Sunday, October 30, 2011

கீழக்கரை வழியாக காரைக்குடி-கன்னியாக்குமரி ரயில் பாதைக்கு 1958.81கோடி

தங்கம் ராதாகிருஸ்னன்

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் கூட்டம் அதன் தலைவர் அமானுல்லா தலைமையிலும் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்னன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில் காரைக்குடி ,ராமநாதபுரம் ,கீழக்கரை ,கன்னியாக்குமரி வழியாக புதிய ரயில் பாதை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 30ல் ரயில்வே போர்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதில் காரைக்குடி முதல் ராமநாதபுரம் வரை 214.81 கிலோ மீட்டர் இதற்கான திட்ட செலவு 878.82 கோடி எனவும்.ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை 247.66 கிலோ மீட்டர் இதற்கான திட்ட செலவு1079.99 கோடி எனவும் ஆக மொத்தம் 1958.81 கோடி இதற்கான திட்ட செலவு என ரயில்வேதுறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, இந்த திட்ட மதிப்பீடு ரயில்வே துறையின் உயர்மட்டக்குழு பரிசீலனைக்கு பிறகு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.அதை தொடர்ந்து ஏராளமான பணிகள் பாக்கியுள்ளன இவை அனைத்தையும் விரைவாக மத்திய அரசு செய்ய வேண்டும் அப்போதுதான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இத்திட்டம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கும் சமூக நல சேவை இயக்கத்தினர் பாராட்டுக்குறியவர்கள்.இது வரை தொகுதி மக்களின் நல்னுக்காக பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எந்த கோரிக்கையையும் வைக்காத நமது ரித்தீஸ்.எம்பி இந்த திட்டத்தையாவது நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்.

Saturday, October 29, 2011

கீழக்கரை நகராட்சி துணை தலைவர் போட்டியின்றி தேர்வு!


கீழக்கரை நகராட்சி துணை தலைவருக்கான தேர்தலில் 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஹாஜா முகைதீன் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
நகராட்சி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் இப்பதவிக்கு ஹாஜா முகைதீன் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஹாஜா முகைதீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ந‌வ‌ 7ல் ப‌க்ரித் பெருநாள்!கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் அறிவிப்பு




தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்பட்ட தகவலை தமிழக அரசு தலைமை காஜிஅவர்கள் தெரிவித்து இத்தகவலை முறைப்படி அறிவிப்புச் செய்து விடுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நவம்பர் 7ல் பக்ரித் பெருநாள் என்பதை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ்ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் அறிவித்துள்ளார்.

Friday, October 28, 2011

கீழக்கரை குப்பையும்.. தீர்வுகளும்...

2010ல் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தோணிப்பலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்தினர்(பழைய பைல் படம்)


குப்பை கொட்டும் இடத்தை ஆய்வு செய்த மாசுக்கட்டுபாட்டு துறை


நகரை மேம்படுத்தும் கடமை நகராட்சியை சார்ந்தது. நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே மக்கள் செழிப்பாக இருக்க முடியும். அடுத்து வரும் 20 ஆண்டுக்கு மக்கள் தொகை எந்த அளவு உயரும் என்று திட்டமிட வேண்டும்; அதற்கேற்ப தண்ணீர் இருப்பு தேவை, திடக்கழிவு வெளியேறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள புதிய திட்டம் தயாரிக்க வேண்டும். அதற்கேற்ப, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் பண்ணைகளை அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு, நகராட்சி நிர்வாகங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வணிக வளாகம் கட்டுதல், கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவிர ரோடு, தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.


ஆனால் இவ‌ற்றை அனைத்தையும் பின்னுக்கு த‌ள்ளி இன்று கிழ‌க்க‌ரையில் த‌லை தூக்கி நிற்ப‌து குப்பை பிர‌ச்ச‌னைதான். கீழக்கரை 13000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் சேர்கிறது.

முந்தைய நகரசபை ஆட்சி காலத்தில் கீழக்கரை தோணிபாலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசன் ஏற்பாடின் பேரில் கீழக்கரை நகராட்சிக்கு தரப்பட்ட 11.5 ஏக்கர் இடத்தில் கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட கீழக்கரை நகராட்சியால் முடிவு செய்யப்பட்டு குப்பைகள் அங்கு கொட்டபட்டு வந்தது அந்த இடத்தை சுற்றி சுற்றுப்புற சுவர் கட்டும் பணியும் தொடங்கியது இங்கு சேரும் குப்பைக‌ளை ம‌றுசுழ‌ற்சி செய்து உர‌ம் த‌யாரிப்ப‌து போன்ற‌வ‌ற்றிருக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌து. ஆனால் குப்பைகளை இங்கு கொட்ட கூடாது எங்கள் பகுதியின் சுகாதாரம் பாதிக்கிறது என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இது தொடர்பாக‌ 2010 ஜீன் மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், தில்லையேந்தல் ஊராட்சி பள்ள மோர்க்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் பெயரில், பொது நல வழக்கு (W.P. (MD) No. 9602/2010) தொடுக்கப்பட்டது. இதைய‌டுத்து அப்ப‌குதியில் குப்பை கொட்டுவ‌து நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.சுற்றுசுவ‌ர் க‌ட்டுவ‌தும் த‌டைப‌ட்ட‌து.பின்னர் கீழக்கரை,தில்லையேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து இந்த பிரச்னையில் தீர்வு காண வேண்டும் குப்பை கொட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மறுபரீசலனை செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் தலைமையில் குழு கீழக்கரை ,மற்றும் தில்லையேந்தல் பகுதியை சேர்ந்த குறிப்பிட்டவர்களை அழைத்து பேசி கருத்து கேட்டனர் .பின்னர் குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ச‌ம‌ர்பித்த‌ன‌ர். பின்ன‌ர் இது தொட‌ர்பாக‌ என்ன‌ மாதிரியான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்று த‌ற்போதைய‌ ந‌கராட்சி க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும்.


மேலும் த‌ற்காலிக‌மாக‌ வெல்பேர் டிரஸ்ட் ஏற்பாட்டில் த‌னியார் தோட்ட‌த்தில் கீழ‌க்க‌ரையின் குப்பைக‌ள் கொட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.என‌வே உட‌ன‌டியாக‌ நிர‌ந்த‌ர‌மாக‌ குப்பை கொட்டும் த‌ள‌த்தை ஏற்பாடு செய்ய‌ ண்டும்.தில்லையேந்தலில் அமைந்துள்ள இடத்திற்கான பிர‌ச்ச‌னை தீர்வு காண‌ நாள‌கும் ப‌ட்ச‌த்தில் உட‌ன‌டியாக‌ மாற்று இட‌த்தை தேர்வு செய்ய‌ வேண்டும்.கிழக்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றியுள்ள‌ ப‌குதியில் அர‌சு புற‌ம்போக்கு நில‌த்தை க‌ண்ட‌றிந்து மாற்று ஏற்பாட்டை காலம் தாழ்த்‌தாம‌ல் செய்ய‌ வேண்டும்.


