Sunday, October 16, 2011
சதக் அறக்கட்டளை செயலாளர் மறைவுக்கு மாணவ,மாணவிகள் இரங்கல் !
இவர்களில் ஒருவர் கீழக்கரை நகராட்சி தலைவராவார் !
தாஜீனிசா (திமுக)http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_08.html
மெஹர் பானு(சுயே)ஆதரவு - தமுமுக மற்றும் அனைத்து சமுதாய தேர்தல் பணி குழு
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_4797.html
ஜீனத் மரியம் (தேமுதிக)http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_5016.html
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_949.html
Saturday, October 15, 2011
போட்டியிட வலியுறுத்தி பின் வாங்கிய தமுமுக ! சுயேச்சை வேட்பாளர் ஆபிதா பேட்டி

நகராட்சி தலைவருக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஆபிதா பேகம் அளித்த பேட்டியில்,
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமுமுகவிலிருந்து என்னை அணுகி நீஙகள் எங்கள் கட்சி சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளருக்கு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொண்டார்கள்.பின்னர் தமுமுக தலைமை திடீரென வேறு ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்து பின் வாங்கி விட்டார்கள். ஆனால் உள்ளூர் தமுமுக நிர்வாகிகள் என்னை அணுகி 'நாங்கள்தான் உங்களை அணுகி போட்டியிட கேட்டுகொண்டோம் அதனால் தலைமை நீக்கினாலும் பரவாயில்லை உங்களுக்குதான் எங்கள் ஆதரவு என்றார்கள் எனவே நான் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தேன். நீக்கப்பட்ட தமுமுக நிர்வாகிகள் எனக்கு ஆதரவு தருகிறார்கள்.
38வருடம் ஆசிரியையாக பணியாற்றி உள்ளேன் ஊர் முழுவதும் என்னுடைய பழைய மாணவ,மாணவிகள் உள்ளார்கள் அவர்கள் அனைவருடைய ஆதரவும் எனக்கு இருக்கும்.
கீழக்கரையில் சுகாதாரத்திற்கு(குப்பை பிரச்சனை,கழிவுநீர் பிரச்சனை) முக்கியத்துவம் கொடுப்பேன்,கீழக்கரையில் உள்ள நூலகம் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது அதை சரி செய்வேன் மிக முக்கியமாக படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
செல்லுமிடமெல்லாம குப்பை பிரச்சனையை பற்றி என்னிடம் கூறினார்கள் நிச்சயம் அனைவரையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பேன்.மக்கள் என்னை வெற்றி பெற செய்வதாக கூறியுள்ளார்கள்.இன்ஷா அல்லா எனக்கு வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது என்றார்
இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளர் சாலிஹ் கூறியதாவது, மிக சிறப்பான ஆசிரியையாக பணியாற்றி வீட்டிலிருந்த ஆபிதா அவர்களை அணுகி போட்டியிட சொல்லி கேட்ட தமுமுக திடீரென அவர்களை கைவிட்டு வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் நிர்கதியாக நின்ற ஆபிதா அவர்களை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் நாங்கள் அணுகி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோம். கீழக்கரையில் தலைவர் வேட்பாளருக்கு நிற்பவர்கள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள் இவர்கள் எப்படி அரசாங்க பைல்களை படித்து கோப்புகளில் கையெழுத்து இடுவார்கள் நகராட்சி தலைவர் பதவி என்பது மிக முக்கிய பதவியாகும் அரசு ஒதுக்கும் நிதி இங்கிருந்து தான் பணம் மக்களை சென்றடைகிறது.எனவே இந்த இடத்தில் படித்தவர்கள்தான் நகராட்சி தலைவராக வரவேண்டும் அந்த வகையில் ஆபிதா அவர்கள் பொருத்தமானவர்கள்.மக்கள் அவருக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்
ஜவாஹிருல்லாஹ் எங்களை தமுமுகவிலிருந்து நீக்க முடியாது ! மூஜீப் ஆவேசம் !

தமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கீழக்கரை முஜீப் கூறியதாவது....
தமுமுகவில் பல ஆண்டுகளாக பல் வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றியுள்ளேன் . தமுமுக சார்பில் 15ந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை எங்களின் முயற்சியால் வாங்கப்பட்டு மக்களுக்கு அர்பணித்துள்ளோம்.இறந்த உடல்களை பாதுகாத்து வைக்க குளிரூட்டும் பெட்டிகள் 10க்கும் மேற்பட்டவைகள் நம் முயற்சியால் வாங்கியுள்ளோம்.இன்னும் பல நல காரியங்களை ஆற்ற வியர்வை சிந்தி கடுமையாக உழைத்துள்ளோம்.இது இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும்.
2009ல் நான் தலைவராக இருந்த போது தமுமுகவுக்கு துரோகம் செய்து நீக்கப்பட்ட சிராஜ்தீன் போன்றவர்களுக்கு மேலிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது இதே சிராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் காங் ஹசன் அலிக்கு வாக்கு கேட்டவர்.
திமுகவின் கோட்டையாக இருந்த கீழக்கரையை தமுமுக கோட்டையாக மாற்றி கடந்த சட்டசபை தேர்தலில் நான்,ஹுசைன்,உஸ்மான்,ஜெயினுலாப்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் பாடுபட்டு ஜவாஹிருல்லாவை வெற்றி பெற செய்தோம்.
