Sunday, November 11, 2012

கீழ‌க்க‌ரையில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளுக்கான‌ மாறுவேட‌ப்போட்டி!

கீழ‌க்க‌ரை தெற்குதெரு இஸ்லாமிய‌ மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி யூகேஜி ம‌ற்றும் 1,2 வ‌குப்புக‌ளுக்கான‌ மாறுவேட‌ப்போட்டி ப‌ள்ளி தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.

ப‌ள்ளி முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜஸ்டஸ் முன்னிலை வ‌கித்தார்.இதில் 100க்கும் அதிக‌மான‌ பிஞ்சு குழ‌ந்தைக‌ள் க‌ல‌ந்து கொண்டு த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளிப‌டுத்தின‌ர்.ஏற்பாடுக‌ளை த‌லைமை ஆசிரிய‌ர் ஜோச‌ப் சார்த்தோ,நிர்வாக‌ அலுவல‌ர் ம‌லைச்சாமி ஆகியோர் செய்திருந்த்ன‌ர்

ஓட்டல்களில் குடிக்க வெந்நீர் வழங்க வேண்டும் !கீழ‌க்க‌ரை ந‌கராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை!

 
மழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்க, ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த சுடு தண்ணீர் வழங்கவேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமானோர் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக கீழக்கரை நகரின் பிரதான ஓட்டல் மற்றும் டீக்கடைகளின் உரிமையாளர்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
கீழக்கரை நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் கூறியதாவது:
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரையே கொடுக்க வேண்டும். உணவு விடுதிகளில் பணிபுரியும் உணவை பரிமாறக் கூடிய தொழிலாலர்கள் உள்ளூர் மருத்துவ அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
 
 உணவு மற்றும் போண்டா, வடை போன்ற தின்பண்டங்களை திறந்தோ, ஈ மொய்க்கும் விதத்திலோ வைத்திருக்க கூடாது.மழைக்காலம் என்பதால் அடிக்கடி தரையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தரமான தாவர எண்ணையை உணவு தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். உணவு விடுதிகளில் பணிபுரிவோர் அனைவரும் நகம் மற்றும் தலைமுடியைச் சீராக வெட்டி இருக்க வேண்டும், சுத்தமான ஆடைகள் அல்லது மேல் அங்கி அணிந்திருக்க வேண்டும்.
 
நாள்பட்ட மாமிசம் (இறைச்சி) மீன் மற்றும் இதர அசைவ உணவுகளை சேமித்து வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. சுகாதார ஆய்வாளர்கள் கூறும் அறிவுரைகளை உடனுக்குடன் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் சட்டம் 1939ன் படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

க‌ராத்தே போட்டி!கீழ‌க்க‌ரை "பேர்ல் மாண்டிசோரி" மாண‌வ‌ன் தேசிய‌ அள‌வில் சாத‌னை!


சென்னையில் தேசிய‌ அள‌வில் சிட்டோரியா க‌ராத்தே அசோசியேச‌ன் ந‌ட‌த்திய‌ போட்டியில் கீழ‌க்க‌ரை தாசிம்பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூி வ‌ளாக‌த்தில் அமைந்துள்ள‌ பேர்ல் மாண்டிசோரிப‌ள்ளி மாண‌வ‌ன் முக‌ம்ம‌து ப‌ஸ்ஹான்(10)20 25 எடைக்குட்பட்ட‌ பிரிவில் தேசிய‌ அள‌வில் இர‌ண்டாம் ப‌ரிசு பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.  மேலும் ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ள் மாவ‌ட்ட‌ அள‌வில் ந‌டைபெற்ற‌ போட்டியில் ப‌ரிசுக‌ளை வென்றுள்ள‌ன‌ர். 
ப‌ரிசுக‌ளை அள்ளி வ‌ந்த‌ சின்ன‌ஞ்சிறிய‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ம‌ற்றும் த‌லைமை ஆசிரிய‌ர் சாகிரா பானு ம‌ற்றும் க‌ராத்தே ப‌யிற்சியாள‌ர் ஆசிரிய‌ர்க‌ள் பாராட்டின‌ர்.

 

Friday, November 9, 2012

வ‌ட‌க்குதெரு த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ சுகாதாரப்ப‌ணிக‌ளுக்கு வாக‌ன‌ம் அர்ப‌ணிப்பு!


கீழ‌க்க‌ரை எஸ்.எஸ்,.முக‌ம்ம‌து யூசுப் ‍ கே.எம்.எஸ் ர‌சீனா பீவி அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் மூல‌மாக‌ 18,19,20,21வ‌து ஆகிய‌ வார்டு ம‌க்க‌ளுக்காக‌  திட‌க்க‌ழிவு அக‌ற்றும் ஹைட்ராலிக் வாக‌ன‌ம் அர்ப‌ணிப்பு விழா வ‌ட‌க்குதெரு முகைதீனியா ப‌ள்ளி வளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.
வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் க‌த்தீபு சாகுல் ஹ‌மீது கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஜ‌ப‌ருல்லா த‌லைமை வ‌கித்தார்.

கீழ‌க்க‌ரை ந‌கராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
இதில் முன்னாள் சேர்ம‌ன் ப‌சீர் அக‌ம‌து,முன்னாள் எம்.எல்.ஏ ஹாமீது இப்ராகிம்,வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் செய‌லாளர் த‌ம்பி வாப்பா என்ற‌ முகைதீன் இப்ராகிம்,ராம‌நாத‌புர‌ம் சுகாதார‌த்துறை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன்,கிழ‌க்குதெரு கைராத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ ப‌ள்ளி தாளாள‌ர் செய்ய‌து இப்ராகிம்,த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்,ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன்,மக்கள் நலபாதுகாப்பு கழக பொருளாளர் முகமதுசாலிஹ் ஹூசைன் அற‌க்க‌ட்ட‌ளையின் நிர்வாகிக‌ள் ம‌ன்சூர் ஹீசைன்,ஜெசிமா,சித்தி ஆபிதா நிசார், உள்ளிட்ட ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு பேசின‌ர்.