குப்பைக‌ளை ஒரு ப‌குதியில் கொட்டுவ‌தால் அப்ப‌குதி ம‌க்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டாம‌ல் இருக்க‌ என்ன‌ செய்ய‌லாம் என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் ஒருவ‌ரிட‌ம் கேட்ட‌ போது ,தற்போது குப்பைகளை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அகற்றுவதற்கு சில நிறுவனங்கள்(ஹேன்ஜெர் போன்ற‌ நிறுவனம்) ஆலைகளை அமைத்து தருகின்றனர் இந்த ஆலைக்குள் கொண்டுவரப்படும் குப்பைகளை 4 பிரிவாக தரம் பிரித்து அதில் 25 சதம் மின்சாரமாகவும், 30 சதம் பசுமை உரமாகவும், 20 சதவீதம் மறுசுழற்சி முறையில் மீண்டும் பிளாஸ்டிக், 15 சதம் மணலாகவும் உற்பத்தி செய்யப்படும். மீதம் பயன்படுத்த முடியாத 10 சதவீத கழிவுகள் விஞ்ஞான வழிமுறையில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படும். இதனால், நிலத்தடி நீர் மாசுபடுவது தவிர்க்கப்படும். குப்பையில் இருந்து மறுசுழற்சிமுறை உற்பத்தி முழுவதும் மூடிய நிலையிலேயே நடைபெறுவதால் வெளிப்புறத்தில் சுகாதார பாதிப்போ, துர்நாற்றமோ ஏற்பட வாய்ப்பில்லை. இத்திட்ட‌த்தை அப்பகுதி ம‌க்க‌ளிட‌ம் எடுத்து கூறி செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.என்றார்.

மேலும் த‌ற்போது துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை அதிக‌ப்ப‌டுத்த‌ வேண்டும். கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ எக்ஸ்னோரா போன்ற‌ தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ,ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ளை அழைத்து பேசி ஆலோச‌னை குழு ஒன்றை அமைத்து கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிரந்தர தீர்வு காண‌ வேண்டும் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ பொறுப்பேற்றுள்ள‌ ராபிய‌த்துல் காத‌ரியாவுக்கு ச‌வாலாக‌ விள‌ங்க‌ போவ‌து இந்த‌ குப்பை பிர‌ச்ச‌னைதான் சவால்கள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றுவார் என கீழக்கரை மக்கள் பெரும் நம்பிகையோடு காத்திருக்கின்றனர்

Thursday, October 27, 2011

கீழக்கரையில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் நவ 3ல் திறப்பு !


கீழக்கரை வடக்கு தெருவில் பிரம்மாண்டமாக புதுபிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் மன்பஈ ப‌ள்ளி நவ 3ல் மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது.அழகிய முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளியில் பல நூறு பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அப்பகுதியை சேர்ந்த‌ ஏராளமானோர் வேளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து கீழக்கரை சென்ற வண்ணம் உள்ளனர்.மசூதி திறப்பு விழாவையோட்டி திற‌ப்பு விழா ஏற்பாடுக‌ள் நடைபெற்று வ‌ருகின்ற‌ன‌.

இது தொடர்பாக வடக்குதெரு ஜமாத் நிர்வாக சபை மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளி கட்டிட விரிவாக்க குழு கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ... இவ்விழாவில் ஹாஜி.சேகு முகைதீன் த‌லைமை தாங்குகிறார். ஹாஜி.அக்ப‌ர்கான் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார். ஹாஜி மொள‌ல‌வி ஜைனுல் ஆப்தீன் பாக‌வி(முன்னாள் முத‌ல்வ‌ர் ஜாமிஆ அல் பாக்கிய‌த்துஸ் ஸால‌லிஹாத் அர‌பிக்க‌ல்லூரி,வேலூர்), ஹாஜி.முப்தி முஹ‌ம்ம‌து ருஹீல் ஹ‌க் (முத‌ல்வ‌ர் ஜாமிஆ அல்வாருல் உலூம் அர‌பிக் க‌ல்லூரி,திருச்சி,த‌லைவ‌ர் திருச்சி மாவ‌ட்ட‌ ஜ‌மாத்துல் உல‌மா பேர‌வை) ஆகியோர் சிற‌ப்புரை ஆற்றுகின்ற‌ன‌ர்.ஹாஜி.ரெத்தின‌ முக‌ம்ம‌து ந‌ன்றியுரையாற்றுகிறார்.

இது குறித்து துபாயில் உள்ள நாசா அமைப்பின் நிர்வாகிகள் அகமது மிர்ஷா மற்றும் ஜேனா என்ற ஜெயினுலாப்தீன் கூறியதாவது,
இறைவன் உதவியால் பல்வேறு நல் உள்ளங்களின் முயற்சியால் மசூதியின் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காண உள்ளது.நாசா ச‌மூக ந‌ல‌ அமைப்பும் நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளில் இணைந்து செய‌ல்ப‌டுகிற‌து. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.

Tuesday, October 25, 2011

கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.(படங்கள்)

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் இன்று ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றுக்கொண்டனர் .

ந‌ம‌க்கு கிடைத்த‌ ப‌ட‌ங்க‌ள் வரை வெளியிட்டுள்ளோம் .இந்த செய்தியில் விடுபட்ட கவுன்சிலர்களின் பதவியேற்பு படங்கள் கிடைத்தால் அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்







வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக) ப‌த‌வியேற்றார்








வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) ப‌த‌வியேற்றார்

















வார்டு -7 அன்வர் அலி(சுயே) ப‌த‌வியேற்றார்
வார்டு - 12 -சித்திக் அலி(சுயே)








வார்டு -13 ரபியுதீன் (சுயே)ப‌த‌வியேற்றார்




வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே)ப‌த‌வியேற்றார்



வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே) ப‌த‌வியேற்றார்







வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப் ப‌த‌வியேற்றார்








வார்டு 6 - தங்கராஜ் (சுயே) ப‌த‌வியேற்றார்

3வது வார்டு (சுயே) ரமேஷ் ப‌த‌வியேற்றார்




























































































கீழக்கரை நகராட்சி தலைவராக ராபியத்துல் காதரியா இன்று பதவியேற்றார்!


கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபியத்துல் காதரியா இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தலைவராக பதவியேற்றார்.அவருடன் கவுன்சிலர்களும் பதவியேற்று கொண்டனர்.இவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


அனைவருக்கும் கீழக்கரைடைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சாலைக‌ளில் கழிவுநீர் தேங்கி நோய் அபாய‌ம்! ந‌டவ‌டிக்கை எடுக்க‌ பொது ம‌க்க‌ள் கோரிக்கை

தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில்..

கீழக்கரை புதிய நகராட்சி நிர்வாகம் இன்று பொறுப்பேற்ற நிலையில் கீழக்கரை நகர் முழுவதும் சுகாதார பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிலைமை உள்ளது.

கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில் சாலைமுழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
இது குறித்து தெற்குதெருவை சேர்ந்த சூபியான் கூறியதாவது ,இப்பகுதி கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் ரோட்டிலேயே தேங்கி நிற்கிறது.இதனால் இப்பகுதி வீட்டை வெளியே வருவதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள் .மேலும் இதனால் கொசுக்கள் அதிகமாகி மலேரியா,போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.என‌வே போர்க்கால‌ அடிப்ப‌டையில் உட‌ன‌டி ந‌டவ‌டிக்கையில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஈடுப‌ட‌ வேண்டும் .என்றார்.

ப‌ட‌ம் ம‌ற்றும் த‌க‌வ‌ல் - சூபியான்



அத்திலை தெரு பகுதியில் ....
அதே போல் கீழக்கரை அத்திலை தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையில் மழை தண்ணீர் தேங்கி அப்பகுதி முழுவதும் குளம் போல் காட்சியளிக்கிறது. புதியதாக அமைக்கப்பட்ட சாலை முறையாக‌ அமைக்க‌ப்ப‌டாத‌தே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌னர்
படம் மற்றும் தகவல் - பசீர் அகமது ரசீன்

58 தாசிம்பீவி கல்லூரி மாணவிகள் ரத்ததானம் !மருத்துவர்கள் பாராட்டு!

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் கல்லூரியின் முதல்வர் சுமையா தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எம்.எஸ்.ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கருப்பசாமி கலந்து கொண்டு ரத்ததானம் பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். முன்னதாக நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ஜீலி பெனித்தா அனைவரையும் வரவேற்றி பேசினார்.இம்முகாமில் கல்லூரி ஆசிரியைகளும் ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனர்.முதல் கட்டமாக 58 மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.இறுதியாக திட்ட அலுவலர் எஸ்தர் ஷீபா மெர்லின் நன்றி கூறினார்.

இது குறித்து ம‌ருத்துவ‌ர் செல்வேந்திர‌ன் கூறிய‌தாவ‌து,ரத்ததானம் செய்த‌ மாண‌விக‌ள் அனைவ‌ரும் பாராட்டுக்குறிய‌வ‌ர்க‌ள்.இது போன்று மாண‌வ‌,மாண‌விக‌ள் ம‌த்தியில் ர‌த்த‌தான‌ம் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு ஏற்ப‌ட்டு அனைவ‌ரும் ர‌த்த‌ தான‌ம் செய்ய‌ முன் வ‌ர‌ வேண்டும் என்றார்.

Monday, October 24, 2011

ரூ1 லட்சம் வேணும் !பேரத்தில் கவுன்சிலர்கள்!

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சிக்கு அதிமுக சார்பில் 6 கவுன்சிலர்க‌ளும்,திமுக சார்பில் 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ் சார்பில் 1 கவுன்சிலரும் , சுயேச்சையாக‌ 10 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் 25ம் தேதி ப‌த‌வியேற்பார்க‌ள் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து. இதை தொட‌ர்ந்து துணை சேர்ம‌ன் தேர்த‌ல் 29ஆம் தேதி ந‌டைபெறுகிறது. கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இப்பதவிக்கு இப்ப‌த‌விக்கு அதிமுக‌ சார்பில் 9வ‌து வார்டில் வெற்றி பெற்ற ஹாஜா முகைதீன் ,1வது வார்டில் வெற்றி பெற்ற‌ சுரேஷ் ஆகியோர் போட்டியிடுவ‌தாக‌ செய்திக‌ள் வெளியாகியுள்ள‌து. இந்நிலையில் பெரும்பாலான‌ க‌வுன்சில‌ர்க‌ள் தாங்க‌ள் ஆத‌ர‌வு தெரிவிக்க‌ குறைந்த‌து ரூ 1 ல‌ட்ச‌த்திலிருந்து 2 ல‌ட்ச‌ம் வ‌ரை பகிரங்கமாக பேர‌ம் பேசுவதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. மேலும் "நாங்க‌ள் சொல்லும் ஆளுக்குத்தான் க‌வுன்சில‌ர்க‌ள் வாக்க‌ளிப்பார்கள்" என்று கூறி சில‌ புரோக்க‌ர்க‌ளும் ரூ50,000 வரை க‌மிஷ‌ன் கேட்ப‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது குறித்து உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் கூறிய‌தாவ‌து, இன்னும் ப‌த‌வியேற்க‌வே இல்லை அத‌ற்குள் ப‌கிர‌ங்க‌மாக சில க‌வுன்சில‌ர்க‌ள் பேர‌த்தில் இற‌ங்கிவிட்டார்க‌ள்.இத்த‌னை ஆயிர‌ங்க‌ள் செல‌வ‌ழித்து நகராட்சி துணை த‌லைவ‌ராக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் அத‌னை திரும்ப‌ பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளில் இற‌ங்க‌மாட்டார் என்று என்ன‌ நிச்ச‌ய‌ம். முத‌ல் முறையாக‌ க‌வுன்சில‌ர்க‌ளாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் சில‌ரும் இந்த‌ பேர‌த்தில் மும்முர‌மாக‌ இருப்ப‌து ஆச்ச‌ரிய‌ம‌ளிக்கிற‌து.இங்கிருந்துதான் ஊழல் தொடங்குகிறது இதை அனுமதிக்க கூடாது .ம‌க்க‌ள் அனைத்தையும் க‌வ‌னித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்ப‌தை கவுன்சில‌ர்க‌ள் ம‌ன‌தில் வைத்து செய‌ல்ப‌ட வேண்டும் என்றார்

இது குறித்து கீழ‌க்க‌ரை முஜீப் கூறிய‌தாவ‌து, ம‌க்களுக்கு சேவை செய்வேன் என்று கூறி கவுன்சிலராக ஜெயித்து விட்டு இது போன்ற பேர‌த்தில் ஈடுப‌டும் க‌வுன்சில‌ர்க‌ளை வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிறேன்.மேலும் நகராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுக்க‌ கவுன்சிலர்கள் பண‌ம் வாங்கியதாக‌ தெரிய‌ வ‌ந்தால் அவ‌ர்க‌ள் யார் என்ப‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ நோட்டீஸ் அடித்து ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்துவோம் என்ப‌தை கூறி கொள்கிறேன் என்றார்

Sunday, October 23, 2011

இஸ்லாமியா பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி சேவை !



