Friday, September 16, 2011

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ப‌து வ‌த‌ந்தி ! த‌முமுக‌ முஜீப்


த‌முமுக‌ முஜீப்(தொப்பி அணிந்திருப்ப‌வ‌ர்) விருப்ப‌ ம‌னு தாக்க‌ல் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம்


கீழக்கரை நகராட்சி தேர்தல் குறித்து ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முஜிபிடம் பேசிய போது...

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌தே?

அப்ப‌டி சொல்வெதெல்லாம் வெறும் வ‌த‌ந்தி .நாங்க‌ளும் மேலிட‌த்தை தொட‌ர்பு கொண்டு விசாரித்தோம் அப்ப‌டி ஒரு உத்த‌ர‌வு வ‌ர‌வில்லை என்ப‌தே உண்மை.மேலும் சட்டசபை கூட்டத்தொடர் முடிவில் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது சென்ற தேர்தலில் எப்படி இருந்ததோ அதுவே தற்போது தொடரும் என்று கூறியுள்ளார்.எனவே மகளிருக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்றார்.

த‌முமுக‌வில் விருப்ப‌ம‌னு தாக்க‌ல் செய்துள்ளது குறித்து ?

தமுமுகவில் கடந்த 10 வருடமாக செயல்பட்டு வருகிறேன் .கீழ‌க்க‌ரை ந‌க‌ர் த‌லைவ‌ர்,துபாயில்துணை த‌லைவ‌ர்,என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.ராமநாதபுரம் மாவ‌ட்ட‌ பொருளாள‌ராக‌ உள்ளேன்.

ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வேட்பாள‌ராக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் சார்பாக‌ ந‌ல்ல‌ முக‌ம்ம‌து கள‌ஞ்சிய‌த்தை ப‌ரிந்துரைத்துள்ளோம். அவ‌ர் போட்டியிட‌வில்லையேன்றால் நகர் நிர்வாகிகளில் யாராவது ஒருவர் போட்டியிட முயற்சி மேற்கொள்ளலாம் என்று முடிவின் அடிப்படையில் நீங்கள்(முஜீப்) போட்டியிட‌ வேண்டும் என‌ ந‌க‌ர் நிர்வாகிக‌ள் கேட்டு கொண்டதற்கிண‌ங்க‌ நான் விருப்ப‌ம‌னு தாக்க‌ல் செய்துள்ளேன். மேலும் எங்கள் கட்சி(தமுமுக) போட்டியிட்டால் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.மேலும் மேல‌த்தெரு ஹெச்.எஸ் காக்கா சீனா தானா காக்கா, நீயே(முஜீப்) போட்டியிடு என்று சொல்லி என‌க்கு ஆத‌ர‌வு த‌ருவ‌தாக‌ கூறியுள்ளார்கள்.

வேறு தமுமுகவில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் ?யாருக்கு வாய்ப்பு கொடுக்க‌ப்ப‌டும்?

த‌முமுக‌ சார்பில் போட்டியிட எம்.எம்.கே காசிம், இப்திகார் விருப்ப மனு தாக்க‌ல் செய்துள்ளனர்.த‌முமுக‌ சார்பில் தேர்த‌லில் போட்டியிட‌ விரும்புவ‌ர்க‌ளிட‌ம் சில‌ கேள்விக‌ள் கேட்க‌ப‌ட்டுள்ள‌ன‌. அதில் எதுவுமே புதிய‌தாக‌ தேர்த‌லில் போட்டியிட‌ விரும்புவ‌ர்க‌ளுக்கு பொருந்தாது. உதரணமாக "இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு போராட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு எத்தனை முறை சிறை சென்றுள்ளீர்கள்?" "அமைப்பு சார்பில் ர‌த்த‌ம் தான‌ம் செய்துள்ளீர்க‌ளா?" என‌ப‌து போன்ற‌ கேள்விக‌ள் கேட்க‌பட்டுள்ளது .அக்கேள்விகளுக்கு பொருத்தமாக நான் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளேன்.அதிகளவில் ரத்ததானம் செய்து பல்லாண்டு காலமாக கட்சி பணியாற்றி வருகிறேன் எனவே இதில் உள்ள‌ அனைத்து கேள்விக‌ளுமே எங்க‌ளுக்கே(நீண்ட காலமாக தமுமுகவில் பணியாற்றுபவர்கள்) பொருந்தும்.எனவே கீழக்கரை தமுமுக சார்பில் நகராட்சி தலைவராக போட்டியிடக்கூடிய வாய்ப்பு எனக்கே அதிகம் மேலும் என‌க்கு போட்டியிட முடியவில்லை என்ற‌ சூழ்நிலை வ‌ரும்போது ச‌கோத‌ர‌ர் இப்திகாருக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.இப்திகாருக்கு ம‌க்க‌ளிடையே செல்வாக்கு உள்ள‌து.ப‌ல் வேறு ச‌மூக‌ ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருப‌வ‌ர்.

நீங்கள் நகராட்சி தலைவரானால் என்னென்ன நல திட்டங்களை செயல்படுத்துவீர்கள் ?