முன்ன‌தாக அறக்க‌ட்ட‌ளையின் நிர்வாகி முக‌ம்ம‌து ர‌பீக் வ‌ர‌வேற்றார். அறக்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ர் ஜ‌ப‌ருல்லா ,அற‌க்க‌ட்ட‌ளையின் நிர்வாகியும்,ஜ‌மாத் த‌லைவ‌ருமான‌ அக்ப‌ர்கான் உள்ளிட்ட‌‌ ஜ‌மாத்தார்க‌ள் முன்னிலையில் வாக‌ன‌த்தின் சாவி உரியவ‌ர்க‌ளிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து.

விழாவில் அறக்க‌ட்ட‌ளை சார்பாக‌ உத‌வி கோரிய‌ 2 மாண‌விக‌ளின் உய‌ர் க‌ல்வி ப‌டிப்புக்கான‌ செல‌வுக்கு காசோலை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து,
க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்,இடி மின்ன‌ல் ஹாஜா,அருசியாபேக‌ம்,ஜெய‌பிர‌காஷ்,ர‌பியுதீன்,பாவா செய்ய‌து க‌ருணை உள்ளிட்ட‌ ப‌ல‌ க‌வுன்சில‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.வ‌ட‌க்குதெரு ஜமாத் உத‌வி த‌லைவ‌ர் முக‌ம்ம‌து ஜாகிர் ஹுசைன் ந‌ன்றி கூறினார்.
 

Thursday, November 8, 2012

இஸ்லாமியா ப‌ள்ளியில் மாண‌வ‌,மாண‌வியர் 4 பேர் மாநில‌ அள‌விலான‌ போட்டிக்கு த‌குதி !


ம‌ண்ட‌ல‌ அள‌விலான‌ விளையாட்டு போட்டிக‌ளில் இஸ்லாமியா ப‌ள்ளி மாண‌வ,மாண‌விய‌ர் 4 பேர் வெற்றி பெற்று  மாநில‌ போட்டிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர்.
செஸ் போட்டியில் முத‌லிட‌ம் பெற்று மாண‌வி சாலோம் மாநில‌ அளவில் த‌குதி பெற்றுள்ளார்.
மாண‌வ‌ர்க‌ள் முச‌ம்மில் ம‌ற்றும் ச‌தாம் ஹுசைன் ஆகியோர் டேக்வொன்டோ போட்டியில் முத‌லிட‌ம் பெற்று மாநில‌ அள‌விலான‌ போட்டிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர்.
மாண‌வ‌ர் பாசித் குத்துச‌ண்டையில் முத‌லிட‌ம் பெற்று மாநில‌ அள‌விலான‌ போட்டிக்கு த‌குதி பெற்றுள்ளார்.

மேலும் ந‌டைபெற‌விருக்கும் வாலிபால் ம‌ற்றும் சைக்கிளிங் போட்டிக‌ளில் வெற்றி பெற்று மாநில‌ அள‌வில் த‌குதி பெறுவார்க‌ள் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரி ந‌க‌ராட்சியில் குழுமிய‌ பெண்க‌ள்!


கீழக்கரை அன்பு நகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்டு அருகில் உள்ளது அன்புநகர். இங்கு கடந்த ஒரு மாதகாலமாக குப்பை, கழிவுநீர் சரியான முறையில் அகற்றப்படாததால் அனைத்து வீடுகளிலும் டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்சல் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கீழக்கரை அன்பு நகரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியைச் சேர்ந்த பாபு என்ப வரின் மகள் மாலதி(10) மற்றும் கமலி(6), ஹபீப்(3), மணிமேகலை(20) உட்பட 25க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்ச‌லால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கவிதா(25), வாசுவின் மனைவி வசந்தி (22) உள்பட 50கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து நகராட்சி கமிஷனர் முகமது முகைதீனிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ரூபி மற்றும் ஜெனி கூறுகையில், ‘எங்கள் பகுதியில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடி கிடக்கிறது. அன்புநகர் முன்னேற்ற சங்கம் சார்பாக பலமுறை நகராட்சியில் மனு கொடுத்துள்ளோம். இன்றுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
செப்டிக்டேங்கில் எடுக்கும் கழிவுநீரையும் எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் சுடுகாட்டில் திறந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் துர்நாற்றம் எடுத்து காய்ச்சலால் பாதிக்காத வீடுகளே இல்லை என ஆகிவிட்டது. தற்போது கமிஷனரிடம் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுத்துள்ளோம். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், ‘உடனடியாக கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

காய்ச்சலில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை சிறுவன் உயிர‌ழ‌ப்பு!


கீழக்கரை அன்புநகரைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோதிவேலன்(10). முதுகுளத்தூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரகாலமாக கீழக்கரை அன்புநகரில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் முதுகுளத்தூர் சென்றார். அன்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் காய்ச்சல் குறையாமல் இருந்ததால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தால் கீழக்கரை அன்புநகர் பகுதியில் பெரும் சோக‌த்தில் ஆழ்ந்துள்ள‌து.

