Wednesday, December 4, 2013

கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !




















கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !

 தொடர்ந்து செய்திகளை www.keelakaraitimes.com என்ற முகவரியில் காணலாம்


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !
கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் பல்வேறு செய்திகளை காணும் வகையில் வீடியோ இணைப்புகள், கானொலிகள்,வருங்காலங்களில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல் வேறு வசதிகளை வலைதளத்தில் இணைத்து புது பொலிவுடன் வெளியிடப்பட்டு நான்காம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியும் துபாயில் தனியார் உணவக உள் அரங்கில் நடைபெற்றது.
புது பொலிவுடன் தயாரான கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தை  அஹமது தெரு சங்க தலைவர் ஹமீதுகான் தொடங்கி வைத்து நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கீழக்கரையை சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆத்திமுத்து  மகன் பிரபு பங்கேற்றார்.
ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றும் பிரபு பேசியதாவது,
கீழக்கரையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைப்பு பாலமாக இத்தளம் திகழ்கிறது.மேலும் கீழக்கரையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி குறித்த தகவல்கள் மாணவ மாணவியருக்கு பயனளிக்கும் வகையிலான பதிவுகள் இத்தளத்தில்  இடம்பெற வேண்டும் என்றார்.
காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் பேசும் போது,
கீழக்கரை டைம்ஸ் செய்தி வெளியிடும்போது அனைத்து தரப்பின் கருத்துக்களையும் பெற்று நடுநிலைமையாக வெளியிட்டுவருகிறது.இது தொடர வேண்டும்.ஊடகம் வலிமையானது அதை சரியான வகையிலும் நேர்மையான முறையில் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
அஸ்வான் அமைப்பின் நிர்வாகியும்,எழுத்தாளருமான கீழை ராஜா என்ற ராஜாக்கான் பேசுகையில்,
ஒருவன் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.துவக்கத்தில் குறைந்த அளவில் பார்வையாளர்கள் வருகை தந்த கீழக்கரை டைம்ஸ் வலைதளம் இன்று நமது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதற்காக இக்குழுவினர் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் விடாமுயற்சியாக  தொடர்ந்து செயல்பட்டதால் இன்று சிறந்த வலைதளமாக முழுமை பெற்றுள்ளது.தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
கவிஞர் அஸ்வாக் பேசிய போது,
கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகளை சீர் செய்ய வேண்டும்.இதற்காக இத்தளத்தின் மூலம் கீழக்கரை மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கலாம் என்று கூறி கவிதை ஒன்றை வாசித்தார்.
அதில் “நான் பிறந்த ஊரினில் நீ பிறந்து விட்டாய்
நான் பிரிந்து  வாழ்கின்றேன்
நீ என்னை ஊரோடு இணைக்கின்றாய்
சூரியன் பிறக்கு என் ஊர் கடலினை  நான் கண்டு பல நாட்கள் பறந்து போய் விட்டன
ஓ.. கீழக்கரைடைம்ஸ் நீ காண வைக்கின்றாய் உன் இணையதளம் வழியாக..
இவ்வாறு வாழ்த்துரையில் தெரிவித்தார்.
கீழக்கரை ரோட்டரி கிளப்பின் முன்னாள் நிர்வாகி ஆசாத் கூறுகையில் ,
கீழக்கரை டைம்ஸ் இணையதளம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றார்.
எம்.எம்.கே காசிம் பேசுகையில்
பள்ளி கல்லூரி மற்றும் அரசுத்துறை வெளியிடும் பயனுள்ள அறிவிப்புகளை ,அதற்கான அப்ளிகேஷன் பார்ம்களை டவுன்லோட் செய்து பயனடையும் வகையில் இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றார்.
கீழை அஞ்சல் செய்தி பத்திரிக்கை நிறுவனர் கீழை ஜமீல் கூறுகையில்,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை டைம்ஸ் குழுமத்தின் சார்பாக அஹமது குத்புதீன் ராஜா,ஹமீது யாசின்,யாசர் அரபாத் ,அஹமது அபுதாஹிர் மற்றும் கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி ஷேக் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் தொலைபேசி,இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் கீழக்கரை டைம்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

3 comments:

  1. சலாம்.உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எம்மை மறந்தோம்! உம்மை(கீழக்கரை டைம்ஸ்) கண்டு!!
    எம்முகவரி அறிந்தோம் உம் முகவரியில் இன்று!!!

    வாழ்க பல நூறாண்டு இந்த கீழக்கரை டைம்ஸ் மற்றும் அதனை சார்ந்த அங்கத்தினர்கள் அனைவரும் மற்று வாசகர்கள் அனைவரும்.

    அன்புடன்
    முஹம்மது நஜீம், கீழக்கரை

    ReplyDelete
  3. எம்மை மறந்தோம்! உம்மை(கீழக்கரை டைம்ஸ்) கண்டு!!
    எம்முகவரி அறிந்தோம் உம் முகவரியில் இன்று!!!

    வாழ்க பல நூறாண்டு இந்த கீழக்கரை டைம்ஸ் மற்றும் அதனை சார்ந்த அங்கத்தினர்கள் அனைவரும் மற்று வாசகர்கள் அனைவரும்.

    அன்புடன்
    முஹம்மது நஜீம், கீழக்கரை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.