அல்லாஹ் மிக‌ பெரியவன், இறைவனின் நாட்ட‌மிருந்தால் குப்பை ந‌க‌ரம் என்ற பெயரெடுத்து விட்ட கீழக்கரையை மாற்றி மற்ற நகராட்சிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவேன்.பெயரை சொல்ல விரும்பவில்லை கீழக்கரை சேர்மேன் பகல் 12 மணிக்கு வந்து பைலில் கையெழுத்து போட்டு சென்று விடுகிறார்.ஏழை எளிய மக்கள் நகராட்சி தலைவரை சந்திக்க முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது நான் வெற்றி பெற்று வந்தால் அதிகாலை சுப்ஹ் தொழுது விட்டு நேரடியாக நகராட்சிக்கு வந்து விடுவேன்.காலையில் சுகாதார மேற்பார்வையாளருடன் இணைந்து துப்புரவு தொழிலாளர்கள் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன். மேலும் கழிவு நீர் பம்பிங் நிலையங்கள் மூன்றுதான் உள்ளது அது போதாது 6 பம்பிங் நிலையங்களை அமைப்பேன்.அரசு ம‌ருத்துவ‌மைக்கு பெண் ம‌ருத்துவ‌ர் நிய‌மிக்க‌ ஏற்பாடு செய்வேன்,அதிக‌மான‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மிப்பேன்.தின‌மும் ஊர் முழுவ‌தும் சுத்த‌ம் செய்ய‌ ஏற்பாடு செய்வேன்
மேலும் குப்பையை கொட்டுவதற்கு வெல்பேர் அசோசியேசன் கீழக்கரை நகராட்சிக்கு 12 ஏக்க‌ர் வழங்கியது.கோர்ட் தடையாணை உள்ளது என்ற தவறான தகவலை கூறி அதை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌த‌ற்கு த‌வ‌றிவிட்ட‌து . த‌முமுக‌ ந‌க‌ராட்சியை கைப்ப‌ற்றினால் சுற்றுசுவர் எழுப்பி அங்கேயே குப்பையை கொட்டி உரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம் மேலும் ஆளுங்கட்சியுட‌ன் நாங்கள் கூட்டணியாக இருப்பதால் அதிக‌ நிதியை பெற்று த‌ர‌ முடியும். அதுமட்டுமல்ல தற்போது‌ ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ த‌லையிட்டு கீழ‌க்க‌ரை சுகாதார‌ பிர‌ச்சினையில் தீர்க்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து வ‌ருகிறார்.இது வ‌ரை எந்த‌ எம்.எல்.ஏவும் ஸ்பாட்டுக்கு வ‌ந்த‌தில்லை .

குப்பை பிர‌ச்சினை தாண்டி வேறு ப‌ல‌ பிர‌ச்சினைகளும் உள்ள‌ன‌ குடிநீர் தட்டுப்பாடு,க‌ழிவு நீர் பிரச்சினை ,உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிக‌ரிப்ப‌து இவ‌ற்றுக்கு ஏதாவ‌து உங்க‌ள் க‌ட்சி சார்பில் திட்ட‌ம் உள்ள‌தா?

குடிநீர் பிர‌ச்சினை உள்ள‌து உண்மைதான் காவிரி குடிநீரை முறையாக‌ செய‌ல்ப‌டுத்துவோம்.தண்ணீர் சப்ளைக்காக ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் க‌ட்சி சார்பில் 2 த‌ண்ணீர் டேங்க‌ர் வ‌ழ‌ங்குவோம்.முக‌ம்ம‌து காசிம் அப்பா தர்கா அருகில் அர‌சு இட‌ம் உள்ள‌து அங்கு மிக‌ப்பெரிய‌ த‌ண்ணீர் சேமிப்பு நிலையம் அமைத்து பிர‌ச்சினையை தீர்ப்போம்.ம‌ற்ற‌ பிர‌ச்சினையையும் தீர்ப்போம். என்றார்


ந‌ம‌து வ‌லைத‌ள‌ம் சார்பாக சகோதரர் ச‌ம‌து இச்ச‌ந்திப்பை மேற்கொண்டார்

தொகுப்பு : ஹ‌மீது யாசின்

Wednesday, September 14, 2011

கீழக்கரை மலேரியா மையத்தில் ரத்த பரிசோதனைக்கு மறுப்பு! பொதுமக்கள் ஆவேசம் !

கீழக்கரை மலேரியா மையத்தில் இன்று காலை தெற்கு தெருவை சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் மகன் முகமது முஸ்தகீம்(16) +1 படித்து வருகிறான் மற்றும் சிக்கல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (19),புது மாயாகுளம் சமுத்திரபாண்டியன் மகன் வினோத்குமார்(16), ஆகியோருக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.இவர்கள் அனைவரும் இன்று காலை கீழக்கரை மலேரியா மையத்தில் மையத்தில் ரத்த பரிசோதனை செய்வதற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ரத்த பரிசோதகர் கனேசமூர்த்தி ஒரு நாளைக்கு 60 பேருக்கு மேல் பரிசோதனை செய்ய முடியாது ஏற்கெனவே 68 பேருக்கு சோதனை செய்து விட்டேன் அதனால் இன்று பரிசோதனை செய்ய முடியாது நாளை வாருங்கள் என்றார்.நீண்ட தூரத்தில் இருந்து வருகிறோம் நோயாளிகளுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது சோதனை செய்யுங்கள் எடுத்து கூறியும் கேட்பதாக இல்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து உயர் அதிகாரி உமா மகேஸ்வரியை தொடர்பு கொண்டு புகார் செய்த பிறகு அவர் உத்தரவின் பேரில் தொடர்ந்து ரத்த பரிசோதனை செய்துள்ளார்.

சமக நகர் செயலாளர் பந்தே நவாஸ் கூறியதாவது,
இனிமேலாவது மருத்துவதுறையில் உள்ள இவரை போன்றவர்கள் பணியை சிறப்பாக செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கீழக்கரை அருகே ஏராளமான மயில்கள் இறந்ததாக வதந்தி !



கீழக்கரையை அடுத்த திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் குவியல்,குவியலாக மயில்கள் இறந்து கிடப்பதாக‌ வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புல்லாணி அருகே 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து குவியல்,குவியலாக இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வனத்துறையினர் மாரியப்பன் தலைமையில் வனகாப்பாளர் முத்துகருப்பன் ,உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதியில் மயில்கள் இல்லை என்றும் வான்கோழிகள் என்பது தெரியவந்தது.
சமீபத்தில் முள்ளுவாடி அருகே தலை அறுக்கப்பட்ட நிலையில் மயில் இறந்து கிடந்தது குறிப்பிடதக்கது.


இது குறித்து வனசரகர் மாரியப்பன் கூறுகையில் , ஏதோ ஒரு பண்ணையில் இறந்த வான்கோழிகளை இங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் விசாரிக்கப்படும். என்றார்

கலவரத்தால் திண்டாடியவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவி!

பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ் போக்குவரத்து முடங்கியதால் வெளியூர்களில் இருந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்த‌வர்கள் பலர் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது தவித்தனர்.இதனையறிந்த‌ ராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த ஜமாத்தினர், மனித நேய மக்கள் கட்சியினர், சி.ஐ.டி.யு., அமைப்பினர், அவர்களை சின்னக்கடை பகுதி பள்ளிகளில் தங்க வைத்தனர். இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக அப்பகுதியில் உள்ள‌ இஸ்லாமியர்கள் ஒவ்வொரின் வீடுகளிலிருந்தும் சமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அடுத்த நாளும் அனைவருக்கும் உணவு வழங்கினர். பின்னர் அரசு வாகனங்கள் மூலம் அருகேயுள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பாதிப்ப‌டைந்த‌வ‌ர்கள் மிகுந்த‌ நெகிழ்ச்சியுடன் உதவிய‌‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி தெரிவித்து சென்ற‌ன‌ர்

Tuesday, September 13, 2011

ஏர்வாடி தீ விபத்தில் கீழக்கரை சிறுவன் பலி ! தாமதமாக வந்ததால் தீயணைப்பு வாகனத்துக்கு சிறை

தாமதமாக வந்த தீயணைப்பு வாகனத்தை சிறைபிடித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்
தீ விபத்தில் உயிரழந்த சிறுவன்

ஏர்வாடி தர்ஹாவில் முதுகுளத்தூர் சடையநேரியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.இந்த கடையில் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்த சந்திரன் மகன் பழனி(14) என்ற சிறுவன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் கடையின் உட்புரத்தில் இன்று காலை 9.45 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பின் பர்னர் வெடித்து தீ பிடித்தது இதில் அங்கு சமையல் செய்தி கொண்டிருந்த பழனி தீயில் சிக்கி பலியானார்.தீ விபத்து நடந்ததும் அருகில் நின்ற இளைஞர்கள் தீயனைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வாகனம் வரவில்லை.
இதை தொடர்ந்து அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அருகிலிருந்து தண்ணீர்க் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து தீயணைப்பு வாகனம் வராததால் அங்கு நின்றிருந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் சென்று தீயணைப்பு வாகனத்தை அழைப்பு வந்தனர். ஆனாலும் தீ விபத்தில் சிக்கி கொண்ட சிறுவன் முழுவதுமாக கருகி சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்களும் ,இளைஞர்களும் தாமதமாக வந்த தீயணைப்பு வாகனத்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்த டி.எஸ்.பி முனியப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமதானம் செய்தார். அங்கு நின்றிருந்த தீயணைப்பு வீரர்களையும் கண்டித்தார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில் பெயருக்குத்தான் பெட்டி கடை ஆனால் இங்கு திருட்டுதனமாக பெட்ரோல் விற்பனை செய்வார்கள்.கடையில் பெட்ரோல் அதிகளவில் இருந்ததால்தான் சிறுவன் தப்பித்து வர முடியாமல் மள,மளவென தீ பரவி கடைக்குள்ளேயே மரணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்றனர்.

Monday, September 12, 2011

பேருந்துகள் இயங்காததால் பயணிகள் வாகனமாக மாறிய‌ சரக்கு லாரிகள் !




பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ் போக்குவரத்து முடங்கியது.இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இந்நிலையில் சரக்கு ஏற்றி செல்லும் மினி லாரி போன்ற வாகனங்களுக்கும் வேலை இல்லதாதால் அருகருகே உள்ள ஊர்களுக்கு பயணி ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த கட்டணமாக ரூ 10 வசூல் செய்கின்றனர்.

பட விளக்கம் : இன்றைய பகல் பொழுதில் கீழக்கரை முனை ரோட்டில் வாடகை டெம்போவில் ஏறும் பயணிகள்

கீழக்கரை உள்ளாட்சித் தேர்தல் மங்காத்தா...! கட்டுரையாளர் :- கீழை ராஸா






கட்டுரையாளர் :- கீழை ராஸா



“இந்த முறை பொது வேட்பாளர் யாருப்பா..?”

“அட ஜும்மாவே பொதுவா இல்லைன்னு ஆச்சி, இதுலே என்ன இனி பொதுவேட்பாளர்..?”

”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா...அவங்க எதாவது பண்ணுவாங்க..”

”இது என்னப்பா சின்னப்புள்ளே தனமா இருக்கு..? வெறும் நட்பு வட்டாரங்களை வச்சி ஜெயிச்சிட முடியுமா என்ன?”

”அட பணமுள்ள பசங்களெல்லாம் இப்ப அருணாச்சலம் ரஜினி ஸ்டைலுலே தேர்தலிலே இறங்கி செலவழிக்கப் போறாங்களாம்...”

”துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”

”இருக்காங்கலே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ணவிடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”

”அனுபவம் முக்கியமுங்க...”

”என்னப்பா பெரிய அனுபவம்? நகராட்சி ஆபிசு கிட்டே வருகிற பாமரன் கிட்டே கூட கை நீட்டி காசுவாங்கிக் கிட்டு, ஊரை குப்பைக் காடா மாத்துனது தான் அனுபவமா..?”

“ அட உங்களுக்கெல்லாம் விசயமே தெரியாதா? நம்ம ஊரு நகராட்சித் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்களாமே..? உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு..!”

இப்படி பரவலான பேச்சுக்களுடன், கீழக்கரை தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.

வழக்கம் போல வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை...என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், கீழக்கரைவாசிகளான உங்களுடன், சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்...

தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்த்தோ, அதைப்போல கீழக்கரையின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே கீழக்கரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.

அதற்காக கீழக்கரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்...அப்பா தீவை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிபார்க்க வேண்டியதில்லை. ஒரு நகராட்சி எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத, செய்ய இயன்ற சில விசயங்களை இங்கே அலசுவோம்...

தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அதிகமான வரிகட்டும் ஒரு நகராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!

குடிநீர் பிரச்சனைக்காக எத்தனையோ வருடங்கள் நமதூர் அல்லாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்...கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தமிழகமே வியந்து பார்க்கும் வண்ணம், 20 வருடங்களுக்கு முன்னரே பிரமாண்டமான முறையில், அறிமுகம் செய்யப் பட்டு, இன்று வரை அது செயல்பாடற்ற திட்டமாகவே இருந்து வருவதை இனி வரும் நகராட்சியாவது சரி செய்துவிடுமா..?

பாதாளச் சாக்கடைத் திட்டம், அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? உலக குப்பைகளை ஒன்று சேர வாங்கி வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பண பலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை என்பதை விட வேடிக்கை வேறென்னவாக இருக்க இயலும்..?

அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த நகராட்சி செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுதிரிகளாக வாடி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு விசங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?

வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது...அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்...இப்படி எந்த அரசு சம்பந்தப்பட்ட விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை ஆட்சியாளர்கள் மாற்றியதைத்தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் நகராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..?பணம் தானே நிர்ணயிக்கிறது...? அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?

