Tuesday, October 11, 2011

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு நிரந்தர பெண் டாக்டர் ! புதிய தமிழக வேட்பாளர்



கீழக்கரை, அக்.

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் ரஹ்மத் நிஷா போட்டியிடுகிறார். இவர், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் உதவியுடன் நகரின் முக்கியப் பகுதிகளில் வீதி, வீதியாக வாக்குச் சேகரித்து வருகிறார். புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் இவர், வளர்பிறை மகளிர் மன்றத்தலைவராகவும் உள்ளார்.

வேட்பாளர் ரஹ்மத் நிஷா கூறுகையில்““கடந்த ஆட்சி காலத்தில் கீழக்கரையை தனி தாலுகாவாக்க சட்டம் கொண்டு வரப்பட்டு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஊர் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இதை நிறைவேற்ற பாடுபடுவேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை சுத்தப்படுத்தி கடலில் விடுவதற்கு முழுமுயற்சி மேற்கொள்வேன். கீழக்கரை அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக பெண் டாக்டர் நியமிக்கவும், பழுதடைந்த சாலைளை சீரமைக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார்.

அவருடன் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த அஸ்மத், சம்சாத், யாஸ்மின், ஆமினத், செய்யது சிக்கந்தர்பீவி, ராவியத் ஜரினா, பவுசியா, முகைதீன் பாத்திமா, அனுசியா, ஆயிசத்து, புதிய தமிழகம் மாவட்ட சிறுபான்மை துணைச் செயலாளர் யூசுப் சுலைமான், முகமது ரபீக், அன்னாவி, மாவட்டச்செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

1 comment:

  1. Please show me picture of the name mentioned there Mr.Annavi

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.