அதே போல் நடைபெற இக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமுமுக சார்பில் தாஜுனிசா லாத்தாவை போட்டியிட செய்ய பரிந்துரைத்தோம் ஜவாஹிருல்லா ஏற்க மறுத்து வேறு ஒரு வேட்பாளரை தேட சொன்னார் எனவே ஆசிரியை ஆபிதாவை தமுமுக சார்பில் போட்டியிடுமாறு கேட்டு கொண்டோம் ஆபிதா அவர்களும் ஒத்து கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்ய சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ போன் செய்து எங்களிடம்(தமுமுக நிர்வாகிகள்) ஆசிரியை ஆபிதா தமுமுக சார்பில் போட்டியிட வேண்டாம் என்றும் பொது வேட்பாளர் என்று அழைக்கப்படும் மெஹர் பானுவை ஆதரிக்க சொன்னார்
உடனடியாக நாங்கள் மறுத்து விட்டு ஆபிதா அவர்களை சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்தோம் .காரணம் தெற்கு தெரு ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மெஹர் பானு பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கபட்டார் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு தெரு மட்டும்(தெற்குதெரு) மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது வேறு எந்த ஒரு ஜமாத்தும் அவரை ஆதரித்து கடிதம் கொடுக்கவில்லை.மேலும் இவர் மீது(மெஹர் பானு என்ற நிலவு) குற்றச்சாட்டுகள் உள்ளது நாங்கள் அவரை ஆதரிக்க மாட்டோம் என்றோம் . உடனே ஜவாஹிருல்லா மெஹர்பானுவுக்கு தமுமுக ஆதரவு தரும் என்று அறிவிப்பு வெளியிட்டு எங்களையும் நீக்கியுள்ளார்.
ஜவாஹிருல்லா அவர்களும்,ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகளிடம் எங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக கூறிவிட்டு கட்சியிலிருந்தே நீக்கம் செய்வதாக அறிவித்து விட்டார்கள்.இதனால் தமுமுக மாநில நிர்வாகிகள் ஜவாஹிருல்லா மீது அதிருப்தியில் உள்ளார்கள்.தமுமுகவின் சட்டதிட்டப்படி முதலில் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும், மாநில நிர்வாகிகளுக்கு தகவல் தர வேண்டும்.இவை எதையுமே செய்யவில்லை
மேலும் நான் மாவட்ட பொருளாளர் ,உசைன் நகர தலைவர் ,உஸ்மான் நகர செயலாளர் நீக்கம் என்றல்லவா செய்தி வெளியிட்டிருக்க இருக்க வேண்டும் ஆனால் கட்சியின் அமைப்புக்குழுவிலிருந்து நீக்கம் என்று வெளியிட்டுள்ளார்கள் அமைப்புக்குழு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது எனவே இந்த நீக்கம் செல்லாது.ஜவாஹிருல்லா ,ஹைதர் அலி போன்றவர்கள் அடிக்கடி சொல்வார்கள் கலிமா சொன்னவன் எல்லாம் தமுமுககாரன் என்று அந்த வகையில் தமுமுக யாருக்கும் சொந்தம் கிடையாது ,நாங்கள் தமுமுகவிலேயே நீடிக்கிறோம்.ஜவாஹிருல்லா எங்களை கட்சியிலிருந்து நீக்க முடியாது தேவைபட்டால் கோர்ட்டு வரை செல்வோம் .
எங்களின் நீக்கப்பட்டதாக வந்த அறிவிப்பின் பிண்ணனியில் இருந்து செயல்பட்டது நல்ல முகம்மது களஞ்சியம் மற்றும் சிராஜ்தீன் ஆகிய இருவர்தான் .
தற்போது நகராட்சி தலைவருக்கு சுயேச்சை வேட்பாளராக போயிடும் ஆசிரியை ஆபிதாவை ஆதரிக்கிறோம் மேலும் 7 வார்டுகளில் போட்டியிடும் தமுமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவு தெரிவித்து பணியாற்றி வருகிறோம்.
திமுக ஊர்வலத்தில் பெரியவர்கள் சிலர் என்னை அழைத்திருந்தார்கள் அதனடிப்படையில் கலந்து கொண்டேன்.அதற்காக ஆதரவு என்று அர்த்தமல்ல.திமுகவில் நகர் செயலாளர் பதவி தருகிறோம் என்றார்கள்.இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுபவனல்ல நான் தமுமுகவில் தொடர்கிறேன் என்பதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
இரங்கல் செய்தி
முகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அதிகாலை 3.30 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள்(வ இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹிராஜிஊன்)என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாருக்கு மறுமையில் நற்பதவி கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.இவண்,முதல்வர்,ஆசிரியர்கள்,அலுவலர்கள்,மாணவ,மாணவிகள்
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி,கீழக்கரை
Friday, October 14, 2011
வார்டு குறைதீர்க்க எந்நேரமும் அணுகலாம் !18வது வார்டு வேட்பாளர் முஹம்மது முகைதீன் உறுதி !
வேட்பாளர் ஆனா மூனா என்ற முகம்மது முகைதீன் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்)கீழக்கரை நடுத்தெரு பகுதி 18வது வார்டு கவுன்சிலருக்கு ஆனா மூனா என்ற முஹம்மது முகைதீன் சுயேச்சையாக அலமாரி சின்னத்தில் போட்டியிடுகிறார் இவரது தந்தையார் ஹசன் அப்துல் காதர் நடுத்தெரு ஜீம்மா பள்ளி ஜமாத்தில் துணை செயலாளராக பணியாற்றியவர்.
வேட்பாளர் முஹம்மது முகைதீன் கூறியதாவது, கவுன்சிலர் பதவி என்பது சேவை செய்வதற்கு கூடுதல் பலம் மட்டும் தான் என்பது என் கருத்து ஏனென்றால் ஏற்கெனவே பொது நல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது வார்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் எனக்கு நன்றாக தெரியும் எனவே நான் வெற்றி பெற்றால் அவற்றை தீர்ப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் மேலும் வார்டில் ஏதாவது குறை என்றால் எந்நேரமும் என்னை அணுகலாம் என்றார்.