இதைப்பற்றி நமக்கென்ன கவலை ? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப்பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!

இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்...பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாவண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ புரவலர்கள், நமக்கேன் வீண் வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள். அமைப்புகள், தெருக்கள், சாதி, மதம் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த நிலைமாற என்ன வழி...?

ஒற்றுமை ! நபிமொழியின் வார்த்தைகளை பற்றிப் பிடிக்குவண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.

காயல்பட்டினம் போன்ற ஊர்களில் செயல்படும் ஐக்கிய ஜமாத் அமைப்பை போன்று நாமும் ஊரின் முக்கியஸ்தர்கள், ஜமாத் பெரியவர்கள், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்...அவர்களின் பரிந்துரையின் அடிபடையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்...இது எந்த வகையில் சாத்தியம் என்போர் இந்த் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்....

http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802

மாஸா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது...நம் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது....? இது என் எண்ணம் மட்டுமல்ல... ஊர் நலத்தில் அக்கரை கொண்ட எத்தனையோ ஜீவன்களின் பேராசை...! நான் உணர்வுகளின் மொழிபெயர்ப்பாளானாகவே இங்கே வடித்துள்ளேன்...

இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!

அன்புடன் கீழைராஸா துபாயிலிருந்து....

கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள‌ பகுதியில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை ! பொது மக்கள் அவதி !




நேற்று தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களது உடல்களை இன்று அடக்கம் செய்யவிருப்பதால் மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பேருந்து இயக்கம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பொது மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக கீழக்கரை ,ஏர்வாடி,காஞ்சிரங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பலானவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு ராமாநாதபுரம் செல்வார்கள் தற்போது ஒன்றிரண்டு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த செய்யது இப்ராகிம் கூறுகையில், தனியார் வாடகை ஆட்டோக்களும்,கார்களும் ராமநாதபுரத்திற்கு செல்வதற்கு மறுக்கிற சூழ்நிலை நிலவுகிறது. அப்படியே வந்தாலும் அதிக வாடகை கேட்கின்றனர் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.அரசு உடனடியாக இந்நிலையை சீர் செய்ய வேண்டும். என்றார்

கால்பந்து போட்டியில் கீழக்கரை கல்லூரி அணி சாம்பியன்!



திருச்சி அண்ணா பல்கலைகழக மண்டல‌ அளவிலான கால்பந்து போட்டியில் கீழக்கரை சதக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் ,சிவகங்கை ,திண்டுக்கல் ,தேனி,மதுரை,ஆகிய மாவட்டத்தில் உள்ள 16 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன .இறுதி போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியும், முகம்மது சதக் பொறியியல் கல்லூரியும் விளையாடியதில் 4- 3 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் கல்லூரி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களை கல்லூரியின் சேர்மன் ஹமீது அப்துல் காதர்,செயலாளர் ஹபீப் சாகிப்,சிறப்பு இயக்குநர்கள் யூசுப் சாகிப்,ஹபீப் சதக்கத்துல்லா ,முதல்வல் முகம்மது ஜகபர் ஆகியோர் ஆகியோர் பாரட்டினர்.மேலும் உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்,முதன்மை பயிற்சியாளர் சிக்கந்தர்,துரை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் ,சத்தியேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: கீழக்கரையில் நடைபெற்ற வெற்றி பெற்ற கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கல்லூரி இயக்குநர் ஹ்பீப் சதக்கத்துல்லா .

அத்துமீறி செயல்பட்ட காவல்துறை மீது அரசு நடவடிக்கை !ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை



மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஎம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை மனிதநேய மக்கள் கட்சி மிகவும் துரதிருஷ்டவசமான, துயர நிகழ்வாக கருதுகின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகியுள்ளன. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனிகுமார் என்ற மாணவர் விஷமிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக காவல்துறையினர் கைதுச் செய்திருந்தால் கொந்தளிப்பான உணர்வுகள் தணிக்கப்பட்டிருக்கும். இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரூ 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதனை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது.

இதே போல் இந்த கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சிக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்தது முதல் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு வரை நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினர் மீதும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மாச்சரியங்களை கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, September 10, 2011

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டால் எதிர்த்து போராட்ட‌ம்! கீழை ஜ‌மீல் அறிக்கை !



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு முடிவு செய்துள்ள‌தாக‌ உறுதிப்ப‌டுத்த‌ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத்தின் முக்கிய‌ பிர‌முக‌ர் கீழ‌க்க‌ரை ஜ‌மீல் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் ,

இது வரை முறையான அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை.தமிழக அரசிடம் அப்படி ஒரு திட்டம் இருக்குமானால் உடனடியாக அதை கைவிட வேண்டும்.மேலும் அதிகமான முஸ்லிம்களை கொண்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்குவது நல்லதல்ல. இது கண்டனத்திற்குரியது. அரசியல் அனுபவம் இல்லாத பெண்களை தலைவர் பொறுப்புக்கு கீழக்கரை போன்ற ஊர்களில் கொண்டு வந்தால் ஊரின் சுகாதாரம் மற்றும் இதர பிரச்னைகள் இன்னும் மோசமாகும். இவர்களின் கு0pடும்பத்தார் கையில் நிர்வாகம் மறைமுக செல்வதுடன் நகராட்சி நிர்வாகம் சீர் கெடும்.

கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்படும் என்ற அரசு அறிவிப்பு வெளி வருமானால் இதற்கு எதிராக கட்சி, அமைப்புகள் பாகுபாடின்றி கீழக்கரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.

Friday, September 9, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு ! தமிழக அரசு முடிவு ?

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டு ,வேட்பாளராக பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் பல் வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பலருக்கு எஸ்.எம்.எஸ் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளனது.
ஒரு சிலர் இது உண்மை அல்ல வதந்தி என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது

கட்சி சார்பாக போட்டியிட மாட்டேன் ! சமுதாய புரவலர் சீனா தானா பேட்டி !






கீழக்கரையை சேர்ந்த தொழில் அதிபரும் ,சமுதாய புரவலருமான சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அவர்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை அவரிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய போது,

கேள்வி :-உங்களை கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக அறிவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறதே ?

