Wednesday, December 11, 2013

கீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..


கீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..

weddingகீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் வெளியிட, தங்கள் இல்ல திருமணப் பத்திரிக்கையை ஸ்கேன் செய்து  keelakaratimes@yahoo.com, hameedyas@gmail.com  e-mail முகவரிக்கோ அல்லது கீழக்கரை டைம்ஸின் முகநூல் இன்பாக்ஸிற்கோ  அனுப்பி வையுங்கள்.
உங்களின்   தொலைபேசி எண்ணை தவறாமல் குறிப்பிடவும்.

மேலும் செய்திகள் அறிய ... http://keelakaraitimes.com/wedding-invitation/ 

கீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி! பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு!


கீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி! பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு!

adhars card photo kilakarai


மேலும் விபரம் அறிய...  http://keelakaraitimes.com/information/   

கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!


கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!


msec pl
மேலும் படிக்க...... http://keelakaraitimes.com/mohamed-sathak/   
www.keelakaraitimes.com

Thursday, December 5, 2013

அறிவிப்பு ! கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்!


http://keelakaraitimes.com/category/keelakkarai-news/

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்பட தொடங்கி விட்டதால் செய்திகளை
http://keelakaraitimes.com/category/keelakkarai-news/ என்ற முகவரியில் காணலாம்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி !

அன்புடன்,

கீழக்கரை டைம்ஸ் குழுவினர்.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி! !


படம் மற்றும் விபரம் காண... கிளிக் செய்யவும்.... http://keelakaraitimes.com/?p=1463 , www.keelakaraitimes.com  கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !
கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !

 தொடர்ந்து செய்திகளை www.keelakaraitimes.com என்ற முகவரியில் காணலாம்


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !
கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் பல்வேறு செய்திகளை காணும் வகையில் வீடியோ இணைப்புகள், கானொலிகள்,வருங்காலங்களில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல் வேறு வசதிகளை வலைதளத்தில் இணைத்து புது பொலிவுடன் வெளியிடப்பட்டு நான்காம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியும் துபாயில் தனியார் உணவக உள் அரங்கில் நடைபெற்றது.
புது பொலிவுடன் தயாரான கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தை  அஹமது தெரு சங்க தலைவர் ஹமீதுகான் தொடங்கி வைத்து நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கீழக்கரையை சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆத்திமுத்து  மகன் பிரபு பங்கேற்றார்.
ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றும் பிரபு பேசியதாவது,
கீழக்கரையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைப்பு பாலமாக இத்தளம் திகழ்கிறது.மேலும் கீழக்கரையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி குறித்த தகவல்கள் மாணவ மாணவியருக்கு பயனளிக்கும் வகையிலான பதிவுகள் இத்தளத்தில்  இடம்பெற வேண்டும் என்றார்.
காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் பேசும் போது,
கீழக்கரை டைம்ஸ் செய்தி வெளியிடும்போது அனைத்து தரப்பின் கருத்துக்களையும் பெற்று நடுநிலைமையாக வெளியிட்டுவருகிறது.இது தொடர வேண்டும்.ஊடகம் வலிமையானது அதை சரியான வகையிலும் நேர்மையான முறையில் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
அஸ்வான் அமைப்பின் நிர்வாகியும்,எழுத்தாளருமான கீழை ராஜா என்ற ராஜாக்கான் பேசுகையில்,
ஒருவன் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.துவக்கத்தில் குறைந்த அளவில் பார்வையாளர்கள் வருகை தந்த கீழக்கரை டைம்ஸ் வலைதளம் இன்று நமது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதற்காக இக்குழுவினர் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் விடாமுயற்சியாக  தொடர்ந்து செயல்பட்டதால் இன்று சிறந்த வலைதளமாக முழுமை பெற்றுள்ளது.தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
கவிஞர் அஸ்வாக் பேசிய போது,
கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகளை சீர் செய்ய வேண்டும்.இதற்காக இத்தளத்தின் மூலம் கீழக்கரை மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கலாம் என்று கூறி கவிதை ஒன்றை வாசித்தார்.
அதில் “நான் பிறந்த ஊரினில் நீ பிறந்து விட்டாய்
நான் பிரிந்து  வாழ்கின்றேன்
நீ என்னை ஊரோடு இணைக்கின்றாய்
சூரியன் பிறக்கு என் ஊர் கடலினை  நான் கண்டு பல நாட்கள் பறந்து போய் விட்டன
ஓ.. கீழக்கரைடைம்ஸ் நீ காண வைக்கின்றாய் உன் இணையதளம் வழியாக..
இவ்வாறு வாழ்த்துரையில் தெரிவித்தார்.
கீழக்கரை ரோட்டரி கிளப்பின் முன்னாள் நிர்வாகி ஆசாத் கூறுகையில் ,
கீழக்கரை டைம்ஸ் இணையதளம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றார்.
எம்.எம்.கே காசிம் பேசுகையில்
பள்ளி கல்லூரி மற்றும் அரசுத்துறை வெளியிடும் பயனுள்ள அறிவிப்புகளை ,அதற்கான அப்ளிகேஷன் பார்ம்களை டவுன்லோட் செய்து பயனடையும் வகையில் இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றார்.
கீழை அஞ்சல் செய்தி பத்திரிக்கை நிறுவனர் கீழை ஜமீல் கூறுகையில்,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை டைம்ஸ் குழுமத்தின் சார்பாக அஹமது குத்புதீன் ராஜா,ஹமீது யாசின்,யாசர் அரபாத் ,அஹமது அபுதாஹிர் மற்றும் கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி ஷேக் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் தொலைபேசி,இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் கீழக்கரை டைம்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Tuesday, December 3, 2013