ம‌க்க‌ள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,
ம‌க்க‌ள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,
க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் இதுவ‌ரை கீழ‌க்க‌ரையில்  காய்ச்ச‌லுக்கு நான்கு உயிர்க‌ள் ப‌லியாகி விட்ட‌து.ஆனால் அர‌சு சுகாத‌ர‌த்துறையின் மாவ‌ட்ட‌ துணை இய‌க்குந‌ர் உள்ளிட்ட‌ சுகாதார‌த்துறையின‌ர் கீழ‌க்க‌ரையில் டெங்கு இல்லை என்று மேலிட‌த்துக்கு த‌க‌வ‌ல் தெரிவிப்ப‌தில் தான் அதிக‌ ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன‌ர்.அர‌சு ம‌ருத்துவ‌மனைகளில் டெங்கு காய்ச்ச‌லால் உயிரிழ‌ப்ப‌வ‌ர்க‌ளை டெங்குவால‌ உயிர‌ழ‌ப்பு இல்லை என‌று வேறு கார‌ண‌ங்க‌ளை கூறுகின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளின் பொறுப்ப‌ற்ற‌ இந்த‌ செய‌லால் டெங்கு காய்ச்ச‌ல் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் கீழ‌க்க‌ரையில் ம‌ந்த‌மாக‌ ந‌டைபெறுகின்றன‌ற‌ன‌.நாளுக்கு நாள் காய்ச்ச‌லின் பாதிப்பு அதிக‌ரித்து வ‌ருகிற‌து.ஏரா‌ளாமான‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் ம‌துரை ம‌ற்றும் ராமநாத‌புர‌ம் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வ‌ருகிறார்க‌ள்.ப‌ர‌வி வ‌ரும் டெங்குவின் பாதிப்பால் விரைவில் பொது ம‌க்க‌ள் ஊரை காலி செய்ய‌ வேண்டிய‌ சூழ்நிலை ஏற்ப‌டுமோ என்று அச்ச‌ப்ப‌ட‌ வேண்டியுள்ள‌து.தொர‌ந்து இது போன்று அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க த‌வ‌றும் ப‌ட்ச‌த்தில் கீழ‌க்க‌ரையின் அனைத்து ஜ‌மாத்க‌ளும் ஒன்று கூடி ந‌ம‌தூரில் நில‌வும் இந்த‌ அவ‌ல‌ நிலையை போக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஆலோச‌னை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.

Wednesday, November 7, 2012

கீழக்கரை ஓட்டல்க‌ளில் க‌மிஷ‌ன‌ர் சோத‌னை ந‌ட‌த்தி எச்ச‌ரிக்கை !


கீழக்கரை ஓட்டல்களில் நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து சுகாதாரம் காக்க உத்தரவிட்டார்.

கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஓட்டல் மற்றும் டீக்கடையில் சுகாதாரம் இல்லாமல் உள்ளது என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் தலைமையில் சுகாதார இன்ஸ்பெக்டர்கள் முகமது ஐயூப், மூர்த்தி மற்றும் அலுவலர்கள் ஓட்டல் மற்றும் டீக்கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கைப்பற்றினர். மேலும் கடையில் தண்ணீரையும் இடத்தையும் பார்த்து தண்ணீரில் மருந்து ஊற்றி சுகாதாரமாக வைத்திருக்க வேண் டும் என்று எச்சரித்தனர்.
ரொட்டி போடும் அடுப்பை ரோட்டில் வைத்திருப்பதால் வாகனங்கள் போகும்போது ரோட்டில் உள்ள தூசி உணவு பண்டங்களில் படிந்து சுகாதாரக்கேடு ஏற்படும். அதனால் அடுப்பை உள்ளே வைத்து ரோட்டி போடவேண்டும் எனக் கூறினர்.

இதுகுறித்து கமிஷனர் முகமது முகைதீன் கூறுகையில், ‘இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை களில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்படும். சுகாதாரம் இல்லாமல் இருந்தால் கடை சீல் வைக்கப்படும்’ என்றார். 

கீழ‌க்க‌ரையில் பூட்டை உடைத்து க‌டையில் ரூ 1 ல‌ட்ச‌ம் கொள்ளை


கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெரு முஸ்லீம் ப‌ஜார் அருகில் ரிபாய் தைக்கா எதிர்புற‌ம் கீழ‌க்க‌ரை க‌ஸ்ட‌ம்ஸ் ரோட்டை சேர்ந்த‌ ச‌த‌க்க‌த்துல்லா ம‌க‌ன் நூருல் அமீன் ‌ வாட‌கை பாத்திர‌ க‌டை ந‌ட‌த்தி வ‌ந்தார்.இவ‌ர் ச‌மைய‌ல் ப‌ணிக‌ளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வ‌ந்தார்.இந்நிலையில் த‌ன‌து வாடிக்கையாள‌ரிட‌ம் பெற‌ப்ப‌ட்ட‌ ரூ 1 ல‌ட்ச‌த்தை க‌டையில் வைத்து விட்டு சென்றாராம்.ம‌றுநாள்  காலையில் க‌டை திற‌க்க‌ சென்ற‌ போது க‌டையின் பூட்டு உடைக்க‌பட்டு ரூ 1 ல‌ட்ச‌த்தை காண‌வில்லை என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இத‌னைய‌டுத்து அதிர்ச்சி அடைந்த‌ க‌டைகார‌ர் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகார் செய்த‌தை தொட‌ர்ந்து டி.எஸ்.பி சோம‌ சேக‌ர்,ஏடி.எஸ்.பி உமையாள்,இன்ஸ்பெக்ட‌ர் க‌னேஷ‌ன்,ச‌ப் இன்ஸ்பெக்ட‌ர் கோபால் ஆகியோர் பார்வையிட்டு வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசார‌ணை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.மோப்ப‌ நாயும் வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌து.
 

Tuesday, November 6, 2012

கர‌ண்ட் இல்லை!க‌ண‌க்கில்லா க‌ட்ட‌ண‌ம் உண்டு!மின் க‌ண‌க்கீட்டில் குள‌றுப‌டி!

