கீழக்கரை மேலத்தெரு
பகுதியை சேர்ந்த மைதீன் இவர் மனைவி மர்ஜான் மெஹர்நிஷா (27) இவரது வீட்டில் இருந்து
2 பவுன் நகை ரூ ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் மர்ம நபர் யாரோ வீடு புகுந்து திருடி சென்று
விட்டதாக கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் இதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்
கனகராஜ் ஏட்டு முனியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Friday, August 23, 2013
Wednesday, August 21, 2013
கீழக்கரை சின்னக்கடைதெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!
கீழக்கரை சின்னக்கடைதெருவில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர்: செய்யது முஹம்மது
உப தலைவர்கள் எம்.எஸ் ஹாஜா,ஜபருல்லாக்கான்,
செயலாளர் ஹாஜா முஹைதீன், துணை செயலாளர் முஜீப் ரஹமான்,
பொருளாளர் ஹபீப் முஹம்மது தம்பி ,துணை பொருளாளர் பெரோஸ்கான்
கமிட்டி உறுப்பினர்கள்
அப்பாஸ்கான்,
ஜமால்,
பாரூக்,
சலீம் கான்,
சகுபர் சாதிக் ,
செய்யது இப்ராஹிம்,
அஹமது அப்துல் காதர்,
ஹாஜா முஹைதீன்,
அஹமது சர்புதீன்,
அப்துல் ரஹ்மான்,
ஆபிஸ்,
ஐயுப்கான்,
சதக்கத்துல்லா,யாசின்,ஹாஜா நிசீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
Tuesday, August 20, 2013
கீழக்கரை "முஸ்லிம் பொது நல சங்க" புதிய நிர்வாகிகள் தேர்வு
கீழக்கரை தெற்குதெரு "முஸ்லிம் பொதுநல சங்க" கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கமிட்டியின் பதவி காலம் 10/08/2013 முதல் 09/08/2015 வரை
தலைவர்- செய்யது நியாஸ்கான்
துணை தலைவர்- அஹமது சாஹிர்
செயலாளர் - செய்யது அஹமது கபீர்
துணை செயலாளர்- அனிப் சுபியான்
பொருளாளர் - ஹசனுல் ஆரிபின்
செயற்குழு உறுப்பினர்கள்
பெயர்
1. முகம்மது சிராஜ்தீன்
2 .துல்பிகார் அலி
3 .அஹமது
4 .மசூத் இப்ராகிம்
5 .பிர்தௌஸ் இப்ராகிம்
6 .அஸ்வத் கரீம்
7 .ராசிக் அலி
8 .முகம்மது ஹனிப்
9 .ஆரிப்
10.நவ்சின்
கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா !பல்வேறு துறையினருக்கு விருது!
கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற, மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா, சிறந்த சேவை மற்றும் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் 'முப்பெரும் விழா' நிகழ்ச்சி, நேற்று (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அ.இ.அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர். முனியசாமி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கண்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாகீம் லைமை ஏற்றிருந்தார்
கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிறுவனர்..ஹமீது அப்துல் காதர் அறிமுக உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வரஅலாவுதீன், மக்கள் தொண்டு நிறுவன தலைவர் உமர்,முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி,கீழக்கரை நகர் அ.இ.அ.தி.மு.க செயலாளருமான . இராஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர். இந்த விழா நிகழ்ச்சியில் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் பொதுநல அமைப்பினர்களுக்கு சேவை விருதுகளும், சாதனை விருதுகளும், சாதனையாளர் விருதும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியில் நன்றியுரையை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணை செயலாளர். . செல்வ நாராயணன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணைத் தலைவர். பாரதி மற்றும் உறுப்பினர் .முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் தொகுத்து வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் .ஹாஜா அனீஸ் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் அங்கத்தினர்கள் விஜயன், கெஜி உள்ளிட்ட நிர்வாகிகள், கீழக்கரை நகரிலுள்ள அனைத்து பள்ளிகளின் தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஸ்லாமியா பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி விருது வழங்கப்பட்டது.பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் விருதை பெர்றுக்கொண்டார்