எழுத்து பயிற்சி பெற்றவர்களின் பெயர்,முகவரியை வெளியிடுவது நாகரீகமாக இருக்காது என்பதினால் அவர்களின் பெயர்,முகவரி அழிக்கப்பட்டுள்ளது


இஸ்லாமியா பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தமிழில் எழுத கற்று கொள்ளாமல் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எழுத்து‌ பயிற்சி அளித்தார்கள்.பத்து நாட்களுக்கு மேல் தினமும் அரை மணி நேரம் வீதம் கையெழுத்து பயிற்சி அளித்து மனித குலத்துக்கு தேவையான சேவையாற்றியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.இந்த‌ ப‌யிற்சியின் மூல‌ம் 30க்கும் மேற்ப‌ட்டோர் ப‌ய‌ன்பெற்ற‌ன‌ர்.

க‌ல்வி சேவை செய்த‌ மாண‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம்,அஜீத்,அருண்குமார்.பென‌ட் ரூப‌ன்,தினேஷ்குமார்,தீப‌க் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி,கோபி க‌ண்ண‌ன், ஹாமித் வ‌ஜாக‌த்,முக‌ம்ம‌து இஸ்ஹாக்,முக‌ம்ம‌து ம‌ணாஸ்,முக‌ம்ம‌து சுஹைல் ,முகம்ம‌து ஹ‌ச‌ன்,நாகேந்திர‌ன்,நெய்னா,ர‌குமான் பாரிஸ்,ரோகேஷ் லிங்க‌ம், சேக் ஜ‌லாலுதீன்,ச‌ஹீல் அப்துல்லா, பிர‌தீப் ஆகிய‌ 19 மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ கையெழுத்து ப‌யிற்சி சேவையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் குத்ப்தீன் ராஜா கூறிய‌தாவ‌து, இந்த மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள் மேலும் ந‌ம்மால் முடிந்த‌ வ‌ரை இது போன்ற‌ சேவையில் ஈடுப‌ட்டால் முழுமையான‌ க‌ல்விய‌றிவு பெற்று நம் நாடு திக‌ழும் என்றார்

கீழக்கரையில் பலத்த மழை







அடிக்கடி மின்சார தடை , வெயில் ,புழுக்கம் என்று அவதியில் இருந்த வந்த மக்களுக்கு சிறிய ஆறுதலாக கீழக்கரையில் இரவு பலத்த மழை பெய்தது.இதனால் தெருவெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கீழக்கரையில் பல்வேறு இடங்களில் கிணற்று தண்ணீர் வற்றிவரும் நிலையில் இதுபோன்று மழையால் நிலத்தடிநீர் உயரும் வாய்ப்பு உள்ளது.
தகவல் : கீழக்கரை முஜீப்

துபாய் ஹலோ எப்.எம் 89.5 வானொலி விவாதத்தில் கீழக்கரைடைம்ஸ் பங்கேற்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவு தொடர்பான விவாதத்தில் பங்கு கொள்ள கீழக்கரைடைம்ஸ் குழுவினருக்கு பத்திரிக்கையாளர் என்ற வகையில் துபாய் ரேடியோ ஹலோ எப்.எம்.89.5 அலைவரிசை நேரடி ஒலிபரப்புக்காக‌ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நமது இணையதளத்தின் சார்பில் கீழக்கரைடைம்ஸ் ஆசிரியர் கலந்து கொண்டு நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்று தேர்தல் தொடர்பான கருத்துக்களை பதிவு செய்தார்.அவருடன் இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் சார்பாக ஹமீது ரஹ்மான் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெற்றார். கீழக்கரைடைம்ஸ் குழுவுக்கு அழைப்பு விடுத்த நிர்வாகத்தினருக்கும்,ஏற்பாடு செய்த முதுவை ஹிதாயதுல்லாவிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

ராபியத்துல் காதரியாவுக்கு மாஜி எம்.எல்.ஏ ஹசன் அலி வாழ்த்து !










கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபியத்துல் காதரியாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ஹசன் அலி கூறியதாவது, எங்கள் தரப்பில் கீழக்கரை நகர் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கீழக்கரை நகராட்சிக்கு தருவோம் என்று உறுதி கூறுகிறேன். என்றார்.

அவருடன் கீழக்கரை முஜீப் உள்பட பலர் உடன் சென்று வாழ்த்தினர்.

Saturday, October 22, 2011

கீழக்கரை 19,20 வார்டுகளில் வெற்றி பெற்ற கணவன்,மனைவி !



19வது வார்டில் ஹாஜா முகைதீனீன் மனைவி அருசியா பேகம் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.20வது வார்டில் ஹாஜா முகைதீன் (இடி மின்னல்) திமுக சார்பில் வெற்றி பெற்றார்

பொதுநலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்!நன்றி தெரிவித்து தாஜீநிஷா அறிக்கை



கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட‌ தாஜீநிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....


உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து எமக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கும், தேர்தல் களத்தில் அயராது உழைத்த ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்கல்லாஹ்.மேலும், இணைய வழி ஊடகம் 'கீழக்கரை டைம்ஸ்' மற்றும் அதன் வாசகர்கள், Face Book மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்த நல்லுள்ளங்கள் அனைவர்களுக்கும் நன்றி....ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பினை ஏற்பது தலையாய தார்மீகம். தேர்தலில் வெற்றி வாய்ப்பு நழுவினாலும் எமது பொதுநல சமுதாயப் பணிகள் என்றென்றும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

கீழக்கரை தேர்தல் முடிவும் ,கீழக்கரை டைம்ஸின் கருத்து கணிப்பும் ..



பொதுவாக கீழக்கரையை விட்டு வெளியூரில்,வெளிநாட்டில் உள்ளோர்தான் அதிகளவில் நம் வலைதளத்தை காண்கிறார்கள் எனவே தேர்தல் முடிவு வரும் போது நமது தளத்தில் கணிப்பில் பதிவு செய்வோரின் மனநிலையும், கீழக்கரையில் வாக்களித்தோரின் மனநிலையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று ஏராளமான நண்பர்கள் நமக்கு அறிவுறுத்தியதால் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பதாக "கீழக்கரை நகராட்சி தலைவராக யார் வெற்றி பெறுவார்" என்ற தலைப்பில் இந்த கணிப்பை வெளியிட்டு இருந்தோம்.நமது தளத்தில் பார்வையிட்ட 234 பேர்களில் பெரும்பாலனோர் யார் வெற்றி பெறுவார் என்று பதிவு செய்துள்ள கருத்து கணிப்பும், தற்போதய கீழக்கரை தேர்தல் முடிவும் ஒரே மாதிரியாக வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Friday, October 21, 2011

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி !ராபியத்துல் காதரியா



கீழ‌க்க‌ரை ந‌கராட்சி த‌லைவ‌ராக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ராபியத்துல் காதரியா
(அதிமுக) வெளியிட்டுள்ள அறிக்கையில்..