கீழக்கரையில் மின்கணக்கீட்டில் குளறுபடி நிலவுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மின்வாரியம் சார்பில் வீடு வீடாக சென்று மின் கணக்கு எடுத்து, அதன்படி பயனாளிகள் பில் தொ கை செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது கீழக்கரை மின்வாரியத்தில் உள்ள கணக்கீட்டாளர்கள் சரியான முறையில் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பது இல்லை. டோர்லாக் என்று குறிப்பிட்டு முந்தய மாதத்தில் போட்ட தொகையை மீண்டும் கட்ட சொல்கின்றனர். மேலும் மீட்டரில் ப‌திவாகியிருக்கும் கணக்கை பார்க்காமல் தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப தொகையை நிர்ண‌யித்து செல்வதால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கவுன்சிலர் சாகுல்ஹமீது கூறுகையில்,
எனது வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் சரியான முறையில் மின்கணக்கீடு எடுப்பதில்லை. ஒருமுறை மின்கட்டணம் அதிகமாக வந்தால், மின் சிக்கனத்தை கடைபி டிக்கிறோம். ஆனால், கணக்கீட்டாளர்கள் கடந்த முறை செலுத்திய தொகையை மீண்டும் செலுத்தும் படி கூறுவதால், கூடுதல் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிலர் டோர்லாக் என்று எழுதி விட்டு சென்று விடுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர், என்றார்.

இது குறித்து மின் ப‌ய‌னீட்டாள‌ர் பாசில் கூறுகையில்,‌ மாத‌ந்தோறும் தின‌மும் ப‌ல‌ ம‌ணி நேர‌ம் மின்சார‌ம் துண்டிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் க‌ட்ட‌ண‌ம் ம‌ட்டும் அதிக‌மாக‌ வ‌ருகிற‌து.இது எப்ப‌டி சாத்திய‌ம்? உட‌ன‌டியாக இதை ச‌ரி செய்து முறையான‌ க‌ட்ட‌ணம் வ‌சூலிக்க‌ வேண்டும் என்றார்
 

Monday, November 5, 2012

கீழ‌க்க‌ரை -ராம‌நாத‌புர‌ம் சாலை விப‌த்தில் கீழ‌க்க‌ரை இளைஞ‌ர் உள்ளிட்ட‌ 2 பேர் உயிர‌ழ‌ப்பு

சிகிச்சை ப‌லனின்றி உயிர‌ழ‌ந்த‌ ச‌தீஷ்
                  













                                                                                                      


    ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் உயிர‌ழ‌ந்த‌ லாட‌சாமி

 
கீழ‌க்க‌ரை பிர‌புக்க‌ள் தெருவை சேர்ந்த‌ செய்ய‌து அபுதாகிர் ம‌க‌ன் ந‌சுரூதீன்(20) ம‌ற்றும் அண்ணா ந‌க‌ர் க‌ருப்பையா ம‌க‌ன் ச‌தீஸ்(20) ஆகியோர் க‌ட‌ந்த‌ 1ம்தேதி ப‌ல்ச‌ர் பைக்கில் இருவ‌ரும் கீழ‌க்க‌ரையிலிருந்து ராம‌நாத‌புர‌ம் நோக்கி சென்றுள்ள‌ன‌ர்.

அச்ச‌ம‌யம் திருப்புல்லாணி அருகே செல்லும் போது சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌ ராம‌நாத‌புர‌ம் வைகை ந‌க‌ரை சேர்ந்த‌ ர‌த்தின‌ம் ம‌க‌ன் மாட‌சாமி(42) என்ப‌வ‌ர் மீது பைக் மோதிய‌தில் ப‌டுகாய‌ம் அடைந்த‌ லாட‌சாமி ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே உயிர‌ழ‌ந்தார். ம‌றுபுற‌ம் பைக் நிலை த‌டுமாறி விழுந்த‌தில் பைக்கில் வ‌ந்த‌ இருவ‌ரும் ப‌டுகாய‌ம் அடைந்த‌ன‌ர்.

ப‌ல‌த்த‌ காய‌ம‌டைந்த‌ வாலிப‌ர்க‌ள் இருவ‌ரும் ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டு மேல் சிகிச்சைக்காக‌ ம‌துரை அர‌சு மருத்துவ‌ம‌னைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் சிகிச்சை ப‌ல‌னின்றி ச‌தீஸ் உயிர‌ழ‌ந்தார்.ப‌டுகாய‌ம‌டைந்த‌ ந‌சீருக்கு தொட‌ர்ந்து சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இது குறித்து திருப்புல்லாணி போலீசார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசார‌ணை ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள்.

 கீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் தொட‌ர் விப‌த்துக்க‌ள் இப்ப‌குதி ம‌க்க‌ளிட‌ம் பெரும் துய‌ர‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

Sunday, November 4, 2012

கீழ‌க்க‌ரை,ஏர்வாடி ப‌குதிக‌ளில் பொன்னிக்குருவி வேட்டையாடிய‌ 5பேர் கைது!


பிடிப்ப‌த‌ற்கு த‌டை செய்யப்ப‌ட்டுள்ள‌ பொன்னிக்குருவி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இந்திய‌ன் பிட்டாவை வேட்டையாடி வ‌ருவ‌தாக‌  வ‌ன‌த்துறையின‌ருக்கு கிடைத்த‌ த‌க‌வ‌லின் பேரில் வ‌ன‌த்துறை ச‌ர‌க‌ர் காப்பாள‌ர் சுந்த‌ர‌க்குமார் உத்த‌ர‌வின் பேரில் கீழ‌க்க‌ரை வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் த‌லைமையில் வ‌ன‌வ‌ர் முத்து வ‌ன‌க்காப்பாள‌ர்க‌ள் பால‌கிருஸ்ண‌ன்,ர‌விகுமார், ஆகியோர் கீழ‌க்க‌ரை,ஏர்வாடி தோட்ட‌ங்க‌ள் அமைந்திருக்கும் ப‌குதிக‌ளில் தீவிர‌ சோத‌னையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