கீழக்கரையில் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டு, இன்றளவும் தொய்வின்றி சேவையாற்றி வருகிறது. இதனை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் இருந்து, கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் செயலாளர் ஜனாப். முகைதீன் தம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
'கீழை இளையவன்' என்ற சாலிஹ் ஹுசைனுக்கு 'சிறந்த சாதனையாளர்' விருதை - அமைச்சர் சுந்தரராஜன் வழங்கினார்
கீழக்கரை நகரின் சுத்தம், சுகாதாரம் மேம்படவும், கீழக்கரையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, அனைத்து சமூக நல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல் படுவதற்காகவும், கீழக்கரை இளைய சமுதாயத்தினர் மத்தியில் கல்வி, அரசுத் தேர்வுகள், வேலை வாய்ப்பு, விழிப்புணர்வு போன்ற பதிவுகளை இணைய தளங்கள் வழியாகவும், சமூக வலை தளங்கள் வாயிலாகவும் உலகெங்கும் வாழும் கீழக்கரை மக்களுக்கு, தொடர்ந்து கொண்டு செல்லும் சேவையை பாராட்டி, கீழை இளையவன் வலை தள நிறுவனர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைனுக்கு சிறந்த சாதனையாளர் விருதினை, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக அமைச்சர் சுந்தரராஜ் வழங்கி கவுரவித்தார்.
Monday, August 19, 2013
பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாடு நிகழ்ச்சி
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லு�ரியில் இந்திய தொ ழில் நுட்பக்கழகம் சார்பில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் மாணவர்களுக்காக �அறிவு ஒரு மனி தனின் தனித்தன்மையை மேம்படுத்த உதவும் திறவு கோல்� என்ற தலைப்பில் திறன் மேம்பாடு நிகழ்ச்சி நடந்தது.
கல்லு�ரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, துறைத்தலைவர்கள் விஜயகுமார், முகமது ரபீக் முன்னிலை வகித்தனர்.
மாணவி சங்கமித்ரா வரவேற்றார். கொச்சி கப் பல் தொழிற்சாலை பொது மேலாளர்(ஓய்வு) விஜயராகவன் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளித்தார். மாணவர் சேக் அலாவுதீன் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பா ளர் நஜி முதீன், ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் செய்திருந்தனர்.
கீழக்கரையில் ஒரே நாளில் நடைபெற்ற ஏராளமான திருமண நிகழ்ச்சிகள்!
கீழக்கரையில் ஒரே நாளில் நடைபெற்ற ஏராளமான திருமண நிகழ்ச்சிகள்!உறவினர்கள்,நணபர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கீழக்கரை நகரில் நேற்றைய(18/08/13) தினம் பலவேறு இடங்களில் 25க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் உறவினர்கள் நணபர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வெளியூர் ,மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏரளமானோர் ஊர் திரும்பியுள்ளதால் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது
மண மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
டாக்டர். அப்துல்லா (பெரியார்தாசன்) காலமானார்! கீழக்கரையை சேர்ந்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல்!
சென்னையில் டாக்டர் அப்துல்லா (பெரியார்தாசன்) காலமானார். 63 வயதான இவர் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இவர் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற மீலாத் வீழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த படங்கள்
அஸ்வான் அமைப்பின் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ராஜாக்கான் வெளியிட்ட அறிவிப்பில்.....