பதில் :-பலரும் என்னிடம் தொலைபேசி மூலமும் நேரிலும் போட்டியிட சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.நீங்கள்(சீனா தானா) போட்டியிட்டால் நாங்கள் போட்டியிலிருந்து விலகி கொள்கிறோம் என்று சிலர் கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த மரியாதையை எனக்கு அளித்த ஏக‌ இறைவனுக்கு எனது நன்றி , புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கு உரித்தானது

கேள்வி : எந்த கட்சி சார்பாக போட்டியிட உள்ளீர்கள் ?

பதில் :எந்த கட்சி சார்பாகவும் எந்த அமைப்பின் சார்பாகவும் நிற்க மாட்டேன் ,பொது வேட்பாளராக‌ மட்டுமே போட்டியிடுவேன் .கீழக்கரையின் அனைத்து ஜமாத், முக்கிய கட்சிகள் ,சமுதாய அமைப்புகள் மாற்று மத சகோதர அமைப்புகள் ஆகியவற்றின் பெருவாரியான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் மேலும் நான் தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை நல்ல உள்ளம் படைத்த வேறு ஒரு நபர் சேவை மனப்பான்மையுடன் சுயேச்சையாக ,பொது வேட்பாளராக போட்டியிட முன் வந்தால் அவரை ஆதரிக்க தயாராக உள்ளோம்.

கேள்வி : நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவரனால் என்னென்ன நல‌திட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் ?

பதில் :கீழக்கரையின் இன்றைய முக்கிய பிரச்சினைகள் மூன்று அதில் முதலாவது பிரச்சினை குப்பை,இரண்டாவது பிரச்சினை குப்பைதான், மூன்றாவது பிரச்சினையும் குப்பைதான் .
வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குப்பை பிரச்சினையைதான் முதலில் தீர்க்க வேண்டும் . இதை எப்படி அணுகி தீர்வு காண வேண்டும் .அரசின் துணையோடு மட்டுமில்லாமல் தனிபட்ட முறையிலும் தீர்வு காண்பதற்கு என்று சில திட்டங்கள் வைத்துள்ளேன். தற்போது இது பற்றி எந்த வாக்குறுதியும் தர முடியாது பொது வேட்பாளராக போட்டியிடுவது என்பது முடிவான பின் இது பற்றி பேசுவோம்.

என்னை சந்தித்து தகவல்களை சேகரித்த கீழக்கரை வலை தளத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றி என்றார்


Thursday, September 8, 2011

நகராட்சி தலைவர் வேட்பாளர் போட்டியில் மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார்


இப்திகார்

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக யார் போட்டியிட போகிறார், கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிட போகிறது என்ற கேள்விக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்து விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை வேட்பாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியிட விரும்புவோர் ஒவ்வொருவரும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் வேட்பாளர் போட்டியில் மஹ்தூமியா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகாரும் இணைந்துள்ளார். மஹ்தூமியா சமூக நல அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக நலப்பணிகளை மேற்கொள்ளும் இவர் சென்னை புதுகல்லூரி மாணவர் பேரவையில் பொது செயலாளராக(1996) பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் பைத்துமால் முன்னாள் செயலாளர் மறைந்த ஏ.கே.எஸ் கபீர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையின் முதல் பெண்கள் மதரஸா நிறுவியது இவரது தாயாராகும்.

இது ப‌ற்றி அவ‌ர‌து த‌ர‌ப்பு கூறிய‌தாவ‌து,இப்திகாரை வேட்பாளராக போட்டியிட செய்ய‌ முயற்சி நடப்பது உண்மைதான் இறைவனின் கிருபையால் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதோடு நின்று விடாமல் சொந்த‌ செல‌வில் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளை மேற்கொள்வார் என்பது உறுதி

Tuesday, September 6, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி !



சீனா தானா என்று செய்யது அப்துல் காதர்







உமர் அப்துல் காதர்








ஹமீதுகான்






இம்பாலா உசைன்












MMK.முகைதீன் இப்ராகிம்












பந்தே நவாஸ்








மூர் ஹசனுதீன்











கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அனைத்து ஜமாத் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது ,கீழக்கரை நகராட்சியில் 11 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்கள் உள்பட 23 ஆயிரத்து 202 வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது நகராட்சியில் திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைவராக உள்ளார். இதில் திமுக கவுன்சிலர் 5,சுயேச்சைகள் 12,அதிமுக 1,காங்கிரஸ் 1 மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.







நகராட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசியல் கட்சினரும் தயராகி விட்டனர்.



இந்நிலையில் அனைத்து ஜமாத் சார்பாக பொது வேட்பாளராக தொழில் அதிபர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அல்லது தொழில் அதிபர் உமர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .



இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம்,முன்னாள் அதிமுக நகர செயலாளர் இம்பாலா உசைன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியான சமக சார்பில் பந்தே நவாஸ் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.



அதிமுகவின் கூட்டணி கட்சியான தமுமுக சார்பிலும் தொழிலதிபர் நல்ல முகம்மது களஞ்சியத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் மூர் டிரவலஸ் ஹசனுதீன் மற்றும் கவுன்சிலர் ஹமீதுகான் போட்டியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சிலரும் முயல்வதாக கூறப்படுகிறது.



விரைவில் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிகிறது. கீழக்கரை மக்கள் மிகுந்த உன்னிப்புடன் நிகழ்வுகளை கவனித்து வருகிறார்கள் பலர் பல கணக்கு போட்டாலும் கீழக்கரை மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், நகரின் முக்கிய பிரச்சினையான சுகாதாரம்,குடிநீர் ,சாலை வசதிகள் ,தனி தாலுகா,கீழக்கரைக்கென்று ஒரு தொழிற்சாலை போன்ற பல் வேறு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களில் கீழக்கரை நலனை யார் முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்படுவாகளோ அவர்களுக்கே இம்முறை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.











நகராட்சி தேர்தல் ! அதிமுக சார்பில் போட்டியிட‌ MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்கல் !



மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்டோ பர் மாதம் நடைபெறுகிறது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவிஅனர் வருகிற 8ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.அவருடன் கிழக்கரை நகர் அதிமுகவினர் உடனிருந்தனர்

Monday, September 5, 2011

தலைமை உத்தரவிட்டால் MMK.முகைதீன் இப்ராகிம் வெற்றிக்கு பாடுபடுவோம் !கீழக்கரை தமுமுகவினர் பேட்டி


நமது இணையதளத்தின் சார்பில் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக நகர் தலைவர் ஹுசைனை உள்ளாட்சி தேர்தல் தகவல்களுக்காக சந்தித்தபோது அவர் கூறியதாவது...