சோத‌னையின் போது பொன்னிக்குருவிக‌ளை வேட்டையாடி விற்ப‌னை செய்து ச‌டைமுனிய‌ன் வ‌ல‌சையை சேர்ந்த‌  நாக‌ராஜ்,க‌ருப்ப‌சாமி,க‌ருப்ப‌ச்சாமி,வெள்ளைத்துரை ,ராம‌ராஜ‌ன்,முனீஸ்வ‌ர‌ன் ஆகிய‌ 5 ந‌ப‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு ராம‌நாத‌புர‌ம் கோர்டில் ஆஜ‌ர்ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

அவ‌ர்க‌ளிட‌மிருந்து ஏராள‌மான‌ பொன்னிக்குருவிக‌ள் ம‌ற்றும் வ‌லைக‌ள் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

இவ‌ர்களிட‌மிருந்து விலைக்கு வாங்க‌ப்ப‌ட்ட‌ நூற்றுக்கண‌க்கான பொன்னிக்குருவிகள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌டும் என்றும் மேலும்  த‌டை செய்ய‌ப்ப‌டுள்ள‌ பொன்னிக்குருவிக‌ளை வேட்டையாட‌வோ,வேட்டையாடியதை வாங்க‌வோ வேண்டாம் என்று வ‌ன‌த்துறை சார்பில் பொதும‌க்க‌ளை கேட்டு கொள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.



 

கீழக்கரை 18 வாலிபர் தர்ஹாவில் கந்தூரி விழா !

கீழக்கரை சாலைத்தெரு 18 வாலிபர் தர்ஹாவின் கந்தூரிவிழா நடைபெற்றது.
கீழக்கரை சாலைதெரு 18 வாலிபர் தர்ஹாவில்  கந்தூரி விழா அக்.16ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி 18 நாள் மவுலீது ஓதப்பட்டு நேற்று கடைசி மவுலீது ஓதி அப்துல்சலாம் ஆலிம் உலக நன்மைக்காக துஆ செய்தார்.

விழா முடிவு பெற்றதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு தப்ரூக் (நெய்சோறு) வழங்கப்பட்டது.தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் சித்திக்அலி, பொருளாளர் ஜகுபர்சாதிக், விழா கமிட்டி தலைவர் சீனிமுகமதுஆலிம் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை விழா கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முகமது தம்பி, சுல்தான், அல்தாப்ஹூசைன், காதர் மீராசாகிபு, ஜப்பார் செய்திருந்தனர்.

Friday, November 2, 2012

கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் சேர்ம‌னை முற்றுகையிட்டு பெண்க‌ள் புகார்!




கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் புதிய‌தாக‌ சீர‌மைக்க‌ப்ப‌ட்ட‌  க‌ழிவுநீர் கால்வாயில் சீராக‌ க‌ழிவு நீர் ஓடாம‌ல் கால்வாயில் நிறைந்து சாலையோர‌ம் வ‌ழிந்தோடி சுகாதார‌ சீர்கேடு ஏற்ப‌டுகிற‌து என‌ 20 வ‌து வார்டை சேர்ந்த‌ பொது ம‌க்க‌ள் கட‌ந்த‌ 22ந்தேதி நக‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் சென்று தலைமை எழுத்த‌ரை முற்றுகையிட்டு கோஷ‌மிட்ட‌ன‌ர்.உட‌ன‌டியாக‌ க‌மிஷ‌ன‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்பட்ட‌ இட‌த்திற்கு சென்று பார்வையிட்டு விரைவில் இப்பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும் என்றார்.

இந்நிலையில் நேற்று க‌ழிவுநீர் வ‌ழிந்தோடி அப்ப‌குதி முழுவ‌து‌ம் துர்நாற்ற‌ம் வீசிய‌தை தொட‌ர்ந்து வார்டு க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா வீட்டை முற்றுகையிட்ட‌ன‌ர். அவ‌ர் ந‌க‌ராட்சி பொறியாளர் அறிவ‌ழ‌க‌னுக்கு த‌க‌வ‌ல் தெரிவித்தார் அவ‌ர் பொதும‌க்க‌ளை ச‌மாதான‌ம் செய்ய‌ முய‌ன்றார். ஆனால் அப்ப‌குதி ம‌க்க‌ள் சேர்ம‌ன் இங்கு வ‌ர‌ வேண்டும் என‌ கோரிக்கை வைத்த‌ன‌ர்.இதை தொட‌ர்ந்து உட‌ன‌டியா  ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்தார்.

அவ‌ரை முற்றுகையிட்ட‌ பெண்க‌ள் உள்ளிட்ட‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் த‌ங்க‌ளின் புகார்க‌ளை சேர்ம‌னிட‌ம் தெரிவித்த‌ன‌ர் உட‌ன‌டியாக‌ இக்குறைக‌ள் தீர்க்க‌ப்ப‌டும் என‌  பொதும‌க்க‌ளிட‌ம் உறுதிய‌ளித்தார் .இதை தொட‌ர்ந்து அப்ப‌குதி ம‌க்க‌ள் ச‌மாதான‌ம் அடைந்த‌ன‌ர்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறுகையில்,
இப்ப‌குதியில் கால்வாய் அமைக்கும் ப‌ணியை எடுத்த‌ ஒப்ப‌ந்த‌தார‌ர் ப‌ணியை தொட‌ர‌ ம‌றுத்து விட்டார் என‌வே வேறு ஒரு ஒப்ப‌ந்த‌ரார‌ரிட‌ம் இப்ப‌ணியை ஒப்ப‌டைத்து க‌ழிவுநீர் கால்வாய் சீர‌மைக்க‌ப்ப‌ட்டு இப்பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும் என்றார்.

