Sunday, December 1, 2013

கீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி!



சிவகங்கை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நடைபெற்றது.

அதில் கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி யை சேர்ந்த மாணவர் முகம்மது ஜீபைர் கான்(54 - 57) எடை பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று முதலிடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

அசீம் ரஹமான் சீனியர் (52 - 54) எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுகையில் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்  ஆகியோரை பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராஹிம் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ்  மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர் ஜீபைரின் தந்தை எஸ்.எஸ். மீரான் கூறியதாவது,

என் மகன் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இவரது முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.


உங்கள் வாழ்த்துக்களை மீரானுக்கு கூறலாம்
தொடர்பு எண்: 050 5092601




1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாDecember 1, 2013 at 9:31 PM

    வாகை சூடிய மாணவச் செல்வங்கள் மேன்மேலும் வாகை சூட துவாயுடன் கூடிய இதயம் கனிந்த நல் வாழ்த்துகள் கூறுவதேடு ஊக்குவித்த ஆசிரிய பெரு மக்களுக்கும்,பள்ளி நிர்வாகத்திற்கும், அன்பு பெற்றோர்களுக்கும் கீழக்கரை வாழ் மக்களின் பாராட்டுகள் உரித்தாகுக.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.