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் என்னை வெற்றி பெற‌ செய்த கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளுக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு வாய்ப்பளித்த புரட்சிதலைவி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

முதல்முறையாக அதிமுகவை கீழக்கரையில் மக்கள் வெற்றிபெற செய்துள்ளதால் தொடர்ந்து இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள கட்சியின் சார்பாகவும்,அரசு சார்பாகவும் மக்களுக்கான நலதிட்டங்களை நிறைவேற்ற‌ அதிகமான அளவில் நிதிகளை பெற்று திட்டங்களை நிறைவேற்றுவேன்.நிச்ச‌ய‌ம் அனைத்து தேர்த‌ல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற‌ பாடுப‌டுவேன்.என‌து நிர்வாக‌த்தில் யாருடைய‌ த‌லையீடும் இருக்காது.ம‌க்க‌ளுக்கான‌ நிர்வாக‌மாக‌ இருக்கும் என்ப‌தை உறுதியுட‌ன் தெரிவித்து கொள்கிறேன்.கீழக்கரையின் அடிப்ப‌டை பிர‌ச்சைனைக‌ளை போர்க்கால‌ அடிப்ப‌டையில் தீர்க்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்பேன்.

என‌து வெற்றிக்கு உழைத்த‌ அதிமுக‌ நிர்வாகிக‌ள் ,தொண்ட‌ர்க‌ள், என‌து ச‌கோத‌ர‌ர்கள் ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள்,என‌க்கு உறுதுணையாக‌ இருந்த‌ என‌து க‌ண‌வ‌ர் ம‌ற்றும் குடும்ப‌த்தார்,ச‌முதாய‌ பெரிய‌வ‌ர்க‌ள், ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ள் தாய்மார்க‌ள் அனைவ‌ருக்கும் என‌து ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி !

கீழக்கரை வார்டுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்

வேட்பாளர்கள் பெயருக்கு அருகில் அவர்கள் வாங்கிய ஓட்டுக்களின் விபரம் உள்ளது
1 -வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் 321 ஓட்டுக்கள் பெற்று வெற்றி - போட்டியிட்டோர் - , மகாலிங்கம்(கம்யூ)274 ,பாலகிருஸ்ணன் 72,பாலமுருகன் 143 ஓட்டு(சுயேசைகள்)

2வது வார்டு மீனாள் அதிமுக 410 ஓட்டுக்கள் பெற்று வெற்றி!, அழகம்மாள்(சுயே)398 ஓட்டுக்கள்

3வது வார்டு (சுயே) ரமேஷ் 250 ஓட்டுக்கள் பெற்றுவெற்றி! போட்டியிட்டோர்-ராஜேந்திரன் நகர்செயலாளர்(அதிமுக)184,செய்யது ஹமீது அலி( திமுக)29, சுல்தான் ஆரிபு 127, நல்ல இப்ராகிம் 65,அப்துல் ஹாதி 112, ராஜ்குமார் 12,செய்யது அபுதாகிர் 13,பவுசுல் அமீன் 21,அப்பாஸ் அலி 115 (சுயேச்சைகள்)

வார்டு 4- பாத்திமா சுயே 201 வாக்குகள் பெற்று வெற்றி ! - போட்டியிட்டோர் - லைலத்துல் முபாரக்கா(திமுக)148, முகம்மது பாத்திமா(அதிமுக)120,ஹமீது ஷகிபா(காங்)164, முகம்மது மரியம் பீவி 46(சுயேச்சைகள்)

வார்டு 5- சாகுல் ஹமீது (திமுக)131 ஓட்டுக்கள் பெற்று வெற்றி ! போட்டியிட்டோர் -நிஷார் அகமது(அதிமுக)122,,நூர் அகமது 77,ஹமீது இக்பால் 68,செய்யது அப்தாகிர் 83,முகம்மது அபுல் கலாம் ஆசாத் 46 (சுயேச்சைகள்)

வார்டு 6 - தங்கராஜ் 110 ஓட்டுகள் பெற்று வெற்றி(சுயே) போட்டியிட்டோர் - ச‌ரவணன்(அதிமுக)67,கென்னடி(திமுக)26,கனேசன்(காங்)5,செல்வநாயகம்45,முருகானந்தம்62,மாரிகிருஷ்ணன்6,(சுயேச்சைகள்)

வார்டு -7 அன்வர் அலி(சுயே)262 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர்- சித்திக்(திமுக) 205 , சித்தி ஜரினா(அதிமுக)41,பாக்கர் அலி 23,,சுல்பிகர் அலி 85 ஓட்டு(சுயேச்சைகள்)

வார்டு 8 செய்யது கருனை(அதிமுக) 144 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர்- செய்யது சித்திக்(திமுக) 44,ஹமீது சுல்தான்(காங்)30,சிக்கந்தர் சேட்46,ஜகுபர் சாதிக் 12,ஜஹாங்கிர் 95,முகம்மது சதக் தம்பி 82,ஹபீப் முகம்மது 36,ரசூல் கான் 26 ஓட்டு (சுயேச்சைகள்)

வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக) 237 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர்-சீனி முகம்மது(காங்)37,ஜின்னா சாகிப் 74,ஹிம்யான் 5,அஹமது சலீம் 24,செய்யது ஹமீது 174 (சுயேச்சைகள்)

வார்டு 10 அஜ்மல்கான்(காங்)119 ஓட்டுக்கள் பெற்றுவெற்றி ! - போட்டியிட்டோர்-முகம்மது இப்ராகிம் (தேமுதிக)75,நெய்னா முகம்மது (அதிமுக)49,லெப்பை தம்பி 98,செய்யது அஹம்து கபீர் 101 ஓட்டு(சுயேச்சைகள்)

வார்டு - 11 மீரா பானு(திமுக)266 ஓட்டுக்கள் பெற்று வெற்றி. போட்டியிட்டோர்-ஆயிசத்து ரஹிமா(அதிமுக)112,நெயனா முகம்மத் நாச்சியா(தேமுதிக)108,முனிஸ்வரி91,ஹபீப் ராணி 137 ஓட்டு(சுயேச்சைகள்)