இது குறித்து முன்னாள் க‌டலாடி ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹாமீது இப்ராகிம் கூறுகையில்,


க‌ட‌ந்த‌ சில‌ வார‌ங்க‌ள் முன் த‌ன‌து வார்டு ப‌குதியில் தேங்கியுள்ள குப்பைக‌ளை ஏன் அக‌ற்ற‌வில்லை என‌ கேட்ட‌ எங்கள் ப‌குதி க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா மீது துப்புர‌வு மேஸ்திரி கொலை மிர‌ட்ட‌ல் என‌ பொய் புகார் அளித்த‌தால் காவ‌ல்துறையின‌ர் கைது செய்து சிறையில் அடைத்த‌ன‌ர்.என‌வே அதுபோல் மீண்டும் ந‌ட‌ந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌‌ க‌வுன்சி‌லர் ம‌ற்றும் பொதும‌க்க‌ளுட‌ன் நாங்க‌ள் அனைவ‌ரும் இற‌ங்கி போராட‌ வேண்டியுள்ள‌து என்றார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வாயில் க‌ருப்பு துணியுட‌ன் திமுக‌ ம‌ற்றும் சுயேச்சை க‌வுன்சில‌ர்க‌ள்!!


கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் ராவியத்துல்கதரியா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகமது முகைதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் சுயேட்சைகள் இருவர் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வந்தனர்.

ந‌க‌ராட்சி சார்பில் அ.தி.மு.க., நகர் செயலர் ராஜேந்திரன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரன் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்றத்தில் நடந்த விவாதத்தின் ஒரு ப‌குதி ‍‍‍ :-

இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு திமுக):-
 எனது வார்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. அதை ஏன் ஒருவாரமாக அகற்றவில்லை என மேஸ்திரி மனோகரனிடம் கேட்டேன். அதற்கு என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார் என நகராட்சி நிர்வாகத்திடம் பொய் புகார் செய்ததை விசாரிக்கவில்லை. போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதை கண்டிக்கிறோம்.என்றார்

மேலும் (மேஸ்திரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இடிமின்னல்ஹாஜா, அருசியா (19வது வார்டு திமுக ) சாகுல்ஹமீது (5வது வார்டு திமுக ) மற்றும் சுயேச்சைகள் தங்கராஜ் (6வது வார்டு) முகைதீன்இபுராகிம் (18வது வார்டு) ஆகியோர் மீண்டும் கருப்புதுணியால் வாய்களை கட்டிக்கொண்டனர். இதனால், நகர்மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. (தொடர்ந்து விவாதம் நடந்தது
)
கவுன்சிலர் மஜிதாபீவி(15வதுவார்டு):-
 எனது வார்டில் சுகாதாரம் கேள்விகுறியாகிவிட்டது. குப்பை அகற்றி பல நாட்களாகிவிட்டது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது.

இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு):-
 கடந்த மார்ச் 22ல் நடந்த கூட்டத்தில் ஏற்கனவே ஜின்னா தெருவில் உள்ள பழைய கழிப்பறையை அகற்றி விட்டு புதிய கழிப்பறை கட்ட ரூ.6 லட்சத்திற்கு மன்றத்தின் அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. டெண்டர் விடப்பட்டு பணியும் முடிந்தது. தற்போது மீண்டும் கழிப்பறையை விரிவுபடுத்த ரூ.6 லட்சம் நிதி கேட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

பாவா செய்யதுகருணை (8வது வார்டு):-

 கிழக்குத்தெரு முகமதுகாசிம் அப்பா தர்கா பகுதியில் தீர்மானம் போடாத இடத்தில் வாறுகால் வாய்க்கால் கட்ட ஒருமாதத்திற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் வாறுகால் பணி நடைபெறவில்லை. தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. பள்ளி குழந்தைகளை ஏற்றி செல் லும் வாகனம், குடிநீர் வாக னம் என எந்த வாகனமும் அப்பகுதிக்குள் வர முடியவில்லை. எனது வார்டு பகுதியில் சிமென்ட சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. குடிநீர் குழாய் பதித்த பிறகே சிமென்ட் சாலை பணியை துவக்க வேண்டும்.

தலைவர்:‍‍ பள்ளம் மூட ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் குழாய் பதித்தபிறகே சாலை அமைக்கப்படும்.



முகைதீன் இபுராகிம்:   2012-2013 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த தகவல் மன்ற பார்வைக்கு வைக்காமல், அரசு நிதியை வீணடிக்கும் வகையில், தன்னிச்சையாக பணிகளை தேர்வு செய்து இருப்பதை கண்டிக்கிறோம்
.
தலைவர்: ஏற்கனவே பணியாற்றிய கமிஷனர் மற்றும் ஒவர்சியர் திட்ட பணிகளை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர்.இதில் எங்கள் தலையீடு கிடையாது.

அஜ்மல்கான்: சேரான் தெருவில் குப்பை அள்ளாமல் அரை அடி நீளத்திற்கு, புழுக்கள் உள்ளது. நோயால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தலைவர்:இரண்டு நாளில் கீழக்கரையில் குப்பை, அகற்றப்படும்.

ஹாஜா நஜ்முதீன்: கமிஷனர், ஒப்பந்ததாரரின் கைக்கூலியாக இருக்கக்கூடாது. திட்டப்பணிகளை முறைப்படுத்த தெரியவில்லை என்றால் இன்ஜி., கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து ஆலோசனை கேளுங்கள்.
ப‌ட‌ விள‌க்க‌ம்:‍கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் 2010ம் வ‌ருட‌ம் ரூ16 ல‌ட்ச‌ம் கொடுத்து வாங்கிய‌ ட‌ம்ப‌ர் பிளாச‌ர் ப‌யன்பாடு இல்லாம‌ல் ந‌கராட்சியில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌ன் அருகே ப‌ழுதான‌ ந‌க‌ராட்சியின் டிராக்ட‌ர் ஒன்று நிறுத்த‌ப்ப‌ட்டு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ஆன‌தால் துரு பிடித்து த‌ற்போது ம‌ண்ணில் புதைந்து கொண்டிருக்கிறது.

