Monday, October 10, 2011

கீழக்கரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை தர மாட்டேன்!அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா



கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா அளித்த பேட்டியில் கூறியதாவது ,

கேள்வி :தாங்கள் விருப்பமின்றி தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வெளியானதே? உண்மையா ?

பதில் : வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்பட்ட சமயத்தில் நான் வற்புறுத்தலினால்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சிலர் வீண் வதந்திகளை பரப்பினார்கள் நிச்சயமாக நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் சேவை மனப்பான்மையுடன் போட்டியிடுகிறேன் என்ப‌தை உறுதியுட‌ன் தெரிவித்து கொள்கிறேன்

கேள்வி : வெற்றி பெற்றால் கீழ‌க்க‌ரை ந‌ல‌னுக்கென‌ என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள்?

பதில் : இன்ஷா அல்லா தேர்தலில் வெற்றி பெற்றால் நமதூருக்கு தேவையான திட்டங்களை செயல் படுத்துவேன் மேலும் ஊர் நலனில் அக்கறை கொண்ட நமதூர் முக்கியஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று அத்திட்டங்களை மேம்படுத்துவேன் குறிப்பாக கழிவு நீரால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க உடனடியாக‌ பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற அரசின் நிதியை பெற்று செய‌ல்ப‌டுத்துவேன்.

காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரை மக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க செய்வேன்.

கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள குப்பை பிரச்சனைக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று அரசின் உதவியுடன் தீர்வு காண்பேன்.

நகராட்சி துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்வேன் மேலும் நகரில் அன்றாடம் சேரும் குப்பைகளை சாலைகளில் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.பழுதடைந்துள்ள‌ தெரு விளக்குகளை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பேன் தேவை படும் பட்சத்தில் புதிய விளக்குகளை பொருத்த ஏற்பாடு செய்வேன்.

அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய என் பங்களிப்பை செய்வேன். அனைத்து தரப்பு மக்களும் நகராட்சி நிர்வாகத்தை எளிதில் அணுகும் வகையில் எனது செயல்பாடுகள் அமைந்திருக்கும்.

கீழக்கரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்பது போன்ற காதில் கேட்பதற்கு இனிதான, பொய்யான வாக்குறுதிகளை தருவதற்கு நான் தயாரில்லை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் எந்த பணிகளையெல்லாம் செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதிகளாக தந்துள்ளேன். இன்ஷா அல்லா நிச்சயம் நிறைவேற்றுவேன்.

கேள்வி : பிரச்சாரம் எந்த அளவில் உள்ளது ?வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது ?

பதில் : பெரும்பாலான வார்டுகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டேன் மேலும் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவை தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.