன‌.அத‌ற்கெல்லாம் வ‌ழ‌க்கு ப‌திவு இல்லை கைது இல்லை ஆனால் மிக‌வும் அமைதியான‌ முறையில் மெழுகுவ‌ர்த்தியுட‌ன் ம‌க்க‌ள் குழுமி எதிர்ப்பை ப‌திவு செய்து விட்டு க‌லைந்து சென்றிருக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கா? அதிர்ச்சியாக‌ இருக்கிற‌து.நாம் ஜ‌ன‌நாயாக‌ நாட்டில்தான் இருக்கிறோமா ?


வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருந்தால் உட‌ன‌டியாக‌ வ‌ழ‌க்கை வாப‌ஸ் பெற‌ வேண்டும்.இத‌ற்கு இந்திய‌ த‌வ்ஹீத்  ஜ‌மாத் சார்பில் க‌டும் க‌ண்ட‌ன‌த்தை தெரிவித்து கொள்கிறேன்.

Friday, September 21, 2012

ராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி!ப‌த‌ற்ற‌ம்!போலீசார் குவிப்பு!


ராமநாதபுரத்தில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பார‌தி ந‌க‌ர் குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பள்ளிவாசல் உள்ளது. குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில்  மதரசாவும் இங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.

துணை இமாம் சபியுல்லா மட்டும் பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சபியுல்லா எழுந்து வந்து பார்த்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே சபியுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த இமாம் சையது அக்பர் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் பள்ளிவாசல் முன் குவிந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. சிவகங்கை ஏடிஎஸ்பி கண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்து பள்ளிவாசலை பார்வையிட்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரத்தில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 28 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை எந்த பிரச்னையிலும் ஈடுபட வேண்டாம், நாளை மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

   பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த்தியில் பெரும் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ளது.குற்றவாளிக‌ளை உட‌ன‌டியாக‌ பிடிக்க‌ காவ‌ல்துறையின‌ரை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.
 இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்காக நகர் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,வேண்டுமென்றே இருத‌ர‌ப்புக்கும் இடையில் க‌ல‌வ‌ர‌த்தை தூண்ட‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன் விஷ‌மிக‌ள் செய‌ல்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து பள்ளிவாசல் அருகே உள்ள டயர் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது 3 பைக்குகளில் மர்ம நபர்கள் வந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களை கைது செய்வோம்’ என்றனர்

 

கீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற்பதாக‌ குற்ற‌ச்சாட்டு!ப‌ற‌க்கும்ப‌டை சோத‌னை!



கீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற்பதாக‌ குற்ற‌ச்சாட்டு!ப‌ற‌க்கும்ப‌டை சோத‌னை!

கீழ‌க்க‌ரையில் ரேச‌ன் க‌டைக‌ளில் அரிசி க‌ட‌த்த‌ல் ந‌டைபெற்று வ‌ருவ‌தாக‌வும் ரேஷ‌ன் பொருட்க‌ள் அதிக‌ விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்க‌ப்ப்டுவ‌தாக‌வும் இத‌னால் பொது ம‌க்க‌ள் முறையான‌ விநியோக‌ம் ந‌டைபெறுவ‌தில்லை என‌ நீண்ட‌ கால‌மாக‌ குற்ற‌ச்சாட்டு நில‌வி வ‌ருகிற‌து.
இந்நிலையில் கீழ‌க்க‌ரையில் 8ம் ந‌ம்ப‌ர் க‌டையில் ராமநாத‌புர‌ம் உண‌வு பொருட்க‌ள் க‌ட‌த்த‌ல் த‌டுப்பு பிரிவு ப‌ற‌க்கும் ப‌டையின‌ர் சோத‌னை ந‌ட‌த்தின‌ர்.

இது குறித்து முஜீப் கூறுகையில்,
கீழ‌க்க‌ரையில் நீண்ட‌ கால‌மாக‌ ரேச‌ன் பொருட்க‌ள் வெளிமார்க்கெட்டில் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிற‌து.ரேச‌ன் க‌டை பொறுப்பாள‌ர்க‌ள் ப‌ல‌ர் வெளியாட்க‌ளை ரேஷ‌ன் க‌டைக‌ளில் ப‌ணிய‌ம‌ர்த்தும் நிக‌ழ்வும் ந‌டைபெறுகிற‌து.இது போன்ற‌ ச‌ட்ட‌ விரோத‌ காரிய‌ங்க‌ளால் பொது ம‌க்க‌ளுக்கு அரிசி ம‌ண் எண்ணெய் உள்ளிட்ட‌ ரேச‌ன் பொருட்க‌ள் முறையாக‌ கிடைப்ப‌தில்லை எப்போது போய் ரேச‌ன் பொருட்க‌ள் கேட்டாலும் தீர்ந்து விட்ட‌து என்று ப‌தில் சொல்கிறார்க‌ள்.குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ட்டும் விநியோக‌ம் செய்து விட்டு மீத‌ம் உள்ள‌ பெரும்பாலான‌ பொருட்க‌ளை வெளிமார்கெட்டில் விற்கிறார்க‌ள்.ச‌ட்ட‌ப்ப‌டி ரேச‌ன் பொருட்க‌ளின் இருப்பை இருப்பிற்கு த‌க்க‌வாறு மாற்ற‌ம் செய்து அறிவிப்பு ப‌ல‌கையில் எழுத‌ வேண்டும்.அவ்வாறு செய்வ‌தில்லை.