நேற்று இரவு அப்துல்லா (பெரியார்தாசன்) உடல்நிலை மோசமாக இருப்பதாக முகப்புத்தகத்தில் பார்த்தேன்...இன்று காலை கண் விழித்த போது அவர் இறையடி சேர்ந்தார் எனக் கேட்டு மனது சொல்ல இயலாத சோகத்தில் தவிக்கிறது.. 'நீங்களெல்லாம் இஸ்லாத்திற்கு வந்தது �By Chance நான் வந்ததோ By choice' என்று அடிக்கடி சொல்வார்...அப்படி இஸ்லாத்திற்கு வந்த அவர்,அழைப்பு பணியில் குறுகிய காலங்களில் மகத்தான சேவைகளை செய்தவர்...சமீபத்தில் துபாய் வந்த போது கூட இது சம்பந்தமாக அவர் செய்ய இருந்த சில குறும்படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பயணம் கிளம்பும் முன்பாக ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் அவரை சந்தித்து விடை பெற்ற போது நான் நினைக்க வில்லை..இது கடைசி சந்திப்பென்று... எல்லாவற்றிற்கும். அல்லாஹ், போதுமானவன்...எல்லாம் வல்லோன் அவர் தம் பாவங்களை மன்னித்து சுவர்க்க புரியில் அவருக்கு ஓர் உயரிய பதவியை அளிக்க துவா செய்கிறேன்...ஆமீன்... நண்பர்களையும் அவருக்காக துவா செய்ய வேண்டுகிறேன்
கீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் விக்ரம் மருத்துவமனை இணைந்து மகப்பேரின்மை தொடர்பான இலவச மருத்துவ முகாம்
கீழக்கரை சின்னக்கடைத்தெரு மக்கள் ஊழியர் சங்கம் மற்றும் மதுரை விகரம் மருத்துவமனை இணைந்து நடத்திய மகப்பேரின்மை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ,செயலாளர் பொருளாளர் உதவி தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் டாக்டர்கள் சுனிதா,நித்யா,வீரா ராஜு உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவால் மகப்பேரின்மை தொடர்பான இலவச பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் பல்வேறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Sunday, August 18, 2013
(1989 -1993) முன்னாள் சதக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு!
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரியில், பழைய மாணவர் சந்திப்பு விழா, கல்லூரி இயக்குனர் ஹூசைன் தலைமையில், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் நடந்தது.
முதல்வர் முகம்மது ஜகாபர் வரவேற்றார். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன் படித்த 70 பேர், குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மும்பை கடல்சார் துறை உதவி இயக்குநர் அப்துல்கலாம் ஆசாத், வெரிசைன் அமெரிக்கா பொறியாளர் பி.வேல் முருகன், தமிழக கல்வியியல் துறை மாவட்ட பொறியாளர் தயாசேகர், பேராசிரியர் செந்தில்வேலன், துபாய் ஹைடெக் குரூப் வளர்ச்சி மேலாளர் சுரேஷ், ஹாட்சென் அக்ரோ மேலாளர் அமர்நாத், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அடையாறு கிளை முதன்மை மேலாளர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ்பாபு, பி.ஆர்.ஓ., நஜ்முதீன், துறை தலைவர்கள் செய்தனர்.
நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்! அரசு உதவ கோரிக்கை!
குளிர்ச்சியாக தண்ணீர் அருந்த பிரிட்ஜ் போன்ற நவீன சாதனங்கள் வந்தாலும் மண் பாணை தண்ணீருக்கு ஈடாகாது அது போல்சமையலுக்கு குக்கர், நான் ஸ்டிக் என விதவிதமான பாத்திரங்கள் வந்தாலும் மண்பானைக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்பானையில் தயார் செய்யும் உணவு பதார்த்தங்களின் ருசியே தனிதான்.
ராமநாதபுரதை அடுத்த மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்வதில் பிரசித்தி பெற்ற ஊராகும். தமிழகம் முழுவதும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
மானாமதுரையில் கிடைக்கும் மண் உறுதி மிக்கவை என்பதால் இங்கு எப்போதும் மண்பாண்ட உற்பத்தி சீசனுக்கு ஏற்ப அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விதவிதமான மண் கூஜாக்கள், ஜாடிகள், பானைகள் தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதவிர மண்ணில் செய்யப்பட்ட கடம் இசை கருவியை இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் இங்கு வந்து பயன்படுத்தி வாங்கி செல்கின்றனர்.
