Tuesday, December 3, 2013

கீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை! மழை நீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டுகோள்!

 Photo : Muzammil safiyullah
photo : Sabeer Ali

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி கிணறுகள் ,குளங்கள் வறண்டு கடும் வறட்சி நிலவி வந்தது.இதையோட்டி பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை,பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைவரின் கவலையை போக்கும் வகையில் மாவட்டத்தில் கீழக்கரை  உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது குறித்து கீழக்கரை அலி பாட்சா கூறுகையில்..

நம்முடைய ரட்ஷகன் கடந்த சில தினங்களாக கீழக்கரையில் அருள் 
மழையை பொழிந்து கொண்டு இருக்கிறான். அவன் கூறிய திருமறை 
வசனங்களை மெய்பித்து விட்டான்.

ஆனால் நாமே..... மழை நீர் சேமிப்பை மறந்து விட்டோம். பலர் இது 
விஷயத்தில் அறவே விழிப்புணர்வு பெறவில்லை.சிலர் இதன் அருமை 
புரியாமல் ஏனோ தானோ என செய்து இருக்கிறார்கள்.மற்றும் மிகச் சிலர் 
முறையாக செய்து இறையோனின் சந்தோஷத்திற்கு ஆளாகி 
இருக்கிறார்கள்.எனவே மழை நீரை சேமிக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாDecember 3, 2013 at 6:53 PM

    ஏகனே, எங்கள் ரப்பே, உனக்கு நன்றி சொல்ல ஏற்றமான வார்த்தை

    கிடைக்காமல் திண்டாடுகிறேனே.உன் புகழ் பாட என்னால்

    முடியவில்லையே. கண்ணீர் தான் வருகிறது. நெஞ்சம் விம்புகிறது.

    நீர் இன்றி உலகில்லை என்பார்கள் அனுபவப்பட்ட மூத்த குடிமக்கள்கள்.

    கீழக்கரையில் கிணற்றில் நீரின்ரி கடும் சோதனையை சந்திக்க

    தொடங்கிய கடந்த மாதக் காலக் கட்டத்தில் ஊரார் கூடி பல

    சந்தர்ப்பக்களில் கண்ணீர் விட்டு உன்னிடம் பொறுப்பு சாட்டி தொழுது

    மன்றாடினோமே, அதற்கு கருணை காட்டி விட்டாயே. எங்கள் கண்ணீரை

    பன்னீர் துளிகள மாற்றி விட்டாயே.,அருட் கொடையாளனே.இந் நிலை

    நீடிக்க துணை புரிவாயாக எங்களின் பாதுகாவலனே.

    நம்முடைய ரட்ஷகன் கடந்த சில தினங்களாக கீழக்கரையில் அருள்

    மழையை பொழிந்து கொண்டு இருக்கிறான். அவன் கூறிய திருமறை

    வசனங்களை மெய்பித்து விட்டான்.

    ஆனால் நாமே..... மழை நீர் சேமிப்பை மறந்து விட்டோம். பலர் இது

    விஷயத்தில் அறவே விழிப்புணர்வு பெறவில்லை.சிலர் இதன் அருமை

    புரியாமல் ஏனோ தானோ என செய்து இருக்கிறார்கள்.மற்றும் மிகச் சிலர்

    முறையாக செய்து இறையோனின் சந்தோஷத்திற்கு ஆளாகி

    இருக்கிறார்கள்.

    எங்கள் அனைவரையும் உனக்கு உவப்பானவர்களாக ஆக நேரான

    வழியை காட்டுவாயாக.

    ஆமீன்ஆமீன். யா ரப்பில் ஆலமீன்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.