Saturday, October 8, 2011

கீழக்கரை குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!திமுக வேட்பாளர் தாஜீனிசா

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிரும் கீழக்கரை நடுத்தெரு ஜமாத் என்.எம்.டி தெரு கோழியப்பா குடும்பத்தை சேர்ந்த‌ திமுக வேட்பாளர் தாஜுனிசா(50) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமையில் ஒரு குழுவும் ,இளைஞர் அணி செயலாளர் ராஜா தலைமையில் ஒரு குழுவும்,மகளிர் அணி சார்பாக ஒரு குழுவும் ஆகிய மூன்று குழுக்கள் அமைத்து திமுக சார்பில் கீழக்கரை முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இது வரை புது கிழக்கு தெரு ,வடக்குதெரு,தெற்குதெரு,மேலத்தெரு,நடுத்தெரு உள்பட பெரும்பாலான தெருக்களில் 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளார்.

வேட்பாளர் தாஜுனிசா கூறுகையில் , நான் வெற்றி பெற்றால் நீண்டகாலமாக தீர்க்க முடியாமல் உள்ள குப்பை பிர‌ச்ச‌னைக்கு ந‌ம‌து ஊர் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ள் ,ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ள்,அற‌க்க‌ட்ட‌ளைக‌ள்,ம‌ற்றும் அர‌சு அதிகாரிக‌ளின் ஒத்துழைப்புட‌ன் நிர‌ந்த‌ர‌ தீர்வு காண்பேன்.

க‌ட‌ந்த‌ ஆட்சி கால‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ த‌னி தாலுகா த‌ற்போது கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து அதை செய‌ல்ப‌டுத்த‌ முய‌ற்சிக‌ள் மேற்கொள்வேன். நக‌ரின் சுகாதார‌ சீர்கேட்டை போக்க‌வும் ,ம‌லேரியா கொசு ம‌ருந்து தொட‌ர்ந்து அடித்திட‌வும் சுகாதார‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளின் எண்ணிக்கையை உய‌ர்த்த‌வும் ந‌ட‌வ‌டிக்கை எடுப்பேன்.சேத‌ம‌டைந்துள்ள‌ குடிநீர் குழாய்களை சீரமைத்து சுத்தமான குடிநீர் கிடைக்க‌ பாடுப‌டுவேன்.ஏராளமான‌ ப‌ள்ளி ,க‌ல்லூரிகள் உள்ள‌ கீழ‌க்க‌ரையில் அர‌சின் சார்பில் ப‌ல்க‌லைக‌ழ‌கம் அமைக்க‌வும்,இல‌வ‌ச‌ அர‌பிக் க‌ல்லூரி அமைக்க‌வும் ,ந‌க‌ர் முழுவ‌தும் த‌ர‌மான‌ சாலை வ‌ச‌திக‌ள் அமைக்க‌வும்,தெரு விள‌க்குக‌ள் இல்லாத‌ இட‌ங்க‌ளில் புதிய‌ விள‌க்குக‌ள் அமைக்க‌வும் முய‌ற்சிக‌ள் மேற்கொள்வேன். மேலும் ஊரின் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ள்,தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள்,ச‌ர்வ‌க‌ட்சிக‌ள்,ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ள் ஆகியோர்க‌ளை மூன்று மாத‌ங்க‌ளுக்கு ஒரு முறை அழைத்து ஆலோச‌னை கூட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தி குறைக‌ளை நிறைவேற்ற‌ பாடுப‌டுவேன் என்றார்.

5 comments:

 1. last time dmk was in power,ur chairman has done nothing to kilakarai,marupadiuma sah in binami

  ReplyDelete
 2. vision of kilakarai 2020October 8, 2011 at 9:18 PM

  கையில் வாக்கு சீட்டை வைத்துகொண்டு காத்திருக்கும் எனதருமை கீழக்கரை வாழ் வாக்காள பெருங்குடி மக்களே
  கீழக்கரை ந(ர)கராட்சி தி.மு.க. வேட்பாளர் ஜனாபா தாஜீனிசா நூர்தீன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் நம்மை சிந்திக்க வைக்கிறது
  எண்ணிக்கையில் அடங்கா பல பிரச்சனைகள் இருந்த போதிலும் தலையானது கீழக்கரை என்பதை குப்பைக்கரையாக மாற்றிய குப்பை மற்றும் கழிவு நீர் பிரச்சனையே
  பிரச்சனை கண் முன்னே தெரிகிறது அதற்கு முறையான தீர்வு அறிக்கையில்(ஓட்டு வாங்குவதற்கு முன்) சொல்லுவது தானே ஏமாற்றுதனம் இல்லாத செயல்
  சுதந்திரத்திற்கு பின் கீழக்கரை வாழ் மக்கள் கேட்டு சலித்து விட்டார்கள்
  1954 வாக்கில் அப்போதைய த்மிழக முதல் மந்திரி காமராஜ் அவர்கள் ஹமீதியா ஸ்கூல் விளையாட்டு நடந்த பொது கூட்டத்தில் கீழக்கரைக்கு புகைவண்டி வரும் என்று சொல்லி சென்றார் என்னவாயிற்று?
  ஆக குப்பை பிரச்சனைக்கு தீர்க்க தெளிவான திட்டங்களை கூறுங்கள் பின்னர் ஓட்டு கேளுங்கள் அதுதான் முறை தருமம்
  உங்கள் பின்னால் இருப்பவர்கள் யார்? உங்கள் கட்சியை சார்ந்தவ்ர்கள்தானே கீழக்கரையை இந்த அளவுக்கு சீர்குலைத்தார்கள்!!!!!
  உங்கள் கட்சியை சார்ந்த எம்.பி நடிகர் ரித்தீஸ் கீழக்கரையில் நடந்த கூட்டத்திலும் ப்த்திரிக்கை வயிலாகவும் எத்தனை வாக்குறுதிகள்
  கொடுத்தார் ஏதாவது நிறைவேற்றினாரா? இப்போது அவர் என்கே? சூட்டிங்கில் இருக்கிறாரா?
  ஆகவே சகோதரியே நடைமுறை படுத்தக் கூடிய உறுதியான நம்பக்கூடிய வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை கைப்பற்ற முயலுங்கள் அப்போதுதான் வெற்றி கனி உங்கள் கைக்கு நிச்சயமாக வரும் WISH U BEST OF LUCK

  ReplyDelete
 3. கீழக்கரை தேர்தல் சம்பந்தமாக எங்களுடைய கருத்தை காண வேண்டுகிறோம்

  கீழக்கரை செய்திகள் நாள் : 09/10/11

  தலைப்பு: வெளிநாட்டு இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு ஒதவ வேண்டும்

  ReplyDelete
 4. vision of kilakarai 2020October 9, 2011 at 7:46 PM

  கீழக்கரை தேர்தல் சம்பந்தமாக எங்களுடைய கருத்தை காண வேண்டுகிறோம்

  கீழக்கரை செய்திகள் நாள் : 09/10/11

  தலைப்பு: வெளிநாட்டு இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு ஒதவ வேண்டும்

  ReplyDelete
 5. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் உங்க ஊரிலே, உங்க ஊரிலே.உங்கள் ஊர் பிரச்சினைக்கு காரணமான ஒரு அரசியல் கட்சியில் அங்கமான பின் ஊரை சீருதிருத்துவோம் என சொல்லுவது வேடிக்கையானது. அக்கட்சியின் நிழலாகத்தான் இந்த அம்மையார் செயல்படமுடியும்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.