விதவிதமான மண் விளக்குள், மண்பாண்ட பொருட்கள் ஆகியவை அந்தமான், லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற தீவு பிரதேசங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோடையை சமாளிக்க குளிர்ந்த நீரை மண்சுவையுடன் குடிக்க ரூ. 20 முதல் ரூ.200 வரை கூஜா பானைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில வருடமாக போதிய களி மண் கிடைக்காமல் மண் பாண்ட தொழிலாளிகள் தவித்து வருகின்றனர். அதிக விலைக்கொடுத்தாலும் போதிய அளவு களிமண் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுள்ளைக்கு தேவையான விறகு விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மண் பாண்ட தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். மேலும் களி மண் எந்த குளத்தில் இருந்து எடுககப்படுகிறதோ அந்த குளத்தில் களிமண் எடுக்கலாம் என பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கி புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் கலெக்டர் உத்தரவின் பேரில் களிமண் எடுக்க அனுமதி தருவார்கள். லாரிகளில் வெளியூர்களுக்கு அனுப்பும் போது பல உடைந்து விடும் இப்படி பல் சோதனைகளை கடந்து தான் விற்பனை செய்து மிக குறைந்த லாபம் ஈட்ட்ட முடிகிறது
இதனால் பலர் மண் பாண்ட தொழிலை விட்டு விட்டு கட்டிடதொழில், செங் கல் சூளை வேலை, கூலிவேலைக்கு சென்று வருகின்ற னர். மண்பாண்ட தொழிலி லேயே ஊறியவர்கள் தொடர்ந்து மண் பாண்ட கலை அழியாமல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,
உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மண் பாணடங்கள் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஒரு காலத்தில் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மண பாணடங்கள் விறபனை அமோகமாக இருக்கும் காலப்போக்கில் இத்தொழில் நலிவடைந்து விட்டது.அரசாங்கம் இத்தொழில்லை ஊக்கப்படுத்த மண் பாணடங்கள் விற்பனை நிலையங்களை ஏற்பாடுத்த வேண்டும் இதன் மூலம் மண் பன்டபொருளகளுக்கு நல்ல விலை கிடைக்கைகும்.மக்களும் ஆதரவு தருவர்கள்.எனவே இத்தொழில் நலிவடையாமல் காப்பற்ற முடியும் என்றார்.
Saturday, August 17, 2013
குடிநீர் தட்டுப்பாடு! கீழக்கரை அருகே ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொது மக்கள்!
ஏர்வாடியில் தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததை கண்டித்து வெட்டமனை பகுதியில் பெண்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி தலைவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர்வாடியில் வெட்டமனை பகுதியில் சுமார் சுமார் 600க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக காவிரி கூட்டுக்குடிநீர் வரவில்லை. பல வருடங்களாக இந்த கிராமத்திற்கு சாலைவசதி ஏற்படுத்தவில்லை. இந்த பகுதியில் மூன்று தெரு விளக்குகள் மட்டுமே எரிவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் கடலாடி ஒன்றிய தலைவரிடமும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மனுச் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்த ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை பெண்கள் காலிங்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து கவுன்சிலர் சவுந்திரபாண்டியன் கூறுகையில், ‘வெட்டமனை பகுதியில் முழுமையாக தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். வெட்டமனைக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
குழாய்களில் குடிநீர் வராததால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சின்ன ஏர்வாடி பகுதியில் தண்ணீர் எடுத்து பெண்கள் சுமந்து வரும் நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஏர்வாடி ஊராட்சித் தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் போலீசார் சமாதானம் பேசியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
மாணவ,மாணவியரின் பள்ளி வருகை!கீழக்கரை பள்ளியில் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை அறிமுகம்!