வெளிமாநில‌ங்களிலிருந்து  க‌ட்டிட‌ வேலைக்கு அழைத்து வ‌ரும் காண்ட்ராக்ட‌ர்க‌ள் சில‌ருக்கு ரேச‌ன் க‌டையிலிருந்துதான் மொத்த‌மாக‌ அரிசி விற்க‌படுகிற‌து.

.தொட‌ர்ந்து இது போன்ற‌ திடீர் சோத‌னைக‌ளை ந‌ட‌த்தி க‌ட‌த்த‌லை த‌டுத்து ம‌க்க‌ளுக்கு ரேச‌ன் பொருட்க‌ள் முறையான‌ விநியோக‌ம் ந‌டைபெற‌ வேண்டும் என்றார்.
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

 உள்ளூர் பிரமுக‌ர்க‌ள் சில‌ரும் கையூட்டு பெற்று கொண்டு இது போன்ற‌ செயல்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள்.கீழ‌க்க‌ரையில் பல‌ முறை உள்ளூர் இளைஞ‌ர்க‌ளால் ரேச‌ன் க‌ட‌த்த‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஏழை,எளிய‌ ம‌க்க‌ள் வ‌யிற்றில் அடிக்கும் இவ‌ர்க‌ள் ச‌ட்ட‌திலிருந்து த‌ப்பித்து விடுகிறார்க‌ள் ஆனால் இறைவ‌னிட‌ம் த‌ப்ப‌ முடியாது என்றார்

கீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நாள் கருத்த‌ர‌ங்க‌ம்!



கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியின் முதுக‌லை க‌ணிப்பொறி ப‌ய‌ன்பாட்டிய‌ல் துறையின் சார்பாக‌ தேசிய‌ ராணுவ‌ ஆராய்ச்சி ம‌ற்றும் வ‌ள‌ர்ச்சி நிறுவ‌ன‌ம்(டிஆர்.ஓ)புது டெல்லி உத‌வியுட‌ன் தேசிய‌ அள‌விலான‌ இர‌ண்டு நாள் க‌ருத்த‌ர‌ங்க‌ம் இணைய‌ த‌ள‌ சேவை என்ற‌ த‌லைப்பில் துவ‌க்க‌ விழா க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜகாப‌ர் த‌லைமை வ‌கித்தார்.முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,செய‌லாள‌ர் யூசுப் சாகிப் இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர். துறை த‌லைவ‌ர் பேராசிரிய‌ர் முக‌ம‌து ர‌பி வ‌ர‌வேற்றார்.இந்நிக‌ழ்ச்சியில் திருச்சி தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌த்தில்(என்டிஐ)ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் பால‌சுந்த‌ர‌ம் க‌ல‌ந்து கொண்டு பேசினார்.

ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் பேசுகையில், தேரை ஓட்டுவ‌த‌ற்க்கு எப்ப‌டி அச்சானி தேவையோ அதே போல் த‌ற்போது உலக‌ம் இய‌ங்குவ‌த‌ற்கு க‌ணிணி ப‌ய‌ன்பாடு முக்கிய‌ம் என்ப‌தை வ‌லியுறுத்தி பேசினார்.
இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Thursday, September 20, 2012

கீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து மெழுவ‌ர்த்தி ஏந்தி சாலையில் குழுமிய‌ பொதும‌க்க‌ள்!





கீழ‌க்க‌ரையில்  தொட‌ரும் மின் வெட்டை க‌ண்டித்து இன்று இர‌வு மாண‌வ‌ர்க‌ள்,இளைஞ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ பொது மக்க‌ள் வ‌ள்ள‌ல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள‌ பாலிஹ் மெடிக்க‌ல் அருகே குழுமின‌ர்.இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் கையில் மெழுவ‌ர்த்தி  ஏந்திய‌ப‌டி நின்றிருந்த‌ன‌ர்.இதனால் அப்ப‌குதியில் கூட்ட‌ம் சேர‌ ஆர‌ம்பித்த‌து.
த‌‌க‌வ‌ல‌றிந்த‌ காவ‌ல்துறையினர் அங்கு வ‌ந்து பொதும‌க்க‌ளிட‌ம் பேசி க‌லைந்து போகும்ப‌டி கேட்டுகொண்ட‌ன‌ர்.இத‌ன் பேரில் பொதும‌க்க‌ள் க‌லைந்து சென்ற‌ன‌ர்.