தமிழகத்தில் எந்த ஒரு சமுதாய அமைப்பும் செய்யாத சாதனையாக தமுமுக தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்று ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் ஹிந்து பத்திரிக்கை தமிழக்கத்தில் சிறந்த எம்.எல்.ஏக்களில் 6 பேரில் ஒருவராக ஜவாஹிருல்லாவை தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியான விசயம். சட்டசபையில் கீழக்கரை சம்பந்தமான விசயங்களை கோரிக்கை வைத்து பேசிய முதல் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாதான். ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கரையில் உள்ள குறைகளை களைவதற்கு கீழக்கரையில் உள்ள அரசு அதிகாரிகளை அனைவரையும் அழைத்து பேசினார்,10முறை கீழக்கரைக்கு வந்து சென்றுள்ளார்,மீனாட்சிபுரத்தில் குடிசைகள் எரிந்த போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உதவிகளை தமுமுக மேற்கொண்டது. அதேபோல் கீழக்கரை குப்பை பிரச்சினையை நகராட்சி தலைவர் பசீர் கண்டு கொள்ளவில்லை ,மக்கள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற நோக்கிலேயே செயல் பட்டார் .மேலும் குப்பைகள் கொட்டும் இடத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்கு தில்லையேந்தல் சார்பாக‌ சுற்று சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்டில் தடையானை பெற்று விட்டதாக பொய்யான தகவலை பசீர் கூறி வந்தார்.நாங்களும் இதுநாள் வரை நம்பி வந்தோம் ஆனால் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவாக ஆன பின் தான் தற்போது அது உண்மையில்லை என்பது தெரிய வந்தது. மாசு கட்டுப்பாட்டு துறையிடம் கீழக்கரை நகராட்சி சான்றிதழ் பெற வேண்டும் ஆனால் நகராட்சியால் சான்றிதழ் பெற முடியவில்லை தற்போது தமுமுக‌ அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மேலும் அந்த பிரச்சினை தீரும் வரை தற்காலிகமாக‌ குப்பை கொட்டுவதற்கு இடம் வேண்டும் என்று தமுமுக சார்பாக கீழக்கரை வெல்பேர் அசோசியேசனிடம் கோரிக்கை வைத்தோம் அதை எற்று அவர்கல் குப்பை கொட்டுவதற்கு இடம் தந்துள்ளார்கள் அதற்காக‌ வெல்பேர் அசோசியேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது இணையதளத்தின் சார்பில் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக சார்பாக நகர் தலைவர் ஹுசைனை உள்ளாட்சி தேர்தல் தகவல்களுக்காக சந்தித்தபோது அவர் கூறியதாவது...



கேள்வி : அதிமுக சார்பாக எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறதே ?


சட்டசபை தேர்தலில் தமுமுக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றி கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும்.புரட்சி தலைவி தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது.மேலும் எங்கள் கூட்டணி தலைமையில் முடிவெடுத்து எம்.எம்.கே முகைதீன் இப்ராகிமை வேட்பாளாராக‌ தேர்ந்தெடுத்தால் வீரியமாக பணி செய்து அவரை வெற்றி பெற செய்வோம்.


கேள்வி : தமுமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டால் சமுதாய புரவலர் சீனா தானா வேட்பாளராக போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி ?

கீழக்கரை நகர் தமுமுக சார்பில் ஏற்கெனவே வேறு ஒரு நபரை பரிந்துரைத்துள்ளோம். அவரை தலைமை வேட்பாளராக‌ தேர்வு செய்யும் என நம்பிக்கை உள்ளது அல்லது சீனா தானவை தலைமை முடிவு செய்தால் வெற்றி பெற செய்ய உழைப்போம்.தலைமைக்கு கட்டுபடுவோம்.சீனா தானா அவர்கள் நல்ல வேட்பாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை.


கேள்வி :கீழக்கரை நலனுக்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

கீழக்கரை முக்கிய பிரச்சினையான சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
குப்பை நகரம் என பெயரெடுத்துள்ள கீழக்கரையை சுத்தமாக மாற்றுவோம்.குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்போம் .பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம்.

கேள்வி :எம்.எம்.கே காசிம் நகர தலைவராக அறிவிக்கப்பட்டார் பின்னர் இல்லை என அறிவிக்கப்பட்டது ஏன் இந்த குழப்பம் ?


இது குறித்து நாங்க‌ள் பதில் அளிக்க முடியாது.கட்சி தலைமையும்,மாவட்ட தலைமையும் பதில் சொல்ல முடியும் மேலும் எம்.எம்.கே காசிம் எங்களுடன் இன்று வரை தொடர்பில் உள்ளார்.

கேள்வி :கீழக்கரை தமுமுக வினர் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?


அநியாயக்கராகளுக்கு ஆதரவு கொடுத்து கமிசன் வாங்கினால் தான் கட்டபஞ்சாயாத்து.இரு நபர்களுக்கு குடுக்கல் ,வாங்கல் பிரச்சினை இருந்து அவர்கள் எங்களிடம் வந்து முறையிட்டால் கடனை சுமூகமான முறையில் வாங்கி கொடுப்போம் இது எப்படி கட்ட பஞ்சாயத்தாகும் இதை சேவையாகத்தான் கருத வேண்டும் .வேறு எங்கேயாவது எங்கள் அமைப்பினர் கட்டபஞ்சாயத்து செய்து காசு வாங்கியதாக நிரூபித்தால் கட்சி தலைமை அவர்களை கட்சியிலுருந்து நீக்கிவிடும் .ஏதெனும் நடைபெற்றால் எங்களிடம் புகார் செய்யுங்கள்.

பேட்டியின் போது தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ,உஸ்மான் சேட்,ஜெயினுலாப்தீன்,பாக்கர்,முஸ்தகீம்,ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.

நமது குழுமத்தின் சார்பாக ஹமீது யூசுப் மற்றும் சமது ஆகியோர் சந்தித்து உரையாடினர்.


தொகுப்பு : ஹமீது யாசின்

கீழக்கரை ஹமீதியா பள்ளி அருகே தோட்டத்தில் பெயிண்டர் தற்கொலை !