இவரது தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது, இந்த வார்டில் முகம்மது முகைதீன் நன்கு அறிமுகமானவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மேலும் இப்பகுதியில் உள்ளோர் அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகத்தான ஆனா மூனாவை நினைக்கின்றனர்.வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது என்றனர்.
ஊழல் இல்லாத நகராட்சியாக மாற்றுவேன்! வேட்பாளர் ஆயிசத் உறுதி
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஆயிஷத்(பட்டாளம் மரைக்கா மகள்) வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
வேட்பாளர் ஆய்ஷத் கூறியதாவது, முஸ்லீம் பஜாரில் உள்ள நீர்மாலை கிணற்றின் அருகே பூங்கா அமைத்து தரவும்,தெரு விளக்கு இல்லாத மின் கம்பங்களில் மின் விளக்கு அமைக்கவும்,பாதாள சாக்கடை திட்டதை விரைந்து செயல்படுத்தவும்,சாலைகள் தோறும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மரக்கன்றுகளை நடுவதற்கும்,ஊரின் முக்கிய இடஙகளில் இலவச கழிப்பறைகள் கட்டவும்,ஊரின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் கோல்டன் பீச் வரை தார்சாலை அமைக்கவும்,ஊழல் இல்லாத நகராட்சியாக மாற்றவும்,இதுவரை பொழுது போக்கு இடமில்லாத கீழக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கவும்,ஜாதி மத வேறுபாடு இல்லாமல் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தவும், அரசு அதிகாரி மற்றும் உறுப்பினர்களின் உறுதுணையுடன் பாடுபடுவேன் என்று கூறினார்.
இவருடன் இலக்கிய விளையாட்டு கழக செயலாளர் ஹமீது மன்சூர்,எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் சேகு பகுருதீன்,துணை தலைவர்கள் அபுபக்கர் சித்திக்,அ.மு.சுல்தான் செயலாளர் அப்துல் ஹாதி மற்றும் ஏராளமான பெண்கள் உடன் இருந்தனர்
கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் வியாபாரிகள் அவதி !
உள்ளாட்சி தேர்தலையோட்டி தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கீழக்கரையில் தேர்தல் நன்னடத்தை விதிகள்,வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பாளர் மணி தலைமையில் போலீசார்கள் இளங்கோவன்,ராஜேஸ்வரன் மற்று போட்டோகிராபர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு மற்றும் கீழக்கரையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனைகளால் பெரும் அவதிக்குள்ளாகும் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு பணம் எடுத்து வருவதை குறைத்து விட்டனர் இதனால் தேங்காய்,அரிசி போன்றவை கொள்முதல் குறைந்து விட்டது.தேர்தல் முடிந்தால் இதற்கு விடிவு பிறக்கும் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
Thursday, October 13, 2011
கீழக்கரையில் உள்ள ஏழைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக் கிடைக்க உதவி செய்வேன் ! வேட்பாளர் மெகர்பானு
கீழக்கரையில் உள்ள ஏழைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக் கிடைக்க உதவி செய்வேன் என்று பொது வேட்பாளர் மெகர்பானு வாக்குறுதி அளித்துள்ளார்.
கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீழக்கரை அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் பணிக்குழு சார்பில் பொது வேட்பாளரக அறிவிக்கப்பட்டுள்ள நிலவு என்ற மெகர்பானு (48) போட்டியிடுகிறார். 3 -வது வார்டிலுள்ள புதுகிழக்கு தெருவைச் சேர்ந்தவர். மகளிர் மன்ற தலைவியான இவர், 7 -ம் வகுப்பு வரை படித்துள்ளார் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழக்கரை நகரில் உள்ள பெரும்பான்மை ஜமாத்துகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் எனக்கு ஆதரவளிப்பதற்கு நன்றி. அனைத்து சமூகத்தினர் ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் கட்சி சாராமல் அனைத்து சமுதாய மக்களுக்காக பாடுபடுவேன்.
தெருவுக்கு ஒரு புகார் பெட்டி அமைத்து வாரம் ஒரு முறை அந்தப் புகார்களை கவனித்து பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். வாரம் ஒரு முறை நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவேன்.
கீழக்கரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீóர் இணைப்புகள் வழங்குவேன். தீராத பிரச்னையாக உள்ள குப்பைகள் மற்றும் கழிவு நீரை அகற்ற பெருமுயற்சி எடுப்பேன். அனைத்து சமுதாய பெரியோர்களையும் அணுகி நகருக்குத் தேவையான உதவிகளை பெற்று கீழக்கரையை மாநிலத்தில் முன்மாதிரி நகரமாக மாற்றுவேன்.
திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை போன்ற அரசு உதவிகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க உதவுவேன். மாதம் 2 முறை எல்லா வார்டுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் குறைகளை உடனுக்குடன் சரிசெய்வேன்.
பெரு நகரங்களைப் போல கீழக்கரையிலும் நவீன முறையில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு கைக்கடிகாரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது கீழக்கரை அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் பணிக்குழு தலைவர் அப்துல் மாலிக், சாகிப், எம்.எஸ். தம்பி, வேலுச்சாமி, 17 -வது வார்டு கவுன்சிலர் முகம்மது காசிம், செய்யது இப்ராஹிம், ராதாகிருஷ்ணன், கிழக்கு தெரு மத்தீன், த.மு.மு.க முன்னாள் நிர்வாகி சிராஜ், தெற்கு தெரு ஜமாத் உதவி செயலாளர் பவுசுல் அலி ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீழக்கரையில் உள்ள பெரும்பாலான ஜமாஆத்களின் ஆதரவுடன் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நிலவு (என்ற) எஸ். மெஹர்பானுவிற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு கை கடிகாரச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
குப்பைகளும், சாக்கடைகளும் எங்குப் பார்த்தாலும் நீக்கமற கீழக்கரையில் காணப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதற்கு முயலுகிறார்கள். கீழக்கரையின் அவலம் நீங்க, கீழக்கரை தூய்மை அடைய மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எஸ். மெஹர்பானுவிற்கு தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முன் மாதிரி வார்டாக மாற்றுவேன் !3வது வார்டு வேட்பாளர் அட்டப்பா
கீழக்கரை நகராட்சிக்கு நடைபெற உள்ள் தேர்தலில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் இவர் சிறு தொழில் மீனவர் சங்க செயலாளராக உள்ளார் .இவர் கூறியதாவது...