ஜெயபிரகாஷ்: நகராட்சிக்கு சொந்தமான டம்பர் பிளேசரை பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 25 லட்சம் ரூபாய் செலவில் டம்பர் பிளேசர் வாங்க நிதி ஒதுக்கிய மர்மம் என்ன?.

அரூஸியா பேகம்: குப்பை அள்ளச் சொன்னதற்காக போலீசில்,பொய்யான புகார் அளித்து எனது கணவரை சிறையில் அடைத்த துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர்:  துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மேஸ்திரி ம‌னோக‌ர‌ன் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கூறி 15 க‌வுன்சில‌ர்க‌ள் கையெழுத்திட்ட‌ ம‌னுவை ந‌க‌ராட்சி த‌லைவ‌ரிட‌ம் ம‌னுவாக‌ கொடுத்த‌ பெற்று கொண்ட‌ த‌லைவ‌ர் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என்றார்.

மேலும் ந‌க‌ராட்சி குப்பை கிட‌ங்குக்கு செல்லும் வ‌ழியில் வேக‌த்த‌டை ம‌ற்றும் இத‌ர‌ ப‌ணிக‌ளுக்கு  ரூ80 ஆயிர‌ம் தீர்மான‌த்தில் வைக்க‌ப்ப‌ட்ட‌து இதை க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் க‌டுமையாக‌ எதிர்த்த‌தால் த‌லைவ‌ர் அத்தீர்மான‌த்தை ர‌த்து செய்தார்.
 

Thursday, November 1, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதியில் குவிந்த‌ பொன்னிக்குருவி உள்ளிட்ட‌ ப‌றவைக‌ள்!


பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து ஏராளமான வெளிமாநில பறவைகளும் ,வெளிநாட்டு பறவைகளும் கடலோர மாவட்டஙகளில் குவிய தொடங்கியுள்ளது.குறிப்பாக வ‌ட‌ இந்தியாவின் ஹிமால‌யா ம‌ற்றும் இல‌ங்கையை பூர்வீக‌மாக‌ கொண்ட‌ இந்தியன் பிட்டா என்றழைக்கப்படும்  பொன்னிக்குருவி அதிகளவில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பறவைகள் சரணாலயம்,சக்கரகோட்டை கண்மாய், மற்றும் கீழ‌க்க‌ரை அதன் சுற்றுப்புற உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது.பறவைகளின் வருகைக்காக காத்திருந்த வேட்டைக்காரர்கள் தங்களின் பணியை செவ்வென தொடங்கிவிட்டார்கள்.

இது குறித்து கீழக்கரை மக்க‌ள் சேவை இய‌க்க‌த்தின் முஜீப் கூறுகையில்,
 பொன்னிக்குருவி மற்றும் கம்பத்தான் வகை இறைச்சி ருசியாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வகை குருவிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.இவர்களால் பிடிக்கப்படும் பொன்னிக்குருவி ரூ40லிருந்து ரூ50 வரை விற்கப்படுகிறது.முன்பு கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் தெரு தெருவாக‌ விற்ப‌னை செய்ய‌ப்ப‌ட்ட்ட‌து த‌ற்போது வ‌ன‌த்துறையின் ந‌ட‌வ‌டிக்கையால் கீழ‌க்க‌ரை ப‌குதிக‌ளில் பொன்னிக்குருவி விற்‌ப‌னைக்கு வ‌ருவ‌து   வெகுவாக‌ குறைந்து விட்ட‌து.ஆனாலும் ம‌றைமுக‌மாக‌ ஒரு சில‌ர் விற்ப‌னை செய்கின்ற‌ன‌ர்.என்றார்

கீழ‌க்க‌ரையில் சென்ற‌ ஆண்டு நூற்றுக்க‌ண‌க்கான‌ பொன்னிகுருவிக‌ளை வ‌ன‌த்துறையின‌ர் ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர்.மேலும் இவ்வ‌கை ப‌றவைக‌ளை பிடிக்க‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையினர் அறிவித்துள்ள‌ன‌ர்.மீறினால் ரூ 5 ஆயிர‌ம் அப‌ராத‌மும் ,6 மாத‌ சிறை த‌ண்ட‌னையும் அளிக்க‌ வாய்ப்புள்ள‌தாக‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.


 

கீழ‌க்க‌ரையின் புதிய‌ இன்ஸ்பெக்ட‌ர் ம‌ற்றும் ஓய்வு பெற்ற‌ ச‌ப் இன்ஸ்பெக்ட‌ருக்கு துணை சேர்ம‌ன் உள்ளிடோர் வாழ்த்து!


ப‌ட‌ விளக்க‌ம்: இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன்


கீழ‌க்க‌ரையில் புதிய‌ காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ராக‌ பொறுப்பேற்றுள்ள‌ க‌னேச‌ன்  ம‌ற்றும் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் ச‌ப் இன்ஸ்பெக்ட‌ராக‌ ப‌ணியாற்றி ஓய்வு பெற்ற‌‌ கார்மேக‌ம் ஆகிய‌ இருவ‌ருக்கும் நக‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் கீழ‌க்க‌ரை  மீன‌வ‌ர் ச‌ங்க‌த்தை சேர்ந்த‌ லுக்மானுல் ஹ‌க்கீம்,அட்ட‌ப்பா என்ற ந‌ல்ல‌ இப்ராஹிம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.

இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் திருநெல்வேலி மாவ‌ட்ட‌ம் க‌ங்கை கொண்டான் என்ற‌ ஊரை சேர்ந்த‌வ‌ராவார்.

 

Wednesday, October 31, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதிக‌ளில் ப‌ஸ்க‌ள் இய‌க்க‌ப்ப‌ட‌வில்லை!பொதும‌க்க‌ள் அவ‌தி!