செல்போன் உபயோகிக்காமல் இருப்போர் மிக மிக குறைவு என்ற இன்றைய கால கட்டத்தில் மாணவர்,மாணவிகளின் பள்ளி வருகை குறித்த விபரங்களை பெற்றோர்களும் உறுதி செய்து தெரிந்து கொள்ளும் வகையில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி சார்பாக பெற்றோர்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தபட உள்ளததாக பள்ளியின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் பள்ளிக்கு வராத மாணவ,மாணவியர்களின் விபரம் அன்றாடம் காலையிலேயே சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்சில் தெரிவிக்கப்பட்டு விடும்
இது குறித்து பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது,
எமது மாணவ,மாணவிகளின் பள்ளி வருகை குறித்த விபரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளாது.அது மட்டுமின்றி பள்ளி நிகழ்ச்சிகள்,மாணவ மாணவியரின் மதிபெண்கள் மற்றும் பள்ளி தொடர்பான தகவல்களை அன்றாடம் எஸ் எம் எஸில் தெரிவிக்க உள்ளோம்.இதற்கான ஆயத்த பணிக்கள் நிறைவடைந்து விட்டது விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் மாணவ மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யபடுவதோடு பெற்றோர்கள் உதவியோஅவர்களின் கல்வி திறனும் அதிகரிக்க வழி வகுக்கும்.
மேலும் பள்ளி நுழைவு வாயில் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் மூலம் மாணவ,மாணவியரின் பாதுகாப்பு அதிகரிக்கும்.என்றார்.
Friday, August 16, 2013
கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!
கீழக்கரையில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்குதெரு கிளை சார்பில் தெற்கு தெரு திடலில் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் நசுருதீன் தலைமையில் நிர்வாகிகள் ஜஹ்பர் சாதிக்,உமர் பாரூக் ,ஹாஜா முஹைதீன்,சபீக்,அமீர் அப்பாஸ் ,சுல்தான் முன்னிலையில் மாநில பேச்சாளர் அர்சாத் அலி தொழுகை நடத்தினார்.
தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்/
மஹ்தூமியா பள்ளி முன்னாள் மாணவர் தலைமை தாங்கி சிறப்புரை!பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி!
Photos : Sankar Studio
கீழக்கரை மஹ்தூமியா பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர் கட்டிட வடிவமைப்பாளர் கீழை ராஸா என்றழைக்கப்படும் ராஜாக்கான் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகிகள் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழை ராஸா பேசுகையில்,
வருட வருடம் இங்கு எத்தனையோ முக்கிய புள்ளிகள் கொடியேற்றியிருக்கிறார்கள்..அதற்கும் நான் கொடியேற்றும் இந்த தருணத்திற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு, இது நீங்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு தருணம்… ஆம் நான் உங்களில் ஒருவன் இதே பள்ளியில் நீங்கள் நிற்கும் இதே திடலில் நானும் நின்றிருக்கிறேன்…இந்தப்பள்ளி ஆரம்பள்ளி முதல், நடுநிலை ஆனவரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பள்ளி மாணவத்தலைவனாக எத்தனையோ அசம்பிளிகளை பார்த்திருக்கிறேன்..என்றாலும் இன்று எனக்கு இங்கு நிற்க சற்று தயக்கமாகவும், நடுக்கமாகவும் உள்ளது…காரணம் இங்கிருக்கும் பலர் என்னை விதையிலிருந்து பார்த்தவர்கள்…உங்களுக்கு நான் வளர்ந்தவனாக தெரியலாம் என்றாலும், இன்றும் சரி, இனி நான் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் சரி, இங்கிருக்கும் ஆசிரிய பெருமக்களை நான் தலைநிமிர்ந்து பார்க்கும் விருட்சங்களாகவே தெரிகிறார்கள், தெரிவார்கள்..இன்று உங்கள் முன் நான் நிற்க, முழுமையான காரணம் ஆசிரிய பெருமக்களே என்றால் அது மிகையில்லை.
