Tuesday, June 19, 2012
கீழக்கரைக்கு தரமற்ற புதிய விளக்குகள் என குற்றச்சாட்டு!"முன்பே எச்சரித்தேன்"நகராட்சி தலைவர்!
பட விளக்கம் :-தரம் குறைந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ள தெருக்களில் பொருத்த உள்ள விளக்குகள் மற்றும் உபகரணங்கள்
கீழக்கரை நகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கீழக்கரை நகர் முழுவதும் தெரு விளக்குகளை சீர் அமைக்க டெண்டர் விடப்பட்டு குறைந்த விலைக்கு டெண்டர் எடுத்த மலானி என்ற நிறுவனத்தால் புதிய தெரு விளக்குகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தராரால் சப்ளை செய்யப்பட்டுள்ள விளக்குகளும் ,உபகரணங்களும் தரம் குறைந்தவையாக உள்ளது.எந்த ஒரு பொருளுக்கும் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் இல்லை.எனவே மாவட்ட கலெக்டராகிய தாங்கள் அவற்றை திருப்பி அனுப்பி தரமுள்ள பொருட்களை சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது,
சென்ற நகராட்சி மன்றத்தின் கூட்டத்தின் போது இந்த ஒப்பந்ததாரர் மிக குறைந்த விலைக்கு டெண்டரை கோரியுள்ளார் எனவே தரமான விளக்குகளை இவர்களால் தர முடியாதது மட்டுமில்லாமல் சரியாக பணிகளை செய்ய மாட்டார்கள் என எச்சரித்தேன்
ஆனால் இதே கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,ஜெயபிரகாஷ்,இடிமின்னல் ஹாஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தராருக்குதான் கொடுக்க வேண்டும் என்றார்கள்.நீங்கள் (கீழக்கரைடைம்ஸ்) உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்தீர்கள் எனவே நீங்களும் அந்த நிகழ்ச்சியை அறிவீர்கள். (இது தொடர்பான செய்தியை இதில் காணலாம்) http://keelakaraitimes.blogspot.com/2012/05/blog-post_05.html
தற்போது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் நான் முன்பு சொன்னதை தற்போது உறுதி படுத்தியுள்ளார்.
இவர்களே இந்த ஒப்பந்ததாரருக்கு கொடுக்க சொல்லி விட்டு இவர்களே இப்போது குறை கூறுகிறார்கள்.ஆனாலும் தரம் குறைந்த விளக்குகள் என நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து முகைதீன் இப்ராகிமிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது,
இவர்களுக்கு டெண்டரை கொடுக்கலாம் என்று நான் வலியுறுத்தியது உண்மைதான் ஏனென்றால் குறைந்த விலைக்கு இவர்கள்தான் கோரியிருந்தார்கள் அதே நேரத்தில் தரம் குறைந்த ஹைமாஸ்,சோடியம்,டியூப் லைட்கள் உள்ளிட்ட பொருட்களை இவர்கள் நமதூர் தலையில் கட்டுவதை ஏற்க முடியாது.எனவே இவர்கள் தரும் பில்லை நகராட்சி அங்கீகரிக்க கூடாது.தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த இந்த நிறுவனத்தின் பில்லை எவ்வித இடைஞசலும் இல்லாமல் பாஸ் செய்வதற்கு நகராட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பாக சந்தேகம் உள்ளது.விரைவில் உண்மையை வெளி கொண்டு வருவோம்.எனவேதான் கலெக்டர் வரை புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
இந்த செய்தியில் குறிப்பிட்ட நபருக்கு டெண்டரை கொடுக்கலாம் என தான் வலியுருத்தியதாக கணம் 18 வது வார்டு மக்கள் பிரத்நிதி ஒப்புக் கொள்கிறார்.சற்று யோசிப்போமா!
ReplyDeleteஇன்றைய காலக் கட்டத்தில் தரமான பொருளை குறைந்த விலைக்கு யார் கொடுப்பார்கள். நாட்டில் அனேக ஊழ்ல்கள் இப்படித் தானே அறங்கேற்றமாகிறது. கீழக்கரை நகராட்சி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?
ஆக, என்னமோ நடக்கிறது. மர்மமாக இருக்கிறது. ஒன்றுமே புரியலே. இநத உலகத்திலே.
பாவம். ஓட்டளித்த பாமர கீழககரை நகரவாசிகள்.!!!!!!!!
சட்ட விதிகளின் படி குறைந்த விலைக்கு கோரியுள்ள காண்ட்ராக்டாருக்குதான் டெண்டரை கொடுக்க முடியும் அதனால்தான் மாண்புமிகு கவுன்சிலர் ஜனாப் முகைதீன் இபுராஹீம் காக்கா இந்த நிறுவனத்துக்கு கொடுக்கலாம் என்றார்.அதில் தப்பு இல்லை ஆனால் நல்ல லைட்களை தருகிறார்களா என்று கவனிக்க வேண்டியது நகர்மன்ற நிர்வாகத்தின் கடமையல்லவா..
ReplyDeleteReplyDelete
she is doing social service better than earlier X counsilers.
ReplyDeleteplease do not create any problem to her.
"WORK AS A TEAM"