Thursday, November 28, 2013

இஸ்லாமியா பள்ளியில் சமையல் கலை நிகழ்ச்சி!ஏராளமான மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு!











இந்நிலையில் சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவியருக்கான சமையல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 10, +1 ,+2 மாணவியர் பங்கேற்று புதிய வகை உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக  பள்ளியில்  பிரத்யோகமாக  சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நூற்றுக்கணக்கான உணவு வகைகளை மாணவியர் தயாரித்திருந்தனர்.இதில் தந்தூரி வகை உணவுகள்,வட நாட்டு உணவு வகைகள்,சில்லி சிக்கன்,ஸ்டப்ட் ப்ரோட்டா,குலோப்ஜாம்,கேரட் அல்வா  மற்றும் புதிய சிறுதானியங்களை கொண்டு தயாரித்த உணவுகளான கம்பு இட்லி, கம்பு சட்னி, ராகி தோசை,சோள தோசை, உள்ளிட்ட  வித விதமான சைவ மற்றும் அசைவ வகைகளை உருவாகியிருந்தனர்.
கீழக்கரை ஸ்பெசல் உணவான வட்டலப்பமும் செய்திருந்தனர்.
மேலும் புதிய வகை உணவுகளை தயாரித்து மாணவியரே புதிய பெயரிட்டு மெனுவாக தயார் செய்திருந்தனர்.இந்த உணவு வகைகளை உண்ணுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவியர் விளக்கினர்.


மிகுந்த ஆர்வத்துடன்  இந்நிகழ்ச்சியில் மாணவியர் பங்கேற்றனர்.இவர்களின் சமையல் படைப்புகளை பள்ளி நிர்வாகிகள்,ஆசிரிய ஆசிரியைகள் பார்வையிட்டு   பாரட்டினர்.



இது குறித்து பள்ளியின் தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சிலரின் சொல்வழக்கை புறந்தள்ளி இக்காலத்தில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். 

இன்று படிக்கும் பெண்களுக்கு சமையல் எதற்கு என்று சொல்வது போன்று சமையல் செய்யவே தெரியாது என்று பெண்களில் ஒரு பகுதியினர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக எங்கள் பள்ளி மாணவியரின்  சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

பங்கேற்ற மாணவியரின் ஆர்வத்தை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் இனி ஒவ்வொரு வருடமும் இது போன்று நிகழ்ச்சிகள் பள்ளியில் நடத்தப்படும்.

மேலும் சத்து பற்றாக்குறையை தவிர்க்க பழைய உணவு வகைகளை நாம் உண்ணும் உணவில் சேர்ப்பது அவசியம் எனபதை உணர்த்தும் வகையில்  சிறுதானியங்களைக்கொண்டு தயாரிக்கும் உணவினை உண்ணும் பழக்கத்தினை குழந்தைகளிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய உணவுப்பயிர்களான கம்பு, கேழ்வரகு,   கைக்குத்தல் அரிசி, கோதுமை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைளை சாப்பிட்ட நமது முன்னோர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் பலத்துடனும் இருந்தனர். என்றார்.

கல்லூரி மாணவியருக்கு அதிகளவில் இவ்வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
முதல் முறையாக கீழக்கரையில் பள்ளி மாணவியருக்கு சமையல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.






No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.