வார்டு - 12 -சித்திக் அலி(சுயே) 141 ஓட்டுக்கள் பெற்று வெற்றி! போட்டியிட்டோர்-
ஏ.எஸ்.சுல்தான் செய்யது இப்ராகிம்(திமுக) 57,ஹமீதுகான் (காங்)109, சுல்தான்(அதிமுக)79, ஐ.சுல்தான் செய்யது இப்ராகிம்(தேமுதிக)13,சுல்தான் அப்துல் காதர் 59,அஜ்மல் கான் 26 ஓட்டு

வார்டு -13 ரபியுதீன் (சுயே)248 ஓட்டுக்கள் பெற்று வெற்றி ! போட்டியிட்டோர்- ஜகுபர் நவாஸ்(திமுக)106,சூசை(அதிமுக)145,

வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே)146 ஓட்டுக்கள் பெற்று வெற்றி ! போட்டியிட்டோர்-ஹைருல் பரியா(திமுக) 103 ,முகம்மது பசிமா(அதிமுக) 53,ஹமீதா பானு(காங்)10 ஓட்டு

வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) 322 ஓட்டுக்கள் பெற்று வெற்றி! போட்டியிட்டோர்-ஜென்னத்து பிர்தவ்ஸ் (அதிமுக) 80 , ராணி(சுயேச்சைகள்)26ஓட்டு.

வார்டு - 16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக)270 ஓட்டுக்கள் பெற்று வெற்றி ! போட்டியிட்டோர் -,செய்யது ஹதிஜா (சுயே)230 ஓட்டு

வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப்(அதிமுக)292 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர் பிர்தவ்ஸ் இப்ராகிம் என்ற ராஜா(திமுக)220 ,,சதக்கு முகம்மது ஜாபர்(தேமுதிக)54,முசம்மில் (சுயே) 224 ஓட்டு

வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே)137 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர் - அமீர் அப்துல் கரீம்(திமுக)47 , பாருக்(அதிமுக)101,மரைக்காயர்(காங்)56,அஸ்வத் கரீம் 106,அப்துல் அலி சித்திக்114,,முகம்மது முகைதீன் 23,நெய்னா முகம்மது 78(சுயேச்சைகள்)

வார்டு - 19 அருசியா பேகம்(திமுக)287 ஓட்டுக்கள் பெற்று வெற்றி ! ,போட்டியிட்டோர் - ஆயிசா பீவி(அதிமுக)67,சீனி மரியம்(சுயே)171

வார்டு - 20 ,ஹாஜா முகைதீன் (இடிமின்னல்)(திமுக) 335ஒட்டுக்கள் பெற்று வெற்றி !, போட்டியிட்டோர் அப்துல் வஹாப்(அதிமுக)70,பந்தே நவாஸ்10,ஜாகிர் ஹுசைன்33,செய்யது சிராஜ்தீன் என்ற செல்லம் 215,அக்பர் அலிகான் 104,அப்பாஸ்கான் 155(சுயேச்சைகள்)

வார்டு 21,ஜெயபிராகசம்(சுயே) 210 ஓட்டுக்கள் பெற்று வெற்றி !போட்டியிட்டோர் - அருள்மோசை தயாளன்(காங்)18 ,குமரன்(அதிமுக)178,செந்தில் குமார்(தேமுதிக)68 ,கனேஷ மூர்த்தி 39 ,நாகராஜன் 173,

கீழக்கரை நகராட்சி தலைவர்! முதல்முறையாக அதிமுக வெற்றி !வாக்கு விபரம்!




ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வெற்றி பெற்றார்.மேலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக சார்பில் ஆறு பேர்களும்,திமுக சார்பில் நான்கு பேர்களும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் ,10 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.




கீழக்கரை மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.இதில் மொத்தம் பதிவான வாக்குகள் 12 ஆயிரத்து 712 இதில் ராபியத்துல் காதரியா(அதிமுக) 3 ஆயிரத்து 702 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்தப்படியாக ஆபிதாபேகம்(டீச்சர்)(சுயே)2ஆயிரத்து 930 வாக்குகளும்,


தாஜீன் நிஷா(திமுக)2 ஆயிரத்து 655 வாக்குகளும்,



கதிராயி(சுயே) ஆயிரத்து 26 வாக்குகளும்,




ஜீனத் மரியம்(தேமுதிக)731 வாக்குகளும்,




ஆயிஷத்துல் முபஸ்ஸரா(காங்)331 வாக்குகளும்,




மெஹர் பானு(சுயே),தமுமுக ஆதரவு 608 வாக்குகளும்,




ரஹமத் நிஷா(புதிய தமிழகம்)147 வாக்குகளும்,




மெகர்நிஷா(சுயே)133 வாக்குகளும்,




ஆயிஷத் (சுயே)449 வாக்குக‌ளும் பெற்றனர்.

18,19,20,21 முடிவு

வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே) வெற்றி !போட்டியிட்டோர் - அமீர் அப்துல் கரீம்(திமுக), பாருக்(அதிமுக),மரைக்காயர்(காங்),அஸ்வத் கரீம்,அப்துல் அலி சித்திக்,முகைதீன் இப்ராகிம்,முகம்மது முகைதீன்,நெய்னா முகம்மது (சுயேச்சைகள்
வார்டு - 19 அருசியா பேகம்(திமுக) வெற்றி ! ,போட்டியிட்டோர் - ஆயிசா பீவி(அதிமுக),சீனி மரியம்(சுயே)
வார்டு - 20 ,ஹாஜா முகைதீன் (இடிமின்னல்)(திமுக)வெற்றி !, போட்டியிட்டோர் அப்துல் வஹாப்(அதிமுக),பந்தே நவாஸ்,ஜாகிர் ஹுசைன்,செய்யது சிராஜ்தீன்,அக்பர் அலிகான்,அப்பாஸ்கான்(சுயேச்சைகள்)

வார்டு 21,ஜெயபிராகசம்(சுயே) வெற்றி !போட்டியிட்டோர் - அருள்மோசை தயாளன்(காங்),குமரன்(அதிமுக),செந்தில் குமார்(தேமுதிக),கனேஷ மூர்த்தி ,நாகராஜன்,ஜெயபிரகாசம்

11,12,13,14,15,16,17 வார்டுக‌ள் வெற்றி பெற்றவர்கள் விப‌ர‌ம்

வார்டு - 11 மீரா பானு(திமுக) வெற்றி. போட்டியிட்டோர்-ஆயிசத்து ரஹிமா(அதிமுக),மீரா பானு(திமுக),நெயனா முகம்மத் நாச்சியா((தேமுதிக)முனிஸ்வரி,ஹபீப் ராணி(சுயேச்சைகள்)