நான் வெற்றி பெற்றால் 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரமற்ற நிலையை போக்க ஒவ்வொரு நாளும் சேரும் குப்பைகளை உடனே அகற்றவும்,கழிவு நீரை தேங்க விடாமல் அப்புறப்படுத்தவும்,தெரு விளக்கு இல்லாத மின் கம்பங்களில் விளக்குகள் அமைத்து தரவும் ,சாலை இல்லாத இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கவும்,முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், எனது பகுதியில் உள்ள மீனவர்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் அரசு சலுகைகளான முதியோர் உதவி தொகை ,இலவச திருமண உதவி அனைத்தும் தடையின்றி கிடைத்திடவும் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் பாடுபடுவேன்.
சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது, நல்ல இப்ராகிமின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
கிழக்கரையில் உட்கட்சி பூசல் ! மந்தகதியில் காங்கிரஸ் பிரச்சாரம்
ஆயிசத்துல் முபஸ்ஸரா
நகர் காங் தலைவர் ஹமீதுகான்
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக காங் சார்பில் ஆயிசத்துல் முபஸ்ஸராவை நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளரான நகர் காங் தலைவர் ஹமீது கான் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபாடு இல்லாமல் உள்ளனர்.ஹமீது நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவராக உள்ளார்.இவரிடம் பிரச்சாரம் குறித்த எந்த ஒருஆலோசனையையும் வேட்பாளர் பெற வில்லையாம் இதனால் இவர் தரப்பில் யாரும் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கீழக்கரையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய அளவிலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் கூறுகையில்... கீழக்கரை நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் காங் வேட்பாளர் தரப்பில் யாரும் என்னை பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை அதனால் அவருக்கு ஆதரவாக நான் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்றார்.
நகர் காங் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்....,கீழக்கரை நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் காங் வேட்பாளர் தரப்பில் யாரும் எங்களை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை.மேலும் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையே இல்லாத சிலர் காங்கிரஸ் போர்வையில் கட்சியில் புகுந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
கீழக்கரையில் சுயேட்சை வேட்பாளர்கள் வரை பிரச்சாரத்தில் தூள் கிளப்பி வரும் நிலையில் பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரஸ் பிரச்சாரத்தில் பின் தங்குவது குறித்து அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது
கீழக்கரை தேர்தல் !பாமரன் பார்வை...கட்டுரையாளர்:- நெய்னா
கட்டுரையாளர்:நெய்னா“அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...”
ஜனாப்.சாகுல் ஹமீது ஹாஜியார் காலத்திலிருந்து இன்றுவரை நான் கேட்ட…… என்னை வெற்றி பெறச்செய்தால்…….என்ற வாக்குறுதிகள், கோபத்திற்கு பதில் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
பஞ்சாயத்து போர்டாக இருந்த காலத்தில் ,,,,அப்பா தீவுவை சுற்றுலா மையமாக்குவோம்…..தீவுக்கு படகுபோக்குவரத்து ஏற்படுத்துவோம்.. கடற்கரையோரங்களில் பூங்காக்கள் அமைப்போம்….
நகராட்சியான இன்று ……குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவோம்…. தேங்கி நிற்கும் கழிவு நீரை தேங்காமல் ஓடச்செய்வோம்…என்று அடிப்படைப் பணிகளை பிரதானப் பணியாகவும்,செய்யப்போகும் சாதனைகளாகவும் கூறுவது, நமது ஊரின் நிலையை நன்கு உணர்த்தும்.
பஞ்சாயத்து போர்டாக இருந்தபோது குளித்து , விளையாடி பொழுதுபோக்கி மகிழ்ந்த கடற்கரையை..... யாரும் நெருங்க முடியாத அளவுக்கு சாக்கடை குட்டையாக்கி, குப்பை கிடங்காக்கியதுதான் நகராட்சி என தரம் உயர்ந்த நமது ஊரின் தரமும்,நமது தலைவர்களின் சாதனைகளும் ஆகும்.
யார் வந்தாலும் ஊருக்கு எதுவும் செய்யமாட்டார்கள் அவனவன் சம்பாதிக்கவே பார்ப்பான் என்ற மனநிலையில், ஊரின் நிலையை சரிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை மேலும் மோசமாக்கிவிடாத ஒருவர்க்கு் வோட்டுபோடுவோம்— என்ன செய்வது யாரையாவது தேர்ந்தெடுத்துதானே ஆகவேண்டும் என்ற விரக்தியுடன் பொதுமக்கள் இருக்கும்நிலையில்………….
10 பேர்கள் கலந்துகொள்ளும் போட்டியில் 3 பேர் மட்டுமே போட்டியில் முந்துகிறார்கள்.
