Thursday, September 13, 2012
கீழக்கரையில் வீட்டுக்கு வீடு தேங்காய் வழங்கி குப்பை தொடர்பான அறிவிப்பு!
கீழக்கரையில் பல்லாண்டு காலமாக வெல்பேர் அஸோசியேசன் தொண்டு நிறுவனம் வீட்டுக்கு வீடு குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது குப்பைகளை மறுசுழற்சி முறையில் உரமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்காக வீடுகள் தோறும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து தர வலியுறுத்தி வெல்பேர் அசோசியேசன் சார்பில் துணிப்பையில் தேங்காய் வைக்கப்பட்டு "மக்கும் குப்பை" "மக்காத குப்பை" குப்பையை பிரித்து கொடுக்க வேண்டும் என பையில் அச்சிடப்பட்டு வீட்டுக்கு வீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹபீப் என்பவர் கூறுகையில்,
வீட்டுக்கு வீடு தேங்காய் வழங்கி வித்தியாசமான முறையில் அறிவிப்பு செய்தது வரவேற்கதக்கத்து பாராட்டுக்குறியது. அதே சமயத்தில் பிரித்து கொடுக்கா விட்டால் குப்பையை அகற்ற மாட்டோம் என்று சொல்வது ஏற்கதக்கதல்ல முதலில் மக்கும் குப்பை எது மக்காத குப்பை எதுவென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.மேலும் தனிதனியாக குப்பைகளை வைப்பதற்கு வேண்டிய குப்பை பெட்டிகளை தயார் செய்வதற்கான கால அவகாசத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் பின்னர் குப்பையை எடுக்க மாட்டோம் என்ற அறிவிப்பை செயல்படுத்த ஆலோசனை செய்யலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
மக்கள் நலனுக்காக போடும் திட்டங்கள் செம்மையாக செயல் பட வேண்டுமானால் வகுக்கப்படும் நெறிமுறை களும் செம்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் அதன் முழு வெற்றியை பெற முடியும்.இது பாலப் பாடம்..
ReplyDeleteநகரில் வீடு வீடாகச் சென்று தேங்காய பையை கொடுத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி பிரித்து வீடு நாடி வரும் துப்பரவு பணியாளரிடம் கொடுக்க வேண்டும் என விளக்கி, ஒரு செயல் முறை திட்டத்தை, நகர் சுகாதரத்தில் மிகுந்த அக்கரை கொண்ட மதிப்பும் மரியாதக்குரிய கீழக்கரை வெல்பேர் அஸோஷியேஷன் சமீபத்தில் நகரில் துவக்கி உள்ளார்கள்..
அனைவராலும் மிகுந்த பராட்டுடன் வரவேற்க வேண்டிய சிறப்பான திட்டமாகும்.. ஆனால் அந்த மதிப்பு மிக்க திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க தயாராக இருந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போய் விடும் போல் தெரிகிறது.. காரணம் மக்கள் குப்பைகளை பிரித்து வைத்திருந்தாலும், வீடு நாடி வரும் ஒரே ஒரு துப்பரவு பணியாளர் நாம் பிரித்து கொடுக்கும் குப்பைகளை மீண்டும் ஒன்று சேர்த்து ஒரே குப்பை டிரம்மில் தான் கொண்டு செல்கிறார். கேட்டால் குப்பை டிராக்டரில் பிரித்து கொள்வார்கள் என்கிறார்.. அப்போ, மக்கள் பிரித்து கொடுப்பதில என்ன பயன்?
ஆகவே இதையும் மனதில் கொண்டு தங்களின் சிறப்பான சேவையை மக்களாகிய நாங்கள் எதிர் பார்ப்பதில் தவறு இல்லை என எண்ணுகிறோம்..