Monday, September 3, 2012
கீழக்கரை பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தனி தாலுகா!மமக கூட்டத்தில் தீர்மானம்!
மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, கடல் அட்டை, சங்கு மீதான தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் வாணி சித்திக், துணைத்தலைவர் செய்யது காசிம், துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், அஜீஸ்ரகுமான், த.மு.மு.க துணை செயலாளர்கள் சாதிக் அமீன், அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார்.
அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும்
இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறும்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்த மத்திய அரசு, கச்சத்தீவை மீட்டு தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது. இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும். பொய்வழக்கு போட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உரை அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை மாநில தலைவர் ரிபாயி வெளியிட்டார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் கோவை செய்யது, மாநில அமைப்பு செயலாளர்கள் மைதீன்உலவி, ஜோசப்நொலஸ்கோ, மன்னை செல்லச்சாமி, மருத்துவ அணி செயலாளர் கிதிர்முகம்மது. ம.தி.மு.க. நிர்வாகி பாம்பன் பெட்ரிக் பேசினர். நகர் தலை வர் சுல்த்தான் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
இதற்க்கு ஒற்றுமை மிகவும் முக்கியம் மேலும் இதை வழுப்பெறும் வகையில் ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தவேண்டும் இதில் செல்வந்தர்கள் முன்னிற்க்கவேண்டும்.
ReplyDeleteஇது போன்ற போறாட்டங்களை வரவேற்ப்போம் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.
ReplyDelete