1. தாஜுன் நிஷா(தி.மு.க)மக்களின் எண்ணங்களை சற்று கூர்ந்து கவனித்தால் , இவர் பொதுவேட்பாளராக போட்டியிட்டு இருக்கவேண்டும் or சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருக்கிறது.சுய ஆளுமை, நிர்வாக அனுபவம், முதிர்ச்சி, குடும்பப் பின்னனி, பின்னிருந்து இயக்குபவர்கள் யார் யார், அரசியல் கட்சி சார்பு போன்ற காரணிகளை வைத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தி.மு.க. வேட்பாளர் கொஞ்சம் கூடுதல் தகுதிகளை கொண்டுள்ளார். இதுவே இவரது பலம் .ஆனால் திமுக நகராட்சி தலைவர் மீது கடும் அதிருப்தி நிலவுவதால் திமுக சார்பாக இவர் வெற்றி பெற்றால் பழைய நிர்வாகம் போல் அமைந்து விடுமோ என்ற மக்களின் பயம் தான் இவருக்கு இருக்கும் ஒரே பின்னடைவு .மேலும் இவர் வெற்றி பெற்றால் திமுகவினர் தலையீடு இருக்கும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்
2.ராபியத்துல் காதரியா (அ.இ.அ.தி.மு.க.)மக்கள் அறிமுகம் குறைவு.இவரது கணவர் ஒரளவு மக்களிடம் அறிமுகமானவர்.இவர் வெற்றி பெற்றால் இவர் கணவர் தலையீடு இருக்கும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆளும்கட்சி வந்தால் தான் திட்டங்களுக்கான நிதி தங்குதடையின்றி விரைந்து கிடைக்கும் என்ற ஆளும்கட்சி லாஜிக்கும் , ஆளும்கட்சி என்ற அதீத நம்பிக்கையும்தான் இவரது பலம் .
3. மெகர் பானு ( வேட்பாளர் – ம.ம.க ஆதரவு ) பல வித சர்ச்சைகளுக்கிடையில் அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழு என்ற கமிட்டியினால் அரசியல் கட்சி சார்பற்ற பொதுவேட்பாளர் என அறிவிக்கப்பட்டவர்.இதுவே அவரது பலமாக இருந்தது.
ஆனால் தற்போது மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க) மற்றும் த.மு.மு.க ஆகியவற்றின் ஆதரவும் பெற்ற வேட்பாளர் என்று பகிங்கரமாக அறிவித்து வாக்குசேகரித்து வருவதும் ,நகர் த.மு.மு.க வினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் மக்களிடம் சந்தேகத்தையும் ,நம்பிக்கையின்மையையும் இவர் மேல் ஏற்படுத்திவிட்டது.
இவரை சார்ந்தவர்களின் முந்தைய கட்சி சார்பும், இன்றைய ம.ம.க மற்றும் த.மு.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர் என்ற இவர்களது விளம்பரங்களும் ,ம.ம.க தலைமையின் மெளனமும் , இவர் பொதுவேட்பாளர் இல்லை என்பதையும் கட்சிசார்ந்த வேட்பாளர்தான் என்பதை உறுதி செய்கிறது. இதை தெளிவுபடுத்துவது இவருக்கும் ,இவரை தேர்ந்தெடுத்த கமிட்டிக்கும் முதல் கடமையாகும்.
“இதுவரை தலைவராக வந்தவர்களில் பெரும்பாலனோர் சுயேட்சையாகவும், அரசியல் கட்சி சார்பாகவும் வென்றவர்கள் அதனால் அவர்களின் சுயநல செயல்பாடுகளையும், செயல்படாநிலைகளையும் தட்டிகேட்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இயலவில்லை.மேலும் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தனர். எனவே நாம் பொதுவேட்பாளர் என்று ஒருவரை தேர்வு செய்து வெற்றி பெறச்செய்தால் அவரை தட்டிகேட்கமுடியும்,அவரும் பொறுப்புடன் செயல்படுவார்” என்பதையே பொதுவேட்பாளர் அவசியம் என்பதற்கு காரணமாக கூறி வேட்பாளர் தேர்வு கமிட்டி அமைத்து , அரசியல்கட்சிகளின் மூலம் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை, கட்சிசார்பற்ற ்கட்சிஆதரவற்ற ஒருவரை பொதுவேட்பாளராக தேர்வு செய்து ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் மெகர் பானு் என்பவரை பொதுவேட்பாளராக தேர்வுசெய்து அனைத்து சமுதாய பொதுவேட்பாளர் தேர்தல் பணிக்குழு என்ற குழு அமைத்து பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒர் வேண்டுகோள்(கேள்வி)
கட்சி சார்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.க வேட்பாளர் தாஜுன் நிஷா அவர்களின் ஆதரவு கோரிய மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தீர்கள்.(தீர்மானத்தின் அடிப்படையில்) ஆனால்
கட்சி சார்பற்ற பொதுவேட்பாளர் என்று உங்களால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளர் ்மெகர்பானு அவர்கள் தற்போது மனித நேய மக்கள்கட்சி மற்றும் த.மு.மு.க -வி்ன் ஆதரவு பெற்ற வேட்பாளர் நான் என்று பகிங்கரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.உண்மைநிலை என்ன? பதில் கூறுமா அ.ச.பொ.தே.பணிக்குழு.
இதுபோன்ற செயல்கள் நல்லெண்ணத்துடன் ஊர் நன்மைக்காக முயற்சி செய்த அமைப்பினரையும் ,மக்களையும் ஏமாற்றும் முயற்சியாகும்.இதில் பாதி வெற்றி பெற்றிருந்தாலும் மீதி மக்கள் கையில்.நல்லவேளை தேர்தலுக்கு முன்பே இவரின் இரட்டைவேடம் வெளிப்பட்டுவிட்டது.
இதனை தெளிவு படுத்தாமல் மெளனம் சாதித்தால் , இது சுயநலக்கூட்டம் , தி.மு.க விரோதப்போக்கு, சமுதாய ஒற்றுமைக்கு எதிரான கூட்டம் என மற்றவர்கள் குற்றம் சாட்டியது உண்மைதானோ என்று பொதுவான மக்களும் நம்பத்தொடங்கிவிடுவார்கள்.
