Wednesday, September 19, 2012
நாளை முழு அடைப்புக்கு ஆதரவு! கீழக்கரையில் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ பேட்டி!கீழக்கரை வர்த்தக சங்கமும் ஆதரவு!
டீசல் விலை உயர்வு சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் நாளை (வியாழன்) முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பாரதீய ஜனதா, இடது சாரிகள், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகள் இந்த முழு அடைப்பை முன் நின்று நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நாளை எந்த பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
நாளை இடதுசாரிகள் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கிற முழு கடையடைப்புக்கு மனித நேய மக்கள் கட்சி முழு ஆதரவு தரும் என்றார் மேலும் அவர் கூறியதவது மத்திய அரசு தர்போது உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை திரும்ப பெறகோரியும் மேலும் சில்லரை வர்த்தக்கத்தில் 51 விழுக்காடு அன்னிய முதலீடு செய்யும் சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளோடு முழு அடைப்பு நடைபெறுகிறது. அதற்கு மனித நேய மக்கள் கட்சி,மனித நேய தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முழு ஆதரவு தருவார்கள் என கூறினார்.
கீழக்கரை வர்த்தக சங்கமும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இதனால் நாளை கீழக்கரை முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.