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதிய உயர்நிலை பள்ளி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் குடியிருந்து வந்த திருப்புலாணி வீரன் வலசையை சேர்ந்த வெல்லத்துரை மகன் ஆறுமுகம் (35) குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கடந்த 9 வருடமாக இந்த தோட்டத்தில் குடியிருந்து வருகின்றனர்.இவருக்கு ராணி(32) என்ற மனைவியும் அருண்குமார்(14) அசோக்குமார்(9) என்ற 2 மகன்களும் உள்ளனர்.சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாகவும் இதை அவர் மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.இதில் மனம் உடைந்த அவர் தான் குடியிருந்த தோட்டத்திலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் ,தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ், ஆகியோர் இறந்தவரின் உடலை கைப்பற்றி கீழக்கரை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட விளக்கம் : தூக்கு போட்டு உயிரழந்த ஆறுமுகம்

Sunday, September 4, 2011

பெண்களை கேலி செய்தாக தகராறு ! வாலிபர் காயம் ! 5 பேர் மீது வழக்கு


கீழக்கரை அருகே 500 பிளாட் பகுதியில் இடத்தில் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டு வழியில் போகும் பெண்களை கேலி செய்ததாகவும் ,தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
கீழக்கரை 500 பிளாட் பள்ளிவாசல் அருகே அதே பகுதியை சேர்ந்த சுல்தான் மகன் பாதுஷா அவருடைய சகோதரர் சாகுல் ஹமீது,கலீல் ரஹ்மான் மகன் பாசில்,அவரது சகோதரர் ஜமீல்,மற்றும் ராஜா ஹீசைன் ஆகியோர் அப்பகுதியில் நின்று கொண்டு பெண்களை கேலி செய்ததாகவும் இதை அதே பகுதியை சேர்ந்த ஹைதர் அலி மகன் முகம்மது செய்யது ஹசன் தட்டி கேட்டதாகவும் ஹசன் தரப்பில் கூறப்படுகிறது.5 பேரும் சேர்ந்து ஹசனை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்ததில் கண்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கீழக்கரை காவல் நிலையத்தில் முகம்மது செய்யது ஹசன் புகார் செய்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து 5 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

காயம் அடைந்த ஹசன் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


பட விளக்கம் : இன்ஸ்பெக்டர் இளங்கோவன்

Saturday, September 3, 2011

கீழக்கரையில் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் !


கீழக்கரை : " உள்ளூர் "டிவி' சேனல்கள் ஒளிபரப்பு
நிறுத்தப்பட்டது.உள்ளூர் "டிவி' சேனல்கள் ஒளிபரப்புக்கு ஆக.,15

முதல் தமிழக அரசு தடை விதித்தது. கீழக்கரையில் "கீழை, கீழை பிளஸ், டி.என்.டி.ஜே., கே.ஈ.சி.டி.,' ஆகிய

"டிவி' சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரபாகி


வந்தன இந்நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையின் பேரில்

உள்ளூர் சேனல்கள், ஒளிபரப்பை நிறுத்தின.





இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஜகுபர் கூறியதாவது , இந்த தடையின் மூலம் பல்லாயிரக்கானோர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது .உள்ளூர் சேனல்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். என்றார்





வெளிமாநில பஸ் மோதி பெண் பலி ! நிற்காமல் சென்ற பஸ்சை பிடித்த போலீசார் !



கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி அருகே நடந்த விபத்தில் பெண் பலியானார்.கீழக்கரை அருகே சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மனைவி மலர்(30) இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது செய்யது ஹமீதா கல்லூரி அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த வெளிமாநில பஸ் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மீது நிற்காமல் சென்ற பஸ்குறித்து அருகில் நின்றவர்கள் ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால் ஏர்வாடி தனிபிரிவு ஏட்டு செல்வராஜ்,சப் இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் பஸ்சை ஏர்வாடி அருகே மடக்கி பிடித்து டிரைவர் மேற்கு வங்காள டிரைவர் சேக் அக்தர் அலி (43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Friday, September 2, 2011

கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலசங்கம் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வாழ்த்து விளம்பரம்


கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலசங்கம் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வாழ்த்து விளம்பரம்

நகராட்சி தலைவர் வேட்பாளராக MMK.முகைதீன் இப்ராகிம் என்ற சின்னராஜா அதிமுக சார்பில் போட்டி?

பள்ளி நிகழ்ச்சியில் ஹாரூன்.எம்.பி,சதக் டிரஸ்ட் தலைவர் ஹமீது அப்துல் காதர், சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்
தனது தந்தை எம்.எம்.கே .இப்ராகிம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது உடன் முகைதீன் இப்ராகிம் என்ற சின்னராஜா

எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் என்ற சின்னராஜா

உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை பல வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் ராமநாபுரம மாவட்டத்தில் முக்கிய நகராட்சியான கீழக்கரையில் நகராட்சி தலைவர் பதவிக்கு யார் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு அனைத்து தரப்பிப்பிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக முகைதீன் இப்ராகிம் என்ற சின்னராஜா நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த கீழக்கரை பிரமுகர் எம்.எம்.கே முகம்மது இப்ராகீம் அவர்களின் மகனான இவர் 1000த்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயிலும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளராக உள்ளார்.சென்னை ஸ்பென்சர் பிளாசா கடை உரிமையாளர்கள் சங்க தலைவரகவும்,பல் வேறு சமூக சேவை அமைப்புகளிலும், பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.

எனினும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி சார்பாக எந்த கட்சி போட்டியிட உள்ளது, வேட்பாளர்கள் யார்,யார், என்பது போன்ற உறுதியான,இறுதியான அறிவிப்புகள் வெளியாகும் .

