நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு
முறையும் கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறும் போது வழக்கமாக
செய்தியாளர்களுக்கு கூட்டம் தொடர்பான அஜெண்டா நகராட்சி நிர்வாகம் மூலம் அனுப்ப்பட்டு
செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று செய்தி சேகரிப்பார்கள்.
ஆனால் இம்முறை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும்
பத்திரிக்கைகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதி அளிக்க மறுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டம்
தொடர்பான அஜென்டா மற்றும் அழைப்பு விபரம் அனுப்படவில்லை.இதனால் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள
முடியாத நிலை ஏற்பட்டு கூட்டம் தொடர்பான
நிகழ்வுகளை கீழக்கரை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் ஆகி விட்ட்து.
இது குறித்து
நகராட்சி தலைவரிடம் ராவியத்துல் காதரியாவிடம் நான் கேட்ட போது ஒரு தலை பட்சமாக
செய்தி வெளியிடுகிறார்கள் அதனால் அனுப்பவில்லை அடுத்த கூட்டத்திற்கு வேண்டுமானால் அனுப்பலாம்
என்கிறார்.
இது முற்றிலும்
தவறான அணுகுமுறை.செய்தியாளர்கள் தவறுகளை சுட்டிகாட்ட்த்தான் செய்வார்கள்..தலைமை
பொறுப்பில் உள்ளவர் சகிப்பு தன்மையுடன் தவறுகள் இருப்பின் சீர் செய்து மக்கள் பணியாற்ற வேண்டும் இது குறித்து எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்
இது
குறித்து கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம்
கூறுகையில்,
இது தொடர்பாக கூட்டம் நடைபெறும் போது பத்திரிக்கையாளர்களை
அழைக்காததற்கு கண்டித்து கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ்,சாஹீல் ஹமீது உள்ளிட்ட
கவுன்சிலர்கள் குரல் எழுப்பினோம்.
செய்தியாளர்களை
புறக்கணித்தால் கூட்டத்தில் என்னென்ன திட்டங்கள் வைக்கப்பட்டன.எவ்வளவு தொகைக்கான ,தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன என்பதையெல்லாம் மக்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்.
இது நகராட்சி தலைவரின் ஜனநாயக விரோத போக்கை
காட்டுகிறது.தமிழகத்தில் எங்கும் இதுபோல் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை..
இதற்கு முன்
பேரூராட்சியாக,நகராட்சியாக இருந்த போது எத்தனையோ பெரியவர்கள் தலைவர்களாக
இருந்துள்ளார்கள் அவர்களின் நிர்வாகங்களில் குறைகள் நடைபெறும் போது
பத்திரிக்கைகள் குறை கூறி எழுதியுள்ளார்கள் ஆனால் யாரும் இது போன்று செய்ததில்லை.பதவியில்
இருப்பவர்களுக்கு பணிவும்,சகிப்புதன்மையும் அவசியம்.
பகிரங்கமாக நடைபெறும் கூட்ட நிகழ்வுகளை மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும்
நோக்கத்தில் நடைபெற்றுள்ள இச்செயலால் கீழக்கரை நகர மக்களுக்கு நகராட்சி தலைவர் மீது
நம்பிக்கையின்மையும்,சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
ஜனநாயக நெறிமுறையின் கழுத்தை
நெறிக்கும் செயலாகும்.இச்செயலை செய்த நகராட்சி தலைவர் மற்றும் துணை போன கமிஷனர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். என்றார்,