Wednesday, November 27, 2013

கீழக்கரையில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பு!வனத்துறையிடம் ஒப்படைப்பு!


 old (file picture)

கீழக்கரை தொலைபேசி நிலைய வாசல் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 3 அடி நீளமுள்ள இருதலை மணியன் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள்  ஏர்வாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து வனச்சரகர் ஜெயராமன் உத்தரவின் பேரில் வனவர் இன்னாசிமுத்து தலைமையிலான ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இரு தலைமணியன் பாம்பை கைப் பற்றினர். ஏர்வாடி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற பின்னர் நேற்று காலை திருப்புல்லாணி அருகே சதுப்புநில காட்டு பகுதியில் அந்த பாம்பை கொண்டு சென்றுவிட்டனர்.


photo : thanks.Dinathanthi (Mr.Azad)

இதேபோல ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினக ரன் என்பவரது வீட்டு முருங்கை மரம் அருகில் அதிசய பறவை ஒன்று மயங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. நீண்டநேரம் அசைவற்று நின்று கொண்டிருந்ததால் சந் தேகமடைந்த தினகரன் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ராமநாத புரம் வனச்சரகர் கணேசலிங் கம் தலைமையிலான வனத் துறையினர் அந்த பறவையை பிடித்தனர்.அப்போது இது அபூர்வ வகையான நீலத்தாழை கோழி  எனப்படும் "பர்ப்பிள் சுவாப் ஹென்'. அழகாக காட்சியளிக்கும் இவை, பெரும்பாலும் நதிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் வசிக்கும். எளிதில் காண முடியாத வகையில் புதர்களில் மறைந்தே வாழும். புழுக்கள் மற்றும் சிறிய மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும். பறவைகள் அதிகபருந்து உள்ளிட்ட பறவைகள் தாக்கியதால் அது அதிர்ச்சியில் அப்பகுதியில் நின்றிருக்கக்கூடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்த னர். மேலும் அந்த பறவைக்கு சிகிச்சை அளித்து தேவிபட்டி னம் வனப்பாதுகாப்பு இடத் தில் காட்டுப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.