Saturday, October 15, 2011
போட்டியிட வலியுறுத்தி பின் வாங்கிய தமுமுக ! சுயேச்சை வேட்பாளர் ஆபிதா பேட்டி
நகராட்சி தலைவருக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஆபிதா பேகம் அளித்த பேட்டியில்,
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமுமுகவிலிருந்து என்னை அணுகி நீஙகள் எங்கள் கட்சி சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளருக்கு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொண்டார்கள்.பின்னர் தமுமுக தலைமை திடீரென வேறு ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்து பின் வாங்கி விட்டார்கள். ஆனால் உள்ளூர் தமுமுக நிர்வாகிகள் என்னை அணுகி 'நாங்கள்தான் உங்களை அணுகி போட்டியிட கேட்டுகொண்டோம் அதனால் தலைமை நீக்கினாலும் பரவாயில்லை உங்களுக்குதான் எங்கள் ஆதரவு என்றார்கள் எனவே நான் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தேன். நீக்கப்பட்ட தமுமுக நிர்வாகிகள் எனக்கு ஆதரவு தருகிறார்கள்.
38வருடம் ஆசிரியையாக பணியாற்றி உள்ளேன் ஊர் முழுவதும் என்னுடைய பழைய மாணவ,மாணவிகள் உள்ளார்கள் அவர்கள் அனைவருடைய ஆதரவும் எனக்கு இருக்கும்.
கீழக்கரையில் சுகாதாரத்திற்கு(குப்பை பிரச்சனை,கழிவுநீர் பிரச்சனை) முக்கியத்துவம் கொடுப்பேன்,கீழக்கரையில் உள்ள நூலகம் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது அதை சரி செய்வேன் மிக முக்கியமாக படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
செல்லுமிடமெல்லாம குப்பை பிரச்சனையை பற்றி என்னிடம் கூறினார்கள் நிச்சயம் அனைவரையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பேன்.மக்கள் என்னை வெற்றி பெற செய்வதாக கூறியுள்ளார்கள்.இன்ஷா அல்லா எனக்கு வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது என்றார்
இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளர் சாலிஹ் கூறியதாவது, மிக சிறப்பான ஆசிரியையாக பணியாற்றி வீட்டிலிருந்த ஆபிதா அவர்களை அணுகி போட்டியிட சொல்லி கேட்ட தமுமுக திடீரென அவர்களை கைவிட்டு வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் நிர்கதியாக நின்ற ஆபிதா அவர்களை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் நாங்கள் அணுகி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோம். கீழக்கரையில் தலைவர் வேட்பாளருக்கு நிற்பவர்கள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள் இவர்கள் எப்படி அரசாங்க பைல்களை படித்து கோப்புகளில் கையெழுத்து இடுவார்கள் நகராட்சி தலைவர் பதவி என்பது மிக முக்கிய பதவியாகும் அரசு ஒதுக்கும் நிதி இங்கிருந்து தான் பணம் மக்களை சென்றடைகிறது.எனவே இந்த இடத்தில் படித்தவர்கள்தான் நகராட்சி தலைவராக வரவேண்டும் அந்த வகையில் ஆபிதா அவர்கள் பொருத்தமானவர்கள்.மக்கள் அவருக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
thngal solvthu irukatum aanal aanaivarum kalvii ariu ellathavargal endru guruvathu thavaru,,,,,abitha teacheridam nanum padithullan,,aagaiyal avar vanthall nandragathan irukum
ReplyDelete