இது போன்ற பொது விஷயங்களில் ஈடுபடும் போது நாம் எதிர்பாராதது நிகழ்ந்து விட்டால் உடனே சரி செய்யப்படவேண்டும் அதற்கு எப்பொழுதும் தயாராகயிருக்க வேண்டும். இல்லையெனில் நமது முயற்சிகள் அனைத்தும் கேலிக்கூத்தாகிவிடும் மேலும் வருங்காலங்களில் எடுக்கப்படும் இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். அவ்வாறு ஏற்படாமல் மிகக் கவனமுடன் இருப்போமாக
மூவரில் பொதுவேட்பாளர் என்று யாரும் இல்லை.அனைவரும் கட்சி சார்புடன் தான் உள்ளனர். இந்த மூவரில் ஒருவரே முதல்வர், அவரே தலைவராக வேண்டும் என்ற நமது எண்ணமும் ,இறைவனின் விருப்பமும் ஒன்றாக அமையட்டும். ஆமீன்.
பொறுத்திருந்து பார்ப்போம்
” நிச்சயமாக அல்லஹ் அவன் நாடியவர்க்கே அதிகாரத்தையும் ,பதவியையும் வழங்குகிறான் ”
Wednesday, October 12, 2011
தமுமுகவிலிருந்து கீழக்கரை முஜீப்,ஹீசைன் உள்பட மூவர் கட்சியிலிருந்து நீக்கம் !


முஜிபுர் ரஹ்மான்

முஹம்மது ஹுசைன்
கீழக்கரை மனித நேய மக்கள் கட்சியின் அமைப்பு குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த முஜிபுர் ரஹ்மான்,முஹம்மது ஹுசைன் மற்றும் உஸ்மான் சேட் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சி ரீதியாக யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
இது குறித்து நீக்கபட்டவர்கள் தரப்பில் கூறியதாவது,
நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அனைத்து ஜமாத் ஆதரிக்கும் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கட்சியின் தலைமை கட்டளையிட்டது. பிறகு எங்களை கலோந்தாசிக்காமல் அனைத்து ஜமாத் ஆதரவு இல்லாத சுயேட்ச்சை வேட்பாளருக்கு(மெஹர் பானு) ஆதரவு என தலைமை அறிவித்துள்ளது இதற்கு நாங்கள் உடன்படாததால் எங்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
Tuesday, October 11, 2011
ஏர்வாடியில் இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது !1.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது !
ஏர்வாடி கடற்கரை பகுதியில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்கள் கனேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேக படும் படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை சோதனை செய்த போது ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.மேற்கொண்டு விசாரணை செய்ததில் ஒருவர் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த நிக்லாஸ் மகன் சுதர்சன்(25),மற்றொருவர் முள்ளிவாய்க்காலை சேர்ந்த சிதம்பரம்பிள்ளை மகன் சாந்தகுமார்(54) என்பது தெரிய வந்தது. போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து கஞ்சவை பறிமுதல் செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி வாக்கு சேகரிப்பு !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முனிஸ்வரி கந்தசாமிக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி கொட்டும் மழையில் வாக்கு சேகரித்தார். சின்ன பாலையேந்தல்,வேளானூர்,ஏர்வாடி,மோர்குளம்,எக்ககுடி, ஆகிய ஊர்களுக்கு சென்ற ஹசன் அலியுடன் அமீர்,மாவட்ட துணை தலைவர் சிவணான்டி ,பொது செயலாளர் குமாரவேலு,மல்லல் முனியசாமி ஆகியோர் உடன் சென்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி கூறுகையில்,
செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .நிச்சயம் வெற்றி பெறுவார்.
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு நிரந்தர பெண் டாக்டர் ! புதிய தமிழக வேட்பாளர்
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் ரஹ்மத் நிஷா போட்டியிடுகிறார். இவர், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் உதவியுடன் நகரின் முக்கியப் பகுதிகளில் வீதி, வீதியாக வாக்குச் சேகரித்து வருகிறார். புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் இவர், வளர்பிறை மகளிர் மன்றத்தலைவராகவும் உள்ளார்.
வேட்பாளர் ரஹ்மத் நிஷா கூறுகையில்““கடந்த ஆட்சி காலத்தில் கீழக்கரையை தனி தாலுகாவாக்க சட்டம் கொண்டு வரப்பட்டு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஊர் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இதை நிறைவேற்ற பாடுபடுவேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை சுத்தப்படுத்தி கடலில் விடுவதற்கு முழுமுயற்சி மேற்கொள்வேன். கீழக்கரை அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக பெண் டாக்டர் நியமிக்கவும், பழுதடைந்த சாலைளை சீரமைக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார்.
அவருடன் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த அஸ்மத், சம்சாத், யாஸ்மின், ஆமினத், செய்யது சிக்கந்தர்பீவி, ராவியத் ஜரினா, பவுசியா, முகைதீன் பாத்திமா, அனுசியா, ஆயிசத்து, புதிய தமிழகம் மாவட்ட சிறுபான்மை துணைச் செயலாளர் யூசுப் சுலைமான், முகமது ரபீக், அன்னாவி, மாவட்டச்செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர்.
அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வாக்கு சேகரிப்பு !
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா(35) கீழக்கரை 8வது வார்டு பகுதியில் செ.நெ.சங்குளிக்கார தெருவில் வசித்து வருகிறார். "அரபி " குடும்பத்தை சேர்ந்த இவர் பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்தவர்.இவரது கணவர் அமீர் ரிஸ்வான் அதிமுக மேலவை உறுப்பினராக உள்ளார் .இவரது சகோதரர் இஸ்மாயில் சென்னை தனியார் கப்பல் துறையில் பணியாற்றுகிறார்
கீழக்கரை முழுவதும் ராபியத்து காதரியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று தட்டாந்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.அவருடன் சகோதரர் இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்
தொடரும் உயிர்பலி ! தூங்கும் மின் இலாகா
கீழக்கரை, அக்.