இது குறித்து அப்ப‌குதியை சேர்ந்த‌ ஜாஹிர் ஹுசைன் கூறிய‌தாவ‌து,

த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் மின்வெட்டு உள்ள‌து ஆனால் ம‌ற்ற‌ இட‌ங்க‌ளை காட்டிலும் அதிக‌ நேர‌ம் மின் த‌டை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து மேலும் கீழ‌க்க‌ரையில் எப்போது மின்சார‌ம் வ‌ரும் எப்போது மின் த‌டை வ‌ரும் என்ற‌ எவ்வித‌ முன்ன‌றிவிப்பும் இல்லை.இத‌னால் பெரும் சிர‌ம‌மாக‌ உள்ளது.மின்சார‌ம்தான் ச‌ரியாக‌ த‌ருவ‌தில்லை முறையான‌ அறிவிப்பையாவ‌து மின் இலாகா செய்ய‌ வேண்டும்.என‌வேதான் மெழுகுவ‌ர்த்தி ஏந்தி அமைதியான‌ முறையில் எங்க‌ள‌து க‌ண்ட‌ன‌த்தை ப‌திவு செய்துள்ளோம் என்றார்.
 

ஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ருக்கு பாராட்டு விழா!


கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு ஜமாத் சாலை தெருவை சேர்ந்த‌ மாண‌வ‌ர் உம‌ர் அக‌ம‌து சென்னை ம‌த‌ரசா இமாமூர் ம‌ஸ்ஜிதில் ஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்றார்.இவ‌ருக்கு 18வாலிப‌ர் த‌ர்ஹா க‌மிட்டி சார்பில் பெண்க‌ள் தொழுகை ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் பாராட்டு விழா ந‌டைபெற்ற‌து.

ஹாபிழ் உம‌ர் அஹ‌ம‌து கிராஅத் ஓதி துவ‌ங்கி வைத்தார்.அப்துல் ச‌லாம் ஆலிம் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ஆரிப் ஆலிம்(இமாம்,ஓட‌க்க‌ரை ப‌ள்ளி)த‌லைமை வ‌கித்தார்.

அல்ஹாபிழ் யூசுப் சாஹிப் ஹாமிதி வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ மொள‌ல‌வி ம‌ன்சூர் அலி ஆலிம் நூரி (க‌த்தீப் மேல‌த்தெரு புதுப்ப‌ள்ளி) சிற‌ப்புரை நிக‌ழ்த்தினார்.
இந்நிக‌ழ்ச்சியில் ஜ‌மாத்தார்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் கல‌ந்து கொண்டன‌ர். ஜ‌குப‌ர் சாதிக் ந‌ன்றி கூறினார்.

கீழ‌க்க‌ரையில் இது போன்று மார்க்க‌ க‌ல்வி பெறும் மாணவர்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தும் வ‌கையில் பாராட்டு விழாக்க‌ள் தொட‌ந்து ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

ம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌ம் முன்பு சாலையில் அம‌ர்ந்து போராடிய‌வ‌ர்க‌ள் கைது!


கீழ‌க்க‌ரை மார்க்சிஸ்ட் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி சார்பில் டீச‌ல் விலை உய‌ர்வு,சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அன்னிய‌ முத‌லீடு ஆகிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை திரும்ப‌ பெற‌ கோரியும் ம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து  கீழ‌க்க‌ரை த‌பால் அலுவ‌ல‌க‌ம் முன் போராட்ட‌ம் நடைபெற்ற‌து.


மார்க்சிஸ்ட் க‌ட்சியின் ராம‌நாத‌புர‌ம் தாலுகா  செயலாள‌ர் ராஜ்குமார் த‌லைமையில் ,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செயலாள‌ர் ம‌காலிங்க‌ம் முன்னிலையில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ க‌ம்யூனிஸ்ட் தொண்ட‌ர்க‌ள் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை வ‌ழியாக‌ ஊர்வ‌லமாக‌ வ‌ந்து கிழ‌க்குதெரு தபால் அலுவ‌ல‌க‌ம் எதிரே சாலையில் அம‌ர்ந்து போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்ற‌ன‌ர்.

முழு அடைப்பால் கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ சாலைக‌ள் வெறிச்சோடிய‌து(ப‌ட‌ங்க‌ள்)!






இன்று நாடு முழுவ‌தும் எதிர்க‌ட்சிக‌ள் முழு அடைப்பு போர‌ட்ட‌ம் ந‌ட‌த்தி வ‌ருகிற‌து.த‌மிழ‌க‌த்தில் திமுக‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு க‌ட்சிக‌ள் இப்போராட்ட‌த்திற்கு ஆத‌ர‌வு தெரிவித்துள்ள‌ன‌.இந்நிலையில் கீழ‌க்க‌ரை வ‌ர்த்த‌க‌ ச‌ங்க‌ம் இப்போராட்ட‌திற்கு ஆதர‌வு தெரிவித்திருந்த‌து இத‌னால் கீழ‌க்க‌ரையின் பெரும்பாலான‌ இட‌ங‌க‌ளில் க‌டைக‌ள் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் பெரும்பாலான‌ சாலைக‌ள் வெறிச்சோடி காண‌ப்ப‌ட்ட‌து.ஒரு சில உண‌வு விடுதிக‌ளும்,க‌டைக‌ள் ம‌ட்டும் திற‌ந்துள்ள‌ன‌ர்.