Friday, October 14, 2011

ஊழல் இல்லாத நகராட்சியாக மாற்றுவேன்! வேட்பாளர் ஆயிசத் உறுதி




கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஆயிஷத்(பட்டாளம் மரைக்கா மகள்) வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.

வேட்பாளர் ஆய்ஷத் கூறியதாவது, முஸ்லீம் பஜாரில் உள்ள நீர்மாலை கிணற்றின் அருகே பூங்கா அமைத்து தரவும்,தெரு விளக்கு இல்லாத மின் கம்பங்களில் மின் விளக்கு அமைக்கவும்,பாதாள சாக்கடை திட்டதை விரைந்து செயல்படுத்தவும்,சாலைகள் தோறும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மரக்கன்றுகளை நடுவதற்கும்,ஊரின் முக்கிய இடஙகளில் இலவச கழிப்பறைகள் கட்டவும்,ஊரின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் கோல்டன் பீச் வரை தார்சாலை அமைக்கவும்,ஊழல் இல்லாத நகராட்சியாக மாற்றவும்,இதுவரை பொழுது போக்கு இடமில்லாத கீழக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கவும்,ஜாதி மத வேறுபாடு இல்லாமல் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தவும், அரசு அதிகாரி மற்றும் உறுப்பினர்களின் உறுதுணையுடன் பாடுபடுவேன் என்று கூறினார்.

இவருடன் இலக்கிய விளையாட்டு கழக செயலாளர் ஹமீது மன்சூர்,எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் சேகு பகுருதீன்,துணை தலைவர்கள் அபுபக்கர் சித்திக்,அ.மு.சுல்தான் செயலாளர் அப்துல் ஹாதி மற்றும் ஏராளமான பெண்கள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.