சூறைக்காற்றின் வேகம் தாங்காமல் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த முதியவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்புல்லாணி அருகேயுள்ள ரகுநாதபுரம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (70) இப்பகுதியில் இவருக்குத் தோட்டம் உள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை இங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றின் வேகம் தாங்காமல், தோட்டத்தில் இருந்த மின் வயர் அறுந்து விழுந்தது.
இதுதெரியாமல், நேற்றுக்காலை தோட்டத்துக்குச் சென்ற முகமது இப்ராகிம், எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்தார். அடுத்த வினாடி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோ வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இப்பகுதியில் அடிக்கடி இது போன்ற உயிரழப்புகள் ஏற்படுகிறது. மின் கம்பிகளை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.மின் இலாகா விழித்து கொள்ளுமா ....
தனிநபர் விமர்சனம் கூடாது வேட்பாளர்களுக்கு அட்வைஸ்
தேர்தலில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல்நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தேர்தல் விதிமுறை விளக்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பேசுகையில், “வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் போது தனிபட்ட நபர்களை விமர்சனம் செய்யக்கூடாது. வீடுகளுக்கு கவர்களில் வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்க கூடாது. பொதுக் கூட்டம், மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும், ஆட்டோ மற்றும் வாகனங்களில் பிளக்ஸ் விளம்பரம் செய்வதற்கு அனுமதி பெறவேண்டும்,” என தெரிவித்தார்.
தனிநபர் விமர்சனம் கூடாது வேட்பாளர்களுக்கு அட்வைஸ்
தேர்தலில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல்நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தேர்தல் விதிமுறை விளக்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பேசுகையில், “வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் போது தனிபட்ட நபர்களை விமர்சனம் செய்யக்கூடாது. வீடுகளுக்கு கவர்களில் வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்க கூடாது. பொதுக் கூட்டம், மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும், ஆட்டோ மற்றும் வாகனங்களில் பிளக்ஸ் விளம்பரம் செய்வதற்கு அனுமதி பெறவேண்டும்,” என தெரிவித்தார்.
Monday, October 10, 2011
கீழக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரியாணி வழங்குவதை தடுக்க தனி குழு
. இது குறித்து நகராட்சி கமிஷனர் போஸ் கூறுகையில் ,இந்த கண்காணிப்பு குழுவுக்கு கண்காணிப்பாளர் மணி தலைமையில் ஒரு போட்டோகிராபர் உள்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏதேனும் சம்பவம் நடைபெற்றால் பொது மக்கள் 9500372577 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.
கீழக்கரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை தர மாட்டேன்!அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா அளித்த பேட்டியில் கூறியதாவது ,
கேள்வி :தாங்கள் விருப்பமின்றி தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வெளியானதே? உண்மையா ?
பதில் : வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்பட்ட சமயத்தில் நான் வற்புறுத்தலினால்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சிலர் வீண் வதந்திகளை பரப்பினார்கள் நிச்சயமாக நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் சேவை மனப்பான்மையுடன் போட்டியிடுகிறேன் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்
கேள்வி : வெற்றி பெற்றால் கீழக்கரை நலனுக்கென என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள்?
பதில் : இன்ஷா அல்லா தேர்தலில் வெற்றி பெற்றால் நமதூருக்கு தேவையான திட்டங்களை செயல் படுத்துவேன் மேலும் ஊர் நலனில் அக்கறை கொண்ட நமதூர் முக்கியஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று அத்திட்டங்களை மேம்படுத்துவேன் குறிப்பாக கழிவு நீரால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற அரசின் நிதியை பெற்று செயல்படுத்துவேன்.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரை மக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க செய்வேன்.
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள குப்பை பிரச்சனைக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று அரசின் உதவியுடன் தீர்வு காண்பேன்.
நகராட்சி துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்வேன் மேலும் நகரில் அன்றாடம் சேரும் குப்பைகளை சாலைகளில் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பேன் தேவை படும் பட்சத்தில் புதிய விளக்குகளை பொருத்த ஏற்பாடு செய்வேன்.
அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய என் பங்களிப்பை செய்வேன். அனைத்து தரப்பு மக்களும் நகராட்சி நிர்வாகத்தை எளிதில் அணுகும் வகையில் எனது செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
கீழக்கரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்பது போன்ற காதில் கேட்பதற்கு இனிதான, பொய்யான வாக்குறுதிகளை தருவதற்கு நான் தயாரில்லை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் எந்த பணிகளையெல்லாம் செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதிகளாக தந்துள்ளேன். இன்ஷா அல்லா நிச்சயம் நிறைவேற்றுவேன்.
கேள்வி : பிரச்சாரம் எந்த அளவில் உள்ளது ?வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது ?
பதில் : பெரும்பாலான வார்டுகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டேன் மேலும் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவை தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
விஷமிகளின் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் ! தமுமுக சார்பில் நோட்டீஸ் வெளியீடு !

கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது...
நடைபெற இருக்கும் கீழக்கரை நகராட்சி தேர்தலில் நகர் மன்ற தலைவர் பதவிக்கு தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம். மேலும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பெயரையோ கட்சியின் கொடியையோ எந்த வேட்பாளரும் உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். மேலும் விஷமிகளின் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் வெளியிடப்பட்டுள்ளது.
Sunday, October 9, 2011
கும்பிடுமதுரையில் கைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில் நலப்பணிகள் !