வார்டு - 12 -சித்திக் அலி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்- ஏ.எஸ்.சுல்தான் செய்யது இப்ராகிம்,(திமுக),ஹமீது கான்(காங்)சுல்தான்(அதிமுக), ஐ.சுல்தான் செய்யது இப்ராகிம்(தேமுதிக),சுல்தான் அப்துல் காதர்,அஜ்மல் கான்,சித்திக் அலி(சுயேச்சைகள்)

வார்டு -13 ரபியுதீன் (சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்- ஜகுபர் நவாஸ்(திமுக),சூசை(அதிமுக),ரபியுதீன் (சுயே)

வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்-ஹைருல் பரியா(திமுக),முகம்மது பசிமா(அதிமுக),ஹமீதா பானு(காங்)தாஜின் அலிமா(சுயே)

வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்-ஜென்னத்து பிர்தவ்ஸ் (அதிமுக),முஹம்மது மஜிதா பிவி, ராணி(சுயேச்சைகள்)
வார்டு - 16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக)வெற்றி ! போட்டியிட்டோர் -முகம்மது ஜரினா பேகம்(அதிமுக),செய்யது ஹதிஜா(சுயே)

வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப்(அதிமுக) வெற்றி !பிர்தவ்ஸ் இப்ராகிம்(திமுக),முகைதீன் காதர் சாகிப்(அதிமுக),சதக்கு முகம்மது ஜாபர்(தேமுதிக)முசம்மில் (சுயே)

13 வார்டுக‌ள் முடிவில் ராபிய‌த்துல் காத‌ரியா (அதிமுக) 1000 வாக்குகள் முன்னிலை

13 வார்டுக‌ள் முடிவில் ராபிய‌த்துல் காத‌ரியா (அதிமுக) 2590, தாஜீனிசா திமுக‌ 1439, ஆபிதா டீச்சர் (சுயே)1423 வாக்குகளை பெற்றுள்ளார்கள்

கீழக்கரை 8,9,10 வார்டு வெற்றி பெற்றவர்கள் விபரம்

வார்டு 8 செய்யது கருணை(அதிமுக) வெற்றி !போட்டியிட்டோர்- செய்யது கருனை(அதிமுக),செய்யது சித்திக்(திமுக),ஹமீது சுல்தான்(காங்),சிக்கந்தர் சேட்,ஜகுபர் சாதிக்,ஜஹாங்கிர்,முகம்மது சதக் தம்பி,ஹபீப் முகம்மது,ரசூல் கான் (சுயேச்சைகள்)

வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக)வெற்றி !போட்டியிட்டோர்-ஹாஜா முகைதீன்(அதிமுக),சீனி முகம்மது(காங்)ஜின்னா சாகிப்,ஹிம்யான்,அஹமது சலீம்,செய்யது ஹமீது (சுயேச்சைகள்)

வார்டு 10 அஜ்மல்கான்(காங்)வெற்றி ! - போட்டியிட்டோர்-முகம்மது இப்ராகிம் (தேமுதிக)அஜ்மல் கான்(காங்),நெய்னா முகம்மது,லெப்பை தம்பி,செய்யது அஹம்து கபீர்(சுயேச்சைகள்)

கீழ‌க்க‌ரை 7 வார்டுக‌ளில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம்

கீழக்கரை உள்ளாட்சி காலை 9.25 வரை கிடைத்த தகவல்-
1 -வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி - போட்டியிட்டோர் - சுரேஷ் (அதிமுக), மகாலிங்கம்(கம்யூ),பாலகிருஸ்ணன்,பாலமுருகன் (சுயேசைகள்)

2வது வார்டு மீனாள் அதிமுக வெற்றி!, போட்டியிட்டோர் - மீனாள்(அதிமுக),அழகம்மாள்(சுயே)

3வது வார்டு (சுயே) ரமேஷ் வெற்றி! போட்டியிட்டோர்-ராஜேந்திரன் நகர்செயலாளர்(அதிமுக),செய்யது ஹமீது அலி( திமுக), சுல்தான் ஆரிபு, நல்ல இப்ராகிம்,அப்துல் ஹாதி, ராஜ்குமார்,ரமேஷ்,செய்யது அபுதாகிர்,பவுசுல் அமீன்,அப்பாஸ் அலி (சுயேச்சைகள்)

வார்டு 4- பாத்திமா சுயே வெற்றி ! - போட்டியிட்டோர் - லைலத்துல் முபாரக்கா(திமுக), முகம்மது பாத்திமா(அதிமுக)ஹமீது ஷகிபா(காங்) முகம்மது மரியம்ப பீவி,பாத்திமா,(சுயேச்சைகள்)
வார்டு 5- சாகுல் ஹமீது (திமுக)வெற்றி ! போட்டியிட்டோர் -நிஷார் அகமது(அதிமுக),சாகுல் ஹமீது(திமுக),நூர் அகமது,ஹமீது இக்பால்,செய்யது அப்தாகிர்,முகம்மது அபுல் ஹசன் கலாம் ஆசாத் (சுயேச்சைகள்)

வார்டு 6 - தங்கராஜ் வெற்றி(சுயே) போட்டியிட்டோர் - ச‌ரவணன்(அதிமுக),கென்னடி(திமுக),கனேசன்(காங்)தங்கராஜ்,செல்வநாயகம்,முருகானந்தம்,மாரிகிருஷ்ணன்,(சுயேச்சைகள்)

வார்டு -7 அன்வர் அலி(சுயே) வெற்றி !போட்டியிட்டோர்- சித்திக்(திமுக), சித்தி ஜரினா(அதிமுக),பாக்கர் அலி,அன்வர் அலி,சுல்பிகர் அலி (சுயேச்சைகள்)

Thursday, October 20, 2011

இருதலைமணியன் பிடிபட்டது !



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பை வன இலாகவிடம் ஒப்படைத்தனர்.ஏர்வாடி குடியிருப்பு பகுதியில் காந்தாரிபிச்சை மகன் ஆள்பாண்டியின் வீட்டின் அருகே பாம்பு ஊர்ந்து சென்றது.அப்பகுதியில் நின்றிருந்த தமீம் அன்சாரி,சேக் அன்சாரி,ஷேக் ராஜா உசைன்,கரீம் ஆகியோர் பாம்பை கைப்பற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இத‌னைய‌டுத்து வ‌ன‌ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன்,வ‌ன‌க்காப்பாள‌ர் முத்து க‌ருங்க‌ன் ஆகியோர் பாம்பை பெற்று திருப்புல்லாணி காட்டு ப‌குதியில் விட்டு சென்ற‌ன‌ர்.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா !நாளை உள்ளூர் அரசு விடுமுறை !




ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடுவிழா இன்று ஆரம்பித்து நாளை அதிகாலைவரை நடைபெறுவதையோட்டி நாளை மாவட்டம் முழுவதும் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகக் கருதி அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என

Wednesday, October 19, 2011

கீழக்கரையில் தரமற்ற சாலை!பொது மக்கள் எதிர்ப்பு



கீழக்கரை கிழக்குத்தெரு முகம்மது காசிம் அப்பா தர்ஹா அமைந்துள்ள பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது இதுவரை அமைக்கப்பட்ட சாலை தரமற்று உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் சாலைப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சி சார்பில் ஒப்பந்தக்காரர் பழனி என்பவர் மூலம் ரூபாய் 6.30 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.நேற்று காலை 10மணியளவில் நடந்து கொண்டிருக்கும் போது அப்பகுதி மக்கள் சாலை தரமற்று இருப்பதாக கூறி, சாலை பணிகளை நிறுத்துமாறு கூறினர்.இது குறித்து விசாரிக்க இப்பகுதிக்கு வந்த நகராட்சி அலுவலர் மணியிடம் மழை நீர் தேங்காத அளவில் தரமான வகையில் சாலையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Tuesday, October 18, 2011

கீழக்கரையில் பூத்சிலிப் முறையாக‌ வழங்காததால் வாக்குப்பதிவு குறைந்ததாக குற்றசாட்டு !

கீழக்கரையில் கடந்த 17ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கீழக்கரையில் ஓட்டு பதிவு செய்வதற்கான பூத் சிலிப்களை அரசு ஊழியர்கள் முறையாக விநியோகிக்காததால் ஏராளமான வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.மேலும் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பதாகத்தான் பூத் சிலிப் விநியோகம் நடைபெற்றதாம் இதனால் ஏராளமானோருக்கு பூத்சிலிப் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது குறித்து மக்கள் மக்கள் நல பாதுகாப்பு கழக் செயலாளர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, நான் 18வது வார்டை சேர்ந்தவன் எங்கள் வார்டில் மொத்தம் 1245 வாக்காளர்கள் உள்ளனர்.ஆனால் 662 வாக்குகள் மட்டுமே பதிவானது காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் ஏராளமானோருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை.இதனால் பெண்களில் பலர் பூத் சிலிப் வழங்காத‌தால் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் சென்ற தேர்தலை விட இம்முறை 20 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. இந்த குளறுபடி எங்கள் வார்டில் மட்டுமல்ல அனைத்து அனைத்து வார்டுகளில் நடைபெற்றுள்ளது.இனி வருங்காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும் என்றார்

Monday, October 17, 2011

கீழக்கரையில் 53 சதவீத வாக்குப்பதிவு! ஆண்,பெண் வாக்குபதிவு விபரம்





கீழக்கரையில் காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு உணவு இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக நடைப்பெற்றது.நகர் முழுவதும் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவின் இறுதியில் 12 ஆயிரத்து 674 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பதிவான மொத்த வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 834 பேர்களும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 840 பேர்களும் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்காளர்களில் 53% சதவீதம் ஆகும் பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

பகல் நிலவரம் ! கீழக்கரையில் 25% வாக்குப்பதிவு !



கீழக்கரையில் வாக்குப்பதிவு காலையிலிருந்தே மிக மந்தமாக நடைபெறுகிறது. இது வரை 25 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஆரிபா,மெஹர் நிஷா ஆகியோர் கூறியதாவது ,எங்க பகுதிகளை சேர்ந்த‌ நாங்கள் அனைவரும் பகல் உணவுக்கு பின் வாக்குபதிவுக்கு செல்லலாமென்று இருக்கிறோம் என்றார்.
பகல் உணவு இடைவேளைக்கு பிறகு வாக்குபதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை நிலவரம் :கீழக்கரையில் வாக்குப்பதிவு மந்தம்

இடம்:18வது வார்டு வாக்கு சாவடி


கீழக்கரையில் ஓட்டு பதிவு தொடங்கி மிக மந்தமாக நடைபெறுகிறது.இது வரை ஒரு சில பூத்கள் தவிர மற்ற பூத்களில் 50க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாலைக்குள் வாக்குப்பதிவு விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sunday, October 16, 2011

கீழக்கரையில் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரம் !

அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பிரச்சாரம் செய்தார்.




புதிய தமிழகம் வேட்பாளர் ரஹ்மத் நிஷாவை ஆதரித்து கட்சி தலைவர் கிருஸ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

நேற்று நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரத்தில் திமுக,அதிமுக,தேமுதிக,காங்,புதிய தமிழகம்,சுயேச்சைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர்.

கீழக்கரையில் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரம் !

அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பிரச்சாரம் செய்தார்.




புதிய தமிழகம் வேட்பாளர் ரஹ்மத் நிஷாவை ஆதரித்து கட்சி தலைவர் கிருஸ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

நேற்று நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரத்தில் திமுக,அதிமுக,தேமுதிக,காங்,புதிய தமிழகம்,சுயேச்சைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர்.

சதக் அறக்கட்டளை செயலாளர் மறைவுக்கு மாணவ,மாணவிகள் இரங்கல் !



முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளரும் ,முகம்மது சதக் கல்லூரியின் தாளாளருமான எஸ்.எம்.கபீர் கடந்த 14ம்தேதி காலமானார்.அவருக்கு முகம்மது சதக் கல்லூரி வளாகத்தில் அனைத்து மாணவ,மாணவிகளும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் முஸ்லீம் மாணவர்கள் சிறப்பு தொழுகை நடத்தி துஆ செய்தனர்.

இவர்களில் ஒருவர் கீழக்கரை நகராட்சி தலைவராவார் !

கிழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக பத்து பெண்கள் போட்டியிடுகின்றனர்.இவர்களின் படங்களும்,செய்திக‌ளும் உங்கள் பார்வைக்காக‌ இங்கே தரப்பட்டுள்ளது.



தாஜீனிசா (திமுக‌)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_08.html



ராபிய‌த்துல் காத‌ரியா(அதிமுக)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_850.html



மெஹ‌ர் பானு(சுயே)ஆதரவு - தமுமுக மற்றும் அனைத்து சமுதாய தேர்தல் பணி குழு
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_4797.html


ஆமீனத்துல் பஸ்ஸரா (காங்)
http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_8931.html

ஜீனத் மரியம் (தேமுதிக)


ஆபிதா பேக‌ம் (சுயே)ஆத‌ரவு - ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌கம்
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_5016.html



ஆயிச‌த் (சுயே)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_949.html





ர‌ஹ்ம‌த் நிஷா(புதிய‌ த‌மிழ‌க‌ம்)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_842.html



மெஹ‌ர் நிஷா(சுயே)


க‌திராயி(சுயே)