Thursday, May 10, 2012

கீழக்கரையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்



கீழக்கரை,

கீழக்கரையில் முறிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை விபத்து ஏற்படும் முன் அகற்ற மின்வாரிம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளிலுள்ள தெருக்களில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது. விபரீதம் நடக்கும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 6வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறியதாவது, ஆறாவது வார்டில் இந்து பஜார், மறவர் தெரு உள்பட 4 இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. மின்கம்பங்களின் அடிப்பாகம் சிதிலமடைந்து முறிந்து விழும் வகையில் உள்ளது.

மின்கம்பத்தின் மேலே செல்லும் மின் கம்பியை தாங்கி நிற்கும் இரும்பு ஆங்கிள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரீதம் உணர்ந்து முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.