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து! தொடரும் சம்பவங்கள்!


படங்கள் : கார்த்திக்

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் ஆர்.எஸ்.மடையில் நேற்று தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த லாரி டிரைவர் ராமநாதபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர்  கூறியாதாவது,

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தினமும் இச்சாலையில் விபத்துக்கள் நடைபெற்றவாறு  உள்ளது.இச்சாலையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது, போக்குவரத்து ரோந்து காவலர்கள் கண்காணிப்பு என்பதையெல்லாம் செயல்படுத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி விபத்துக்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்

நேற்று முன் தினம் இச்சாலையில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.

கீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை! மழை நீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டுகோள்!

 Photo : Muzammil safiyullah
photo : Sabeer Ali

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி கிணறுகள் ,குளங்கள் வறண்டு கடும் வறட்சி நிலவி வந்தது.இதையோட்டி பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை,பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைவரின் கவலையை போக்கும் வகையில் மாவட்டத்தில் கீழக்கரை  உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது குறித்து கீழக்கரை அலி பாட்சா கூறுகையில்..

நம்முடைய ரட்ஷகன் கடந்த சில தினங்களாக கீழக்கரையில் அருள் 
மழையை பொழிந்து கொண்டு இருக்கிறான். அவன் கூறிய திருமறை 
வசனங்களை மெய்பித்து விட்டான்.

ஆனால் நாமே..... மழை நீர் சேமிப்பை மறந்து விட்டோம். பலர் இது 
விஷயத்தில் அறவே விழிப்புணர்வு பெறவில்லை.சிலர் இதன் அருமை 
புரியாமல் ஏனோ தானோ என செய்து இருக்கிறார்கள்.மற்றும் மிகச் சிலர் 
முறையாக செய்து இறையோனின் சந்தோஷத்திற்கு ஆளாகி 
இருக்கிறார்கள்.எனவே மழை நீரை சேமிக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

Sunday, December 1, 2013

கீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி!சிவகங்கை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நடைபெற்றது.

அதில் கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி யை சேர்ந்த மாணவர் முகம்மது ஜீபைர் கான்(54 - 57) எடை பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று முதலிடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

அசீம் ரஹமான் சீனியர் (52 - 54) எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுகையில் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்  ஆகியோரை பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராஹிம் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ்  மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர் ஜீபைரின் தந்தை எஸ்.எஸ். மீரான் கூறியதாவது,

என் மகன் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இவரது முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.


உங்கள் வாழ்த்துக்களை மீரானுக்கு கூறலாம்
தொடர்பு எண்: 050 5092601
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ! மாவட்ட பொதுச்செயலாளர் அறிக்கை!
இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடக்கவிருக்கின்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது.அதில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவும்,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இராமநாதபுரம்,திருவாடானை ஆகிய தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று விட்டது.

 டிசம்பர் 01 ன்று முதுகுளத்தூர்,பரமக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த செயல்வீரர்கள் கலந்து கொள்ளும் பாராளுமன்ற தேர்தல் கலந்தாய்வு  கூட்டம் சாயல்குடியில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமை தாங்குகிறார்.மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது,வர்த்தக அணி மாநில செயலாளர் செரீப் சேட்,எஸ்டிடியூ (தொழிற்சங்கம்)மாநில பொருளாளர் கார்மேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.     

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்து !கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டேங்கர் லாரியும் ,சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு நடைபெற்ற இவ்விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் நேற்று இரவு அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.