தெற்குதெரு முஸ்லீம் பொது நலசங்க புதிய கட்டிட திறப்புவிழா! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு (படங்கள்)










கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொது நலசங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் களஞ்சியம் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் தெற்குதெரு ஜமாத்தின் மூத்த கமிட்டி உறுப்பினர் செய்யது முகம்மது அக்கலா மரைக்கா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும் விழாவில் மேலத்தெரு உஸ்வது ஹசனா முஸ்லீம் சங்கத்தின் துணை தலைவர் சீனா தானா என்றழைக்கப்படும் செய்யது அப்துல் காதர், நகர் மன்ற தலைவர் பசீர் அகமது கவுன்சிலர்கள் காசிம் என்ற செல்வராஜா,துரை மற்றும்
சங்கத்தில் தலைவர் ஹாலிது சுல்தான்,செயலாளர் அகமது சாகிர்,பொருளாளர் காதர் சாகிபு,ஜகுபர் ஹீசைன் ,பவுமி,சீனி,ரியாஸ் ,சூபியான்,அலிமத்,ராஜா,ஜகுபர் ஹுசைன் மற்றும் ,ஜமாத்தார்கள் ,முக்கிய பிரமுகர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மஹ்துமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருது



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லு�ரியில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா, துரோணாச்சாரியர் விருது வழங்கும் விழா நடந்தது. கல்லு�ரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். கல்லு�ரி சிறப்பு இயக்குநர் யூசுப்சாகிப் முன்னிலை வகித்தார். பிரபாகரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் முனியசாமி, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரோட்ராக்ட் புதிய தலைவராக ரஞ்சித் மணிகண்டன், செயலாளராக கார்த்திக் பொறுப்பேற்று கொண்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் கீழக்கரை இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, மஹ்து�மியா தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, ராஜசூர்யமடை ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி, காரிகோட்டம் ஊராட்சிப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி, ஆசிரியர் மோகனதாஸ் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் தினேஷ்பாபு, கல்லு�ரி சிறப்பு இயக்குநர் யூசுப் சாகிப், ரோட்டரி சங்க பார்த்தசாரதி, ரோட்ராக்ட் ஆலோசகர் மரியதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் தடையை மீறி செயல்படும் உள்ளூர் சேனல்கள் ! முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் எதிர்ப்பு


தமிழகத்தில் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட இருப்பதை தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் உள்ளூர் சேனல்களுக்கு தமிழக அரசு கடந்த மாதம் முதல் தடை விதித்து விட்டது இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல் பட்டு வந்த உள்ளூர் சேனல்கள் பெரும்பாலனவை நிறுத்தபட்டு விட்டதாக கூறப்படுகிறது. அரசின் தடையை மீறி கீழக்கரையில் நான்கு உள்ளூர் சேனல்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் அரூஸி கூறியதாவது, சித்த வைத்தியம் ,மாந்திரீகம், போன்ற போலி வியாபார ஸ்தாபனங்கள் விளம்பரங்களை வெளியிட்டு மக்களை திசை திருப்பும் உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பை அரசு தடை செய்துள்ளது ஆனால் கீழக்கரையில் தடையை மீறி உள்ளூர் சேனல்கள் இயங்கி வருவது வியப்பையளிக்கிறது. என்றார்.

ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி கூறியதாவது, கீழக்கரையில் ஆய்வு செய்து உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றார்


Thursday, September 1, 2011

துபாயில் ஒரே இடத்தில் நாளொன்றுக்கு 3000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்தார் !



தன்னார்வ தொண்டர்கள்


கோவை வக்கீல் நந்தகுமார் வருகை


பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லா



இந்திய தூதரக ஜெனரல் சஞ்சய் வர்மாஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி மற்றும் இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ஹமீது சலாஹுதீன்

ஈமான் சங்க செயலாளர் தாஹா இந்திய தூதரக அதிகாரிகளுடன்

அப்துல் ரஹ்மான்.எம்.பி வருகை




இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஈமான் சங்க செயலாளர் தாஹா


எம்.பி.எம் நிறுவனத்தின் பொது மேலாளர் சாகுல் ஹமீது வருகை

.
துபாய்: துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன் ( ஈமான் ) ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சியினை நடத்தும். இந்த ஆண்டும் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி ) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி வழங்கப்பட்டது.

இது குறித்து ஈமான் பொதுச் செய‌லாள‌ர் குற்றாலம் ஏ. லியாக்க‌த் அலி கூறியதாவது,

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ 20 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. முதலில் சிறிய‌ அள‌வில் ஆர‌ம்பித்து இன்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்டோருக்கு தின‌மும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. நோன்புக் க‌ஞ்சியுட‌ன் ச‌மோசா, ஆர‌ஞ்சு, குளிர் பான‌ம், த‌ண்ணீர், பேரீச்ச‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வழங்கப்பட்டது என்றார்.

இத்த‌கைய‌ மாபெரும் நிக‌ழ்வு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌து எம். ஸ‌லாஹுத்தீன், க‌ல்விக் குழுத் த‌லைவ‌ர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் ஆகியோர‌து வ‌ழிகாட்டுத‌லுட‌ன் பொதுச் செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக் குழு செய‌லாள‌ர் ய‌ஹ்யா முஹயித்தீன், ஊடக‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், க‌ல்விக் குழு செய‌லாள‌ர் ஹிதாய‌த்துல்லா, ஜமாத் ஒருங்கினைப்பாளரும் அலுவ‌ல‌க‌ மேலாள‌ருமான ஏ. ஹ‌மீது யாசின், ப‌டேஷா ப‌ஷீர், இல்யாஸ், ஷ‌ர்புதீன், ஷாகுல் ஹ‌மீது, உஸ்மான், ஜ‌மால் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ நிர்வாகக் குழு உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் ஒத்துழைப்புட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்த நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ கோவையைச் சேர்ந்த‌ சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் வி. ந‌ந்த‌குமார் அவ‌ர்க‌ள் கூறுகையலி், இஃப்தார் நிக‌ழ்வில் ஒரு பூகோள‌ கிராம‌த்தைப் பார்ப்ப‌து போன்ற‌ ஒருபிர‌மிப்பினை ஏற்ப‌டுத்துகிறது. இது எனது வாழ்நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ நிக‌ழ்ச்சி. இந்தியா அல்லாத‌ வேறொரு நாட்டில் சேவை ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ஈமான் அமைப்பின‌ரின் சேவையினைப் பாராட்டுகிறேன் என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நாசர் கூறியதாவது,நாளொன்றுக்கு 3000த்துக்கு மேற்பட்டோருக்கு மாதம் முழுவதும் 90000த்துக்கும் மேற்பட்டோருக்கு அதுவும் ஒரே இடத்தில் வழங்குவது என்பது மிகுந்த சிரமமான காரியம் என்றார். மாதம் முழுவதும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அமீரக இந்திய தூதரக அதிகாரிகள் ,அப்துல் ரஹ்மான் எம்பி,எம்பிஎம் (இடிஏ) நிறுவனத்தின் பொது மேலாளர் சாகுல் ஹமீது,இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹமீது சலாஹுதீன் ,உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.