இந்ததருணத்தில் என்னுள் பொறியியல் படிப்பிற்கு விதையிடப்பட்ட அந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்போது நான் ஐந்தாவது படித்து கொண்டிருந்த வேளை, ஒரு முறை சத்தார் மாமா என்னை அழைத்து, ஜும்மா பள்ளி வாசலின் முன் ஒரு இஞ்சினியர் நிற்பார் அவரை அழைத்து வா.. என்றார்கள்… நான் அங்கு சென்ற போது அங்கே வெள்ளை பேண்ட் சட்டை அணிந்து ஒரு இஞ்சினியர் நின்றிருந்தார்..அவர் கையில் சில சர்வே இன்ஸ்ட்ருமெண்ட் இருந்தது. என்னிடம் ஒரு பெரிய ஸ்கேல் ஒன்றை தந்தார்.எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி, எதோ இஞ்சினியர் போஸ்ட்டையே கையில் தந்தது போன்ற ஒரு உணர்வு…அப்போது இந்த பள்ளிக்கூடம் கட்டப்படவில்லை.அதன் பின் வேலை துவங்கியது…அன்று என்னுள் போடப்பட்ட விதையால்..இன்று ஒரு கட்டிடக்கலை வல்லுநராக உருவெடுத்து இன்று துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
மாணவ மணிகளே இது தான் சரியான தருணம், நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று இன்றே விதை போடுங்கள்…அதை நோக்கி செயல் படுங்கள்..
இதை தான் வள்ளுவர் திருக்குறலில் தெளிவாகக் கூறுகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவ எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
மனசுலே ஒரு விசயத்தை நினைச்சி அதுலே உறுதியா இருந்தா, அந்த நம்பிக்கையையே அந்த விசயத்தில் வெற்றியை உண்டாக்கும்.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு மாவீரன் நெப்போலியன் வாழ்க்கை, உலக வரலாற்றில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியானவர் அவர்.
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், நான் வெற்றியடைய என் நம்பிக்கை ஒன்றே போதும் சொன்ன இவரு சிறுவனாக இருந்த போது, கடற்கரையில் எல்லா சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்க இவரோ கற்பாறையில் மோதவரும் அலைகளை போர்வீரர்களாகவும், அவர்கள் மோதவந்து தன்னிடம் தோற்று திரும்புவதாகவும் கற்பனை செய்தபடி அலைகளை வெறித்து பார்த்தவண்ணம் இருப்பாராம்.அவரின் அந்த எண்ணமும் அதை நோக்கிய செயல் பாடுகளும், அவரை ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாக்கியது…
எனதருமை மாணவ நண்பர்களே, எதோ பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்பதில்லை வாழக்கை,ஒரு இலட்சியத்துடன் வாழ வேண்டும்… பல சாதனைகளை படைக்க வேண்டும்…அதற்கான குறிக்கோள் அடைய இன்றே உறுதி பூர்வோம்…
பேச்சின் இடையே, சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்தார்.
பள்ளிஆசிரிய பெருமக்கள், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமை தாங்கி நடத்தி உரையாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்
இது குறித்து ஆசிரியை ஆனந்தி பிரேமா மாணவர்களிடையே பேசும் போது,
”ராஜாக்கானை இப்போதுள்ள உங்களுக்கு தெரிந்திருக்காது, அப்போது அவன் எங்களுக்கு செல்லப்பிள்ளை, அந்தப்பிள்ளை இங்கு கொடியேற்றுவது என் பிள்ளை இந்த நிலையை அடைந்தது போல் எண்ணி மகிழ்கிறேன்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்...என்ற குரலுக்கேற்ப நாங்கள் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளோம்” என்றார்.
கீழக்கரையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்!
தாசிம் பீவி மகளிர் கல்லூரி
கீழக்கரை இஸ்லாமியா பள்ளி
சதக் கல்லூரி
கண்ணாடி வாப்பா பள்ளி
நாடார் பள்ளி
மக்தூமியா பள்ளி
கீழக்கரை, ஆக. 17:
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் மற்றும் காங்கிரஸ் சார்பில் 67வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ரவி, ஜோசப்சார்த்தோ, தனலெட்சுமி மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி முன்னிலையில் தாளாளர் முகைதீன் இபுராகிம் கொடி ஏற்றினார்.
மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜாமுகைதீன், மீனவர் கூட்டுறவுசங்கத் தலைவர் லுக்மான் ஹக்கீம் முன்னிலையில் முன்னாள் மாணவர் முகமது ராஜாக்கான் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். ஆசிரியை மேரிஜெனட் நன்றி கூறினார்.
ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்அலி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலையில் யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல்காதர் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் கல்விக்குழு தலைவர் சேகுமுகைதீன், துணைத்தலைவர் முகைதீன் இபுராகிம் தம்பிவாப்பா மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் ராசிக்தீன், அகமதுமிர்ஷா, பசீர் அகமது முன்னிலையில் நகராட்சி கமிஷனர் ஐயூப்கான் கொடி ஏற்றினார். முதல்வர் தேவபுவனேஷ்வர் வரவேற்றார். சுதந்திரதேவி நன்றி கூறினார்.
கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் சம்சுதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். செய்யது இபுராகிம், மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் ஜகுபர்சாதிக், தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் சேகு அபூபக்கர் தலைமை வகித்து கொடியை ஏற்றினார்.
கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு முஸ்லீம்
ஜமாஅத் தலைவர் தலைமையில் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பள்ளி தாளாளர் டாக்டர் ஜகுபர்சாதிக் கொடியை ஏற்றினார்.
முகமது சதக் பொறியல் கல்லூரியில் முதல்வர் முகமது ஜகாபர் கொடி ஏற்றினார். மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் வரவேற்றார். துறைத்தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் துணை முதல்வர் நவநீதராஜன் கொடி ஏற்றினார்.
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமையில் இந்தியன் வங்கி மேலாளர் லிடியா தேவகிருபை முன்னிலையில் பாங்க் ஆப் இந்தியா வாணிகிளை மேலாளர் சுந்தராஜன் தேசிய கொடியை ஏற்றினார்.
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையா தாவூது தலைமையில், சீதக்காதி அறக்கட்டளை பொது துணைமேலாளர் சேக்தாவூது, மாணவர்கள் பேரவை தலைவர் சுமையா ரபி முன்னிலையில் டாக்டர் கியாதுதீன் கொடி ஏற்றினார்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நசியா பேகம், கவுன்சிலர் மணிமேகலை முன்னிலையில் தலைமை ஆசிரியர் வன்னிமுத்து கொடி ஏற்றினார்.
கீழக்கரை போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐகள் ரத்தினவேலு, ஆறுமுகத்தரசன், முனீஸ்வரன், கனகராஜ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கணேசன் கொடி ஏற்றினார்.
நகர் காங்கிரஸ் சார்பில் முஸ்லீம் பஜாரில் நகர் தலைவர் ஹமீதுகான் தலைமையில் நிர்வாகிகள் சந்திரன், வேலாயுதம் முன்னிலையில் ஜின்னாசாகிபு கொடி ஏற்றினார்.
கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் காரில் 7 கிலோ கஞ்சா! 4பேர் கைது!கார் பறிமுதல்!
கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் காரில் 7 கிலோ கஞ்சா! 4பேர் கைது!கார் பறிமுதல்!
கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் திருப்புல்லானி அருகே கீழக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியே வந்த காரை சோதனை சேய்த போது 7 கிலோ கஞ்சா கடத்தி வந்தது
கண்டுபிடிக்கபட்டது .
இதனையடுத்து காரில் கஞ்சா கடத்தி வந்ததாக தங்கச்சி மடத்தை சேர்ந்த ராமசந்திரன்(30)தியாகராஜன்(47),ராமேஸ்வரம் கர்ணன்(55),கபில்ராஜன்(25) ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பாஸ்டர் காரையும் பறிமுதல் செய்தனர்.கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேஷன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கீழக்கரை அருகே எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ சார்பில் திருப்புல்லாணி ஊராட்சியின் அலட்சிய போக்கை கணடித்து திருப்புல்லாணி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர் தலைவர் ரபீக் தலைமை வகித்தார்.தொகுதி தலைவர் அப்பாஸ் அலி,மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்,,துணை தலைவர்கள் சோமு,செயலாளர் சேகு இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.குத்புதீன் வரவேற்றார்.
புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழஙக கோரியும் ,விளக்கு இல்லாத இடங்களுக்கு விளக்குகள் அமைக்க கோரியும் ,கீழக்கரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் திருப்புல்லாணி ஆதி ஜெநகநாத பெருமாள கோவில் பகுதியை சுற்றி செல்லவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Thursday, August 15, 2013
வேலைவாய்ப்பு தகவல் பரப்பு கூட்டம் !
நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தை பாதிக்காத பனை ஒலையால் செய்யப்பட்ட கூடை ,பை போன்ற பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட தொழில் மையம் சார்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஊக்குதவி திட்டம், சலுகை கள், மானியங்கள் குறித்த தகவல் பரப்பு கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது.
முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு கல் லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஞானசேகரன், காரைக்குடி சிக்ரிவேதியியல் ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியல் அறிஞர் ராஜசேகர் மற்றும் அவரது குழுவினர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக கள அதிகாரி நாராயணன், மாவட்ட மகளிர் திட்டம் இணை இயக்குநர் பூங்குழலி. நம்பிக்கை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் யோசுவா வரவேற்றார். முதல்வர் அலாவுதீன் பேசுகையில், ‘குறு, சிறு, தொழில் செய்ய விரும்புபவர்கள் மற்றும் பெரிய தொழில் செய்ய விரும்புவோருக்கு கடன் உதவி பெறுவது குறித்த வழிமுறைகள் குறித்து பேசினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், செல்வநாயகன், ஹசன், ஆசாத், டாக்டர் ராசிக்தீன், மூர் ஹசனுதீன் மற்றும் சித்தார்கோட்டை, பனைக்குளம், கும்பரம். உத்தரகோசமங்கை. ஆலங்குளம். ஏர்வாடி மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட தொழில் மைய அலுவலர் ரபீக் நன்றி கூறினார்.
கீழக்கரை- ராமநாதபுரம் தனியார் பஸ்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா! அனுமதியின்றி வைத்திருந்தால் நடவடிக்கை!
கீழக்கரை- ராமநாதபுரம் தனியார் பஸ்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா! அனுமதியின்றி வைத்திருந்தால் நடவடிக்கை!
கீழக்கரை - ராமநாதபுரம் தனியார் பஸ் ஒன்றில் கேமரா பொருத்தபட்டிருப்பதை கண்டனர்.இது குறித்து கீழக்கரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியும்,கண்டனமும் தெரிவித்தனர்
இது குறித்து சதக் இப்ராஹிம் என்பவர் கூறியதாவது,
ஏராளமான பெண்கள் இந்த பேருந்தில் தினமும் சென்று வருகிறார்கள்.கேமரா பொருத்தப்பட்டுளது குறித்து எவ்வித அறிவிப்பும் பஸ்சில் இல்லை.மேலும் இது குறித்து போக்குவரத்து துறையிடம் அனுமதி வாங்கியுள்ளார்களா என்று தெரியவில்லை.
இந்த கேமரா பதிவுகளை யாரிடம் ஒப்படைக்கிறார்கள்
என்று தெரியவில்லை! எனவே இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மேலும் பஸ்சின் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்..
இது குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போது,
டில்லி,பாண்டிச்சேரி போன்ற இடங்களில் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.கேமராக்கள் மூலம் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்பவர்கள், பிக்பாக்கெட் நபர்களை அடையாளம் காண முடியும்.தமிழகத்தில் வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது.பயணிகளின் பாதுகாப்புக்காக இது செயல்படுத்தப்படுள்ளது.
கீழக்கரை - ராமநாதபுரம் தனியார் .பஸ்சில் கேமரா பொருத்துவதற்கு தனியார் முறையான அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும் அவ்வாறு பஸ்சில் பொருத்துவதற்கு அனுமதி பெற்வில்லையானால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். இது குறித்து புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்றார்.
Subscribe to:
Posts (Atom)




