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும் !அப்துல் ரஹ்மான்.எம்.பி







துபாயில் 2-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,
தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப் சேர்மன் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டில் 'அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும்' எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தன் தாய்மொழியாம் தமிழில் உரை நிகழ்த்துவதை பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது,
எம்.பி.க்கள் நலத்திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியை எங்களது கையில் தந்துவிடுவதாக மக்கள் நினைக்கின்றனர். அதுஅப்படியல்ல. மக்களின் நலத்திட்டங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத் தான் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
சீன கப்பல் மாலுமியினை ஜப்பானில் கைது செய்தபோது சீன அரசு அக்குடிமகனை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, பாகிஸ்தானில் 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்ட போது அந்நாடு மேற்கொண்ட முயற்சியையும் பார்த்தோம். இந்நிலையில் நமது இந்திய அரசு நமது சகோதர இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பாதிக்கப்படும் போது எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது எனபதனை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். ஒரு சில எச்சரிக்கை அறிவிப்புகளோடு அவை நின்று விடுவது வருந்தத்தக்கது.
இலங்கையில் தமிழர்களது மறுவாழ்வுக்காக இந்திய அரசு வழங்கிய நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டது எனபது கேள்விக்குறியே?
இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து தாய்நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணி அரசுக்கு ஒரு முக்கிய வருவாயாகும். இப்படிப் பாடுபடும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பினால் அவர்களது மறுவாழ்வுக்கு அரசு எத்தகைய திட்டங்களை தீட்டியுள்ளது எனபதை நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் மூலம் ஓய்வூதியம், காப்பீடு எனப் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினாலும் அவை இன்னும் செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.
தாய்நாட்டுக்காக தியாகம் செய்திடும் வெளிநாடு வாழ் இந்தியர்களது மறுவாழ்வுக்கு அரசு உதவிட வேண்டிய தருணம் இது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையம் மூலம் மேற்கொண்டு வரும் சேவைகள் அளப்பரியது. இது போன்ற மையங்களை இந்தியர்கள் வாழ்ந்து வரும் பல்வேறு நாடுகளிலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்னும் அவை செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.
எது எப்படியிருப்பினும் சாதி, மதம், இனம் என எவ்வித வேறுபாடும் காட்டாது இந்தியர் எனும் உணர்வோடு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பினை இம்மாநாடு ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் ஏ.ஏ. ஜின்னா, சென்னை தமிழ் வணிக அமைப்பின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
'வணிக வாய்ப்புகளும் சட்டத்துறைப் பணிகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கு நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன் தலைமை தாங்கினார். 'இந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஆந்திர அரசு தொழில் துறை ஆணையர் கரிகால்வளவன், ஆஸ்திரியா டாக்டர் வி. ஜெபமாலை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பி. முனியாண்டி, மாஸ்கோ ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
'வணிகத் தொடர்புக்குத் தமிழ் மொழியும், வணிகத் தொழில் நுட்பமும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் கே. திலகவதி, ராணிமேரி கல்லூரி முனைவர் இராஜேஸ்வரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் எழிலரசி பாலசுப்பிரமணியன், கவிதா தேவர், பிரேமா, வசந்தாள், முனைவர் அல்போன்ஸா, முனைவர் மரிய தெரசா, டி. தங்கமணி, ஆசிப் மீரான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
விழாவின் இறுதியில் மத்திய இணை அமைச்சர் நாரயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
20வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சிராஜீதீன் வாக்கு சேகரிப்பு
Saturday, October 8, 2011
கீழக்கரை குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!திமுக வேட்பாளர் தாஜீனிசா
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிரும் கீழக்கரை நடுத்தெரு ஜமாத் என்.எம்.டி தெரு கோழியப்பா குடும்பத்தை சேர்ந்த திமுக வேட்பாளர் தாஜுனிசா(50) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமையில் ஒரு குழுவும் ,இளைஞர் அணி செயலாளர் ராஜா தலைமையில் ஒரு குழுவும்,மகளிர் அணி சார்பாக ஒரு குழுவும் ஆகிய மூன்று குழுக்கள் அமைத்து திமுக சார்பில் கீழக்கரை முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.இது வரை புது கிழக்கு தெரு ,வடக்குதெரு,தெற்குதெரு,மேலத்தெரு,நடுத்தெரு உள்பட பெரும்பாலான தெருக்களில் 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளார்.
வேட்பாளர் தாஜுனிசா கூறுகையில் , நான் வெற்றி பெற்றால் நீண்டகாலமாக தீர்க்க முடியாமல் உள்ள குப்பை பிரச்சனைக்கு நமது ஊர் முக்கிய பிரமுகர்கள் ,சமூக நல அமைப்புகள்,அறக்கட்டளைகள்,மற்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நிரந்தர தீர்வு காண்பேன்.
கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனி தாலுகா தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வேன். நகரின் சுகாதார சீர்கேட்டை போக்கவும் ,மலேரியா கொசு மருந்து தொடர்ந்து அடித்திடவும் சுகாதார துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன்.சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து சுத்தமான குடிநீர் கிடைக்க பாடுபடுவேன்.ஏராளமான பள்ளி ,கல்லூரிகள் உள்ள கீழக்கரையில் அரசின் சார்பில் பல்கலைகழகம் அமைக்கவும்,இலவச அரபிக் கல்லூரி அமைக்கவும் ,நகர் முழுவதும் தரமான சாலை வசதிகள் அமைக்கவும்,தெரு விளக்குகள் இல்லாத இடங்களில் புதிய விளக்குகள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வேன். மேலும் ஊரின் முக்கிய பிரமுகர்கள்,தொண்டு நிறுவனங்கள்,சர்வகட்சிகள்,சமூக நல அமைப்புகள் ஆகியோர்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி குறைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.