பைல் ப‌ட‌ம்
 கமுதியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருபூஜைக்குச்சென்றவர்கள் மூன்றுபேர் கொலை செய்யப்பட்டனர். இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று  கீழக்கரையில் இன்று அதிகாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. இங்குள்ள ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களும் நகரங்களுக்கு செல்ல மறுத்தனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் சிரமமடைந்தனர். 40க்கும் அதிகமான கல்லூரி பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் மாணவர்கள் வரமுடியவில்லை. மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய மக்கள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விவசாயிகள் விளைந்த காய்கறிகளை நகரங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறினர். கீழக்கரையில் படிக்கும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நடந்து பள்ளிக்கு சென்றனர்.

கீழக்கரை கல்லூரி தரப்பில் விசாரித்தபோது, விடுதி மற்றும் உள்ளுர் மாணவர்களை கொண்டு கல்லூரி இயங்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் பஸ்சை இயக்க முடியாது, என்றனர்
த‌னியார் சர‌க்கு ஏற்றும் வேன்க‌ள் ப‌ய‌ணிக‌ள் வாக‌ன‌மாக‌ இய‌க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இதில் ஏராள‌மானோர் நின்று கொண் ப‌ய‌ண‌ம் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.
 

Monday, October 29, 2012

க‌ல்லூரிக‌ளுக்கான‌ வாலிபால் போட்டியில் கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி முத‌லிட‌ம்!


சென்னை அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் 16வ‌து ம‌ண்ட‌ல‌ வாலிபால் போட்டி புதுக்கோட்டை ம‌வுண்ட் சியோன் பொறியிய‌ல் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து.இதில் காரைக்குடி அழ‌க‌ப்பா பொறியிய‌ல் க‌ல்லூரி ம‌துரை கே.எல்.சி க‌ல்லூரி,சி ஆர் பொறியிய‌ல் க‌ல்லூரி உள்ப‌ட‌ 21 க‌ல்லூரிக‌ள் ப‌ங்கு பெற்ற‌து. இதில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி அரை இறுதி போட்டியில் ம‌துரை தியாக‌ராஜ‌ர் பொறியிய‌ல் க‌ல்லூரியை அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டியில் புதுக்கோட்டை ம‌வுண்ட் சியோன் பொறியிய‌ல் க‌ல்லூரியை வென்று சாம்பிய‌ன் கேட‌ய‌த்தை கைப‌ற்றிய‌து.

போட்டியில் வெற்றி பெற்று க‌ல்லூரிக்கு பெருமை சேர்த்த‌ மாண‌வ‌ர்க‌ளை சேர்ம‌ன் ஹ‌மீது அப்துல் காத‌ர்,தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்கத்துல்லா,முத‌ல்வ‌ர் ஜகாப‌ர்,உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர்க‌ள் சுரேஷ்குமார்,கோவிந்த‌ம்மாள் ம‌ற்றும் துறை த‌லைவ‌ர்க‌ள் பாராட்டின‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் த‌ர‌ம‌ற்ற‌ மின்விள‌க்குக‌ள் அமைப்ப‌தை த‌டுக்க‌ வேண்டும்!க‌வுன்சில‌ர் அறிக்கை!













18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் தெருவிள‌க்கு அமைக்கும் ப‌ணிக்காக‌ டெண்ட‌ர் விட‌ப்ப‌ட்டு த‌னியார் நிறுவ‌ன‌ம் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ரூபாய் ம‌திப்புள்ள டெண்ட‌ரை எடுத்த‌து.ஆனால் அர‌சின் விதிமுறைக‌ளை மீறி த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ளையும்,மின்சாத‌ன‌ங்க‌ளையும் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அமைப்ப‌த‌ற்கு முய‌ற்சித்த‌து.இதை ந‌டுநிலையாள‌ர்க‌ள் பல‌ரும் எதிர்ப்பு தெரிவித்த‌தால் அனைத்து பொருட்க‌ளையும் அந்நிறுவ‌ன‌ம் திரும்ப‌ பெற்றுக்கொண்ட‌து.

இந்நிலையில் மீண்டும் த‌ர‌மான‌ பொருட்க‌ளை விநியோக‌ம் செய்யும் என‌ காத்திருந்தோம் ஆனால்  ம‌றுப‌டியும் அந்த‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் த‌ர‌மில்லா டீயுப் லைட் உள்ளிட்ட‌ மின் சாத‌ன‌ பொருட்க‌ளை கீழ‌க்க‌ரையில் பொருத்த‌ இருப்ப‌தாக‌ அறிகின்றோம்.இந்த‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ள் அனைத்து ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் வைக்காம‌ல் த‌னியார் ப‌ள்ளி  வ‌ளாக‌த்தில் வைத்திருப்ப‌தாக செய்திக‌ள் கிடைத்துள்ள‌ன‌.

ஒப்ப‌ந்த‌ விதிமுறைப்ப‌டி அர‌சின் அனும‌தித்துள்ள‌‌ முன்ன‌‌ணி நிறுவ‌ன‌ங்க‌ளின் த‌ர‌மான‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ளைதான் பொருத்த‌ வேண்டும் அப்போதுதான் அடிக்க‌டி ப‌ழுது ஏற்படாது அர‌சு நிதியும் விண‌டிக்க‌ப்ப‌டாது.என‌வே மின் சாத‌ன‌ங்க‌ளை பொருத்துவ‌த‌ற்கு முன் அவ‌ற்றை ஆய்வு செய்து த‌ர‌மான‌வையாக‌ இருந்தால் ம‌ட்டுமே பொருத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ வேண்டும்.

டெண்ட‌ரில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ விதிமுறைக‌ளை மீறி த‌ர‌ம‌ற்ற‌ மின்சாத‌ன‌ பொருட்க‌ளை கீழ‌க்கரை ந‌க‌ரில் பொருத்த‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் அனும‌திக்குமானால் நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் ந‌டவ‌டிக்கை மேற்கொள்வேன் . இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பான‌ முந்தைய‌ செய்தி http://keelakaraitimes.blogspot.com/2012/06/blog-post_1228.html